ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142884 topics in this forum
-
பாராளுமன்றத்தை எப்படி கலைக்கலாம்?: கம்மன்பில விளக்கம்! பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அதற்காக நாட்டின் அரசியலமைப்பில் காணப்படும் சந்தர்ப்பங்களை செயற்படுத்துவது தொடர்பில் அவர் விளக்கியுள்ளார். பாராளுமன்றத்தை கலைப்பதற்கு இரண்டு அல்லது இரண்டரை வருடங்கள் அவசியம் என சபாநாயகருக்கு கூறப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் விருப்பத்திற்கு அமைய பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டுமானால் மாத்திரமே இரண்டரை வருடங்கள் தேவைப்படும். எனினும், பாராளுமன்றத்தின் தேவைக்கு அமைய, பாராளுமன்றத்தை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் கலைக்க ம…
-
- 0 replies
- 129 views
-
-
டீசல் கையிருப்பில் இல்லை: வரிசையில் காத்திருக்க வேண்டாமென அறிவிப்பு! டீசல் பெற்றுக் கொள்வதற்காக இன்றும் (30) நாளையும் (31) எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்திருக்க வேண்டாம் என்று பெட்ரேலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. திட்டமிட்டவாறு 37,500 மெட்ரிக் தொன் டீசலுடன் வந்த கப்பலில் இருந்து நேற்றைய தினம் டீசலை இறக்கமுடியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசலுக்காக காத்திருப்பதை தவிர்க்குமாறு பெட்ரேலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், அத்தியாவசிய சேவைகளுக்காக தொடர்ச்சியாக டீசல் விநியோகிக்கப்படவுள்ளதாக அவர் மேலு…
-
- 0 replies
- 92 views
-
-
பொதுமக்கள் மீதான சுமைகள், ஒரேநாளில் 150 போராட்டங்கள்! March 30, 2022 வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பொதுமக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சுமைகளுக்கு எதிராக தேர்தல் தொகுதிகளை மையப்படுத்தி 150 போராட்டங்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. அனைத்து இடங்களிலும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி ஒரே நேரத்தில் போராட்டம் நடத்தப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டம் கடந்த 15ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையிலேயே நாடு முழுவ…
-
- 0 replies
- 91 views
-
-
நான், விட்டுட்டு போகமாட்டேன்”: மஹிந்த பிரதமர் பதவியில் நான் தொடர்ந்து இருப்பேன் என்று மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். உடனடியாக ஓய்வுபெற வேண்டிய தேவை எனக்கில்லை. அடுத்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்டாயமாக வெற்றிப்பெறும். ரணில் மற்றும் சஜித்துடன் இணைந்து செய்யவேண்டிய வேலைகள் எதுவுமே என்னிடத்தில் இல்லை என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழக்கவில்லை எனத் தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தேசிய அரசாங்கம் என்பது பொய்யாகும் என்றார். Tamilmirror Online || “நான், விட்டுட்டு போகமாட்டேன்”: மஹிந்த எனக்கு பிரதமராக பதவியேற்க வேண்டிய அவசியமி…
-
- 4 replies
- 507 views
-
-
இலங்கையின் தற்போதைய அரசாங்கம் முடிவுக்கு வரும் நாளில் ராஜபக்சவினரின் அரசியல் மாத்திரமல்ல கடந்த 80 ஆண்டுகளாக இருந்து வந்த குடும்ப அரசியலும் முடிவுக்கு வரும் என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். ராஜபக்சவினர் இழந்து வரும் வாக்கு வங்கியை சேகரித்து அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்சவுக்கு பெற்றுக்கொடுக்கும் சூழ்ச்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சியை சேர்ந்த சிலர் குற்றம் சுமத்துகின்றனர். நாமல் ராஜபக்சவின் துரதிஷ்டம் காரணமாக தற்போதைய அரசாங்கம் முடிவுக்கு வரும் போது ராஜபக்சவினரின் அரசியலும் முடிவுக்கு வரும். அது மாத்திரமல்ல 80 …
-
- 0 replies
- 345 views
-
-
ஆரியகுளம் என்ற பெயர் யாழ்ப்பாண அரசைத் தோற்றுவித்த ஆரியச்சக்கரவரத்திகளின் ஆட்சியை நினைவுபடுத்திக் காட்டும் ஒரு மரபுரிமைச் சின்னம் என்பது உறுதியாகத் தெரிகின்றது. இதை மறுதலித்துக் கூறுவதற்கு வேறு எந்த ஆதாரங்களும் காணப்படவில்லை என பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண நகர் மத்தியில் அமைந்துள்ள ஆரிய குளம் , யாழ்.மாநகர சபையினால் புனரமைக்கப்பட்டு , குளத்தினை சூழவுள்ள பகுதிகள் அழகாக்கப்பட்டு இன்றைய தினம் வியாழக்கிழமை " ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல்" என திறந்து வைக்கப்படவுள்ளது. அந்நிலையில் , அது தொடர்பில் பேராசிரியர் குறிப்பிடும் போதே, அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், இலங்கை சுதந்திரமடைந்த காலத…
-
- 28 replies
- 2.1k views
-
-
இந்தியாவிடமிருந்து மேலும் ஒரு பில்லியன் டொலர் கடனை கோரியுள்ளது இலங்கை ரொய்ட்டர் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இந்தியாவிடமிருந்து மேலதிகமாக ஒரு பில்லியன் டொலர் கடனுதவியை கோரியுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது அயல்நாட்டின் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ள வேளையில் இந்த தகவலை இரண்டு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜனவரி 2020 முதல் அந்நியசெலாவணி கையிருப்பு 70 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதால் நாணயபெறுமதியை இறக்கத்தை மேற்கொண்டுள்ள இலங்கை அத்தியாவசிய உணவுகள் மற்றும் எரிபொருளிற்கு தேவையான டொலரை பெற்றுக்கொள்வதில் பெரும்நெருக்கடியை எதிர்கொண்டுள…
-
- 11 replies
- 691 views
-
-
கடதாசித் தட்டுப்பாட்டை கவனத்தில் கொண்டு... ரயில் பயண சீட்டுக்களை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கு தீர்மானம்! நாட்டில் நிலவும் கடதாசித் தட்டுப்பாட்டை கவனத்தில் கொண்டு ரயில் பயண சீட்டுக்களை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். டிஜிட்டல் முறைமைக்கு மாற்றுவது தொடர்பில் முறைமையொன்று திட்டமிடப்பட்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரயில் பயண சீட்டுக்களை அச்சிடுவதற்குத் தேவையான கடதாசி பற்றாக்குறை காரணமாக கடதாசியைப் பயன்படுத்தும் முறைமையை இல்லாதொழித்து டிஜிட்டல் முறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://athav…
-
- 2 replies
- 243 views
-
-
இன்றைய தேவை... ஜனாதிபதி பதவி விலகுவதல்ல, நிதியமைச்சரை நீக்குவதே – விமல்! இன்றைய தேவை ஜனாதிபதி பதவி விலகுவதல்ல நிதியமைச்சரை நீக்குவதே என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நேரலை விவாதம் ஒன்றில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். புதிய எதிர்க்கட்சி குழுவை உருவாக்கி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ஆளும் தரப்பின் பெரும்பான்மையை இழக்கச் செய்வதே தமது நோக்கம் எனவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1273838
-
- 1 reply
- 217 views
-
-
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 29 மார்ச் 2022, 07:32 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடியும் விலைவாசி உயர்வும் ஏற்கனவே பல பிரச்னைகளில் திண்டாடி வரும் மலையக மக்களை இன்னும் விளிம்புக்குத் தள்ளியிருக்கின்றன. இலங்கையின் மலையகப் பகுதியிலிருந்து பிபிசியின் நேரடி ரிப்போர்ட். இலங்கையின் தேயிலை மற்றும் ரப்பர் தோட்டங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் ஏற்கெனவே ஊதியக் குறைவு, பணிச் சுமை, சரியான குடியிருப்புகள் இல்லாதது எனப் பல்வேறு பிரச்னைகளில் திணறிவரும் நிலையில், மேலும் ஒரு பேரிடியாக வந்திருக்கிறது தற்போதைய பொரு…
-
- 0 replies
- 235 views
-
-
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை தீர்ப்பதற்கான சிறந்த ஆரம்பமாக மாகாண சபை முறைமையே சிறந்த என்ற தனது வழிமுறையை தமிழ் தரப்புக்கள் ஏற்றுக்கொண்டிருப்பதை வரவேற்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அத்தோடு வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை அபிவருத்தி உட்பட பல திடடங்களுக்கான கோரிக்கைகளையும் இந்தியாவிடம் முன்வைத்துள்ளார். மேலும், தமிழ் மக்களின் கலாசார விழுமியங்களையும் பாரம்பரியங்களையும் பாதுகாத்து வளர்த்தெடுப்பதற்காக யாழ்ப்பாணத்தில் நவீன வசதிகள் அடங்கிய கலாசார நிலையத்தினை அமைத்து தந்தமைக்காக இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய மக்களுக்கும் இலங்கை தமிழ் மக்கள் சார்பான தனது நன்றியை அமைச்சர் டக்ளஸ் தேவான…
-
- 0 replies
- 247 views
-
-
மருத்துவ உபகரணங்களுக்கு பற்றாக்குறை – பேராதனை வைத்தியசாலையில், சத்திரசிகிச்சை நிறுத்தப்பட்டது பேராதனை வைத்தியசாலையில் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் இல்லாத காரணத்தினால் நேற்று (திங்கட்கிழமை) முதல் அனைத்து சத்திரசிகிச்சைகளையும் இடைநிறுத்துவதற்கு வைத்தியசாலை நிர்வாக குழு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் பேராதனை வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அர்ஜுன திலகரத்ன, வைத்தியசாலையின் அனைத்து வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்களின் சத்திரசிகிச்சையை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் கையொப்பமிட்ட கடிதத்தில…
-
- 1 reply
- 206 views
-
-
பங்களாதேஷிடம் இருந்து இலங்கை மேலும் 250 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை கோருகிறது! பங்களாதேஷிடம் இருந்து மேலும் 250 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கை கோரியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது இரு நாடுகளுக்கும் இடையிலான நாணய பரிமாற்ற ஏற்பாடாக இருக்கும். முன்னதாக, அந்நிய செலாவணி நெருக்கடியை சமாளிக்க பங்களாதேஷ் இதேபோன்ற கடன் வசதியை இலங்கைக்கு வழங்கியது. Thinakkural.lk
-
- 1 reply
- 275 views
-
-
ஓவியமொன்றுக்காக பல மில்லியனை வாரி இறைத்த அரசியல் வாரிசு நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாரிய சிக்கல்களை எதிர்கொண்டுள்ள அதேவேளை, தமது அத்தியாவசியப் பொருள்களுக்காக மணித்தியாலக் கணக்கில் வரிசைகளில் காத்திருக்கும் நிலையில், இலங்கை அரசியல்வாதியொவரின் மகனால் ஒவியம் ஒன்று, அதி கூடிடிய விலைக்கு வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 35 மில்லியன் ரூபாய்க்கு குறித்த ஓவியம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் சிங்கள இணயைத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த அரசியல்வாதியின் மகனால், இலங்கையின் பிரபல செல்வந்த வர்த்தகர் ஒருவரிடமிருந்து இந்த ஓவியம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் …
-
- 0 replies
- 517 views
-
-
4 இந்திய மீனவர்கள் கைது இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த 4 மீனவர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்துக்கு அழைத்து வந்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 4 இந்திய மீனவர்கள் கைது (adaderana.lk)
-
- 0 replies
- 284 views
-
-
புலமைப் பரிசில் பரீட்சையில்.. மட்டக்களப்பு கல்வி வலயம், இலங்கையில் இரண்டாம் இடம்!. இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அகில இலங்கை ரீதியான தரம் ஐந்து 2021ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் பகுப்பாய்வுகளின் படி மட்டக்களப்பு கல்வி வலயம் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் சித்தி பெற்ற அடிப்படையில் இலங்கையில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு வலய கல்விபணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார். மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், ”2021ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளிவந்த நிலையில் அதனைத் தொடர்ந்து …
-
- 5 replies
- 495 views
-
-
உணவுப் பொருட்கள் அடங்கிய... ஆயிரம் கொள்கலன்கள், கொழும்பு துறைமுகத்தில் தேக்கம்! உணவுப் பொருட்கள் அடங்கிய ஆயிரம் கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளன. அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் நிஹால் செனவிரத்ன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அரிசி, சீனி, பருப்பு, மிளகாய் ஆகிய பொருட்கள் அடங்கிய மேலும் ஆயிரம் கொள்கலன்களே இவ்வாறு தேங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவற்றை விரைவில் விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் நிஹால் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மேலதிக உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு டொலர் பற்றாக்குறை…
-
- 0 replies
- 180 views
-
-
சம உரிமையுள்ள பிரஜைகளாக மாற... எமக்கு நீங்கள் உதவுங்கள் – ஜெய்சங்கரிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி கோரிக்கை! இலங்கை அரசுடன் உங்களுக்கு உள்ள நல்லுறவை பயன்படுத்தி, முழுமையான சம உரிமையுள்ள பிரஜைகளாக மாற, எமக்கு நீங்கள் உதவுங்கள் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரிடம், தமிழ் முற்போக்கு கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரினை இன்றைய தினம்(திங்கட்கிழமை) சந்தித்து பேசியபோதே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு இந்திய தூதுவரின் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வே. ராதாகிருஷ்ணன், எம். உதயகுமார், ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்த…
-
- 0 replies
- 191 views
-
-
இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தது... இ.தொ.கா! இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று(திங்கட்கிழமை) நடைபெற்றது. மலையகத்தில் மேற்கொள்ளப்படும் இந்திய அபிவிருத்தி திட்டங்கள் குறித்து இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது. அத்துடன், மலையகத்துக்கான இந்தியாவின் உதவித் திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். https://athavannews.com/2022/1273761
-
- 0 replies
- 152 views
-
-
பண்டிகைக் காலத்தில்... அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு, தட்டுப்பாடு? பண்டிகைக் காலத்தில் பொது மக்களுக்கு தட்டுப்பாடின்றி அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வோரின் சங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 5ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளுக்கு பின்னர் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை எந்தவித தட்டுப்பாடும் இன்றி வழங்கக்கூடியதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த காலப்பகுதியில் இந்திய கடனுதவியின் கீழ் துறைமுகத்திலுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விரைவாக விடுவித்து பொருட்களை சந்தைக்கு விநியோகிக்…
-
- 0 replies
- 138 views
-
-
எரிபொருளுக்கு தட்டுப்பாடு? அதிகரிக்கப் படுகின்றது மின் வெட்டு நேரம்? அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தற்போதைய மின்வெட்டை மேலும் அதிகரிக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பெற்றோலியம் மற்றும் துறைமுக நல்லிணக்க தொழிற்சங்க கூட்டமைப்பின் பேச்சாளர் ஆனந்த பாலித இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் எரிபொருளின் அளவு இழக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் தற்போதைய எரிபொருள் விநியோகம் இன்றுடன்(செவ்வாய்கிழமை) நிறைவடையவுள்ளதாகவும் மின்வெட்டை அதிகரிப்பதன் மூலம் ஓரளவு எரிபொருளை சேமிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்…
-
- 0 replies
- 144 views
-
-
இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையில்... ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து! இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோருக்கு இடையில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற இருதரப்பு சந்திப்பைத் தொடர்ந்தே இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. அவற்றில் இந்திய உதவியுடன் ஏற்படுத்தப்படவுள்ள ஷங்ரி லங்கா அடையாள டிஜிட்டல் அடையாள அட்டை தொடர்பான உடன்படிக்கை, யாழ்ப்பாணத்திற்கு அருகிலுள்ள மூன்று தீவுகளில் மின் உற்பத்தி நிலையங்களை அமைக்கும் ஒப்பந்தங்களும் உள்ளடங்கும் என தெரிவிக்கப்படுகின்றது. பொரு…
-
- 0 replies
- 119 views
-
-
IMF இன் அறிக்கையினை... நாடாளுமன்றில் முன்வைப்பதற்கு, அமைச்சரவை அனுமதி! இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையை நாடாளுமன்றில் முன்வைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று(திங்கட்கிழமை) முன்வைத்த யோசனைக்கே இவ்வாறு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையின் உறுப்புரை 4 பணிக்குழு அறிக்கையின் கீழ் இலங்கை தொடர்பான 2021ம் ஆண்டுக்கான அறிக்கை கடந்த 25ஆம் திகதி வெளியிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து குறித்த அறிக்கையினை நாடாளுமன்றில் முன்வைக்குமாறு எதிர்கட்சி கட்சிகள் அண்மையில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews…
-
- 0 replies
- 107 views
-
-
அயலக கொள்கையில் இலங்கைக்கு என்றும் முதலிடம் - இந்திய வெளிவிவகார அமைச்சர் (இராஜதுரை ஹஷான்) 'அயலகத்திற்கு முதலிடம் 'கொள்கைக்கமைய இந்தியா இலங்கையுடன் தொடர்ந்து செயற்படும் என இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கு உறுதியளித்துள்ளார். கொழும்பில் இடம்பெறும் 5ஆவது பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார கூட்டுறவிற்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு (பிம்ஸ்டெக்) மாநாட்டில் கலந்துக்கொள்ள இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரிற்கும்,நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெற்றது. இலங்கையின் பொருளாதார நிலைமை மற்றும் இந்தியாவின் முன்னேற்றகரமான…
-
- 1 reply
- 184 views
-
-
துறக்கிறார் மஹிந்த : ஏற்கிறார் ரணில் பிரதமர் பதவியில் மாற்றங்கள் ஏற்படக்கூடுமென, அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாடு தற்போது முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், தற்போதைய அரசாங்கத்தினால் அரசியல் ரீதியில் பாரிய மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. அதனடிப்படையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவியை துறப்பார் என்றும் அதன்பின்னர், அரசியல் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல, தேசிய அரசாங்கமொன்றை நிறுவி, பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்குவதற்கும் கலந்துரையாடப்படுவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு த…
-
- 9 replies
- 804 views
-