Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வெளிநாட்டில் இருந்து பணம் வழங்கி யாழில் பெற்றோல் குண்டு தாக்குதல்! யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதலை மேற்கொள்ளுமாறு தமக்கு 30 ஆயிரம் ரூபாய் பணம் வெளிநாட்டில் இருந்து வழங்கப்பட்டதாக சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தம்மிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது கடந்த மாதம் 10ஆம் திகதி பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ம…

  2. நாட்டில் தீவிரமடையும் எலிக்காய்ச்சல்! நாட்டில் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த மாதத்தின் 17ஆம் திகதி வரை 5 ஆயிரத்து 275 பேர் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 844 எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இந்த காலப்பகுதியில் இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 4 ஆகும். 2020 ஆம் ஆண்டில் 8 ஆயிரத்து 579 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், க…

  3. “ஒரே நாடு ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணியின் வடக்கு மாகாணத்தில் மூன்றாவது கூட்டம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (22) இடம்பெற்றுள்ளது. இந்த கூட்டம் ஒரே நாடு, ஒரே சட்டம் செயலணியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான கருத்தறியும் கூட்டம் செயலணியின் தலைவர் ஞானசார தேரர் தலைமையிலான செயலணியின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றுள்ளது. இதன்போது ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்ட சமூக மட்ட உறுப்பினர்களிடம் மட்டும் ஒரே நாடு, ஒரே சட்டம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் கேட்டறியப்பட்டன. இதன்போது நடைபெற்ற செய்தி சேகரிப்பதற்கு சென்ற முல்லைத்தீவு பிரதேச ஊடகவியலாளர்களுக்கு கருத்தறியும் கூட்டம் நடைபெற்றவேளை அனுமதி மறுக்கப்பட்ட…

    • 17 replies
    • 737 views
  4. கனடா... குழப்பம், தொடர்பில்... விளக்கம் கோரியுள்ள மாவை! கனடாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைபின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கலந்துகொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பத்திற்கு கட்சியின் கனடா கிளையின் கருத்தை கோரியுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பப்பட்ட போதே மாவை சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் கடந்த வாரம் கனடாவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது அங்கு வருகைதந்த சிலரால் குழப்பம் ஏற்படுத்…

  5. (நா.தனுஜா) இலங்கையுடனான தமது வெளியுறவுக்கொள்கையின் அடிப்படையாக மனித உரிமைகளே காணப்படுவதாகவும் நிரந்தர சமாதானத்தை அடைந்துகொள்வதற்கான தேடலில் தமிழ் மக்களுக்கான ஆதரவை வழங்கத்தயாராக இருப்பதாகவும் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச்செயலாளர் டொனால்ட் லூ, இலங்கையிலிருந்து சென்ற எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினரிடம் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரன் மற்றும் கலாநிதி நிர்மலா சந்திரஹாசன் ஆகியோர் அடங்கிய சட்டநிபுணர் குழு கடந்த 13 ஆம் திகதி அமெரிக்கா பயணமானத…

  6. (எம்.நியூட்டன்) தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு பயறு மற்றும் உழுந்து விதை பொதிகள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது. நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு தேசிய கொள்கை திட்டத்திற்கமைய, கிராமிய அபிவிருத்தி மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வழிகாட்டலில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வானது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உழுந்து மற்றும் பயிறு பயிர்ச்செய்கைத் திட்டத்தினொரு கட்டமாக விதை பொதிகள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. யாழ். மாவட்டம் முழுவதும் 8 மில்லியன் ரூபா…

  7. மனோ கணேசனுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். https://www.dailymirror.lk/breaking_news/Mano-Ganesan-contracts-COVID-19/108-224976 விரைவில் நலம் பெற வேண்டும்.

  8. டெங்கு வைரஸ் தொற்றுள்ள ஒருவர் வெளி மாகாணங்களில் இருந்து இங்கு வருகை தந்தால் டெங்கு நோய் எந்த நேரத்திலும் யாழ்ப்பாணத்தில் தீவிரமாக பரவும் வாய்ப்புள்ளதென வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். நேற்று (23) யாழ். மாவட்ட செயலகத்தில் கொரோனா தொற்று மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பான கூட்டத்துக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் நுளம்புகள் சம்பந்தமான பூச்சியியல் ஆய்விலே டெங்கு நோயைப் பரப்புகின்ற நுளம்புகளும் குடம்பிகளும் அதிகமாக காணப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. டெங்கு வைரஸ் தொற்றுள்ள ஒருவர் வெளி மாகாணங்களில் இருந்து இங்கு வருகை தந்தால் டெங்கு நோய்…

  9. (இராஜதுரை ஹஷான்) அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கமைய உணவு பொருட்களின் விலைகளை அதிகரிக்க சிற்றுண்டி உரிமையாளர் சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர் அதற்கமைய உணவு பொதி ஒன்றின் விலை நாளை முதல் 20ரூபாவினால் அதிகரிக்கப்படும் என சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர். அதேபோல் தேநீர் கோப்பை ஒன்றின் விலை 5 ரூபாவினாலும், ஏனைய உணவு பொருட்களின் விலை ஒப்பீட்டளவில் அதிகரிப்பட்டுள்ளது.சமையல் எரிவாயு மற்றும் மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் உணவு பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தினால் காரணமாக வாழ்க்கை சுமை அதிகரிக்கப்பட்டுள்ளது ஆகவே பொருள் ஏற்றல் மற்றும் இறக்கல் ஆகியவற்றிற்கான கூலியை 15 ரூபாவின…

  10. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) கிளிநொச்சி டிப்போ சந்தியில் சுற்றுவட்டப்பாதை அமைக்கும் சிறீதரன் எம்.பி.யின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றுமாறு நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டார். பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற புத்தசாசன ,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு,தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள்,மற்றும் கிராமிய கலைநுட்ப ,மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு, அரசாங்க சேவைகள்,மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு,மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் இராஜாங்க அமைச்சு ஆகியவற்றின் மீதான குழு நிலைவிவாத்தில் உரையாற்றிய சிறீதரன் எம்.பி, டிப்போ சந்தியில் சுற்றுவட்ட சந்தியை அமைத்து சைகை விளக்குகளை பொருந்துமாறு தா…

  11. (நா.தனுஜா) தேசிய நல்லிணக்கத்தை அடைந்துகொள்வதற்கான நடவடிக்கைகளின்போது புலம்பெயர் தமிழர்கள் பெருமளவில் வாழும் சர்வதேச நாடுகளின் அரசியல்போக்கு தொடர்பில் கவனம் விசேட கவனம் செலுத்தவேண்டும். ஏனெனில் கனடா, பிரிட்டன் உள்ளடங்கலாக பல்வேறு நாடுகளிலும் வாழும் புலம்பெயர் தமிழர்கள் படிப்படியாக அந்நாடுகளில் தமக்கென அரசியல் ரீதியான தலைமைத்துவத்தையும் இருப்பையும் உருவாக்கிக்கொண்டிருக்கின்றார்கள். அதுமாத்திரமன்றி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை ஊக்குவிக்கின்ற நாடுகள் பெருமளவான புலம்பெயர் தமிழர்களைக்கொண்ட நாடுகளாக இருக்கின்றன என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம ஜனாதிபதி ஆணைக்குழுவில் சுட்டிக்காட்டியுள்ளார். அதும…

  12. யாழ்.மந்துவில் பகுதியில் புலிகளின் தயாரிப்பு வெடிபொருட்கள் பெருமளவு மீட்பு! November 24, 2021 மாவீரர் வார கால பகுதியில் யாழில். விடுதலைப்புலிகளின் தயாரிப்பு வெடிபொருட்கள் உள்ளிட்ட பெருமளவான வெடி பொருட்கள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (23.11.21) மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் சாவகச்சேரி மந்துவில் வடக்கு ஜே/346 கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் , விடுதலைப்புலிகளின் காலத்தில் அவர்களால் பராமரிக்கப்பட்டு வந்த தென்னந்தோப்புக்குள் இருந்தே வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த காணிக்குள் விடுதலைப்புலிகளின் தயாரிப்பு வெடிபொருட்கள் உட்பட பெருமளவான வெடிபொருட்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப…

    • 3 replies
    • 373 views
  13. உறவுகளை நினைவுகூர அனுமதி கொடுங்கள் - பிரதமர் முன்னிலையில் ஸ்ரீதரன் கோரிக்கை (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) உயிரிழந்த ஆத்மாக்கள் துயிலும் இல்லங்கள் மீது நீங்கள் சப்பாத்துக்கால்களால் மிதிக்கும்வரை இந்த நாட்டில் அமைதி,சமாதானம்,நல்லிணக்கம் ஏற்படப்போவதில்லை. நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்றால் இனவாதத்தை முதலில் தூக்கி எரிய வேண்டும். எமது மக்கள் இழந்த தமது உறவுகளை நினைவுகூர அனுமதி கொடுங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யான எஸ்.ஸ்ரீதரன் பிரதமர் முன்னிலையில் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான செலவினத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்த அவர் …

  14. தடைசெய்யப்பட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகளுடனும் பேசுவது அவசியம் - மஹிந்த சமரசிங்க (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) புலம்பெயர் தமிழ் அமைப்புகளை மட்டுமல்ல சிங்கள, முஸ்லிம் புலம்பெயர் அமைப்புகளையும் இணைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் தடைசெய்யப்பட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவன் மூலமே அவர்களின் நிலைப்பாடு என்னவென்பது தெரிந்துகொள்ள முடியும் எனவும் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை, ஜனாதிபதி, பிரதமரின் அமைச்சுக்களின் செலவீனத்தலைப்புக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ…

  15. வடக்கு மாகாண பொது உறவுகள் தொடர்பிலான இணைப்பாளராக ஓய்வுபெற்ற பொலிஸ் அத்தியட்சர் கணேசநாதன் நியமனம் வடக்கு மாகாணத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின், பொது உறவுகள் தொடர்பிலான இணைப்பாளராக ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரி. கணேசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.பொலிஸ் தலைமையகத்தின் குற்றத் தடுப்புப் பிரிவு, போக்குவரத்து தலைமையகம் உள்ளிட்ட பொலிஸ் திணைக்களத்தின் முக்கிய பிரிவுகளின் பனிப்பாளராக கடமையாற்றிய அனுபவமிக்க ரி.கணேசநாதன், இறுதியாக வட மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. வட மாகாணத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக கடமையாற்றிய அவர், வட மாகாணத்தில் பொது மக்களுடன் நெருங்கி…

  16. பருத்தித்துறை மாவீரா் தின ஏற்பாடுகளிலும் படையினரால் அச்சுறுத்தல் November 23, 2021 பருத்தித்துறை முனைப்பகுதியில் கடந்த வருடங்களில் மாவீரா் தின நினைவேந்தல் நடைபெற்ற இடத்தில் இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் சிரமதானப் பணிகள் நடைபெற்றது. அதன்போது அப்பகுதியில் பெருமளவு இராணுவத்தினா் மற்றும் புலனாய்வாளா்கள் குவிக்கப்பட்டிருந்தனா். அவா்கள் அங்கு சிரமதானத்தில் ஈடுபட்டிருந்தவா்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தியும், வாகன இலக்கங்களையும் பதிவு செய்துள்ளனா். அத்துடன் சிரமதானம் முடிந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளா்கள் தத்தமது வாகனங்களில் திரும்பிய வேளையில் மோட்டாா்சைக்கிள்கள் மற்றும் வாகனங்களில் படையினா் மற்ற…

  17. புதிய அரசியலமைப்பு வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து விவாதிப்போம் – பிரதமர் புதிய அரசியலமைப்பு வரைவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தார். ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட நிறுவனங்களின் செலவின தலைப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”உலகளாவிய கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் நாம் அரசாங்கம் என்ற ரீதியில் மக்களை பாதுகாப்பதற்கே முன்னுரிமை வழங்கினோம். மக்களின் பாதுகாப்பிற்காக நாம் உரிய நேரத்தில் சகல தீர்மானங்களையும் மேற்கொண்டோம் என்பதனை நாம் உங்களுக்கு…

  18. இலங்கையில் முதன்முறையாக உயர் தொழில்நுட்ப கேபிள்களின் மேல் அமைக்கப்பட்ட புதிய களனி பாலம் இன்று திறப்பு! இலங்கையில் முதற்தடவையாக உயர் தொழில்நுட்ப கேபிள்களின் மேல் அமைக்கப்பட்ட புதிய களனி பாலம் இன்று (புதன்கிழமை) திறக்கப்படுகிறது. சுகாதார பாதுகாப்பு முறைகளுக்கு அமைய இன்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரால் இந்தப் புதிய பாலம் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த புதிய களனி பாலம் ‘கல்யாணி பொன் நுழைவு’ (Golden Gate Kalyani) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கொழும்பு கட்டுநாயக்க அதிவேக பாதை திறக்கப்பட்ட பின்னர் கொழும்பு நகரம் மற்றும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் என்பன ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டதால் கொழும்பு நகருக்குள் நுழையும் வா…

  19. வடக்கு மற்றும் கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகள் மீதான கட்டுப்பாடுகள் – பிரித்தானியா கவலை! 2021ஆம் ஆண்டின் முதல் பாதியில் இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகம், தமிழ் மற்றும் முஸ்லிம் நலன்புரி அமைப்புக்கள் உட்பட பல குழுக்களைத் தடைசெய்து, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சமூகங்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் மீதான கட்டுப்பாடுகளுடன் சிறுபான்மை குழுக்களை அரசாங்கம் ஓரங்கட்டுவது தொடர்கிறது என தெரிவித்துள்ளது. மேலும் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் (OHCHR) அறிக்கையானத…

  20. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தம் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மீதான முதலாவது வாக்கெடுப்பிலும் இறுதி வாக்கப்பெடுப்பிலும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கட்சியின் தலைவர் றிஷாத் பதியுத்தீன்,இஷ்ஹாக் றஹ்மான், அலி சப்றி றஹீம் மற்றும் முஷாரப் முதுநபீன் ஆகிய நால்வரும் வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என, நேற்று (2021.11.21) நடைபெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அரசியல் அதிகார சபைக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது. குறித்த தீர்மானம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கும் மின்னஞ்சல், குறுஞ்செய்தி, வட்…

  21. புலம்பெயர் தமிழர்களினாலேயே இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும்- சார்ள்ஸ் நிர்மலநாதன் பொருளாதார ரீதியாக பலமாகவுள்ள புலம் பெயர் தமிழர்களினாலேயே இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற குழுநிலை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது சார்ள்ஸ் நிர்மலநாதன் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கை போன்ற சிறிய நாட்டில் வருமானத்தை மீறிய மிகவும் பெரிய தொகையை, ஒவ்வொரு வருடமும் மாறி மாறி வருகின்ற அரசாங்கங்கள் பாதுகாப்புக்காக ஒதுக்குகின்றது. இதுவே இலங்கை தொடர்ச்சியாக பொருளாதார பாதிப்புக்கு உள்ளாகுவதற்கு முக்…

    • 3 replies
    • 385 views
  22. யாழில் மாவீரர் தினத்துக்கு... தடைகோரி, பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி மாவீரர் தினத்துக்கு தடைகோரி சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பொலிஸார் இணைந்து சாவகச்சேரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சாவகச்சேரி நீதிமன்றத்தில் சாவகச்சேரி, கொடிகாமம் பொலிஸாரால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 13 பேருக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்க கோரி, சாவகச்சேரி நீதிமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) கோரிக்கை முன்வைத்தனர். இதன்போது வழக்கை விசாரித்த சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் யூட்சன், பெயர் குறிப்பிட்டவர்களில் பெரும்பாலானவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் இருப்பதாலும் இலங்கையின் சட்டம் இயற்றுகின்ற உயரி…

    • 4 replies
    • 316 views
  23. பூநகரி பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம், ஆளும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினாலேயே தோற்கடிக்கப்பட்டுள்ளது. வரவு - செலவுத் திட்டத்துடனான பிரதேச சபை அமர்வு, பூநகரி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் ஐயம்பிள்ளை தலைமையில், இன்றுகாலை 10 மணிக்கு, ஆரம்பமானது. இதன்போது, 2022ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் சபை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதன்போது, ஆதரவாக 8 வாக்குகளும் எதிராக 10 வாக்குகளும், குறித்த வரவு - செலவுத் திட்டத்துக்கு கிடைத்திருந்தது. 11 பேர் கொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர்களில் 10 பேரும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஒருவரும் எதிராக வாக்களித்தனர். தவிசாளர் மற்றும் சுதந்திர கட்சி உறுப்பினர்கள் இருவரும், ஐக்கிய தேசிய கட…

  24. வவுனியாவில்... 8 காட்டு யானைகள் உயிரிழப்பு வவுனியா மாவட்டத்தில் காட்டு யானைகள் எட்டு உயிரிழந்துள்ளதாக மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள தகவல்கள் தெரிவிகின்றன . வவுனியா மாவட்டத்தில் இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் செட்டிகுளத்தில் 3, நெடுங்கேணியில் 3, வவுனியாவில் 2 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. மேலும் காட்டு யானைகள், மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைகின்றதுடன் மக்களின் வாழ்வாதாரங்களையும் அழித்தொழிக்கும் நடவடிக்கையையும் மேற்கொள்கின்றது . ஆகையினால் மக்கள் தொடர்ச்சியாக காட்டு யானைகளின் அச்சுறுத்தல்களுடன் வசித்து வருகின்றனர். கடந்த வருடம் 2020 ஆண்டு வவுனியா மாவட்டத்தில் 10 யானைகள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/…

  25. கிண்ணியாவில்... படகு கவிழ்ந்ததில் 06 பேர் உயிரிழப்பு திருகோணமலை – கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பாலப்பகுதியில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 11 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 20 மாணவர்களை ஏற்றிச்சென்ற படகு ஒன்று இன்று (23) கவிழ்ந்துள்ளது. https://athavannews.com/2021/1251621

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.