ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
மீண்டும் அதிகரிக்கப்படுகின்றது... எரிவாயுவின் விலை – உறுதிப்படுத்தினார் இராஜாங்க அமைச்சர்! எரிவாயு விலை தொடர்ந்தும் அதிகரிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். லிட்ரோ எரிவாயுவின் விலையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், எதிர்வரும் 4ஆம், 5ஆம் திகதிக்குள் எரிவாயு தட்டுப்பாடு நீங்கும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டு மக்களின் அசௌகரியங்கள் குறையும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1273918
-
- 0 replies
- 322 views
-
-
அரசாங்கத்திற்கு எதிராக... ஒரே நாளில், 150 போராட்டங்கள்! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக ஒரே நாளில் – ஒரே நேரத்தில் 150 போராட்டங்களை நாடு தழுவிய ரீதியில் நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 07ஆம் திகதி தேர்தல் தொகுதிகள்வாரியாக குறித்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இந்தபோராட்டங்களில் பங்கேற்று, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளனர். https://athavannews.com/2022/1273915
-
- 0 replies
- 164 views
-
-
டீசல், கையிருப்பில் இல்லை... எனவே, வரிசையில் நிற்க வேண்டாம் என அறிவிப்பு! டீசலினை பெற்றுக்கொள்வதற்காக இன்றும்(புதன்கிழமை) நாளையும் வரிசைகளில் நிற்க வேண்டாமென பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். 37,500 மெட்ரிக் தொன் டீசலை கொண்டுவந்த கப்பலிலிருந்து திட்டமிட்டபடி டீசலை இறக்க முடியாமல்போன காரணத்தினால் டீசலை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், ஏனைய அத்தியாவசிய சேவைகளுக்கு தடங்கலின்றி தொடர்ச்சியாக டீசல் விநியோகிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், பெட்ரோல் விநியோகம் வ…
-
- 0 replies
- 160 views
-
-
கூட்டமைப்பு , ஜனாதிபதிக்கிடையிலான சந்திப்பு குறித்து கலாநிதி ஜெய்சங்கருக்கு அமைச்சர் பீரிஸ் விளக்கம் (எம்.மனோசித்ரா) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது , நல்லிணக்கம் தொடர்பில் வடக்கு, கிழக்கு மக்களின் அக்கறைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டமை குறித்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் , இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கருக்கு விளக்கமளித்துள்ளார். கொழும்பில் நடைபெற்று வருகின்ற ஐந்தாவது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜ…
-
- 0 replies
- 133 views
-
-
யாழ். தீவுகளில் கலப்பு மின்திட்டம் உள்ளிட்ட 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இலங்கை - இந்தியாவிற்கு இடையில் கைச்சாத்து (நா.தனுஜா) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்திருக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பையடுத்து, இருநாடுகளுக்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு துறைகள் சார்ந்த 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் இலங்கையின் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்புக்கள் மற்றும் புதிதாகக் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தி இல…
-
- 0 replies
- 268 views
-
-
நவக்கிரியில் கடத்தப்பட்ட இளைஞன் கைகள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு ; வைத்தியசாலையில் அனுமதி புத்தூர் மேற்கு, நவக்கிரியில் கடத்தப்பட்ட இளைஞர் இரண்டு நாள்களின் பின்னர் கைகள் கட்டடப்பட்ட நிலையில் நேற்று (29) மாலை மீட்கப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். நவக்கிரி சனசமூக நிலையத்தடியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மீட்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக அச்சுவேலி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். புத்தூர் மேற்கு, நவக்கிரிக்கிரியைச் சேர்ந்த அருந்தவராசா சயந்தன் என்ற 30 வயது இளைஞரே கடந்த சனிக்கிழமை இரவு இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டுள்ளார் என்று அவரது உறவினர்கள் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் மின்சாரம் தடைப்ப…
-
- 0 replies
- 133 views
-
-
ஜனாதிபதி தலைமையில் 5 ஆவது பிம்ஸ்டெக் அரசதலைவர்கள் மாநாடு ஆரம்பம் : உறுப்புநாடுகளின் அங்கீகாரத்துடன் பிம்ஸ்டெக் சாசனம் நிறைவேற்றம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஆரம்பமானது 5 ஆவது பிம்ஸ்டெக் அரசதலைவர்கள் மாநாடு. இந்நிலையில், உறுப்புநாடுகளின் அங்கீகாரத்துடன் பிம்ஸ்டெக் சாசனம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்போது பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, பூட்டான் பிரதமர் லொற்றே ஷெரிங், இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி, தாய்லாந்து பிரதமர் ப்ரயுத் சான்-ஓ-சா, நேபாள பிரதமர் ஷேர் பஹதூர் டுபா, மியன்மார் வெளிவிவகார அமைச்சர் வுன்னா மொன்ங் ல்வின் மற்றும் பிம்ஸ்டெக் அமைப்பின் செயலாளர் நாயகம் ஆகியோர் உரையாற்றினர். இங்கு உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி…
-
- 0 replies
- 130 views
-
-
தமிழரின் பிரச்சினைக்கு இந்த ஆட்சியில் தீர்வாம்! எனது ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைக் காண்பேன். அதன் ஒரு கட்டமாகவே தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளேன். இவ்வாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்தார். அரசியல் தீர்வு, காணி விடுவிப்பு, கைதிகள் விடுதலை உள்ளிட்ட 5 விடயங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முதல்கட்டமாகப் பேசியுள்ளேன். இந்தப் பேச்சுக்குப் பல தரப்பிலிருந்தும் வரவேற்புக் கிடைத்துள்ளது. பேச்சுக்கள் தொடரும். தமிழ் மக்களின் சகல பிரச்சினைகளுக்கும் நான் தீர்வுகளைக் காண்பேன். இது எனது கடமை. புலம்ப…
-
- 0 replies
- 113 views
-
-
எதிர்வரும் சில நாட்களுக்கு... மக்கள் வாழ்வது, மிகவும் கடினமாக இருக்கும் என்கிறது பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு! எதிர்வரும் சில நாட்கள் மக்கள் வாழ்வது மிகவும் கடினமாக இருக்கும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “இந்த நிலைமை மேலும் மோசமாகி வருகிறது. இதற்கு தீர்வு காண எந்த நிறுவனமும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. நிதி நெருக்கடியால் இந்த மின் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நாளை(புதன்கிழமை) மற்றும் நாளை மறுநாள், அரசாங்க நிறுவனங்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான வாய்ப்பை வழங்குவதன் மூலம் இந்த சூழ்நிலையை நிர்வகிக்க நாங்கள் அரசாங்கத்திற்கு பரிந்துரைத்தோம். அட…
-
- 0 replies
- 94 views
-
-
இன்னும் ஒருவார காலத்திற்கு... அவசியமான, மின்சாரத்தை மாத்திரமே உற்பத்தி செய்ய முடியும்? வறட்சியான காலநிலை காரணமாக, நீர்மின் உற்பத்தி நிலையங்களை அண்டிய பகுதிகளிலுள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சடுதியாக குறைவடைந்துள்ளது. இலங்கை மின்சார சபை இதுகுறித்த தகவலினை வெளியிட்டுள்ளது. இதனால், இன்னும் ஒருவார காலத்திற்கு அவசியமான மின்சாரத்தை மாத்திரமே உற்பத்தி செய்ய முடியும் என மின்சார சபை குறிப்பிட்டுள்ளது. இதேநேரம், மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் கிடைக்காமையால், மின் உற்பத்திக்கு தொடர்ந்தும் பாதிப்பு ஏற்படுவதாகவும் மின்சார சபை தெரிவித்துள்ளது. https://athavannews.com/2022/1273900
-
- 0 replies
- 117 views
-
-
பாராளுமன்றத்தை எப்படி கலைக்கலாம்?: கம்மன்பில விளக்கம்! பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அதற்காக நாட்டின் அரசியலமைப்பில் காணப்படும் சந்தர்ப்பங்களை செயற்படுத்துவது தொடர்பில் அவர் விளக்கியுள்ளார். பாராளுமன்றத்தை கலைப்பதற்கு இரண்டு அல்லது இரண்டரை வருடங்கள் அவசியம் என சபாநாயகருக்கு கூறப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் விருப்பத்திற்கு அமைய பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டுமானால் மாத்திரமே இரண்டரை வருடங்கள் தேவைப்படும். எனினும், பாராளுமன்றத்தின் தேவைக்கு அமைய, பாராளுமன்றத்தை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் கலைக்க ம…
-
- 0 replies
- 128 views
-
-
டீசல் கையிருப்பில் இல்லை: வரிசையில் காத்திருக்க வேண்டாமென அறிவிப்பு! டீசல் பெற்றுக் கொள்வதற்காக இன்றும் (30) நாளையும் (31) எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்திருக்க வேண்டாம் என்று பெட்ரேலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. திட்டமிட்டவாறு 37,500 மெட்ரிக் தொன் டீசலுடன் வந்த கப்பலில் இருந்து நேற்றைய தினம் டீசலை இறக்கமுடியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசலுக்காக காத்திருப்பதை தவிர்க்குமாறு பெட்ரேலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், அத்தியாவசிய சேவைகளுக்காக தொடர்ச்சியாக டீசல் விநியோகிக்கப்படவுள்ளதாக அவர் மேலு…
-
- 0 replies
- 90 views
-
-
பொதுமக்கள் மீதான சுமைகள், ஒரேநாளில் 150 போராட்டங்கள்! March 30, 2022 வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பொதுமக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சுமைகளுக்கு எதிராக தேர்தல் தொகுதிகளை மையப்படுத்தி 150 போராட்டங்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. அனைத்து இடங்களிலும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி ஒரே நேரத்தில் போராட்டம் நடத்தப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டம் கடந்த 15ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையிலேயே நாடு முழுவ…
-
- 0 replies
- 89 views
-
-
நான், விட்டுட்டு போகமாட்டேன்”: மஹிந்த பிரதமர் பதவியில் நான் தொடர்ந்து இருப்பேன் என்று மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். உடனடியாக ஓய்வுபெற வேண்டிய தேவை எனக்கில்லை. அடுத்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்டாயமாக வெற்றிப்பெறும். ரணில் மற்றும் சஜித்துடன் இணைந்து செய்யவேண்டிய வேலைகள் எதுவுமே என்னிடத்தில் இல்லை என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழக்கவில்லை எனத் தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தேசிய அரசாங்கம் என்பது பொய்யாகும் என்றார். Tamilmirror Online || “நான், விட்டுட்டு போகமாட்டேன்”: மஹிந்த எனக்கு பிரதமராக பதவியேற்க வேண்டிய அவசியமி…
-
- 4 replies
- 506 views
-
-
இலங்கையின் தற்போதைய அரசாங்கம் முடிவுக்கு வரும் நாளில் ராஜபக்சவினரின் அரசியல் மாத்திரமல்ல கடந்த 80 ஆண்டுகளாக இருந்து வந்த குடும்ப அரசியலும் முடிவுக்கு வரும் என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். ராஜபக்சவினர் இழந்து வரும் வாக்கு வங்கியை சேகரித்து அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்சவுக்கு பெற்றுக்கொடுக்கும் சூழ்ச்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சியை சேர்ந்த சிலர் குற்றம் சுமத்துகின்றனர். நாமல் ராஜபக்சவின் துரதிஷ்டம் காரணமாக தற்போதைய அரசாங்கம் முடிவுக்கு வரும் போது ராஜபக்சவினரின் அரசியலும் முடிவுக்கு வரும். அது மாத்திரமல்ல 80 …
-
- 0 replies
- 344 views
-
-
ஆரியகுளம் என்ற பெயர் யாழ்ப்பாண அரசைத் தோற்றுவித்த ஆரியச்சக்கரவரத்திகளின் ஆட்சியை நினைவுபடுத்திக் காட்டும் ஒரு மரபுரிமைச் சின்னம் என்பது உறுதியாகத் தெரிகின்றது. இதை மறுதலித்துக் கூறுவதற்கு வேறு எந்த ஆதாரங்களும் காணப்படவில்லை என பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண நகர் மத்தியில் அமைந்துள்ள ஆரிய குளம் , யாழ்.மாநகர சபையினால் புனரமைக்கப்பட்டு , குளத்தினை சூழவுள்ள பகுதிகள் அழகாக்கப்பட்டு இன்றைய தினம் வியாழக்கிழமை " ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல்" என திறந்து வைக்கப்படவுள்ளது. அந்நிலையில் , அது தொடர்பில் பேராசிரியர் குறிப்பிடும் போதே, அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், இலங்கை சுதந்திரமடைந்த காலத…
-
- 28 replies
- 2.1k views
-
-
இந்தியாவிடமிருந்து மேலும் ஒரு பில்லியன் டொலர் கடனை கோரியுள்ளது இலங்கை ரொய்ட்டர் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இந்தியாவிடமிருந்து மேலதிகமாக ஒரு பில்லியன் டொலர் கடனுதவியை கோரியுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது அயல்நாட்டின் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ள வேளையில் இந்த தகவலை இரண்டு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜனவரி 2020 முதல் அந்நியசெலாவணி கையிருப்பு 70 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதால் நாணயபெறுமதியை இறக்கத்தை மேற்கொண்டுள்ள இலங்கை அத்தியாவசிய உணவுகள் மற்றும் எரிபொருளிற்கு தேவையான டொலரை பெற்றுக்கொள்வதில் பெரும்நெருக்கடியை எதிர்கொண்டுள…
-
- 11 replies
- 691 views
-
-
கடதாசித் தட்டுப்பாட்டை கவனத்தில் கொண்டு... ரயில் பயண சீட்டுக்களை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கு தீர்மானம்! நாட்டில் நிலவும் கடதாசித் தட்டுப்பாட்டை கவனத்தில் கொண்டு ரயில் பயண சீட்டுக்களை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். டிஜிட்டல் முறைமைக்கு மாற்றுவது தொடர்பில் முறைமையொன்று திட்டமிடப்பட்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரயில் பயண சீட்டுக்களை அச்சிடுவதற்குத் தேவையான கடதாசி பற்றாக்குறை காரணமாக கடதாசியைப் பயன்படுத்தும் முறைமையை இல்லாதொழித்து டிஜிட்டல் முறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://athav…
-
- 2 replies
- 243 views
-
-
இன்றைய தேவை... ஜனாதிபதி பதவி விலகுவதல்ல, நிதியமைச்சரை நீக்குவதே – விமல்! இன்றைய தேவை ஜனாதிபதி பதவி விலகுவதல்ல நிதியமைச்சரை நீக்குவதே என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நேரலை விவாதம் ஒன்றில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். புதிய எதிர்க்கட்சி குழுவை உருவாக்கி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ஆளும் தரப்பின் பெரும்பான்மையை இழக்கச் செய்வதே தமது நோக்கம் எனவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1273838
-
- 1 reply
- 216 views
-
-
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 29 மார்ச் 2022, 07:32 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடியும் விலைவாசி உயர்வும் ஏற்கனவே பல பிரச்னைகளில் திண்டாடி வரும் மலையக மக்களை இன்னும் விளிம்புக்குத் தள்ளியிருக்கின்றன. இலங்கையின் மலையகப் பகுதியிலிருந்து பிபிசியின் நேரடி ரிப்போர்ட். இலங்கையின் தேயிலை மற்றும் ரப்பர் தோட்டங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் ஏற்கெனவே ஊதியக் குறைவு, பணிச் சுமை, சரியான குடியிருப்புகள் இல்லாதது எனப் பல்வேறு பிரச்னைகளில் திணறிவரும் நிலையில், மேலும் ஒரு பேரிடியாக வந்திருக்கிறது தற்போதைய பொரு…
-
- 0 replies
- 233 views
-
-
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை தீர்ப்பதற்கான சிறந்த ஆரம்பமாக மாகாண சபை முறைமையே சிறந்த என்ற தனது வழிமுறையை தமிழ் தரப்புக்கள் ஏற்றுக்கொண்டிருப்பதை வரவேற்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அத்தோடு வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை அபிவருத்தி உட்பட பல திடடங்களுக்கான கோரிக்கைகளையும் இந்தியாவிடம் முன்வைத்துள்ளார். மேலும், தமிழ் மக்களின் கலாசார விழுமியங்களையும் பாரம்பரியங்களையும் பாதுகாத்து வளர்த்தெடுப்பதற்காக யாழ்ப்பாணத்தில் நவீன வசதிகள் அடங்கிய கலாசார நிலையத்தினை அமைத்து தந்தமைக்காக இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய மக்களுக்கும் இலங்கை தமிழ் மக்கள் சார்பான தனது நன்றியை அமைச்சர் டக்ளஸ் தேவான…
-
- 0 replies
- 246 views
-
-
மருத்துவ உபகரணங்களுக்கு பற்றாக்குறை – பேராதனை வைத்தியசாலையில், சத்திரசிகிச்சை நிறுத்தப்பட்டது பேராதனை வைத்தியசாலையில் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் இல்லாத காரணத்தினால் நேற்று (திங்கட்கிழமை) முதல் அனைத்து சத்திரசிகிச்சைகளையும் இடைநிறுத்துவதற்கு வைத்தியசாலை நிர்வாக குழு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் பேராதனை வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அர்ஜுன திலகரத்ன, வைத்தியசாலையின் அனைத்து வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்களின் சத்திரசிகிச்சையை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் கையொப்பமிட்ட கடிதத்தில…
-
- 1 reply
- 206 views
-
-
பங்களாதேஷிடம் இருந்து இலங்கை மேலும் 250 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை கோருகிறது! பங்களாதேஷிடம் இருந்து மேலும் 250 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கை கோரியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது இரு நாடுகளுக்கும் இடையிலான நாணய பரிமாற்ற ஏற்பாடாக இருக்கும். முன்னதாக, அந்நிய செலாவணி நெருக்கடியை சமாளிக்க பங்களாதேஷ் இதேபோன்ற கடன் வசதியை இலங்கைக்கு வழங்கியது. Thinakkural.lk
-
- 1 reply
- 274 views
-
-
ஓவியமொன்றுக்காக பல மில்லியனை வாரி இறைத்த அரசியல் வாரிசு நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாரிய சிக்கல்களை எதிர்கொண்டுள்ள அதேவேளை, தமது அத்தியாவசியப் பொருள்களுக்காக மணித்தியாலக் கணக்கில் வரிசைகளில் காத்திருக்கும் நிலையில், இலங்கை அரசியல்வாதியொவரின் மகனால் ஒவியம் ஒன்று, அதி கூடிடிய விலைக்கு வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 35 மில்லியன் ரூபாய்க்கு குறித்த ஓவியம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் சிங்கள இணயைத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த அரசியல்வாதியின் மகனால், இலங்கையின் பிரபல செல்வந்த வர்த்தகர் ஒருவரிடமிருந்து இந்த ஓவியம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் …
-
- 0 replies
- 516 views
-
-
4 இந்திய மீனவர்கள் கைது இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த 4 மீனவர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்துக்கு அழைத்து வந்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 4 இந்திய மீனவர்கள் கைது (adaderana.lk)
-
- 0 replies
- 284 views
-