Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை நெருக்கடி: அதிகாரத்தைப் பெற எனக்கு ஆர்வமில்லை - எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES (இன்றைய (ஏப்ரல் 14) இலங்கை மற்றும் இந்திய நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியான சில முக்கியச் செய்திகளை இங்கு தொகுத்து வழங்குகிறோம்) ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளால் தனக்கு எந்தப் பயனும் இல்லை என்றும் அதிகாரத்தைப் பெறுவதில் தனக்கு ஆர்வமில்லை எனவும் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருப்பதாக 'தமிழ் மிரர்' செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமையன்று, விசேட அறிக்கையில் மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்த அவர் மேலும…

  2. கோல்பேஸ் போராட்டங்களில் நாட்டில் இஸ்லாமிய தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் தீவிரமாக ஈடுபட்டு வரும் சலாபிகள், வஹாபிகள் மற்றும் ஜமாத் - இ - இஸ்லாமியர்களை அடையாளம் கண்டுள்ளதாக பொதுபல சேனா (BBS) தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தீவிரவாதத்தின் முழக்கங்களை எதிர்த்துப் போராடுவது என்ற போர்வையில் சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளதாக அந்தக் அறிக்கையில் தெரிவித்துள்ளது. https://www.madawalaenews.com/2022/04/blog-post_51.html

    • 0 replies
    • 202 views
  3. அனைத்து தலைவர்களையும் அழைத்து கலந்துரையாட தீர்மானம் - மல்வத்து பீடம் (இராஜதுரை ஹஷான்) நாட்டில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக்கொண்டு மக்கள் பிரநிதிகள் கடந்த வாரம் பாராளுமன்றில் செயற்பட்ட விதம் கவலைக்குரியதாக அமைந்துள்ளதுடன், கண்டிக்கத்தக்கதாகவும் காணப்படுகிறது. மக்கள் எதிர்க்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் விரைவாக தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும். அரச தலைவர்களையும்,அரசியல் கட்சி தலைவர்களையும் சந்திக்க முப்பீடங்களும் கூட்டாக தீர்மானித்துள்ளதாக மல்வத்து பீடத்தின் செயலாளர் பஹமுன சுமங்கல தேரர் தெரிவித்தார். அஸ்கிரிய பீடம்,மல்வத்து பீடம் மற்றும் அமரபுர நிகாய ஆகிய முப்பீடங்களின் மகாநாயக்கர்கள் சனிக்கிழமை (09.04.2022)…

    • 6 replies
    • 503 views
  4. விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தவெற்றி - பாடலை எழுதிய சிங்கள பாடலாசிரியர் பகிரங்க மன்னிப்பு கோரினார் யே.ஆர். சுமந்திரன் 38 நிமிடங்கள் முன் #srilanka#Lyricist#Sunil R. Gamage#publicly apologizes தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றியின் பின்னர் ‘அயுபோ வெவ மகாராஜனேனி’ (ayubowewa maharajaneni)பாடலை எழுதியமைக்காக பாடலாசிரியர் சுனில் ஆர்.கமகே பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். பாடலை எழுதியதற்காக மக்கள் நீதிமன்றம் தன்னை விடுதலை செய்யும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இன்று தான் இருந்த இடத்தில் இல்லை என்றும், இன்று தன…

    • 7 replies
    • 717 views
  5. நாட்டு மக்களுக்கு... விசேட உரையாற்றுகின்றார், பிரதமர் மஹிந்த !! நாட்டு மக்களுக்கு இன்று (திங்கட்கிழமை) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட உரையாற்றவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் அவர் மக்களுக்கு உரையாற்றவுள்ளார். https://athavannews.com/2022/1276258

  6. இலங்கையில்... தற்போது நிலவும், பொருளாதார நெருக்கடி குறித்து உலக வங்கி கவலை! இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து உலக வங்கி கவலை வெளியிட்டுள்ளது. உலக வங்கியின் பணிப்பாளர் Faris Hadad-Zervos இனால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கவலை வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் நிலவும் பொருளாதார மந்தநிலையினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும், மக்கள் பாதிக்கப்படுவதற்கு நாட்டில் நிலவும் நிச்சயமற்ற பொருளாதார நோக்கமே முக்கிய காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வறுமை கோட்டுக்கு உட்பட்டோர் மற்றும் நலிவடைந்தவர்களுக்கு அவசர உதவிகளை வழங்குவதற்கும் மக்களின் நல்வாழ்வுக்காகவும் உலக வங்கி உறுதி பூண்டுள்ளதாக உலக வங்கியின் பணிப்பாளர் மேல…

  7. ஜனாதிபதி... பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, தேசிய மக்கள் சக்தி பாதயாத்திரை! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தேசிய மக்கள் சக்தியால் பாதயாத்திரை முன்னெடுக்கப்படவுள்ளது, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 17ஆம் திகதி காலை 9 மணிக்கு களுத்துறை, பேருவளை நகரில் ஆரம்பமாகும் பாதயாத்திரை, 19 ஆம் திகதி கொழும்பை வந்தடையவுள்ளது. இது மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான போராட்டம் என்பதால் அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். https://athavannews.com/2022/1276511

  8. இந்திய நிதி உதவியின் கீழ்... மருந்து பொருட்களை, கொள்வனவு செய்ய நடவடிக்கை! இந்திய நிதி உதவியின் கீழ் மருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டின் சில அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும், தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை உரிய வகையில் விநியோகிப்பதை உறுதிப்படுத்தும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக மருந்து பொருட்கள் கொள்வனவு செய்வதில் சிக்கல் நிலைமை…

  9. முத்துராஜவெல.. எரிவாயு முனையத்தில், எரிவாயு தரையிறக்கும் பணிகள் இடைநிறுத்தம்! முத்துராஜவெல எரிவாயு முனையத்தில் எரிவாயு தரையிறக்கம் மற்றும் விநியோக செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. நேற்று(புதன்கிழமை) முதல் எதிர்வரும் 17ஆம் திகதி வரை குறித்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. https://athavannews.com/2022/1276533

  10. உறுப்பினர்களை... விலைக்கு வாங்கி, ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முடியாது – விமல்! உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முடியாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகளின் உறுப்பினர்களை வளைத்துபோடும் சில்லறைத்தனமான அரசியலை தனது சகாக்கள் ஊடாக பஸில் ராஜபக்ச மேற்கொண்டுள்ளார். எமது உறுப்பினர்களின் வீடுகளுக்கு நள்ளிரவில் சென்று பேரம் பேசுகின்றனர். இவ்வாறான நிலையில் ஜனாதிபதியுடன் எப்படி பேச்சு நடத்துவத…

  11. மனநிறைவோடு, மகிழ்ச்சியோடு... புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல முடியவில்லை – மாவை! தெருவெல்லாம் போராட்டங்கள் நிறைந்து விட்ட நிலையில் மனநிறைவோடு மகிழ்ச்சியோடு புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல முடியவில்லை என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். சிங்கள – தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘ஆண்டு தோறும் வழமை போலும் சித்திரைப் புத்தாண்டில் வாழ்த்துப் பகிர்வதை மக்கள் கொண்டாடி வருகின்றனர். தெய்வநம்பிக்கை கொண்ட மக்கள் புத்தாண்டு பிறக்கிற போது புதுநம்பிக்கையோடு நம்பிக்கை கொண்ட தெய்வத்தை நினைத்து மருத்துநீர் வைத்து…

  12. பிரதமரின்.. புத்தாண்டு வாழ்த்து ! விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட வரலாற்று சமூக – கலாசார மதிப்புகளை ஒரு தலைமுறையிலிருந்து மற்றுமொரு தலைமுறைக்கு கடத்தும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தமிழ் சிங்கள ஆதிக்குடிகளின் தொன்மைவாய்ந்த மரபுகளை நினைவுபடுத்துகிறது என பிரதமர் தெரிவித்துள்ளார். சிங்கள – தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “புதிதாக பிறக்கும் புத்தாண்டில் நம் நல்லெண்ணங்களை அடைவதை நோக்கமாகக் கொள்வதே அனைவரது எதிர்பார்ப்பாகும். நாட்டில் நிலவும் இக்கட்டான சூழ்நிலையை கடந்து செல்வதற்கு நாம் அனைவரும் ஒரு தேசமாக ஒன்றிணைந்து செயற்பட வேண்…

  13. புத்தாண்டின் உண்மையான உரிமை... நமது குழந்தைகளுக்கே, உண்டு – புத்தாண்டு வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி! புத்தாண்டின் உண்மையான உரிமை நமது குழந்தைகளுக்கே உண்டு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிங்கள – தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “தற்போது நிலவுகின்ற பொருளாதார மற்றும் உலகளாவிய நெருக்கடியான நிலையில், வரலாற்றில் மிகப் பெரிய சவாலை இலங்கையர்களாகிய நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஒற்றுமையுடனும், சரியான புரிந்துணர்வுடனும் நாம் அதனை வெற்றிகொள்ள வேண்டும். சவால்களுக்கு முகங்கொடுப்பதில் நீங்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் ஏராளம்…

  14. நம்பிக்கையில்லாப் பிரேரணையில்... தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கையெழுத்து எதிர்க்கட்சி கொண்டுவரவுள்ள அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கையெழுத்திட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இன்று எதிர்க்கட்சி அலுவலகத்தில் வைத்தது கையொப்பமிட்டனர். அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் ஜனாதிபதி பதவி நீக்கப் பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று கையெழுத்திட்டிருந்தார். இதேநேரம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது மற்றும் 20ஆவது திருத்தத்தை இரத்துச் செய்யும் தீர்மானம் குறித்தும் முடிவு ச…

  15. பிரதமருக்கு ஆர்ப்பாட்டக்காரர்களின் பதில் மக்கள் போராட்டத்தின் அடிப்படை கோரிக்கைகள். 01. ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும். 02. ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவருக்கும் நாடாளுமன்றத்தில் ஆசனம் வழங்கக் கூடாது. 03. அத்தியாவசிய சேவைகள்நெருக்கடியில் உள்ள விசேட பகுதிகள் (சுகாதாரக் கல்வி போன்றவை…) மறுசீரமைப்பதற்காக 19வது திருத்தத்தை மீண்டும் அமுல்படுத்தி 06 மாதங்களுக்கு இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குதல். 04. அனைத்து திருடப்பட்ட பணம் மற்றும் சொத்துக்களை மீட்பதற்காக ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள ஊழல் அரசியல்வாதிகள் ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் உட்பட ராஜபக்ச குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எதிராக இடைக்கால அரசாங்கம் அமைக்க…

    • 8 replies
    • 623 views
  16. இலங்கை பொருளாதார நெருக்கடி: ஜனாதிபதியை வெளியேற்ற மக்களால் அமைக்கப்பட்ட 'கோட்டா கிராமம்' 3 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கை தலைநகர் கொழும்பில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக அரசாங்கத்திற்கு எதிரான தன்னெழுச்சி போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. கொழும்பு - காலி முகத்திடல் பகுதியில் இந்த போராட்டம் கடந்த 9ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்று வரை ஆயிரக்கணக்கானோரின் பங்கேற்புடன் இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறான நிலையில், தற்போது ஆட்சியிலுள்ள கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம், ஆட்சிக்கு வந்த சந்தர்ப்பத்தில், மக்கள் ஜனநாயக ரீதியில் போராட்டங்களை நடத்துவதற்காக காலி முகத்திடல் பகுதியில் ஒரு பகுதியை …

  17. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுமயமாக்கலை முடிவிற்குக்கொண்டுவாருங்கள் : சர்வதேச நாணய நிதியத்திடம் பிரித்தானியத் தமிழர் பேரவை வலியுறத்தல் (நா.தனுஜா) இலங்கையில் பாதுகாப்புத்துறைக்கு மிகையான நிதி செலவிடப்படுவதை நியாயப்படுத்தமுடியாது எனவும், இது நாடு ஏற்கனவே முகங்கொடுத்திருக்கும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை மேலும் தீவிரப்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டியிருக்கும் பிரித்தானியத் தமிழர் பேரவை, இதுகுறித்து சர்வதேச நாணய நிதியம் அவதானம் செலுத்தவேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கின்றது. இலங்கையில் ஆயுதப்போராட்டம் முடிவிற்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர் 2010 தொடக்கம் 2019 வரையான காலப்பகுதியில் இராணுவத்திற்குச் செலவிடப்பட்ட நிதியானது, ஆயுதப்போராட்டம் நடைபெற்ற கா…

    • 1 reply
    • 249 views
  18. போராட்டக் காரர்களை... கைக்குழந்தைகள், என கூறியவர் பேச்சுக்கு அழைப்பது... நகைச்சுவையானது – ஹரிணி போராட்டக்காரர்களை கைக்குழந்தைகளாகக் கருதி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பின்னர் அவர்களை கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளமை நகைச்சுவையானது என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இன்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார். இணக்கமற்ற இருவருக்கு இடையில் திருமணம் நடைபெற்றால் அதன் விளைவு எப்படி இருக்கும் என்பதை போலவே இந்த அழைப்பு காணப்படுவதாகவும் எனவே முழு அரசாங்கமும் பதவி விலகுவதற்கான நேரம் இது என்றும் குறிப்பிட்டார். …

  19. மருந்து கொள்வனவு – 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை... வழங்குவதற்கு உலக வங்கி அனுமதி அவசரகால மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை உடனடியாக வழங்குவதற்கு உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். உலக வங்கி அதிகாரிகளுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து அதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தொலைக்காட்சியொன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவசரகால மருந்துகள் மற்றும் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு இரண்டு வாரங்களுக்குள் உலக வங்கி மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாகவும் அமைச்சர் கூறியள்ளார். https://athavanne…

    • 6 replies
    • 484 views
  20. இயலுமான உதவிகளை... தொடர்ந்தும், செய்து வருகின்றோம் – சீனா கடனில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு உதவுவதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாக சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. பெய்ஜிங்கில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சீன வெளிவிவகார அமைச்சின் ஊடக பேச்சாளர் ஜாவோ லிஜியன் இதனை கூறினார். சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஆரம்பித்ததில் இருந்து இரு நாடுகளும் பரஸ்பர ஆதரவையும் புரிந்துணர்வையும் வழங்கியுள்ளன என்றும் தெரிவித்தார். இலங்கையின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கு சீனா தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறது என்றும் தொடர்ந்தும் செய்வோம் என்றும் அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2022/1276460

  21. எம்.பிக்கள்... விற்பனைக்கு, இல்லை: பசிலை நேரடியாக சாடினார் சஜித் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலை பேசும் நடவடிக்கைகளை பசில் ராஜபக்ஷ நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இருப்பினும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை பேரம்பேசி வாங்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தமது கட்சியின் உறுப்பினர்களை வாங்க முயன்றதாக வெளிப்படையாகவே சாடியுள்ளார். https://athavannews.com/2022/1276496

  22. இராணுவ தளபதியின்... பதவி நீட்டிப்பு, சட்டபூர்வமானதில்லையா? பாதுகாப்பு அமைச்சு விளக்கம் பாதுகாப்புப் படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் பதவி நீட்டிப்பு சட்டப்பூர்வமானது என பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. அவரது பதவி நீடிப்பு செல்லுபடியானது அல்ல என தெரிவித்து செய்திகள் சமூக ஊடகங்களில் வெளியாகிய நிலையில் பாதுகாப்பு அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. சவேந்திர சில்வாவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு இன்னும் செல்லுபடியாகும் என்றும், அது 2021 டிசம்பர் 31, முதல் அமுலுக்கு வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இராணுவத்தின் 23வது தளபதியாக சவேந்திர சில்வா, கடந்த 2019 ஓகஸ்ட் 17 அன்று அப்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன…

  23. அரசாங்கத்தை... தொடர்ந்தும், தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர... பசில் முயற்சி – விமல் குற்றச்சாட்டு நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்படவேண்டும் எனில் புதிய அரசாங்கத்தை அமைக்க பிரதமரும் அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். 113 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மை மூலம் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியும் என அவர்கள் கருதினால் அவர்கள் முற்றிலும் தவறானது என்றும் குறிப்பிட்டார். கொழும்பில் ‘தேசத்தை சரியான பாதையில் அழைத்துச் செல்வது’ இயக்கம் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் இன்று புதன்கிழமை கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார். பசில் ராஜபக்ஷ இன்னும் அரசாங்கத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர…

  24. மக்களால் வெறுக்கப்படும்... ராஜபக்ஷ அரசாங்கத்தை, பாதுகாக்க வேண்டிய தேவை கிடையாது – மைத்திரி மக்களால் வெறுக்கப்படும் ராஜபக்ஷ அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டிய தேவை தமக்கு கிடையாது என்றும் அவர்களுடன் எவ்வித கொடுக்கல் வாங்கலும் இல்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கத்தின் ஒரு சில தவறான தீர்மானங்களின் பிரதிபலனே ராஜபக்ஷர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு வழியேற்படுத்திக் கொடுத்தது எனவும் அவர் கூறியுனார். கொழும்பில் இடம்பெற்ற சுதந்திர கட்சியின் மாவட்ட குழு கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண ஆட்சியில் உள்ள அரசாங்கம் சர்வதேசத்துடன் இண…

  25. புத்தாண்டை கொண்டாடுங்கள்: இலங்கைக்கு 11 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி அனுப்பிய இந்தியா.! sri lanka crisis : தமிழ், சிங்களப் புத்தாண்டு பிறப்பதையடுத்து பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு 11ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியை இந்தியா அனுப்பியது. இந்த அரிசி நேற்று இலங்கை சென்று சேர்ந்தது தமிழ், சிங்களப் புத்தாண்டு பிறப்பதையடுத்து பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு 11ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியை இந்தியா அனுப்பியது. இந்த அரிசி நேற்று இலங்கை சென்று சேர்ந்தது புத்தாண்டு கொண்டாட்டம் இலங்கையில் சிங்களப் புத்தாண்டு இன்று பிறந்துள்ளது, தமிழர்கள் வாழும் வடகிழக்கு மாகாணங்களில் தமிழ்புத்தாண்டு(சித்திரை-1) ஏப்ரல் 14ம் தேதி பிறக்கிறது. இலங்கையி…

    • 5 replies
    • 363 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.