ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142888 topics in this forum
-
இந்திய மீனவர்களின் படகுகளை ஏலம் விட உத்தரவு! January 23, 2022 இலங்கை கடற்படை வசமுள்ள இந்திய மீனவர்களின் படகுகளை வரும் பிப்ரவரி மாதம் 7ம் தேதி முதல் ஏலம் விடப்போவதாக இலங்கை மீன் வளத்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டின் நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றம் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதிகளில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை அரசால், வெளிநாட்டு மீன்பிடி தடைச்சட்டத்தின் கீழ் 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை 125 விசைப் படகுகள், 17 நாட்டுப் படகுகள் அரசுடைமை ஆக்கப்பட்டு, காரை நகர், காங்கேசன்துறை, மயிலட்டி, தலைமன்னார் உள்ளிட்ட கடற்படை முகாம்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் படகுகள் 5 ஆண்டுகளாக மீட்கப்…
-
- 1 reply
- 342 views
-
-
கொழும்பு துறைமுக நகர உல்லாச நடைபாதையில் புகைப்படம் எடுக்க கட்டணம்? கொழும்பு துறைமுக நகர உல்லாச நடைபாதையில் எடுக்கப்படும் தனிப்பட்ட செல்பி அல்லது வீடியோக்களுக்கு பொதுமக்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்று சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என கொழும்பு துறைமுக நகரம் தெரிவித்துள்ளது. இருப்பினும் புதிதாக திறக்கப்பட்ட துறைமுக நகர மெரினா உல்லாச நடைபாதையைப் பயன்படுத்த பொது மற்றும் தனியார் துறையினரிடமிருந்து முன்னெப்போதும் இல்லாத கோரிக்கைகள் வந்ததால், தனிப்பட்ட நிகழ்வுகள், தொழில்சார் மற்றும் வணிகப் படமாக்கல் மற்றும் புகைப்படம் எடுத்தல் ஆகியவற்றிற்காக கட்டண அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய படமாக்கல், புகைப்படம் எடுப்ப…
-
- 0 replies
- 344 views
-
-
பதவிக்காலத்தை நீட்டிக்க முயற்சியா ? நாமல் கருத்து ! தேர்தலை நடத்தாமல் ஜனாதிபதி அல்லது அரசாங்கத்தின் பதவிக் காலத்தை நீடிப்பதில் ஆளும் கட்சிக்கு விருப்பமில்லை என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் . கம்பஹா பிரதேசத்தில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் ஜனாதிபதிக்கு தனது பதவிக்காலத்தை நீடிக்கும் தீர்மானமில்லை. நாங்கள் உரிய நேரத்தில் தேர்தலை நடத்துவோம் எனவும் அவர் தெரிவித்தார் . அடுத்த 3 வருடங்களுக்கு மக்களுக்கான கடமைகளை நிறைவேற்றுவோம் . எங்களுக்கு பதவி காலத்தை நீடிக்க எந்த அவசியமும் இல்லை என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1263246
-
- 0 replies
- 440 views
-
-
ஹஸ்பர்_ சிங்களம், தமிழ் மொழி பாட கற்கை நெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது. இலங்கை தேசிய சமாதானப்பேரவையின் ஒருங்கிணைப்புடன் சேர்விங் கியூமனிட்டி பௌன்டேசன் மூலமாக ஏற்பாடு செய்த 90 மணித்தியாலய சிங்கள மற்றும் தமிழ் பாடநெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கே இச் சான்றிதழ் திருகோணமலையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இன்று (22) இடம் பெற்றது. "நல்லிணக்கத்திற்கான மொழி" எனும் தொனிப்பொருளில் இடம் பெற்ற இப்பாடநெறியானது சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் இரண்டாம் மொழி சிங்களத்தை மேம்படுத்தும் நோக்கிலும் அரச ஊழியர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,சர்வமத தலைவர்கள் ஆகியோர்களுக்காக நடாத்தப்பட்ட இப்பாடநெறியானது திருகோணமலை,அக்…
-
- 0 replies
- 235 views
-
-
இந்திய அடிப்படை அமைப்புக்களின் செயற்பாடுகள் குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விசனம் ஒற்றையாட்சிக்குள் முடக்கும் 13 வது திருத்த சட்ட விடயத்தில் இந்திய அடிப்படை அமைப்புக்கள் தமது எஜமான் விரும்பியதற்கு ஏற்ப செயற்பட தயாராக இருக்கிறார்க்கிறார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா மாவட்ட செற்பாட்டாளர்களுடன் நேற்று (21.01) மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியாவில் எமது கட்சி செயற்பாட்டாளர்களும், சிவில் அமைப்புக்களும், சிவில் செயற்பாட்டாளர்களு…
-
- 3 replies
- 452 views
-
-
மட்டக்களப்பில் அமைக்கப்படும் தொழிற்சாலைக்கு சூழலியலாளர்கள் எதிர்ப்பு January 22, 2022 மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புன்கைக்குடா பகுதியில் அமைக்கப்படும் தொழிற்சாலை மூலம் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகளை மட்டக்களப்பு மக்கள் எதிர்நோக்கும் நிலையேற்படும் என சூழலியலாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புன்னைக்குடா பகுதியில் ஆடைத் தொழிற்சாலைகளுக்கான நூல் சாயமிடும் தொழிற்சாலைகள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. முதலீட்டு வலயம் என்ற பெயரில் இந்திய நிறுவனம் ஒன்றின் மூலம் இந்த சாயமிடும் தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளது. இந்த தொழிற்சாலை இந்தியாவிலேயே அமைப்பதற்க…
-
- 0 replies
- 287 views
-
-
IMFடம் செல்வதா இல்லையா? பெப்ரவரிக்குள் அறிவிக்க வேண்டும்! January 22, 2022 அரசாங்கத்தை பாதுகாப்பது அல்லது வீழ்த்துவது அல்ல, தற்பொழுது செய்ய வேண்டிய விடயம். வீழ்ச்சியடைந்துள்ள பொது மக்களை பாதுகாப்பதே முக்கியமானது என நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வழமையான அரசியலில் ஈடுபடுதல் அல்லது கோசங்களை ஏற்படுத்துவதன் மூலம் நெருக்கடியை தீர்த்துக் கொள்ள முடியாது. தற்போது எதிர் நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதா? அல்லது வேறு எதுவும் முறையான தீர்வு உள்ளதா என்பதை பெப்ரவரி மாதத்திற்குள் அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள…
-
- 2 replies
- 331 views
-
-
13ஐ தமிழ் மக்களின் அரசியல் தீர்வாக ஏற்கவில்லை: தமிழ் கட்சி ஒன்று மக்களை குழப்புகிறது! சுரேந்திரன் குற்றச்சாட்டு தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக 13ஆவது திருத்தச்சட்டத்தை ஏற்று விட்டோம் என தமிழ் கட்சி ஒன்று மக்களை தவறாக வழிநடத்த முற்படுவதாக ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார். நேற்றைய தினம் யாழ் ரெலோ அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரே நிலைப்பாட்டில் உள்ள தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து 13ஐ ஏற்றுவிட்டார்கள் ஒற்றையாட்சிக்குள் தமிழர்களை அடகு வைத்து …
-
- 3 replies
- 377 views
-
-
இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு மேலும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்? அரசாங்கம் அண்மையில் பெற்ற கடன்கள் மற்றும் சலுகைகளுக்கு மேலதிகமாக மேலும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலரை இந்தியாவிடமிருந்து பெற்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சரான ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்திய வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடியதன் பின்னர் இலங்கைக்கு பாரிய உதவித் தொகை கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தேவையான உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் மற்றும் சீமெந்து ஆகியவற்றைக் கொள்வனவு செய்…
-
- 4 replies
- 490 views
-
-
நாளாந்தம் நான்கு மணிநேர மின்வெட்டு: எப்போது அமுலாகிறது? இலங்கைக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரத்தை வழங்குவதற்கான அமெரிக்க டொலர் கடனாக வழங்கப்படாவிட்டால், எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் நாளாந்தம் நான்கு மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நாட்டில் போதுமான அமெரிக்க டொலர்கள் இருப்பதாகவும், அரசாங்கத்துக்கு நெருக்கடியான பிரச்சினை எதுவும் இல்லை எனவும் பொதுமக்களிடம் கூறினால், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு தூண்டப்படமாட்டார்கள் எனவும் சுட்டிக்காட்டினார். இந்த பிரச்சினையை சமாளிக்க அனைத்து குடிமக்களும் தியா…
-
- 0 replies
- 153 views
-
-
மலையகத்தை, ’மா’ சலுகை தந்து பிரிப்பது ஏன்? 3 எஸ்.கணேசன் “மலையகத் தமிழர்களும் இலங்கையர்கள்தான் என்ற மனநிலை ஜனாதிபதிக்கு இருந்திருந்தால், எதற்காக அம்மக்களுக்கு மட்டும் கோதுமை மா சலுகையை வழங்கி பிரித்துக்காட்ட வேண்டும், எம்மவர்கள் யாசகர்களா?“ என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் கேள்வியெழுப்பியுள்ளார். நுவரெலியாவில் இன்று (22) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது கொள்கை விளக்க …
-
- 0 replies
- 161 views
-
-
யாழ்.பொலிசாரினால் சிரமதான பணி முன்னெடுப்பு யாழ்.பண்ணை பகுதியில் இன்று (சனிக்கிழமை) பொலிஸாரினால் சிரமதான பணி முன்னெடுப்பட்டிருந்தது. யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபரினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு சமூக பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதன் ஒரு அங்கமாக யாழ்.சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் வழிகாட்டுதலின் கீழ் யாழ் தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் நெறிப்படுத்தலில் பொலிஸாரினால் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது. https://athavannews.com/2022/1263141
-
- 34 replies
- 1.9k views
-
-
வனப்பிரதேசங்களுக்கு தீ வைப்பு - 190 குடும்பங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் வட்டவளை பகுதியில் இருவேறு வனப்பகுதிக்கு இனந்தெரியாதவர்கள் வைத்த தீயின் காரணமாக அப்பகுதியில் உள்ள சுமார் 190 குடும்பங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை இன்சரா பிரிவில் உள்ள சுமார் 200 ஏக்கர் பைனஸ் காட்டுப்பகுதிக்கு இன்று பகல் (22) திகதி இனந்தெரியாத விசமிகளால் காட்டுப்பகுதிக்கு தீ வைத்ததன் காரணமாக அந்த காட்டுப்பகுதியில் சுமார் 6 ஏக்கர் வரை தீயிக்கிரையாகியுள்ளன. குறித்த வனப்பிரதேசத்திற்கு கீழ்பகுதியில் அமைந்துள்ள இலக்கம் 101 வீடமைப்பு திட்டத்திற்கு இந்த வனப்பகுதியிலிரு…
-
- 0 replies
- 106 views
-
-
பாதுகாக்கபட்ட வலயங்களிலும் மீன் பிடியில் ஈடுபடலாம் - யாரும் தடுக்க முடியாது மக்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாத்து வலுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படுகின்ற விவசாய மற்றும் நீர்வேளாண்மை செயற்பாடுகள் தடைசெய்யப்பட முடியாதவை என்பதே தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வனப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களின் நியாயமான நோக்கங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மருதங்கேணி, வடமாராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் இன்று(22) நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்கள…
-
- 0 replies
- 113 views
-
-
ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஐ நிராகரிப்போம் 13ம் திருத்தத்திற்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிக்க அணி திரண்டு வருமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி துண்டுப்பிரசுரம் விநியோகித்துள்ளது. தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13 ம் திருத்தத்திற்குள் முடக்கம் சதி முயற்சியை முடியடிக்க அனைத்து தமிழ் மக்களதும் பூரணமான ஆதரவை கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் யாழ்ப்பாண நகர் பகுதியில் இன்றையதினம் இவ்வாறு துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது. -யாழ். நிருபர் பிரதீபன்- http://tamil.adaderana.lk/news.php?nid=156526
-
- 5 replies
- 505 views
-
-
நாட்டின் நான்கு முக்கிய நகரங்களில் காற்று மாசுபாட்டின் விகிதத்தில் அதிகரிப்பு! நாட்டின் நான்கு முக்கிய நகரங்களில் காற்று மாசுபாட்டின் விகிதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காற்று தர ஆய்வுகளின் மூத்த விஞ்ஞானியும் NBRO இன் சுற்றுச்சூழல் பணிப்பாளருமான சரத் பிரேமசிறி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளிலேயே காற்றின் தர சுட்டெண் மிகவும் மோசமான நிலையில் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் வடகிழக்கு வளிமண்டலத்திலுள்ள மாசுபட்ட மேகங்கள், நிலவும் வடகிழக்கு பருவக்காற்று காரணமாக உள்நோக்கி கொண்டு வரப்பட்ட மாசடைந்த மேகங்களின்…
-
- 0 replies
- 134 views
-
-
(ஆர்.ராம்) இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானியாவின் தென் ஆசிய மற்றும் பொதுநலவாய அமைப்புக்கான அமைச்சர் தரிக் அஹமட் பிரபுவிடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/131723/dsd.jpg அதுதொடர்பில் தெரியவருவதாவது, “தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரித்தானிய கொண்டிருக்கின்ற கரிசனைகளுக்கும், அதற்காக வழங்கி வரும் ஒத்துழைப்புக்களும் முழுமையான நன்றிகள். தமிழ் மக்கள் தமது கருமங்களை சுதந்திரமாக ஆற்றக்கூடியவாறாக இரண்டாக இருந்த நாட்டை 1933 ஆம் ஆண்டு பிரித்தானியாவே ஒன்றாக மாற்றியமைத்தது. அதன் பின்னரே தமிழ் மக்கள் இரண்டாம் தர பிரஜைகள் ஆக்கப்பட்டார்கள். தற்போது வரையில் …
-
- 12 replies
- 735 views
- 1 follower
-
-
Published by T. Saranya on 2022-01-21 15:12:54 பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு கொரோனா தொற்று நேற்று (20) காலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டதை அடுத்து, நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்போது சரத் வீரசேகர சிகிச்சைகளுக்காக நாராஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதார தரப்பினர் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வீரசேகரவுக்கு கொரோனா தொற்று | Virakesari.lk
-
- 0 replies
- 468 views
-
-
Published by T Yuwaraj on 2022-01-21 17:27:17 இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும், அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் - காரைநகர் பிரதேச சபையின் முன்பாக இன்று காலை காரைநகர் பிரதேச கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து இந்த போராாட்டத்தை முன்னெடுத்திருந்தன. போராட்டத்தை முன்னெடுத்த மீனவர்கள் அங்கிருந்து பிரதேச செயலகம் வரையில் பேரணியாக சென்றனர். பிரதேச செயலகத்திற்கு பேரணியாக சென்ற மீனவர்கள் பிரதேச செயலகம் ஊடாக ஜனாதிபதி , மற்றும…
-
- 4 replies
- 366 views
-
-
ராஜபக்ஷ குடும்பம் மிக விரைவில் வீடு செல்வது உறுதி இன்று நாட்டில் அரிசி, உரம், டொலர் தொடர்பான பிரச்சனைகள் எல்லாமே ஒரு நாடகம் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். இன்று மட்டக்களப்பில் இந்த ஆட்சியில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பாக துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கும் செயற்பாடு மட்டக்களப்பில் இடம்பெற்றது. மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் இந்த துண்டுப்பிரசுர விநியோகத்தில் ஈடுபட்டனர். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இவ்வாறு தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் ஒரு உரையை ஆற்றுவதாக இருந்தால் அது பலரிடம…
-
- 2 replies
- 570 views
-
-
காணாமல்போன மகனைத் தேடிய தாய் மரணம் - தொடரும் துயரம் வவுனியாவில் காணாமல்போன தனது மகனைத் தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக இன்று (21) மரணமடைந்துள்ளார். வவுனியா பூம்புகார் கல்மடு பகுதியை சேர்ந்த 78 வயதான கருப்பையா ராமாயி என்ற தாயே இவ்வாறு மரணமடைந்துள்ளார். இவரது வளர்ப்பு மகனான ரா.இந்திரபாலன் வயது 38 கடந்த 2007 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து வெள்ளைவேனில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார். அவரைத்தேடி வவுனியாவில் கடந்த 1799 நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சிமுறை உணவுத்தவிர்ப்பு போராட்டத்திலும் குறித்த தாய் கலந்துகொண்டு தனது மகனை கண்டுபிடித்து தர போராடியிருந்தார். இந்நிலையில் மகனை காணாமலேயே அவர் இன்று மரணமடைந்துள்ளமை குறிப்பி…
-
- 4 replies
- 417 views
-
-
குவைத் எயார்வேஸ் இலங்கைக்கான அனைத்து விமான சேவைகளையும் நிறுத்த தீர்மானம் குவைத் எயார்வேஸ் விமான சேவை இந்த வாரம் முதல் இலங்கைக்கான அனைத்து விமான சேவைகளையும் நிறுத்த தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. http://www.newswire.lk/wp-content/uploads/2022/01/download-53.jpeg விமான நிறுவனங்கள் "டொலர் நெருக்கடி" மற்றும் விமானங்களை அதிகரிக்க விமான நிறுவனங்களின் தயக்கம், உள்ளூர் அலுவலகங்கள் நிலுவைத் தொகையை செலுத்த மறுத்ததல் போன்ற காரணங்களால் குவைத் ஏயார்வேஸ் கூட்டுத்தாபனம், இந்த வாரம் முதல் இலங்கைக்கான விமானங்களை நிறுத்தியுள்ளதாக அல்-ஜரிடா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. எனவே, குவைத் ஏயார்வேஸ் கடந்த செப்டம்பரில் இலங்கைக்கான தனது நடவடிக்கைகளை உ…
-
- 2 replies
- 363 views
-
-
கிளிநொச்சி பொது வைத்தியசாலை தீ விபத்து: வைத்தியசாலை சாதனங்கள், மருத்துவ உபகரணங்களுக்கு பாரிய சேதம் (சி.எல்.சிசில்) கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் நேற்று (20) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் வைத்தியசாலையின் பல சாதனங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பாரியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றிரவு மருத்துவமனையின் ஒரு கட்டிடத்தில் முதலில் தீ பரவியது, பின்னர் பல இடங்களுக்கு வேகமாகப் பரவியது, மருத்துவமனை நிர்வாகக் குழுவால் உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் இராணுவத்துக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமைய கத்தின் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். தீ விபத்தின் போது நோயாளிகள் பாதுகாப்பான இட…
-
- 3 replies
- 504 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய ஆண்டில் சிறுபோகத்தில் இராணுவத்தையும் இணைத்து விவசாய உற்பத்திகளை அதிகரிப்பதே அரசாங்கத்தின் இலக்கு - கருணாகரன் January 21, 2022 (வரதன்) சேதனப்பசளை பாவனை பாரிய விவசாய புரட்சி திட்டமாகும்.இராணுவத் தினர் மூலம் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி சேதனப் பசளையை உற்பத் தியை மேற்கொள்வதே அரசாங்கத்தின் பசுமை செயலணி திட்டத்தை முன்னெடுக்கின்றது. நாட்டின் பாதுகாப்பு உணவு சுகாதாரம் ஆகிய பாதுகாப்புக்கள் முக்கியமானவை.உணவு பற்றாக்குறை நாட்டில் ஏற்பட கூடாது என்பதற்காகவே அரசாங்கம் இவ்வாறான திட்டங்களை முன்னெ டுக்கிறது.எமது விவசாயிகள் பாதிக்கப்படகூடாது என்பதற் காகவே இந்த பசுமை செயல்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது மட்டு மாவட்டத்தில் எதிர்வரும் சிறுபோகத்தை 33 …
-
- 3 replies
- 306 views
-
-
இரா.சாணக்கியனுக்கு கொரோனா தொற்று! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இரா.சாணக்கியனுக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறி தென்பட்ட நிலையில் அவர் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இந்தநிலையிலேயே இன்றைய தினம் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனது ட்விட்டர் பதிவில் இரா.சாணக்கியன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன், தம்மை தனிமைப்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், கடந்த சில நாட்களாக தம்முடன் தொடர்பைப் பேணியவர்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், பரிசோதனை மேற்கொள்ளுமாறும் இரா.சாணக…
-
- 0 replies
- 181 views
-