ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
வவுனியாவில் சிங்கள குடியேற்றத்தினை கண்டித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை (29-10-2021) காலை 10.30 மணிக்கு பழைய பேருந்து நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனுராதபுரத்திற்குரிய பகுதியில் உள்ள மதவாச்சியில் இருந்து 1330 சிங்கள குடும்பங்களை வவுனியா வடக்குடன் இணைப்பதன் மூலம் இன வீதாசாரத்தை மாற்றியமைக்க மேற்கொள்ளப்படும் அரசின் இரகசிய நகர்வை எதிர்த்தே தமிழ் தேசிய மக்கள் முண்ணனியினால் குறித்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரையும் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சிங்களக் குடியேற்றத்தை கண்டித்து வவுனியாவில் போராட்டம் | Virakesari.lk
-
- 0 replies
- 236 views
-
-
'ஒரே நாடு ஒரே சட்டம்' -தமிழரை புறக்கணித்த கோட்டாபய... இலங்கை அரசியலமைப்பின் 33 ஆம் உறுப்புரையினால், ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் 'ஒரே நாடு ஒரே சட்டம்' என்பதற்கான அரச தலைவர் செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழர் சார்ந்து எவரும் நியமிக்கப்படவில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளன பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்(Galagoda is the same Gnanasara Thera) தலைமையில் 13 பேர் கொண்ட அரச தலைவர் செயலணியே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலணி உருவாக்கம் தொடர்பில் நேற்று (26) விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த செயலணியின் உறுப்பினர்களாக, பேராசிரியர் தயானந்த பண்டார(Professor Dayananda Bandara), பேர…
-
- 12 replies
- 951 views
-
-
நான் பௌத்தத்திற்கு எதிரானவன் அல்ல October 27, 2021 நான் பௌத்த மதத்திற்கு எதிரானவனும் அல்ல மதவாதியும் அல்ல என யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார் யாழ். மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் இடம்பெற்றது. அதன் போது, நாக விகாரையின் விகாராதிபதி ஆரிய குளத்தின் புனரமைப்பு பணிகளை நிறுத்துமாறு கோரி மாநகர முதல்வருக்கு, அனுப்பியுள்ள கடிதம் தொடர்பில் சபையில் முதல்வர் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நான் ஒரு மதவாதி அல்ல , அத்தோடு பௌத்த மதத்துக்கு எதிரானவும்அல்ல. நான் இந்து மதத்தைச் சேர்ந்தவன். அதனால் ஏனைய மதங்களுக்கு எதிரானவன் அல்ல. என்னை மதவாதி என சித்தரிக்கு…
-
- 2 replies
- 404 views
-
-
புதுக்குடியிருப்பில் 19 ஏக்கர் காணிகளில் 7ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படுகிறது! October 27, 2021 முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், இராணுவம் வசமிருந்த 7 ஏக்கர் காணிகள், நாளை (28.10.21) விடுவிக்கப்படவுள்ளன என, புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந் தெரிவித்துள்ளார். இராணுவத்தினரால் விடுவிக்கப்படும் காணிகள், அரச அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டு, பின்னர் அது உரிமையாளர்களுக்கு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார். யுத்தம் நிறைவடைந்து மக்கள் புதுக்குடியிருப்பில் மீள குடியமர்ந்த போது, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்பாகவுள்ள சுமார் 19 ஏக்க…
-
- 0 replies
- 331 views
-
-
இந்தியாவுடன் பகைத்தாலும்... மக்களை பாதுகாக்கவேண்டும் – டக்ளஸ் இந்தியாவுடன் பகைத்தாலும் மக்களை பாதுகாக்கவேண்டும்,எங்களது வளங்களை வளர்த்தெடுக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக கடற்தொழில் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்களை நிறுத்துவதற்கு எமது அரசாங்கம் சகல முயற்சிகளையும் எடுத்துவருகின்றது.ஜனாதிபதி ,பிரதமர் ஆகியோர் எங்களுக்கு முழு ஆதரவு வழங்குகின்றனர். இந்தியாவுடன் பகைத்தாலும் எமது மக்களை பாதுகாக்கவும் வளங்களை வளர்த்தொடுக்கவேண்ட…
-
- 0 replies
- 325 views
-
-
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியில் தமிழர்கள் இணைக்கப்படவில்லை! ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை அரசியலமைப்பின் 33ஆம் உறுப்புரையினால், ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான ஜனாதிபதி செயலணி பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த செயலணியின் உறுப்பினர்களாக, பேராசிரியர் தயானந்த பண்டார, பேராசிரியர் சாந்திநந்தன விஜேசிங்க, பேராசிரியர் சுமேத சிறிவர்த்தன, என். ஜி.சுஜீவ பண்டிதரத்ன, சட…
-
- 4 replies
- 518 views
- 1 follower
-
-
இலங்கையில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்ல தடை? தடுப்பூசி செலுத்தியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, எதிர்காலத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய சில நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. சுகாதார அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த விடயம் தொடர்பாக தெரிவித்தார். அதன்படி, சில ஐரோப்பிய நாடுகள் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு எதிராக பொது இடங்களுக்குள் பிரவேசிப்பதைக் கட்டுப்படுத்துவது போன்ற பலவந்த நடவடிக்கைகளை ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்க்கையில் முடிவெடுக்க உரிமை உண்டு என்றபோதிலும் கொரோனா த…
-
- 0 replies
- 265 views
-
-
வாக்கு கேட்டு... ஊருக்குள் வந்தால், "மண்வெட்டி" பதிலளிக்கும் – விவசாயிகள் எச்சரிக்கை விவசாயம் குறித்து தெரியாத அமைச்சர் வாக்குகேட்டு ஊருக்குள் வந்தால் அவர்களுக்கு மண்வெட்டி பதிலளிக்கும் என வெலிமடை பிரதேச விவசாயிகள் எச்சரித்துள்ளனர். பதுளை – வெலிமடை விவசாயிகள் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். தமது பொறுமைக்கும் எல்லை உண்டு என குறிப்பிட்ட விவசாயிகள் தற்போது பெரும்போகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளபோதும் விவசாயத்தை முன்னெடுக்க வழியில்லாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டனர். அமைச்சரினால் இரசாயன உரம் இன்றி விவசாயம் செய்ய முடியும் என்பதை நிரூபித்து காட்ட முடியுமா என்றும் அவர்கள் சவால் விடுத்தனர். இரசாயன உர பாவனைக்கு இலங்கையில் தட…
-
- 0 replies
- 253 views
-
-
யுத்தத்தில் உயிர்நீத்த இராணுவ வீரர்களை நினைவு கூர்ந்து... பிரதமருக்கு பொப்பி மலர் அணிவிப்பு! இலங்கை முன்னாள் பாதுகாப்பு பணியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு குறியீட்டு ரீதியாக பொப்பி மலரை அணிவித்தனர். உலகளாவிய ரீதியில் யுத்தத்தின் போது உயிர்நீத்த இராணுவ வீரர்களை நினைவுகூரும் உலக பொப்பி மலர் தினம் எதிர்வரும் நவம்பர் 11ஆம் திகதியாகும். கொரோனா தொற்று நிலைமை காரணமாக உலக பொப்பி மலர் தினத்தை எதிர்வரும் 14ஆம் திகதி மிகவும் எளிமையான முறையில் கொண்டாடுவதற்கு இலங்கை முன்னாள் பாதுகாப்பு பணியாளர்கள் சங்கத்தினர் திட்டமிட்டுள்ளனர். பொப்பி மலர் விற்பனையின் மூலம் கிடைக்கும் வருவாய் ஒவ்வொரு ஆண்ட…
-
- 0 replies
- 441 views
-
-
தரம் குறைவான சீன உரத்தை நாட்டுக்குள் அனுமதிக்க இயலாது – அரசாங்கம் நட்பு நாடு என்பதற்காக தரம் குறைவான உரத்தை நாட்டுக்குள் அனுமதிக்க இயலாது என்பதை சீன அரசாங்கத்திற்கு தெளிவாக எடுத்து கூறியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும் இவ்விடயத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். சீன இரசாயன கப்பல் மீண்டும் நாட்டுக்கு வருகை தந்துள்ளமை குறித்து இவ்வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அவதானம் செலுத்தப்படவில்லை என்றும் கூறினார். எவ்வாறிருப்பினும் தரத்தில் குறைவான குறித்த இரசாயன உரத்தைக் கொண்ட கப்பல் கொழும்பு துறைமுகத்திற்குள் பிரவேசிப்பது தடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார். வரலாற்று ரீதியில் …
-
- 0 replies
- 178 views
-
-
அரசாங்கத்தின் உயர் பதவி முன்னுரிமையில் கப்ராலுக்கும் 5ஆவது இடம்! மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு அமைச்சரவை அமைச்சர் அந்தஸ்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை இலங்கை அரசாங்கத்தின் உயர் பதவி படிநிலைகளில் 5ஆவது இடத்தில் பேண அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், பிரதம நீதியரசருக்கு அடுத்தபடியாக 5ஆவது நிலையில் தரப்படுத்தப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சரவை அமைச்சர், பீல்ட் மார்ஷல் ஆகியோருக்கு அடுத்தபடியாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவி தரப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், 1. ஜனாதிபதி 2. பிரதமர் 3. சபாநாயகர் 4. பிரதம நீதியரசர் 5. A. எதிர்க்கட்சித் தல…
-
- 0 replies
- 134 views
-
-
”யாரையும் பழிவாங்குவது எனது நோக்கமல்ல”: அமைச்சர் டக்ளஸ் யாரையும் காட்டிக் கொடுப்பதோ பழிவாங்குவதோ எங்களது நோக்கம் இல்லை, இருக்கிறதை பாதுகாத்துக் கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பதே எமது நோக்கம் என மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மேலும், 13வது திருத்த சட்டத்தினை முழுமையாக அமுல்ப்படுத்துவதில் இருந்து ஆரம்பித்து தமிழ் மக்களின் அபிலாசைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தியமைக்காக தன்னை துரோகி என்றவர்கள், இன்று அந்த சட்டத்தினை கோரி நிற்பதாகவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடற்றொழிலாளர்கள் எதி…
-
- 4 replies
- 708 views
-
-
(எம்.நியூட்டன்) மாதகல் கடலில் நங்கூரம் திருடுவதற்கு வந்த மூவர் அப்பகுதி மீனவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். நேற்று திங்கட்கிழமை மாலை பட்டா ரக வாகனத்தில் வந்த மூவர் மாதகல் கடலில் உள்ள நங்கூரங்களை திருடுவதற்கு முயன்றுள்ளனர். இதை அவதானித்த அப்பகுதி மீனவர்கள் அவர்களை துரத்திப் பிடித்தனர். நீங்கள் எதற்காக இங்கு வந்தீர்கள் என்று மீனவர்கள் கேட்டபோது, "கடற்படையினர் எமக்கு இரண்டாயிரம் கிலோ இரும்பு தருவதாக கூறினர். எனவே அந்த இரும்பினை எடுத்துச் செல்வதற்கே நாங்கள் இங்கு வந்தோம். நங்கூரம் என்றால் என்ன என்றே எமக்கு தெரியாது." என்று தெரிவித்ததாக மீனவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து மீனவர்கள் இளவா…
-
- 0 replies
- 513 views
-
-
துபாய் நாட்டில் கோடிக்கணக்கான ரூபாயை லொத்தர் சீட்டின் மூலம் வென்ற பேருவளை - மரக்கல வத்தை பிரதேசத்தை சேர்ந்த மிஷ்பான் மொஹமட் அண்மையில் இலங்கை திரும்பியுள்ளார். துபாய் நாட்டில் தொழில் செய்து கொண்டிருந்த போது கொள்வனவு செய்த லொத்தர் சீட்டின் மூலம் வென்ற பணத்தை அவர், தான் கல்வி கற்ற பேருவளை பிரதேசத்தில் உள்ள 5 இஸ்லாமிய பாடசாலைகளின் அபிவிருத்திக்காக பகிர்ந்தளித்துள்ளார். இது சம்பந்தமான ஆவணங்கள் மற்றும் உறுதிப்பத்திரங்களை அவர், பேருவளை பாடசாலைகள் அபிவிருத்திக்குழு சங்க நிர்வாகிகளிடம் கையளித்துள்ளார். இந்த நிதி அன்பளிப்பின் போது அரசியலுடன் சம்பந்தப்பட்ட எவரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/person-won-the-lottery…
-
- 4 replies
- 773 views
-
-
கிளிநொச்சியில் பயிர்கள் அழிவு : இழப்பீடு கோரும் விவசாயிகள் கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த காலபோகத்தின் போது ஏற்பட்ட பயிரழிவுகளுக்கு இதுவரை இழப்பீடுகள் எதுவும் வழங்கப்படவில்லை. அதற்கான நிதி கிடைக்கும் பட்சத்தில் இழப்பீட்டுக் கொடுப்பனவுகளை வழங்க முடியும் என கமநல மற்றும் கமத்தொழில் காப்புறுதி சபையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட புயல் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக 1025 ஏக்கர் நெற்செய்கை 400 ஏக்கர் வரையான வயற் பயிர்கள் 150 ஏக்கர் வரையான பழ பயிர்கள் 82 ஏக்கர் வரையான மரக்கறி செய்கைகள் என்பன அழிவடைந்துள்ளன. இந்தநிலையில் இவற்றுக்கான இழப்பீட்டுக் கொடுப்பனவுகள் எவையும் இதுவரை வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது. இத…
-
- 0 replies
- 378 views
-
-
ஈழத்தமிழரை இனவழிப்புச் செய்து தமிழரின் சுற்றுச்சூழலைச் சிதைத்த கோட்டாபய சுற்றுச் சூழல் பற்றிப்பேச தகுதியுடையவரா? October 26, 2021 ஈழத்தமிழரை இனவழிப்புச் செய்து தமிழரின் சுற்றுச்சூழலைச் சிதைத்த கோட்டாபய சுற்றுச்சூழல் பற்றிப்பேச தகுதியுடையவரா? என அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச அரசசார்பற்ற மனிதவுரிமை அமைப்புகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமை சபையின் OISL விசாரணை அறிக்கையின் பிரகாரம் இலங்கையில் தமிழ்மக்களுக்கு நடைபெற்ற இனப்படுகொலைக்கு முக்கிய காரணாமாக இருந்த சிறிலங்கா இராணுவத்தில் முக்கிய பதவியில் இருந்த இராணுவ உயரதிகாரிகள…
-
- 0 replies
- 295 views
-
-
சுமந்திரனுக்கு எதிராக போராட்டம் October 26, 2021 யாழ். குருநகர் பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ சுமந்திரனுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.இழுவை மடித்தொழிலை தடை செய்ய வேண்டும் எனவும், தடை செய்யப்பட்ட தொழில் முறமைகளுக்கு எதிரான சட்டத்தினை கடுமையாக அமுல்படுத்த வேண்டும் என எம்.ஏ. சுமந்திரன் தலமையிலான போராட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. அந்நிலையில் சுமந்திரனின் கோரிக்கையால், உள்ளூரில் இழுவை மடி தொழில் செய்யும் மீனவர்கள் பாதிக்கப்படுவதாகவே மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளூர் மீனவர்கள் அடிமடி தொழில் செய்வதில்லை எனவும், இந்திய மீனவர்களே அடிமடி தொழில் செய்கின்றனர். அதனாலையே கடல் வளங்கள…
-
- 45 replies
- 4.4k views
-
-
ஆரியகுளத்தை... உரிமைகோரும், நாகவிகாரையின்... செயற்பாட்டை அனுமதிக்க முடியாது – பொ.ஐங்கரநேசன் கண்டனம். யாழ்ப்பாணம் மாநகர சபையால் ஆரிய குளத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திப் பணிகளில் நாகவிகாரை ஆரம்பம் முதலே தலையீடு செய்து வருகிறது என பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். குளத்தின் நடுவே தியான மண்டபம் அமைக்க வேண்டும் என நாகவிகாரையின் விகாராதிபதி விமலதேரர் வலியுறுத்தி வந்தார். ஆனால் தற்போது நடைபாதை அமைக்கப்படுவதை உடனடியாக நிறுத்துமாறும் குளத்தைச் சுற்றுலாத் தேவைகளுக்கு பயன்படுத்த கூடாது என்றும் மாநகர முதல்வருக்கு கடிதம் மூலம் கட்டளை பிறப்பித்துள்ளார் என சுட்டிக்காட்டினார். குளத்தின் அபிவிருத்திப் பணிகளில் நாகவிகாரையின் இத்தகைய நாட்டாண்மையை ஒருபோதும் அனுமதி…
-
- 0 replies
- 298 views
-
-
அசாத் சாலிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 9 ஆம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் ஷரீஆ சட்டம் குறித்த சர்ச்சையான கருத்தொன்றை வெளியிட்டதை அடுத்து மார்ச் 16 ஆம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கைது செய்யப்ட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1246707
-
- 0 replies
- 212 views
-
-
உர இறக்குமதியில் நிதி மோசடி: ஐக்கிய மக்கள் சக்தி சி.ஐ.டி.யில் முறைப்பாடு நனோ நைட்ரஜன் உர இறக்குமதியில் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாட்டினை வழங்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார். மேலும் பக்கச்சார்பின்றி விசரணையை நடத்தி இந்த ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியறுத்தியுள்ளனர். ஜே.சி.அலவத்துவல மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் உள்ளிட்ட உறுப்பினர்களே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாட்டினை வழங்கியுள்ளனர். https://a…
-
- 0 replies
- 168 views
-
-
ரஞ்சனின் சர்ச்சைக்குரிய தொலைபேசி குரல் பதிவு – நீதிபதிக்கு எதிரான விசாரணைக்கு தடை ! முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய தொலைபேசி குரல்பதிவு விவகாரத்தில், மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க மேன் முறையீட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஒரு நீதிமன்றம் தன் அதிகாரத்தை மீறி செயற்படாதவாறு பிறப்பிக்கப்படும் தடை நீதிப் பேராணையையும் மேன் முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. மேலும் குறித்த வழக்கில் 2 ஆவது சந்தேக நபராக நீதிபதி கிஹான் பிலபிட்டியவை பெயரிட்ட சட்டமா அதிபரின் ஆலோசனையையும் வலுவிழக்கச் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. ரஞ்சன் ராமநாயக்கவுடன் சேர்ந்து பொய் சாட்சிகளை உருவாக்க சதித் திட்டம் தீட்டியதாக கூ…
-
- 0 replies
- 176 views
-
-
நாடளாவிய ரீதியில்... அமுலில் இருந்த சில கட்டுப்பாடுகள் தளர்வு நாடளாவிய ரீதியில் அமுலில் இருந்த இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரையான கட்டுப்பாடுகள் நள்ளிரவு முதல் தளர்த்தப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் நேற்று (திங்கட்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள சுகாதார வழிகாட்டி நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய சுகாதார வழிகாட்டியின் படி, நாட்டில் தற்போது அமுலில் உள்ள இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரையான நடமாட்டத்தடை நீக்கப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமண நிகழ்வுகளில் மண்டபத்தின் மூன்றில் ஒரு பங்கு கொள்ளவில் 100 பேருக்கு மேற்படாமலும், திறந்தவெளியி…
-
- 0 replies
- 320 views
-
-
யாழ். பல்கலைக்கு சென்ற கனடியத் தூதரக அதிகாரிகள் October 25, 2021 கனடியத் தூதரக அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு உத்தியோக பூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டனர். கனேடிய அரசின் நிதி அனுசரணையுடன் இலங்கையிலுள்ள நான்கு பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் திட்ட மேம்பாடு குறித்து ஆராய்வதற்காகவே கனடிய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் குழு இன்று யாழ். பல்கலைக்கழகத்துக்கு பயணமொன்றை மேற்கொண்டது. தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் டொம் ப்றவ்ணல் தலைமையில் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி ஆர…
-
- 6 replies
- 614 views
-
-
வலி.வடக்கின், தென்னைப் பயிர் செய்கையில் இராணுவம்! October 25, 2021 யாழ்.வலி,வடக்கில் மக்களுக்கு சொந்தமான காணிகளை ஆக்கிரமித்திருக்கும் படையினர் தென்னைகளை நட்டு நிரந்தரமாக காணிகளை சுவிகரிக்கும் முயற்சி இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக வலி,வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து சங்கம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, யாழ்.வலி, வடக்கிலிருந்து வெளியேறி 31 வருடங்களாக மக்கள் தமது சொந்த இடங்களில் மீள குடியேற முடியாத நிலையில் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மயிலிட்டி, பலாலி, வசாவிளான், குரும்பசிட்டி, கட்டுவன் பகுதிகளில் நில விடுவிப்பு செய்யப்படாது 3500 ஏக்கர் தொடர்ந்தும் இராணு…
-
- 3 replies
- 392 views
-
-
எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பது குறித்து இதுவரையில் எந்தவொரு தீர்மானமும் எட்டப்படவில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலை அடுத்து, ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வரவுசெலவு திட்டம் குறித்து கலந்துரையாடப்பட்…
-
- 0 replies
- 286 views
-