ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142698 topics in this forum
-
Published By: DIGITAL DESK 2 29 JUL, 2025 | 12:35 PM யாழில் சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் ஒருவர் இரவு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். 1ஆம் குறுக்குத் தெரு, மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரிய வருகையில், குறித்த நபரும் 56 வயதுடைய சகோதரியும் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில் அவர் கொலை செய்யப்பட்டு இன்று செவ்வாய்க்கிழமை (29) காலை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இது குறித்து உயிரிழந்தவரது சகோதரி வழங்கிய வாக்குமூலத்தில், நான் குறி சொல்லும் வேலை செய்து வருகிறேன். இரவு மூவர் வீட்டுக்கு வந்து தண்ணீர் கேட்டனர். அவர்களுக்கு தண்ணீர் எடுப்பதற்காக உள்ளே சென…
-
- 2 replies
- 253 views
- 1 follower
-
-
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கையில் சாரதி அனுமதி பத்திரத்தை எவ்வாறு பெறலாம்? இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இப்போது தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற முடியும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சர்வதேச சாரதி அனுமதி பத்திரம் மற்றும் அவர்களின் நாட்டின் சாரதி அனுமதி பத்திரம் உள்ள சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் எந்தவொரு வாகனத்தையும் செலுத்த அனுமதிக்கப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வுட்லர் குறிப்பிட்டார். இது தொடர்பில் ஊடகங்களிடம் உரையாற்றிய அவர், தங்கள் நாட்டின் சாரதி அனுமதிப் பத்திரம் மாத்திரம் நாட்டுக்கு வருபவர்களும் இலங்கையில் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற அனுமதிக்கப்படுவார்கள். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கொழும…
-
-
- 8 replies
- 483 views
- 1 follower
-
-
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்று ஆரம்பம்! நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இதேவேளை, நேற்றைய தினம் , செம்மணி பகுதியில் உள்ள நல்லூரான் வளைவிலும் , கைலாச பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ள நல்லூரான் தெற்கு வாசல் வளைவிலும் சேவல் கோடி நாட்டப்பட்டது. இதேவேளை, ஆரம்பமாகும் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தை முன்னிட்டு நேற்றையதினம் வைரவர் உற்சவம் நடைபெற்றது. மாலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வைரவர் வெளி வீதியுலா வந்ததுடன் , வெளிவீதி பிரகாரத்தில் சேவல் கொடிகள் பொருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1441007
-
- 1 reply
- 189 views
-
-
செம்மணி – உண்மைகளை கண்டறிய அதனை சர்வதேசத்திடம் ஒப்படைக்கவேண்டும்! சுமந்திரன் வலியுறுத்து! உண்மைகளை மூடி மறைத்து இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது. எனவே புதைகுழிகள் தொடர்பிலான உண்மைகளை அரசாங்கம் கண்டறிந்து அதனை வெளிப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேற்றையதினம் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ, சுமந்திரன், சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். அதன் பின்னர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் ஊடகங்களுக்கும் கருத்து தெரிவித்தார். இதன்போது இங்கு நடைபெறும் அகழ்வு பணிகளில் குழந்தைகள் , வயது குறைந்தவர்களின் எலும்பு கூடுகள் மீட்கப்பட்டுள்ளன எனவும் எலும்பு கூடுகள்…
-
- 0 replies
- 144 views
-
-
தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி விவகாரம் – துமிந்த திசாநாயக்க விடுவிப்பு! தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி விவகாரம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்கவை வழக்கில் இருந்து விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கியின் உரிமை தொடர்பான விசாரணையில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்கவை, அவ்வழக்கிலிருந்து விடுவிக்க கல்கிசை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (29) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, நேரடி மற்றும் சூழ்நிலை ஆதாரங்கள் இல்லாததால், துமிந்த திசாநாயக்கவை விடுவிக்க நீதவான் சதுரிகா டி சில…
-
- 0 replies
- 121 views
-
-
ரயில் சாரதிகள் நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம்! பல கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் சாரதிகள் இன்று (29) நள்ளிரவு முதல் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இன்று நள்ளிரவு முதல் 48 மணி நேரம் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக ரயில் இயந்திர பொறியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்தன வியந்துவ தெரிவித்துள்ளார். பலமுறை தங்கள் பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்த போதிலும், இதுவரை நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை என்று ரயில் சாரதிகள் கூறுகின்றனர். இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக நேற்று (28) ரயில்வே பொது முகாமையாளருடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாகவும், இதன்போது, ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை எட்ட முடியவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். https://ath…
-
- 0 replies
- 83 views
-
-
நாடு கடத்தப்பட்ட நிலையில் வெலிகம சஹான் கைது! ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் உறுப்பினரான ‘வெலிகம சஹான்’ என்று அழைக்கப்படும் சஹான் சிசி கலும் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இந்தியாவின், சென்னையில் இருந்து நேற்றிரவு (28) நாடு கடத்தப்பட்ட நிலையில், விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெலிகம பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய இவர், பாணந்துறை மற்றும் களுத்துறையில் நடந்த இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்களிலும், மட்டக்குளியவில் “பத்தே சுரங்க” என்ற நபரை சுட்டுக் கொன்ற சம்பவத்திலும் முக்கிய சந்தேக நபர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அவர் ஒரு …
-
- 0 replies
- 88 views
-
-
கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவி உயிரிழப்பு! வழக்கு அடுத்த மாதத்திற்கு ஒத்திவைப்பு! கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் வசித்து வந்த பாடசாலை மாணவி அம்சிகா, கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதியன்று தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 18ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு கொழும்பு புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தவிட்டுள்ளது. கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த டில்ஷி அம்ஷிகா என்ற 16 வயது மாணவியின் மரணம் தொடர்பில் ஆராய்வதற்கு ஏற்கனவே 10 பேரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று கொழும்பு புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இன்றையதினம் மாணவ…
-
- 0 replies
- 103 views
-
-
சிங்களம் மற்றும் திவெஹி ஆகிய மொழிகள் ஒரே வேரில் இருந்து வந்த மொழிகள் ஆகும் மாலைதீவு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளுக்கு நம்பகமான இடமாக இலங்கையை எப்போதும் பார்க்க முடியும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மாலைதீவுக்கான தனது அரச விஜயத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் முழுமையான உரை பின்வருமாறு, இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான நெருங்கிய இருதரப்பு உறவுகள், நட்பு கூட்டாண்மை, நெருங்கிய நட்புறவு மற்றும் எதிர்கால ஒத்துழைப்பைக் குறிக்கும் வகையிலான மாலைதீவுக்கான எனது முதல் அரச விஜயத்தில் மாலேயிற்கு வருகை தரக்கிடைத்தமை மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் பயணம் நமது இரு நாடுகளுக்கும் இடையில…
-
- 2 replies
- 178 views
- 1 follower
-
-
கறுப்பு ஜூலையை முன்னிட்டு நெல்லியடியில் தீப்பந்தப் போராட்டம்! கறுப்பு ஜூலை நினைவேந்தலை முன்னிட்டு யாழ்.வடமராட்சி நெல்லியடி பேருந்து நிலையம் முன்பாக தீப்பந்தப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணி அளவில் குறித்த தீப்பந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எ.சுமந்திரன் தலைமையில் இடம்பெற்ற தீப்பந்தப் பேராட்டத்தில், மாநகர சபை மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் ,உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். தமிழர்களின் இனப்படுகொலையை முன்னிறுத்துவதான கறுப்பு ஜூலை இனப்படுகொலை நடைபெற்று முடிந்து 42 வருடங்கள் ஆகின்றன. எனினும…
-
- 0 replies
- 86 views
-
-
மீண்டும் யாழ் வரவுள்ள அதிசொகுசு கப்பல்! இந்தியாவில் இருந்து Cordelia Cruises அதிசொகுசு சுற்றுலாப் பயணிகள் கப்பலானது எதிர்வரும் ஆகஸ்ட் 15 மற்றும் 22 ஆகிய திகதிகளில் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளது. குறித்த சுற்றுலா பயணிகள் கப்பலானது கடந்த 2023ஆம் ஆண்டு 9 தடவைகள் வந்திருந்தது. அத்துடன் 2024ஆம் ஆண்டு 6 தடவைகள் இலங்கைக்கு வந்தது. இது இவ்வாறு இருக்கையில் இந்த ஆண்டு மேற்குறித்த இரண்டு திகதிகளில் குறித்த கப்பல் இலங்கைக்கு வரவுள்ளது. காலை காங்கேசன் துறைமுகத்தை வந்தடையும் கப்பலில் வரும் பயணிகள் யாழ்ப்பாணத்தில் உள்ள கோட்டை உள்ளிட்ட சில இடங்களை பார்வையிட்ட பின்னர் மீண்டும் இந்தியாவை சென்றடையவுள்ளனர். இந்த கப்பலானது மிகவும் பாரிய ஒரு சுற்றுலா பயணிகள் கப்பலாக காணப்படுகின்றது. https…
-
- 0 replies
- 91 views
-
-
அத்துமீறும் இந்திய மீனவர்களால் வடமராட்சி மீனவர்கள் பாதிப்பு! adminJuly 29, 2025 வடமராட்சி கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டு வரும் இந்திய மீனவர்களால் தமது வலைகள் அறுக்கப்பட்டுகிறது என பருத்தித்துறை மீனவர்கள் கவலை தெரிவித்துள்னர். பருத்தித்துறை கடற்பரப்பில் கடந்த சில தினங்களாக எல்லை தாண்டி இந்திய மீனவர்கள் இழுவைமடி படகுகளின் மீன்பிடி அதிகரித்துள்ளது. இதனால் நாளாந்தம் எமது வலைகள் அறுத்தழிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் இழுவைப்படகுகளால் அறுத்தழிக்கப்படுவதுடன் வலைகள் காணாமல் போகின்றது. அத்துடன் உள்ளூரில் சட்டவிரோத மீன்பிடியான சுருக்குவலைத் தொழில் நடவடிக்கையால் எமது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த…
-
- 0 replies
- 117 views
-
-
Published By: VISHNU 28 JUL, 2025 | 07:15 PM (நா.தனுஜா) நீதியை நிலைநாட்டுவதில் உள்ளகப்பொறிமுறைகளின் நீண்டகாலத் தோல்வியைக் கருத்திற்கொண்டு நோக்குகையில், தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு செயன்முறையில் நிலையான சர்வதேச கண்காணிப்பு உள்வாங்கப்படவேண்டியது மிக அவசியமாகும். அதற்கமைய சுயாதீன சர்வதேச தடயவியல் நிபுணர்கள் மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவேண்டும். அகழ்வு செயன்முறை தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் வெளிப்படைத்தன்மைவாய்ந்த முறையில் தெளிவுபடுத்தவேண்டும் என சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. அதுமாத்திரமன்றி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும…
-
- 1 reply
- 127 views
- 1 follower
-
-
28 JUL, 2025 | 06:00 PM கேரள கடற்பரப்பில் பிளாஸ்டிக் தூவல்களை ஏற்றிச்சென்ற கப்பல் கடந்த மே மாதம் 25ஆம் திகதி கடலில் மூழ்கியதையடுத்து, அந்த கப்பலில் காணப்பட்ட பிளாஸ்டிக் தூவல்கள் தற்போது மன்னார் மாவட்டத்தின் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கி வருகிறது. இந்நிலையில் கரை ஒதுங்கி தேங்கிக் கிடக்கும் பிளாஸ்டிக் தூவல்களை அகற்றும் செயற்பாடு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் திங்கட்கிழமை (28) மன்னார் சௌத்பார், கீரி, தாழ்வுப்பாடு கடற்கரை பகுதிகளில் பிளாஸ்டிக் தூவல்களை அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் தெரிவுசெய்யப்பட்ட மக்களை பயன்படுத்தி, அவர்களுக்கு குறிப்பிட்ட நாளாந்த கொடுப்பனவு ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடல் சூழலையும் கடல்வாழ் உயிரினங்களை…
-
- 1 reply
- 193 views
- 1 follower
-
-
எலும்புக்கூடுகள் கழுத்தை இறுக்கப்போகின்றதென அஞ்சும் பேரினவாதம் திசை திருப்புவதற்கான சகல எத்தனங்களிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது - ஐங்கரநேசன் 28 JUL, 2025 | 05:40 PM வரலாறு இன்னுமொரு சந்தர்ப்பமாகச் செம்மணியில் மனிதப் புதைகுழிகளை அடையாளப்படுத்தியுள்ளது. எலும்புக்கூடுகள் தனது கழுத்தை இறுக்கப் போகின்றது என்று அஞ்சும் பேரினவாதம் இதனைத் திசை திருப்புவதற்கான சகல எத்தனங்களிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதுஎனதமிழ்தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார் கறுப்பு யூலை நினைவுக் கருத்தரங்கு 27.07.2025 அன்று யாழ்ப்பாணம் வை.எம்.சி.ஏ மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு ஆற்றியஉரையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கையர் தினத்தைத் கொண்டாடுவதால் மட்டும்தமிழ் மக்களின் மனங்க…
-
- 0 replies
- 154 views
- 1 follower
-
-
முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த கைது. முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் திங்கட்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளார். பொத்துஹேர பகுதியில் நபரொருவரை கடத்தி, கொலை செய்த சம்பவம் தொடர்பான விசாரனைகளுக்கமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் சந்தேகநபரான நிஷாந்த உலுகேதென்ன கடற்படையின் புலனாய்வு பிரிவின் பிரதானியாக செயற்பட்டதுடன் கடத்தப்பட்ட நபர் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் சட்டவிரோத தடுப்பு முகாம் அவரது கண்காணிப்பில் செயற்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கடத்தப்பட்ட நபர் பல நாட்களுக்கு பின்னர் சட்டவிரோத தடுப்பு முகாமிலிருந்து அனுப்பிய கடிதத்தை அடிப்படையாகக்கொண்டு விசாரணைகள் முன்னெடுக்…
-
- 4 replies
- 461 views
- 1 follower
-
-
நாமலுக்கு எதிராக பிடியாணை உத்தரவு! நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக ஹம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றத்தால் இன்று (28) பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த வழக்குக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதை அடுத்து இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. https://athavannews.com/2025/1440923
-
-
- 4 replies
- 325 views
- 1 follower
-
-
இலங்கை ரோம் உடன்படிக்கையில் கைச்சாத்திடாவிட்டாலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த முடியும்; இனத்துக்காக தமிழரசு ஒன்றுபட வேண்டும்; ஜெனிவாவில் தமிழ் மக்களின் ஆணை பெற்றவர்களை பயன்படுத்தி இலங்கை தப்பித்துள்ளது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 28 JUL, 2025 | 01:20 PM இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (உரோம்) உடன்படிக்கையில் கையெழுத்திடா விட்டாலும் இலங்கையில் இடம் பெற்ற மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் போர்க்குற்றங்கள் இன அழிப்பு ஆகியவற்றுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான வழிகள் இருப்பதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை (YMCA) மண்டபத்தில் சரேஷ்ட சட்ட…
-
-
- 1 reply
- 192 views
- 1 follower
-
-
Published By: VISHNU 28 JUL, 2025 | 06:06 AM மறைந்த கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயாவின் ஓராண்டு நினைவு வணக்க அஞ்சலி நிகழ்வு வவுணதீவில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வவுணதீவுப் பிரதேச கிளையின் ஏற்பாட்டில் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. வணக்க அஞ்சலி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மட்டு மாநகர முதல்வர், பிரதிமுதல்வர், பிரதேச சபை தவிசாளர்கள், பிரதிதவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி அங்கத்தவர்கள் என பலரும் கலந்துகொண்டு மறைந்த பெருந்தலைவருக்கு நினைவு அஞ்சலி செலுத்தினர் இதன் போது தீபச்சுடர், மலரஞ்சலி, நினைவுப்பேருரை போன்றன நிகழ்வுகள் இடம்பெற்றது. https://www.virakesari.lk/article/221120
-
- 0 replies
- 108 views
- 1 follower
-
-
குழந்தைகளை கொல்லும் இஸ்ரேலிய படையினர் இலங்கைக்கு வருவதற்கு இலவச வீசாவா? கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் Published By: RAJEEBAN 28 JUL, 2025 | 10:57 AM இஸ்ரேலிய படையினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு அவர்களிற்கு இலவச வீசாவை வழங்குவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்துவருவதாக தெரிவித்துள்ள சுதந்திர பாலஸ்தீன இயக்கம் இதற்கு எதிராக இன்று வெளிவிவகார அமைச்சின் முன்னால் மாலை நான்கு மணிக்கு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபடவுள்ளது. இது குறித்து சுதந்திர பாலஸ்தீன இயக்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது காசாவில் அப்பாவி சிறுவர்கள் மீது குண்டுவீசி ,சுட்டுக்கொலை செய்த இஸ்ரேலிய இராணுவீரர்களிற்கு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு இலவசவீசாவை வழங்கும் திட்டமொன்றை முன்னெடுப்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்த…
-
- 0 replies
- 98 views
-
-
கட்சிகளை விட தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதுவே முக்கியம் காட்சிகளுக்கு அப்பால் தமிழ் மக்களின் இன விடுதலைக்கு நாங்கள் என்ன செய்யப் போகின்றோம் என்று இருக்கக்கூடிய சூழ்நிலையில், மிக நீண்ட போராட்டத்திற்கு பிற்பாடு புதிய ஒரு அரசாங்கத்தின் நிழலுக்குள் தள்ளப்பட்டிருக்கின்றோம் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அந்தப் புதிய அரசாங்கம் ஆயிரம் வாக்குறுதிகளை கொடுத்து வந்திருந்தாலும் கூட இன்று அந்த வாக்குறுதிகளின் அடிப்படையில் ஏதாவது நடைபெறுகின்றதா? தமிழ் மக்களின் எதிர்காலம் என்ன என்ற கேள்விகளுக்கு நாங்கள் பதில் கண்டுபிடிக்க வேண்டி இருக்கின்றது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்ட…
-
- 0 replies
- 104 views
-
-
500 கோடி ரூபா மோசடி; முன்னாள் அமைச்சருக்கு வலை 500 கோடி ரூபா நிதியை மோசடி செய்த குற்றச்சாட் டின் பேரில் முன்னாள் அமைச்சர் ஒருவர் விரைவில் கைது செய்யப்படவுள்ளார் என்று இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு வட்டாரம் தெரிவித்துள்ளது. பல்வேறு வேலைத்திட்டங்கள் தொடர்பில் அரச நிதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை, தொழில் வழங்குவதற்காக இலஞ்சம் வாங்கியமை மற்றும் அந்த அமைச்சில் பணி புரிந்த பல ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைகள் போன்றவை தொடர்பில் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழு குறித்த முன்னாள் அமைச்சரை விரைவில் கைது செய்யவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், முன்னைய ஆட்சியில் பாதுகாப்புப் பிரிவில் கடமைபு…
-
- 0 replies
- 90 views
-
-
புதிய பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன சத்தியப்பிரமாணம் ! இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன இன்று (27) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ ஓய்வுபெற்றதையடுத்து வெற்றிடமான குறித்த பதவிக்கு உயர் நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சூரசேனவின் பெயர் அரசியலமைப்பு சபையினால் அண்மையில் அங்கீகரிக்கப்பட்டது. இலங்கையின் 49ஆவது பிரதம நீதியரசராக பிரீத்தி பத்மன் சூரசேன வரலாற்றில் இணைகிறார். https://athavannews.com/2025/1440826
-
- 0 replies
- 78 views
-
-
கடலட்டை உற்பத்தி அதிகரித்தால் சூழல் சமநிலை சீர்குலையும்; ஆளுநர் சுட்டிக்காட்டு வடக்கு மாகாணத்திலிருந்து கடலட்டையின் ஏற்றுமதிகள் இரட்டிப்பாகியுள்ளன. எனினும் கடலட்டை உற்பத்தியை அதிகரிப்பதை மாத்திரம் நாம் இலக்காகக் கொண்டு செயற்பட்டாலோ அல்லது சட்டவிரோதமான நடவடிக்கைகளை அனுமதித்தாலோ கடல் சுற்றுச்சூழல் அமைப்பின் நுட்பமான சமநிலை சீர்குலையும் என்று வடக்கு ஆளுநர் நா.வேதநாயகன் சுட்டிக்காட்டியுள்ளார். சினமன்குளோபல் நிறுவனம், யாழ். பல்கலைக்கழகம் ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற கடலட்டை உற்பத்தி தொடர்பான கருத்தரங்கில் உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்:- எங்களுடைய கடற்கரைகள் பல்வேறு காரணங்களுக்காக வேட்டையாடப்படுகின்ற…
-
- 0 replies
- 112 views
-
-
ஜனாதிபதி இன்று மாலைதீவுக்கு பயணம்! மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முய்சுவின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று (28) காலை உத்தியோகபூர்வ பயணமாக மாலைத்தீவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். எதிர்வரும் 30 ஆம் திகதி வரை திட்டமிடப்பட்டுள்ள இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, மாலைத்தீவு ஜனாதிபதி முய்சுவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார். அத்துடன், இரு தரப்பினதும் பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவதனை முன்னிட்டு, பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் பரிமாறிக் கொள்ளவுள்ளார். இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கிடையில் முறையான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டு இவ்வருடத்துடன், 60 ஆண்டுகள் பூர்த்தியாகும் இத்தருணத்தில், ஜனாதிபதி திசாநாயக்கவின் மாலைத்தீவிற்கான உத்தியோகபூர்…
-
- 0 replies
- 81 views
-