ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142884 topics in this forum
-
இலங்கை பொருளாதார நெருக்கடி: உச்சத்துக்கு சென்ற அத்தியாவசிய பொருட்களின் விலை - மக்கள் பரிதவிப்பு 8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கை பொருளாதார நெருக்கடியின் உச்சத்திற்கு சென்றுள்ள நிலையில், நாட்டிலுள்ள அடிமட்ட மக்கள் முதல் செல்வந்தர்கள் வரை அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் 2020ம் ஆண்டு கோவிட் தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், அரசாங்கத்தின் வசம் கையிருப்பிலிருந்த அந்நிய செலாவணி பாரியளவில் வீழ்ச்சி அடைந்தது. இதையடுத்து, இலங்கை பொருளாதார ரீதியில் படிப்படியாக பின்னடைவை சந்தித்து வந்த நிலையில், தற்போது நெருக்கடியின் உச்சத்தை தொட்டுள்ளது. அத்தியாவசிய…
-
- 0 replies
- 249 views
- 1 follower
-
-
”இலங்கை தொடர்பில் பிரிட்டனின் பயண ஆலோசனை தவறானது”: பீரிஸ்! இலங்கைக்கான பயண எச்சரிக்கையை விடுத்து பிரிட்டன் விடுத்துள்ள அறிவிப்பில் தவறுகள் காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். உலகளாவிய கொவிட் தொற்றுநோயின் விளைவாக நாட்டின் சுற்றுலாத் துறை புத்துயிர் பெறத் தொடங்கியுள்ள மற்றும் அதன் பொருளாதாரத்தை மறுசீரமைக்க வெளிநாட்டுப் பணம் தேவைப்படும் வேளையில், பயண ஆலோசனையில் தவறான தன்மைகள் நிலவும் பொருளாதார பாதிப்புகளை அதிகரிக்கக்கூடும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் இலங்கையிலுள்ள நடைமுறை யதார்த்தங்களை பிரதிபலிக்கும் வகையில் இலங்கை தொடர்பான பயண ஆல…
-
- 0 replies
- 202 views
-
-
பசில், ஜெயசங்கரையும் சந்தித்தார்! March 17, 2022 உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ இந்திய வௌிவிவகார அமைச்சர் ஜெயசங்கருடன் நேற்று (16.03.22) பிற்பகல் கலந்துரையாடியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார பங்காளித்துவம் தொடர்பில் பயனுள்ள கலந்துரையாடல் இடம்பெற்றதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்நாட்டு மக்களின் தேவைகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய வெளிவிவகார செ…
-
- 0 replies
- 248 views
-
-
ஜனாதிபதி செயலகத்தை.. முற்றுகையிட்ட, போராட்டம். ############## ################# ################## ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பம் ! ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அரசாங்கத்தின் துாரநோக்கற்ற கொள்கைகள் மற்றும் தீர்மானங்களினால் நாட்டு மக்கள் பல்வேறு நெருக்கடிக்கு முகம் கொடுப்பதாக தெரிவித்தே போராட்டம் இடம்பெறுகின்றது. இந்நிலையில், அரசாங்கத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில், “முழு நாடும் அழிவில், பொறுத்தது போதும், ஒன்றாய் அணித்திரளுங்கள்” என்ற தொனிப்பொருளின் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. https://athava…
-
- 10 replies
- 845 views
-
-
பெரும் அச்சுறுத்தலில் மன்னார் மாவட்டம் - ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ கவலை மன்னாரில் தற்பொழுது பேசும்பொருளாக இருந்துவரும் சட்டவிரோத மண் அகழ்வு, காற்றாலை போதைவஸ்துப் பாவனையுடன் மன்னார் தீவுக்கு எதிர்காலத்தில் பெரும் அச்சுறுத்தல் காணப்படுவதால் அனைவரும் ஒன்றுதிரண்டு போராட வேண்டிய கட்டாயம் உள்ளது என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு பிடேலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தனது திருமடல் ஊடாக அழைப்பு விடுத்துள்ளார். மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு பிடேலிஸ் லயனல் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க மக்களுக்கு தவக்காலத்தில் வருடந்தோறும் எழுதும் திருமடலில் மேலும் தெரிவித்திருப்பதாவது, மன்னார் மாவட்டத்தில் இன்று பேசுபொருளாக சட்டவிரோத மண் அக…
-
- 1 reply
- 278 views
-
-
(எம்.மனோசித்ரா) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியாது. நல்லாட்சி அரசாங்கத்தைப் போன்று இலங்கையை மீண்டும் சர்வதேசத்திடம் காட்டிக் கொடுக்க நாம் தயாராக இல்லை என்று வெளிநாட்டலுவலகள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட் இலங்கை தொடர்பில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் 85 சதவீதமானவை இலங்கையின் உள்ளக விவகாரங்களுடன் தொடர்புடையவையாகும். இலங்கை ஐ.நா.வின் அங்கத்துவ நாடாகவுள்ளது என்பதற்காக உள்ளக விவகாரங்களில் தலையிடும் உரிமை அதற்கு கிடையாது என்றும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் சு…
-
- 2 replies
- 514 views
-
-
ல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) இன்று தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலரொன்றுக்கு எதிரான ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்துவரும் நிலையில், அதன் வெகுவான வீழ்ச்சி இன்று பதிவானது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் நாளாந்த வெளிநாட்டு நாணயமாற்று வீதத்தின் அடிப்படையில், இன்று புதன்கிழமை அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 264.66 ரூபாவாகவும் விற்பனை விலை 274.99 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அமெரிக்க டொலரொன்றுக்கு எதிரான ரூபாவின் பெறுமதி நேற்று 269.99 ரூபாவாகக் காணப்பட்ட நிலையில், இன்றைய தினம் ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இது 25 வருடங்களில், இலங்கை ரூபா கண்டுள…
-
- 0 replies
- 192 views
-
-
Published by T. Saranya on 2022-03-16 12:18:30 யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 13 வயது சிறுவனுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் புரிந்த குற்றச்சாட்டில் கைதான ஆசிரியருக்கு சாவகச்சோி நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. 13 வயதான குறித்த சிறுவனுக்கு ஆண் ஆசிரியர் ஒருவர் ஓரின பாலியல் தொடர்பான துன்புறுத்தல்களை புரிந்து வந்த நிலையில் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்ட குறித்த சிறுவன் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவன் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் குறித்த ஆசிரியர் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டு, நேற்…
-
- 3 replies
- 487 views
-
-
நேற்று மட்டும்... 83.04 பில்லியன் ரூபாயை, அச்சிட்டது மத்திய வங்கி இலங்கை மத்திய வங்கி நேற்று (செவ்வாய்க்கிழமை) 83.04 பில்லியன் ரூபாயை அச்சிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை கடந்த திங்கட்கிழமை 22.27 பில்லியன் ரூபாயை இலங்கை மத்திய வங்கி அச்சிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் மொத்தம் 229 பில்லியன்களை இலங்கை மத்திய வங்கி அச்சிட்டுள்ளது. https://athavannews.com/2022/1272075
-
- 7 replies
- 523 views
-
-
(எம்.ஆர்.எம்.வசீம்) சமையல் எரிவாயு இல்லாமை காரணமாக சிற்றுண்டிச்சாலைகளில் உணவு வசதிகளை நாளை முதல் முற்றாக நிறுத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், நாட்டில் சமையல் எரிவாயு விநியோகத்தை மேற்கொண்டுவரும் பிரதான இரண்டு நிறுவனங்களும் தங்களின் கைவசம் இருந்த தொகை முடிவுற்றுள்ளதால் சமையல் எரிவாயு விநியோகத்தை நிறுத்துவதாக தெரிவித்திருக்கின்றன. இதன் காரணமாக பாரியதொரு நெருக்கடிக்கு சிற்றுண்டிச்சாலைகள் முகம்கொடுக்கவேண்டி ஏற்படுகின்றது. குறிப்பாக சிற்றுச்சாலைகளை மூடிவிடவேண்டிய நிலை ஏற்பட்டால் சுமார் 5 இலட்சம் பேரின் தொழில் இல…
-
- 0 replies
- 315 views
-
-
ஜனாதிபதி கோட்டாவின் உரைக்காக மின்வெட்டு நேரத்தில் மாற்றம் ! இன்றைய தினமும் நாட்டில் சுழற்சி முறையில் மின்தடை அமுலாக்கப்படவுள்ளது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, A B C D E F G H I J K L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் இரண்டரை மணி நேரம் தடைப்படும். அத்தோடு மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதிக்குள், 2 மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. P Q R S T U V W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், காலை 8.30 முதல் மாலை 5.30 வரையான காலப்பகுதிக்குள் 3 மணி நேரம் மின்வெட்டு அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் மாலை 5.30 முதல் இரவு 11 மணி …
-
- 1 reply
- 227 views
-
-
யாழ். நெடுந்தீவில் சிறுமியைக் கொலைசெய்த குற்றவாளியே ஊர்காவற்றுறையில் கர்ப்பிணிப் பெண்ணையும் கொலை செய்துள்ளார் - விசாரணையில் அம்பலம் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பகுதியில் 2017 ஜனவரி 24 ஆம் திகதி கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட 7 மாத கர்ப்பிணித் தாயின் வழக்கு விசாரணைகள் 5 ஆண்டுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் முதன்மை சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நெடுந்தீவில் 12 வயதுச் சிறுமியை வன்புணர்ந்து கொலை செய்த குற்றத்துக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டார். ஊர்காவற்றுறை பகுதியில் 2017 ஜனவரி மாதம் 24 ஆம் திகதி பட்டப்பகலில் வீடு புகுந்து ஒரு பிள்ளையின் தாயும் ஏழு மாத கர்ப்பி…
-
- 7 replies
- 748 views
-
-
செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. அமர்வு சவாலாக இருக்கும் – ஜயநாத் கொலம்பகே மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரை இலங்கை வெற்றிகரமாக எதிர் கொண்டதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார். இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து தம்மால் உண்மைகளை முன்வைக்கவும் அது குறித்து விளக்கவுமளிக்கவும் முடிந்தது என்றும் அவர் தெரிவித்தார். யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகக் கூறுவதற்கு பதிலாக உள்நாட்டு அரசியல் விவகாரங்கள் குறித்தே ஆணையாளரின் அறிக்கை கவனம் செலுத்தியது என சுட்டிக்காட்டினார். அத்தோடு ஊடாடும் உரையாடலின் போது 31 நாடுகள் இலங்கை தொடர்பான கருத்துக்களை வெளிப்படுத…
-
- 1 reply
- 192 views
-
-
சமையல் எரிவாயு விநியோகம் நிறுத்தம் – மக்களுக்கு மேலும் அடி ….! சமையல் எரிவாயு விநியோகத்தை இலங்கையின் பிரதான எரிவாயு விநியோக நிறுவனங்களான லாப் மற்றும் லிட்ரோ ஆகியன நிறுத்தியுள்ளன. தமக்கான இருப்புக்கள் கிடைகாத்தமை காரணமாக விநியோகத்தை நிறுத்தியுள்ளதாக குறித்த இரு நிறுவங்களும் அறிவித்துள்ளன. தற்போது இலங்கை சந்தையில் பற்றாக்குறையை சந்தித்து வருவதாக லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதேவேளை நாடளாவிய ரீதியில் குறித்த நிலையங்களுக்கு முன்பாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1272055
-
- 2 replies
- 229 views
-
-
இலங்கையின் ஒரே நம்பிக்கையாகியுள்ள இந்தியா இலங்கையில் ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு இந்தியா தொடர்ந்தும் ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றது. குறிப்பாக இந்த ஒத்துழைப்புகளானது அரசாங்கத்தின் பேரில் வழங்கப்படுவதுடன் மேலும் பல திட்டங்கள் நேரடியாகவும் முன்னெடுக்கப்படுகின்றது. மறுப்புறம் சர்வதேச அரங்கிலும் பல்வேறு ஒத்துழைப்புகளை இலங்கைக்கு இந்தியா வழங்கி வருகின்றது. தற்போதைய நிலையில் இலங்கை அரசாங்கத்தின் நம்பிக்கையாக இந்தியா உள்ளதாக குறிப்பிடலாம். ஊதாரணமாக நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் 500 மில்லியன் டொலர் கடனுதவியை இந்தியா வழங்கியுள்ளது. எக்ஸிம் வங்கி ஊடான இந்த கடன் தொகையிலிருந்து கொள்வனவு செய…
-
- 1 reply
- 197 views
-
-
பெரும்பாலான உறவுகள் மரணச் சான்றதழையோ, இழப்பீட்டையோ எதிர்பார்க்கவில்லை – தியாகி ருவன்பத்திரன பெரும்பாலான உறவுகள் மரணச் சான்றதழையோ, இழப்பீட்டையோ எதிர்பார்க்கவில்லை என சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய பிராந்திய ஆய்வாளரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான தியாகி ருவன்பத்திரன தெரிவித்தார். காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தில் ‘காணக்கிடைக்கவில்லை’ எனும் சான்றிதழைப் பெற்றுக்கொண்டவர்களின் குடும்ப மீள்வாழ்விற்காக ஒருமுறை மாத்திரம் ஒரு இலட்சம் ரூபாயைச் செலுத்துவதற்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியது. அரசாங்கத்தின் குறித்த முடிவு தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், உள்ளக மற்றும் சர்வதேச ரீதியில் அரசாங்கம் ஒன்றுக்கொன்று முரணான கருத்துக…
-
- 0 replies
- 169 views
-
-
தனியார் பஸ் சேவையை தொடர்ந்து மேற்கொள்வதா என்பதை 3 தினங்களில் அறிவிப்போம் - அகில இலங்கை பஸ் உரிமையாளர்களின் சங்கம் (எம்.ஆர்.எம்.வசீம்) தற்போது அதிகரித்திருக்கும் பஸ் கட்டணம் போதுமானதல்ல. அதனால் மூன்று தினங்களுக்கு பஸ் சேவையில் ஈடுபட்டு, அதனால் ஏற்படும் நட்டத்தை சுமக்க முடியாதுபோனால் எமது தீர்மானத்தை எதிர்வரும் 3 தினங்களில் அரசாங்கத்துக்கு அறிவிப்போம் என அகில இலங்கை பஸ் உரிமையாளர்களின் சங்கத்தின் செயலாளர் அன்ஜன பிரயன்ஜித் தெரிவித்தார். தற்போது அதிகரிக்கப்பட்டிருக்கும் பஸ் கட்டணம் தொடர்பாக தனது சங்கத்தின் நிலைப்பாட்டை தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதை …
-
- 0 replies
- 121 views
-
-
இலங்கை விரோத போக்கு ஜெனிவாவில் தொடர்கிறது - வெளிநாட்டலுவல்கள் அமைச்சு (எம்.மனோசித்ரா) நாட்டில் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை ஸ்திரப்படுத்துவதை முன்னெடுப்பதை இலக்காகக் கொண்டு, தொடர்ச்சியான தேசிய செயற்பாடுகளை ஆரம்பித்து நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் , ஜெனிவாவில் இலங்கைக்கு விரோதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனவே இது குறித்து இலங்கையின் நிலைப்பாடு மற்றும் கொவிட்-19 தொடர்பான சவால்களுக்கு மத்தியிலும் இலங்கை இந்த விடயத்தில் அடைந்து கொண்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஆகியன குறித்து ஐ.நா. உறுப்பு நாடுகள் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட செயற்பாட்டாளர்கள் உட்பட ஜெனிவாவில் உள்ள பங்குதாரர்களுக்கு விளக்கமளிப்பது ம…
-
- 0 replies
- 448 views
-
-
நாடளாவிய ரீதியில் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு நாடளாவிய ரீதியில் எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகளிலிருந்து 15ஆம் திகதி நள்ளிரவு முதல் விலகுவதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையின் எரிபொருள் போக்குவரத்தில் 80% தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த நிலையில், போக்குவரத்துக்கான கட்டணத்தை 60% அதிகரிக்குமாறு கோரி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கத்தினர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். இதற்கு பதிலளித்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், “டீசல் விலை அதிகரிப்பை மாத்திரம் குறித்த கட்டண அதிகரிப்பின் போது கருத்திற்கொள்வத…
-
- 0 replies
- 119 views
-
-
சமையல் எரிவாயு விநியோகத்தை இலங்கையின் பிரதான எரிவாயு விநியோக நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன சமையல் எரிவாயு விநியோகத்தை இலங்கையின் பிரதான எரிவாயு விநியோக நிறுவனங்களான லாப் மற்றும் லிட்ரோ ஆகியன நிறுத்தியுள்ளன.தமக்கான இருப்புக்கள் கிடைகாத்தமை காரணமாக விநியோகத்தை நிறுத்தியுள்ளதாக குறித்த இரு நிறுவங்களும் அறிவித்துள்ளன.தற்போது இலங்கை சந்தையில் பற்றாக்குறையை சந்தித்து வருவதாக லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.இதேவேளை நாடளாவிய ரீதியில் குறித்த நிலையங்களுக்கு முன்பாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் எரிவாயு தட்டுப்பாடு நிலைமையினை தொடர்ந்து மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இதுவரை சமையல…
-
- 0 replies
- 135 views
-
-
எதிர்வரும் புதன்கிழமை, நாட்டு மக்களுக்கு... உரையாற்றுகின்றார், ஜனாதிபதி கோட்டா! எதிர்வரும் புதன்கிழமை (16) நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரையாற்றுவார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம் தட்டுப்பாடு என மக்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் அதற்கான தீர்வு குறித்து நாட்டு மக்களிடத்தில் அவர் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. https://athavannews.com/2022/1271876
-
- 2 replies
- 299 views
-
-
நாட்டில் தற்போது மக்கள் அனுபவித்து வரும் கஷ்டங்களை பார்க்கும் போது, விடுதலைப் புலிகள் அல்லது பிரபாகரன் நாட்டை கைப்பற்றி, அவர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டிருந்தால், மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என எண்ண தோன்றுவதாக சிங்கள நடிகர் கயான் விக்ரமதிலக்க தெரிவித்துள்ளார். தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள காணொலி பதிவில் அவர் இதனை கூறியுள்ளார். நான் மிகவும் யோசித்து பேசுகிறேன். இப்படி பேச வேண்டும் என்று நினைக்கவில்லை. நினைத்தது போல் எதுவும் நடக்கவில்லை. அரசியல் என்பது முற்றிலும் வெறுத்து போயுள்ளது. தற்போதைய அரசாங்கத்தை பதவிக்கு கொண்டு வர கயான் விக்ரமதிலக்க என்ற நானும் பெரும் பங்களிப்பை செய்தேன். சரள மொழியில் கூறுதென்றால் கடைக்கு போனேன்.…
-
- 0 replies
- 131 views
-
-
புலம்பெயர் இலங்கையர்களுக்கு முதலீடுகளை மேற்கொள்வதற்கு எந்த தடையும் இல்லை - வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா (எம்.எம்.சில்வெஸ்டர்) வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு எந்த தடையும் இல்லை. இலங்கையில் முதலீடு செய்வதற்கு எந்த சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை என வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். அரச நிறுவனங்களில் சேவைகளைப் பெறுவதற்காக வருகின்ற தமிழ் பேசும் சமூகத்தினர் இனிவரும் காலங்களில் எந்தவித இடையூறுகளுமின்றி தமிழ் மொழி மூலமான சேவைகளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும் என அவர் மேலும் கூறினார். இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் இணைத்துக்கொள்வதற்காக பொலிஸ் பயி…
-
- 2 replies
- 340 views
-
-
இலங்கையில் வங்கிகளில் இருக்கும் பணத்தின் பெறுமதியானது மிக மோசமாக வீழ்ச்சியடைந்து விட்டது என பிரித்தானியாவில் இருக்கக்கூடிய அரசியல் மற்றும் பொருளாதார ஆய்வாளர் இதயச்சந்திரன் தெரிவித்தார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். இதன்போது, புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து கணிசமானோரின் பணம் இலங்கையில் வைப்பிலிடப்பட்டிருக்கிறது அல்லது இலங்கையில் அந்த பணம் அதிகரிக்கிறது என்கிற போது, அதிகளவில் இவ்வாறான பணத்தை இலங்கைக்கு அனுப்பக்கூடிய இலங்கையர்களின் நிலைமை தொடர்பில் புலம்பெயர்ந்திருக்க கூடிய ஒரு தமிழராக நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், ஆனால் போடப்பட்ட முதலின் பெறுமத…
-
- 0 replies
- 309 views
-
-
(எம்.மனோசித்ரா) இலங்கையில் மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமையைக் கருத்திற் கொண்டு , இங்கிலாந்து சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இலங்கைக்கான பயண ஆலோசனையில் அந்நாடு சில திருத்தங்களை செய்துள்ளது. அதற்கமைய இறக்குமதிக்கு செலுத்துவதற்கு கடும் டொலர் தட்டுப்பாடு காரணமாக, மருந்துகள், எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளின் பற்றாக்குறையுடன் இலங்கையில் எச்சரிக்கை அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளது. அத்தியாவசிய பொருள் விற்பனை நிலையங்கள் , சமையல் எரிவாயு மற்றும் மருந்தக வளாகங்களில் பொருட் கொள்வனவிற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். அது மாத்திரமின்றி உள்ளுராட்சி அதிகாரிகளின் தீர்மானங்களுக்கமைய அடிக்கடி மின் துண்டிப்பும் ஏ…
-
- 1 reply
- 255 views
-