ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142901 topics in this forum
-
(எம்.மனோசித்ரா) ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் செப்டெம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் முதல் நாளில் இலங்கை குறித்து கவனத்தில் கொள்ளப்பட உள்ளது. மேலும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் மற்றும் நிரந்தர சிறப்புரிமைகள் கொண்ட அமைப்புகளுக்கு கருத்து தெரிவிக்க வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ள அதேவேளை, பதிலளிப்பதற்கான சந்தர்ப்பம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 48 வது கூட்டத் தொடர் செப்டெம்பர் 13 திகதி ஆரம்பிக்கப்பட உள்ளது. அன்றைய நிகழ்சி நிரலில் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பச்சலெட் அமர்வின் போது இலங்கை குறித்த வாய்மொழி அறிவிப்பை முன்வைக்க உள்ளார். இலங…
-
- 11 replies
- 609 views
-
-
பயிற்சி பெறாத இராணுவத்தினா் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை August 11, 2021 சிலர் கூறுவது போன்று தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையில் எவ்வித பயிற்சியும் பெறாத இராணுவத்தினரை இணைத்துக் கொள்ளவில்லை எனத் தொிவித்துள்ள பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன இராணுவத்தின் மருத்து பிரிவில் பயிற்சி பெற்ற பிரிவினரே இவ்வாறு தடுப்பூசி செலுத்து நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். https://globaltamilnews.net/2021/164486
-
- 0 replies
- 249 views
-
-
தீர்ப்பாயம் அமைக்க கோருகிறார் சட்டமா அதிபர்! August 11, 2021 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 25 சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் அடங்கிய தீர்ப்பாயத்தை நியமிக்குமாறு கோரி, பிரதம நீதியரசருக்கு சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகையை அனுப்பியுள்ளார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட, சதி, தயாரிப்பு, உதவி மற்றும் ஊக்குவித்தல், வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை சேகரித்தல், கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட 23,270 குற்றச்சாட்டுகளை விசாரித்து தீர்ப்பளிக்கவே தீர்ப்பாயம் அமைக்குமாறு பிரதம நீதியரசரை சட்டமா அதிபர் கோரியுள்ளார். சட்டமா அதிபர் திணைக்களத்தால், கொழும்பு மேல் நீ…
-
- 0 replies
- 328 views
-
-
வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு August 11, 2021 வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் கோணலிங்கம் கருணானந்தராசா (வயது 76) கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவருக்கு பொதுச் சுகாதார பரிசோதகரினால் திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் கொவிட்-19 நோய்த்தொற்றுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.அதனை அடுத்து பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இதேவேளை, கடந்த 31ஆம் திகதி நகர சபைத் தலைவர் பதவியை விலகுவதாக அவர் அறிவித்த போதும் தமிழ் அரசுக் கட்சியினால் அதற்க…
-
- 0 replies
- 401 views
-
-
உடனடியாக நாடு முடக்கப் பட்டாலும் கூட... விதியை, மாற்ற முடியாது – சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை! இலங்கையின் ஒட்டுமொத்த மருத்துவத் துறையும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் உடனடியாக முடக்கப்பட்டாலும்கூட, எதிர்வரும் 10 நாட்களில் கொரோனா வைரஸ் பரவும் விதியை மாற்ற முடியாது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். டெல்டா மாறுபாடு எந்த மாகாணங்களில் பரவியது என்பதை அடையாளம் காண வைத்தியர்கள் தற்போது வரிசைப்படுத்தலை அதிகரித்துள்ளனர் என்பதோடு, டெல்டா பிளஸ் குறித்த ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றனர் என சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். டெல்டா மாறுபாடு மிகவும் அதிகமாக இருக்கும்போது டெல்டா மாறுபாடு இயற்கையாக உருமாறும்போது …
-
- 0 replies
- 186 views
-
-
வழக்கு விசாரணை நிறைவடையும் வரை... ரிஷாட்டை, விளக்கமறியலில் வைக்க உத்தரவு நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்குகு எதிரான வழக்கு விசாரணை நிறைவடையும் வரையில் அவரை விளக்கமறியலில் வைத்திருக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) முற்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, அவரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதல்களை நடத்திய பயங்கரவாதிக்கு உதவியதாக தெரிவித்து ரிஷாட் பதியுதீன் ஏப்ரல் 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீனும் வெள்ளவத்தை பகுதியில் கைது செய்யப்பட்டார். பயங்கரவா…
-
- 0 replies
- 192 views
-
-
இறப்புகளின் எண்ணிக்கை... 48.8% ஆக அதிகரிப்பு – சுதர்ஷினி நாட்டில் பதிவாகும் இறப்புகளின் எண்ணிக்கை 48.8% ஆகவும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30% ஆகவும் அதிகரித்துள்ளது என ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். கம்பஹாவில் இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார். இந்த சூழ்நிலையில் முடக்க கட்டுப்பாடுகள் அவசியம் என்றால் அதற்குரிய நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட தரப்பினரால் எடுக்கப்படும் என்றும் கூறினார். இதேநேரம் ஒன்றுகூடல்கள் மற்றும் சன நெரிசலான பகுதிகளை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் இராஜாங்க …
-
- 0 replies
- 297 views
-
-
திருமண வைபவங்களில் 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள முடியும் – இராணுவ தளபதி மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கடுமையாகக் கண்காணிக்கப்படும் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடலை அடுத்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அத்தியாவசிய மற்றும் சுகாதார ஊழியர்களைத் தவிர வேறு யாரும் எல்லைகளைக் கடக்க அனுமதி வழங்கப்படாது என்றும் குறிப்பிட்டார். அத்தோடு திருமண வைபவங்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கையை 150 இல் இருந்து 50 ஆக மட்டுப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதற்கு மேலதிகமாக சுகாதார அமைச்சு புதிய சுகாதா…
-
- 0 replies
- 283 views
-
-
இலங்கையில் 35 இலட்சத்துக்கும் மேற்பட்டோர்... முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் இலங்கையில் கொரோனா தடுப்பூசியை முழுமையாக பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 35 இலட்சத்தைக் கடந்துள்ளது. அதன்படி, நாட்டில் தடுப்பூசியை முழுமையாக பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 35 இலட்சத்து 29 ஆயிரத்து 515 ஆக பதிவாகியுள்ளது. இதில் சினோபார்ம் தடுப்பூசியை 26 இலட்சத்து 46 ஆயிரத்து 162 பேர் முழுமையாகப் பெற்றுள்ளனர். அதேபோல கொவிஸீல்ட் தடுப்பூசியை 8 இலட்சத்து 67 ஆயிரத்து 811 பேர் முழுமையாகப் பெற்றுள்ளனர். மேலும் ஸ்புட்னிக் வீ தடுப்பூசியை 14 ஆயிரத்து 516 பேர் முழுமையாகப் பெற்றுள்ளனர். அதேபோல பைஸர் தடுப்பூசியை ஆயிரத்து 26 பேர் முழுமையாகப் பெற்றுள்ளனர். இதற்கமைய மதிப்பிடப…
-
- 0 replies
- 223 views
-
-
கண்டி... எசல பெரஹெரா குறித்த அறிவிப்பு! கண்டி எசல பெரஹெராவிற்கு போதுமான பாதுகாப்பு வழங்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கண்டி மாவட்டத்தின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.ரத்நாயக்க தெரிவித்தார். கொரோனா தொற்றுநோய் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு எசலா பெரஹெராவை பொதுமக்களின் பங்கேற்பு இல்லாமல் நடத்த கண்டி எசல பெரஹெரா குழு தீர்மானித்துள்ளது. மல்வத்த மற்றும் அஸ்கிரிய பிரிவுகளின் மகாநாயக்கர்களின் ஆலோசனையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எசல பெரஹெராவை தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான வசதிகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், பெரஹெராவிற்கு போதிய பாதுகாப்பு வழங்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட…
-
- 0 replies
- 270 views
-
-
(ஆர்.யசி) கொவிட் -19 வைரஸ் தொற்றில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளும் விதமாக இலங்கையில் பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்ட 200 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது. இதில் 177 பேர் ஏதேனும் ஒரு தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்களாம். இலங்கையில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளில் ஏதேனும் ஒரு வர்க்கத்தை சேர்ந்த தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டவர்க்களில் 200 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்தார். இவர்களில் 177 பேர் ஏதேனும் ஒரு தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்கள் என்பதுடன் கொவிட் மரணங்களில் இது 3.38 வீத பதிவாகும் எனவும், இரண்டு தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்களில் 23 பேர்உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். …
-
- 5 replies
- 417 views
-
-
வட மாகாண மக்களுக்கு சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் விடுத்துள்ள வேண்டுகோள் ! எம்.நியூட்டன் அத்தியாவசிய தேவை தவிர்த்து வீட்டை விட்டு வெளியே வராதீர்கள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர்மேலும் தெரிவிக்கையில் , நாட்டில் தற்போது கொரோனா தொற்று பரவலானது அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது. குறிப்பாக மேல் மாகாணத்தை பொறுத்த வரை இறப்புகள் மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது. அதிலும் வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை கடந்த சில வாரங்களாக நோய் அறிகுறிகளுடன் தொற்றாளர்…
-
- 4 replies
- 421 views
-
-
இராணுவதின், தடுப்பூசி நிலையங்களில்... சுகாதார நடைமுறைகள், பின்பற்றப் படுவதில்லை – அரச தாதியர்கள் சங்கம் குற்றச்சாட்டு இராணுவத்தால் நடத்தப்படும் 24 மணிநேர தடுப்பூசி நிலையங்களில் உரிய சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என அரச தாதியர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. சமூக விலகல் உள்ளிட்ட சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றாமல், இதுபோன்ற நிலையங்களில் தினமும் சுமார் 10,000 பேர் வரிசையில் நிற்பதாக அச்சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்தார். இவ்வாறான நடவடிக்கை கொரோனா தொற்று பரவலுக்கு வழிவகுக்கும் என்றும் இந்த சூழல் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த நிலையங்கள் அனுபவமில்லாத இராணுவ ஊழியர்களால் நிர்வகிக்கப…
-
- 3 replies
- 297 views
-
-
அசாத் சாலி... தாக்கல் செய்த மனுமீதான விசாரணையில் இருந்து, நீதியரசர் நவாஸ் விலகல் ! அசாத் சாலி தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையில் இருந்து உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் விலகியுள்ளார். தன்னை சி.ஐ.டி.காவலில் இருந்து விடுவிக்க உத்தரவிடக் கோரி அசாத் சாலி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்திருந்தார். குறித்த மனு விசாரணைக்கு வந்தபோது தனிப்பட்ட காரணங்களால் மனுமீதான பரிசீலனையில் இருந்து விலகுவதாக நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் அறிவித்துள்ளார். இதனை அடுத்து அசாத் சாலி தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான பரிசீலனை ஓகஸ்ட் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்…
-
- 1 reply
- 258 views
-
-
(ஆர்.யசி) கொவிட் -19 வைரஸ் பரவல் நிலைமைகளில் இருந்து மக்களை காப்பாற்றும் போராட்டத்தில் சுகாதார தரப்பினரால் செய்ய முடியாத சேவையை பாதுகாப்பு படையினர் செய்து காட்டியுள்ளதாகவும், சுகாதார வைத்திய துறையினரை விட வேகமாக தம்மால் மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்க முடிந்துள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/107465/kamal.jpg இராணுவ தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை கூறினார், அவர் மேலும் கூறுகையில், கொவிட் -19 வைரஸ் தொற்றுநோய் பரவலில் இருந்து மக்களை காப்பாற்ற ஜனாதிபதி சகல நாடுகளின் தலைவர்களுடனும் உரையாடி எமக்கு தேவைய…
-
- 1 reply
- 430 views
-
-
பூநகரி, கௌதாரிமுனை கடலட்டைப் பண்ணைகளுக்கான அனுமதிகளை வழங்கி வைத்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பிரதேசத்தில் இலங்கை - சீனக் கூட்டு நிறுவனத்தினால் பரீட்சார்த்தமாக அமைக்கப்பட்டுள்ள கடலட்டை குஞ்சு பராமரிப்பு நிலையத்தினை சட்ட ரீதியாக கௌதாரிமுனை கடற்றொழிலாளர் சங்கத்தின் பொறுப்பில் ஒப்படைப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பூநகரி, கௌதாரிமுனையில் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்காக விண்ணப்பித்துள்ள அப்பிரதேச கடற்றொழிலாளர்கள் மற்றும் தனியார் முதலீட்டாளர்கள் ஆகியோர் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மேற்குறிப்பிட்ட அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டன. பூநகரி நக்டா நிறுவன வளாகத்…
-
- 0 replies
- 286 views
-
-
16 வயது சிறுமியின் மரணம் – ரிஷாட்டை கைது செய்ய நடவடிக்கை! நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த 16 வயதான ஹிஷாலினியின் மரணம் தொடர்பாக ரிஷாட் பதியுதீனையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, பொலிஸ் தலைமையகத்தின் கொவிட் கட்டுப்பாட்டு பிரிவுக்கு பொறுப்பாக செயற்படும் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவரையும் கைது செய்து மன்றில் முனை்னிலைப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிஷாலினியின் மரணம் தொடர்பாக இடம்பெறும் குற்றவியல் விசாரணைகளுக்கு அமைய, நீதிவான் நீதிமன்றின் விசாரணைகள் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. இதன்போதே, விசாரணையாளர்களுடன், முறைப்பாட்டாளர்கள் சார…
-
- 1 reply
- 358 views
-
-
எல்லோரும் எல்லைகளை கடக்க முடியாது’ ஷவேந்திர மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடு இன்று முதல் கடுமையாகக் கண்காணிக்கப்படும் என்று இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். அத்தியாவசிய மற்றும் சுகாதாரப் பணியாளர்களைத் தவிர வேறு யாரும் மாகாண எல்லைகளைக் கடக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார். கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, முன்னர் பரிந்துரைக்கப்பட்ட 150 பேரில் இருந்து திருமணத்துக்கு வரும் விருந்தினர்களின் எண்ணிக்கையை 50 ஆக மட்டுப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். சுகாதார அமைச்சு புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகளின் தொகுப்பை இன்று பிற்பகல் வெளியிடும் என்று குறிப்பிட்ட அவர், நா…
-
- 0 replies
- 495 views
-
-
டெல்லி செல்லத் தயாராகும்... தமிழ்த் தேசியக் கூட்டடமைப்பு !! இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் டெல்லி செல்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, அடுத்துவரும் ஒன்றரை மாதங்களுக்குள் இந்த பயணம் இடம்பெறுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட செயற்பாடுகளை இந்தியத் தரப்புக்கள் ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. மேலும், கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு முழுமையாக பங்கேற்பதா, இல்லை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், பேச்சாளர் மற்றும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோர் அங்கிய குழுவினர் மட்டும் பங்கேற்பதா என்பது தொடர்பில் இன்னமும் இறுதி…
-
- 25 replies
- 1.5k views
- 1 follower
-
-
திருகோணமலை துறைமுகத்தை அண்டிய 33,000 ஏக்கர் நிலம் அமெரிக்காவுக்கு விற்கப்பட்டது – வசந்தா சமரசிங்க திருகோணமலைத் துறைமுகத்தை அண்டிய 33,000 ஏக்கர் நிலத்தை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு விற்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளது என ஊழலுக்கு எதிரான முன்னணி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வசந்தா சமரசிங்க தெரிவித்துள்ளார். ‘முதலீடு’ என்ற பெயரில் இவ்விற்பனை மக்களிடமிருந்து மறைக்கப்பட்டிருக்கிறது எனவும் இதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஏற்கெனவே சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். MCC ஒப்பந்தத்தை நிராகரித்த அரசாங்கம் இப்போது திருகோணமலை துறைமுகத்தின் முக்கியமான பகுதியை அமெரிக்காவிற்கு விற்றிருக்கிறது எனவும் தற்போது இலங்கை அரசின் அமைச்சரவை நாட்டின் சொ…
-
- 6 replies
- 535 views
-
-
தொடரும் ஆசிரியர் – அதிபர்களின் போராட்டம்: ஜனாதிபதியினால் குழு நியமனம்! ஆசிரியர் – அதிபர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்கு ஐவர் அடங்கிய அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து ஆராய்ந்து அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் அறிக்கையிடுவதற்காக குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் இந்த அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில், அமைச்சர்களான மஹிந்த அமரவீர, டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். எவ்வாறிருப்பினும் ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் இணையவழிக் கற்பித…
-
- 1 reply
- 240 views
-
-
யாழ் மேயருக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் -எஸ். நிதர்ஷன் யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் வி. மணிவண்ணனுக்கு எதிராக, மாநகர சபையின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் இருவர், இன்று (10) உண்ணாவிரதப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். ரஜுவ்காந், கிருபாகரன் ஆகியோரே, இவ்வாறு யாழ்ப்பாணம் மாநகர சபை நுழைவாயிலுக்கு முன்பாக இன்று காலை முதல், இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். சபை உறுப்பினரான ரஜீவ்காந்தின் வட்டார அபிவிருத்தி நிதியை, அரசியல் பழிவாங்கல் காரணமாக நிறுத்தி வைத்திருக்கும் மேயரின் அராஜக செயற்பாட்டை கண்டிததே, இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். மேயரின் திட்டமிட்ட வகையில் அரசியல் பழிவாங்கல் செயற்பாடுகளில் ஈடுபடுவது தொடர…
-
- 0 replies
- 464 views
-
-
அரசியல் கைதிகள் எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்யப்பட வேண்டும் - அருட்தந்தை சத்திவேல் அரசியல் கைதிகளுடைய விடயத்தில் தெற்கில் செயற்படுகின்ற நீதி மன்றங்கள் ஒரு விதமாகவும், வடக்கு கிழக்கில் செயற்படுகின்ற நீதிமன்றங்கள் இன்னொரு விதமாகவும் செயற்படுவது குறித்து ஐ.நா. போன்ற அமைப்புகளுக்கு தெளிவுபடுத்தியிருக்கின்றோம் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து அரசியல் கைதிகளை அரசியல் தீர்மானம் எடுத்து விடுதலை செய்யப்பட வேண்டும் என்…
-
- 0 replies
- 226 views
-
-
யாழ்ப்பாணத்தில்... மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவு! யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த குருநகரைச் சேர்ந்த 65 வயதுடைய ஆணொருவரும் நாவற்குழியைச் சேர்ந்த 67 வயதுடைய ஆணொருவரும் உரும்பிராயைச் சேர்ந்த பெண்ணொருவருமாக மூவர் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். அத்துடன், அச்சுவேலி பத்தமேனியைச் சேர்ந்த 68 வயதுடைய பெண்ணொருவரும் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 61 வயதுடைய பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 153ஆக உயர்வடைந்துள்ளது https://…
-
- 0 replies
- 175 views
-
-
கனகராசா சரவணன் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்கள் மற்றும் உடல்கள் அடங்களாக, 1,437 பேர் மட்டக்களப்பு ஓட்டுமாவடி சூடுபத்தினசேனையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை மட்டுமே 1,437 பேர் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். ”25 க்கு மேற்பட்ட உடல்கள் நாளாந்தம் வந்த வண்ணமிருக்கிறது. ஆகையால், இனிவரும் நாள்களில் உடல்களை அடக்கம் செய்ய இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது” என ஓட்டுமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம் நௌவ்பர் கவலை தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்கள் மற்றும் உடல்களை அடக்கம் செய்ய அடையாளப்படுத்தப்பட்ட ஒரே ஒரு இடம் ஓட்டுமாவடி பிரதேச சபை எல்லைக்குள் உள்ள பகுதியான மஜீமா நகர் சூடுபத்தினசேனை இந…
-
- 1 reply
- 416 views
-