ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142896 topics in this forum
-
மக்கள் சேவைக்காக வரும் உறுப்பினர்களுக்கு எதற்கு ஓய்வூதியம்? மக்கள் சேவைக்காக வரும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதற்கு ஓய்வூதியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வரவு - செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் பங்கேற்கு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “ஆளும் தரப்பினரும் எதிர் தரப்பினரும் கொள்ளையடித்தவர்கள் தொடர்பாக பேசுகிறார்கள். நாமும் இந்தக் கொள்ளையர்கள் எப்போது பிடிப்பட்டு சிறைக்குச் செல்வார்கள் என்பதை காண ஆவலாக இருக்கிறோம்.மத்திய வங்கியில் கொள்ளையடித்தவர்கள் இருந்தால், அவர்களை சிறையில் அடையுங்கள். நாமும் அதன…
-
- 2 replies
- 346 views
-
-
நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் 9லட்சத்து 50ஆயிரம் ரூபாவுக்கு அடகு வைக்கப்பட்டுள்ளனர் என்று ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினா் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஒரு இலங்கை மாதாவே இருக்கிறாா். இந்தநிலையில் இந்த நாட்டை துண்டு துண்டுகளாக உடைத்து விற்பனை செய்வதை 225 நாடாளுமன்ற உறுப்பினா்களும் தடுப்பதே பிரதான இலக்காக இருக்கவேண்டும். இதனை மேற்கொள்ளமுடியாதவா்களை எவ்வாறு மக்கள் பிரதிநிதிகள் என்று கூறுவது என்று அவா் கேள்வி எழுப்பியுள்ளாா். இதற்காக கட்சி பேதம் இன்றி, இனவாதம் இன்றி, மதவேறுபாடு இன்றி செயற்படாது போனால்…
-
- 0 replies
- 153 views
-
-
மக்களுக்கு அச்சுறுத்தலாக காணப்பட்ட பாரிய நீர்த்தாங்கி குண்டு வைத்து தகர்ப்பு November 15, 2021 மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி கிராமத்தில் சுமார் 45 வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டு கைவிடப்பட்டிருந்த பாரிய நீர் தாங்கி இன்று திங்கட்கிழமை(15) காலை 10.30 மணியளவில் தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவு இராணுவத்தின் உதவியுடன் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. -சுமார் 45 வருடங்களுக்கு முன்னர் நீர் விநியோகத்திற்கென துறைமுகங்கள் அதிகார சபையினால் குறித்த நீர்த்தாங்கி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அமைக்கப்பட்ட பாரிய நீர் தாங்கியில் இருந்து எந்த ஒரு நீர் விநியோகமும் மேற்கொள்ளப்படாத நிலையில் நீர்த்தாங்கி முழுமையாக பழுதடைந்துள்ளது. …
-
- 5 replies
- 535 views
-
-
கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தில் இருந்து உயர்தரம் கற்பதற்கான அனுமதிக்கு கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு வருகை தந்த மாணவிகள் பாடசாலைக்கு முன்பாக ஏ9 வீதியின் மேற்கு பகுதியிலிருந்து பாடசாலை பக்கம் பாதாசாரி கடவையில் வீதியை கடந்த போது ஏற்பட்ட விபத்தில் மாணவி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதோடு, மற்றுமொரு மாணவி காயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்று (15.11.2021) காலை 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கிளிநொச்சி ஊற்றுப்புலம் பாடசாலையில் கல்வி பொது சாதாரண தரம் கல்வி கற்ற மாணவிகள் மூவர் உயர்தரம் கல்விக்காக கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு அனுமதி பெறுவதற்காக பாடசாலைக்கு வருகை தந்த போது இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. ஏ9 வீதியில் ம…
-
- 1 reply
- 348 views
- 1 follower
-
-
இலங்கை போரில் காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு அரசு அறிவித்த நிதியுதவி - வெடிக்கும் எதிர்வினை ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கை உள்நாட்டு போரின் காரணமாக காணாமல் போனோர் தொடர்பிலான பிரச்னை, யுத்தம் நிறைவடைந்து 12 வருடங்கள் கடந்துள்ள போதிலும் இன்றும் முடிவின்றி தொடர்கிறது. யுத்தம் நிறைவடைந்த பின்னர், காணாமல் போனோர் தொடர்பில் பல்வேறு விசாரணைகள் நடத்தப்பட்டிருந்தாலும், அதற்கான தீர்வு இன்று வரை கிடைக்கவில்லை. இவ்வாறான பின்னணியில், வலிந்து காணாமல் போனோரின் உறவினர்கள் அன்று முதல் இன்று வரை தொடர் போராட்டங்களை…
-
- 0 replies
- 200 views
- 1 follower
-
-
நேர்மையாக கடமையாற்றியதன் காரணமாக தற்போதைய ஊழல்வாதிகளுடன் இணைந்து கடமையாற்ற முடியாது இதனால் என்னை வேறு இடங்களுக்கு மாற்ற முயற்சித்தார்கள்-யாழ் மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் அரச அதிகாரிகள் மக்களுக்கு சேவையாற்றவே அன்றி அரசியல்வாதிகள் சொல்வதைச் செய்பவர்கள் அல்ல என யாழ் மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார் . அளவையூர் தத்துவஞானி கைலாசபதி அரங்கில் இடம்பெற்ற தனது சேவை நயப்பு விழாவில் கலந்து உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார் அரச அதிகாரிகள் மக்களுக்கு சேவையாற்றவே அன்றி அரசியல்வாதிகள் சொல்வதைச செய்ய அல்ல. நான் இன்று ஓய்வு பெற்று இருக்கின்றேன் நான் இன்று நேர்மையான அதிகாரி என சொல்வதற்கு காரணம் என் தந்தை மற்றும் என்னை கற…
-
- 0 replies
- 239 views
-
-
மன்னார் பிரதேச சபை தலைவரின் பதவி நீக்கம் : முன்னாள் ஆளுநர் சார்ள்ஸின் வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்தார் புதிய ஆளுநர் (எம்.எப்.எம்.பஸீர்) மன்னார் பிரதேச சபையின் தலைவர் மற்றும் சபை அங்கத்துவ பதவியிலிருந்து ஷாகுல் ஹமீத் மொஹமட் முஜாஹிரை நீக்கி முன்னாள் ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை வட மாகாணத்தின் புதிய ஆளுநர் ஜீவன் தியாகராஜா இரத்து செய்துள்ளார். மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் ஷாகுல் ஹமீத் மொஹமட் முஜாஹிர், தவிசாளர் மற்றும் உறுப்பினர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுவதாக கடந்த செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டிருந்தது. முன்னாள் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டது. …
-
- 0 replies
- 172 views
-
-
சிங்கள குடியேற்றத்துக்கு எதிராக வவுனியாவில் மாபெரும் போராட்டம் வவுனியா மாவட்டத்தின் இனப்பரம்பலை மாற்ற எடுக்கும் முயற்சிக்கெதிராக வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று (15) காலை மாபெரும் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. திட்டமிட்ட குடியேற்றத்திற்கு எதிரான மக்கள் போராட்ட குழு மற்றும் தமிழ்அரசியல் கட்சிகளின் ஏற்பாட்டில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், எங்கள் நிலம் எமக்கு வேண்டும், தொல்பொருட்திணைக்களமே வரலாற்றை திரிபுபடுத்தாதே, அதிகார இனவெறியை தமிழர்கள்மீது காட்டாதே, சிங்கள குடியேற்றத்தை நிறுத்து போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோஷங்களையும் எழுப்பியிருந்தனர். இதேவேளை ஜனாதிபதிக்கு அ…
-
- 0 replies
- 213 views
-
-
ரியாஜ் பதியுதீன் கடுமையான நிபந்தனைகளின் கீழ் விளக்கமறியலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீனின் சகோதரரான ரியாஜ் பதியுதீன் கடுமையான நிபந்தனைகளின் கீழ் உச்ச நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ரியாஜ் பதியுதீன் கடுமையான நிபந்தனைகளின் கீழ் விளக்கமறியலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் (adaderana.lk)
-
- 0 replies
- 287 views
-
-
இந்துக்களாகிய நாம் எந்த மதத்தவர்களோடும் சண்டை பிடிக்கப் போவதில்லை – கலாநிதி ஆறு திருமுருகன் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் மிகவும் ஒற்றுமையாக செயற்பட்டவர்கள். நாங்கள் படிக்கின்ற காலத்தில் கிறிஸ்தவ நண்பர்களோடு சேர்ந்து, பழகி ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம்.நான் துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட போது என்னை முதன்முதலில் நேரடியாக வந்து வாழ்த்தியவர் தற்போது யாழ். மாவட்ட ஆயராக உள்ள ஜஸ்டின் ஞானப்பிரகாசம் அவர்களே. அவ்வாறு நாங்கள் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றோம் என துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது ஒரு பிரச்சனை காணப்படுகின்…
-
- 25 replies
- 1.3k views
- 1 follower
-
-
இலங்கை குற்றக்குழு தலைவன் அங்கொட லொக்காவின் கூட்டாளி உள்பட இருவர் கைது 14 நவம்பர் 2021 படக்குறிப்பு, இலங்கை குற்றக்குழு தலைவன் அங்கட லொக்கா இலங்கை குற்றக்குழு தலைவன் மறைந்த அங்கொட லொக்காவின் கூட்டாளி ஒருவர் உட்பட இருவரை பெங்களூருவில் கைது செய்த தமிழக குற்றப்புலனாய்வு காவல்துறையினர், கோவையில் நீதிமன்றத்தில் இருவரையும் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இலங்கையில் நிழல் உலக தாதாவாக இருந்த அங்கொட லொக்கா, கோவை, சேரன்மாநகர் பகுதியில, பிரதீப் சிங் என்ற பெயரில், அவரது காதலி அம்மானி தான்ஜியுடன் 2018 முதல் ரகசியமாக வசித்து வந்தார். திடீர் உடல்நிலை பாதிக்கப்பட்ட அங்கொடா லொக்கா, 2020 ஜூலை 4ல் உ…
-
- 0 replies
- 156 views
- 1 follower
-
-
பேச்சு வார்த்தைக்கு வருமாறு... சாணக்கியன், சுமந்திரனுக்கு... பிரித்தானியா, கனடா அழைப்பு அமெரிக்க விஜயம் நிறைவுபெற்றவுடன் தமது உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடலை நடத்த வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கனடாவும் பிரித்தானியாவும் அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை தொடர்புகொண்டு கொழும்பில் உள்ள கனடா மற்றும் பிரித்தானிய தூதுவர்கள் இந்த அழைப்பை விடுத்துள்ளனர். சுமந்திரனின் வருகையுடன் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனையும் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, செல்வராஜா மற்றும் ப.சத்தியலிங்கம் ஆகியோர் கலந்துரையாடி குறித்த சந்திப்புகளில் ஈடுபடுமாறு இருவருக்கும…
-
- 0 replies
- 213 views
-
-
போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை – வீரசேகர எச்சரிக்கை போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர எச்சரித்துள்ளார். நாளை கொழும்பில் நடைபெறவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியினரின் போராட்டத்தை தடுக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். போராட்டத்திற்கு தடை விதிக்குமாறு சுகாதாரத்துறை ஏற்கனவே நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தின் ஊடாக கொரோனா தொற்று பரவுவதற்கான சாத்தியம் காணப்படுவதால் மக்கள் ஒன்று கூடுவதற்கு தன்னால் இடமளிக்க முடியாது என்றும் சரத் வீரசேகர கூறியுள்ளார். அதனைமீற…
-
- 0 replies
- 118 views
-
-
எத்தகைய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும், எங்கள் போராட்டம் தொடரும் – நளின் பண்டார எத்தகைய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் திட்டமிட்டபடி நடத்தப்படும் என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டம் கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் நாளை பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது. இந்நிலையில் இதற்கு தடை கோரிய பொலிஸாரின் விண்ணப்பம் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதலை முன்வைத்து இந்த தடை உத்தரவுக்கான கோரிக்கை முன் வைக்கப்படவுள்ளது. இதேவேளை போராட்டத்தி…
-
- 0 replies
- 213 views
-
-
நிராகரிக்கப்பட்ட சீன உரம் மீள பரிசோதனைக்கு உட்படுத்தப்படாது – அமைச்சு சீன உரத்தினை மூன்றாம் தரப்பின் ஊடாக பரிசோதனைக்குட்படுத்துவது தொடர்பாக இதுவரை எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை என விவசாய அமைச்சு அறிவித்துள்ளது. மேலும், குறித்த நிறுவனம் மீள பரிசோதனைகளை முன்னெடுத்தாலும் தாவர தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைவாக நிராகரிக்கப்பட்ட குறித்த உரத் தொகையினை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளது. அபாயம் மிக்க நுண்ணுயிர்கள் காணப்படுவதாக உறுதிப்படுத்தப்பட்ட சீன உரத்தை மூன்றாம் தரப்பொன்றின் ஊடாக மீண்டும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தவுள்ளதாக சீனத் தூதுவரை மேற்கோள்காட்டி பத்திரிகையில் செய்தி வெளியாகின. குறித்த செய்தி தொடர்பாக விளக்கமளித்து விவசாய அமைச்சு விட…
-
- 0 replies
- 152 views
-
-
சவேந்திர சில்வாவிற்கு எதிராகத் தடை விதிக்க வேண்டும் என சாரா ஜோன்ஸ் கோரிக்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராகத் தடை விதிப்பதற்கு ஆதரவளிக்குமாறு பிரிட்டன் அரசாங்கத்திடம் அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் சாரா ஜோன்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார். தன்னுடைய தொகுதியில் வசிக்கும் தமிழ் சமூகத்தினர் மத்தியில் இலங்கையில் இடம்பெற்ற போரின் வடுக்கள் இன்னமும் இருப்பதை உணரமுடிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதுமாத்திரமன்றி உலகில் பல்வேறு பகுதிகளிலும் வாழும் இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக நீதியும் பொறுப்புக்கூறலும் உறுதிசெய்யப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவை தடைசெய்யுங்கள் என்ற வாசகத்துடனான பதாகையுடன் சாரா ஜோ…
-
- 0 replies
- 138 views
-
-
நாட்டில் எதிர்வரும் நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு? நாட்டில் எதிர்வரும் நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித்த இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய களஞ்சியசாலையில் மசகு எண்ணெய் தீர்ந்தமையினால், இன்று(திங்கட்கிழமை) முதல் எரிபொருள் உற்பத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மசகு எண்ணெய்யை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை வலுசக்தி அமைச்சர் எடுக்காமை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், சர்வதேச ரீதியில் மசகு எண…
-
- 0 replies
- 139 views
-
-
மேலும் பல இன்னல்களுக்கு முகம்கொடுக்க பொதுமக்கள் தயாராக வேண்டும் – ஹேஷ விதானகே அடுத்த வருடத்தில் மேலும் பல இன்னல்களுக்கு முகம்கொடுக்க பொதுமக்கள் தயாராக இருக்க வேண்டும் என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. இம்முறை சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் வேலைத்திட்டம் எதுவும் இல்லை என்றும் வெற்று வாக்குறுதிகளை அரசாங்கம் முன்வைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷ விதானகே இதனை தெரிவித்தார். 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், நாடு தொடர்பான தீர்மானத்தை எட்டுவதற்கு மக்கள் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பதையே காட்டுகிறது என்றும் குறிப…
-
- 1 reply
- 147 views
-
-
எதிர்வரும் தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு பாற்சோறு உட்கொள்வதற்கு முடியாத ஒரு வருட பிறப்பாக மாறும் November 14, 2021 2005ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் அதிக வட்டிக்கு கடனை பெற்று, அதனை எந்தவித வருமானமும் கிடைக்காத இடங்களில் அபிவிருத்தி பணிக்காக ஈடுபடுத்தப்பட்டமையே, இன்றைய டொலர் பிரச்சினைக்கான காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவிக்கின்றார். நுவரெலியாவில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்வாறு ஏற்பட்டுள்ள டொலர் பிரச்சினைக்கு, 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் எந்தவித தீர்வும் முன்வைக்கப்படவில்லை என தொிவித்த அவர் எரிபொரு…
-
- 5 replies
- 484 views
- 1 follower
-
-
அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் தயார் – கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் தயாராகவே இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எந்த அரசாங்கத்தோடும் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் அதற்காக கதவுகளை மூடியதில்லை என்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார். தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார விடுத்த அழைப்புக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். கடந்த காலங்களில் கூட தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முயற்சியில்…
-
- 5 replies
- 390 views
-
-
தமிழ் பேசும் கட்சிகளை அணி திரட்ட சம்பந்தன் தீர்மானம் ! சுமந்திரன் நாடு திரும்பியதும் நடவடிக்கை : தடம்மாறும் ரெலோவின் முயற்சி (ஆர்.ராம்) புதிய அரசியமைப்பு உருவாக்கச் செயற்பாட்டில் தமிழ் பேசும் மக்கள் அபிலாஷைகளை மையப்படுத்தி அதில் உள்ளீர்க்கப்பட அல்லது மாற்றியமைக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக தமிழ் பேசும் கட்சிகளை ஒரு தளத்தில் அணி திரட்டுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தீர்மானித்துள்ளார். அத்தீர்மானத்தின் அடிப்படையில், பாராளுமன்றில் வைத்து பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரிடத்தில் கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இந்தச் சந்தர்ப்பத்தில் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பார…
-
- 0 replies
- 225 views
-
-
தமிழ் தேசிய பரப்பில் உள்ள கட்சிகள் சர்வதேசத்துடன் இணைந்து செயற்பட்டாலே நிரந்தர தீர்வு காண முடியும்- ரெலோ November 14, 2021 இனக்குடிப்பரம்பலை பேணுவதற்கு தமிழ் தேசிய பரப்பில் உள்ள கட்சிகள் இணைந்து ஒருமித்த நிலைப்பாட்டில் செயற்பட்டு சர்வதேச ஆதரவினை பெற்றாலே நிரந்தர தீர்வுகாண முடியும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கில் காணி அபகரிப்பு மற்றும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் இலக்கு ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கையில், ‘வடக்கு, கிழக்கு தாயக பூமியிலே எங்கள் இனக்குடிபரம்பலை சிதைப்பதற்கும், எங்களுடைய பிரதிநிதித்துவங்களை குறைப்பதற்கும், எங்கள் தாயக பூமியை கூறு போடுவதற்குமான, திட்டமிட்ட காணி அபகரிப…
-
- 0 replies
- 196 views
-
-
எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கட்சி பேதமின்றி கலந்துகொள்ள அழைப்பு- பிரதீபன் November 13, 2021 திட்டமிட்ட இன விகிதாசாரத்தை குலைக்கும் நடவடிக்கைகளை கண்டிப்பதுடன் அதற்கு எதிராக இடம்பெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் வன்னி மாவட்ட செயலாளர் என்.பிரதீபன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் இன்று அனுப்பியுள்ள செய்தியறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய இனத்தினுடைய இன விகிதாசாரத்தை குழப்பும் வகையில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்ற திட்டங்களை அரசாங்கம் கைவிட வேண்டும். வவுனியாவின் எல்லைப்புறமான நெடுங்கேணியில் கோட்டா, மகிந்த அரசாங்கம் திட்டமிட…
-
- 0 replies
- 198 views
-
-
வாகன இறக்குமதிக்கு, விதிக்கப்பட்ட... தடை நீடிப்பு வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் ஆறு முதல் ஏழு மாதங்களுக்கு நீடிக்க எதிர்பார்க்கப்படுவதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தெரிவித்துள்ளார். தற்போது வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை வழங்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் டொலர் கையிருப்பில் இல்லாததன் காரணமாக மார்ச் 2020 முதல் வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1249842
-
- 0 replies
- 197 views
-
-
இலங்கை பட்ஜெட் 2022: நீங்கள் அறிய வேண்டிய 10 முக்கிய தகவல்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,PARLIAMENT OF SRI LANKA இலங்கை நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தாக்கல் செய்த 2022ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், மதுபானம், சிகரெட்டுக்கான வரி உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பதவிக்காலத்தை நிறைவு செய்தால் மட்டுமே அவர்களுக்கான ஓய்வூதியத்தை பெறலாம் என யோசனை முன்மொழியப்பட்டுள்ளது. இலங்கையின் 76ஆம் வரவு செலவு திட்ட அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று (12) தாக்கல் செய்யப்பட்டது. இதையொட்டி 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை நிதி அமைச்சர…
-
- 2 replies
- 361 views
- 1 follower
-