ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142865 topics in this forum
-
மஹிந்த உள்ளிட்ட 7 பேரை கைது செய்ய சி.ஐ.டி.க்கு உத்தரவிடுமாறு கோரி நீதிமன்றில் மனுத் தாக்கல் ( எம்.எப்.எம்.பஸீர்) கோட்டா கோ கம, மைனா கோ கம அமைதி போராட்டத்தில் அத்துமீறி தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட 7 பேரைக் உடனடியாக கைது செய்ய சி.ஐ.டி.யினருக்கு உத்தரவிடுமாறு கோரி சட்டத்தரணி ஒருவர் கோட்டை நீதிவான் நீதிமன்றில் இன்று (13) முறைப்பாடொன்றினை செய்துள்ளார். சட்டத்தரணி சேனக பெரேராவே 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறை சட்டக் கோவையின் 136 (1) ( அ) அத்தியாயத்தின் கீழ் தனிப்பட்ட மனுவாக ( ப்ரிவடெ ப்லைன்ட்) இதனை இவ்வாறு தாக்கல் செய்துள்ளார். முன்…
-
- 2 replies
- 337 views
-
-
பொலிஸாரின் வீடுகளுக்கு... சேதம் விளைவிக்குமாறு, சமூக ஊடகங்களில்... பதிவேற்றிய முன்னாள் இராணுவ அதிகாரி கைது! ஆயுதப்படை அதிகாரிகள் மற்றும் பொலிஸாரின் வீடுகளுக்கு சேதம் விளைவிக்குமாறு சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்து பொதுமக்களை தூண்டிவிட்ட குற்றச்சாட்டின் பேரில் இலங்கை இராணுவத்தின் முன்னாள் லெப்டினன்ட் ஒருவரை நிட்டம்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர். உயர் இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் வீடுகளுக்கு சேதம் விளைவிப்பதில் கவனம் செலுத்துவதற்காக, அண்மைய குழப்பத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குழுக்களை அழைத்து சந்தேக நபர் தனது முகநூல் கணக்கில் பதிவிட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது. சந்தேக நபர் நிட்டம்புவ பொலிஸில் சரணடை…
-
- 0 replies
- 225 views
-
-
இரு தினங்களுக்கு... மூடப்படுகின்றன, மதுபானசாலைகள்! வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் மற்றும் 16ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை மதுவரி ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். குறித்த தினங்களில் விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும், அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறிச் செயற்படும் உரிமம் பெற்ற மதுபானசாலைகளுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1281748
-
- 0 replies
- 167 views
-
-
இனப்பிரச்சினை தொடர்பில் யாரும் சிந்திக்கும் நிலையில் இல்லை; கோவிந்தன் கருணாகரம்! கோட்டா கோ கோம் போராட்டத்தினை வழிநடத்துகின்றவர்களோ,புதிய அரசாங்கத்தினை அமைக்கவுள்ளவர்களோ,ஒன்றிணைந்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளோ பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கின்றபோதிலும் இந்த நாட்டின் பொருளாதார பின்னடைவுக்கு முக்கிய காரணமாகவுள்ள இனப்பிரச்சினை தொடர்பில் யாரும் சிந்திக்கும் நிலையில் இல்லையென தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். இன்று மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில…
-
- 0 replies
- 241 views
-
-
மக்களின் குரலுக்கு... மதிப்பளிக்காமல், ஜனாதிபதி... ரணிலை பிரதமராக்கியுள்ளார் – அனுர ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த தீர்மானம், மக்களின் குரலுக்கு மதிப்பளிக்காமல் எடுக்கப்பட்ட தீர்மானம் என ஜே.வி.பி.யின் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அனைத்து குடிமக்களும் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஒருமனதாக அழைப்பு விடுத்தனர். அவர்கள் அனைவரும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், கொள்ளையடிக்கப்பட்ட பொது நிதியை மீட்டெடுக்கவும், அந்த செயல்களுக்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் அழைப்பு விடுத்தனர் என அவர் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளார். ஜே.வி.பி.யின் தலைவர் …
-
- 2 replies
- 221 views
-
-
இலங்கையில் அமெரிக்க டொலர் - 364/=, தங்கம் - 170,400/= இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 364.98 ரூபாவாக இன்று (13) பதிவாகியுள்ளது. அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 355.01 ரூபாவாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, இலங்கையின் இன்று (13-05-2022) தங்க நிலவரம்... தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 658,421 ஆகும். 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 23,230 24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 185,850 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,300 22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 170,400 …
-
- 0 replies
- 185 views
-
-
அமைச்சு பதவிகள் வேண்டாம் - புதிய அரசும் வேண்டாம்! பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதா அல்லது அரசாங்கத்தை அமைப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழு கூட்டம் இன்று (13) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகளை அறிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் எந்தவொரு அமைச்சு பதவிகளையும் ஏற்கபோவதில்லை எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் அமையப்போகும் அரசாங்கத்திலும் அங்கம் வகிக்கப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். அமைச்சு பதவிகள் வேண்டாம் - புதிய அரசும் வேண்டாம்! (adaderana…
-
- 2 replies
- 457 views
-
-
ராஜபக்ஷக்களை பாதுகாக்கும் அரசாங்கமாக இடைக்கால அரசாங்கம் அமைந்து விடக்கூடாது - சம்பிக்க (எம்.மனோசித்ரா) நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு இட்டுச் சென்ற ராஜபக்ஷக்களை பாதுகாக்கும் அரசாங்கமாக இடைக்கால அரசாங்கம் அமைந்து விடக்கூடாது. மாறாக நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க கூடிய குறுகிய மற்றும் மத்திய கால தீர்வுகளை கொண்ட சர்வகட்சி அரசாகவே அது அமைய வேண்டும் என்று தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க, அவ்வாறான அரசாங்கமொன்றை நிறுவுவதற்கு இடமளிக்கும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை துறக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். உத்தேச இடைக்கால அரசாங்கம் செயற்பட வேண்டிய முறைமை தொடர்பில் முன்வைத்துள்ள பரிந்துரைகளிலேயே சம்பிக ரணவக்க இ…
-
- 0 replies
- 203 views
-
-
பொதுஜன பெரமுனவினர் ரணிலுக்கு ஆதரவு ? : மஹிந்தவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி ? Published by T. Saranya on 2022-05-13 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க கட்சியின் உயர் பீடம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கும் யோசனையை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றில் சமர்ப்பிக்க பொதுஜன பெரமுனவின் ஒரு தரப்பினர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்க பொதுஜன பெரமுன கட்சி மட்டத்தில் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. …
-
- 4 replies
- 411 views
-
-
ஊரடங்குக்கு... மத்தியில், 35ஆவது நாளாக தொடரும்... மக்கள் எழுச்சிப் போராட்டம்! நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் கொழும்பு கோட்டா கோ கமவில் முன்னெடுக்கப்பட்டு வரும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) 35ஆவது நாளாகவும் தொடர்கிறது. நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு காரணமான ஜனாதிபதி அதற்கு பொறுப்பு கூற வேண்டுமென போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அமைதியான முறையில் ஆரம்பமான மக்கள் எழுச்சிப் போராட்டம் ஒரு பல எதிர்ப்புகளையும் மீறி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தப் போராட்டத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், வழமைப்போன்று நேற்று இர…
-
- 0 replies
- 132 views
-
-
ரணிலுக்கு... ஐக்கிய மக்கள் சக்தி, ஆதரவளிக்காது – ரஞ்சித் மத்தும பண்டார பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி எந்த ஆதரவையும் வழங்காது என அதன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை மற்றும் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து விவாதிக்க ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழு இன்று (வெள்ளிக்கிழமை) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கூடவுள்ளது. இந்நிலையில், ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள ரஞ்சித் மத்தும பண்டார, நாடாளுமன்றத்தில் தற்போது வெற்றிடமாக உள்ள பிரதி சபாநாயகர் பதவிக்கு இம்தியாஸ் பாக்கீர் மார்க்கரின் பெயரை கட்சி முன்மொழியும் என தெரிவித்தார். அத்தோடு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக…
-
- 0 replies
- 140 views
-
-
புதிய பிரதமருக்கு... ஆதரவு வழங்குவதா இல்லையா... என்பது குறித்து, சுதந்திரக் கட்சி இன்று தீர்மானம் புதிய பிரதமருக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது குறித்து சுதந்திரக் கட்சி இன்று ஆராயவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது. இதன்போது புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1281727
-
- 0 replies
- 133 views
-
-
ரணில் தலைமையிலான... புதிய அரசாங்கத்துடன், இணைந்து.... பணியாற்ற தயார் – இந்தியா ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நேற்று பதவியேற்றார். இந்த நிலையில், இலங்கையின் புதிய அரசாங்கத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தூதரகத்தின் ருவிட்டர் பதிவில், “இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம் செய்துகொண்டதன் அடிப்படையில், ஜனநாயக நடைமுறைகளுக்கு இணங்க அமைக்கப்பட்ட இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அரசியல் ஸ்திரத்தன்மை குறித்தும் நம்பிக்கைகொள்கின்றது“ எ…
-
- 16 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில்... முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்றைய தினம்(வியாழக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி முன்பாக மாணவர்கள் மற்றும் ஊழியர்களால் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டது. முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு ஈகைச்சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. https://athavannews.com/2022/1281657
-
- 0 replies
- 180 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின்... இரண்டாம் நாள் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாம் நாள் இன்று (வெள்ளிக்கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது. 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் நேற்று ஆரம்பமானது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலக்கப்பட்டோரின் உறவுகளது சங்கத்தினால், யாழ்ப்பாணத்தில் நேற்று முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. அதேநேரம், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி முன்பாக மாணவர்கள் மற்றும் ஊழியர்களால் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் வட மாகாணத்தின் ஏனைய சில பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி…
-
- 0 replies
- 115 views
-
-
புதிய அமைச்சரவையில்... ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்களை, இணைத்துக் கொள்ள வேண்டுமாயின்.... உடனடியாக அறிவிக்கவும் – சஜித்திற்கு, கோட்டா கடிதம் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கான தீர்மானத்தை மாற்ற முடியாது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சில நிபந்தனைகளின் கீழ் அரசாங்கத்தை அமைப்பதாக முன்னர் அனுப்பிய கடிதத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனுப்பி வைத்துள்ள பதில் கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் கடிதத்தில் சில நிபந்தனைகள் உள்ளதாகவும் அவை இன்னும் கட்சித் தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் ஜனாதிபதி அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசி…
-
- 0 replies
- 113 views
-
-
அரசாங்கத்தை பிரதிநிதித்துவப் படுத்தும்... நாடாளுமன்ற உறுப்பினர்களை, சந்திக்கிறார் ஜனாதிபதி கோட்டா! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நாளை சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு நாளை முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் நாடாளுமன்றத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 9 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து, ஜனாதிபதிக்கும், அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே இடம்பெறவுள்ள முதலாவது சந்திப்பு இ…
-
- 0 replies
- 204 views
-
-
புதிய பிரதமருடன்... இணைந்து, பணியாற்ற எதிர்பார்கின்றேன் – ஜனாதிபதி! இலங்கையை மீண்டும் பலப்படுத்துவதற்காக புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1281681
-
- 0 replies
- 130 views
-
-
ரணிலுடன், இணைந்து பணியாற்ற... எதிர் பார்ப்பதாக, அறிவித்தது அமெரிக்கா! புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கு அமெரிக்க தூதுவர் Julie Chung வாழ்த்து தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாகவும் அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவரது நியமனமும், அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை விரைவாக உருவாக்குவதும் நெருக்கடியை எதிர்கொள்வதற்கும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கும் முதற்படி என அவர் கூறியுள்ளார். இலங்கை மக்களுக்கு தற்போது தேவையான தீர்வுகளை நீண்ட கால அடிப்படையில் பெற்றுக் கொடுக்கவும் சர்வதேச நாணய நிதியத்துடன் பெறுமதியான நகர்வுகளை முன்னெடுக்கவும் தமது ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர் தனது …
-
- 0 replies
- 101 views
-
-
“கோட்டா கோ கம போராட்டம்“ – பொலிஸார் நீதிமன்றத்தில், பொய்யான தகவலை முன் வைத்துள்ளதாக... குற்றச்சாட்டு! காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலக நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள வீதித்தடையை நீக்குமாறு அவசர உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை மீதான பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முறைப்பாடு, கொழும்பு பிரதம நீதவான் நந்தன அமரசிங்க முன்னிலையில் இன்று(வியாழக்கிழமை) எடுத்துக்கொள்ளப்பட்டது. தமது கோரிக்கையை ஆராய்வதற்காக வேறொரு நாளை ஒதுக்குமாறு பொலிஸாரால் இன்று நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனூடாக பொலிஸாருக்கு இந்த கோரிக்கை தொடர்பில் பரிசீலிப்பதற்கான தேவை இல்லையென்பது புலப்படுவதாக பிரதம நீதவான் இதன்போது தெரிவி…
-
- 0 replies
- 98 views
-
-
நாடளாவிய ரீதியில்... அமுல் படுத்தப்பட்டிருந்த, ஊரடங்கு தளர்வு! நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மீண்டும் இன்று பிற்பகல் 2 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம், நாளை காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின் அதிகாரத்தின்கீழ் தவிர, அந்த பகுதிகளில் உள்ள பொதுச்சாலை, புகையிரதப் பாதை, பொதுப் பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது கடற்கரையில் எவரும் தங்குவதற்கு அனுமதி இல்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்று முன்தினம் காலை வரை ஊரடங்கு …
-
- 0 replies
- 108 views
-
-
ஸ்பெயினில்.. 350க்கும் அதிகமான, பெட்ரோல் நிலையங்கள் தற்காலிகமாக மூடல்! ஸ்பெயினில் 350க்கும் அதிகமான பெட்ரோல் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஒரு லிட்டர் எரிபொருளுக்கு 20 செண்ட் தள்ளுபடி வழங்கப்படும் என ஸ்பெயின் ஜனாதிபதி பெட்ரோ சான்செஸ் அறிவித்திருந்தார். இந்த மானியத்திற்காக அரசு 15 செண்ட் செலுத்தும் என்றும் பெட்ரோல் நிலையங்கள் 5 செண்ட் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அரசின் இந்த கொள்கை முடிவு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் சிறு மற்றும் நடுத்தர பெட்ரோல் நிலையங்களுக்கு இதனால் பெருத்த இழப்பு ஏற்படும் என எதிர்ப்பு கிளம்பின. இதனால் 350க்கும் அதிகமான பெட்ரோல் நிலையங்கள் தற்க…
-
- 0 replies
- 105 views
-
-
ராஜபக்ச குடும்பத்துக்கு நெருக்கமான ரணில் புதிய பிரதமரானார். News that Ranil Wickremesinghe is the new prime minister has been largely met with dismay and disbelief in Sri Lanka. His appointment is being viewed as yet another arrogant response by President Gotabaya Rajapaksa to weeks of protests over rising prices and shortages. Mr Wickremesinghe is seen as being close to the Rajapaksa family, and many think he has been chosen because he will be likely to guarantee their security. Protests flared up in early April in the capital, Colombo, and have grown in size and spread across the country. People are furious…
-
- 3 replies
- 330 views
-
-
'' கோட்டா கோ கம" குறித்த தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார் புதிய பிரதமர் ரணில் கோட்டா கோ கமவில் கை வைக்க மாட்டோம் என புதிதாக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார். இதனையடுத்து மதவழிபாடுகளில் ஈடுபட்ட ரணில் விக்கிரமசிங்கவிடம் ஊடகவியலாளர் ஒருவர் கோட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில், “ கோட்டா கோ கமவில் கை வைக்க மாட்டோம் . நாடு கட்டியெழுப்பப்பட்டு இளம் தலைமுறையினருக்கு சிறப்பான எதிர்காலம் உருவாக்கப்படும். ரூபாவின் பெறுமதி ஸ்திரப்படுத்தப்படும்…
-
- 4 replies
- 464 views
-
-
யாழில் ஐ.தே.க ஆதரவாளர்கள் வெடிகொளுத்தி கொண்டாட்டம் May 12, 2022 ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் யாழ்ப்பாண நகரில் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு இலங்கையின் புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இதனையடுத்து யாழ்ப்பாண நகரின் பிரதான வீதிகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் பட்டாசுகளை கொளுத்தி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர் https://globaltamilnews.net/2022/176589 .
-
- 9 replies
- 576 views
-