Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை கடற்பரப்பிற்குள்... சட்டவிரோதமான முறையில் பிரவேசித்த, 23 இந்திய மீனவர்கள் கைது! இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட 23 இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம்- பருத்தித்துறையில் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் இந்திக்க டி சில்வா தெரிவித்தார். கிழக்கு கடற்பரப்பின் வெற்றிலைக்கேணி பகுதியில் வைத்து அவர்கள் நேற்று (புதன்கிழமை) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதன்போது, அவர்கள் பயணித்த இரண்டு படகுகளும் கடற்படையினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார். கைதானவர்கள், காங்கேசந்துறை மடிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட ப…

  2. பரம்பரை சொத்தை... தங்களது சொத்து, என்று கூறுபவர்களுக்கு அனுமதிப்பத்திரத்தின் பெயரை மாற்றுவது பெரிய விடயமல்ல – சாணக்கியன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாம் தம்பிமுத்துவின் வீட்டையே தங்களது வீடு என்று கூறுகின்றவர்களுக்கு அனுமதிப்பத்திரத்தின் பெயரை மாற்றுவது பெரிய விடயமல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள முதியோர் சங்கம் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கம் ஆகியவற்றுக்கு சாணக்கியனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் பிளாஸ்ரிக் கதிரைகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவ…

  3. கையடக்கத் தொலைபேசி கைப்பற்றப்பட்ட சம்பவம் – ரிஷாட்டை சிறைச்சாலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனிடமிருந்து கையடக்கத் தொலைபேசி கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக அவர் மீண்டும் சிறைச்சாலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இந்த விடயம் தொடர்பாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், தொலைக்காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக நேற்று சிறைச்சாலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார். இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை எதிர்வரும் 24 ஆம் திகதி சிறைச்சாலை நீதிமன்றில் மீண்டும் முன்னிலைப்பட…

  4. அர்ஜுன் மகேந்திரன் இன்றி... வழக்கை முன்னெடுக்க அனுமதி கோரிய சட்டமா அதிபர் ! மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் கார்திய புஞ்சிஹோ இல்லாமல் 2015 பிணைமுறி மோசடி வழக்கை முன்னெடுத்துச் செல்ல அனுமதி வழங்குமாறு கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றிடம் சட்டமா அதிபர் கோரியுள்ளார். குறித்த வழக்கு இன்று (புதன்கிழமை) கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த கோரிக்கையை சட்டமா அதிபர் முன்வைத்தார். இலங்கை அரசாங்கத்திற்கு 688 மில்லியன் இழப்பை ஏற்படுத்திய 2015 பெப்ரவரி மாதத்தில் 27 ஆம் திகதி இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கின் சந்தேகநபர்களாக குறித்த இருவரும் பெயரிடப்பட்டுள்ளனர். …

  5. அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கு... சாணக்கியன் பாவிக்கும் ஆயுதம் மண் – வியாழேந்திரன் மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி தேர்தலிலும் தங்களது இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பாவிக்கும் ஒரே ஆயுதம் மண் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டு ஊடக மையத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் இதன்போது தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், கடைசியாக இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது எமது மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள் மண் அனுமதிப்பத்திரம் தொடர்பில் ஒரு கருத்தை தெரிவித்திருக்கின்றார். நாடாளுமன்…

  6. இந்தியக் கடற்றொழிலாளர்களின்... சட்ட விரோத, தொழில்முறை நிறுத்தப்பட வேண்டும்: டக்ளஸிடம் சுப்பிரமணியம் சுவாமி தெரிவிப்பு இந்தியக் கடற்றொழிலாளர்களின் விவகாரத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிலைப்பாட்டினை புரிந்து கொள்வதாக இந்திய மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் இந்திய அரச தலைவர்களுக்கு தெளிவுபடுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். குறித்த சந்திப்பின் போது, இந்தியக் கடற்றொழிலாளர்களின் விவகாரம் குறித்து விரிவாக ஆ…

    • 2 replies
    • 373 views
  7. அயல்நாட்டின் உறுதிப்பாட்டை... இந்தியா உயர்மட்டத்தில் எதிர்பார்ப்பதாக, இந்திய இராணுவத் தளபதி ஜனாதிபதியிடம் தெரிவிப்பு இந்திய இராணுவத்தின் பிரதானி ஜெனரல் மனோஜ் முகுந்த் நாராவண, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். பிராந்தியப் பாதுகாப்பு விடயத்தில் அயல் நாடுகளின் ஸ்திரத்தன்மையை, தமது நாடு அதிகளவில் எதிர்பார்க்கிறது என்று தெரிவித்தவாறு, ஜெனரல் தனது கலந்துரையாடலை ஆரம்பித்தார். தான் இராணுவச் சேவையில் ஈடுபட்டிருந்த காலப்பகுதியில், இந்தியாவில் பெற்ற இராணுவப் பயிற்சிகள் மற்றும் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட ஜனாதிபதி, இந்திய இராணுவப் பயிற்சிகளின் மூலம் நம் நாட்டு இராணுவ அதிகாரிகளுக்குக் கிடைக்கும் தலைமைத்துவப் பண்புகள்…

  8. இரு நாடுகளுக்கிடையிலும்... சிறந்த உறவு, காணப்படுகிறது – மஹிந்தவிடம் இந்திய இராணுவத் தளபதி தெரிவிப்பு இந்திய இராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நராவனே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினை அலரி மாளிகையில் சந்தித்தித்து பேசியிருந்தார். இருநாட்டு இராணுவத்தினருக்கும் இடையே சிறந்த உறவு காணப்படுவதாக சந்திப்பின் ஆரம்பத்திலேயே அவர், பிரதமரிடம் குறிப்பிட்டார். நேர்மறையான இந்த தொடர்பானது, இருநாட்டு மக்கள் மற்றும் அனைத்து மட்டத்திலுமான இருதரப்பு உறவை உறுதிபடுத்துவதற்கு உதவியுள்ளதாகவும் தெரிவித்தார். உயர் பயிற்சிகளை வழங்கல் உள்ளிட்ட இந்திய இராணுவம் மிக நீண்டகாலமாக இலங்கைக்கு வழங்கிவரும் பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பில் இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராட்டு தெரிவித்தார். ந…

  9. இலங்கை போலீஸ் ஒருவர் காலணியுடன் இந்து கோயிலுக்குள் சென்றதாக சர்ச்சை 2 மணி நேரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலுள்ள ஆலயங்களுக்குள் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் பாதணியுடன் பிரவேசித்த சம்பவம் பாரிய எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை போலீஸ் மாஅதிபர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை இன்று (13) மேற்கொண்டிருந்தனர். இதன்போது, போலீஸ் மாஅதிபருடன் சென்ற உயர் போலீஸ் அதிகாரியொருவர், பாதணியுடன் ஆலயத்திற்குள் சென்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படமொன்றை பகிர்ந்து, அதிகளவானோர் தமது எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றனர். இவ்வாறு பாதணியுடன் ஆலயத்திற்குள் செல்லும் போலீஸ் அதிகாரியின் புகைப்படங்கள்…

  10. ஈழத்தமிழர் போராட்ட அரசியலை மடைமாற்றம் செய்ய முயலும் கம்சி குணரட்ணம்-அனந்தி சசிதரன் ஈழத்தமிழர் போராட்ட அரசியலை மடைமாற்றம் செய்ய முயலும் கம்சி குணரட்ணம் ஈடுபட்டுள்ளதாக ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கம்சி குணரட்ணம் நோர்வேயில் 2009 க்கு முற்பட்ட காலத்தில் ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட அமைப்புகளின் உந்துதலோடு நோர்வேயின் அரசியலுக்குள் சேர்க்கப்பட்டவர். அரசியற் தலைவரான மறைந்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் தலைமையில் பேச்சுவார்த்தைக்குழு ஐரோப்பா சென்றுவந்த 2002ம் ஆண்டுக்குப் பின்னான காலங்களில், அங்கு அரசியலில் இளம் பு…

    • 8 replies
    • 1.1k views
  11. திருக்கோவிலுக்கு நாமல் விஜயம்! ShanaOctober 13, 2021 திருக்கோவில் பிரதேசத்திற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச விஜயம் செய்துள்ளார்.இதன்போது திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டுக் கழகத்திற்கான 1.5மில்லியன் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட கரப்பந்தாட்ட மைதானம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதுடன் விளையாட்டுத்துறையை வலுப்படுத்தி சர்வதேச ரீதியாக இளைஞர்கள் சாதனைகளை படைப்பதற்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி கொடுப்பதற்கான செயற்திட்டங்களையும் முன்னெடுத்து வருவதாக அமைச்சர் நாமல் ராஜபக்ச இதன்போது கருதது வெளியிட்டார்.கொவிட் 19 நோய் தாக்கம் பொருளாதாரம் கல்வி என அனைத்து துறைக…

  12. தடுப்பின் பின் விடுவிக்கப்படுபவர்கள் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யலாம் – சட்டத்தரணி அம்பிகா October 13, 2021 நீண்டகால தடுப்பின் பின் நிரபராதிகளாக தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்படுபவர்கள் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யலாம் என சட்டத்தரணியும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் நீலன் திருச்செல்வம் அறக்கட்டளையின் தலைவருமான அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார். பயங்கரவாத்தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டதன் பின்னர் நிரபராதிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்படுபவர்கள், இழப்பீட்டைக்கோரியும் சட்டத்தின்முன் சமமாக நடத்தப்படவில்லை. எதேச்சையாகத் தடுத்துவைக்கப்பட்டமை மற்றும் சித…

  13. பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள் மற்றும் ஹெரோய்ன் கடத்தலில் ஈடுபட்டுள்ள தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் மீதான விசாரணையை முன்னெடுப்பதற்கு, இலங்கை அரசாங்கத்தின் உதவியை நாட இந்திய தேசிய புலனாய்வு நிறுவனம் முடிவு செய்துள்ளது. பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தின் கீழ், சந்தேக நபர்கள் குறித்த தகவல்களைப் பெறுமாறு, அந்த நிறுவனம் இலங்கை அராங்கத்துக்கு எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுத்திருப்பதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம், பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கடத்த முற்பட்ட ஆயுதங்கள் மற்றும் ஹெரோய்ன் ஆகியவற்றுடன் மீன்பிடி கப்பலுடன் ஆறு இலங்கையர்கள், இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ம…

  14. கடல் மார்க்கமாக நாட்டை விட்டு வெளியேற முயன்ற 65 பேர் கைது Published by J Anojan on 2021-10-13 11:00:14 கடல் மார்க்கமாக வெளி நாடுகளுக்கு சட்டவிரோதமாக குடியேற முயன்ற நான்கு வயது குழந்தை உட்பட 65 பேர் கொண்ட குழுவினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு முன்பு திருகோணமலையில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த சமயம் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார். அரச புலனாய்வுப் பிரிவின் இரகசியத் தகவலைத் தொடர்ந்து இந்த கைது இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். மூன்று பெண்கள் அடங்கிய இந்த குழு யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட…

  15. 11 இளைஞர்கள் கடத்தல் வழக்கில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடர்ந்தும் முன்னெடுக்கப் போவதில்லை என சட்டமா அதிபர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு அறிவித்தார். ஆகஸ்ட் மாதத்தில் முன்னாள் கடற்படைத் தளபதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அவரது அலுவலகம் தொடராது என்று சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு மேல் நீதிமன்றின் சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றுக்கு அறிவித்திருந்தது. 2008-2009 ஆம் ஆண்டுகளில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் வசந்த கரன்னாகொட பிரதான சந்தேக நபர்களில் ஒருவராக கருதப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த ந…

  16. (நா.தனுஜா) சமையல் எரிவாயு சிலிண்டர் விலையேற்றத்தையடுத்து கொழும்பு உள்ளிட்ட பலபகுதிகளிலும் மண்ணெண்ணெய் அடுப்பிற்கான கேள்வி சடுதியாக உயர்வடைந்துள்ளது. அதுமாத்திரமன்றி முன்னைய விற்பனை விலையுடன் ஒப்பிடுகையில் சிறிய மண்ணெண்ணெய் அடுப்பின் விலை 500 ரூபாவினாலும் பெரிய மண்ணெண்ணெய் அடுப்பின் விலை 1,000 - 1,500 ரூபாவினாலும் அதிகரித்துள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனத்தினால் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலைகள் திங்கட்கிழமை வெளியிடப்பட்டன. அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 1,182 ரூபாவினாலும் 5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 473 ரூபாவினாலும் 2.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 217 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.…

  17. அலரி மாளிகையில் நவராத்திரி விழா பிரதமரும் புத்தசாசன மத மற்றும் கலாசார அமைச்சருமாகிய மஹிந்த ராஜபக்ச தலைமையில் அலரிமாளிகையில் நேற்று நடைபெற்றது .கொவிட்-19 தொடர்பான சுகாதார வழிகாட்டல்களுக்கமைய மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்ற நவராத்திரி நிகழ்வின் சிறப்பு விருந்தினராக இந்திய மத்திய அரசின் மாநிலங்களவை உறுப்பினர் கௌரவ சுப்பிரமணியம் சுவாமி கலந்துக் கொண்டார்.(15) http://www.samakalam.com/பிரதமர்-மஹிந்த-ராஜபக்ஷ-அ/

  18. மகிந்தவின் கோரிக்கைகளை நிராகாித்த அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் October 13, 2021 தங்களுடைய சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைக்குத் தீர்வாக பிரதமர் மகிந்த ராஜபக்ஸ முன்வைத்த கோரிக்கைகளை ஏற்க மறுத்த அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளனர். பிரதமருடனான நேற்றைய கலந்துரையாடல் தொடர்பில், இன்றையதினம் தீர்மானிப்பதாக தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்த நிலையில், இன்று 31 தொழிற்சங்கங்கள் கலந்துக்கொண்டு இடம்பெற்ற கலந்துரையாடலில் இவ்வாறு தீா்மானம் எடுக்கப்பட்டுள்ளது https://globaltamilnews.net/2021/167194

  19. எரிபொருள் விலையை... அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் – அமைச்சர் கம்மன்பில நிதி அமைச்சினால் நிவாரணம் வழங்கப்படாவிட்டால் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஒரு லீட்டர் பெட்ரோலின் விலையை 15 ரூபாயாகவும் ஒரு லீட்டர் டீசலின் விலையை 25 ரூபாயாகவும் அதிகரிக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் கோரிக்கை வைத்துள்ளதாக கூறினார். இந்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அமைச்சர் உதய கம்மன்பில இறுதி முடிவு இன்னும் எட்டப்படவில்லை என்றும் குறிப்பிட்டார். https://athavannews.com/2021/1244623

  20. அடுத்த வருடம் மக்கள் பாரிய பிரச்சினைக்கு முகம்கொடுக்க நேரிடும் – ஐக்கிய தேசியக் கட்சி எச்சரிக்கை அரசாங்கத்துக்கு முறையான வேலைத்திட்டம் இல்லாத காரணத்தினாலேயே நாடு பாரிய சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார். விவசாயிகளுக்கான இரசாயண உரம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தடை காரணமாக விவசாய நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ள மக்களுக்கு எந்த தீர்வையும் அரசாங்கம் இதுவரை முன்வைக்கவில்லை என வஜிர அபேவர்த்தன குற்றம் சாட்டினார். நாட்டை கொண்டு நடத்துவதற்கு அரசாங்கத்திடம் தூரநோக்கு சிந்தனையோ முறையான வேலைத்திட்டமோ இல்…

  21. விவசாயிகள் மற்றும் மீனவர்களின் பிரச்சினைகளுக்கு... நீதி கோரி போராட்டம்- எம்.ஏ. சுமந்திரன் அறிவிப்பு! எதிர்வரும் 17 மற்றும் 18 திகதிகளில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் தொடர்பாக உள்ள பிரச்சினைகளுக்கு நீதி கோரி போராட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார் யாழ்ப்பாணத்தில் இன்று (புதன்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ”வடக்கு கிழக்கு மாகாணங்களில் விவசாயிகள் உரத்தினை பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி உள்ளார்கள் குறிப்பாக தென் பகுதியிலும் இந்த பிரச்சனையினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்…

  22. யாழ்.போதனா வைத்தியசாலைக்கு, கனடா உயர்ஸ்தானிகர் விஜயம்! இலங்கைக்கான கனடா நாட்டு உயர்ஸ்தானிகர் யாழ்.போதனா வைத்திய சாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான கனடா நாட்டு உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் யாழில் பல்வேறு தரப்பினரை நேரில் சந்தித்தார். அந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை யாழ்.போதனா வைத்திய சாலைக்கு விஜயம் மேற்கொண்டு வைத்திய சாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தியை சந்தித்தார். அதன் போது , வைத்திய சேவைகள் மற்றும் கொரோனா நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். அத்துடன் , யாழ்.போதனா வைத்திய சாலையில் உள்ள அருகாட்சியாக கட்டட தொகுதியையும் பார்வையிட்டார். https://athavannews.com/20…

  23. ஆண்டு இறுதிக்குள்... புதிய அரசியல் அமைப்பு, உருவாக்கப்பட வேண்டும் – இரா.சம்பந்தன் தமிழ் மக்களின் இறையாண்மையின் அடிப்படையில் அவர்கள் ஆட்சி அதிகாரங்களை பயன்படுத்திக்கொள்கின்ற வகையில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொடுக்கக் கூடிய வகையில், தமது ஜனநாயக உரிமைகளுக்கு முறையான அங்கீகாரம் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழர்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே எந்தவித தாமதமும் இல்லாது சகல மக்களின் உரிமைகளையும் உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பை விரைவாக உருவாக்க வேண்டும் என்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கை என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்தார். மக்களுக்கு உறுதியளித்தமை பிரகார…

  24. தொல்பொருள் திணைக்களத்தின்... அத்துமீறல்கள் குறித்து, உயர்ஸ்தானிகர்களுக்கு தெளிவுபடுத்தினார் சாணக்கியன்! இலங்கைக்கான நோர்வே உயர்ஸ்தானிகர் Trine Jøranli Eskedal மற்றும் நெதர்லாந்து உயர்ஸ்தானிகர் Tanja Gonggrijp ஆகியோரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சந்தித்து பேசியுள்ளார். மட்டக்களப்பில் இன்று(செவ்வாய்கிழமை) நண்பகல் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்தை எதிர்காலத்தில் முன்னேற்றும் செயல்பாடுகளில் முதன்மையான தகவல் தொழில் நுட்பத்துறை மற்றும் இயற்கை அழகுடன் காணப்படும் மட்டக்களப்பு மாவட்ட சுற்றுலா துறையை மேம்படுத்தும் பல திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன…

  25. நாட்டை விட்டு வெளியேற... ஒரு மில்லியன், இளைஞர்கள் திட்டம் – மயந்த திஸாநாயக்க எதிர்வரும் மாதங்களில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேற உள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களிடம் பேசிய அவர் 1983 கலவரத்தின்போது அல்லது யுத்தத்தின்போது கூட இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலானவர்கள் நாட்டை விட்டு வெளியேறவில்லை என கூறினார். இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தை வலுப்படுத்துவதற்காக கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்வதற்கு திட்டமிட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார். இந்த வளர்ச்சி ஏமாற்றமளிப்பதாகக் கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க, நாட்டின் இளைஞர்களின் எதிர்…

    • 1 reply
    • 267 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.