ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
இலங்கை கிரிக்கெட் வீரர் ரோஷன் மகாநாம: கோப்புப் படம் கொழும்பு: இலங்கையில் நடுத்தர வர்க்கத்தினர் மெல்ல மெல்ல அழிந்து வருவதை உணர்கிறேன், எங்கள் நேரம் கடந்து விட்டது, இந்தியா எங்களுக்கு அண்ணன் போல ஆதரவு காட்டுகிறது என இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஷன் மகாநாம நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இதனால் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அரசுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர…
-
- 4 replies
- 478 views
-
-
ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் மே மாதத்திலிருந்து முன்னர் எடுத்த ஏற்பாடுகள் விமான ஆசன முன்பதிவு (Bookings) என்பனவற்றிற்கான நிதியை மீள வழங்க அறிவித்துள்ளதாக பொருளியல் முகாமைத்துவ முதுமானி பட்டதாரியும், இலங்கையில் இருக்கக்கூடிய பல நிறுவனங்களுக்கான முகாமைத்துவ நிதியியல் ஆலோசகருமான குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்தார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். அதாவது,நாட்டில் தினமும் ஏற்படும் டொலர் மாற்றம் காரணமாக விமான நிறுவனங்களுக்கு முன்பதிவு செய்யப்படும் பணத்தினை வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதன் காரணமாக இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் முன்பதிவு என்பனவற்றில் பிரச்சினை ஏ…
-
- 0 replies
- 220 views
-
-
நாடாளுமன்றத்தில் ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே.... கைகலப்பு – சபாநாயகர் அதிரடி அறிவிப்பு. நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தின்போது ஆளும் கட்சி மட்டும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருவருக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து ஐக்கிய மக்கள் சக்தியின் சமிந்த விஜேசிறி மற்றும் பொதுஜன பெரமுனவின் திஸ்ஸ குட்டியாராச்சி ஆகியோரை அவையில் இருந்து வெளியேற்றுவதற்கு சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற நிலையியற் கட்டளை எண் 79ன் கீழ் அவர்களை வெளியேற்றுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார். குறித்த இரண்டு உறுப்பினர்களையும் அவையில் இருந்து வெளியேற்றுவதற்கு வசதியாக நாடாளுமன்ற அமர்வுகள் சிறிது நேரம் இடைநிறுத்தப்பட்டன. https:…
-
- 3 replies
- 252 views
-
-
இலங்கையின்... தற்போதைய நிதியமைச்சர், அலி சப்ரியே – அரசாங்கம் நிதி அமைச்சர் பதவியில் அலி சப்ரி தொடர்ந்தும் நீடிப்பதாக இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் தற்போது நாடாளுமன்றில் இடம்பெற்று வருகிறது. இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நிதியமைச்சரொருவர் இல்லாதமை தொடர்பாக சபையின் கவனத்திற்கு கொண்டுசென்றபோதே இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்தார். அலி சப்ரியின் பதவி விலகலை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால், அவரே நிதி அமைச்சர் பதவியில் நீடிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். https://athavannews.com/2022/1275867
-
- 6 replies
- 396 views
-
-
நம்பிக்கையில்லா பிரேரணை: கையொப்பங்களை பெற ஆரம்பித்தது எதிர்க்கட்சி ! இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களை சேகரிக்கும் நடவடிக்கையை எதிர்க்கட்சி முன்னெடுத்துள்ளது. இதேவேளை கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்க பிரேரணையை நாடாளுமன்றத்தில் கொண்டு வருமாறு விஜித்த ஹேரத் அழைப்பு விடுத்துள்ளார். https://athavannews.com/2022/1275862
-
- 0 replies
- 132 views
-
-
நீங்கள் போகவில்லை என்றால்... நம்பிக்கையில்லா பிரேரணையை, கொண்டு வருவோம் – சஜித் எச்சரிக்கை ஜனாதிபதியும் அரசாங்கமும் மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காவிட்டால், நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவரப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்தார். தொடர்ந்து நான்காவது நாளாக நடைபெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், ஒன்று வழி நடத்துங்கள் அல்லது வழியை விட்டு வெளியேறுங்கள் என கேட்டுக்கொண்டார். மேலும் 6.9 மில்லியன் மக்கள் ஜனாதிபதிக்கும், 6.8 மில்லியன் மக்கள் அரசாங்கத்திற்கும் வாக்களித்திருந்தமையினை அரச தரப்பு உறுப்பினர்கள் மறந்து செயற்படக்கூடாது என்றும் சுட்டிக்காட்டினார். ஆகவே மக்களின் தற்போதைய கோரிக்கைக்கு ச…
-
- 0 replies
- 107 views
-
-
மக்களின் ஆர்ப்பாட்டம் தொடர்ந்தால்... அது ஜனாதிபதிக்கு, பிரச்சினையாக மாறும் – ரணில் மக்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் அது ஜனாதிபதிக்கு பிரச்சினையாக மாறும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த செவ்வியில், பொதுமக்களின் உணர்வுகள் தங்களிற்கு எதிராக மாறியுள்ள போதிலும் இலங்கை ஜனாதிபதியாலும் பிரதமராலும் தொடர்ந்து எவ்வாறு பதவியில் நீடிக்க முடிகின்றது என கேள்வியெழுப்பப்பட்டது. குறித்த கேள்விக்கு பதிலளித்த ரணில், “ஜனாதிபதியை பொறுத்தவரை அவர் ஐந்து வருடங்களிற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதேவேளை அவர் வீட்டிற்கு செல்லவேண்டும் என ஆர்ப்பாட…
-
- 0 replies
- 103 views
-
-
நாடாளுமன்றுக்கு, ஜனாதிபதி இரகசியமாக வரவில்லை – அவர் பதவி விலக மாட்டார்: காஞ்சன இந்த வீர வசனத்தை முடிந்தால் எரிபொருள் வரிசையில் நிற்பவர்களிடம் கூறுங்கள் - எதிர்க்கட்சி! நாடாளுமன்றுக்கு ஜனாதிபதி இரகசியமாக வந்துவிட்டுச் செல்லவில்லை என்றும் மாறாக எதிர்க்கட்சிகளே ஜனாதிபதி வருவதை முன்னிட்டு ஒழிந்தார்கள் என்றும் இராஜாங்க அமைச்சரான காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அத்தோடு, அரசமைப்புக்கு இணங்க ஜனாதிபதி விலக மாட்டார் என்றும் அவர் எதற்காக பதவியிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கேள்வியெழுப்பினார். மேலும், ஜனாதிபதியும் பிரதமரும் எதிர்க்கட்சிகளுக்கு சந்தர்…
-
- 3 replies
- 188 views
-
-
மன்னாரில்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, 4 பேர் கடல் வழியாக... தனுஷ்கோடியை சென்றடைந்தனர்! இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு வருகின்ற நிலையில் மேலும் மன்னாரில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர். அண்மையில் மன்னார் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த 3 குடும்பங்களை சேர்ந்த 12 பேர் கடல் வழியாக தனுஷ்கோடி சென்றடைந்தனர். தமிழகத்திற்கு அகதிகளாக வந்த அவர்களை மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை )அதிகாலை மன்னார் முத்தரிப்புத்துறை யை சேர்ந்த ஒர…
-
- 0 replies
- 110 views
-
-
“ஜனாதிபதி பதவி விலகி.. ராஜபக்ஷ குடும்பமும், ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டும்” ஜனாதிபதி பதவி விலகி ராஜபக்ஷ குடும்பமு ம் ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும கேட்டுக்கொண்டார். இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய அவர், “இந்த நாடு நன்றாகவே இருந்தது. மக்கள் கடந்த காலங்களில் வரிசையில் இருக்கவில்லை. இந்நிலையில் மக்களின் பேச்சை அரசாங்கம் செவிமடுக்காத காரணத்தினாலேயே இந்த விளைவு ஏற்பட்டது. உரப்பிரச்சினை, ஆசிரியர்களின் பிரச்சினை என்பவற்றில் மக்களின் குரலை அரசாங்கம் கேட்கவில்லை. தற்போது மக்கள், ஜனாதிபதியை வீட்டுக்குச் செல்லுமாறு கூறுகிறார்கள். இதனையேனும் அரசாங்கம் செவிமடுக்க வேண்டும். அரசாங்கம் அவ்…
-
- 1 reply
- 125 views
-
-
இந்த அரசாங்கம் பதவி விலகாது – போராட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு ஹரீன் கோரிக்கை! நாட்டின் நெருக்கடியை தீர்க்க நாடாளுமன்றம் தயாராக இல்லை என்பதால் அரசாங்கத்துக்கு எதிராக நடத்தும் போராட்டத்தை மக்கள் தொடரவேண்டும் என எதிர்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், தற்போதைய அரசாங்கம் பதவி விலகாது எனவும், அவர்கள் பதவி விலகும்வரை போராட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1275772
-
- 0 replies
- 109 views
-
-
பொருளாதார பிரச்சினை முடிவடையும் வரை.. நாடாளுமன்றத்திற்கு, சமூகமளிக்க போவதில்லை என அறிவித்தார் ஆளும் தரப்பு எம்.பி! நாட்டின் பொருளாதார பிரச்சினை முடிவடையும் வரை தான் நாடாளுமன்றத்திற்கு சமூகமளிக்க போவதில்லை என ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஷாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மூன்று மாத காலத்திற்கு தான் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்த போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1275759
-
- 0 replies
- 201 views
-
-
இலங்கை பொருளாதார நெருக்கடி: மத்திய வங்கி முன்னாள் ஆளுநருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது ஏன்? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அஜித் நிவார்ட் கப்ரால் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலிற்கு வெளிநாடு செல்ல, கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்றைய தினம் (07) இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. குற்றவியல் நம்பிக்கை மீறல், வங்கியாளரினால் முன்னெடுக்கப்பட்ட குற்றவியல் நம்பிக்கை மீறல் மற்றும் குற்றவியல் சட்டம் மற்றும் பத்திரங்கள், பரிவர்த்தனைகள் கட்டளை சட்டத்தின் கீழ் நிதி மோசடி மற்றும் முறைகேடு இடம்பெற்றுள்ளமை உள்ளிட்ட 6 குற்…
-
- 0 replies
- 150 views
- 1 follower
-
-
புதிய அமைச்சரவை.. அடுத்த வாரம், பதவியேற்கும் – ஆளும்தரப்பு அறிவிப்பு ! புதிய அமைச்சரவை அடுத்த வாரம் பதவியேற்கும் என ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்தார். https://athavannews.com/2022/1275765
-
- 0 replies
- 164 views
-
-
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு... சதொசயில், நிவாரணப் பொதி! சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக 5 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதியை சலுகை விலையில் வழங்கவுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, 5 கிலோ நாட்டரிசி, 5 கிலோ சம்பா அரிசி, 400 கிராம் பால்மா, ஒரு கிலோ சிவப்பு சீனி மற்றும் 100 கிராம் தேயிலை என்பன குறித்த பொதியில் உள்ளடங்குவதோடு, இந்த நிவாரணப் பொதி ஆயிரத்து 950 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சந்தை விலைகளுடன் ஒப்பிடுகையில், இந்த 5 பொருட்களின் கொள்முதல் விலையைவிட நுகர்வோர் 700 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட நன்மைகளைப் பெறுவதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளர்து. http…
-
- 0 replies
- 124 views
-
-
திங்களும்... நாடாளுமன்றை கூட்டுங்கள் – ரணில் கோரிக்கை நாடாளுமன்றத்தை எதிர்வரும் திங்கட்கிழமை கூட்டுமாறு முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில் தீர்மானங்களை எடுப்பதில் நாடாளுமன்றம் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும் என குறிப்பிட்டார். அவரது இந்த கருத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜயதாச ராஜபக்ஷ மற்றும் எரான் விக்ரமரத்ன ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். https://athavannews.com/2022/1275827
-
- 0 replies
- 120 views
-
-
அமெரிக்க டொலர் 321 ரூபாய், ஸ்டெர்லிங் பவுண்ட் 421 ரூபாய்..! மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 321 ரூபாயாகவும் கொள்விலை 310 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இதேவேளை ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 421 ரூபாயாகவும் கொள்விலை 407 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. யூரோ ஒன்றின் விற்பனை விலை 352 ஆகவும் கொள்விலை 340 ஆகவும் அதிகரித்துள்ளது என மத்திய வங்கி அறிவித்துள்ளது. https://athavannews.com/2022/1275832
-
- 0 replies
- 167 views
-
-
மொட்டுக் கட்சியும், சேவல் கட்சியும்... மலையக மக்களை ஏமாற்றியுள்ளது – வேலு குமார் மொட்டுக்கட்சி நாட்டை ஏமாற்றியது. சேவல் கட்சி மலையக மக்களை ஏமாற்றியது. இன்று இருவரும் சேர்ந்து நாடகம் ஆடுகின்றனர்.” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ர உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார். கண்டியில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”நாட்டு மக்கள் விரக்த்தியில் உள்ளனர். தாம் ஏமாற்றப்பட்டோம் என்ற வேதனையில் உள்ளனர். மலையக மக்கள் அதையும் தாண்டிய கோபத்தில் உள்ளனர். எந்த ஒரு அரசாங்கத்திலும் இடம்பெறாத பாராபட்சம், இந்த அரசாங்கத்தில் மலையக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. மொட்டு கட்…
-
- 0 replies
- 90 views
-
-
IMF உடன், கலந்துரையாடலை நடத்துமாறு... ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்து! அமைதியான முறையில் ஒன்றுகூடும் சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியவை இடம்பெற்றால் அவை ஜனநாயகத்தின் இரு தூண்கள் என உறுப்பு நாடுகளின் கூட்டு அறிக்கையூடாக ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. மேலும் அனைவரும் நிதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அவசரகாலநிலை பிரகடனம் இரத்து செய்யப்பட்டமை சாதகமான நடவடிக்கை என்றும் ஐரோப்பிய ஒன்றிய ம் அறிக்கை ஒன்றின் ஊடக அறிவித்துள்ளது. இலங்கை மக்களைப் பாதித்துள்ள தற்போதைய நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஆக்கபூர்வமான மற்றும் ஜனநாயக வழிகளை ஆராயுமாறு அனைத்துத் தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் நிலைய…
-
- 0 replies
- 90 views
-
-
உலகின் மிகவும் பலவீனமான நாணயமாக இலங்கை ரூபா பதிவு உலகின் மிகவும் பலவீனமான நாணயமாக இலங்கை ரூபா மாறியுள்ளதாக Financial Times of India செய்தி வெளியிட்டுள்ளது.அண்மைக்கால நெருக்கடி காரணமாக இலங்கை ரூபாவின் பெறுமதியானது உலகிலேயே வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் அரசாங்கம் கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியைக் கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அமெரிக்க டொலரொன்றின் விற்பனைப் பெறுமதி 308 ரூபா 49 சதமாக அதிகரித்துள்ளது. அத்துடன் டொலரின் கொள்முதல் பெறுமதியானது 298 ரூபா 10 சதமாக பதிவாகியுள்ளது.இதேவேளை யூரோ ஒன்றின் கொள்முதல் பெ…
-
- 5 replies
- 352 views
-
-
அவசரகால நிலைமை பிரகடனம், ஊரடங்கு சட்டம் சமூக வலைத்தள இடையூறு சட்டவிரோதமானவை - சுமந்திரன் ( எம்.எப்.எம்.பஸீர்) ஜனாதிபதி அவசரகால சட்டத்தை பிரகடனம் செய்ததும் அதனை பாராளுமன்றின் அனுமதிக்காக முன் வைக்க வேண்டும். எனினும் இங்கு அச்சட்டம் பாராளுமன்ற அனுமதிக்காக முன் வைக்கப்படாது ஏப்ரல் 5 ஆம் திகதி மீளப் பெறப்பட்டுள்ளது. அதனால் ஜனாதிபதி அவசரகால சட்டத்தை பிரகடனம் செய்தமை, ஊரடங்கு சட்டம் பிறப்பித்தமை, பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய, தொலைதொடர்புகள் ஒழுங்குபடுத்தல்கள் ஆணைக் குழு ஊடாக சமூக வலைத் தளங்களின் செயற்பாட்டுக்கு ஏற்படுத்தப்பட்ட இடையூறுகள் என்பன சட்டத்துக்கு முரணனாவை. என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் இன்று (7) உயர் நீதிமன்றில் வாதிட…
-
- 1 reply
- 361 views
-
-
ஆனமடுவ- வடுவத்தேவ குளத்துக்கு அருகிலுள்ள காணியொன்றிலிருந்து, ஒரு வருடத்துக்கு முன்னர் காணாமல் போன வெள்ளவத்தையைச் சேர்ந்த வர்த்தகரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 12 மணித்தியால தேடுதலின் பின்னர், ஒரு வருடமாக நீடித்த மர்மம் துலங்கியது. 58 வயதான அண்ணாமலை பழனி என்ற வர்த்தகரின் சடலமே கடந்த 4ஆம் திகதி மீட்கப்பட்டது. வர்த்தகரின் சடலம் பாயில் சுற்றப்பட்டு, புதைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக புத்தளம் நீதிமன்ற மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு நீதவான் உத்தரவிட்டார். கொல்லப்பட்ட அண்ணாமலை பழனி, 15 வருடங்களின் முன்னர் தனது மனைவி, பிள்ளைகளுடன் இத்தாலி சென்றுள்ளார். அங்கு வர்த்தகத்தில் ஈடுபட…
-
- 0 replies
- 316 views
-
-
பஷில் தலையிடாமல் இருந்தால் பிரச்சினைகளுக்கு முரண்பாடற்ற தீர்வு காணலாம் : திஸ்ஸ விதாரண (இராஜதுரை ஹஷான்) மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி உட்பட பொருளாதார நிபுணர்கள் அடங்கிய பலதரப்பு விவகாரங்கள் மற்றும் கடன் நிலைபேற்றுத்தன்மை தொடர்பான ஆலோசனை குழுவை ஜனாதிபதி நியமித்துள்ளமை காலம் கடந்த தீர்மானமாக காணப்பட்டாலும் வரவேற்கத்தக்கது. பொருளாதார மீட்சி தொடர்பிலான தீர்மானங்களில் முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ தலையிடாமல் இருந்தால் பிரச்சினைகளுக்கு முரண்பாடற்ற தீர்வு காணலாம் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார். பலதரப்பு விவகாரங்கள் மற்றும் கடன் நிலைபேற்றுத்தன்மை தொடர்பான ஆலோசனை குழு தொடர்பில் வினவிய…
-
- 0 replies
- 195 views
-
-
புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு – நிதி அமைச்சராக மீண்டும் மஹிந்த? புதிய அமைச்சரவை இன்று (வெள்ளிக்கிழமை) அல்லது நாளை பதவியேற்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், புதிய நிதி அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளகத் தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதேநேரம், சமல் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பமாட்டாது எனத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும் முன்னைய அமைச்சரவை அமைச்சர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன என தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக இருந்த சரத் வீரசேகரவிற்கு பதவி வழங்கப்படுவதில்லை எனவும்…
-
- 1 reply
- 191 views
-
-
தமிழர் விரோத யுத்தமே... நாட்டின், இன்றைய பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் – சுரேஷ் இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு நாட்டை ஆட்சி செய்தவர்களின் தவறான சிந்தனையும், ஆக்கபூர்வ திட்டங்கள் இன்றி தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டதுமே காரணமாகும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிறேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் இன்றைய நிலை குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: இலங்கை இன்று மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருப்பதானது வெறுமனே கடந்த இரண்டு வருடங்களாக நிலவி வரும் கொவிட்-19 மற்றும் ரஷ்ய-யுக்ரேன் சண்டையினால் மாத்திரமல்ல. ஜே.ஆர். ஜெயவர்த்தன காலம…
-
- 4 replies
- 352 views
-