ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142901 topics in this forum
-
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 180 நாட்களில் 4,743 முறைப்பாடுகள் இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரையிலும், 180 நாட்களில் (6 மாதங்களினுள்) சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 4,743 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். பேருவளை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இந்த முறைப்பாடுகளின் எண்ணிக்கையை 180 ஆல் வகுக்கும்போது, நாளொன்றிற்கு 25 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர். அதாவது ஒரு மணித்தியாலத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர். இந்த துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்ற சிறுவர்களில், சுமார் 21 வீதமானோர் ஐந…
-
- 0 replies
- 269 views
-
-
இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அதிபர், ஆசிரியரிடம் விடுத்துள்ள வேண்டுகோள் (எம்.நியூட்டன்) மாணவரின் கல்விக்காக ஒத்துழைக்க வேண்டும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அதிபர், ஆசிரியரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக இலங்கை தமிழர் ஆசிரிய சங்கம் தெரிவிக்கையில், எதிர்வரும் 21 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளன. ஒரு சில அதிபர், ஆசிரிய தொழிற்சங்கங்கள் தொடர் போராட்டத்தில் உள்ளன. மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் முற்றாக தடைப்பட்டுள்ளன. குறிப்பாக அதிபர்களும் ஆசிரியர்களும் அர்ப்பணிப்புடன் வேலை செய்கின்றார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். கொடிய யுத்தம் நடந்த காலத்தில்கூட இத்தகைய வீழச்சி வந்ததில்லை. இது திட்டமிட்டு செய்யப்படுகின்ற சூழ்ச்சி. …
-
- 0 replies
- 315 views
-
-
அபகரிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் பயிர்நிலங்களை அரசு விடுவிக்க வேண்டும் – ரவிகரன். October 19, 2021 தற்போது விவசாயிகள் உரப்பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள நிலையில், அப் பிரச்சினைக்குத் தீர்வாக அரசு உரங்களை இறக்குமதிசெய்து விவசாயிகளுக்கு வழங்குவதுடன், மகாவலி (எல்), வனஜீவராசிகள் திணைக்களம், வனவளத் திணைக்களம் என பலதரப்புக்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுடைய பயிர்ச்செய்கை நிலங்களையும் அரசு விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். உரப் பிரச்சினைக்குத் தீர்வு கோரி முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் கமநலசேவைகள் திணைக்களத்தின் முன்பு நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்த…
-
- 0 replies
- 262 views
-
-
"திவி நெகும" மோசடி வழக்கு : சட்டமா அதிபருக்கு கடிதம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கு எதிரான திவி நெகும மோசடி குறித்த வழக்கை திரும்பப் பெற்றுக்கொண்டமை தொடர்பாக தொழில் நிபுணர்கள் தேசிய முன்னணி சட்டமா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. குற்றப்பத்திரிகைகள் மீளப்பெற்றுக்கொள்வதாக நீதிமன்றில் அறிவிக்கப்பட்ட நிலையில் இதேபோன்ற மற்றொரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளமையும் குறித்த கடிதத்தில்சுட்டிகாட்டப்பட்டுள்ளது. எனவே, அவரது அறிவுறுத்தலின் பேரில் திரும்பப் பெறப்பட்ட வழக்கின் எண்ணையும், திரும்பப் பெறுவதில் தாக்கத்தை ஏற்படுத்திய முந்தைய வழக்கு எண்ணையும் வழங்குமாறு சட்டமா அதிபரை தொழில்நிபுணர்கள் தேசிய முன்னணி கேட்டுக்கொண்டுள்ளது. …
-
- 0 replies
- 270 views
-
-
அமைச்சர்கள், வெளிநாடு செல்லத்தடை! எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி முதல் டிசம்பர் 10 ஆம் திகதிவரை தனிப்பட்ட ரீதியிலோ அல்லது அதிகாரப்பூர்வமாகவே வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அரசாங்கம் பணிப்புரை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு ஜனாதிபதி செயலாளரால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. 2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நவம்பர் 12 ஆம் திகதி நிதி அமைச்சரால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. அன்றைய தினம் நிதி அமைச்சரின் உரை இடம்பெறும். நவம்பர் 13 ஆம் திகதி முதல் 2ஆம்வாசிப்புமீதான விவாதம் ஆரம…
-
- 0 replies
- 472 views
-
-
கெரவலபிட்டிய மின் நிலைய ஒப்பந்தம் : இடைக்கால தடை உத்தரவு கோரி மனுதாக்கல் கெரவலபிட்டிய மின் நிலைய பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்கு இடைக்கால தடை உத்தரவு கோரி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் எல்லே குணவன்ச தேரர் ஆகியோரால் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்கள், அமைச்சரவை செயலாளர், நிதி அமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர் உட்பட 54 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். செப்டம்பர் 6 ஆம் திகதி கூறப்பட்ட ஒப்பந்தத்தில் அமைச்சரவையில் எட்டப்பட்ட முடிவை இரத்து செய்து, விண்ணப்பம் மீதான விசாரணை முடியும் வரை ஒப்பந்தம் அமுல்படுத்தப்படுவதைத்…
-
- 0 replies
- 192 views
-
-
நெனோ நைட்ரஜன் மூலத்துடன் கூடிய விஷேட திரவ உரத்தினை இறக்குமதி செய்ய அனுமதி! நெனோ நைட்ரஜன் மூலத்துடன் கூடிய விஷேட திரவ உரத்தினை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. விவசாயத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே இதனை தெரிவித்துள்ளார். 9 இலட்சம் ஹெக்டேருக்கு தேவையான திரவு உரத்திற்கே இவ்வாறு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இதேவேளை, நைட்ரஜன் மூலத்துடன் கூடிய 3.1 மில்லியன் லீட்டர் விஷேட திரவ உரத்தை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1245616
-
- 0 replies
- 184 views
-
-
விவசாயிகளிற்கு ஆதரவாக திங்கட்கிழமை போராட்டம் – சுமந்திரன் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திங்கள் கிழமை வடக்கு கிழக்கில் நடத்த உள்ள போராட்டம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள உரம் மற்றும் கிருமிநாசினி பற்றாக்குறை விவசாயிகளையும் தோட்டத்தொழிலையும் மிக மோசமாக பாதித்திருக்கிறது. வடக்கிலும் கிழக்கிலும் காலபோக /பெரும்போக நெற் பயிர்ச்செய்கை தற்போது ஆரம்பமாகியுள்ளது. ஓரிரு வாரங்களுக்குள் பசளை மற்றும் கிருமி நாசினி அத்தியாவசியமாக தேவைப்படும…
-
- 30 replies
- 1.5k views
- 1 follower
-
-
கடற்றொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தாவை நியமித்ததிலும் சதி உள்ளதோ தெரியாது என முன்னாள் அமைச்சரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை ( 18 ) யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். இரு தமிழர்களும் மோதி விரோத மனத்துடன் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அழைப்பு விடுத்தார்களோ தெரியாது என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எங்கு எந்தப் பிரச்சனை வந்தாலும் குரல் கொடுப்பேன். வடக்கு மீனவர்கள் பிரச்சனை என்பது பெரும் பிரச்சனை அவர்கள் ஏற்கனவே துன்பத்தை சந்தித்தவர்கள் யுத்தத்தை நாம் விரும்பவில்லை யுத…
-
- 3 replies
- 450 views
-
-
அமைச்சர் டக்ளஸின் செயற்பட்டால் தமிழ் நாடு மற்றும் வடக்கு- கிழக்கு வாழ் மீனவர்களுக்கிடையில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் – இரா. சாணக்கியன் இலங்கை அரசாங்கத்தின் மீன் பிடி அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா, இலங்கை சட்டத்திட்டங்களை முறையாக அமுல்படுத்தாத காரணத்தினால், வடக்கு- கிழக்கில் வாழும் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.எனவே, மீன்பிடித்துறை அமைச்சர் வடக்கு- கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் செயற்பட வேண்டும் என வலியுறுத்தினார்.அமைச்சரின் இந்த அசமந்தச் செயற்பாடானது தமிழ் நாடு மற்றும் வடக்கு- கிழக்கு வாழ் மீனவர்களுக்கிடையில் பிரச்சினைகள…
-
- 1 reply
- 301 views
-
-
இலங்கை அரசு கடந்த 4 நாள்களில் மட்டும் 11 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை அச்சிட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் பதவியேற்ற பின்னர் இதுவரை 15 ஆயிரம் கோடி ரூபா அச்சிடப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகின்றது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள மத்திய மற்றும் தென் மாகாணங்களின் முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னக்கோன், அஜித் நிவாட் கப்ரால் பதவியேற்ற பின்னர், 15 ஆயிரத்து 842 கோடி ரூபா அச்சிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இலங்கை மத்திய வங்கி ஒரு லட்சத்து 36 ஆகியரத்து 805 கோடி ரூபாவை அச்சிட்டுள்ளது. அரசின் நிதிச் செயற்பாடுகள் தொடர்பில் அல்லது பணம் அ…
-
- 72 replies
- 4.4k views
- 1 follower
-
-
தமிழர்களை தொடர்ந்து முஸ்லிம்களையும் விட்டு வைக்காத பயங்கரவாத தடைச்சட்டம் : அம்பிகா சற்குணநாதன் ஆரம்பத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் தமிழர்கள் மீது பயன்படுத்தப்பட்டபோதும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகத்தின் மீதும் பயன்படுத்தப்படுகின்றது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார். வீரகேசரிக்கு வழங்கிய நேர்காணலிலேயே இதனைக் கூறினார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள எத்தனையோ நபர்களுக்கு எதிராக வழங்கு தொடுக்கப்படவில்லை. அவ்வாறு வழக்கு தொடுக்கப்படவும் தகுந்த ஆதாரங்கள் இல்லை. அவர்களின் குற்றங்களை கண்டுபிடிக்க 10 - 12 வருடங்களுக்கு மேல் உரிய தரப்பினருக…
-
- 4 replies
- 547 views
-
-
திருகோணமலை ஆலங்கேணியைச் சேர்ந்த செல்வி கேதீஸ்வரன் சாமினி (வயது17) என்ற மாணவி எரியூட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் சந்தேகத்தின்பேரில் அக்கிராமத்தைச் சேர்ந்த தேவராஜா கபில்ராஜ், உருத்திரமூர்த்தி அருள் ஆகிய இரு இளைஞர்கள் கிண்ணியா பொலிசாரினால் கைது செய்திருந்தனர். இக்கொலை தொடர்பான வழக்கு விசாரணை திருகோணமலை நீதிமன்றத்தில் விசாரணைக்காக இம்மாதம் 15 ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்பட்டபோது வழக்கு விசாரணை 27 ஆம் திகதி வரை வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இது தொடர்பான வழக்கு விசாரணை மேல் நீதிமன்றத்தில் இம்மாதம் 25 ஆம் திகதி அன்று இடம்பெறவுள்ளதாகவும் தெரியவருகின்றது. இக்கொலைச் சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி அன்று அதிகாலை 3.00 மணிய…
-
- 0 replies
- 327 views
-
-
கிளிநொச்சி வைத்தியசாலையில் 1.9 கோடி ரூபாவில் இரத்த சுத்திகரிப்பு சிகிச்சை நிலையம் நேற்று (17.10.2021) திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்ட வைத்தியசாலையில் நீண்ட காலமாக நிலவி வந்த குறைபாடு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அதிகரித்துள்ள சிறுநீரக நோயாளிகள் உள்ளிட்ட இரத்த சுத்திகரிப்பு தேவையுடையவர்கள் இதுவரை காலமும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அதிகரித்த போக்குவரத்து செலவுகள் மற்றும் சிரமங்களுக்கு மத்தியில் சென்று வந்த நிலைமை காணப்பட்டது. இந்த இரத்த சுத்திகரிப்பு சிகிச்சை நிலையத்தின் மூலம் இவர்களுடைய பிரச்சினைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையி…
-
- 0 replies
- 342 views
-
-
மடு கோயில் மோட்டை விவசாய காணியை ஒரு சிலரின் தூண்டுதலுடன் அபகரிக்க முயற்சி – மக்கள் போராட்டம் மடு திருத்தலத்திற்கு உரிய கோயில் மேட்டை விவசாய காணி அபகரிப்பு செய்யப்பட்டு வருகின்றமையை கண்டித்து மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பெரிய பண்டிவிரிச்சான் மற்றும் சின்னப் பண்டிவிரிச்சான் கிராம மக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்றைய தினம் (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். மன்னார் பஜார் பகுதியில் அமைதியான முறையில் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. நீண்ட காலமாக மடு திருத்தலத்திற்கு சொந்தமாக காணப்பட்ட குறித்த காணியை சிலரின் தூண்ட…
-
- 0 replies
- 363 views
-
-
பங்காளிக் கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்தார் ஜனாதிபதி கோட்டா!! கெரவலபிட்டிய மின் நிலையத்தை அமெரிக்க நிறுவனத்திடம் வழங்கும் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிராகரித்துள்ளார். மின்நிலையத்தின் 40% பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்கான முடிவு குறித்து எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் பங்காளி கட்சிகளினால் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது. இந்த பிரச்சினையைப் பற்றி விவாதிக்க வேண்டும் என கோரி பங்காளி கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எழுத்துமூலமான கோரிக்கையை விடுத்திருந்தனர். எனவே அந்தக் கடிதத்திற்கு பதில் அனுப்பியுள்ள ஜனாதிபதி கோட்டாபய, அரசிய…
-
- 0 replies
- 360 views
-
-
விடுதலைக்காய் போராடிய இனம் இன்று பசளைக்காகவும் போராட வேண்டியுள்ளது – சாணக்கியன் இனத்தின் விடுதலைக்காய் போராடிய இனத்தை இன்று பசளைக்காகவும் போராடும் நிலைக்கு இந்த அரசும் அரசுடன் இணைந்துள்ளவர்களும் சேர்ந்து தள்ளியுள்ளார்கள். இது விவசாயிகளின் பிரச்சனை மாத்திரமல்ல, சோறு சாப்பிடும் அனைவரினதும் பிரச்சனை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். வெல்லாவெளியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற விவசாயிகளின் பிரச்சனைகளுக்கான தீர்வு கோரிய போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “நேற்றைய தினம் கடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று த…
-
- 0 replies
- 280 views
-
-
தேர்தலை நடத்தும் முயற்சியை... அரசாங்கம் கைவிட வேண்டும் – முருத்தெட்டுவே ஆனந்த தேரர் மாகாணசபை தேர்தல் இடம்பெற்றால் பெறுபேறு அரசாங்கத்திற்கு பாதகமாக அமையும் என்பதனால் தேர்தலை நடத்தும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும் என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார். மக்கள் அரசாங்கத்தின் மீது வெறுப்படைந்துள்ளார்கள் என சுட்டிக்காட்டிய அவர், மாகாண சபை தேர்தலுக்கு ஒதுக்கும் நிதியை நடுத்தர மக்களின் முன்னேற்றத்திற்கு அரசாங்கம் ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படும் தரப்பினரை திருப்திப்படுத்துவதற்காகவே மாகாண சபை தேர்தல் நடத்தப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். அத்தோடு தேர்தலை நடத்த வேண்டாம்.என வலியுறுத்தி 12 பௌத்த அமைப்புக்கள…
-
- 0 replies
- 283 views
-
-
அரசாங்கம் மக்களை ஏமாற்றியுள்ளது – கொழும்பு பேராயர் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதாக தெரிவித்து அரசாங்கம் மக்களை ஏமாற்றியுள்ளது என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சாட்டியுள்ளார். குறித்த தாக்குதல்களுக்கு பின்னணியில் மிகவும் சந்திவாய்ந்த ஒருவர் இருக்கின்றார் என்பதே இந்த தாமதத்திற்கு காரணம் என தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஈஸ்டர் தாக்குதலில் தொடர்புடையவர்களை தண்டிப்பதாக பொதுமக்களுக்கு ஜனாதிபதி, தனது தேர்தல் பிரச்சாரத்திம் உறுதியளித்தார் என்றும் கொழும்பு பேராயர் சுட்டிக்காட்டினார். மேலும் தேர்தல் வெற்றியின் பின்னரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதாக ஜனாதிபதி உறுதியளித்தார…
-
- 0 replies
- 229 views
-
-
21 ஆம் திகதிமுதல் ரயில்களை இயக்க நடவடிக்கை! மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் தளர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 21 ஆம் திகதி 128 ரயில்களை சேவையில் இணைத்துக்கொள்ளப்படும் என ரயில்வே பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கண்டி, மாத்தறை, பெலியத்த, காலி, மற்றும் சிலாபம் ஆகிய பகுதி களுக்கு ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1245357
-
- 0 replies
- 200 views
-
-
கொரோனா சிகிச்சை நிலையங்களை படிப்படியாக குறைக்க முடிவு! நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், கொரோனா சிகிச்சை நிலையங்களை படிப்படியாக குறைப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சின் கொரோனா சம்பந்தமான பிரதான இணைப்பாளரும், சுகாதார சேவைகள் தொழில்நுட்ப பிரிவின் பணிப்பாளருமான வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். இதன்படி, அந்தச் செயல்பாடுகளில் இருந்து 30 சிகிச்சை மையங்கள் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றிடம் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், படிப்படியாக மீதமுள்ள சிகிச்சை நிலையங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு…
-
- 0 replies
- 214 views
-
-
மஹிந்தானந்தவுக்கு எதிராக, நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கண்டி – கலகெதரயில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். உரம் வழங்கல் தொடர்பாக அரசாங்கத்தினால் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் இந்தப் பிரச்சினை இவ்வாறு நீடிக்கப்பட்டால் அது உற்பத்திகளில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே அடுத்த வாரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூட…
-
- 0 replies
- 194 views
-
-
உரத் தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு – வடக்கு மற்றும் கிழக்கில் போராட்டங்கள் விவசாயிகள் தற்போது முகங்கொடுத்துள்ள உரத் தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. வடக்கு, கிழக்கில் உள்ள சகல கமநல சேவை நிலையங்களுக்கு முன்பாகவும் இன்று காலை 9 மணிமுதல் இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மட்டக்களப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தலைமையிலான போராட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. https://athavannews.com/2021/1245395
-
- 0 replies
- 194 views
-
-
கோட்டாவின் சாலியபுர பேச்சு சந்தேகத்தினை ஏற்படுத்துகிறது : தயான் ஜயதிலக்க சுட்டிக்காட்டு ஆர்.ராம் இராணுவத்தினது 72ஆவது ஆண்டுவிழாவில் சாலியபுர இராணுவ முகாமில் கஜபா ரெஜிமெண்ட் படைப்பிரிவின் விழாவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புதிய அரசியலமைப்பு பற்றி தெரிவித்த கருத்துக்கள் பலத்த சந்கேங்களை ஏற்படுத்துவதாக கலாநிதி.தயான் ஜயதிலக்க சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய, புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும், தேர்தல் முறைமை மாற்றப்படும் உள்ளிட்ட விடயங்கள் பற்றி கருத்து வெளியிட்டிருந்தார். இராணுவத்தின் ஆண்டு நிறைவு நிகழ்வொன்றில் இவ்விதமான கருத்துக்களை வெளியிட வேண்டியதன் அவசியம் என்னவென்று தயான் ஜயத்திலக்க கேள்வி எழுப்பியுள்ளார். …
-
- 1 reply
- 425 views
-
-
பிரபாகரன் மரணத்தின் பின்விளைவு! மனம் திறக்கும் தென்னிலங்கை அரசியல்வாதி! இலங்கையில் வடக்கில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந்திருந்தால், நாட்டின் வளங்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டிருக்க மாட்டாது என எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தலைவர் டேன் பியசாத்(Dan Piyasath) தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார். “வடக்கில் பிரபாகரன் இருந்திருந்தால், கட்டாயம் திருகோணமைலை துறைமுகங்களுக்குரியவை விற்பனை செய்யப்பட்டிருக்க மாட்டாது. சீனா, இலங்கைக்கு வந்து துறைமுக நகரத்தை நிர்மாணித்திருக்காது. இந்தியா துறைமுகங்களை கொள்வனவு செய்யவும் வந்திருக்காது என்று எமக்கு உண்மையில் எண்ண தோன்றுகிறது. …
-
- 1 reply
- 415 views
-