ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142901 topics in this forum
-
புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சு – ஜனாதிபதி : தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் பேச்சில்லை – அரசாங்கம் நாட்டில் தடை செய்யப்பட்ட நாடு கடந்த தமிழ் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தப்போவதில்லை என அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. உள்நாட்டுப் பிரச்சனைகள் உள்ளக பொறிமுறையின் ஊடாக தீர்க்கப்பட வேண்டும் என்றும் இது தொடர்பாக புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தப் போவதாகவும் ஐ.நா. பொதுச் செயலாளரிடம் ஜனாதிபதி உறுதியளித்திருந்தார். இந்நிலையில் உலக தமிழர் பேரவை போன்ற தடைசெய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகளுடன் நேரடி பேச்சுவார்த்தைகள் இருக்காது என வெளிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். மேலும் நல்லிணக்க செயன்முறையின் ஒரு பகுதிய…
-
- 11 replies
- 766 views
-
-
மட்டு நகரை உலகம் பேசுகின்ற நகரமாக மாற்றுவத்கான முழு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம் – நசீர் அஹமட் மாவட்டத்தினை எவ்வாறு அபிவிருத்தி அடைந்த நகரமாகவும், மாவட்டத்திலுள்ள அத்தனை வளங்களையும் நவீனமயப்படுத்தி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்கின்ற, உலகம் பேசுகின்ற நகரமாக மாற்றுவத்கான முழு முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். என்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ”உரிமை உரிமை என்று பேசிக்கொண்டு இருப்பவர்கள் சாதித்தது எதுவும் இல்லை …
-
- 6 replies
- 580 views
-
-
பிரச்சினையை தீர்க்கக்கூடாது என்பதற்காகவே போராட்டம் : சுமந்திரனின் 3 ஆவது படம் என்கிறார் அமைச்சர் டக்ளஸ் ஆர்.ராம் நீண்டகாலமாக நீடித்து வரும் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தீர்ந்து விட்டால் தமது அரசியல் கேள்விக்குறியாகிவிடும் என்ற சுயலாபத்திற்காகவே தற்போது அந்த சமூகத்தின் மீது கரிசனை கொண்டவர்களாக தம்மை காண்பித்து அப்பிரச்சினைகளை தீராதிருப்பதை நோக்காகக் கொண்டு தமிழ்த் தலைவர்கள் போராட்டங்களை முன்னெடுக்கின்றனர் என்று கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சரும் மக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். விடயதானத்திற்கு பொறுப்பாகவுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடமாகாணத்தில் இழுவைமடிப் படகுகளை தடை செய்யும் சட்டத்தினை அமுலாக்காமை உட்ப…
-
- 1 reply
- 311 views
-
-
பட்டினியால் தவிக்கும் பலர்... வெளியானது தரப்படுத்தல் ! இலங்கைக்கு எத்தனையாம் இடம் தெரியுமா ? 2021 ஆம் ஆண்டுக்கான 116 நாடுகளை உள்ளடக்கிய உலகளாவிய பசி குறியீட்டை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது. பெலராஸ், போஸ்னியா , பிரேசில் ஆகிய நாடுகள் முதல் மூன்று நிலைகளிலும் சிலி மற்றும் சீனா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த நிலைகளிலும் தரப்படுத்தப்பட்டுள்ளன. 2020ஆம் ஆண்டு 64 ஆவது நிலையில் இருந்த இலங்கை இவ்வருடம் 65 ஆவது நிலையில் உள்ளது. இலங்கையின் பட்டினி வீதம் மிதமான நிலையில் உள்ளது. அத்துடன் கடந்த வருடம் 94 ஆவது நிலையில் இருந்த இந்தியா இவ்வருடம் 101 ஆவது நிலையில் உள்ளது. இந்தியாவின் பட்டினி வீதம் தீவிரமான நிலையில் உள்ளது. ஆசிய நாடுகளில் பாகிஸ்தான் 92 ஆவது நிலைய…
-
- 0 replies
- 264 views
-
-
நிருபமா ராஜபக்ஷவின் சொத்துவிபரங்களை வெளியிடுமாறு ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் கோரிக்கை! பண்டேரா பேப்பர்ஸ் சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் சொத்து விபரங்களை வெளிப்படுத்துமாறு ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு 3 தகவல் அறியும் உரிமை விண்ணப்பப்படிவங்களைத் தாக்கல் செய்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு, நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்திற்கே இவை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 1975 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பிரகடன சட்டத்திற்கு அமைவாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட பதவி வகிக்கும் அரச அதிகாரிகள் தமது வாழ்க்கைத் துணை மற்றும் அவரைச் சார்ந்துள்ள பிள்ளைகளின் சொத்துக்கள், பொறுப்புக்கள் உள்ளடங்கலா…
-
- 0 replies
- 232 views
-
-
இந்தியாவுடன் நேசம் – 500 மல்லியன் டொலர் கடன் பெறப்படுகிறது! October 17, 2021 எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக, இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் டொலர்களை கடனாகப் பெற இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நெருங்கிய உறவின் அடிப்படையில், குறிப்பாக பெற்றோல் மற்றும் டீசல் இறக்குமதிக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஒருங்கிணைப்பு நடவடிக்கை மூலம், இந்த கடன் பெறப்படுவதாகவும், அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். https://globaltamilnews.net/2021/167368
-
- 0 replies
- 249 views
-
-
தீண்டிய நாகபாம்மை பிடித்த சிறுவன். தன்னை தீண்டிய நாகபாம்புடன், 15 வயது சிறுவன் ஒருவன் வைத்தியசாலைக்கு வைத்தியசாலைக்கு சென்ற சம்பவமொன்று, யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, நுணாவில் பகுதியில், இன்று (17) இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், குறித்த சிறுவன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சிறுவன், தனது நண்பர்களுடன் வயலுக்கு சென்றிருந்த போது, பாம்பு கடிக்கு இலக்கானார். இதையடுத்து, குறித்த சிறுவனும் அவனுடைய நண்பர்களும் இணைந்து அந்த பாம்பை பிடித்து, போத்தலில் அடைத்துக் கொண்டு, சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர். இதன்போதே, சிறுவனை கடித்தது நாகபாம்பு என தெரியவந்துள்ளது. இதனையடுத்து, பாம்புக்கடிக்கு இலக்கான சிறுவன், அவசர சிகிச்சை பிரிவில் …
-
- 0 replies
- 353 views
-
-
பருத்தித்துறையை வந்தடைந்த மீனவர்கள். மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தக்கோரி முல்லைத்தீவில் ஆரம்பித்த போராட்டம் பருத்தித்துறை துறைமுகத்தை வந்தடைந்தது. முல்லைத்தீவு கள்ளப்பாடு கடற்கரையில் இன்று காலை 7.15 மணியளவில் ஆரம்பித்த கடல்வழியான கண்டனப் போராட்டம் யாழ்ப்பாணம் பருத்தித்துறை துறைமுகத்தை இன்று காலை 9.30 மணியளவில் வந்தடைந்தது. இழுவை மடி மீன்பிடி முறை, கடற்தொழில் மற்றும் நீரியல்வள சட்டத்தின் கீழ் 2016ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டதிருத்ததின் பின்னர் முற்றாக தடை செய்யப்பட்டிருந்தாலும் அது நடைமுறையில் இன்னமும் முழுமையாக செயற்படுத்தப்படாதுள்ளது. இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களின் றோலர் மீன்பிடி முறையின் காரணமாக வடக்கு மீனவர்கள…
-
- 0 replies
- 543 views
-
-
தமிழ் மக்களின் போராட்டம் மௌனிக்கப்படவில்லை அரசியலிலிருந்துஒதுங்குவேன்! சாணக்கியன் எம்.பி நன்றி - யூரூப்
-
- 0 replies
- 254 views
-
-
நாடாளுமன்றம் நுழைகின்றாரா ஞானசாரர்?? கட்சியின் உறுப்புரிமையிலிருந்து அத்துரெலிய ரத்ன தேரர் நீக்கம் எங்கள் மக்கள் சக்தி கட்சியின் உறுப்புரிமையிலிருந்து அத்துரெலிய ரத்ன தேரர் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி.புஞ்சிஹேவ, கட்சியால் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்ததாக உறுதிப்படுத்தியுள்ளார். கட்சியின் மத்திய குழு அத்துரெலிய ரத்ன தேரரை கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசந்த கொடிவக்கு கூறியுள்ளார். கட்சியின் முடிவுகளுக்கு எதிராக செயற்படுவதாகவும் கட்சி மீது பொதுமக்களின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தியதாகவும் தெரிவித்து கட்சியின் ஒழுக்காற்று குழு இந்த நடவடிக…
-
- 0 replies
- 242 views
-
-
புதிய பிறழ்வு... எந்த நேரத்திலும் நாட்டிற்குள் நுழையலாம் – அசேல குணவர்தன எச்சரிக்கை நாட்டிற்குள் எப்போதுவேண்டுமானாலும் புதிய கொரோனா பிறழ்வு நுழையலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன எச்சரிக்கை விடுத்துள்ளார். சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு திறப்பட்டுள்ள அதேவேளை துறைமுகங்கள் மீண்டும் செயற்படத் தொடங்கியுள்ளதால் புதிய மாறுபாடுகள் நாட்டுக்குள் பரவி கணிக்க இயலாத தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என்றும் அவர் கூறினார். எனவே முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தாலும் பொது மக்கள் சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும் என்றும் வைத்தியர் அசேல குணவர்தன கேட்டுக்கொண்டார். இதற்கிடையில், மொத்த மக்கள்தொகையில் 67 சத…
-
- 0 replies
- 244 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆய்வுகளில் மன்னார் வளைகுடாவில் மாத்திரம் 280 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான எரிவாயு மற்றும் கனிய எண்ணெய் வளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இலங்கையின் அரச மற்றும் அரச நிறுவனங்களுடன் சேர்த்து மொத்த கடனாக 47 பில்லியன் அமெரிக்க டொலர்கள் போன்றதொரு தொகையே உள்ள நிலையில் மன்னார் வளைகுடாவில் மாத்திரம் 280 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான வளங்களை வைத்துக்கொண்டு தடுமாறிக்கொண்டிருக்கிருக்கின்றோம் என வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில சபையில் தெரிவித்தார். இவ்வாறான தேசிய வளத்தை பயன்படுத்தும் வேலைத்திட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜே.வி.பி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியினரின் பூரண ஒத்துழைப்புகளை வழங்குமாற…
-
- 9 replies
- 764 views
-
-
எனது தெரிவு எப்போதும் இந்தியாவாகத் தான் இருக்கும் - காரணத்தை கூறுகிறார் அமைச்சர் டக்ளஸ் (நா.தனுஜா) இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையில் எனது தெரிவு எப்போதும் இந்தியாவாகத்தான் இருக்கும். இருப்பினும் இலங்கைக்கு தற்போது ஏனைய தரப்புக்களின் உதவிகள் பெருமளவிற்குத் தேவைப்படுகின்றன. எனவே அத்தகைய உதவிகளை வழங்குவதற்கு முன்வருகின்ற தரப்பினரிடமிருந்து அவற்றைப்பெற்று நாட்டை அபிவிருத்தி செய்கின்றோம். அதற்கு பலவாறு உள்நோக்கம் கற்பிப்பதனை ஏற்றுக்கொள்ளமுடியாது. சீனாவுடனான தொடர்புகள் குறித்து ஒவ்வொருவரும் பல்வேறு விடயங்களைக் கூறலாம். ஆனால் அவற்றில் எவ்வித உண்மையும் இல்லை என்று கடற்றொழில்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அரசாங்கத்தகவல…
-
- 2 replies
- 466 views
-
-
மாநில முதல்வர்கள் இருவர் இலங்கைக்கு வருவதை உறுதி செய்துள்ளனர்” – இலங்கை துணைத் தூதர் வெங்கடேஸ்வரன்! நக்கீரன் இந்தியாவிற்கான இலங்கையின் துணைத் தூதராக கடந்த ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டார் டி. வெங்கடேஸ்வரன். இலங்கையின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகிய இருவருக்கும் நெருங்கிய நண்பர் இவர். தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர். தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரனின் இந்த நியமனமும், தமிழ்நாட்டில் அவர் மேற்கொண்ட ஆய்வுகளும் சர்ச்சைகளை உருவாக்கியிருந்ததை நக்கீரன் விரிவாக எழுதியிருந்தது. இந்த சந்தே…
-
- 3 replies
- 512 views
-
-
ராஜபக்ஷ அரசாங்கம் நாட்டு மக்களை நடு வீதிக்கு கொண்டு வந்து விட்டுள்ளது - மனோ கணேசன் (க.கிஷாந்தன்) ராஜபக்ஷ அரசாங்கம் நாட்டு மக்களை நடு வீதிக்கு கொண்டு வந்து விட்டுள்ளது. இயலாமையுடன் செயற்படும் இந்த அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கு மக்கள் தயாராகிவிட்டனர் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராக தலவாக்கலை நகரில் இன்று (16.10.2021) நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். தோட்டத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், மீனவர்கள், விவசாயிகள் என அனைவரையும் ராஜபக்ஷ அரசாங்கம் நடுவீதிக்கு கொண்டுவந்துவிட்டது. ஏற்கனவே பொருளாதார பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர…
-
- 0 replies
- 234 views
-
-
கிழக்கு மாகாண பாடசாலைகள் அனைத்து எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பம். கிழக்கு மாகாண பாடசாலைகள் அனைத்து எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பம் நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் -19 சூழ்நிலை காரணமாக ஒன்றரை வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிப்பதற்கான சகல வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அனைத்து பாடசாலைகளிலும் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், பாடசாலைகளில் குடிநீர் வசதி சுகாதார நடைமுறைகளை பின்பற்றுதல் போன்ற நடைமுறைகளை பேணுவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் கவனம் செ…
-
- 1 reply
- 286 views
-
-
எமது உரிமையினை வெல்வதற்கு பாரத தேசம் எமக்கு துணை நிற்க வேண்டும் – யாழ் மாநகர முதல்வர் எமது உரிமையினை வெல்வதற்கு பாரத தேசம் எமக்கு துணை நிற்க வேண்டும் என யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ். இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ் பொதுசன நூலகத்தில் இன்று இடம்பெற்ற அப்துல் கலாமின் 90 வது பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வி.மணிவண்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எமது உரிமை கோரிக்கையை வெல்வதற்கு பாரத தேசம் எமக்கு துணை நிற்க வேண்டும் எமது தந்தை நாடு என்ற அடிப்படையில் நமக்கு துணை நிற்க வேண்டும் என்ற கோரிக்கையை நான்விடுகின்றேன். ஒருபோதும் பாரத தேசத்தினுடைய நலன்களுக்கு முரணாக நா…
-
- 5 replies
- 531 views
-
-
-
அதுரலியே ரதன தேரர் கட்சியில் இருந்து நீக்கம் - தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வண. அதுரலியே ரதன தேரர் அபே ஜனபல கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார். வண. அதுரலியே ரதன தேரரை கட்சியில் இருந்து நீக்குவதாக குறிப்பிட்டு அக்கட்சியின் பொதுச் செயலாளரால் கடிதம் ஒன்றை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=151796
-
- 0 replies
- 271 views
-
-
மாகாண சபை முறையை நீக்கி சிங்கள பௌத்த அரசியலமைப்பை கொண்டு வருவார்களோ என சந்தேகம் – நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் மாகாணசபைத்தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இணைந்து நீங்கள் வரவேண்டும் எனக் கேட்டால் என்னுடைய கடமை என ஏற்று களத்தில் குதிக்கத் தயாராக இருக்கிறேன் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தேர்தல் சம்பந்தமாக எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. எல்லா கட்சிகளும் இணைந்து சில விடயங்களை அரசாங்கத்துடன் பேச முடியுமா என்பது தொடர்பாகவே ஆராயப்பட்டு வருகின்றது. அதில் தேர்தல் சம்பந்தமான பேச்சுக்கள் இதுவரை எழவில்லை என மேலும் தெரிவித…
-
- 0 replies
- 195 views
-
-
-
- 0 replies
- 643 views
-
-
ஆயுத கடத்தல் – விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் குறித்த விசாரணைக்கு இலங்கை ஒத்துழைப்பு பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்களை கடத்தல் மற்றும் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டமை தொடர்பாக கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக இலங்கை பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு இந்திய தேசிய புலானாய்வு முகமை இலங்கை அரசின் ஒத்துழைப்பை பெறுவதற்கு தீர்மானித்துள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் பாதுகாப்பு அமைச்சின் ஊடாகவும் புலனாய்வு பிரிவுகளின் ஊடாகவும் ஒத்துழைப்புகளை வழங்கவுள்ளதாக இலங்கை பாதுகாப்பு தரப்பில் தெ…
-
- 2 replies
- 434 views
-
-
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் அமெரிக்க கப்பல் தரித்து நிற்பதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியுள்ளது- ஜேவிபி குற்றச்சாட்டு கெரவலப்பிட்டிய மின் நிலையம்தொடர்பில் இலங்கைசெய்துகொண்ட உடன்படிக்கை காரணமாக கொழும்பு துறைமுகத்திற்குஅருகில் அமெரிக்கா தனது கப்பலொன்றை நிறுத்திவைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது என ஜேவிபி குற்றம்சாட்டியுள்ளது. ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜெயதிச செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இலங்கைக்கு மாத்திரமல்ல இந்து சமுத்திரம் முழுவதற்கும் ப…
-
- 0 replies
- 311 views
-
-
திவிநெகும நிதி மோசடி - மற்றுமொரு வழங்கில் இருந்து பெசில் விடுதலை 2015 திவிநெகும நிதி மோசடி வழக்கில் இருந்து அமைச்சர் பெசில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் திவிநெகும பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரூபா 36.5 மில்லியன் அரசாங்க நிதியைப் பயன்படுத்தி, கடந்த 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது, பஞ்சாங்கம் மற்றும் GI குழாய் விநியோகித்த வழக்கில் இருந்தே குறித்த இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, கடந்த 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது, திவிநெகும அபிவிருத்தி நிதியத்திற்கு சொந்தமான ரூ. 2,292 மில்லியன் நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்ற…
-
- 0 replies
- 272 views
-
-
இந்தியக் கடற்றொழிலாளர்களின்... சட்ட விரோத, தொழில்முறை நிறுத்தப்பட வேண்டும்: டக்ளஸிடம் சுப்பிரமணியம் சுவாமி தெரிவிப்பு இந்தியக் கடற்றொழிலாளர்களின் விவகாரத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிலைப்பாட்டினை புரிந்து கொள்வதாக இந்திய மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் இந்திய அரச தலைவர்களுக்கு தெளிவுபடுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். குறித்த சந்திப்பின் போது, இந்தியக் கடற்றொழிலாளர்களின் விவகாரம் குறித்து விரிவாக ஆ…
-
- 2 replies
- 363 views
-