ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142888 topics in this forum
-
இலங்கை: விலைவாசி உயர்வால் மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாகப் பாதிப்பு - களநிலவரம் என்ன? அன்பரசன் எத்திராஜன் பிபிசி நியூஸ், கொழும்பு 8 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, விறகில் சமைக்கும் நிலுகா தில்ருக்சி "சமையல் எரிவாயுவின் விலை கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகரித்துவிட்டது, இதற்கு மேலும் எங்களால் சிலிண்டரை வாங்க முடியாது" என்கிறார் நிலுகா தில்ருக்சி. 31 வயதான நான்கு குழந்தைகளுக்குத் தாயான நிலுகா, தன் குடும்பத்தினருக்கு எப்போதும் சமையல் எரிவாயுவைப் பயன்படுத்திதான் சமைத்து வந்தார், ஆனால் தற்போது விறகு மட்டுமே ஒரே வழி என்கிறார். "என் குழந்தைகளுக்கு நான் த…
-
- 0 replies
- 416 views
- 1 follower
-
-
காங்கேசன்துறைக்கு சொகுசு ரயில் சேவை கொழும்பில் இருந்து காங்கேசன்துறைக்கு பயணிக்கும் பயணிகளுக்காக சகல வசதிகளுடன் கூடிய சொகுசு ரயில் சேவை இன்று (09) ஆரம்பிக்கப்பட்டது. இந்த ரயில் தினமும் காலை 5.10 மணிக்கு கல்கிசையில் இருந்து புறப்பட்டு அன்றைய தினம் மதியம் 12.17 மணிக்கு காங்கேசன்துறையை சென்றடையும். காங்கேசன்துறையில் இருந்து பிற்பகல் 1.15 மணிக்குப் புறப்பட்டு இரவு 8.25 மணிக்கு கல்கிசை சென்றடையும் என்று தெரிவிக்கப்படுகிறது. நவீன தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட இந்த ரயிலில் 10 பெட்டிகள் மற்றும் 02 பவர் என்ஜின்கள் உள்ளன. இந்த ரயிலில் பயணிகளுக்கு வசதியான இருக்கைகள், உணவருந்துவதற்கான பகுதி, டிவி சேவை மற்றும் நவீன கழிப்பறை வசதிகள் உள…
-
- 24 replies
- 1.6k views
-
-
Published by J Anojan on 2022-01-12 18:37:43 துறைமுகங்களை நிர்மாணித்து இந்த நாட்டை கடல்சார் கேந்திர நிலையமாக மாற்றி ஆசியாவின் பலம் வாய்ந்த நாடாக முன்னோக்கி செல்வோம் என்ற நம்பிக்கையை நாம் கைவிடவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தெற்காசியாவின் கடல்சார் கேந்திர நிலையமான கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் இன்று (12) முற்பகல் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படுவதனை குறிக்கும் வகையிலான நினைவு பலகை திறந்து வைக்கப்பட்டதுடன், நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வை…
-
- 7 replies
- 650 views
-
-
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாளை யாழில் போராட்டம்! உலகெங்கும் வாழும் தமிழர்கள் தைப்பொங்கல் திருநாளை கொண்டாடவுள்ள நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்கள் இரத்தக்கண்ணீர் வடித்து கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் அவர்கள் வாழ்வில் ஒளியேற்றவும் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டியும் விடுதலைப் பொங்கல் நாளை காலை 10 மணிக்கு முற்றவெளியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்தில் மதத் தலைவர்கள் அரசியல் தலைவர்கள் மக்கள் பிரதிநிதிகள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன் அழைப்பு விடுத்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவ்வா…
-
- 0 replies
- 186 views
-
-
கடுமையான நிதி நெருக்கடி- இந்தியாவிடம் 73ஆயிரம் கோடி கடன் கோரும் இலங்கை! கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கை இந்தியாவிடம் 73ஆயிரம் கோடி ரூபாய் கடன் உதவியை கோர திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக தெரிவித்த இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், சரக்கு இறக்குமதி செய்ய இந்தியாவிடம் ஒரு பில்லியன் டொலர் கடன் உதவி பெற பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இலங்கையின் சுற்றுலாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் கடந்த 2 ஆண்டுகளாக கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1261692
-
- 0 replies
- 203 views
-
-
தமிழ் கைதிகள் ஐவர் விடுதலை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த தமிழ் கைதிகள் ஐவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மெகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த குறித்த நபர்களை விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, சட்டமா அதிபரின் ஆலோசனையின்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். பளை, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1261557
-
- 3 replies
- 470 views
-
-
திருகோணமலை எண்ணெய் தாங்கி ஒப்பந்தத்திற்கு எதிராக மற்றுமொரு FR மனு தாக்கல் திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கி தொகுதியை அபிவிருத்திக்காக இந்திய நிறுவனத்திற்கு மாற்றும் அமைச்சரவை தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றில் மற்றுமொரு அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வண.எல்லே குணவன்ச மற்றும் வண.பெங்கமுவே நாலக தேரர்களால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி சார்பில் சட்டமா அதிபர், எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, அமைச்சரவை உறுப்பினர்கள், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், அதன் தலைவர், ட்ரின்கோ பெட்ரோலியம் டெர்மினல் பிரைவேட் லிமிடெட். பாதுகாப்பு செயலாளர் உட்பட 47 பேர் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். திருகோணமலை…
-
- 1 reply
- 235 views
-
-
யாழ்ப்பாணம் – பலாலி பிரதான வீதியில் மாநகர சபை வரவேற்பு பதாகை அமைப்பு! யாழ். மாநகரத்தினை அழகுபடுத்தும் வேலைத் திட்டத்தின் ஒரு அங்கமாக யாழ்ப்பாணம் – பலாலி பிரதான வீதியில், யாழ். மாநகர எல்லை ஆரம்பிக்கும் பகுதியில் வரவேற்பு பதாகை அமைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாநகர முதல்வர் மணிவண்ணனால் யாழ் மாநகர சபைக்குட்பட்ட பகுதியினை அழகுபடுத்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதன் ஒரு அங்கமாக யாழ்ப்பாணம் பலாலி பிரதான வீதியில் யாழ்ப்பாண மாநகரசபை அன்புடன் வரவேற்கின்றது என்னும் பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் வரவேற்பு பதாதை யாழ் மாநகரசபையில் இலட்சனையுடன் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை குறித்த ப…
-
- 1 reply
- 368 views
-
-
Published by T Yuwaraj on 2022-01-10 11:26:17 நாட்டில் தற்போது அனைத்து அத்தியாவசிய பொருட்கள் மற்றும் இதர பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது செய்தித்தாள்களை அச்சிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் காகிதங்களுக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது சகல பத்திரிக்கை தொழிற்துறையினரும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர். டொலர் தட்டுப்பாடு மற்றும், உலகளவில் காகிதங்களின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி என்பன இதற்கு பிரதான காரணங்களாகும் என தெரிவிக்கப்படுகின்றது. இதன்காரணமாக செய்தித்தாள்களை அச்சிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் காகிதங்களின் விலையானது, கடந்த மாதத்தை காட்டிலும் இந்த மாதம் …
-
- 14 replies
- 725 views
- 1 follower
-
-
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சிங்கள வாக்குமூலத்தில் கையெழுத்திட மனோ மறுப்பு – விசாரணை இடை நிறுத்தம் January 12, 2022 விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு இன்று காலை சென்ற தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தனது சாட்சியம் வாக்குமூலம், தமிழில் இருந்து சிங்கள மொழிக்கும், சிங்களத்தில் இருந்து தமிழ் மொழிக்கும் உரை பெயர்ப்பு செய்யப்பட்டாலும், இறுதியில் தான் கையெழுத்திடுவதாயின், அந்த ஆவணம் தமிழ் மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என ஆணைக்குழு விசாரணையாளர்களுக்கு அறிவித்ததால், விசாரணை இடை நடுவில் நிறுத்தப்பட்டு, பிறிதொரு உசிதமான தினத்தில் நடத்த முடிவாகியது. “கடந்த அரசுக்கு முந்தைய அரசின் அமை…
-
- 0 replies
- 237 views
-
-
அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகளுக்கிடையிலான விரிசல் மேலும் அதிகரிக்கும் சாத்தியம்! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் தொடர்ந்தும் சிறுமைப்படுத்தினால் அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்பது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் கூடி கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் தொடர்ந்தும் அரசாங்கத்தை விமர்சித்து வரும் நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அரசாங்கத்தில் இருந்து நீக்குவது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பலம் வாய்ந்த தலைவர்கள் சிலரும் கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி ம…
-
- 0 replies
- 208 views
-
-
திடீரென இந்தியாவுக்கு அழைக்கப்பட்ட பாக்லே – தமிழ் தரப்புடனான கலந்துரையாடல் இறுதி நேரத்தில் இரத்து!! இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பு இறுதி நிமிடத்தில் இரத்தாகியுள்ளது. நேற்று நடைபெறவிருந்த விசேட கலந்துரையாடல் கோபால் பாக்லே திடீரென இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்ட நிலையில் இறுதி நிமிடத்தில் இரத்துச் செய்யப்பட்டது. இதன் காரணமாக இந்திய உயர்ஸ்தானிகராலயத்தால் திட்டமிடப்பட்ட சந்திப்பு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே இரத்து செய்யப்பட்டது. இருப்பினும் அவர் நாடு திரும்பியதும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள…
-
- 0 replies
- 232 views
-
-
தேர்தலை ஒத்திவைக்கும் முடிவு அரசியல் உள்நோக்கம் கொண்டதா ? – பெஃப்ரல் அமைப்பு கேள்வி உள்ளுராட்சிமன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவது அரசியல் உள்நோக்கம் கொண்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றைக் காரணம் காட்டி தேர்தலை அரசாங்கம் பிற்போடுவதாக பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குற்றம் சாட்டினார். கொரோனா தொற்றின் முதல் அலைக்கு மத்தியில் கூட நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்றமையை சுட்டிக்காட்டிய அவர் இதனை தெரிவித்தார். இருப்பினும் இவ்வாறானதொரு தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சருக்கு உள்ள உரிமை மற்றும் அதிகாரத்தை பெஃப்ரல் அமைப்பு கேள்விக்குட்படுத்தவில்லை என கூறினார். எ…
-
- 0 replies
- 191 views
-
-
நாட்டினை பஞ்சத்திலிருந்து மீட்க கூட்டமைப்பு தயார் – இதற்கான நிபந்தனையை முன்வைத்தார் சாணக்கியன்! நாட்டில் ஏற்படப்போகும் பஞ்சத்தில் இருந்து நாட்டை எவ்வாறு மீட்கலாம், மக்களை எவ்வாறு மீட்கலாம் என்பது குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் சில திட்டங்கள் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு – களுதாவளை அன்பின் வீடு மற்றும் குறித்த இல்லத்தில் உள்ள விசேட தேவையுடைய குழந்தைகளுக்கு உதவி திட்டங்களை வழங்கி வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “உண்மையிலேயே இந்த நாட்டில் விசேட தேவையுடையவர்கள் மாத்திரமல்ல இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்…
-
- 0 replies
- 199 views
-
-
யாழ்.ஆயருடன் எதிர்க்கட்சி தலைவர் சந்திப்பு! வடக்கில் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு இல்லாத பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என யாழ் மறை மாவட்ட ஆயர் எதிர்க்கட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வடக்கில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ள நிலையில் , இன்றைய தினம் (புதன்கிழமை) தன்னுடைய பிறந்ததினத்தினை முன்னிட்டு, யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரீன் பேனாட் ஞானப்பிரகாசம் அவர்களை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றதுடன் , ஆயருடன் கலந்துரையாடலையும் மேற்கொண்டு இருந்தார். அதேவேளை ஆயர் இல்லத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதசாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு விசேட ஆசீர்வாத பூசை ம…
-
- 0 replies
- 211 views
-
-
அங்கொட லொக்காவுடன் புலிகள் அமைப்பின் முன்னாள் உளவுப் பிரிவு உறுப்பினருக்கு தொடர்பு!! சென்னையில் கைது செய்யப்பட்ட 47 வயதுடைய சத்குணம் என்கிற சபேசன் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவின் முன்னாள் உறுப்பினர் என தமிழக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய தேசிய புலனாய்வு பிரிவினரால் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் சபேசன் கைது செய்யப்பட்டிருந்தார். கோவையில் மாறுவேடத்தில் இருந்த அங்கொட லொக்காவின் மரணம் மற்றும் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் குறித்து விசாரணை நடத்திவரும் சி.பி.சி.ஐ.டி. சமீபத்தில் சபேசன் உள்ளிட்ட மூவரை கைது …
-
- 0 replies
- 224 views
-
-
கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம் கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் சற்று முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்காக இலங்கை துறைமுக அதிகார சபையினால் 510 மில்லியன் டொலர் முதலீடு செய்யப்படவுள்ளது. அத்துடன், ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்படும் 300 மில்லியன் டொலர் கடன் தொகையும் இந்த அபிவிருத்திப் பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பம் கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் நிர்மாண பணிகள் இன்று (புதன்கிழமை) முதல் ஆரம்பமாகவுள்ளது. …
-
- 0 replies
- 180 views
-
-
சஜித் பிரேமதாச நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடு! எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இன்று (புதன்கிழமை) காலை வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருகின்றார். இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் பிறந்த தினமான இன்று காலை காலை 10 மணியளவில் ஆலயத்துக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வருகையால் நல்லூர் ஆலய சூழலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavan…
-
- 0 replies
- 277 views
-
-
தெல்லிப்பளை பிரதேச செயலருக்கு “நேர்மைக்கு மகுடம்” விருது January 11, 2022 தெல்லிப்பளை பிரதேச செயலருக்கு “நேர்மைக்கு மகுடம்” விருது வழங்கப்பட்டுள்ளது. ஊழல் மற்றும் இலஞ்சமற்ற ஒரு சிறந்த ஆளுமை மிக்க அரச சேவையாளருக்காக குறித்த விருது தெல்லிப்பளை பிரதேச செயலாளர் திரு. சண்முகராஜா சிவஸ்ரீக்கு இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற குறித்த விருது வழங்கும் நிகழ்விலையே விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம் நேர்மையான அரச அலுவலர்களை கௌரவித்து பாராட்டி நேர்மைக்கு மகுடம் விருதுகளை வருடாந்திரம் வழங்கி வருகின…
-
- 1 reply
- 339 views
- 1 follower
-
-
மட்டக்களப்பில் பதற்றம்! பிள்ளையானுக்கு ஏதிராக மாணவர்கள் போராட்டம் மட்டக்களப்பு சிவானந்தா பாடசாலையில் பதற்றமான நிலைஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த மாதம் ஊர் மக்களாலும் பாடசாலை பழைய மாணவர்களாலும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினாலும் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக சில ஆசிரியர்கள் தங்களது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். அதன்போது சில ஆசிரியர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காத்தான்குடி காவல்துறையினரால் விசாரணை நடத்தப்பட்டு வந்த போதும் ஆசிரியர்களை அச்சுறுத்தியதன் காரணமாக இலங்கை ஆசிரியர் சங்கம் மாபெரும் ஆர்ப்ப…
-
- 10 replies
- 808 views
-
-
சனசமூக, ஆலய நிர்வாகங்களில் பெண்களை இணைக்க கோரி நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் January 11, 2022 சனசமூக நிலையங்கள் மற்றும் கோவில் நிர்வாகங்களில் பெண்களை இணைத்துக்கொள்வதனை கட்டாயமாக்க வேண்டும் என நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச சபையின் 46ஆவது மாதாந்த சபை அமர்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் போது சபை உறுப்பினர் சி.கௌசலா , ” சனசமூக நிலையங்கள் மற்றும் கோவில் நிர்வாகங்களில் பெண்களை இணைத்துக்கொள்வதனை கட்டாயமாக்க வேண்டும்” என சபையில் பிரேரணையை முன் வைத்தார். அதனை சபை உறுப்பினர்கள் ஆதரித்ததை அடுத்து சபையில் அது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. …
-
- 6 replies
- 501 views
-
-
ராஜபக்ச பிரபல்யம் வீழ்ச்சியை எதிர்கொள்கிறது, ஆனால் இது தற்காலிகமானதே’- நாமல் ராஜபக்ச January 11, 2022 ராஜபக்ச பிரபல்யம் வீழ்ச்சி: இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளால் ராஜபக்ச ஆட்சியின் புகழ் வீழ்ச்சி அடைந்துள்ளதை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்த விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச, இது இது தற்காலிகமானதே என்றும் கூறியுள்ளார். தென்னிலங்கை ஆங்கில ஊடகம் ஒன்றிடம் கருத்து தெரிவித்த அவர், இது தற்காலிகமானது என்றும் இந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார். “இரசாயன உரப் பாவனையைத் தடை செய்வதற்கு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச எடுத்த தீர்மானம் ஒரு வலுவான ம…
-
- 0 replies
- 293 views
-
-
’சீனாவுடன் செய்தது சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அல்ல’ சீனாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தமானது, சுதந்திர வர்த்தக உடன்படிக்கை அல்ல எனத் தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ரமேஷ் பத்திரண, அது இருதரப்பு ஒப்பந்தம் மாத்திரமே என்று குறிப்பிட்டார். “சீன வெளிவிவகார அமைச்சருடன் அண்மையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தமானது, கடந்த நல்லாட்சியில் கையெழுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களுள் ஒன்றா?“ என, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (11) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், சுதந்திர நாடு என்ற ரீதியில் இ…
-
- 0 replies
- 250 views
-
-
அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார் ஜனாதிபதி 10 அமைச்சுக்களின் கீழ் உள்ள நிறுவனங்களையும் அவற்றின் செயல்பாடுகளையும் திருத்தியமைக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதிய 2187/27 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் படி, பொருளாதாரக் கொள்கை மற்றும் திட்ட அமுலாக்கல் அமைச்சின் கீழ் இருந்த மத்திய கலாசார நிதியம், புத்தசாசன நிதியம் மற்றும் மத்திய கலாசார நிதிச் சட்டம் ஆகியவை புத்த சாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. சிறைச்சாலை முகாமைத்துவம் மற்றும் சிறைச்சாலை மறுவாழ்வுக்கான இராஜாங்க அமைச்சு அகற்றப்பட்டு, அதன் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்க…
-
- 0 replies
- 244 views
-
-
இந்தியா தமிழ் தலைவர்களை விலைக்கு வாங்கியுள்ளது – கஜேந்திரன் குற்றச்சாட்டு இந்தியா தமிழ் தலைவர்களை விலைக்கு வாங்கி அவர்களை தங்களுடைய கூலிகளாக வைத்துக்கொண்டு தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள் என்ற பெயரிலேயே இந்த ஒற்றையாட்சிக்குள் தமிழர்களிடத்தில் இந்த செயல்பாட்டிற்கு துணை போய்க் கொண்டிருக்கிறார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன் தெரிவித்தார். தமிழராய்ச்சி மாநாட்டிலே படுகொலை செய்யப்பட்ட அவர்களை நினைவு கூறும் நிகழ்வு தமிழாராய்ச்சி மாநாடு நினைவுத் தூபியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் அனுஷ்டிக்கப்பட்டது. பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆட்சிக…
-
- 9 replies
- 707 views
-