Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மீண்டும் ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தை தலைவர்கள் நழுவ விடக்கூடாது - சிவசக்தி ஆனந்தன் January 2, 2022 தமிழின விடுதலைக்கான போராட்டத்தில் பல்வேறு சந்தர்ப்பங்கள் எமக்கு ஏற்பட்டுள்ள போதும் அவை நழுவவிட்டமை தான் கடந்தக்கால வரலாறாக உள்ள நிலையில் தற்போது மீண்டுமொரு சந்தர்ப்பம் உருவாகியுள்ள நிலையில் அதனை நழுவ விட்டுவிடக்கூடாது என்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் பகிரங்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடகங்களுக்கான அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை அரசாங்கமானது தற்போது பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ளது. அதேநேரம், ஆட்சியாளர்களின் பங்காளிகளுடனும் அரசியல் ரீதியான முரண்ப…

  2. அதிக பணவீக்கம் பதிவாகியுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடம்! தெற்காசிய பிராந்தியத்திலேயே அதிக பணவீக்கம் பதிவாகியுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடம் பெற்றுள்ளது. 2021 நவம்பரில் 9.9% ஆக இருந்த நாட்டின் பணவீக்க விகிதம் 2021 டிசம்பரில் 12.1% ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சர்வதேச நாடுகளின் பணவீக்க விகிதத்தில் இலங்கை 20ஆவது இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1259491

  3. வடக்கு, கிழக்கை ஒருபோதும் இணைக்க முடியாது – அமைச்சர் தினேஷ் இந்தியப் பிரதமருக்கு ஆவணம் அனுப்புவதால் வடக்கு, கிழக்கை ஒருபோதும் இணைக்க முடியாது என்றும் இதற்கு முஸ்லிம் மக்கள் அனுமதி வழங்கமாட்டார்கள் எனவும் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தைச் சுட்டிக்காட்டி தமிழ்க் கட்சிகள் பாரத பிரதமருக்கு ஆவணம் ஒன்றினை அனுப்ப திட்டமிட்டுள்ளமை குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். வடக்கு, கிழக்கு தமிழர்களின் தாயகமோ அல்லது முஸ்லிம்களின் தாயகமோ அல்ல என குறிப்பிட்ட அமைச்சர், இரு மாகாணங்களும் ஒரே நாட்டுக்குள்ளேயே அமைந்துள்ளன என்றும் குறிப்பிட்டார். எனவே, மாகாணங்களைப் பிரித்து எந்த இனத்தவர்களும் சொந்தம் கொ…

  4. தமிழ் – முஸ்லிம் மக்களின் ஒற்றுமை காலத்தின் கட்டாயம்: சம்பந்தன் அரசியல் தீர்வை வென்றெடுக்கத் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஒற்றுமை காலத்தின் கட்டாயம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். கடந்த காலங்களில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் திட்டமிட்ட வகையில் இனமுறுகலை ஏற்படுத்தி சிங்களக் கடும் போக்குவாதிகள் முன்னெடுத்த அரசியலை மறக்க கூடாது என்றும் சுட்டிக்காட்டினார். ஆகவே வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்கள் கடந்தகாலத் துன்பியல் நிகழ்வுகளை மறந்துவிட்டு தீர்வை வென்றெடுக்க ஓரணியில் பயணிக்க வேண்டும் என்றும் இரா.சம்பந்தன் அழைப்பு விடுத்தார். இதன் அவசியத்தை உணர்ந்து முஸ்லிம் அரசியல்வாதிகள் செயற்பட வேண்டும் என்றும் கூட்…

  5. இன்னுமொரு இனத்தின் எந்த கோரிக்கையினையும் தட்டிப் பறிக்கவில்லை எங்களது அரசியல் அதிகாரத்தினைக்கொண்டு இன்னுமொரு இனத்தின் நியாயமான, நீதியான எந்த கோரிக்கையினையும் நாங்கள் தட்டிப்பறிக்கவில்லை. அதேபோன்று எமது சமுகத்திற்கு தரவேண்டிய நீதியான நியாயமான எந்தவொரு கோரிக்கையினையும் விட்டுக்கொடுக்க தயாரில்லை என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். இன்று அரசியல் அதிகாரம் கைகளில் உள்ளதன் காரணமாகவே சமூகத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த முடிவதாகவம் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வாழ்வாதார உதவிகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் புனரமைப்புக்கான நிதியுதவி வழங்கும் நிகழ…

  6. சிறையிலுள்ள இந்தியக் கடற்றொழிலர்களை சந்தித்த டக்ளஸ் இழுவைமடித் வலைத் தொழிலில் ஈடுபடுவதனால் கடல் வளங்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களையும், இலங்கை கடற்றொழிலாளர் எதிர்கொள்ளுகின்ற வாழ்வாதார அச்சுறுத்தல்களையும் தமிழக உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள இந்தியக் கடற்றொழிலாளர்களை புத்தாண்டு தினமான இன்று சந்தித்து அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வைத்து கலந்துரையாடிய போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். குறித்த சந்திப்பின் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், இலங்கையின் கடல் வளத்தினையும் எமது மக்களின் வாழ்வாதாரத்தினையும் அழிக்கின்ற …

  7. (எம்.ஆர்.எம்.வசீம்) பால்மா விலை அதிகரிப்பு காரணமாக பால் தேநீர் ஒரு கோப்பை 80 ரூபாவுக்கு குறைவாக விற்பனை செய்யமுடியாது. அதனால் நுகர்வோருடன் முரண்படுவதை தவிர்த்துக்கொள்வதற்காக சிற்றுண்டிச்சாலைகளில் பால் தேநீர் தயாரிப்பதில்லை என தீர்மானித்திருக்கின்றோம் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார். சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களின் சங்கம் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்க பால்மா நிறுவனங்கள் தீர்மானித்திருக்கிறது. அதன் பிரகா…

  8. அரசாங்கம் வெற்று அரசாங்கமாக மாறியுள்ளது ; சிவஞானம் சிறீதரன் (எம்.நியூட்டன்) இந்த அரசாங்கம் வெற்று அரசாங்கமாக மாறியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். பூநகரி பிரதேச சபையின் புதிய தவிசாளர் சிறீரஞ்சன் வரவேற்கும் நிகழ்வு பூநகரி பிரதேச சபையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், சின்னக் குழந்தைகளைக்கூட பட்டினி போட்டு சாகடிக்கும் ஒரு நிலையை இந்த அரசாங்கம் உருவாக்க முயற்சித்துக் கொண்டு இருக்கிறது. குடிக்கும் பால்மா கூட அளவிற்கு பயன்படுத்த முடியாத அளவிற்கு பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு போயிருக்கிறது. சொந்த…

  9. இலங்கை தமிழ் கலைஞர் ஒருவருக்கு இலங்கை அரசினால் வழங்கப்பட்டுள்ள அதியுயர் கௌரவம்! இலங்கை தமிழ், சிங்கள சினிமா நடிகை சகோதரி நிரஞ்சனி சண்முகராஜா அவர்களுக்கு “விஸ்வாபிமாணி கலாகீர்த்தி” பட்டம் அளிக்கப்பட்டு அதியுயர் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது! இலங்கை அரசினால் அண்மை காலத்தில் தமிழ் திரைக் கலைஞர் ஒருவருக்கு அளிக்கப்பட்டுள்ள மேற்படி கௌரவம் ஒட்டுமொத்த தமிழ் கலைஞர்களுக்குமான அங்கீகாரத்தின் முன்னோடியாக பார்க்கப்படுகிறது. இனிய வாழ்த்துகள் ! …

  10. “சர்வதேச நாணய நிதியத்தை நாடாதிருக்க சீனாவின் அழுத்தங்கள் மற்றும் நெருக்கடிகளே காரணம்” அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை நாடாதமைக்கு சீனாவின் அழுத்தங்கள் மற்றும் நெருக்கடிகளே காரணம் என ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். அத்தனையும் மீறி இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை நாடினால் சீனாவினால் அடுத்த கட்டத்தில் கொடுப்பதாக வாக்குறுதியளித்துள்ள சகல நிதியும் நிறுத்தப்படும் என கூறினார். அத்தோடு அவர்கள் மூலமாக கிடைக்கப்பெற்றுள்ள கடன்களையும் மீள செலுத்த கடுமையான அழுத்தம் கொடுப்பார்கள் என்றும் விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டார். இதேநேரம் சர்வதேச நாணய நிதியத்தின் மூலமாக கடன்களை பெற்றுக்கொண்டால் எவருக்குமே தரகுப்பணம் கிடைக்காது என்பதன…

  11. பொது இணைக்க ஆவணம் ஒன்றினை தயாரிக்க தமிழ் பேசும் கட்சிகள் இணக்கம் இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகள் மற்றும் எதிர்பார்ப்புக்களை ஒன்றுபட்டு பிரதிபலிக்கும் ஆவணம் ஒன்றினை தயாரிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை இடம்பெற்ற சந்திப்பில், குறித்த பொது ஆவணத்தை காலம் தாழ்த்தாது விரைந்து தயாரிக்க தீர்மானிக்கப்பட்டது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில், மனோ கணேசன் ரவூப் ஹக்கீம், சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்ற ஒருமித்த கருத்திற்கு அமைவாக குறித்த ஆவணத்தை வெகுவிரைவில் தயாரிக்க தீர்மானிக்கப்பட்டதாக எம்.ஏ.…

  12. நாடு திரும்பிய பசில்: அமைச்சரவையில் மாற்றம் ? அமைச்சரவையின் முக்கிய ஆறு அமைச்சுகளின் விடயதானங்கள் மாற்றத்திற்குள்ளவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய வருடம் புதிய மாற்றத்துடன் பயணத்தை ஆரம்பிக்குமாறு ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலர் கடந்த வாரம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவை விரைவில் மறுசீரமைக்கப்படவுள்ளது. அமெரிக்கா சென்றிருந்த நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று நாடு திரும்பியுள்ள நிலையில் ஒரிரு நாட்களில் இந்த மாற்றம் இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இதேநேரம் சில இராஜாங்க அமைச்சு பதவியிலும் மாற்றம் இடம்பெறும் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்…

  13. இந்திய மீனவர்களின் தடுப்புக்காவல் நீடிப்பு December 31, 2021 எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டு, சிறை வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் தடுப்புக்காவல் எதிா்வரும் ஜனவரி 13ம் திகதிவரை ல் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த 18ஆம் திகதி ராமேஸ்வரத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற 43 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் வைக்கப்பட்டுள்ளனா் . இந்த வழக்கு ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் புத்தாண்டு விடுமுறை காரணமாக இணைய வழியாக வழக்கை விசாரித்த நீதிபதி கஜநிதிபாலன், மீனவர்களின் தடுப்புக்காவலை எதிா்வரும் 13ம் திகதி வரை ந…

  14. ”மாற்றத்துடன்கூடிய ஆண்டாக மாற்றுவோம்”: ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்து! மலர்ந்துள்ள புத்தாண்டை, மக்களுக்கான “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைத் திட்டத்தை அடைந்துகொள்வதற்காக அர்ப்பணித்து, மாற்றத்துடன்கூடிய புத்தாண்டாக மாற்ற அணிதிரளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவரின் வாழ்த்துச் செய்தி வருமாறு, மலர்ந்துள்ள புத்தாண்டு, எதிர்காலத்தைப் புதிய உத்வேகத்துடனும் நம்பிக்கை மற்றும் உறுதியுடனும் பார்க்கத் தூண்டியிருக்கிறது. அதனால், 2022 ஆம் ஆண்டை, மிகுந்த ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் வரவேற்போம். நாட்டின் மீதும் எமது சமூகத்தின் மீதும் கடந்த ஆண்டு ஏற…

  15. 13 தங்கப் பதக்கங்களுடன் MBBS; முதல் தரத்தில் சித்தி பெற்ற Topper தணிகாசலம் தர்ஷிகா - அக்கரைப்பற்று மாணவி சாதனை கொழும்பு பல்கலைக்கழகத்தின் MBBS இறுதி பரீட்சையில் முதல் தரத்தில் (First Class) தேர்ச்சி பெற்ற அக்கரைப்பற்றை சேர்ந்த தணிகாசலம் தர்ஷிகா 13 தங்கப் பதக்கங்களை பெற்று பெரும் சாதனை படைத்துள்ளார். கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பட்டமளிப்பு விழாவின்போது வழங்கப்படும் 37 தங்கப்பதக்கங்களில் சிறந்த மருத்துவ பீட மாணவ விருது உட்பட 13 தங்கப்பதக்கங்களை இவர் தனதாக்கிக் கொண்டார். அத்தோடு குறித்த பட்டப்படிப்பு ஆண்டுக்குரிய முதல்நிலையாளராகவும் (Topper) ஆகவும் தெரிவு செ…

  16. உஸ்பெகிஸ்தானில் இருந்து பல பெண்கள் பாலியல் தொழிலுக்காக இலங்கைக்கு கடத்தப்படுவதாக இலங்கை மனித கடத்தலை தடுக்கும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளாகவோ அல்லது வேலை விசா மூலமாகவோ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு இவர்கள் இவ்வாறு பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுகின்றனர். தற்போது இந்தப் பெண்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பெரும்பாலான வெளிநாட்டு பெண்கள் அரசாங்க தங்குமிடங்களில் ஆதரவைப் பெறத் தயங்குகிறார்கள், அதற்குப் பதிலாக ஐ.நா. முகவர் நிலையங்கள் அல்லது தனியார் தங்குமிடங்களை விரும்புகிறார்கள் என்று அதிகாரி கூறினார். மேலு, இவ்வாறு பாதிக்கப்படும் பெண்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் வரை 2 அல்…

  17. யாழ். மயிலிட்டி பகுதியில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக இன்று போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. வலி.வடக்கு மீனவர் சமாசம் மற்றும் மயிலிட்டி கடற்றொழிலாளர் சங்கங்களின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணியளவில் மயிலிட்டி துறைமுகத்தில் ஒன்றுகூடிய மீனவர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துமீறுகின்ற இந்திய மீனவர்களை கைது செய், கைது செய்கின்ற படகுகளை அரசுடைமையாக்கு போன்ற கோஷங்களை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எழுப்பினர் கொட்டும் மழையிலும் கடற் தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக யாழில் போராட்டம் | Virakesari.lk

  18. (நா.தனுஜா) நெடுந்தீவு உட்பட வடக்கில் மூன்று தீவுகளை இந்தியாவிற்கு வழங்குவதற்கான தீவிர முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுவருவதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, இந்தியாவுடன் பேணப்பட்டுவரும் தொடர்புகளால் சந்தேகமடைந்திருக்கும் சீனா கடந்த 10 வருடகாலத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி செயற்திட்டங்கள் குறித்து மதிப்பீடு செய்வதற்கென அதன் தூதரகத்தின்கீழ் விசேட குழுவொன்றை நியமித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையில் கட்சி உறுப்பினரும் முன்னாள் அமை…

  19. தமிழினப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை மூலமே நீதி கிடைக்கும் என்பதை வலியுறுத்தியவர் பேராயர் டுட்டு வடக்கு - கிழக்கின் நீதிக்கும் அமைதிக்குமான குருக்கள், துறவிகள் அமைப்பு தென்னாபிரிக்க நிறவெறி நிறுவனக் கட்டமைப்பிற்கெதிராக, கறுப்பின அடக்குமுறைக்கெதிராக முற்போக்குச் சிந்தனையோடு போராடிய ஒரு விடுதலைப் போராளி பேராயர் டெஸ்மண்ட் டுட்டுவின் பயணம் நிறைவடைந்தமையிட்டு வடக்கு-கிழக்கின் நீதிக்கும் அமைதிக்குமான குருக்கள், துறவிகள் அமைப்பு ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பில் அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், நிறுவன மயப்படுத்தப்பட்ட நிறவெறி அடக்குமுறைக்கெதிராக 1970 களிலிருந்து அடக்குமுறைக்குட்படுத்தப்பட்ட பெரும்பான்மை மக்களின் குரலாகவும், அம்மக்களோடு பயணித்து மக்களி…

  20. இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார். ஐ.நா சபை ஏற்றுக் கொள்ளுமா? எனத் தெரிவித்து வவுனியாவில் தனிநபர் ஒருவர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தார். வவுனியா நகர மணிக்கூபுர சந்தியில் நின்று குறித்த நபர் இன்று (29) போராட்டத்தை முன்னெடுத்திருந்தார். இதன்போது, அவர் இலங்கை தேசியக் கொடியை ஏந்தியிருந்ததுடன் 'இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார். இதை ஐ.நா சபை ஏற்றுக் கொள்ளுமா?, எங்களை துன்பத்தில் இருந்து காப்பாற்றுமா? இதற்கு மக்கள் நாம் ஒன்றுபடுவோம் ' என எழுதப்பட்ட சுலோக அட்டையையும் ஏந்தியிருந்தார். குறித்த தனிநபரின் கவனயீர்ப்பு போராட்டத்தால் மணிக்கூட்டு கோபுர சந்தியில் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக பொலிசார் அறிவுறுத்தியதையட…

  21. கொட்டும் மழையிலும் இந்திய மீனவர்களுக்கெதிராக போராட்டம் December 31, 2021 மயிலிட்டி பகுதியில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக இன்று போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. வலி.வடக்கு மீனவர் சமாசம் மற்றும் மயிலிட்டி கடற்றொழிலாளர் சங்கங்களின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணியளவில் மயிலிட்டி துறைமுகத்தில் ஒன்றுகூடிய மீனவர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துமீறுகின்ற இந்திய மீனவர்களை கைது செய், கைது செய்கின்ற படகுகளை அரசுடைமையாக்கு போன்ற கோஷங்களை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எழுப்பினர் கொட்டும் மழையிலும் கடற் தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. h…

  22. திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் இந்திய நிறுவனத்துடன் இணைந்து அபிவிருத்தி! திருகோணமலையிலுள்ள 61 எண்ணெய்க் குதங்களை லங்கா ஐஓசி நிறுவனத்துடன் இணைத்து அபிவிருத்தி செய்யவுள்ளதாக அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இதற்காக ‘ட்ரின்கோ பெட்ரோலியம் டெர்மினல்ஸ் லிமிட்டட்’ என்ற பெயரில் புதிய நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளதுடன், இந்த நிறுவனத்தின் ஊடாக அந்த அபிவிருத்தி பணிகள் இடம்பெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் 14 எண்ணெய் குதங்களை குத்தகை அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர…

  23. இலங்கை மத்திய வங்கி 202 பில்லியன் ரூபாவினை அச்சிட்டுள்ளது December 31, 2021 இலங்கை மத்திய வங்கியினால் கடந்த டிசம்பா் 29ம் திகதி 202 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் 14 ஆம் திகதியின் பின்னர் முதலாவதாக இவ்வாறு பணம் அச்சிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 825 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளது. இதேவேளை, நேற்று முன்தினம் இலங்கை மத்திய வங்கி 48.5 பில்லியன் ரூபா பெறுமதியான முறிகளை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்த போதிலும் அதில் 33.5 பில்லியன் பெறுமதியான முறிகளையே விற்பனை செய்ய முடிந்துள்ளது வட்டி விகிதம் மற்றும் நாணய மாற்று விகிதத்தை தொடர…

  24. கிளிநொச்சியில் லண்டனிலிருந்து திரும்பிய பெண் சடலமாக கண்டெடுப்பு! கிளிநொச்சியில் லண்டனிலிருந்து திரும்பிய பெண் காணாமல் போன நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த பெண் தங்கியிருந்த வீட்டிலிருந்து சுமார் 18 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கந்தப்புரம் பரம்பாலம் பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலம் பொதியொன்றில் பொதி செய்யப்பட்டு, வீசப்பட்ட நிலையிலேயே கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://athavannews.com/2021/1258944

  25. சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் எதிர்வரும் ஜனவரி 3 ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. மசகு எண்ணெய்யை கொள்வனவு செய்வதை நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்த நிலையில் மேற்படி சப்புகஸ்கந்த எண்ணை சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் கடந்த நவம்பர் 15 அன்று முதற் தடவையாக இடைநிறுத்தப்பட்டது. தொடர்ச்சியாக 50 தினங்களுக்கு மேற்படி சுத்திகரிப்பு நிலையம் மூடப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்த நிலையிலும் 22 நாட்களின் பின்னர், டிசம்பர் 7 ஆம் திகதி மீண்டும் அதன் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இந் நிலையிலேயே மசகு எண்ணெய்யை கொள்வனவு செய்யாத காரணத்தினால் சப்புகஸ்கந்த எண்ணெய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.