ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
அரச ஊழியர்களின்... ஓய்வு பெறும் வயது எல்லையில், மாற்றம். அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் அரச உழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 65 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்து . எனினும் தற்பொழுது 55 வயதில் தங்களுடைய சுய விருப்பத்திற்கு அமைய ஓய்வு பெறமுடியும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 3 வருடங்களாக குறைந்து 62 ஆக நிர்ணயிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . https://athavannews.com/2022/1285454
-
- 0 replies
- 179 views
-
-
டீசல் விநியோகத்தை... மட்டுப் படுத்தப்படுத்த, தீர்மானம். மட்டுப்படுத்தப்பட்ட டீசல் கையிருப்பு காரணமாக முன்னுரிமை பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மட்டுமே டீசல் விநியோகிக்கப்படும் என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்துள்ளார். மேலும் நாளாந்த விநியோகம் சுமார் 2,500 மெற்றிக் தொன்களாக குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை இந்திய கடன் வசதியின் கீழ் அடுத்த கப்பல் டீசல் எதிர்வரும் 16 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது . https://athavannews.com/2022/1285466
-
- 0 replies
- 232 views
-
-
மத்திய வங்கியின்... முன்னாள் பிரதி ஆளுநர், அரசாங்கத்திற்கு எச்சரிக்கை! பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கம் மத்திய வங்கியின் சுயாதீனத் தன்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் என பிரதி ஆளுநர் டபிள்யூ.ஏ.விஜேவர்தன வலியுறுத்தி உள்ளார். மத்திய வங்கி மீதான எந்தவொரு தலையீடுகளும் தற்போதைய பொருளாதார நெருக்கடில் இலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளை வலுவிழக்கச் செய்துவிடும் என்றும் எச்சரித்துள்ளார். நாட்டின் பொருளாதார நிலை தொடர்பாக ஆராயும் நோக்கில் இலங்கை மத்திய வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் பங்கேற்றுக் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு எச்சரித்துள்ளார். ஊழியர்களுக்கான கொடுப்பனவை இடை…
-
- 0 replies
- 116 views
-
-
பசில் ராஜபக்ஷவின்... இரண்டு பிரேரணைகள், இடைநிறுத்தம் பசில் ராஜபக்ஷ நிதி அமைச்சராக இருந்த காலத்தில் முன்வைத்த இரண்டு பிரேரணைகள் நிதி அமைச்சினால் இடைநிறுத்தப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது . 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ முன்வைத்த யோசனைகளை இடைநிறுத்துவதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது . அந்த வகையில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்வதற்கான முன்மொழிவு. 4,917 உள்ளூராட்சிப் பிரிவுகளுக்கு தலா 4 மில்லியன் ரூபாய். மொத்தம் 19.67 பில்லியன் என்பது இடைநிறுத்தப்படுவதோடு கிராமப்புற சமூக மேம்பாட்டுக்கான 85 பில்லியன் நிதியும் நிறுத்தப்பட்டுள்ளது . இதேவேளை பெரும் சுமையாகக் காணப்படும் உள்ளுராட்சி நிறுவனங்கள் உ…
-
- 0 replies
- 373 views
-
-
ஜூன் 15ஆம் திகதி முதல்... போக்குவரத்துத் துறையில், மாற்றங்கள் – பந்துல குணவர்தன ஜூன் 15ஆம் திகதி முதல் போக்குவரத்துத் துறையின் முன்னேற்றத்திற்காக கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது நிலவும் பொதுப் போக்குவரத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் போக்குவரத்து அமைச்சர் மற்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் நிறுவனங்களின் தலைவர்களுக்கு இடையில் நேற்று (சனிக்கிழமை) இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தில் சந்திப்பொன்று இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதேவேளை அன்றாட நடவடிக்கைகளுக்கான போக்குவரத்து மற்றும் அலுவலக ரயில் மற்றும் பேருந்து சேவைகள், பள்ளி மா…
-
- 0 replies
- 180 views
-
-
மருந்துகளை இறக்குமதி செய்ய... கொரோனா நிதியிலிருந்து, 1.8 பில்லியன் ரூபாயை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை! அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக கொரோனா நிதியிலிருந்து 1.8 பில்லியன் ரூபாயை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற சுகாதாரத் துறை தொடர்பான கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நன்கொடையாளர்களிடமிருந்து பணம் சேகரிக்கப்பட்டது. இந்த நிலையில், கொரோனா தொற்று தற்போது கட்டுக்குள் உள்ளதால், சுகாதாரத் தேவைகளுக்காக இந்தப் பணத்தைப் பயன்படுத்த முடியும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவமனைகளு…
-
- 2 replies
- 221 views
-
-
மிக விரைவில் வேலை இழப்பு, மூன்று வேளை உணவுக்கே நிச்சயமற்ற தன்மை உருவாகும் என்கிறார் ரணில் அத்துடன் இலங்கை பிரச்சனையுடன் உக்ரேன் சிக்கலை கூட்ட (add) வேண்டாம், இலங்கை பிரச்சனையை, உக்ரேன் பிரச்சனையால் பெருக்குங்கள் (multiply) என்றும், செப்டெம்பர்/ அக்டோபர் வரையே உணவு கையிருப்பு உள்ளது எனவும், பெரும் போகத்துக்கு உரம் இல்லை எனவும், அதை தருவிக்க முயல்வதாயும் ரணில் கூறினார். இப்படி உரத்தை எடுத்தால், பெர்ரவரிக்கு பிறகு நாடு தன்னிறைவு அடைய முடியும் என்கிறார் ரணில். இடைபட்ட காலத்தில் மூன்று வேளை உணவு இல்லாத நிலை, சிறு வியாபாரங்கள் திவாலாகும் நிலை, வேலை இழக்கும் நிலை ஏற்படும் எனவும், இதை தனியே இலங்கை சமாளிக்க முடியாது, முன்னர் நிராகரித்த இடங்களில் கூட உதவியை இலங்கை …
-
- 1 reply
- 236 views
-
-
கோம்பயன்மணல் இந்து மயானம் திறப்பு! June 4, 2022 யாழ் மாநகர சபையினதும் வண்ணை கோம்பயன்மணல் இந்து மயான பரிபாலசபையினதும் மற்றும் நன்கொடையாளர்களின் நிதிப்பங்களிப்புடன் புதுப் பொலிவு பெற்ற யாழ்.கோம்பயன் மணல் இந்து மயானத்தின் நுழைவாயில், ஆலயக் கட்டடம், இரண்டு தகனமேடை, காவலாளி அறை என்பன இன்றையதினம் திறந்துவைக்கப்பட்டது. இன்று சனிக்கிழமை(4) முற்பகல் 11.30 மணியளவில் யாழ்.மாநகரசபையின் ஆணையாளர் இ.த.ஜெயசீலன் தலைமையில் இந்நிகழ்வுகள் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்.மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன், நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன், வண்ணை கோம்பயன்மணல் இந்து மயான பரிபாலசபையினர், நன்கொடையாளர்கள், மாநகர சபை உறுப்பினர்கள் உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்ட…
-
- 5 replies
- 424 views
-
-
போராடினால் எதனையும் பெற்றுகொள்ள முடியும் போராடினால் எதனையும் பெற்றுகொள்ள முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் கடந்த புதன்கிழமை எரிவாயு விநியோகம் செய்யப்படாத காரணத்தினால் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துடன் பதற்ற நிலைமையும் ஏற்பட்டது. மட்டக்களப்பு நகரில் நீண்டகாலமாக எரிவாயுவினை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மக்கள் இரவு பகலாக வீதியில் உறங்கும் நிலையேற்பட்டதாக குறிப்பிட்டனர். இதனால் மட்டக்களப்பு பயனியர் வீதிபட பல இடங்களில் எரிவாயுக்காக காத்திருந்த மக்கள், எதிர்ப்பு போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்தனர். மட்டக்கள…
-
- 1 reply
- 317 views
-
-
சுமந்திரனின்... பாதுகாப்பு அதிகாரி, சடலமாக கண்டெடுப்பு ! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெள்ளவத்தையில் அமைந்துள்ள எம்.ஏ.சுமந்திரனின் இல்லத்தில் பாதுகாப்பு கடமையாக்க நியமிக்கப் பட்டிருந்த அதிகாரி ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இவ்வாறு கண்டெடுக்கப்பட்டவர் 22 வயதுடைய இராணுவ சிப்பாய் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அவர் T56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2022/1285413
-
- 6 replies
- 595 views
- 1 follower
-
-
நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிக்க கூடாது: ஹாபிஸ் நஸீர் அஹமட்(Photo) நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிக்க கூடாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். “நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிக்க எடுக்கப்படும் முயற்சிகள் ஆபத்தானது, இந்த பதவிக்கு வருபவர்களை பொறுத்தே, இதன் ஆழ அகலங்கள் அறியப்படுவதாக” முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங…
-
- 2 replies
- 444 views
-
-
மின்சாரக் கட்டணத்தை... அதிகரிக்க, தீர்மானம்..! மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை எதிர்வரும் திங்கட்கிழமை (6) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இலங்கை மின்சார சபை அடையும் நஷ்டத்தை குறைக்கும் நோக்கில் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என அதன் தலைவர் கூறியுள்ளார். தற்போது இலங்கை மின்சார சபையின் வருடாந்த வருமானம் 276 பில்லியனாக இருக்கும் அதேவேளை செலவு 750 பில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேவேளை, இன்று சனிக்கிழமை ஒரு மணிநேரம் மின்சாரத்தை துண்டிக்க அனுமதி வழங்கி உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இருப்பினும் நாளை ஞாயிற்றுக்கிழமை (5) மின்வெட்டு இருக்காது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. …
-
- 3 replies
- 298 views
-
-
டொலர் அனுப்பாததால் ஒருபோதும் ராஜபக்ஷர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்கின்றார் கம்மன்பில வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு டொலர் அனுப்புவதை தவிர்ப்பதன் மூலம் ஒருபோதும் ராஜபக்ஷர்கள் பாதிக்கப்பட போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். மாறாக இந்த நடவடிக்கையினால் சாதாரண நடுத்தர மக்களே பாதிக்கப்படுவார்கள் என்பதால் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் வங்கிக் கட்டமைப்பின் ஊடாக நாட்டுக்கு டொலர் அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலைக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள ஏன் அ…
-
- 0 replies
- 242 views
-
-
துரித வேலைத்திட்டத்திற்கு ஜனாதிபதி பணிப்புரை பெருந்தோட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான அனைத்துப் பயன்படுத்தப்படாத நிலங்களைக் கண்டறிந்து, உணவுப் பயிர்களைப் பயிரிடுவதற்கான துரித வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். பெருந்தோட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான 9,000 ஹெக்டேர்களுக்கும் அதிகமான பயிரிடப்படாத நிலங்கள் உள்ளன. 23 கம்பனிகளுக்குச் சொந்தமான அந்த தோட்டங்களில் பயிர்ச்செய்கைக்கு ஏற்ற பயிர்களை இனங்கண்டு, அவற்றை பயிரிடுபவர்களுக்கு வழங்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். பெருந்தோட்டத்துறை எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று (03) பிற்பகல் இடம்பெற்ற கல…
-
- 0 replies
- 176 views
-
-
வவுனியாவில் தமிழக அரசின் நிவாரண பொருட்கள் வழங்கி வைப்பு வவுனியாவில் தமிழக அரசினால் வழங்கப்பட்ட பொதிகள் வவுனியா தாண்டிக்குளத்தில் வழங்கி வைக்கப்பட்டது. தமிழக அரசினால் வழங்கப்பட்ட உதவி பொருட்கள் கடந்த 02ம் திகதி வவுனியாவிற்கு புகையிரதம் மூலமாக வந்தடைந்ததையடுத்து, மாவட்டத்தில் உள்ள 102 கிராம சேவகர் பிரிவுகளிற்கு குறித்த பொருட்கள் பிரித்து வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றையதினம் தொடக்கம் பல்வேறு கிராம சேவகர் பிரிவுகளில் இந்திய உணவு பொருட்களினை வசதியற்ற மக்களிற்கு வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் இன்றையதினம் வவுனியா தாண்டிக்குளம் கிராம சேவகர் அலுவலகத்தில் குறித்த செயற்திட்டமானது முன்னெடுக்கப்பட்டது. …
-
- 0 replies
- 147 views
-
-
வடக்கு – கிழக்கில்... அரசாங்கம் கைப்பற்றிய வயல் காணிகளை, விடுவிக்குமாறு பணிப்புரை வடக்கு மற்றும் கிழக்கில் வன பாதுகாப்பு திணைக்களம் கைப்பற்றிய வயல் காணிகளை விவசாயிகளுக்கு மீள வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1285300
-
- 6 replies
- 469 views
- 1 follower
-
-
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின்... வினைத்திறனற்ற, விநியோக வேலைத்திட்டம் – தொழிற்சங்கங்கள் கண்டிப்பு. நாட்டில் முறையற்ற எரிபொருள் விநியோகம் காரணமாக பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வினைத்திறனற்ற விநியோக வேலைத்திட்டம் காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர். மக்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய கூடிய மண்ணெண்ணெய் தமது கையிருப்பில் இல்லை என்றும் ஆனந்த பாலித தெரிவித்தார். கையிருப்பில் உள்ள மண்ணெண்ணெய்யை விநியோகிக்க பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுக்கவில்லை என ஆனந்த பாலித குற்றம் சுமத்தினார். மேலும் லஞ்சம் மற்றும் கமிஷன் அடிப்படையில் எரிபொருள் இருப…
-
- 1 reply
- 208 views
- 1 follower
-
-
மீண்டும்... அதிகரிக்கும், எரிவாயு விலைகள். லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களை அடுத்த வாரமளவில் சந்தைக்கு விநியோகிக்க முடியும் என லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது . இதேவேளை லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிகரிக்கக்கூடும் எனவும் அந்நிறுவனத் தகவல்கள் தெரிவிக்கின்றன . இதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 6,000 ரூபாவை விட அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது . இதேவேளை, லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இன்று (சனிக்கிழமை) விநியோகிக்கப்படாது என்பதோடு எதிர்வரும் செவ்வாய்கிழமை முதல் எரிவாயு விநியோகத்தை மீள ஆரம்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக Litro நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2022/1285431
-
- 0 replies
- 191 views
-
-
’முறையான மாற்றங்கள் இல்லையேல் பாரிய மக்கள் புரட்சி வெடிக்கும் ’ - எம்.ஏ.சுமந்திரன் நாம் பிரதமர் ரணிலை எதிர்க்கவில்லை, மாறாக ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய எமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லாது போராடிக்கொண்டுள்ளோம். நாம் அன்றும் இன்றும் ஜனநாயகத்தின் பக்கமே நிற்கின்றோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க முறையான மாற்றங்களை பாராளுமன்றத்தில் மேற்கொள்ளாவிட்டால் வெளியில் இருந்து மாற்றங்கள் உருவாகும். அது நாட்டில் இரத்த வெள்ளத்தை உருவாக்கி பாரிய மக்கள் போராட்டத்தை நோக்கி பயணிக்கும் என்பதை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த நல்லாட்சி அரசாங்க க…
-
- 11 replies
- 837 views
-
-
ஆடம்பர வீட்டை நிர்மாணிக்க... அரச பணத்தை தவறாக பயன்படுத்தியமை குறித்த, வழக்கு – பசில் மற்றும் நடேசன் விடுதலை! மல்வானை மாபிட்டிகம பிரதேசத்தில் காணி ஒன்றை கொள்வனவு செய்து ஆடம்பர வீட்டை நிர்மாணிக்க அரச பணத்தை தவறாக பயன்படுத்தியமை தொடர்பான வழக்கில் இருந்து முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திருக்குமார் நடேசன் ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணைகள் இன்று கம்பஹா மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொம்பே, மல்வான, மாபிட்டிகம பிரதேசத்தில் 16 ஏக்கர் காணியை கொள்வனவு செய்து பெரிய வீடு, நீச்சல் தடாகம் மற்றும் பண்ணை ஒன்றை நிர்மாணித்து, அரசாங்க நிதியை மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் பசில் ர…
-
- 4 replies
- 435 views
-
-
ரஷ்சியா மீது மேற்குலக நாடுகள் பொருண்மிய மற்றும் பயணத்தடைகள் போட்டு வரும் நிலையில் கொழும்பில் ரஷ்சிய விமான சேவைக்கு சொந்தமான ஏரோபிளட் விமானம் (எயார் பஸ் 330) 200 பயணிகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான காரணம் சிறீலங்காவும் ரஷ்சியா மீது பொருண்மிய தடை பயணத்தடை செய்துள்ளதன் வெளிப்பாடா.. என்று கேள்வி கேட்டு பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. உக்ரைன் போரின் பின்னான..அண்மைக்காலமாக.. ரஷ்சியாவுக்கு எதிரான எந்த நடவடிக்கை என்றாலும் பிபிசி வரிஞ்சு கட்டிக்கொண்டு செய்தி வரைவது இயல்பாகிவிட்டது. Sri Lanka detains Russian plane A Russian-operated plane has been seized in Sri Lanka shortly before it was due to return to Moscow with nearly 200 peo…
-
- 6 replies
- 485 views
-
-
டொலர் அனுப்பாததால்.... ஒருபோதும், ராஜபக்சக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்கின்றார், கம்மன்பில. வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு டொலர் அனுப்புவதை தவிர்ப்பதன் மூலம் ஒருபோதும் ராஜபக்ஷர்கள் பாதிக்கப்பட போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். மாறாக இந்த நடவடிக்கையினால் சாதாரண நடுத்தர மக்களே பாதிக்கப்படுவார்கள் என்பதால் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் வங்கிக் கட்டமைப்பின் ஊடாக நாட்டுக்கு டொலர் அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலைக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள ஏன் அவதானம் செலுத்தவில்லை என்பதை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். உக்ரேன் –…
-
- 1 reply
- 217 views
-
-
21ஆவது திருத்தம்: இரட்டை குடியுரிமை விவகாரம் உள்ளிட்ட, 4 விடயங்கள் குறித்து... ஒருமித்த இணக்கப்பாடு! 21ஆவது திருத்தச் சட்டமூலத்தில் இரட்டை குடியுரிமை விவகாரம், பிரதமரை பதவி நீக்கும் விடயம், அமைச்சின் விடயதானங்கள், ஜனாதிபதி அமைச்சுப் பதவியை வகித்தல் உள்ளிட்ட நான்கு பிரதான விடயங்கள் குறித்து ஒருமித்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. அதற்கமைய திருத்தங்களுடனான முழுமையாக திருத்தச்சட்டமூல வரைபு எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு ஓரிரு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிட எதிர்பார்க்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் 21ஆவது திருத்தம் குறித்து அவ…
-
- 0 replies
- 177 views
-
-
நெடுந்தீவு கடலில்... மிதந்து வந்த, பூச்சி கொல்லி மருந்து போத்தல்கள்! நெடுந்தீவு கடலில் மிதந்து வந்த மர்ம பொதியில் இருந்து 35 போத்தல் பூச்சிக்கொல்லி மருந்து போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன. நெடுந்தீவு கடலில் மர்ம பொதி ஒன்று மிதப்பதாக நேற்று (வியாழக்கிழமை) கடற்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கடற்படையினர் குறித்த பொதியினை மீட்டு சோதனையிட்ட போது , அவற்றில் இருந்து 35 பூச்சிக்கொல்லி மருந்து போத்தல்களை மீட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து இவற்றை கடத்தி வந்த நிலையில் கடற்படையினரை கண்டு கடத்தல்காரர்கள் பொதியினை கடலில் வீசி விட்டு தப்பி சென்று இருக்கலாம் என கடற்படையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு கடற்படையினர் மற…
-
- 0 replies
- 334 views
-
-
சர்வதேச நாணய நிதியத்துடனான... பேச்சுவார்த்தை, இம்மாத இறுதியில் நிறைவடையும்- பிரதமர் ரணில் இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வரும் நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் இம்மாத இறுதியில் நிறைவடையும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஒன்றிணைந்த வணிக சபை பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். நிதி மற்றும் சட்ட ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடன் மறுசீரமைப்புக்கான பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வருடம் செலுத்தப்பட வேண்டியுள்ள கடன்களை மீள செலுத்துவதற்கு 5 பில்லியன் டொலர்களைப் பெற்றுக் கொள்வதே அரச…
-
- 0 replies
- 109 views
-