ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143612 topics in this forum
-
நாகர்கோவில் பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெறுவதாக குற்றச்சாட்டு! தொடர்ச்சியாக நாகர்கோவில் பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் ஆ.சுரேஸ்குமார் தெரிவித்துள்ளார். நாகர்கோவில் மேற்கு, நாகர்கோவில் கிழக்கு, நாகர்கோவில் வடக்கு, குடாரப்பு பகுதிகளில் கும்பல் ஒன்றினால் மணல் கொள்ளை திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதிகளில் ஒருசிலர் உழவு இயந்திரத்தில் ஏற்றி வந்து வீதிகளில் மணலை கொட்டுவதாகவும், மற்றவர்கள் கனரக வாகனத்தை கொண்டு வந்து அள்ளிச் செல்வதாகவும், பல்வேறு இடங்களிலும் இவ்வாறு மணல் ஏற்றப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இது ஒரு பாரிய த…
-
- 0 replies
- 140 views
-
-
கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை ஆழ்கடல் பகுதிகளில் உள்ள கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு இன்று (வியாழக்கிழமை) இயற்கை அபாய முன்னெச்சரிக்கை மையத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக மன்னாரிலிருந்து காங்கேசன்துறை மற்றும் அரபிக்கடலுக்கு ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வங்கக்கடலில் இலங்கைக்கு வடகிழக்கில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மேற்கு நோக்கி நகர்ந்து தெற்கு ஆந்திரா மற்றும் அதை அண்மித்த வட தமிழக கடற்கரையை இன்று அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கிழக்கு-மத்திய அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை மேற்க…
-
- 0 replies
- 98 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) 200 கோடி முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்ட அல்லாஹ்வை ''உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி''எனக்கூறி கேவலப்படுத்திய ஒருவரை “ஒரே நாடு ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணியின் தலைவராக நியமித்ததன் மூலம் இலங்கை முஸ்லிம்களை மிரட்டப்பார்க்கின்றீர்களா? என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் சபையில் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை(16), அரசாங்கத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில், இந்த நாட்டிலே தனியார் சட்டங்களை சில விடயங்கள் முஸ்லிம்களின் இனம…
-
- 2 replies
- 317 views
-
-
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவது தொடர்பில் அரசு இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை. எனினும், உதவியை பெறவேண்டுமா என்பது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. – என்று அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது டொலர் நெருக்கடிக்கு தீர்வை காண சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது பற்றி அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டதா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெறவேண்டுமா என்பது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. அவ…
-
- 0 replies
- 189 views
-
-
யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் ஏற்பாட்டில் இரண்டாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நேற்று ஆரம்பமாகியது. தமிழ்த்துறையின் தலைவர், பேராசிரியர் ம.இரகுநாதன் தலைமையில் ஆரம்பமாகிய இந்த ஆய்வு மாநாட்டில், பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா முதன்மை விருந்தி னராகவும், கலைப்பீடாதிபதி பேராசிரியர் க.சுதாகர் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர். யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் முன்னாள் தலைவரும், வாழ்நாள் பேராசிரியருமான, அ.சண்முகதாஸ் மாநாட்டின் சிறப்புரையை வழங்கி, மாநாட்டை ஆரம்பித்து வைத்தார். மாநாட்டின்போது, ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கும், மொழிக்கும் தொண்டாற்றிய ஏழு புலமையாளர்களுக்குக் கௌரவம் வழங…
-
- 0 replies
- 265 views
-
-
இ.சுதாகரன் “பௌத்தர்கள் இல்லாத இடத்தில் விஹாரை அமைக்கப்படவுள்ளது. அப்படியென்றால், பெரும்பான்மையினக் குடியேற்றம் நடைபெற வாய்ப்புள்ளது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் விகாரைகள் அமைக்கப்படுவது தொடர்பாக கருத்துரைக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பொலன்னறுவை மாவட்டத்தின் எல்லையிலுள்ள வடமுனையில் இருந்து 5 கிலோமீற்றர் தொலைவிலுள்ள நெளுக்கல் மலையில் விஹாரை ஒன்றை அமைப்பதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் துரித நடவடிக்கை எடுத்துள்ளார். “பொலன்னறுவை மாவட்ட சொறுவில், கறுப்பளை, முத்துக்கல், மன்னம்பிட்டி மற…
-
- 0 replies
- 360 views
-
-
கடல் பகுதிகளில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு – இலங்கையர்களுக்கு எச்சரிக்கை கிழக்கு மத்திய வங்காள விரிகுடா, தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதிகள் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் குறித்து இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, வடக்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் கிழக்கு-மத்திய மற்றும் அதனை அண்மித்த தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அடுத்த 24 மணி நேரத்தில…
-
- 1 reply
- 300 views
-
-
’ராஜபக்ஷ குடும்பமே நாட்டுக்கு சுமை’ பா.நிரோஸ் அரச ஊழியர்கள் நாட்டுக்கு சுமையில்லை என தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, ராஜபக்ஷக்களின் குடும்பமே நாட்டுக்கு சுமை என்றும் தெரிவித்தார். வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், அரச ஊழியர்கள் நாட்டுக்கு சுமை என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார். எனினும் பசில் ராஜபக்ஷ அமைச்சராக இருந்த முன்னாள் அரசாங்கத்திலேயே 87 சதவிதமான அரச ஊழியர்கள் சேவைக்கு இணைத்துகொள்ளப்பட்டுள்ளனர் என்றார். உண்மையில் நாட்டுக்கு ராஜபக்ஷக்களின் கு…
-
- 0 replies
- 408 views
-
-
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சுரேன் ராகவன் 2 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு November 11, 2021 நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் தமக்கு 2021 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிதி 10 மில்லியன் ரூபாவில் இரண்டு மில்லியன் ரூபாவை முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் புனர்நிர்மாண நடவடிக்கைக்களுக்காக ஒதுக்கியுள்ளார். ஏற்கனவே முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 4 மில்லியன் ரூபா ஒதுக்கியிருந்த நிலையில் மேலும் 2 மில்லியன் ரூபாவை ஆலயத்தின் நிர்மாணப் பணிகளுக்காக ஆலய நிர்வாகசபைத் தலைவரின் வேண்டுகோளுக்கு அமைவாக ஒதுக்கியுள்ளார். இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் 14 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகள் கிடைக்கவுள்ளமை…
-
- 15 replies
- 885 views
- 1 follower
-
-
போராட்டத்தை நீர்த்து போக செய்வதற்காகவே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நிதி- கா.ஜெயவனிதா November 17, 2021 எங்களுடைய போராட்டத்தை நீர்த்துப் போக செய்வதற்காகவே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக வவுனியாவில் தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்க தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா தெரிவித்தார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக வரவு செலவு திட்டத்தில் 300 மில்லியன் ரூபாய் அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், நாங்கள் இன்று 1738 ஆவது நாளாக போராடி கொண்டிருக்கின்றோம். எங்…
-
- 0 replies
- 1.9k views
-
-
வல்வெட்டித்துறை பாதீடு தோற்கடிப்பு ; இரண்டு மாதங்களுக்கு முன்னர் தவிசாளரானவர் பதவியிழக்கும் நிலை! இரண்டு மாதங்களுக்கு முன்னர் தவிசாளராக தெரிவானவர் பாதீடு தோற்கடிக்கப்பட்டமையால் , தவிசாளர் பதவியை இழக்கும் நிலைமையில் உள்ளார். வல்வெட்டித்துறை நகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்றைய தினம் புதன்கிழமை சபையில் புதிய தவிசாளர் செல்வேந்திராவால் சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த பாதீடு மீதான வாக்கெடுப்பில் பாதீடு ஒரு வாக்கினால் தோல்வியடைந்தது. அந்நிலையில் 14ஆம் நாள் மீண்டும் பாதீடு திருத்தங்களுடன் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் அன்றைய தினமும் பாதீடு தோல்வியடைந்தால் , தவிசாளர் பதவி இழக்க நேரிடும். வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் தவிசாளரான கோணலிங்கம் க…
-
- 0 replies
- 150 views
-
-
மாவீரர் நாளினை ஏனைய தேவைகளுக்காகப் பயன்படுத்த மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்-கதிர் November 17, 2021 மாவீரர் நாளினை ஏனைய தேவைகளுக்காக யாரும் பயன்படுத்துவதை மக்கள் அனுமதிக்கமாட்டார்கள் என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இராசையா கதிர் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இராசையா கதிர், “தமிழ்மக்களின் தமிழ்தேசிய விடுதலைக்காக இந்த மண்ணில் இலங்கை அரசாங்கத்துடன் போராடி வீரமரணம் அடைந்த மாவீரர்களை நினைவு கொள்வதற்காக தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்ட நாளிலே அந்த மாவீரர் நாள் மண்ணில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. மாவீரர் நாள் என்பது …
-
- 0 replies
- 298 views
-
-
நல்லிணக்கத்தில் அக்கறையிருந்தால் 13 இல் பறிக்கப்பட்டதை வழங்குங்கள்; சித்தார்த்தன் November 17, 2021 “இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி – இந்த நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்ல வேண்டுமென்ற கரிசனை இருந்தால் – அதில் அர்பணிப்பிருந்தால் – முதலில் அரசியல் யாப்பில் இருப்பவற்றை நிறைவேற்றுங்கள். 13 இலிருந்து பறிக்கப்பட்ட விடயங்களை மீளவும் தமிழ் மக்களுக்கு வழங்குங்கள்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யும் புளொட் தலைவருமான த.சித்தார்த்தன் வலியுறுத்தினார். அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு நேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தமது உரையில் மேலும் முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு: …
-
- 0 replies
- 319 views
-
-
யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்களுக்கு வருடாந்தம் தங்கப்பதக்கங்கள் November 17, 2021 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக, முகாமைத்துவ பீடத்திலுள்ள கணக்கியல், நிதிமுகாமைத்துவம் மற்றும் வணிகம் (கணக்கியலும், நிதியும்) ஆகிய துறைகளில் பயின்று சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் இடம்பெறும் பட்டமளிப்பு விழாவின் போது இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தினால் தங்கப்பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன. இதற்காக வணிக முகாமைத்துவ பீடத்துக்கும், இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை முற்பகல் 9 மணியளவில், யாழ். பல்கலைக்கழக வணிக, முகாமைத்துவ பீடாதிபதி …
-
- 0 replies
- 227 views
-
-
கிளிநொச்சி நகரத்தில் பொலிசாருக்கு காணி அளவீடு செய்வதற்கு மக்கள் எதிர்ப்பு! கிளிநொச்சி நகரத்தில் பொலிசாருக்கு காணி அளவீடு செய்வதற்கு மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் எதிர்ப்பை அடுத்து குறித்த அளவீட்டு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கே. என் 23 கிராம அலுவலர் பிரிவில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணிகள் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன இந்த நிலையில் காணிகளை சுவீகரிக்கும் நோக்கில் காணி அளவீடு செய்வதற்காக நில அளவையாளர்கள் பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் குறித்த இடத்திற்கு வருகை தந்திருந்தனர் . இதனையடுத்து சம்பவ இடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் காணி உரிமையாளர்கள்…
-
- 0 replies
- 153 views
-
-
பௌத்த அறநெறி பாடசாலைகளையும் மீள ஆரம்பிக்க ஆலோசனை! நாடளாவிய ரீதியில் சகல பௌத்த அறநெறி பாடசாலைகளையும் மீள ஆரம்பிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் 28ஆம் திகதி முதல் பௌத்த அறநெறி பாடசாலைகளை மீள ஆரம்பிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பௌத்த விவகார ஆணையாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. நவம்பர் 21ஆம் திகதி தேவையான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் 28ஆம் திகதி முதல் பௌத்த அறநெறி பாடசாலைகளை திறக்க முடியும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவ்வாறு திறக்கப்படும் பாடசாலைகளில் சுகாதார விதிமுறைகளை கடுமையாக அமுல்படுத்துமாறும் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார். https://athavann…
-
- 0 replies
- 200 views
-
-
நரேந்திர மோடியின் இந்துத்துவா இராஜதந்திரத்தை கையிலெடுக்கிறது இலங்கை அரசாங்கம் – சித்தார்த்தன் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் உள்ள பி.ஜே.பி. அரசாங்கத்தினை திருப்திப்படுத்த இந்துத்வா இராஜதந்திரத்தை இலங்கை அரசாங்கம் கையிலெடுக்கிறது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இதனைத் தெரிவித்தார். கண்டியிலுள்ள சீதை அம்மன் ஆலயத்திலுள்ள கல்லை ராமர் கோவில் கட்டுவதற்கு கொண்டு செல்கின்றமை மற்றும் இறைச்சிக்காக மாடு அறுப்பதை தடுப்பது பற்றிய சட்ட மூலத்ம் கொண்டுவரப்பட்டமையை சுட்டிக்காட்டியே அவர் இதன…
-
- 0 replies
- 175 views
-
-
அரசாங்கம் நாசமாகிப் போனாலும் கூட சர்வதேச நாணய நிதியத்தை நாடப்போவதில்லை – அமைச்சர் வாசு அரசாங்கம் நாசமாகிப் போனாலும் கூட ஒருபோதும் சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்று மக்களை நாசமாக்க இடமளிக்க மாட்டோம் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். ஆகவே சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வது என்பது சிறைக்கு செல்வதற்கு சமமானது எனவும் நாடாளுமன்றில் அவர் கூறினார். சர்வதேச சந்தையில் விலை உயர்வு காணப்படுகின்ற நிலையிலும், ஏனைய பல சிக்கல்கள் உள்ள நிலையிலும் நாட்டில் விலைவாசி அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார். இதற்கான தீர்வு எதிர்க்கட்சியிடம் உள்ளதா என கேள்வியெழுப்பிய வாசுதேவ நாணயக்கார, கொரோனா தொற்று இல்லையெனில் வேறுவிதமாக இந்த வரவு செலவு திட்டம் உருவாகியிருக்கும் என்றும…
-
- 0 replies
- 247 views
-
-
வடமாகாண, வீதிகளில்... நடைமுறைக்கு வரவுள்ள புதிய நடமுறை! வடமாகாணத்தின் ஏ9 பிரதான வீதியின் இருபுறங்களிலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் அனுமதியின்றி வாகனங்களை நிறுத்துவது தொடர்பில் வடமாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் பளிஹக்கார விசேட அறிவித்தலொன்றை விடுத்துள்ளார். அந்த அறிவிப்பில் வன்னி, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பிரிவுகளிலும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அனுசரணையுடன் பொருத்தமான வாகனத் தரிப்பிடங்களை அடையாளம் கண்டு இது தொடர்பில் அறிவிக்குமாறு சாரதிகளிடம் கோரப்பட்டுள்ளது. பணி முடியும் வரை சாரதிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் பலகைகள் வைக்க வேண்டுமென்றும் இப்பணியை உரிய…
-
- 0 replies
- 168 views
-
-
நாட்டில்... மார்ச்சில், உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என எச்சரிக்கை! இலங்கையில் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) நடைபெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் 2ஆம்வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “இலங்கையிடம் தற்போது 2 பில்லியன் அந்நியச் செலாவணியே கையிருப்பில் உள்ளது. அதில் சுமார் 300 மில்லியன் தங்கமா இருக்கின்றது. மீதமுள்ள 1.7. பில்லியனை வைத்துக்கொண்டு நாட்டை நிர்வகிக்கமுடியாது. அடுத்த வருடம் 5 முதல் 6 பில்லியன்வரை கடன் செலுத்த …
-
- 0 replies
- 124 views
-
-
தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயது 60ஆக உயர்வு – சட்டமூலத்தில் சபாநாயகர் கைச்சாத்து! தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதியத்திற்கான வயது வரம்பில் திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன கைச்சாத்திட்டார். நாடாளுமன்றத்தில் அவர் இன்று (புதன்கிழமை) குறித்த சட்டமூலத்தில் கையெழுத்திட்டார். நவம்பர் 11ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தில் இலங்கையின் தனியார் துறை ஊழியர்களின் புதிய குறைந்தபட்ச ஓய்வு வயது 60ஆக அறிவிக்கப்பட்டது. அதன்படி, தற்போது 55 வயது நிரம்பியவர்கள், 57 வயது வரை பணிபுரியலாம் என்றும் 53 முதல் 54 வயது வரை உள்ளவர்கள் 58 வயது வரையும், 52 வயது நிரம்பியவர்கள் 59 வயது வரையும் பணிபுரியலாம் என்றும் சட்டமூல…
-
- 0 replies
- 154 views
-
-
அரச அதிகாரிகளை தொடர்ச்சியாக அச்சுறுத்தும் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் – கைகட்டி வேடிக்கை பார்க்கும் பொலிஸார் : சாணக்கியன் கடும் கண்டனம்! மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தொடர்ச்சியாக பொதுமக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், பொலிஸார் கைகட்டி அதனை வேடிக்கை பார்ப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் விசனம் வெளியிட்டுள்ளார். மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளரின் அறையினை முற்றுகையிட்டு நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இதன்காரணமாக நேற்றைய தினம் பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் நடவடிக்கைகள் முற்றா…
-
- 1 reply
- 200 views
-
-
இலங்கையில் சஜித் பிரேமதாஸ தலைமையில் போராட்டம்: ''சாபக்கேடான அரசுக்கு எதிரான பேரணி' 43 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SJB நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்னைகளை முன்னிலைப்படுத்தி, அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமொன்று கொழும்பில் இன்று (16) நடத்தப்பட்டது. பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் இந்த எதிர்ப்பு போராட்டம் இன்று பிற்பகல் நடத்தப்பட்டது. ''சாபக்கேடான அரசாங்கத்திற்கு எதிரான பேரணி'' என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. உரத் தட்டுப்பாடு, சீமெந்து தட்டுப்பாடு, சமையல் எரிவாயு தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு, விவசாயிகளின் பிரச்சினைகள் என நாட்…
-
- 0 replies
- 342 views
- 1 follower
-
-
மக்கள் பணிமனையை திறந்து வைத்தார் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்! மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட 24 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள மக்களுக்கான தனது இராஜாங்க அமைச்சின் சேவையினை மக்கள் காலடிக்கே கொண்டு சேர்ப்பதற்கான இராஜாங்க அமைச்சரின் மக்கள் பணிமனை திறப்பு விழா நிகழ்வு திங்கட்கிழமை இடம்பெற்றது. பின்தங்கிய கிராம அபிவிருத்தி, மனைசார் கால் நடை மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களின் பட்டிப்பளை பிராந்தியத்திற்கான மக்கள் பணிமனை அலுவலகமானது கடுக்காமுனையில் இராஜாங்க அமைச்சரினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. முற்போக்குதமிழர் அமைப்பின் பிரதான இணைப்பாளரும் மண்முன…
-
- 1 reply
- 346 views
-
-
வியாழேந்திரனின் பிறந்தநாளை முன்னிட்டு மட்டக்களப்பு வந்தாறுமூலையில் மாபெரும் இரத்ததான முகாம் (சிஹாரா லத்தீப்)இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் 43 வது பிறந்த நாளை முன்னிட்டு முற்போக்கு தமிழர் கழகமும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மாவட்ட அமைப்பும் இணைந்து மாபெரும் இரத்ததான முகாமொன்றினை இன்று ஏற்பாடு செய்திருந்தது.இராஜாங்க அமைச்சரின் ஏறாவூர் பற்று வந்தாறுமூலை பிராந்திய மக்கள்பணிமனை வளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த இரத்ததான முகாமில் இப்பிரதேச இளைஞர் யுவதிகள்பெருமளவில் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனர்.மாகாணத்தின் பிரதான வைத்தியசாலையான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் கேன்சர் ,கொரோனா தொற்று சிகிச்சை அளித்தல் மற்றும் தலசீமியா நோயாளர்களுக்…
-
- 0 replies
- 339 views
-