Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கச்சதீவு திருவிழாவில் பக்தர்களுக்குத் தடை!! –சர்ச்சையைத் தடுக்க எடுக்கப்பட்ட தீர்மானம்!! அடுத்த மாதம் நடைபெறவுள்ள கச்சதீவு அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் பக்தர்கள் கலந்துகொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று மயிலிட்டி துறைமுகத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்த கடற்றொழில் அமைச்சர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். முன்னதாக இலங்கைப் பக்தர்கள் கலந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, பக்தர்கள் எவரும் கலந்துகொள்ள முடியாது என்று கொழும்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய உற்சவம் நடைபெறவுள்ளது. திருவிழாவுக்கான முன்னாயத…

  2. பயங்கரவாதிகளை நினைவுகூர அனுமதியில்லை – தனிப்பட்ட வகையில் நினைவுகூரலாம்! February 19, 2022 பயங்கரவாதிகளை நினைவுகூர அனுமதியில்லை என்றும், எனினும், போரின்போது உறவினர் ஒருவர் உயிரிழந்திருப்பாராயின், தனிப்பட்ட ரீதியில் அவரை நினைவுகூர அனுமதி வழங்க முடியும் என்றும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றனவா என்பது குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது. முந்தைய மனித உரிமைகள் ஆணைக்குழுக்கள் மற்றும் ஏனைய குழுக்களினது தீர்மானங்களின் மதிப்பாய்வு மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாவது இடைக்கால அறிக்கை, உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டீ. நவாஸால் நேற்று (18) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வை…

  3. தமிழரசு கட்சியின் இளைஞர் அமைப்பின் மேலதிக செயலாளரை கடத்த முயற்சிக்கப்பட்டதா? வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு விளக்கம் (எம்.மனோசித்ரா) இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அமைப்பின் மேலதிக செயலாளர் நிதன்ஷன் என்ற நபரை வெள்ளை வேனில் வந்த புலனாய்வு பிரிவினரால் கடத்த முயற்சிக்கப்பட்டதாக சாணக்கியன் ராஜபுத்திரன் ராசமாணிக்கம் என்ற பெயரில் நபரொருவரின் புகைப்படத்துடன் கூடிய டுவிட்டர் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது, கல்முனை பொலிஸ் பிரிவில் இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அமைப்பின் மேலதிக செயலாளர் நிதன்ஷன் என்ற நபரை வெள்ளை வ…

  4. சிவராத்திரிக்கு நாட்டின் சகல பாகங்களிலிருந்தும் பக்தர்கள் வர அனுமதி February 18, 2022 மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வுகளுக்காக நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தர உள்ள நிலையில் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்தார். எதிர்வரும் 1 ஆம் திகதி (01-03-2022) மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வுகள் இடம்பெற உள்ள நிலையில் முன் ஆயத்த நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் அவசர கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை (18) மாலை 3 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. …

  5. சர்வதேசத்திற்கு அனுப்ப தயாராகும் மலையக மக்களின் அரசியல் ஆவணம்! தமிழ் முற்போக்கு கூட்டணியின் கோரிக்கையின் பேரில், கண்டி சமூக அபிவிருத்தி மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் பி. முத்துலிங்கம் மற்றும் சமூக செயற்பாட்டாளர் கௌதமன் பாலசந்திரன் ஆகியோரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்திய வம்சாவளி மலையக மக்களின் அரசியல் ஆவண வரைபு, பெப்ரவரி 21ம் திகதி கொழும்பில் கலந்துரையாடப்பட்டு இறுதி வடிவம் பெறும். இந்த கலந்துரையாடலில் தமிழ் முற்போக்கு கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள், கூட்டணி கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் மலையக சிந்தனையாளர்கள் கலந்துக்கொள்வார்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். …

    • 2 replies
    • 311 views
  6. தமது வீடுகளுக்கு செல்லும் 47 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டிருந்த 47 இந்திய மீனவர்கள் இன்று காலை சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப் பட்டினம் பகுதியில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் மீன்பிடிக்க சென்ற 56 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்ட 56 மீனவர்களும் கடந்த மாதம் 25ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட இந்த 56 மீனவர்களில் 9 மீனவர்கள் மட்டும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு விமானம் மூலம் தமிழகம் அழைத்து வரப்பட்டனர். இந்த நிலையில் இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப…

  7. ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் வழக்கிலிருந்து, விடுவிக்கப்பட்டார் பூஜித் ஜயசுந்தர! ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காதது தொடர்பில் தொடரப்பட்டுள்ள வழக்குகளில் இருந்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நாமல் பலல்லே, ஆதித்ய படபெந்திகே மற்றும் மொஹமட் இர்ஷதீன் ஆகிய மூவரடங்கிய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழு இன்று(வெள்ளிக்கிழமை) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க தகவல் கிடைத்தும் நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக அவர் மீது குற்றவியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தது. இதேவேளை, ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காதது தொடர்பில் தொடரப்பட்டுள்ள வழக்குகளில…

    • 1 reply
    • 297 views
  8. எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்க உப செயலாளர் கேள்வி! உயிரோடில்லாதவர்களை கேட்டால் எப்படி தருவது என்று நீதி அமைச்சர் கேட்கின்றார் எனில் கையளிக்கப்பட்ட எமது உறவுகளிற்கு என்ன நடந்தது என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்க உப செயலாளர் ரத்தீஸ்வரன் கவிதா கேள்வி எழுப்பியுள்ளார். கிளிநொச்சியில் எதர்வரும் 20ம் திகதி இடம்பெறவுள்ள போராட்ட ஏற்பாடுகள் தொடர்பிலான ஊடக சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பகல் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உற…

    • 2 replies
    • 267 views
  9. யாழில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த இளம் பெண்ணை யாழ் மாவட்ட குற்றத்தடுப்புபிரிவினர் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. அரியாலை, பூம்புகார் பகுதியை சேர்ந்த 33 வயதான பெண்ணொருவரே ஹெரோயினுடன் சிக்கினார். பிறருக்கு சந்தேகம் ஏற்படாத விதத்தில் தனது 3 மாத கைக்குழந்தையுடன் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று, யாழ் மாவட்ட செயலகத்திற்கு அண்மையான பிரதேசத்தில் வைத்து அவர் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். கைது செய்யப்படும் வேளை பெண்ணிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 கிராம் தூய ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் மீட்கப்பட்டது. இதன் பெறுமதி 5 தொடக்கம் 6 இலட்சம் ரூபாவாகும். …

  10. சிங்களவரின் மூதாதையர்கள் இலங்கைக்கு வெளியில் இருந்து வரவில்லை. ஆரியர் வருகை என்பது கட்டுக்கதை. உள்நாட்டிலேயே ஆதியில் இருந்து வந்த மக்கள் தான் தமிழர்களதும் சிங்களவர்களதும் மூதாதையர்கள். இரு இனங்களும் ஒரே மூதாதையர்களின் வழித்தோன்றல்கள் என்பது வரலாற்று ரீதியாக தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் தமிழர்கள் வாழ்ந்து வந்த காலம் இற்றைக்கு 3000 வருடங்களில் இருந்து இற்றை வரையிலாகும். எமது மூதாதையர்களில் சிலர் சிங்கள மக்களாக மாறியது சிங்களமொழி நடைமுறைக்கு வந்த கி.பி 6ம், 7ம் நூற்றாண்டுகளிலாகும் என கூட்டிக்காட்டியுள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் எம்.பி. 6 தமிழ் கட்சிகளின் கூட்டு ஏற்பாட்டில் இன்று யாழ்ப்பாணத்தில் நடந்த அ…

  11. ‘தனக்கெதிரான போராட்டத்தை தானே ஒழுங்கமைத்ததாகச் சொல்லும் ஒரே அமைச்சர் டக்ளஸ்’ - எஸ். நிதர்ஷன் தனக்கெதிரான போராட்டத்தை தானே ஒழுங்கமைத்ததாகச் சொல்லும் ஒரே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவே என பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தினருடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். சுமந்திரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “அவர் பாவம் அவருக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவதை…

  12. சுதந்திர தினத்திற்கான செலவுகள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது! உணவு மற்றும் எரிபொருளின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கவலைகள் நிலவும் வேளையில் சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்காகச் செய்யப்பட்ட செலவுகள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது. தற்போதைய நிர்வாகம் காட்சிப்படுத்தப்பட்ட அரசாங்கமாக மாறியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரான ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். முப்படையினரின் பங்களிப்புடன் பெரும் செலவில் 74 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட…

  13. வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள போதிலும் உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை – சரத் வீரசேகரவின் மகனின் முகநூல் பதிவு குறித்து விசாரணை செய்யவேண்டும்- சமுடித்த தனது வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள போதிலும்தனக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என ஊடகவியலாளர் சமுடித்த சமரவிக்கிரம தெரிவித்துள்ளார். தனது தனிப்பட்டபாதுகாப்பு குறித்தும் குடும்பத்தின் பாதுகாப்பு குறித்தும் தான் கவலை கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை அமைச்சர் சரத்வீரசேகரவின் மகனின் முகநூல் பதிவை பொலிஸார் அலட்சியம் செய்ய முடியாது என தெரிவித்துள்ள ஊடகவியலாளர் ஊடக அறிக்கைகள் முகநூல்பதிவுகளி;ற்காக பலர் விசா…

  14. நிதியமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ள எரிசக்தி அமைச்சு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நாளொன்றுக்கு 551 மில்லியன் ரூபா நட்டத்தில் எரிபொருளை விற்பனை செய்வதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இதன் காரணமாக எரிபொருள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளை நீக்குமாறு எரிசக்தி அமைச்சு நிதியமைச்சிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ந்தும் நட்டத்தை ஈடுகட்ட எரிபொருள் விலையை அதிகரிக்க அனுமதி கோரியுள்ள பின்னணியிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=157680

  15. கொழும்பின் சில பகுதிகளில்... திடீர், என அமுலானது 36 மணித்தியால நீர்வெட்டு! கொழும்பின் சில பகுதிகளில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் 36 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. பிரதான குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாகவே இவ்வாறு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்காரணமாக கொழும்பு 1, 7, 9, 10, 12 ஆகிய இடங்களில் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை கொழும்பு 8 மற்றும் 11 ஆகிய பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1267642 ############# ############### …

  16. யாழ்ப்பாண மாவட்ட... வெளியீட்டு பணியகம் அங்குராப்பணம் செய்யப்பட்டது! அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாவட்ட வெளியீட்டு பணியகத்தின் அங்குராப்பண நிகழ்வு யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலமையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து யாழ். மாவட்ட ஊடகவியலாளர்களுடன் சிநேகித பூர்வ சந்திப்பும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், சுரேன் ராகவன் , உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2022/1267675

  17. குழந்தைகளுக்கான பால் போத்தல்கள், உணவுதட்டுகளில் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனம்! குழந்தைகளுக்கான பால் மற்றும் ஏனைய உணவுகள் வழங்கப்படும் போத்தல்கள் மற்றும் உணவுதட்டுகளில் பிஸ்பினோல் எனப்படும் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனம் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் நீதிக்கான கேந்திரம் ஒத்துழைப்பில், தேசிய ஊழல் ஒழிப்பு வலையமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்காக இலங்கை, பங்களாதேஸ், சீனா, பூட்டான், மலேசியா, இந்தோனேஷியா, ரஷ்யா மற்றும் தன்சானியா ஆகிய நாடுகளில் இந்த பால் போத்தல்கள் மற்றும் உணவு தட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது ஐரோப்பிய சங்கத்தின் உறுப்பு நாடுகளிலும், மலேசியா, சீனா மற்றும் இந்தோனேஷியா …

  18. வெளிநாடு செல்வோருக்கான, பி.சி.ஆர் பரிசோதனைக்கு யாழ்.போதனாவில் கட்டணம்! வெளிநாடு செல்வதற்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்வோரிடம் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 6500 ரூபாய் அறவிடப்படும் என யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே. நந்தகுமாரன் அறிவித்துள்ளார். மத்திய சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இக்கட்டணம் அறவிடப்படுவதாக தெரிவித்துள்ளார். இதேவேளை கடந்த தினங்களில் வெளிநாட்டு பிரஜைகளுக்கான பரிசோதனைக்காக 5ஆயிரம் ரூபாய் அறவிடப்பட்டு வந்ததுடன் , இலங்கை பிரஜைகளுக்கு முதல் தடவை பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையிலையே நாளை முதல் சகலருக்கும் பி.சி.ஆர் பரிசோதனைக்காக 6500 ரூபாய் அறவிடப்படவுள்ளமை குறிப…

  19. மைத்திரிபால சிறிசேன, யாழிற்கு விஜயம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன யாழ். மாவட்டத்துக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட மாநாடு எதிர்வரும் 20ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இம்மாநாட்டுக்கான அழைப்பிதழை, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் நேற்று உத்தியோகபூர்வமாக கையளித்தார். இதன்போது, யாழ். மாவட்ட மக்கள் கடந்த காலத்தில் தமக்கு வழங்கிய ஆதரவை நினைவுகூர்ந்த மைத்திரிபால சிறிசேன, யாழ். மாவட்ட மக்களை சந்திப்பதற்கு ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார். https://athavanne…

  20. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை, தவறாகப் பயன்படுத்த வேண்டாம் – பொலிஸாருக்கு ஜனாதிபதி பணிப்புரை. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்றும் பயங்கரவாதத்துடன் தெளிவான தொடர்புகள் இருந்தால் மாத்திரம் பயன்படுத்துமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்தார். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் விசாரணைகளை கைவிடுவதற்கு பயங்கரவாத தடைச்சட்டத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி பொலிஸாரிடம் கூறியதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பாக பொறுப்பற்ற பயன்பாடு நிறுத்தப்பட வேண்டும் என்று அரசாங்கம் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் அது நடக்கிறதா இல்லையா என்று ஒரு வாய்ப்ப…

    • 2 replies
    • 256 views
  21. அம்பிகா சற்குணநாதன் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளார். பயங்கரவாத தடை சட்டத்தை திருத்தும் சட்ட மூலம் இலங்கையின் அரசியலமைப்பின் 3, 4, 11, 12(1), 13(1), 13(3), 13(4), 13(5), 138 அல்லது 141 ஆகிய சட்டங்களுக்கு முரணானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பயங்கரவாத தடை சட்டத்தை திருத்தும் சட்ட மூலத்தை சவாலுக்கு உட்படுத்தி பாக்கியசோதி சரவணமுத்தூவினாலும் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. …

    • 2 replies
    • 390 views
  22. வவுனியா பண்டாரிகுளம் விபுலானந்தாக்கல்லூரி மாணவி கங்காதரன் ஹரிஸ்ணவி பாலியல் படுகொலை செய்யப்பட்டு நேற்றுடன் (16.02.2022 ) ஆறு வருடங்கள் கடந்துவிட்டன. இச்சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் எவரும் கண்டுபிடிக்கப்பட்டு இது வரை தண்டனை பெற்றுக்கொடுக்கப்படவில்லை. அண்மையில் வவுனியா உயர் நீதிமன்றத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ள வித்தியாவின் படுகொலைக்கு நீதியைப் பெற்றுக் கொடுத்த நீதிபதி இளஞ்செழியன் எனது மகளின் பாலியல் படுகொலைக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பார் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளதாக பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு உயிரிழந்த ஹரிஸ்ணவியின் தந்தை கங்காதரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். வவுனியா உக்கிளாங்குளத்தில் வீட்டில் தனியாக இருந்தபோது 16 வயது பாடசாலை மாணவியான ஹரிஸ்ணவி கட…

    • 2 replies
    • 378 views
  23. இந்தியாவிடமிருந்து, 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை... கடனாகப் பெறத் திட்டம் -ஜி.எல்.பீரிஸ் இந்தியாவிடமிருந்து 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக இம்மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 49ஆவது அமர்வு இம்மாதம் 28ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், அங்கு ஆணையாளர் நாயகம் மிச்சேல் பச்சலட் இலங்கை தொடர்பாக முன்வைக்கவுள்ள அறிக்கை குறித்து மார்ச் மாதம் 3ஆம் திகதி கலந்துரையாடப்படவுள்ளது…

    • 8 replies
    • 460 views
  24. ‘நான் ஒரு தமிழ் குடிமகன்’; நிதி நிறுவனம் வழங்கிய சிங்களத்தில் படிவத்தில் எழுதிக் கொடுத்த இளைஞன்: யாழில் சம்பவம்! யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் சிங்கள மொழியில் வழங்கப்பட்ட படிவத்தில், தனது தாய்மொழி தமிழ் என இளைஞர் ஒருவர் எழுதிக் கொடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழிலுள்ள நிதி நிறுவனமொன்றில் வாகன விபத்து காப்புறுதிக்கு படிவம் பெற சென்ற இளைஞருக்கு சிங்கள மொழியிலான படிவம் வழங்கப்பட்டுள்ளது. அந்த படிவத்தை நிராகரித்து, தனக்கு தமிழ் மொழியிலான படிவத்தை வழங்கும்படி கேட்டுள்ளார். அத்துடன், சிங்கள மொழியிலான படிவத்தின் மேல், ‘எனது தாய் மொழி தமிழ். தமிழ் படிவம் வழங்கவும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அந்த இளைஞன் பே…

    • 9 replies
    • 707 views
  25. ''உங்களின் பிள்ளைகள் உயிருடன் இல்லை" - இலங்கை அமைச்சர் அலி சப்ரி கருத்தும், கேள்விகளும் ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ALI SABRY FB படக்குறிப்பு, நீதி அமைச்சர் அலி சப்ரி ''உங்களின் பிள்ளைகள் இப்போது உயிருடன் இல்லை என்பதை அவர்களின் முகத்தை பார்த்து எவ்வாறு கூறுவது?" என இலங்கை நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். யுத்த காலப் பகுதியில் வலிந்து காணாமல் போனோர் தொடர்பில் வீரகேசரி பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.