Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புலிகள் இயக்கத்தினரை மாத்திரம் தேடிச் சென்று அழிப்பதை விட்டு தமிழர்களை கொல்ல, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன இடமளித்ததாக தேவாலஹிந்த அஜித தேரர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் 13 இராணுவ வீரர்களை கொலை செய்தார்கள். ஆனால் இராணுவ வீரர்களை கொலை செய்த அந்த இயக்கத்தினரை மாத்திரம் தேடிச் சென்று அழிப்பதை விட்டு அன்று அனைத்து பொலிஸாருக்கும் விடுமுறை கொடுத்து வேலை செய்ய விடாமல் ஜே.ஆர்.ஜெயவர்தன தடுத்தார். பின்னர் அனைத்து தமிழர்களின் வீடுகளையும், கடைகளையும் உடைத்து அவர்களின் பொருட்களை திருடி, அவர்களுடைய அனைத்து சொத்துக்களுக்கும் தீ வைத்து கொளுத்தி, தமிழர்களை கொல்ல இடமளித்தார். இது மிக…

    • 3 replies
    • 327 views
  2. மன்னாரின் மூத்த ஊடகவியலாளர்... பீ.ஏ.அந்தோனி மார்க், கொரோனா தொற்றால் காலமானார்! மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரும், தமிழ்த் தேசியப் பற்றாளருமான பீ.ஏ.அந்தோனி மார்க் தனது 80ஆவது வயதில் நேற்று(செவ்வாய்க்கிழமை) இரவு முல்லைத்தீவு வைத்தியசாலையில் காலமானார். திடீர் சுகயீனம் காரணமாக முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் இரவு உயிரிழந்தார். இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூத்த ஊடகவியலாளர் பீ.ஏ.அந்தோனி மார்க் மன்னார் மாவட்டத்தில் பல்வேறு பணிகளை ஆற்றியுள்ளார். குரலற்ற மக்களின் குரலாகவும் குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடிக்கவும், அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்ததோடு…

  3. ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில்... ஜனாதிபதி இன்று உரை! ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தொடரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இன்று (புதன்கிழமை) உரை நிகழ்த்தவுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைவமையில் நேற்றைய தினம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமானது. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்பிக்கையான மீட்பு, நிலைத்தன்மையை உருவாக்குதல், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் உள்ளிட்ட விடயங்களை மையமாகக் கொண்டு குறித்த ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76ஆவது கூட்டத்தொடர் இடம்பெறுகின்றது. இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரில், இலங்கை நாட்டையும் மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று முற்பகல் உ…

  4. அரசியல் கைதிகளுக்கு... கொலை அச்சுறுத்தல், விடுத்த சம்பவம் – நாடாளுமன்றில் விசேட பிரேரணை அநுராதபுரம் சிறைச்சாலையில் இராஜாங்க அமைச்சரால் அரசியல் கைதிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பாக விசேட பிரேரணையொன்று முன்வைக்கப்படவுள்ளது. இந்தப் பிரேரணையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) முன்வைக்கவுள்ளார். கடந்த 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்ற இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இரண்டு கைதிகளை மண்டியிடச் செய்து கொலை மிரட்டல் விடுத்ததாகக் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1240551

  5. நாடளாவிய ரீதியில்... ஒன்றிணைந்த சுகாதார சேவை ஊழியர்கள் சங்கம் பணிப்புறக்கணிப்பு! நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த சுகாதார சேவை ஊழியர்கள் சங்கம் இன்று (புதன்கிழமை) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளது. ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து, இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக சங்கத்தின் பிரதான செயலாளர் தெம்பிட்டியே சுதகானந்த தேரர் தெரிவித்துள்ளார். கொரோனா விசேட கொடுப்பனவான 7 ஆயிரத்து 500 ரூபாயை மீள வழங்க வேண்டும் என்பதே இந்தப் போராட்டத்தின் பிரதான நோக்கமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2021/1240560

  6. ரோம் சாசனம்- சுமந்திரனிடம் தமிழர் தாயக சங்கம் முக்கிய கோரிக்கை காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்கான திறவுகோல் ரோம் சாசனத்தில்தான் உள்ளதே தவிர OMP இடத்தில் அல்ல என்று வவுனியாவில் கடந்த 1678 வது நாளாக போராட்டம் மேற்கொள்ளும் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினரால் வவுனியாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். இதன்போது அவர்கள் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழர்களையும் விசாரிக்க விரும்புவதாக சுமந்திரன் கூறுகிறார். நீதி பெறுவதற்கான சிறந்த வழி அவர்கள் அனைவரையும் விசாரிப்பது என்றும் கூறுகிறார். அனைத்து தரப்பினரையும் விசாரணைக்…

  7. நள்ளிரவில் கைச்சாத்தான ஒப்பந்தம்: உடனடியாக பிரதமர், ஜனாதிபதியை சந்திக்க விமல், வாசு உள்ளிட்டவர்கள் திட்டம் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண மற்றும் அமைச்சர்கள் தயாசிறி ஜெயசேகர, வாசுதேவ நாணயக்கார மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி தலைமையகத்தில் அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் நேற்று (திங்கட்கிழமை)நடத்திய சந்திப்பில் இந்த முடிவு எட்டப்பட்டதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். குறித்த கூட்டத்தின்போது கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றிற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் குறித்து பேசப்பட்டுள்ளது. இந்நிலையில் கட்சித் தலைவர்கள் என்…

  8. இலங்கை மக்களுக்கு... பைசரை, மூன்றாவது தடுப்பூசியாக வழங்க நடவடிக்கை! இலங்கை மக்களுக்கான மூன்றாவது தடுப்பூசிகள் முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, 14 மில்லியன் பைசர் தடுப்பூசிகளை முற்பதிவு செய்துள்ளதாக அந்த கூட்டுத்தாபனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். அதனடிப்படையில் எதிர்வரும் ஒக்டோபர் மாத நடுப்பகுதியில் அல்லது நவம்பர் மாத ஆரம்பத்திலிருந்து நாட்டு மக்களுக்கு மூன்றாவது தடுப்பூசி வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார். https://athavannews.com/2021/1240428

  9. -செ.கீதாஞ்சன் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் கைதியான நடேசு குகநாதன் என்பவர், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால், 16ஆம் திகதியன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு பகுதியைச் சேர்ந்த நடேசு குகநாதன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே, கடந்த 8 ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்கு அமைவாக, விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, இவரை 17ஆம் திகதியன்று, மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் பொறுப்பெடுத்து, அவரது வீட்டில் கொண்டுவந்து சேர்த்துள்ளனர். தன்னை விடுதலை செய்து, குடும்பத்துடன் இணைந்தமைக்கு ஜனாதிபதி உள்ளிட்டவர்களுக்கு, நடேசு குகநாதன நன்றிகளை தெரிவித்துள்ளார். …

  10. 30 க்கு மேற்பட்ட அனைவரும்... தடுப்பூசி செலுத்துவதற்கு, காலக்கெடு – அரசாங்கம் 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த வாரத்திற்குள் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என அரசாங்கம் காலக்கெடுவை அறிவித்துள்ளது. குறித்த வயதுடையவர்களுக்காக தொடர்ந்தும் தடுப்பூசி நிலையங்களை இயக்க முடியாது என்பதன் காரணமாக காலக்கெடுவை வழங்க வேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். 30 வயதுக்கு மேற்பட்ட பலர் தடுப்பூசி பெற்றிருந்தாலும், ஒருசிலர் பல்வேறு காரணங்களால் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள மறுப்பு தெரிவிப்பதாக கூறினார். குறித்த வயதுடையவர்களுக்காக தொடர்ந்தும் தடுப்பூசி நிலையங்களை நிர்வகிக்க முடியாது என்றும் நாட்டின் இளைஞர்கள் மற்று…

  11. நாட்டை விட்டு வெளியேறலாமா என்ற நிலைப்பாட்டில் இளைஞர்கள் உள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இளைஞர்களுடன் நேற்றைய தினம் காணொளி வழியாக நடத்திய பேச்சுவார்தையின் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் குறிப்பிடுகையில், முன்னாள் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவரதன அரசியல், பொருளாதாரம், கல்வி, சுற்றுலாத்துறை, தகவல் தொழிநுட்பம் மற்றும் விவசாயம் என பல துறைகளில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தினார். இவரது ஆட்சி காலத்தில் ஏற்படுத்தப்பட்ட அபிவிருத்திகள் இன்றும் தொடர்கிறது. திறந்த பொருளாதார கொள்கையினையுடைய சீனா, இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்துள்ளன. இந்நாடுகளில் அரச தலைவர்கள் மாற்ற…

  12. (இராஜதுரை ஹஷான்) மதுபானசாலைகளை திறப்பதற்கு அனுமதி கொடுத்தது யார் என்ற கேள்விக்கு பதிலளிப்பது மிகவும் கடினமானது. மக்களின் ஆரோக்கியத்தைக் கருத்திற் கொண்டே மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளன என்பதை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திஸாநாயக்க தெரிவித்தார். பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76 ஆவது கூட்டத்தொடர் இலங்கைக்கு சாதகமாக அமையும். இலங்கையின் உள்ளக விவகாரத்தில் தலையிடும் அதிகாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கும், …

  13. (எம்.மனோசித்ரா) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐ.நா. பொதுச் செயலாளரிடம் குறிப்பிட்ட விடயங்களில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்பதற்கான உண்மையை தேடல், அவர்களுக்கான நீதி மற்றும் தவறிழைத்தவர்களுக்கான பொறுப்பு கூறல் உள்ளிட்டவை தொடர்பில் எதுவுமே குறிப்பிடப்படவில்லை. அரசாங்கம் உண்மையை கண்டறிவதற்கோ அல்லது பொறுப்பானவர்களை பொறுப்பு கூறச் செய்வதற்கோ எவ்விதமான நடவடிக்கைகளையும் செய்யப்போவதில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார். நல்லிணக்கத்திற்காக இணைந்து செயற்படுமாறு அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி , அண்மையில் சுமார் 300 புலம்பெயர் தமி…

  14. Published by T. Saranya on 2021-09-21 16:40:40 (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) முகாபே சிம்பாபேவை நாசமாக்கி வீழ்ச்சியின் பாதையில் கொண்டு சென்றதை போன்று கோட்டாபய ராஜபக் ஷவின் அரசாங்கமும் செயற்பட்டுக்கொண்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டில் 65ஆயிரம் கோடி ரூபாவும், இந்த ஆண்டில் ஜூலை மாதத்தில் 20ஆயிரத்து 800 கோடி ரூபா அச்சடிக்கப்பட்டுள்ளதுடன் அண்மையில் 50ஆயிரம் கோடி ரூபா அச்சடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இது சின்பாபேவின் நிலைமையை நினைவு படுத்துகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் சபையில் குற்றம் சுமத்தினார். அரசாங்கத்தினால் இனியும் ஆட்சியை கொண்டு செல்ல முடியவில்லை என்றால் மக்கள் கருத்தை …

  15. கணவனை... அடித்து கொலை செய்த, மனைவி- யாழில் சம்பவம் குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடு முற்றியதால் கணவனை திருவலைக் கட்டையால் அடித்து மனைவி கொலை செய்துள்ளார். யாழ்ப்பாணம்- அரியாலை, பூம்புகார் பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், துரைராசா செல்வக்குமார் (வயது-32) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார். அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த அவர், ஏழாலை மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் முடித்து பூம்புகாரில் வசித்து வருகிறார். மேசன் தொழிலில் ஈடுபடும் குடும்பத்தலைருக்கு மனைவியுடன் சில நாட்களாக நீடித்த குடும்ப முரண்பாடு முற்றிய நிலையில், நேற்றிரவு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலை…

  16. அத்தியாவசியப் பொருட்களின் விலையை... திருத்தும் நடவடிக்கையில் அரசாங்கம்! அரிசி, சீனி, பால்மா மற்றும் உள்நாட்டு எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையை திருத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. தற்போது, அரிசி மற்றும் சீனிக்கு அதிகபட்ச சில்லறை விலை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருசில அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்பாக பரிசீலனை இடம்பெற்று வருகின்றது. இருப்பினும் இறுதி முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார். இறக்குமதிகளுக்கு நிதியளிப்பதற்கு டொலர் பற்றாக்குறை மற்றும் ரூபாயின் வீழ்ச்சி போன்ற காரணங்களால் நாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டார். இதேவேளை…

  17. யுத்த விதிமுறைகளை மீறிய இலங்கை அரசு மீது பன்நாட்டு சமூகம் நடவடிக்கை எடுப்பதற்குத் தயங்குவது ஏன்? ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர் - இ.கதிர் ShanaSeptember 21, 2021 யுத்த விதிமுறைகளை மீறிய இலங்கை அரசு மீது பன்நாட்டு சமூகம் சரியான முறையிலே நடவடிக்கை எடுப்பதற்குத் தயங்குவது ஏன்? தொடச்சியாக இவ்வாறான நிலைப்பாட்டில் இருந்து மௌனம் காக்காது. நேரடியாக இலங்கை மீது சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்வர வேண்டும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார்.ஐநாவின் 48வது கூட்டத்தொடர் மற்றும் சர்வதேச நீதி விசாரணையின் தற்போதையை நிலைமை தொடர்பில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் நிலைப்பாடு குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ…

  18. "டொலர்" பற்றாக்குறையே... அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமைக்கு காரணம் – மத்தியவங்கி ஆளுநர் வெளிநாடுகளிலிருந்து அத்தியாவசிய பொருட்களையும் சமையல் எரிவாயுவினையும் இறக்குமதி செய்ய முடியாதமைக்கு டொலர் பற்றாக்குறையே காரணம் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அரசியல் இலாபம் கருதியே அத்தியாவசிய பொருட்களுக்கான இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் விமர்சனங்களை மறுப்பதிகாவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள அவர், பல்வேறு இன்னல்களையும் சவால்களையும் எதிர்கொண்டுள்ள மக்களின் வாழ்வாதாரத்தில் அரசியல் செய்ய வேண்டிய தேவை இலங்கைக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்ந…

    • 3 replies
    • 485 views
  19. 'சிறையில் உள்ள இலங்கை தமிழ் இளைஞர்களுக்கு பொது மன்னிப்பு' - கோட்டாபய ராஜபக்ஷ உறுதி 52 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் தொடர்பிலான சட்ட செயற்பாடுகள் முடிவடைந்ததன் பின்னர், அவர்களை ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்க தாம் தயங்கப் போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ கூட்டரெஷிற்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஐநா…

  20. அரசாங்கத்திற்கும் பங்காளிகளுக்கும், இடையில் மீண்டும் பனிப்போர் ஆரம்பம்! September 21, 2021 கெரவலப்பிட்டிய மின் நிலையத்தின் ஒரு பகுதியை – 40 சதவீதத்தை, அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியமை தொடர்பில் அரசாங்கத்தின் பங்காளிகளில் பத்து பேர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் அமெரிக்க நிறுவனத்துக்கு மாற்றும் தீர்மானத்துக்க்கு அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசு தேவ நாணயக்கார உள்ளிட்டோர் தலைமையிலான பங்காளிகள், தமது கடும் எதிர்ப்பை அரசிடம் வெளியிட்டுள்ளனர். எனினும் ஜனாதிபதியின் அமெரிக்க பயணத்தின் முன்பாக இதற்கான ஒப்பந்தம் முழுமையாக கை்சாத்திட்டமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2021/166283

  21. தமிழ் அரசியல் கைதிகளை... நேரில் சந்தித்த, கஜேந்திரன் விடுத்த முக்கிய கோரிக்கை அனுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க, நேற்றைய தினம் (திங்கட்கிழமை) அவர்களை சந்தித்ததாக செல்வராசா கஜேந்திரன் கூறியுள்ளார். கடந்த 12ம் திகதி, சிறைச்சாலை இராஜாங்க அமைச்சர் லொஹான் ரக்வத்த, அனுராதபுரம் சிறைச்சாலைக்குச்சென்று, அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை அழைத்து அவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் மேற்கொண்ட சம்பவத்தை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது ருவிட்டர் பதிவினூடாக வெ…

  22. ஐ.நா. ஆணையாளருக்கு... அனுப்பப்பட்ட கடிதங்களால், ஏற்பட்ட முரண்பாடு: கூட்டமைப்பிடம் ரெலோ முக்கிய கோரிக்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தமிழ் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதங்களால் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளைத் தீர்ப்பதற்காக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருக்கும் பங்காளிக்கட்சிகளுக்கும் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள…

  23. கொரோனாவினால்... உயிரிழந்தவரை, அவருடைய வீட்டிற்குக் கொண்டு சென்று மக்கள் அஞ்சலி- கிளிநொச்சியில் பரபரப்பு கிளிநொச்சியில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவரை, அவருடைய வீட்டிற்குக் கொண்டு சென்று மக்கள் அஞ்சலி செய்ய அனுமதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி- உதயநகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த முன்னாள் கிராம அலுவலர் ஒருவர், கடந்த 16ஆம் திகதி, மாவட்ட வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், அவருடைய இறுதி நிகழ்வுகள் அவரின் வீட்டில் நடைபெறும் என்று ஒலிபெருக்கி ஊடாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. குறித்த விடயம் தொடர்பில் சமூக ஆர்வலர்களாலும் அரச உத்தியோகத்தர்களாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின…

  24. ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின்... 76ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம் – ஜனாதிபதி நாளை உரை! ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76ஆவது கூட்டத்தொடர் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகின்றது. இந்த கூட்டத்தொடர் அமெரிக்காவின் நியூயோர்க்கில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் அமெரிக்காவிற்கு சென்றுள்ளனர். இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் அரச தலைவர்கள் மாநாட்டில் நாளைய தினம் உரையாற்றவுள்ளார். அத்துடன் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள உணவுக்கட்டமைப்பு கூட்டத்தொடரிலும் எதிர்வரும் 24ஆம் திகதி எரிசக்தி தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடலின்போதும் ஜனாதிபத…

  25. நாடாளுமன்ற அமர்வுகள் இன்று ஆரம்பம் – பல திருத்தச் சட்டங்கள் முன்வைப்பு நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளன. இந்தவார நாடாளுமன்றக் கூட்டத்தொடரினை இரண்டு நாட்களுக்கு மாத்திரம் நடத்துவதற்கு அண்மையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய, இன்றும் நாளையும் நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளன. அதனடிப்படையில், கட்டளைகள் மற்றும் விதிமுறைகள் பலவற்றை முன்வைப்பதற்காக நாடாளுமன்ற அமர்வு இன்று கூடவுள்ளது. அதன்படி, முற்பகல் 10.00 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளதுடன், 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் பல திருத்தச் சட்டங்கள் இன்று நாடாளுமன்றில் முன்வைக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.