Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மக்களுக்காக... எந்த தியாகத்தையும் செய்ய, நான் தயார் – பிரதமர் மஹிந்த மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்ய நான் தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் இன்று பேசிய அவர், தான் எப்போதும் மக்களின் நலனுக்காகவே செயற்பட்டதாகவும் கூறியுள்ளார். https://athavannews.com/2022/1280748

  2. கோ கோட்டா கம போராட்டத்தை... அரசாங்கம் சீர்குலைத்தால், அரசாங்கத்துடன் மேற்கொள்ளும் அனைத்து கலந்துரையாடல்களிலிருந்தும்.... விலகிக்கொள்வேன் – ரணில் அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தி கோ கோட்டா கம போராட்டத்தை அரசாங்கம் சீர்குலைத்தால், அரசாங்கத்துடன் மேற்கொள்ளும் அனைத்து கலந்துரையாடல்களிலிருந்தும் விலகிக்கொள்வதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவர் இந்த விடயம் குறித்து குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1280774

  3. கொழும்பில் ஊரடங்கு. கோத்தா கோ கம தாக்கி அழிப்பு. மகிந்தா ஆதரவாளர்கள், உட்புகுந்து, தாக்கி அங்கிருந்த போராளிகளை விரட்டி தாக்கி, கூடாரங்களை அழித்தனர். இதுவரை 17 பேர் வைத்தியசாலையில். இராணுவம், STF களமிறக்கப்பட்டது. ஊரடங்கும் அமுலில். அங்கு விரைந்து வந்த, சஜித்தும் தாக்குதலுக்கு உள்ளானார். இதுதான் கோத்தாவின் சிங்கள அரசு. சிறப்பு. 👍

  4. கோட்டா GO கம மீது அரச ஆதரவாளர்கள் தாக்குதல் https://www.madawalaenews.com/2022/05/live-video-go.html

    • 1 reply
    • 276 views
  5. மட்டக்களப்பு கோட்டா கோ ஹோம் கம அமைக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் அங்குள்ள செங்கலடி பேருந்து நிலையத்தில் கோட்டா கோ ஹோம் கம கூடாரம் அமைத்துத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். April 14, 2022 மட்டக்களப்பு கோட்டா கோ ஹோம் கம அமைக்கப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து அரசாங்கத்தை விரட்டியடிப்போம்; அரசியல் முறையைக் கவிழ்ப்போம் எனும் தொனிப்பொருளில் ஆர்ப்பாட்ட ஊர்வலம் பல்கலைக்கழக வளாகத்தில் ஆரம்பித்து செங்கலடி சந்திவரை சென்று அங்கு கோட்டா கோ ஹோம் கம அமைக்கப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது அமைப்…

    • 6 replies
    • 1k views
  6. “ பிரதமர் மஹிந்தவை பாதுகாப்போம் ” : அலரி மாளிகை முன் ஆர்ப்பாட்டம் Published on 2022-05-09 10:34:57 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் இன்று காலை அலரிமாளிகையில் கூடியுள்ளனர். இந்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்து 'பிரதமர் மஹிந்தவை பாதுகாப்போம்'என பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் தற்போது அலரிமாளிகை முன்பாக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். பொருளாதார பிரச்சனைக்கு பிரதமரால் மாத்திரமே தீர்வு காண முடியும் எனவும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் நோக்கம் வெற்றிபெற இடமளிக்க முடியாது எனவும் பொதுஜன பெரமுனவின் உள்ளுராட்சி …

    • 4 replies
    • 383 views
  7. நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதாக ஜனாதிபதி கோட்டா உறுதி ( எம்.எப்.எம்.பஸீர்) நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விஷேட குழுவுடனான சந்திப்பின் போது ஜனாதிபதி இதனை வெளிப்படுத்தியதாக சட்டத்தரணிகள் சங்கத்தின் உயர் மட்ட தகவல்கள் தெரிவித்தன. நாட்டில் நிலவும் நெருக்கடியை தீர்ப்பதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் 13 அம்ச ஆலோசனைக் கோவையை முன் வைத்துள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை ( 😎 அச்சங்கத்தை சந்திக்க ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட அரசாங்கத்திலிருந்து வெளியேறி சுயாதீனமாக இயங்கும் 11 கட்சிகளின் பிரதி நிதிகள் , …

  8. பதவி விலகுவாரா... மஹிந்த – இன்று, முக்கிய அறிவிப்பு? பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (திங்கட்கிழமை) விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின்போது பிரதமரை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அத்தோடு, மாற்று அரசாங்கமொன்றை உருவாக்க முடியும் என்ற உத்தரவாதத்திற்கு உட்பட்டு பதவி விலகுவதற்கு பிரதமர் இணக்கம் தெரிவித்திருந்தார் என்றும் தகவல் வெளியாகியிருந்தன. எனினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன்னை பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு எவ்வித கோரிக்கையையும் முன்வைக்கவில்லையென பிரதமர் உறுதிப்படுத்துவதாக பிரதமரின் ஊடக செயலாளர் தெரிவித்திருந்தார…

  9. "லிட்ரோ" நிறுவனத்தின்... அறிவித்தல் ! விநியோகிப்பதற்கு தேவையான சமையல் எரிவாயு கையிருப்பில் இல்லை என லிட்ரோ நிறுவனம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது. விநியோகத்திற்கு தேவையான எரிவாயு கையிருப்பில் இல்லை என்பதுடன், அத்தியாவசிய சேவைக்காக மாத்திரம் எரிவாயு விநியோகிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . நேற்றைய தினம் விடுமுறை என்ற போதிலும் முத்துராஜவல லிட்ரோ எரிவாயு முனையத்திலிருந்து கணிசமான எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்பட்டதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2022/1280705

  10. நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து... விவாதிப்பதற்கான திகதி, இன்று அறிவிப்பு! நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் விசேட கூட்டமொன்று இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது. நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக நாடாளுமன்றில் விவாதிப்பதற்குரிய தினம் குறித்து இதன்போது தீர்மானிக்கப்படவுள்ளது. அmத்தோடு, கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் மற்றும் நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பாகவும் இதன்போது விரிவாக ஆராயப்படவுள்ளது. https://athavannews.com/2…

  11. இலங்கை மக்களுக்கு.. இன்று முதல், 4ஆவது தடுப்பூசி! இலங்கை மக்களுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் 4ஆவது தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. முதற்கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நான்காம் கட்ட தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன அண்மையில் தெரிவித்திருந்தார். சுகாதார அமைச்சின் கொரோனா தொடர்பான நிபுணர் குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார். அதற்கமைய இன்றைய தினம் முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கல் ஆரம்பிக்கப்படவுள்ளது. https://athavannews.com/2022/1280690

  12. வடக்கு மாகாணம் தழுவிய... போராட்டத்தில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்! பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை வடக்கு மாகாணம் தழுவிய பாரிய கண்டனப் போராட்டத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஈடுபடவுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாக நாளை காலை 9 மணியளவில் இடம்பெறும் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு சகல வைத்தியர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1280688

  13. மின் கட்டமைப்பை சீர் செய்வதற்கு... மேலும் சில நாட்கள், தேவை – மின்வெட்டு குறித்த அறிவிப்பு! நாட்டில் இன்று (திங்கட்கிழமை) 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைய, A முதல் L மற்றும் P முதல் W வரையான வலையங்களில், காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியில் 2 மணிநேரமும், மாலை 5 மணிமுதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணி நேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதேநேரம், M N O X Y Z ஆகிய வலையங்களில் அதிகாலை 5 மணிமுதல் காலை 8 மணிவரையான காலப்பகுதியில் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்க…

  14. ஜனாதிபதி, அரச தலைவர்களின் செயலற்ற தன்மைக்கு அதிருப்தி தெரிவித்து மகாநாக்க தேரர்கள் மீண்டும் கடிதம் ஜனாதிபதி உள்ளிட்ட அர தலைவர்களின் செயலற்ற தன்மைக்கு அதிருப்தி தெரிவித்து 3 பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் மற்றுமொரு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளனர். நாட்டில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் முன்மொழிவுகளை முன்வைத்து மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி மற்றும் அரச தலைவர்களுக்கு ஏற்கனவே இரண்டு கடிதங்களை அனுப்பியிருந்தனர். முன்மொழிவுகளின் அடிப்படையில் நெருக்கடிக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி ஜனாதிபதி பதில் அளித்திருந்த போதிலும், ஜனாதிபதி மற்றும் எந்தவொரு உரிய அதிகாரிகளின் செயலற்ற தன்மை குறித்தும்…

  15. வங்க கடலில் 'அசானி' புயல்: இலங்கை பெயர்சூட்டிய இயற்கை சீற்றம் - 8 தகவல்கள் பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழ்த்த தாழ்வு மண்டலமாக மாறி இன்று புயலாக வலுபெற்றுள்ளது. அதன்படி தற்போது உருவாகியுள்ள இந்த புயலுக்கு 'அசானி' என்று வானிலை ஆய்வாளர்கள் பெயரிட்டுள்ளனர். இந்த புயல் தொடர்ந்து நகர்ந்து,மே 10ஆம் தேதி ஆந்திரா மற்றும் ஒடிஷா கடற்கரையை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலைபெறக்கூடும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக,ஆந…

  16. பால் மாவின்... விலை, மீண்டும் அதிகரிப்பு இறக்குமதி செய்யப்படும் பால்மா விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோகிராம் பால் மா 2,545 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட போதிலும் தற்போது 600 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 400 கிராம் பால் மாவின் விலை 1,020 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட போதிலும் தற்போது 230 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது. https://athavannews.com/2022/1280683

  17. பொதுமக்களுக்கு பாதுகாப்பு அமைச்சு விடுக்கும் வேண்டுகோள்! நாட்டின் தற்போதைய பொருளாதார, சமூக நெருக்கடி மற்றும் அமைதியின்மையுடன் கூடிய சூழலில் புத்திசாலித்தனத்துடனும் பொறுமையுடனும் நிர்வகிக்க உதவுமாறு நாட்டின் அனைத்து பிரஜைகளிடமும் பாதுகாப்பு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டு இந்த அறிவிப்பை பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ளது. அது தொடர்பான அறிக்கையில், ஜனநாயக கட்டமைப்பிற்குள் அமைதியான முறையில் தமது போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் வெளிப்படுத்தும் இலங்கை மக்களின் ஜனநாயக உரிமையை நாம் அனைவரும் மதிக்கின்றோம் என்பதை குறிப்பிட வேண்டும். இருந்த போதிலும், வி…

  18. பிரதமர் மஹிந்த ராஜபக்ச... அனுராதபுரத்திற்கு, விஜயம்! பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தற்போது அனுராதபுரத்திற்கு விஜயம் செய்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது மத வழிபாடுகளில் ஈடுபடும் முகமாக அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2022/1280672

    • 4 replies
    • 410 views
  19. அவசரகால நிலை பிரகடனப் படுத்த, காரணம் என்ன? முக்கிய சில தரப்பினருக்கு... மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு தற்போது நாட்டில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டமை தொடர்பான காரணங்களை விளக்குமாறு தெரிவித்து ஜனாதிபதி செயலாளர், பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத், பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன மற்றும் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன ஆகியோருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள், அமைதியாகவும் சாதாரண பொலிஸ் நடவடிக்கைகளினால் கட்டுப்படுத்தக் கூடிய நிலையிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என குறிப்…

  20. தையிட்டியிலுள்ள... தனியார் காணியில், விகாரை : கள ஆய்வில்... இராணுவத் தளபதி! வலி. வடக்கு தையிட்டியிலுள்ள தனியார் காணியொன்றில் அமைக்கப்பட்ட திஸ்ஸ ரஜமஹா விகாரைக்கு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இன்று நேரில் சென்றிருந்தார். பலாலியில் அமைந்துள்ள யாழ்பாணம் படைத் தலைமையகத்துக்கு இன்று காலை வருகை இராணுவத் தளபதி, விகாரைக்குச் சென்று கட்டுமானப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். இந்த விகாரையை அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டு கட்டுமானப் பணிகளை அனுமதிப்பதில்லை என வலி.வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு கடும் எதிர்ப்பையும் மீறி காங்கேசன்துறை திஸ்ஸ ரஜமஹா விகாரை அமைக்க இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர…

    • 3 replies
    • 438 views
  21. பிரதமர் பதவியை... ஏற்குமாறு, ஜனாதிபதி கோரிக்கை – நிராகரித்தார் சஜித் !! பிரதமர் பதவியை ஏற்று இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிராகரித்துள்ளார். இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று உறுதிப்படுத்தியுள்ளார். தற்போதைய நெருக்கடி மத்தியில் பிரதமர் பதவியை ஏற்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். நேற்று முன்தினம் இடம்பெற்ற விஷேட அமைச்சரவைக் கூட்டத்தை தொடர்ந்து, தொலைபேசி அழைப்பு மூலம் ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்திருந்தார். இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக…

  22. “அவசரகால சட்டம்... நாட்டின் பொருளாதாரத்திற்கு, மேலும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்”. -தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.- அவசரகால சட்டம் மீண்டும் பிரகடனப்படுத்தபட்டுள்ளதால் நாட்டின் பொருளாதாரத்திற்கு மேலும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. அத்தோடு அரசாங்கம் மக்களின் அமைதியான போராட்டங்களை நசுக்கும் முயற்சியினையே தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், அரசாங்கம் ஸ்திரத்தன்மையுடன் இருக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருந்தமையையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்…

  23. இன்றும்... மூன்று மணி நேரம், மின் துண்டிப்பு. நாடளாவிய ரீதியில் இன்று ( ஞாயிற்றுக்கிழமை ) மூன்று மணித்தியாலத்திற்கு அதிகளவான நேரம் மின் விநியோகத்தடையினை அமுல்படுத்துவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, ‘ஏ’ முதல் ‘டபிள்யூ’ வரையான 20 வலயங்களில் முற்பகல் 9 மணி முதல் மாலை 5 வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலம் மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. அத்துடன், குறித்த வலயங்களில் மாலை 5மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் விநியோகத்தடையினை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1280653

  24. நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து தீர்மானிக்கவில்லை.. ஜனாதிபதிக்கு எதிரானதற்கு நிபந்தனையற்ற ஆதரவு. -தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.- அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்பது குறித்து இன்னும் முடிவு எட்டவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், இராசமாணிக்கம் சாணக்கியன் இதனை தெரிவித்துள்ளார். அதேநேரம், ஜனாதிபதிக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும் என அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2022/1280643

  25. காலிமுகத்திடலில்... 30ஆவது நாளாகவும், தொடரும்... எழுச்சிப் போராட்டம் கொழும்பு காலிமுகத்திடலில் அரசாங்கத்துக்கு எதிராக கடந்த 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று ( ஞாயிற்க்கிழமை ) 30 ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் ‘கோட்டா கோ கம’ என்ற பெயர்ப்பலகையைக் காட்சிப்படுத்தியுள்ள போராட்டக்காரர்கள் அங்கு கூடாரங்களை அமைதது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலிமுகத்திடலில் ஜனாதிபதி கோட்டாபய மற்றும் அரசாங்கம் மொத்தமாக வெளியேற வேண்டி மக்கள் சிறப்பு பரிகாரங்களில் ஈடுபட்டனர் . மேலும் காளி அம்பாள் பூஜையின் சிறப்புப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.