ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142867 topics in this forum
-
பொது இடத்தில்... ஒன்று கூடினால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – கோட்டா கோ கம போராட்டக்காரர்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை! பொது இடத்தில் ஒன்றுகூடினால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இருந்து ஒலிபெருக்கி மூலம் உரையாற்றிய பொலிஸார், நாட்டில் கடந்த 6ஆம் திகதி முதல் அவசரகாலச் சட்டமும் நேற்று முன்தினம் முதல் நாளை காலை வரை ஊரடங்குச் சட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இந்தக் காலப்பகுதியில் மைதானம், கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களில் ஒன்றுகூடுவது சட்டவிரேதமாகும் என தெரிவித்த பொலிஸார், எனவே... பொது இடத்தில் ஒன்றுகூடினால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளனர். https://athavannews.com/2022/128…
-
- 0 replies
- 146 views
-
-
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய்யில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அலுவலகமும் போராட்டகாரர்களால் தீவைக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக கடந்த ஒரு மாத காலமாக அமைதியான முறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் போராட்டத்தில் குண்டர்கள் புகுந்து குழப்பம் ஏற்படுத்தினர். இதனால் நாடு முழுவதும் வன்முறை வெடித்த நிலையில், அரசாங்கத்திற்கு ஆதரவானவர்கள் மீது கடும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன், மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர்களின் வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டன. இன்றைய தினமும் நாடு முழுவதும் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில், நடைமுறையில் இரு…
-
- 7 replies
- 739 views
-
-
சஜித் பிரதமரானால்... அவரை, ஆதரிக்கத் தயார் – சுதந்திரக் கட்சி எதிர்க்கட்சித் தலைவர் பிரதமர் பதவியை ஏற்கத் தயாராக இருந்தால், அவருக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், நாடாளுமன்றத்தில் உள்ள சுயேச்சைக் குழுவும் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை, ஜனாதிபதி பதவி விலகினால் மாத்திரமே தாம் பிரதமர் பதவியை ஏற்பேன் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1281393
-
- 1 reply
- 116 views
-
-
நாட்டின் பொருளாதார நிலைமை... மேலும் மோசமாகும் – மத்தியவங்கி ஆளுநர் எச்சரிக்கை. அரசியல் ஸ்திரத்தன்மையை விரைவில் ஏற்படுத்தாவிட்டால் நாட்டின் பொருளாதார நிலைமை மேலும் மோசமாகும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். தற்போது இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பில் பேசிய அவர், இந்த நெருக்கடிகளுக்கு இரண்டு வாரங்களுக்குள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு கிடைக்காவிட்டால், பதவி விலகுவேன் என்றும் கூறியுள்ளார். தற்போதைய நிலைமை தொடர்ந்தால், நாளாந்தம் 10 முதல் 12 மணிநேர மின்வெட்டு, எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படலாம் என்றும் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். https://atha…
-
- 0 replies
- 127 views
-
-
அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறாத பட்சத்தில்.... ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் – பாதுகாப்புச் செயலாளர். அசம்பாவிதங்கள் எதுவும் இன்று இடம்பெறாத பட்சத்தில் நாளை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எனவே, நாட்டில் இன்றைய நிலைவரம் முழுமையாக கண்காணிக்கப்பட்டு அதன் அடிப்படையில் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை நீக்குவதா? அல்லது நீடிப்பதா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் தேவையேற்பட்டால் மீண்டும் ஊரடங்கை அமுல்படுத்த வாய்ப்புள்ளதாகவும் அவர் குறி…
-
- 0 replies
- 102 views
-
-
பிரச்சினைகளை ஏற்படுத்தி... இன முறுகலை தூண்டி விட்டது, முட்டாள்தனமானது – செல்வம் மக்கள் விரும்பவில்லை என்றால் அவர்கள் விட்டுச் செல்ல வேண்டும் என்பதே காலத்தின் நீதி. பிரச்சினைகளை ஏற்படுத்தி இன முறுகலை தூண்டி விட்டு இழப்புக்களை சந்தித்த பின்பு தமது பதவிகளை ராஜினாமா செய்வது என்பது முட்டாள்தனம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு மிகவும் கொந்தளிப்பான நிலையில் இருந்து கொண்டு இருக்கின்றது. சிங்கள தேசத்தில் போராட்ட வடிவில் பல விடயங்கள் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றது. மஹிந்த ராஜபக்சவின் ஆரம்ப பிரச்சினையே இன்று பாரிய அளவி…
-
- 0 replies
- 149 views
-
-
பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை... முடிவுக்குக் கொண்டுவர, தொழிற் சங்கங்கள் தீர்மானம்! நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை இன்றுடன் (புதன்கிழமை) முடிவுக்குக் கொண்டுவர தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. தேசிய தொழிற்சங்க நிலையத்தின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். காலி முகத்திடலில் இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியாக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1281462
-
- 0 replies
- 192 views
-
-
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள, அதிகாரங்களுக்கு அமைய... பல அமைச்சகங்களுக்கு செயலாளர்கள் நியமனம். ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக மக்களின் வாழ்க்கையை முன்னெடுப்பதற்காக பாதுகாப்பு, பொது பாதுகாப்பு மற்றும் நிதி ஆகிய அமைச்சுகளுக்கு மூன்று செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்று முதல் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, பாதுகாப்பு அமைச்சு – ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, பொது பாதுகாப்பு அமைச்சு – ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ், நிதி அமைச்சகம் – கே.எம் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் தற்போது வரை அந்த அமைச்சுக்களில் செயலாளர்களாக பணியாற்றி வருகின்றனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://atha…
-
- 0 replies
- 168 views
-
-
பொதுத் தேர்தல் இடம்பெறும் வரை... இடைக்கால அரசாங்கத்தை, பொறுப்பேற்க தயார் – அனுர பொதுத்தேர்தல் இடம்பெறும் வரை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தை பொறுப்பேற்க தயார் என அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. இதன்போதே கட்சியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பதவியில் இருக்கும் வரை நாட்டில் ஸ்திரத்தன்மை நிலவாது என்றும் அவர் பதவி விலக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். “கோட்டா கோ கம“ போராட்டத்தை தவிர்த்து ஏனைய பகுதிகளில் இடம்பெறும் வன்முறை, கொள்ளை மற்றும் தனிப்பட்ட பழிவாங்கல் கு…
-
- 1 reply
- 126 views
-
-
மஹிந்த மற்றும் ஜோன்ஸ்டன் உள்ளிட்டவர்களை.... கைது செய்யுமாறு, சட்டத்தரணிகள் குழு முறைப்பாடு. முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் சனத் நிஷாந்த மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோரை கைது செய்யுமாறு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கமல் விஜேசிறி, துசித குணசேகர, ராஜித லக்மால் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் சனத் ஆகியோரை குற்றவியல் அச்சுறுத்தல், குண்டர்களுக்கு உதவி செய்தல் மற்றும் குற்றவியல் சட்டத்தின் 486 மற்றும் 102 ஆகிய பிரிவுகளின் கீழ் கைது ச…
-
- 0 replies
- 66 views
-
-
பொதுமக்களை... குழப்பமடையச் செய்யும், எந்தவொரு தரக்குறைவான... செயலிலும் முப்படையினர், ஈடுபட மாட்டார்கள் – சவேந்திர சில்வா பொதுமக்களை குழப்பமடையச் செய்யும் எந்தவொரு தரக்குறைவான செயலிலும் முப்படையினர் ஈடுபட மாட்டார்கள் என பாதுகாப்பு படைகளின் தலைமையதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களால் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் முன்னாள் பிரதமர் மற்றும் அவரது ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஆதரவாளர்கள் மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் பொதுமக்கள் அவர்களது வாகனங்கள், வீடுகள் உள்ளிட்ட சொத்துக்களை அழ…
-
- 2 replies
- 289 views
-
-
கொழும்பின்... பல இடங்களிலும், இராணுவ வாகனங்கள்! கொழும்பின் பல வீதிகளில் இராணுவ வாகனங்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அத்தோடு, சோதனைச்சாவடிகளிலும் அதிகளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு இராணுவத்தினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1281279
-
- 1 reply
- 340 views
-
-
இலங்கையில் ராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும் வகையில் வன்முறைக்கு தூண்டல்: முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரதமரின் அதிகாரப்பூர்வ குடியிருப்புக்கு வெளியே குவிக்கப்பட்ட பாதுகாப்புப் படையினர். (இன்றைய (மே 11) இந்திய மற்றும் இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்) ராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும் வகையில் வன்முறையைத் தூண்டுவதற்கு சமூக விரோதிகள் பயன்படுத்தப்படலாம் என்று இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளதாக, 'தினக்குரல்' நாளிதழ் செய்தி வெ…
-
- 0 replies
- 104 views
- 1 follower
-
-
இலங்கையில் அலுவல்பூர்வ ராணுவ ஆட்சி வரும் சூழ்நிலை இருக்கிறதா? ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக 51 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்போரை கண்டால், துப்பாக்கி சூடு நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த உத்தரவானது, ராணுவ ஆட்சியை நோக்கி நகரும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதா என்ற கேள்வி குறித்து ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளருமான அ.நிக்சன் கருத்துத் தெரிவிக்கின்றார். பிபிசி தமிழ் ஃபேஸ்புக் நேரலைக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். ''இலங்கையைப் பொருத்த வரை ராணுவ ஆட்சிக்கான வாய்ப்பு மிகக் க…
-
- 0 replies
- 124 views
- 1 follower
-
-
அனைத்து இலங்கையர்களும்... ஒன்றாக, கைகோர்க்க வேண்டிய நேரம் இது – ஜனாதிபதி அனைத்து இலங்கையர்களும் ஒன்றாக கைகோர்க்க வேண்டிய நேரம் இதுவென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர், “பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சவால்களை வெற்றிகொள்வதற்கு, அனைத்து இலங்கையர்களும் ஒன்றாக கைகோர்க்க வேண்டிய நேரம் இது. இன மற்றும் மத நல்லிணக்கத்தை நோக்கி உங்களைத் தள்ளும் நாசகார முயற்சிகளை நிராகரிக்குமாறு அனைத்து இலங்கையர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். நிதானம், சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வை ஊக்குவித்தல் இன்றியமையாதது” என அவர் பதிவிட்ட…
-
- 1 reply
- 202 views
-
-
’தீவைத்தவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை’ கடந்த 9ஆம் திகதிக்குப் பின்னர் தீவைத்தல் உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட அனைவருக்கு எதிராகவும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுமென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். https://www.tamilmirror.lk/செய்திகள்/தீவைத்தவர்களுக்கு-எதிராக-கடும்-நடவடிக்கை/175-296230
-
- 0 replies
- 234 views
-
-
வன்முறை சம்பவங்கள் தொடர்பாக... நெருக்கமாக, அவதானித்து வருவதாக... சீனா அறிவிப்பு இலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறை சம்பவங்கள் தொடர்பாக நெருக்கமாக அவதானித்து வருவதாக சீனா அறிவித்துள்ளது. எனவே இங்கு பணிபுரியும் சீனப் பிரஜைகளை எச்சரிக்கையாகவும் அவதானமாகவும் இருக்குமாறு சீனா கேட்டுக் கொண்டுள்ளது. தலைநகர் கொழும்பு மற்றும் பிற இடங்களில் இடம்பெற்ற மோதல்கள் ஒப்பீட்டளவில் பெரிய உயிரிழப்புகளை ஏற்படுத்தியது என சீனாவின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. வன்முறைகள் காரணமாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாட்டில் சமாதானமும் ஸ்திரத்தன்மையும் ஏற்படும் என நம்புவதாக சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2022/128129…
-
- 1 reply
- 209 views
-
-
வெறுமனே... பதாதைகளை எரித்து, எம் வீர வரலாறை... கொச்சைப் படுத்தாதீர்கள் – அங்கஜன். வெறுமனே பதாதைகளை எரித்து எம் வீர வரலாறை கொச்சைப்படுத்தாதீர்கள் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் மக்கள் தொடர்பு அலுவலக வாயிலில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினரின் பதாகைக்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு இனம்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டது. அதனால் பதாகை சிறு சேதங்களுக்கு உள்ளானது. குறித்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, யாழிலும்…
-
- 1 reply
- 343 views
-
-
எந்த அரசியல் பிரமுகரும்... இந்தியாவுக்கு, தப்பியோடவில்லை – இந்திய உயர் ஸ்தானிகராலயம்! இலங்கையினைச் சேர்ந்த எந்த அரசியல் பிரமுகரும் இந்தியாவுக்கு தப்பியோடவில்லை என இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. சில அரசியல் பிரமுகர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவி வருவதை அவதானிக்க முடிவதாகவும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இவை போலியான மற்றும் அப்பட்டமான தவறான அறிக்கைகள் எனவும், இந்த தகவல்களில் உண்மையில்லை எனவும் உயர் ஸ்தானிகராலயம் க…
-
- 2 replies
- 307 views
-
-
டி.ஏ.ராஜபக்சவின்... உருவச்சிலை, உடைக்கப்பட்டது! தங்காலையில் அமைக்கப்பட்டிருந்த D.A.ராஜபக்ஷவின் சிலை உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே இன்று(செவ்வாய்கிழமை) சேதமாக்கப்பட்டுள்ளது. டி.ஏ. ராஜபக்ஷ, முன்னாள் பிரதமரான மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோரின் தந்தை என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1281202
-
- 8 replies
- 661 views
-
-
பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரின் வீடுகள், வாகனங்கள் தீக்கிரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரின் வாகனங்கள் மற்றும் வீடுகள் போராட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்டுள்ளன. நாட்டில் இன்று காலை முதல் காலிமுகத்திடல் மற்றும் அலரிமாலிகை உள்ளிட்ட பல பகுதிகளில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன. அந்த வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள், வாகனங்கள் மற்றும் அலுவலகங்கள் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்டும், தீ வைக்கப்பட்டும் வருகின்றது. அந்த வகையில் முன்னாள் அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோவின் குருநாகலிலுள்ள கட்சி அலுவலக…
-
- 26 replies
- 2.1k views
-
-
அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை... இணைய வழியில், நடத்த தீர்மானம். அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை இணைய வழியில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3.00 மணிக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பு மெய்நிகர் முறைமை ஊடாக (Zoom) நடைபெறவுள்ளதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளது. முன்னதாக, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வரை கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட மாட்டாது என சபாநாயகர் அறிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து, கட்சித் தலைவர்கள் கூட்டத்தை…
-
- 0 replies
- 276 views
-
-
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில்... இன்று, முன்னிலையாகின்றனர் பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவத் தளபதி! பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இன்று புதன்கிழமை அழைக்கப்பட்டுள்ளனர். காலை 10 மணிக்கு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அவர்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ரோஹினி மாரசிங்க அறிவித்துள்ளார். மக்களுக்கும் அவர்களது வீடுகளுக்கும் போதிய பாதுகாப்பை வழங்காமை மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தத் தவறியமை தொடர்பில் இவர்களிடம் விசாரணை நடத்தப்படடவுள்ளது. உரிய நடைமுறை எப்போதும் பின்பற்றப்பட வேண்டும் என்றும் வன்முறைக்கு காரணமானவர்கள் அனைவரும் கைது செ…
-
- 0 replies
- 121 views
-
-
மஹிந்தவின்.... பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் உள்ளிட்ட தரப்பினருக்கு, CID அழைப்பு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் உள்ளிட்ட தரப்பினரை குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமைதிப் போராட்டத்தில் தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பாக வாக்குமூலம் வழங்க அவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களால் கடந்த 9 ஆம் திகதி ‘ மைனா கோ கம ‘ மற்றும் கோட்டா கோ கம’ ஆகிய பகுதிகளில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1281266
-
- 0 replies
- 122 views
-
-
கொழும்பு – கோட்டா கோ கமவில் தொடரும் போராட்டம்! காலிமுகத்திடலில் ஏற்பட்ட வன்முறையை அடுத்து தரைமட்டமாக்கப்பட்ட கோட்டா கோ கம மீள உருவாக்கப்பட்டு இன்றும் (புதன்கிழமை) போராட்டம் தொடர்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அமைதியான முறையில் ஆரம்பமான மக்கள் எழுச்சிப் போராட்டம் ஒரு மாதத்தைக் கடந்த நிலையில், பல எதிர்ப்புகளையும் மீறி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தப் போராட்டத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், வழமைப்போன்று நேற்று இரவும் அரசாங்கத்தை வீட்டுக்குச் செல்லுமாறு கோசமெழுப்பி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்தோடு, நேற்று முன்தினம் இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்தவர்களை நினைவுகூரும் வகையில் 5 நி…
-
- 0 replies
- 184 views
-