ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143612 topics in this forum
-
இந்தியாவுக்கு மீண்டும் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்கிறார் பசில்! நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். அவருடன், திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவும் இந்த விஜயத்தில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய அவர்கள் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமையன்று) இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர். நிதியமைச்சர் அண்மையில் இந்தியாவுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியமை வெற்றியளித்ததாக தெரிவித்த அரசாங்கம், இந்தியாவினால் வழங்கப்படும் நிதியுதவி தொடர்பான ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்கு மீண்டும் அவர் இந்தியாவிற்கு விஜயம் செய்வார் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1268495
-
- 6 replies
- 362 views
- 1 follower
-
-
யாழில்... கடல் ஆய்வில் ஈடுபட்டு வரும், அமெரிக்க பிரஜையின் உடைமைகள் திருட்டு! கடல் ஆய்வில் ஈடுபட்டு வரும் அமெரிக்க பிரஜையின் உடைமைகள் சில குருநகர் கடற்பகுதியில் களவாடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க பிரஜை ஒருவர் இலங்கை கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொண்டு வவருகிறார், அதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாணத்திற்கு கொழும்பில் இருந்து கடந்த 19ஆம் திகதி சிறிய படகொன்றில் வந்துள்ளார். படகில் யாழ்ப்பாணம் வந்தவர் குருநகர் கடற்பகுதியில் தனது படகினை நிறுத்தி விட்டு , தங்குவதற்காக யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள நட்சத்திர விடுதிக்கு சென்றுள்ளார். விடுதியில் தங்கி விட்டு மறுநாள் படகுக்கு சென்ற போது , படகில் …
-
- 0 replies
- 155 views
-
-
டீசல் கப்பலுக்கு 35 மில்லியன் டொலரை செலுத்தியது அரசாங்கம்! கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த டீசல் கப்பலுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி கப்பலில் இருந்து டீசல் இறக்கும் பணி இன்று (புதன்கிழமை) பிற்பகல் ஆரம்பமாகும் என்றும் அறிவித்துள்ளது. 37,500 மெட்ரிக் டன் டீசல் உடனான குறித்த கப்பலின் சிங்கப்பூர் நிறுவனத்திற்கு நேற்றிரவு 35.3 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது. இருப்பினும் இரண்டு நாள் தாமதம் காரணமாக டீசல் ஏற்றிச் செல்லும் கப்பலுக்கு $38,000 செலுத்த வேண்டியிருக்கும் என எரிசக்தி அமைச்சு முன்னர் குறிப்பிட்டிருந்தது. இதேவேளை எரிபொருளை பெற்றுக்கொண்டு அதனை சேமித்து …
-
- 14 replies
- 784 views
- 1 follower
-
-
வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா -யாழ் நிருபர்- யாழ் தீவகப் பகுதிகளில் சில இடங்களில் பெண்கள் சமூகத்துக்கு விரோதமான நடத்தைகளுக்கு தள்ளப்படுவது மிகவும் வருத்தமளிக்கும் நிலையில், அவ்வாறான பெண்களுக்கு உதவுவதற்கு தயாராக இருப்பதாக, வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தீவக பிரதேசத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை சாதாரண பகுதிகளோடு ஒப்பிடுகையில் கஷ்டமானது . இருந்தாலும் சில தீவகப் பகுதிகளில் வாழும் பெண்கள் சமூகத்திற்கு ஒவ்வாத விடயங்களில் ஈடுபடுவது எனது கவனத்திறகு வந்துள்ள நிலையில், இது எமது சமூகத்திற்கு அவமானமாக பார்க்கிறேன். யாழ் மாவட்ட செயலகம் ஊடாக தீவகப் பகுதிகள் தொடர்பான விவரங்களை கேட்டறிந்த நிலையில், அதிலும் பெ…
-
- 8 replies
- 841 views
- 1 follower
-
-
PreviousNext பிக்கு ஒருவருக்கு எதிராக விகாரை முன் திரண்ட தோட்ட மக்கள்! வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை, ஹயிற்றி தோட்டத்திலுள்ள விகாரைக்கு முன்பாக நீதிகோரி இன்று (22) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தோட்ட மக்கள், சிறார்கள் என பலர் இப்போராட்டத்தில் பங்கேற்று நீதிக்காக கோஷம் எழுப்பினர். வட்டவளை, டெம்பல்ஸ்ட்டோவ் தோட்டத்திலுள்ள சிறுவன் ஒருவரை, ஹயிற்றி தோட்டத்தில் உள்ள விகாரையின் பிக்கு, துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தையால் வட்டவளை பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய பிக்கு வட்டவளை…
-
- 6 replies
- 447 views
-
-
எரிபொருள் ஏற்றிய கப்பலில் உள்ள எரிபொருளை இறக்குவதற்கு 36 மில்லியன் டொலர் இல்லை என்பதால், வெஸ்ட் கோஸ்ட் மின் உற்பத்தி நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் 300 மெகா வோட் மின்சாரத்தை இன்று முதல் உற்பத்தி செய்ய முடியாமல் போகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka) தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். 36 மில்லியன் டொலர் இல்லாத காரணத்தினால், நாட்டு மக்களின் போக்குவரத்து மாத்திரமல்லாது மின்சாரத்தை அரசாங்கம் இல்லாமல் ஆக்கியுள்ளது. நாடு அடைந்துள்ள பிச்சைக்கார நிலைமை சம்பந்தமாக ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர் ஆகிய ராஜபக்ச சகோதரர்கள் பொறுப்ப…
-
- 1 reply
- 271 views
-
-
உண்டியல் மற்றும் ஹவாலா முறையில் நாள் தோறும் சட்டவிரோதமாக பத்து மில்லியன் அமெரிக்க டொலர் வரையில் நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதாக கூறப்படுகிறது. இத்தாலி, டுபாய், இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளிட்டனவற்றிலிருந்து இவ்வாறு பணம் இலங்கைக்கு கொண்டு வரப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. உண்டியல் மற்றும் ஹவாலா முறைமைகள் சட்டவிரோதமானவை என்ற காரணத்தினால் இந்த விடயம் தொடர்பில் நிதி அமைச்சின் கீழ் இயங்கும் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது. இந்த சட்டவிரோத கொடுக்கல் வாங்கல் முறைமை ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்ற போதிலும் இந்த உண்டியல் மற்றும் ஹாவாலா முறைமையுடன் அரசியல்வாதிகள், வங்கி அதிகாரிகள், வர்த்தர்கள் உள…
-
- 5 replies
- 708 views
- 1 follower
-
-
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக, விசாரணை நடத்துங்கள் – ஐ.நா. ஆணையாளரிடம் உறவுகள் கோரிக்கை. தமது உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே பல்வேறு அச்சுறுத்தல்கள் மற்றும் இடையூறுகளுக்கு மத்தியிலும் தொடர்ச்சியாக போராட்டத்தை மேற்கொண்டு வருவதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது. இதுவரை போராடிய 112 பெற்றோர்கள் மனஅழுத்தத்தினாலும் நோய்வாய்ப்பட்டதாலும் மரணித்துள்ள நிலையிலும், நீதி கிடைக்க வேண்டும் என எஞ்சியிருப்பவர்கள் தொடர்ந்தும் போராடிவருவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆகவே இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்பு தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க …
-
- 2 replies
- 234 views
-
-
உக்ரைனில் இடம்பெற்று வரும் விடயங்கள் தொடர்பில், உன்னிப்பாக... அவதானித்து வருவதாக இலங்கை அரசாங்கம் அறிவிப்பு உக்ரைனில் இடம்பெற்று வரும் அண்மைக்கால விடயங்கள் தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியின் அங்காராவிலுள்ள இலங்கைத் தூதரகம், உக்ரைனில் வசிக்கும் 14 மாணவர்கள் உட்பட நாற்பதுக்கும் மேற்பட்ட இலங்கைப் பிரஜைகளின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்யும் நோக்கில் நெருங்கிய தொடர்பில் உள்ளதாகவும் இதன்போது குறிப்பிடப்பட்டுள்ளது. உக்ரைனிலுள்ள 14 இலங்கை மாணவர்களில் 6 பேர் தற்காலிகமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் வெ…
-
- 14 replies
- 727 views
-
-
உள்ளூராட்சித் தேர்தலை நடத்த விரும்பும் பசில், நெருக்கடிக்கு மத்தியில் தவிர்க்க கோரும் மூத்த அமைச்சர்கள் ! கட்சியை அடிமட்டத்தில் இருந்து பலப்படுத்துவதற்கு முதலில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். வருட இறுதியில் அல்லது அடுத்த வருடத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறலாம் என்ற பேச்சுக்கள் மத்தியில் நிதி அமைச்சர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். இருப்பினும் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு மத்தியில் தேர்தலுக்கு தயாராகவில்லை என கூறி அரசாங்கத்தின் மூத்த அமைச்சர்களால் இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. அந்நிய செலாவணி நெருக்கடி, அதிக வாழ்க்கைச் செலவு மற்றும் எரிபொருள் பிரச்சினை என்பன நாட்டில் ப…
-
- 1 reply
- 207 views
-
-
ஜி.எஸ்.டி வரி தொடர்பான சட்டமூலம், அரசியலமைப்பிற்கு முரணானவை – உயர் நீதிமன்றம் தீர்ப்பு ஜி.எஸ்.டி வரி தொடர்பான சட்டமூலத்தில் உள்ள சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முன்னாவை என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்ற அமர்வினை தொடங்கிவைத்து உரையாற்றும்போதே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை தெரிவித்தார். விசேட பண்டங்கள் மற்றும் சேவைகள் வரி சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு ஏற்புடையதல்ல எனத் தெரிவித்து உயர்நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. மேலும் அதனை நிறைவேற்ற வேண்டுமாயின், நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை, சர்வஜன வாக்கெடுப்பினாலும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டத…
-
- 0 replies
- 146 views
-
-
பூநகரி, முட்கொம்பன் ஆகிய பகுதிகளில் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதாக மக்கள் விசனம்! கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வன்னேரிக்குளம் குஞ்சுக் குளம் ஆனைவிழுந்தான் மற்றும் பூநகரி முட்கொம்பன் ஆகிய பகுதிகளில் வனவளத் திணைக்களத்தினால் தங்களது காணிகள் தொடர்ந்தும் ஆக்கிரமிக்கப் பட்டு எல்லையிடப் படுவதாக பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி கண்டாவளை பூநகரி பச்சிலைப் பள்ளி ஆகிய பகுதிகளில் கடந்த காலங்களில் பொது மக்கள் பயன்படுத்திய பயிர் செய்கை காணிகள் தணியார்காணிகள் வனவளத் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன. குறிப்பாக நூற்றாண்டு காலம் பழமை வாய்ந்த மிகப் பழம் பெரும் கிராமங்களான குஞ்ச…
-
- 4 replies
- 413 views
-
-
உள்நாட்டுத் தொழிற்றுறைகளில் முதலீடுகளைச் செய்து, இந்நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு உள்நாட்டுத் தொழிற்றுறைகளில் முதலீடுகளைச் செய்து, இந்நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்நாட்டுத் தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுத்துள்ளார். பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில்முனைவோருடன் நேற்றைய தினம் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு அழைப்பு விடுத்தார். அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்குத் தனியார்த் துறையினரின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்நியச் செலாவணியை உருவாக்குதல், அரச நிதிக் கொள்கை, வெளிநாட்டு வேலைவாய்ப்…
-
- 1 reply
- 208 views
-
-
போர்க்குற்றம் நடந்தது என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா? February 22, 2022 “புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டிருந்தால் எதற்காகப் பிரபாகரனின் தாயாரிடம், ‘பிரபாகரன் எங்கு இருக்கின்றார்?’ என விசாரணை செய்தீர்கள் என்பதற்கான பதிலையும் கூறவேண்டும். அல்ஜசீரா தொலைக்காட்சிக்கும் பிரபாகரனின் தாயார் இதனைக் கூறியுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணம் தொடர்பில் அரசும், அரசில் உள்ளவர்களும் மாறுபட்ட கருத்துக்களையே கூறி வருகின்றார்கள். இதன் மூலம் போர்க்குற்றம் நடந்தது என்பதை ஏற்றுக்கொள்கின்றார்கள். இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பண்பு தெரியாத வகையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி வசைபாடியுள்ளார்.” என முன்னாள் நாடாளும…
-
- 2 replies
- 646 views
-
-
பிரதேசவாசிகள், பௌத்த மாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட தரப்பினரின் கடும் எதிர்ப்பையும் மீறி, குருணாகல் மாவட்டம் பொத்துஹெர, அரம்பேபொல பிரதேசத்தில் விகாரை என்ற பெயரில் பாலியல் தொழில் விடுதியை நடத்தப்பட்டு வருவதாக “துக்க ஹந்துனன அபி” என்ற அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. குறித்த இடத்தில் விகாரை இயங்கினாலும் ஹொட்டல் என்று அந்த கட்டடம் பதிவு செய்யப்பட்டுள்ளது என அந்த அமைப்பின் தலைவர் நிலந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரரே விகாரை அமைந்திருந்த இடத்தை விற்பனை செய்துள்ளார். விகாரைக்குள் இந்த ஹொட்டல் இயங்குகிறது. சீன விகாரை என அழைக்கப்படும் இந்த ஹொட்டலில், சீனப் பெண்கள் தங்கியுள்ளனர். பிரதேசவாசிகளுக்கு விகாரையில் நடப்பது என்ன என்பது தெரிய…
-
- 6 replies
- 517 views
-
-
யாழில். கூலிக்கு, யாசகம் பெற்றவர்கள் கைது! சாவகச்சேரியில் குழந்தைகளுடன் யாசகம் பெற்றவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணத்திலுள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர், தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களை கூலிக்கு அமர்த்தி யாசகம் பெறுவதாக அண்மைய நாள்களில் பல்வேறு இடங்களில் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அதனடிப்படையில் சாவகச்சேரி நகரில் யாசகம் பெற்றவர்கள் இன்று (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டனர். இவ்வாறு யாசகம் பெறுபவர்களின் பணம் விடுதி உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டதும் யாசகத்தில் ஈடுப்பட்டோருக்கு தினக் கூலி வழங்கப்படுவதாக பல தரப்பினராலும் குற்றச்சாட்டப்பட்டது. அதனடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.…
-
- 7 replies
- 497 views
-
-
இந்திய மீனவர்களுக்கு 10 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை! இந்திய மீனவர்களுக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்று 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது. கடந்த 31ஆம் திகதி பருத்தித்துறை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த 21 இந்திய மீனவர்களை பருத்தித்துறை மீனவர்கள் சுற்றிவளைத்து பிடித்தனர். பருத்தித்துறை மீனவர்களிடம் இருந்து இந்திய மீனவர்களை மீட்ட கடற்படை அவர்களை கைது செய்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினார்கள். 21 மீனவர்களையும் விளக்கமறியலில் தடுத்து வைக்க நீதவான் உத்தரவிட்டார். இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போத…
-
- 2 replies
- 294 views
-
-
சுதந்திரக்கட்சி, சிங்களக் கட்சி அல்ல கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் எனக்கு வழங்கிய மிகப்பெரிய ஆணைக்கு செயல் வடிவில் நன்றி கூறி வருகிறேன் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். உடுப்பிட்டி தேர்தல் தொகுதியில் இன்று (21) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட மாநாட்டு நிகழ்வில் தலைமையுரை ஆற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், யாழ் மக்கள் எமக்களித்த அன்புக்கும் அரவணைப்பிற்கும் தலை வணங்கவே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இங்கு வந்துள்ளார். ஸ்ரீலங்கா சுத…
-
- 3 replies
- 510 views
-
-
“இறுதிவரைப் போராடியே மடிந்தவர் பிரபாகரன்” “இறுதிப் போரில் பிரபாகரன் சரணடையவில்லை. அவரை இராணுவத்தினர் உயிருடன் பிடிக்கவும் இல்லை. இறுதிப் போர்க் களத்தில் அவர் இறுதி வரைப் போராடியே உயிரிழந்தார்.” - இவ்வாறு முன்னாள் இராணுவத்தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த பின்னரே உயிரிழந்தார் என்று யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துத் தொடர்ப…
-
- 1 reply
- 496 views
-
-
புலம்பெயர்ந்துவாழும் இலங்கையர்கள் இலங்கையில் முதலீடு செய்வதை ஊக்குவிப்பதற்கான புதியதிட்டம் உருவாக்கப்படுகின்றது – முதலீட்டுச்சபை புலம்பெயர்ந்துவாழும் இலங்கையர்கள் இலங்கையில் முதலீடு செய்வதை ஊக்குவிப்பதற்கான புதிய திட்டமொன்றை உருவாக்கும் நடவடிக்கையில் இலங்கை முதலீட்டுச்சபை ஈடுபட்டுள்ளது. இலங்கையில் முதலீடுசெய்யும் புலம்பெயர்ந்தவர்களிற்கு விசேட ஊக்குவிப்பு திட்டங்களை உள்ளடக்கியதாக புதிய திட்டம் காணப்படும். இது புதிய யோசனை என தெரிவித்துள்ள இலங்கை முதலீட்டுசபை வட்டாரங்கள் ஜனாதிபதிதனது சுதந்திர தின உரையில் புலம்பெயர் இலங்கையர்களை இலங்கையின் அபிவிருத்தியில் இணைந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்ததன்பின்னணியில் இந்த திட்டம்…
-
- 11 replies
- 737 views
-
-
சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்கான காலம் முடிவடைந்துவிட்டது – ஹர்ஷ டி சில்வா சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதற்கான காலம் முடிந்துவிட்டதால், அரசாங்கம் இனி சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைச் சார்ந்திருக்க முடியாது என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. எரிபொருள் நெருக்கடியானது எரிசக்தி நெருக்கடியாக அதிகரித்துள்ளது. அதன் மூலம் நாட்டின் வங்கி முறைமையின் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினரான ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டின் நிதி நெருக்கடியானது உரிய நேரத்தில் தீர்க்கப்படாம…
-
- 0 replies
- 194 views
-
-
தமிழக மீனவர்கள் 21 பேருக்கு... 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 3 ஆண்டு சிறை! இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 21 பேருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோதே அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 31ஆம் திகதி பருத்தித்துறை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த 21 இந்திய மீனவர்களை பருத்தித்துறை மீனவர்கள் சுற்றிவளைத்து பிடித்தனர். இதனை அடுத்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் அவர்களை முற்படுத்திய நிலையில் இன்றுவரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/12…
-
- 0 replies
- 150 views
-
-
கழிவுகள் அடங்கிய 45 கொள்கலன்கள். மீண்டும்... பிரித்தானியாவிற்கு அனுப்பும் இலங்கை! பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு வந்த கழிவுகள் அடங்கிய 45 கொள்கலன்கள் இன்று (திங்கட்கிழமை) மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளன. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மனித கழிவுகள் அடங்கிய கொள்கலன்கள் இலங்கை வந்ததை அடுத்து பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில் சுங்கப் பணிப்பாளர் நாயகத்தின் மேற்பார்வையின் கீழ் குறித்த கொள்கலன்கள் இன்று திருப்பி அனுப்பப்படும் என சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுகத்தில் உள்ள CITC முனையத்தில் இருந்து குறித்த கொள்கலன்கள் மீள் ஏற்றுமதி செய்ய்யப்படும் என சுங்க திணைக்கள ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். https://athavannews.com/…
-
- 0 replies
- 163 views
-
-
இலங்கையின் உள்நாட்டுப் பொறிமுறையில் நம்பிக்கையில்லை; இணை அனுசரணை நாடுகள் இலங்கையின் உள்நாட்டு நல்லிணக்க செயல்பாடுகளில் நம்பிக்கையில்லை என ஜெனீவா தீர்மானத்துக்கு பிரதான அனுசரனை வழங்கிய நாடுகள் தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 45அமர்வில் ஜெனீவா தீர்மானத்துக்கு பிரதான அனுசரனை வழங்கிய நாடுகள் இதனை தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தனது உரையில் இலங்கை குறித்து வெளியிட்ட கரிசனைகளை கருத்தில் எடுத்துள்ளதாக அந்த நாடுகள் தெரிவித்துள்ளன. கனடா ஜேர்மனி பிரித்தானியா வடக்கு மசெடோனியா மற்றும் மொன்டிநீக்ரோ ஆகிய நாடுகளின் சார்பில் உரையாற்றிய பிரிட்டனின் மனித உரிமை விவகாரங்களுக்கான தூதுவர் ரீட்டா பிரென்ஞ் இதனை தெரிவித்துள்ளார். அடுத்த ம…
-
- 0 replies
- 147 views
-
-
இனஅழிப்பு விவகாரம்- ஐ.நாவுக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடிதம் கடந்த வருட அறிக்கையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையின் இனவழிப்பு தொடர்பில் பாரப்படுத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அதற்கு ஏதுவாக உரிய படிமுறைகளையும் தாங்களும், தாங்கள் சார்த்த ஐ.நா சபையும் விரைவாக ஆரம்பிக்க வேண்டுமென வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அவ்வமைப்பு ஐநா மனித உரிமை பேரவை ஆணையாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில்,வடக்கு,கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாம் எமது உறவுகளை தேடும் தொடர் போராட்டத்தை கடந்த 20.02.2017 அன்று கிளிந…
-
- 0 replies
- 336 views
-