ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142887 topics in this forum
-
மோடியிடம் சம்பந்தன் வினயமாக கோரினார் "இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் இலங்கைக்கான தமது விஜயத்தின்போது தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வு தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்" என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவிடம் நேரில் வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். அதேவேளை, தமிழர்கள் இங்கு எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இந்தியப் பிரதமரிடம் பல விடயங்களை நேரில் பேசத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆவலாக உள்ளது எனவும் சம்பந்தன் குறிப்பிட்டார். நேற்று மாலை 3.30 மணியளவில் கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, துணைத் தூதுவர் வினோத் ஜேக்கப், அரசியல்…
-
- 3 replies
- 394 views
-
-
சுப்பர் மடத்தில் உள்ளவர்களோடு நான் கதைக்க போனால் அவர்களது உடம்புதான் புண்ணாகும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இன்று மானிப்பாயில் புதிதாக அமைக்கப்பட்ட பனை தென்னை வள அபிவிருத்தி சங்கங்களின் கொத்தணியின் பிரதான அலுவலகத்திற்கான கட்டடத்தை திறந்து வைத்த பின்னர் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது, அமைச்சர் சுப்பர் மடம் என்ற பெயரை ஏளனம் செய்வது போல "சூப்பர் மடம்" என்று கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது. அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், சூப்பர் மடத்தில் உள்ளவர்கள் அன்றையதினம் குடித்துவிட்டு வெறியில் கூத்தடிக்கும்போது நான் அவ்விடத்திற்கு சென்றுவிட்டு திரும்பி வந்தேன். அப்போது ஒரு ஊடகவியலாளர் " ஏன் நீங்கள் திரும்பிச் செல…
-
- 1 reply
- 260 views
-
-
எனது ஆட்சிக்காலம் ஏழை மக்களுக்கு சுபீட்சமுள்ள ஒரு காலமாக இருந்தது – மைத்திரி எனது ஆட்சிக்காலம் ஏழை மக்களுக்கு சுபீட்சமுள்ள ஒரு காலமாக இருந்தது. அன்றாட தேவைக்களுக்கான பொருட்களின் விலைகளை அதிகரிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட மாநாடு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், “வன்னி மாவட்டத்துடன் நான் சம்பந்தமுள்ளவனாக இருக்கின்றேன். இதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. நான் ஜனாதிபதியா…
-
- 3 replies
- 322 views
-
-
யாழ் சென்ற கொழும்பு மாநகர சபை முதல்வர், உறுப்பினர்கள் February 19, 2022 கொழும்பு மாநகர முதல்வர் ரோஸி சேனநாயக்க மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள் யாழ்ப்பாண பொதுசன நூலகத்தினை பார்வையிட்டு ஒரு தொகுதி புத்தகங்களையும் நூலகத்துக்கு கையளித்துள்ளனர். யாழ்ப்பாண பொதுசன நூலகத்திற்கு வருகை தந்த கொழும்பு மாநகர முதல்வர் அடங்கிய குழுவினரை யாழ்ப்பாண மாநகர பிரதி முதல்வர் துரைசாசா ஈசன், மாநகர சபை ஆணையாளர் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் வரவேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2022/173175
-
- 17 replies
- 1.2k views
-
-
கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு சந்திரகுமார் கடிதம் கிளிநொச்சி மாவட்டத்தில் சமீப காலமாக இடம்பெற்று வருகின்ற பாரியளவிலான சட்டவிரோத மணல் அகழ்வை தடுத்து நிறுத்தி மாவட்டத்தை எதிர்கால ஆபத்திலிருந்து பாதுகாக்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளருமான மு. சந்திரகுமார் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 18.02.2022 திகதியிடப்பட்டு அவர் எழுதிய கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 2% குறைவான பிரதேசத்தை தன்வசம் வைத்திருக்கும் கிளிநொச்சி மாவட்டம், தீவின் மொத்த நெல்லுற்பத்தியில் முதல் பத்து இடங்களுக்குள் எப்போதும் தேர்வாகியிருக்கிறது. அரி…
-
- 1 reply
- 310 views
-
-
இறுதிமூச்சு இருக்கும்வரை மக்களுக்கான எனது பணி தொடரும் – திகாம்பரம் ” மலையக மக்களுக்கு சேவையாற்றவே நான் அரசியலுக்கு வந்தேன். இறுதிமூச்சு இருக்கும்வரை மக்களுக்கான எனது பணி தொடரும். மலையக பெருந்தோட்ட மக்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரத்தின் அமைச்சின் காலகட்டத்தில் அட்டன் மல்லியப்பு புருட்ஹில் பகுதியில் ஏற்படுத்தப்பட்ட புதிய வீடமைப்பு திட்டத்திற்கான மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்கும் நிகழ்வு 19.02.2022 அன்று இடம்பெற்றது. …
-
- 5 replies
- 296 views
-
-
தொடரும் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் – நேற்றும் 06 பேர் கைது February 19, 2022 இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள் ஒரு படகுடன் நேற்று இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். காரைநகர் கோவளம் கடற்பரப்பில் நேற்று இரவு இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதில் இருந்த 6 இந்திய மீனவர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களையும் படகினையும் கடற்படையினர் மயிலிட்டி மீன் பிடி துறைமுகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். https://globaltamilnews.net/2022/173165
-
- 1 reply
- 337 views
-
-
37,000 மெற்றிக் தொன் பெற்றோலுடன் கொழும்பு வந்தடைந்த கப்பல் !! 37 ஆயிரம் மெற்றிடக் தொன் பெற்றோல் தாங்கிய கப்பல் ஒன்று (சனிக்கிழமை) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.சிங்கப்பூர் முகவர் மூலம் வழங்கப்பட்ட குறித்த எரிபொரு அடங்கிய கப்பல் இந்தியாவில் இருந்து இலங்கையை வந்தடைந்துள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை நாளையும் 37 ஆயிரத்து 500 மெற்றிக் தொன் டீசல் தாங்கிய கப்பலொன்று நாட்டை வந்தடைடையும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் அதற்கான கொடுப்பனவை செலுத்தும் பணிகள் இடம்பெறுவதாகவும் குறிப்பாக இலங்கை மத்திய வங்கிக்கு உரிய கொடுப்பனவுகளை ரூபாயில் செலுத்தப் பட்டுள்ளதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது. https://athavannews.com/2022/1267842 #####…
-
- 0 replies
- 212 views
-
-
கச்சதீவு திருவிழாவில் பக்தர்களுக்குத் தடை!! –சர்ச்சையைத் தடுக்க எடுக்கப்பட்ட தீர்மானம்!! அடுத்த மாதம் நடைபெறவுள்ள கச்சதீவு அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் பக்தர்கள் கலந்துகொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று மயிலிட்டி துறைமுகத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்த கடற்றொழில் அமைச்சர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். முன்னதாக இலங்கைப் பக்தர்கள் கலந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, பக்தர்கள் எவரும் கலந்துகொள்ள முடியாது என்று கொழும்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய உற்சவம் நடைபெறவுள்ளது. திருவிழாவுக்கான முன்னாயத…
-
- 5 replies
- 513 views
-
-
பயங்கரவாதிகளை நினைவுகூர அனுமதியில்லை – தனிப்பட்ட வகையில் நினைவுகூரலாம்! February 19, 2022 பயங்கரவாதிகளை நினைவுகூர அனுமதியில்லை என்றும், எனினும், போரின்போது உறவினர் ஒருவர் உயிரிழந்திருப்பாராயின், தனிப்பட்ட ரீதியில் அவரை நினைவுகூர அனுமதி வழங்க முடியும் என்றும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றனவா என்பது குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது. முந்தைய மனித உரிமைகள் ஆணைக்குழுக்கள் மற்றும் ஏனைய குழுக்களினது தீர்மானங்களின் மதிப்பாய்வு மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாவது இடைக்கால அறிக்கை, உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டீ. நவாஸால் நேற்று (18) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வை…
-
- 1 reply
- 267 views
-
-
தமிழரசு கட்சியின் இளைஞர் அமைப்பின் மேலதிக செயலாளரை கடத்த முயற்சிக்கப்பட்டதா? வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு விளக்கம் (எம்.மனோசித்ரா) இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அமைப்பின் மேலதிக செயலாளர் நிதன்ஷன் என்ற நபரை வெள்ளை வேனில் வந்த புலனாய்வு பிரிவினரால் கடத்த முயற்சிக்கப்பட்டதாக சாணக்கியன் ராஜபுத்திரன் ராசமாணிக்கம் என்ற பெயரில் நபரொருவரின் புகைப்படத்துடன் கூடிய டுவிட்டர் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது, கல்முனை பொலிஸ் பிரிவில் இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அமைப்பின் மேலதிக செயலாளர் நிதன்ஷன் என்ற நபரை வெள்ளை வ…
-
- 0 replies
- 274 views
-
-
சிவராத்திரிக்கு நாட்டின் சகல பாகங்களிலிருந்தும் பக்தர்கள் வர அனுமதி February 18, 2022 மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வுகளுக்காக நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தர உள்ள நிலையில் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்தார். எதிர்வரும் 1 ஆம் திகதி (01-03-2022) மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வுகள் இடம்பெற உள்ள நிலையில் முன் ஆயத்த நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் அவசர கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை (18) மாலை 3 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. …
-
- 0 replies
- 221 views
-
-
சர்வதேசத்திற்கு அனுப்ப தயாராகும் மலையக மக்களின் அரசியல் ஆவணம்! தமிழ் முற்போக்கு கூட்டணியின் கோரிக்கையின் பேரில், கண்டி சமூக அபிவிருத்தி மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் பி. முத்துலிங்கம் மற்றும் சமூக செயற்பாட்டாளர் கௌதமன் பாலசந்திரன் ஆகியோரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்திய வம்சாவளி மலையக மக்களின் அரசியல் ஆவண வரைபு, பெப்ரவரி 21ம் திகதி கொழும்பில் கலந்துரையாடப்பட்டு இறுதி வடிவம் பெறும். இந்த கலந்துரையாடலில் தமிழ் முற்போக்கு கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள், கூட்டணி கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் மலையக சிந்தனையாளர்கள் கலந்துக்கொள்வார்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். …
-
- 2 replies
- 304 views
-
-
தமது வீடுகளுக்கு செல்லும் 47 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டிருந்த 47 இந்திய மீனவர்கள் இன்று காலை சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப் பட்டினம் பகுதியில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் மீன்பிடிக்க சென்ற 56 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்ட 56 மீனவர்களும் கடந்த மாதம் 25ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட இந்த 56 மீனவர்களில் 9 மீனவர்கள் மட்டும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு விமானம் மூலம் தமிழகம் அழைத்து வரப்பட்டனர். இந்த நிலையில் இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப…
-
- 2 replies
- 312 views
-
-
ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் வழக்கிலிருந்து, விடுவிக்கப்பட்டார் பூஜித் ஜயசுந்தர! ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காதது தொடர்பில் தொடரப்பட்டுள்ள வழக்குகளில் இருந்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நாமல் பலல்லே, ஆதித்ய படபெந்திகே மற்றும் மொஹமட் இர்ஷதீன் ஆகிய மூவரடங்கிய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழு இன்று(வெள்ளிக்கிழமை) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க தகவல் கிடைத்தும் நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக அவர் மீது குற்றவியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தது. இதேவேளை, ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காதது தொடர்பில் தொடரப்பட்டுள்ள வழக்குகளில…
-
- 1 reply
- 293 views
-
-
எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்க உப செயலாளர் கேள்வி! உயிரோடில்லாதவர்களை கேட்டால் எப்படி தருவது என்று நீதி அமைச்சர் கேட்கின்றார் எனில் கையளிக்கப்பட்ட எமது உறவுகளிற்கு என்ன நடந்தது என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்க உப செயலாளர் ரத்தீஸ்வரன் கவிதா கேள்வி எழுப்பியுள்ளார். கிளிநொச்சியில் எதர்வரும் 20ம் திகதி இடம்பெறவுள்ள போராட்ட ஏற்பாடுகள் தொடர்பிலான ஊடக சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பகல் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உற…
-
- 2 replies
- 264 views
-
-
யாழில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த இளம் பெண்ணை யாழ் மாவட்ட குற்றத்தடுப்புபிரிவினர் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. அரியாலை, பூம்புகார் பகுதியை சேர்ந்த 33 வயதான பெண்ணொருவரே ஹெரோயினுடன் சிக்கினார். பிறருக்கு சந்தேகம் ஏற்படாத விதத்தில் தனது 3 மாத கைக்குழந்தையுடன் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று, யாழ் மாவட்ட செயலகத்திற்கு அண்மையான பிரதேசத்தில் வைத்து அவர் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். கைது செய்யப்படும் வேளை பெண்ணிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 கிராம் தூய ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் மீட்கப்பட்டது. இதன் பெறுமதி 5 தொடக்கம் 6 இலட்சம் ரூபாவாகும். …
-
- 9 replies
- 777 views
-
-
சிங்களவரின் மூதாதையர்கள் இலங்கைக்கு வெளியில் இருந்து வரவில்லை. ஆரியர் வருகை என்பது கட்டுக்கதை. உள்நாட்டிலேயே ஆதியில் இருந்து வந்த மக்கள் தான் தமிழர்களதும் சிங்களவர்களதும் மூதாதையர்கள். இரு இனங்களும் ஒரே மூதாதையர்களின் வழித்தோன்றல்கள் என்பது வரலாற்று ரீதியாக தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் தமிழர்கள் வாழ்ந்து வந்த காலம் இற்றைக்கு 3000 வருடங்களில் இருந்து இற்றை வரையிலாகும். எமது மூதாதையர்களில் சிலர் சிங்கள மக்களாக மாறியது சிங்களமொழி நடைமுறைக்கு வந்த கி.பி 6ம், 7ம் நூற்றாண்டுகளிலாகும் என கூட்டிக்காட்டியுள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் எம்.பி. 6 தமிழ் கட்சிகளின் கூட்டு ஏற்பாட்டில் இன்று யாழ்ப்பாணத்தில் நடந்த அ…
-
- 15 replies
- 898 views
-
-
‘தனக்கெதிரான போராட்டத்தை தானே ஒழுங்கமைத்ததாகச் சொல்லும் ஒரே அமைச்சர் டக்ளஸ்’ - எஸ். நிதர்ஷன் தனக்கெதிரான போராட்டத்தை தானே ஒழுங்கமைத்ததாகச் சொல்லும் ஒரே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவே என பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தினருடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். சுமந்திரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “அவர் பாவம் அவருக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவதை…
-
- 1 reply
- 328 views
-
-
சுதந்திர தினத்திற்கான செலவுகள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது! உணவு மற்றும் எரிபொருளின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கவலைகள் நிலவும் வேளையில் சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்காகச் செய்யப்பட்ட செலவுகள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது. தற்போதைய நிர்வாகம் காட்சிப்படுத்தப்பட்ட அரசாங்கமாக மாறியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரான ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். முப்படையினரின் பங்களிப்புடன் பெரும் செலவில் 74 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட…
-
- 0 replies
- 415 views
-
-
வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள போதிலும் உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை – சரத் வீரசேகரவின் மகனின் முகநூல் பதிவு குறித்து விசாரணை செய்யவேண்டும்- சமுடித்த தனது வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள போதிலும்தனக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என ஊடகவியலாளர் சமுடித்த சமரவிக்கிரம தெரிவித்துள்ளார். தனது தனிப்பட்டபாதுகாப்பு குறித்தும் குடும்பத்தின் பாதுகாப்பு குறித்தும் தான் கவலை கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை அமைச்சர் சரத்வீரசேகரவின் மகனின் முகநூல் பதிவை பொலிஸார் அலட்சியம் செய்ய முடியாது என தெரிவித்துள்ள ஊடகவியலாளர் ஊடக அறிக்கைகள் முகநூல்பதிவுகளி;ற்காக பலர் விசா…
-
- 0 replies
- 210 views
-
-
நிதியமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ள எரிசக்தி அமைச்சு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நாளொன்றுக்கு 551 மில்லியன் ரூபா நட்டத்தில் எரிபொருளை விற்பனை செய்வதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இதன் காரணமாக எரிபொருள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளை நீக்குமாறு எரிசக்தி அமைச்சு நிதியமைச்சிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ந்தும் நட்டத்தை ஈடுகட்ட எரிபொருள் விலையை அதிகரிக்க அனுமதி கோரியுள்ள பின்னணியிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=157680
-
- 0 replies
- 207 views
-
-
கொழும்பின் சில பகுதிகளில்... திடீர், என அமுலானது 36 மணித்தியால நீர்வெட்டு! கொழும்பின் சில பகுதிகளில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் 36 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. பிரதான குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாகவே இவ்வாறு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்காரணமாக கொழும்பு 1, 7, 9, 10, 12 ஆகிய இடங்களில் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை கொழும்பு 8 மற்றும் 11 ஆகிய பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1267642 ############# ############### …
-
- 0 replies
- 169 views
-
-
யாழ்ப்பாண மாவட்ட... வெளியீட்டு பணியகம் அங்குராப்பணம் செய்யப்பட்டது! அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாவட்ட வெளியீட்டு பணியகத்தின் அங்குராப்பண நிகழ்வு யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலமையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து யாழ். மாவட்ட ஊடகவியலாளர்களுடன் சிநேகித பூர்வ சந்திப்பும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், சுரேன் ராகவன் , உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2022/1267675
-
- 0 replies
- 204 views
-
-
குழந்தைகளுக்கான பால் போத்தல்கள், உணவுதட்டுகளில் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனம்! குழந்தைகளுக்கான பால் மற்றும் ஏனைய உணவுகள் வழங்கப்படும் போத்தல்கள் மற்றும் உணவுதட்டுகளில் பிஸ்பினோல் எனப்படும் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனம் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் நீதிக்கான கேந்திரம் ஒத்துழைப்பில், தேசிய ஊழல் ஒழிப்பு வலையமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்காக இலங்கை, பங்களாதேஸ், சீனா, பூட்டான், மலேசியா, இந்தோனேஷியா, ரஷ்யா மற்றும் தன்சானியா ஆகிய நாடுகளில் இந்த பால் போத்தல்கள் மற்றும் உணவு தட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது ஐரோப்பிய சங்கத்தின் உறுப்பு நாடுகளிலும், மலேசியா, சீனா மற்றும் இந்தோனேஷியா …
-
- 1 reply
- 343 views
-