Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை எம்.பி விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை Getty ImagesCopyright: Getty Images தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமுன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலி ஆவணங்கள் மூலம் இரண்டு கடவுச் சீட்டுக்களைப் பெற்றார் எனும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டமையை அடுத்து, இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 1 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தவும் அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த தொகையை செலுத்தத் தவற…

  2. ஆயிஷாவின் மரணத்திற்கு... நீதி கோரி, 8 மாவட்டங்களில் நாளை போராட்டம்! சிறுமி ஆயிஷாவின் மரணத்திற்கு நீதி கோரி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு வடக்கு, கிழக்கு பெண்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நீதிக்கான போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. மன்னார் பஜார் பகுதியில் நாளை காலை 10 மணிக்கு இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. வடக்கு -கிழக்கு மாகாணங்களில் உள்ள பெண்கள் வலையமைப்பினர், சமூக ஆர்வலர் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றினைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். தொடர்ச்சியாக நாட்டில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கவும் அவ்வாறான செயற்பாடுகளால் பாதிக்கப்படும் பெண்கள் சிறுவர்களுக்க…

  3. மேலும் ஒரு கப்பல் இந்த வார இறுதியில் இலங்கைக்கு மேலும் 25,000 மெட்ரிக் தொன் எரிவாயுவுடனான கப்பல் ஒன்று இந்த வார இறுதியில் நாட்டை வந்தடையும் என லிட்ரோ தெரிவித்துள்ளது. இதேவேளை இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நாள்தோறும் 50 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளது. இவற்றில் 60 சதவீதமானவை அதாவது சுமார் 30 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்திற்கு விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த நேரத்தில் கப்பல் வராத காரணத்தினால் கடந்த செவ்வாய்கிழமை முதல் எரிவாயு விநியோகத்தை லிட்ரோ நிறுவனம் இடைநிறுத்தியிருந்தது. மேல…

    • 0 replies
    • 131 views
  4. முதன்முதலாக... ரணிலின் பங்கேற்புடன் இடம்பெற்ற, ஆளுங்கட்சி கூட்டம்! ஆளுங்கட்சி நாடாளுமன்ற குழுவின் விசேட கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் முதல் தடவையாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் புதிய அமைச்சரவையின் அமைச்சர்களும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத், “இலங்கை தற்ப…

  5. இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து... பிரித்தானிய பிரதமருடன், ரணில் பேச்சு! இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து பிரித்தானிய பிரதமரிடம் விளக்கமளித்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது ருவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாக மாறுவதற்கு இலங்கைக்கு உதவ பொரிஸ் ஜோன்சன் உறுதியளித்துள்ளதாக பிரதமர் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார். இதேவேளை, தற்போதைய பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க இலங்கை மக்களுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இலங்கைக்கு ஆதரவளிப்பதாக பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளா…

  6. கோட்டா... பதவி விலகினால், பசில்... ஜனாதிபதியாக முடியும் – விஜேதாச ராஜபக்ஷ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திடீரென பதவி விலகினால் ஏற்படக் கூடிய நிலைமைகள் குறித்து நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள அவர், “ஜனாதிபதியை இராஜினாமா செய்யுமாறு கூறுகிறார்கள். அந்த பிரச்சினை தீர்ந்தால் அடுத்த பிரச்சினை என்னவாக இருக்கும்? அவர் இராஜினாமா செய்தால் அடுத்து, என்ன நடக்கும்? அடுத்த ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கே பெரும்பான்மை பலம் உள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களை பசில் ராஜபக்ஷவே க…

    • 8 replies
    • 482 views
  7. ஜனாதிபதி செயலணியிலிருந்து... விலகுவதாக அறிவித்தார், கலீலுர் ரஹ்மான் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியிலிருந்து விலகுவதாக கலீலுர் ரஹ்மான் அறிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம் தனியார் சட்டங்களில் திருத்தம் செய்து அவற்றை பாதுகாப்பதற்கு பதிலாக அந்த சட்டங்களை பறித்தெடுப்பதற்கான முயற்சிகளை ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செலணி, மேற்கொண்டிருப்பதாக அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்காரணமாக ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி முன்வைக்கவுள்ள அறிக்கையில் தம்மால் கையொப்பமிட முடியாது என கலீலுர் ரஹ்மான் அனுப்பி வைத்துள்ள …

  8. முட்டையின் விலை 50 ரூபாவாகவும், கோழி இறைச்சியின் விலை... 1200 ரூபாவாகவும் அதிகரிப்பு? நாட்டில் எதிர்காலத்தில் முட்டை ஒன்றின் விலை 50 ரூபாவாகவும் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை ஆயிரத்து 200 ரூபாவாகவும் அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் அஜித் குணசேகர இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். தங்களது தொழில்துறைக்கு தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு டொலர்கள் கிடைக்காத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, உரம் கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகள் எரிபொருள் நெருக்கடி காரணமாக விவசாயத்தை தொடர முட…

  9. நல்லூர் பெருவிழா – யாழ். மாநகரசபையினருக்கு, நாட்காட்டி அடங்கிய... காளாஞ்சி கையளிப்பு நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த பெருவிழா நாட்காட்டி அடங்கிய காளாஞ்சி யாழ். மாநகரசபையினருக்கு ஆலயத்தினரால் கையளிக்கப்பட்டது. நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஓகஸ்ட் 2ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளன. நிலையில், நல்லூர் கந்தன் பெருவிழாவுக்கான ஆலய சூழல் பராமரிப்பு, ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்தல், வீதி தடைகள் அமைத்து சீரான போக்குவரத்துக்கு வழிசெய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடும் யாழ். மாநகரசபையினருக்கு ஆலய சம்பிரதாய முறைப்படி இன்றைய தினம் (திங்கட்கிழ…

  10. அரச செலவுகள்... "250 பில்லியன்" ரூபாவினால், குறைக்கப் படவுள்ளதாக தகவல் அரச செலவுகள் 250 பில்லியன் ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசின் இந்த ஆண்டுக்கான செலவுகளை 250 பில்லியன்களினால் குறைப்பது குறித்த வழிமுறைகளை திறைசேரி பரிந்துரை செய்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. ஏற்கனவே இந்த ஆண்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்திற்கு பதிலீடாக இடைக்கால வரவு செலவுத் திட்டமொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதில் குறிப்பாக அரச மூலதன செலவுகள் வெகுவாக குறைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1284566

  11. அனைத்து, நாடாளுமன்ற உறுப்பினர்களும்... இராஜினாமா செய்ய வேண்டும் -சுமந்திரன் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்து தேர்தலுக்கு செல்வதே தீர்வாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி மற்றும் தற்போதைய பிரதமரை பெரும்பான்மையான மக்கள் நிராகரிக்கும் ஒரு பின்னணியில், நாட்டைக் கட்டியெழுப்ப அவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வீணாகவே தொடரும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய அரசாங்கத்தை அரசாங்கமாக ஏற்றுக்கொள்ள…

    • 5 replies
    • 348 views
  12. அகப்படுவாரா ஒட்டுக்குழு பிள்ளையான்.? முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாமனிதர் யோசப் பரராஜசிங்கம், மாமனிதர் நடராஜா ரவிராஜ் மற்றும் ஊடகவியலாளர்கள் பிரகீத் ஏக்னலிகொட, நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசன், கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் ரவீந்திரநாத் உள்ளிட்டவர்களின் படுகொலை வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு ஏடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை சர்வதேச அமைப்புகளால் முன்வைக்கப்பட்டுள்ளன. விசாரணைகளுக்கான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் திரட்டப்பட்டுவருவதாகவும் கூறப்படுகிறது. இணையவழியாகவும் சாட்சிகளிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவதை அறியமுடிகின்றது. அதேவேளை, TMVP என்ற பெயரில் இயங்கிவருகின்ற அமைப்பின் சில தலைவர்கள் செய்தத…

    • 1 reply
    • 565 views
  13. கடனுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை , சாணக்கியன் எம்.பி தெரிவித்துள்ள குற்றச்சாட்டை நிராகரிக்கின்றேன் - தயா கமகே By Kalmunai (பாறுக் ஷிஹான்) மக்கள் வங்கியில் இருந்து கடன் பெற்றுக்கொண்டு மூன்று வருடமாக ஒரு சதமேனும் செலுத்தவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன்தெரிவித்துள்ள குற்றச்சாட்டை நிராகரிப்பதாக ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தயா கமகே தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் அமைந்திருக்கும் அவரது காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை(29) மாலை நடாத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் மக்கள் வங்கியில் இ…

  14. அரசியல் போராட்டத்தை தொடர்ந்து இளைஞர்கள் முன்னெடுப்போம் - சாணக்கியன் இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த உறுப்பினர்கள் முன்னெடுத்த அரசியல் போராட்டத்தை இளைஞர்களாகிய நாம் தொடர்ந்து முன்னெடுப்போம். இதனை உறுதியாக திருகோணமலை மண்ணில் இருந்து தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். திருகோணமலையில் நேற்று (29) இடம்பெற்ற கொவிட் தொற்றால் உயிரிழந்த கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்காக இடம் பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்டக்கிளையின் தலைவர் ச.குகதாசன் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் தமிழரசு கட்ச…

  15. தென்னிலங்கை மக்களுடன்... ஒன்றிணைந்து போராட, வடக்கில் உள்ள தொழிற்சங்கங்களும்... மாணவ அமைப்புக்களும் தீர்மானம்! தென்னிலங்கையில் நடைபெறும் போராட்டங்களுக்கு வடக்கில் ஆதரவு வழங்குவதற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள தொழிற்சங்கங்களும் மாணவ அமைப்புக்களும் தீர்மானித்துள்ளன. யாழ்.பல்கலைக்கழக மாணவர் சங்கங்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள சில தொழிற்சங்கங்களும் இதற்கான இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினுடன், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள தொழிற்சங்கங்கள் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் சம்பந்தப்பட்ட தரப்பு இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. வடக்கிலும் தெற்கிலும் உள்ள மாணவர்களும் மக்களும் தன…

  16. காணாமல் போன 9 வயது சிறுமியின் சடலம் சதுப்பு நிலத்திலிருந்து கண்டெடுப்பு 33 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES களுத்துறை - பண்டாரகம - அட்டுலுகம பகுதியில் காணாமல் போன 9 வயது சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அட்டுலுகம பகுதியிலுள்ள சதுப்பு நிலமொன்றில் இருந்து இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஒன்பது வயதான இந்த சிறுமி கொலை செய்யப்பட்டு, சடலம் குறிப்பிட்ட பகுதிக்குக் கொண்டு வந்து போடப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் வெளியிடுகின்றனர். வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு, கோழி இறைச்சி கொள்வனவு செய்வதற்காக நேற்று முற்பக…

  17. சுமார் 7 ஆயிரம் ஊழியர்கள்... வேலை இழக்கும், அபாயம்! தனியார் துறையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிலையங்களில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட மின்சாரத்திற்காக இலங்கை மின்சார சபை 23 பில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தத் தவறியுள்ளது. உள்ளுர் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ருவன் பிரசங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தேசிய மின்வட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கான கட்டணத்தை இலங்கை மின்சார சபை செலுத்த தவறியுள்ளமை காரணமாக சிறிய மின் உற்பத்தி நிலையங்கள், சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் காற்றாலைகள் மூடப்படும் அபாயத்த்தினை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்காரணமாக தனியார் புதுப்பிக…

  18. இரண்டு வாரங்களுக்கு போதுமான... டீசல், பெற்றோல் கையிருப்பில் உள்ளதாக அறிவிப்பு! எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு போதுமான டீசல் மற்றும் பெற்றோல் கையிருப்பில் உள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். எதிரிபொருளினை ஏற்றிய கப்பல்கள் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி மற்றும் 14 மற்றும் 16ஆம் திகதிகளில் நாட்டினை வந்தடையும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1284395

  19. ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்களை... ஒப்பந்த அடிப்படையில், மீள நியமனம் செய்யும் நடவடிக்கை இடைநிறுத்தம் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்களை ஒப்பந்த அடிப்படையில் மீள நியமனம் செய்யும் நடவடிக்கை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. அரச சேவைகள் ஆணைக்குழுவினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்மானம் அனைத்து அமைச்சின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் பிரதானிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசசேவையின் செலவினங்களை கட்டுப்படுத்துவதற்காக இந்த திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மேலும் அரச சேவைகளில் வெற்றிடமாக காணப்படும் பணிகளை கடமையிலுள்ள அதிகாரிகளை கொண்டு நி…

  20. அரசாங்கத்திற்கு... அதிக நட்டத்தை ஏற்படுத்தும் நிறுவனங்களில், ஸ்ரீலங்கன் விமான சேவையும் ஒன்று இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான அதிக நட்டத்தை ஏற்படுத்தும் நான்கு நிறுவனங்களில் ஸ்ரீலங்கன் விமான சேவையும் ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திரமாக மதிப்பிடும் அமைப்பான அட்வகேற்றா (Advocata) என்ற அமைப்பு இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பொது நிதி வீணாக விரையமாவதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், இந்த நிறுவனத்தினை தனியார் மயப்படுத்துவதன் மூலம் மேலும் ஏற்படக்கூடிய நட்டத்தினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முடியும் என அந்த அமைப்பினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த 2021 ஜூலை வரையிலான …

  21. சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு... விசேட, வாராந்த விடுமுறை திட்டம் அறிமுகம் நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு விசேட வாராந்த விடுமுறை திட்டமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய சுகாதாரத்துறை ஊழியர்கள் அனைவருக்கும் வார நாட்களில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது. சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு எரிபொருள் நிரப்புவதில் முன்னுரிமை அளிக்கும் வகையில் வழங்கப்பட்ட அட்டையும் பயனற்றுப் போயுள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றது. குறிப்பாக குறித்த அட்டையைப் பயன்படுத்தி எரிபொருள் நிரப்ப முயற்சித்த சில மருத்துவர்கள் அச்சுறுத்தப்பட்டிருந்ததுடன் அவர்கள் மீது தாக்கு…

  22. இறுதி வடிவம் பெற்ற பின்னரே... ஆதரவு குறித்து அறிவிப்போம், என்கின்றார் சுமந்திரன் ! 19 ஆவது திருத்தத்துடன் ஒப்பிடுகையில் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் மிகவும் பின்னடைவானது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். ஆகவே 21 ஆவது திருத்தச்சட்டமூலம் இறுதி வடிவம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே அதற்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்பது குறித்து தீர்மானம் எடுக்கும் என்றும் அவர் கூறினார். ஏற்கனவே கொண்டுவரப்பட்ட 19 ஆவது திருத்தம் முன்னேற்றத்தை காண்பிக்கும் நிலையில் இந்த 21 ஆவது திருத்தம் அதனை விட பின்னடைவான திருத்தமாகவே காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். குறிப்பாக ஜனாதிபதியினால் அமைச்சுப் பதவிகளை வகிக்கமுடியாது என 19 ஆ…

  23. கடவுச் சீட்டினை... பெறுபவர்களின் எண்ணிக்கை, அதிகரிப்பு நாளாந்தம் கடவு சீட்டினை பெற்றுக்கொள்வதற்கு 2 ஆயிரத்து 500 பேர் வரை முன்பதிவு செய்வதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இதுவரையான காலங்களில் வழங்கப்பட்ட கடவுசீட்டுக்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் தற்பொழுதே அதிகமான கடவுசீட்டுக்கள் விநியோகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அதிக எண்ணிக்கையிலானோர் கடவு சீட்டுக்களை பெற்றுக்கொள்வதற்கு வருகின்றமையினால் பத்தரமுல்லையில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது . https://athavannews.com/2022/1…

  24. நாட்டு மக்களுக்கு... விசேட உரையாற்றவுள்ளார் பிரதமர் ரணில் ! பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.45 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார். அவரது உரையில் முக்கிய அம்சங்களாக 21வது திருத்தம் மற்றும் அரசியல் சீர்திருத்தங்கள் குறித்து இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1284352

  25. என் உயிரிலும்... மேலான, மக்கள் செல்வங்களை... எனக்கு தந்துவிட்டே, எனது தந்தை... விடை பெற்றுள்ளார்-ஜீவன் தொண்டமான். ” என் உயிரிலும் மேலான மக்கள் செல்வங்களை எனக்கு தந்துவிட்டே, எனது தந்தை விடைபெற்றுள்ளார். அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும், எதிரணியில் இருந்தாலும் மக்களுக்கான எனது சேவைகள் தொடரும்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். மலையகத் தமிழர்களின் அரசியல் காவலனாக கருதப்படும் ,அமரர் ஆறுமுகன் தொண்டமானின், 58 ஆவது ஜனன தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு கொட்டகலை சி.எல்.எவ் வளாகத்தில் மலரஞ்சலி, செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றபோதே …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.