Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ரணில் விக்ரமசிங்கவின், இல்லத்தை... முற்றுகையிட்ட மக்கள்… ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு அருகில் தற்போது போராட்டம் இடம்பெற்று வருகின்றது. தற்போது இடம்பெற்றுவரும் இந்த ஆர்ப்பாட்ட இடத்திற்கு கலகத் தடுப்புப் பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை போராட்டக்காரர்களை சந்திக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மறுத்துள்ளார். https://athavannews.com/2022/1280589

    • 3 replies
    • 397 views
  2. சர்வதேச நாணய நிதிய குழு, இலங்கை குழுவுக்கு இடையில்... இணையவழி பேச்சு!! சர்வதேச நாணய நிதிய குழு, இலங்கை குழுவுடன் எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதிவரை இணையவழி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இலங்கை தொடர்பான தமது புதுப்பிக்கப்பட்ட அறிவித்தலை வெளியிட்டு, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை பிரதானி மசாயிரோ நொஸாகி இதனை அறிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம், தமது கொள்கை எல்லைக்குள், இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1280596

  3. அவசரகால நிலையில்.... அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள்... பாதிக்கப்படாது என நம்புகின்றோம் – மனித உரிமைகள் ஆணைக்குழு நாடுமுழுவதும் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமை குறித்து கவலையடைவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. போராட்டங்கள் அமைதியானதாகவும், சாதாரண பொலிஸ் நடவடிக்கைகளின் வரம்பிற்குள்ளும் இருந்ததால் ஏன் அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் கேள்வியெழுப்பியுள்ளது. எனவே அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமைக்கான காரணங்களை பொதுமக்களுக்கு விளக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. அத்தோடு அவசரகால நிலையில் கருத்துச் சுதந்திரம் ஒன்று கூடல், கைது உள்ளிட்ட விடயங்களில் அடிப்படை …

    • 2 replies
    • 268 views
  4. சிங்கள மக்களின், கண் முன்பாகவே... சிங்களத் தலைவரால், நாடு நாசமாக்கப்படுகின்றது – கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு சிங்கள மக்கள் கண்முன்னே இந்த நாட்டை நாசமாக்கும் சிங்கள தலைவர்கள், தமிழர்களுக்கு எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்திருப்பார்கள் என்பதை சிங்கள மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. அத்துடன் நாட்டின் அரசியல்வாதிகளின் உண்மை நிலையை அறிந்துகொள்ள சிங்கள மக்களுக்கு தற்போதுதான் சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது என்றும் அக்கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், ஜனாதிபதியும் அரசாங்கமும் மேற்கொண்ட ஏதேச்சாதிகாரம் காரணமாகவே நாடு இந்த நில…

  5. சிங்கப்பூர் பறந்தார்... துமிந்த சில்வா ! வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா சிங்கப்பூர் சென்றுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி இன்று அதிகாலை 12.50 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுள்ளார். SQ-469 என்ற குறித்த சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பை வழங்கியிருந்தமை குறிப்பிட்டத்தக்கது. https://athavannews.com/2022/1280563

  6. எதற்காக... அவசரகால நிலைப் பிரகடனம்? கனேடிய உயர் ஸ்தானிகர் கேள்வி ! எதற்காக அவசரகால நிலைப் பிரகடனம் செய்யப்படுகின்றது என்பதைப் புரிந்துகொள்வது கடினம் என கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் தெரிவித்துள்ளார். கடந்த வாரங்களாக அதிகளவிலான மக்கள் பங்காற்றுதலுடன் நாடு முழுவதும் இடம்பெற்ற அமைதியான போராட்டங்கள் இடம்பெற்றுவதாக கூறினார். இந்த போராட்டங்கள் அனைத்தும் நாட்டின் ஜனநாயகத்திற்கு கிடைத்த பெருமை என டேவிட் மெக்கின்னன் கூறியுள்ளார். இவ்வாறு அமைதியாக போராட்டங்கள் நடக்கும் போது, அவசரகாலநிலைப் பிரகடனம் ஏன் செய்யப்பட்டது என்பதை புரிந்து கொள்வது கடினம் என அவர் கூறியுள்ளார். https://athavannews.com/2022/1280556

  7. இன்று நள்ளிரவு முதல் அவசரகாலச் சட்டம் - ஆணையை பிறப்பித்தார் ஜனாதிபதி நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆணையை பிறப்பித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு பகுதிகளிலும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறித்த அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியுள்ளார். ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர் தற்போது அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/127053

    • 13 replies
    • 838 views
  8. மகிந்தவை பதவிவிலகுமாறு கோட்டா கோாிக்கை May 6, 2022 பிரதமர் மகிந்த ராஜபக்ஸவை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே ஜனாதிபதி இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஜனாதிபதியின் கோரிக்கைக்கு பல அமைச்சரவை அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் குறித்த தகவல்கள் தொிவிக்கின்றன . எனினும் சில அமைச்சரவை அமைச்சர்கள் ஜனாதிபதியின் இந்த தீர்மானத்திற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது https://globaltamilnews.net/2022/176256 பதவி விலகுமாறு ஜனாதிபதி…

  9. இலங்கை நெருக்கடி: நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் - பாட சாலைகளும் மூடல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை வெளியேறுமாறும் கோரி இன்று (மே 06) நாடு தழுவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகின்றது. இதன்படி, நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்றைய தினம் மூடப்பட்டுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். அத்துடன், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விசேட பிரமுகர்களுக்கான வளாகத்தின் பணிக…

  10. Published on 2022-05-06 16:54:56 அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தலைநகர் கொழும்பும் முடங்கியது. தலைநகர் கொழும்பின் புறக்கோட்டைப் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் ஆகியன மூடப்பட்டு காணப்படுகின்றன. வத்தளைப் பகுதியில் அமைந்துள்ள பேலியகொட மொத்த மீன் விற்பனை நிலையம் மற்றும் மொத்த மரக்கறி விற்பனை நிலையம் ஆகியன வெறிச்சோடிக்காணப்படுகின்றது. இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கொழும்பு குணசிங்கபுர பகுதியில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தலைமையில் ஆ…

    • 3 replies
    • 453 views
  11. ரணவிரு நினைவு மாதத்தைப் பிரகடனப்படுத்தி இன்று (06) ஜனாதிபதி மாளிகையில் தேசிய ரணவிரு கொடி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அணிவிக்கப்பட்டது. ரணவிரு சேவை அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர (ஓய்வுபெற்ற), முதலாவது ரணவிரு கொடியை ஜனாதிபதிக்கு அணிவித்தார். மூன்று தசாப்தங்களுக்கும் மேலான பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்து, சுதந்திரமான நாட்டிற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த, துணிச்சலான போர் வீரர்களை ரணவிரு மாதம் நினைவுகூருகிறது. ஜனாதிபதிக்கு தேசிய ரணவிரு கொடி அணிவிக்கப்பட்டது முதல் ரணவிரு நினைவேந்தல் மாதம் ஆரம்பமாகிறது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், ரணவிரு சேவை அதிகார சபையின் பணிப்பாளர் மேஜர…

    • 3 replies
    • 407 views
  12. ‘இது, மட்டுமே... மிஞ்சியுள்ளது’ நாடாளுமன்ற வளாகத்தில்... "உள்ளாடைப்" போராட்டம்! ‘இதுமட்டுமே மிஞ்சியுள்ளது’ எனக் கூறி ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக உள்ளாடைப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள ‘ஹொரா கோ கம’ அருகே ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ‘இதுமட்டுமே மிஞ்சியுள்ளது’ என்ற கோஷங்களோடும் பதாதைகளோடும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குறித்த பகுதியில் ஆண்கள், பெண்களது உள்ளாடைகள்... தொங்கவிடப்பட்டு, மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2022/1280464

    • 17 replies
    • 1.4k views
  13. இராஜாங்க அமைச்சர்... குணபால ரத்னசேகர, இராஜினாமா. கூட்டுறவு சேவை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசேகர பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1280493

  14. காலிமுகத்திடல் போராட்டம் – பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை, பரிசீலிப்பதில் இருந்து... நீதிபதி விலகல் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இடம்பெற்று வரும் போராட்டம் தொடர்பில் பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலிப்பதில் இருந்து கொழும்பு நீதவான் ஹர்ஷன கெகுனாவல விலகியுள்ளார். கோட்டை பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை இன்று கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த போராட்டம் தொடர்பாக 102 வழக்குகள் கொழும்பு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கோட்டை பொலிஸ் தரப்பில் ஆஜரான அரச சட்டத்தரணி ஷவீந்திர விக்ரம தெரிவித்தார். எனவே, கோரிக்கையை பரிசீலிக்கத் தயாராக இருந்தால், அதுதொடர்பான உண்மை…

  15. சபாநாயகரின் அறைக்குச் சென்று.. முக்கிய கோரிக்கையை, முன்வைத்தது எதிர்க்கட்சி நாடாளுமன்றத்தில் விரைவில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பிக்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரின் அறைக்கு சென்று கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி, நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க சந்தர்ப்பம் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை, நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியது குறித்தும் அவர்கள் இதன்போது முறைப்பாடளித்தனர். https://athavannews.com/2022/1280515

  16. நாட்டில் ஏற்பட்டுள்ள... நெருக்கடி நிலை – விசேட அமைச்சரவைக் கூட்டம் இன்று! நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து கலந்துரையாடுவதற்காக விசேட அமைச்சரவை கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு இடம்பெறும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நாலக கொடஹேவா அறிவித்துள்ளார். இந்தக் கூட்டத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமை தாங்கவுள்ளார். பல தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள 24 மணிநேர ஹர்த்தால் காரணமாக இலங்கையின் பல துறைகள் இன்று ஸ்தம்பிதமடைந்துள்ளன. ஹர்த்தாலில் முக்கிய வர்த்தகப் பகுதிகள் மற்றும் பல முக்கிய நகரங்களில் கடைகள் மூடப்பட்டுள்ளதுடன், ரயில்கள் மற்றும் பேருந்துகள் மற்றும் பொது சேவைகள் உட்பட பல பொது போக்குவரத்துகள் நிறுத்தப…

  17. ரணிலுக்கு... பாதுகாப்பு வழங்குமாறு, சபையில் தினேஷ் கோரிக்கை! முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பாதுகாப்பு வழங்க தலையிடுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். தனது வீட்டை சுற்றி வளைக்கும் திட்டம் இருப்பதாகவும், அப்படியானால், உரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தமக்கான பாதுகாப்பை வழங்க தலையிடுமாறும் ரணில் விக்ரமசிங்க கோரியதாக அவர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். எனவே, சபையில் கூறப்படும் அறிக்கைகள் தொடர்பாக எந்தவொரு அரசியல் கட்சியும் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரையும் மிரட்டுவது ஜனநாயக நடைமுறையல்ல என்றும் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். பிரதி சபாநாயகர் வாக்கெடுப்பின்போது அரசாங்கத்…

  18. ஹர்த்தாலில் ஈடுபடும்... அரச ஊழியர்களின் சம்பளம், குறைக்கப்படும்? – ஜனாதிபதி ஊடகப்பிரிவு விளக்கம் ஹர்த்தால் போராட்டத்தில் ஈடுபடும் அரச ஊழியர்களின் மே மாத சம்பளம் குறைக்கப்படும் என சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் பிரசாரம் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 2022-05-03 திகதியிட்ட ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தலைப்புச் செய்தியைப் பயன்படுத்தி ஹர்த்தால் போராட்டத்தில் ஈடுபடும் அரச ஊழியர்களின் மே மாத சம்பளம் குறைக்கப்படும் என சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரம் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரச நிர்வாக அமைச்சுக்கு அவ்வாறான அறிவித்தல் எது…

  19. நாடாளுமன்றத்தில்... பைத்தியக்காரர்கள் போல், நடந்துகொள்ள வேண்டாம் – சபாநாயகர் நாடாளுமன்றத்தில் பைத்தியக்காரர்கள்போல் நடந்துகொள்ள வேண்டாம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் பூர்வாங்க நடவடிக்கைகள் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாகவே அவைத் தலைவரின் உத்தரவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கத் தொடங்கியபோதே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் பைத்தியக்காரத்தனமாக நடந்துகொண்டால் சபை ஒத்திவைக்கப்படும் என்றும் சபாநாயகர் கூறினார். https://athavannews.com/2022/1280438

    • 1 reply
    • 134 views
  20. ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக... 100 பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் குழு, நியமனம்? ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பாக தீர்மானங்களை மேற்கொள்வதற்காக சிரேஷ்ட அதிகாரிகளின் தரவரிசையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக பல உள்ளூர் பத்திரிகைகளை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, துணைப் பொலிஸ் மா அதிபர் ஒருவர், ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவுக்கு உதவியாக ஒரு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரை நியமித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தளம் பிரதி பொலிஸ் மா அதிபர் நிமல் பெரேரா ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் பொலிஸ் குழுக்களுக்கு பொறுப்பாக நிய…

  21. 5 மணி நேரம் வரை மின்சாரம் தடைப்படும் அறிகுறிகள் -CEB பொறியியலாளர் சங்கம் எச்சரிக்கை -சி.எல்.சிசில்- நுரைச்சோலை அனல்மின் நிலையத்திலிருந்து தேசிய மின் கட்டமைப்பு 270 மெகாவோட் மின்சாரத்தை இழந்துள்ளதாகவும், இதனால் எதிர்காலத்தில் மேலும் மின்வெட்டு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நாட்களில் சுமார் மூன்று மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டாலும், அந்த நேரம் சுமார் ஐந்து மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்படலாம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 270 மெகாவோட் எண்ணெய் இழப்பை ஈடு கட்டுவது நஷ்டம் என்றும், அந்தத் திறனை நீர் மின…

    • 0 replies
    • 101 views
  22. கண்ணீர்ப்புகை தாக்குதலை தொடர்ந்து பாராளுமன்றில் அமைதியின்மை! சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவினால் பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தியத உயன பாராளுமன்ற நுழைவு வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸாரினால் கண்ணீர்ப்புகைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து பாராளுமன்றில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக பாராளுமன்றம் இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கண்ணீர்ப்புகை தாக்குதலை தொடர்ந்து பாராளுமன்றில் அமைதியின்மை! (காணொளி) - oosai.lk

  23. மஹிந்த ராஜபக்ஷவுடன் நான் இருப்பதாக இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். ஆனால், அவர்தான் மஹிந்த சரணம் கச்சாமி என ராஜபக்ஸக்களின் பின்னால் திரிந்தவர் என போட்டுடைத்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க. பாராளுமன்றத்தில் இன்று (06) உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நான் ராஜபக்ஷவர்களுடன் இருப்பதாக சாணக்கியன் குறிப்பிட்டார். ஆனால், நான் அவர்களுடன் இருக்கவில்லை, ராஜபக்ஷ பிரபாகரனுடன் சேர்ந்து என்னை தோற்கடிக்க நினைத்தார். இராசமாணிக்கம் சாணக்கியன் தொடர்பில் ஒரு விடயத்தை இங்கு தெரிவிக்க வேண்டும். 2013ஆம் ஆண்டு பெப்ரவரி 21ஆம் திகதி அருந்திக்க பெர்ணான்டோ மற்றும் சாணக்கியன் ஆகியோரை சுதந்திரக…

  24. தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளவர்களை கூறப்போனால் கவலையாக உள்ளது. அவர்கள் மக்களை பற்றி கடந்த காலங்களில் சிந்திக்கவில்லை . மக்கள் எழுச்சி போராட்டத்தை பற்றி சிந்தியுங்கள். ஆட்சியாளர்களின் டீல்களை பற்றி சிந்திக்க வேண்டாம். இவ்வாறான டீல்களை பேசுவதை உடனடியாக கூட்டமைப்பினர் நிறுத்த வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தான் இவ்வாறான டீல்களை செய்தவர் என்பது எமக்கு தெரியும் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் உள்ள அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க தலைமைக் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை(1) சர்வதேச தொழிலாளர் தினம் மற்றும் சமகால அரசியல் நிலைமை தொடர்…

  25. வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் வந்தவர் மதுபான விடுதியில் ஆங்கிலத்தில் பேசியதால், ஆத்திரமடைந்த இளைஞர் குழுவினர் ஒரு கொலையை செய்துள்ளனர். யாழ் மாவட்டத்தின் நெல்லியடி பொலிஸ் பிரிவில் இந்த சம்பவம் நடந்தது. மதுபோதையின் உச்சத்தில் தமிழ்ப்பற்று பீறிட்ட பச்சைத் தமிழர்களால் அரங்கேற்றப்பட்ட கொடூர கொலை பற்றிய முழுமையான தொகுப்பு இது. யாழ்ப்பாணம்- பருத்தித்துறை வீதியில் வல்லைவெளியில், இமையாணன் பகுதியில் அமைந்துள்ளது யாழ் பீச் ஹொட்டல். அங்கு 2ஆம் திகதி- திங்கட்கிழமை இரவு இளைஞன் ஒருவர் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். மதுபான போத்தலால் குத்தப்பட்டதில் இளைஞன் உயிரிழந்தார். https://pagetamil.com/2022/05/04/மது-விடுதியில்-ஆங்கிலம்/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.