Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஹபரணை - ஹிரிவடுன்ன இந்திகஸ்வெவ பிரதேசத்தில் புதுவகையான வெள்ளை நிற கம்பளி பூச்சிகள் இரவு நேரத்தில் படையெடுத்து வருவதால், அந்த பிரதேச மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்னர் சிறியளவில் பிரதான வீதி மற்றும் முற்றங்களில் காணப்பட்ட இந்த கம்பளி பூச்சிகள், தற்போது லட்சக்கணக்கில் பெருகியுள்ளன. அவை வீடுகள் உட்பட அனைத்து இடங்களிலும் காணப்படுவதாக பிரதேசமக்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக சிலர், தமது பிள்ளைகள் மற்றும் பெண்களை அழைத்துக்கொண்டு வெளியிடங்களில் இருக்கும் உறவினர்களின் வீடுகளுக்கு சென்றுள்ளனர். தற்போது இந்த கம்பளி பூச்சிகள் பிரதேசத்தில் உள்ள கிணறுகள், பயிர் நிலங்களில் அதிகளவில் காணப்படுகின்றன. வீடுகளில் காயப்போடப்…

  2. மாளிகைக்காடு நிருபர் தமிழ் பேசும் மாநிலங்களான வடக்கும் கிழக்கும் இணைந்ததான தீர்வொன்றினைத் தவிர வேறு எதனையும் ஏற்கமாட்டோம் என சம்பந்தன் அந்நேரத்தில் கூறியதும் இப்போது பாசம்காட்டி வேசமிட்டு கழுத்தறுக்க புதிய தமிழ் தலைமைகள் நினைப்பதும் அவர்கள் இன்னமும் பாசிசப் புலிகளின் சித்தார்ந்தத்தில் இருந்து விடுபடவில்லை என்பதனை தெளிவாகக் காட்டுகிறது. தமிழ் பேசினாலும், நாங்கள் முஸ்லிம்கள் என்பதனை முதலில் தமிழ் தலைமைகள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும், முஸ்லிங்களின் பழக்க வழக்கங்கள், பேச்சு மொழி, கலாச்சாரம் என்பன தமிழ் கலாச்சாரத்திலிருந்து வேறானதொன்றாகும் என அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும், அக்கரைப்பற்று அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவருமான எஸ்.எம். சபீஸ் தெரிவி…

  3. -விஜயரத்தினம் சரவணன் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடருமானால், நிச்சயமாக எமது மீனவர்கள் அனைவரும் திரண்டு, இந்திய மீனவர்கள் மீது மிகவிரைவில் தாக்குதல் நடத்துவோம் என, முல்லைத்தீவு மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர்கள், ஒக்டோபர் 10ஆம் திகதியன்று, ஏறக்குறைய 30 இந்தியன் இழுவைப்படகுகள் வருகைதந்து, அத்துமீறிய சட்டவிரோத தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த முல்லைத்தீவு மீனவர்களின் 15க்கும் மேற்பட்ட படகுகளின் வலைகள் சேதமாக்கியதாகவும் தெரிவித்தனர். 'கடந்த வருடம் இந்தியன் இழுவைப் படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகளைக…

  4. -என்.ராஜ் யுத்தம் முடிந்தப் பின்னர், தமிழீழ விடுதலை புலி உறுப்பினர்களான அப்பன், தெய்வீகன் ஆகியோரை காட்டிக்கொடுத்தோர் யார் என்பது மக்களுக்கு தெரியும் என, பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். 'தெய்வீகன், அப்பன் போன்றோர் நேரடியாக காட்டிக்கொடுக்கப்பட்டு, கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்களை யார் காட்டிக்கொடுத்தார்கள் என்பது தொடர்பில் நான் தற்போது கூற விரும்பவில்லை' எனவும், அவர் கூறினார். யாழில், இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களால் தான் உள்ளிட்டவர்கள், இனப்படுகொலை தொடர்பில் விசாரிக்கப்பட வேண்டும் என ப…

  5. மாகாணசபைத் தேர்தலை நடத்த இரண்டு முறைகள் உள்ளன- ஜி.எல். பீரிஸ் மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்த இரண்டு வழிமுறைகள் காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சரான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது, கடந்த வாரம் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின்போது, அரசமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாக ஆராயப்பட்டது. இதற்கு ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினர் இணங்கியதைத் தொடர்ந்து, அரசமைப்புத் திருத்தத்தை மேற்கொள்வது தொடர்பாக ஆராய நிபுணர் குழுவொன்றும் ஸ்தாபிக்கப்பட்டது. இந்தக் குழுவின்…

  6. 13ஆம் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவோம் என்று அரசாங்கம் சொன்னால் அதனை செய்து காட்ட வேண்டும் – எம் .ஏ. சுமந்திரன் ஆயுதத்தை மீன்பிடி அமைச்சிடம் கொடுத்திருக்கின்றோம். அதை வைத்துக் கொண்டு செயல்படுத்தாமல் விடுவது எங்களுடைய மீனவர்களுக்கே பாதிப்புகளை ஏற்படுத்துமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம் .ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை அவர் சந்தித்த பின்னரே ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார். 2018 ஆம் ஆண்டு இழுவை மடி தொழிலை தடுக்க வேண்டும் என ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. அது சட்டமாக்கப்பட்டாலும் மீன்பிடி அமைச்சு அந்த சட்டத்தை அமுல்படுத…

  7. மீண்டும் கொழும்பு – யாழ்ப்பாணத்திற்கு இடையில் விமான சேவை கொரோனா தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையிலான விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தின் பின்னர் விமான சேவைகள் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முடக்கப்படுவதற்கு முன்பு இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து பலாலி விமான நிலையத்திற்கு விமானங்கள் வாரத்திற்கு இரண்டு முறை இயக்கப்பட்டன. எனவே கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையில் உள்நாட்டு விமான சேவைகளை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறு குறித்து ஆராயுமாறு விமான நிறுவனங்களுக்…

  8. மாகாணசபைகள் அழிந்துபோய் இருப்பதற்கு... கூட்டமைப்புத்தான் காரணம் – பிள்ளையான் மாகாணசபைகள் இன்று மூன்றரை வருடங்களாக அழிந்துபோய் இருப்பதற்கு காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்புதான் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் பிரதமரின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்படும் உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம் என்னும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிக்கு கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் …

  9. அத்தியாவசியப் பொருட்களின்... விலை உயர்வுக்கு, தீர்வு காணுமாறு ஜனாதிபதி உத்தரவு! அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு தீர்வு காணுமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார். அத்தோடு, குடிமக்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்குமாறும் அவர் வலியுறுத்தினார். நேற்று மாலை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அடிப்படை பொருட்களின் விலையேற்றம் குறித்து பரவலாக விவாதிக்கப்பட்டதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்போதே, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்குறிப்பிட்டவாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும் பொதுமக்கள் அதிக வாழ்க்கைச் செலவைச் சுமப்பதால் அனைத்து மாநிலச் செலவுகளையும் குறைக்குமாறு ஜ…

  10. இலங்கை திறந்திருக்கிறதா... இல்லையா? என்பதை உலகிற்கு சொல்லுங்கள் – திரும்பிச்சென்ற சுற்றுலாப் பயணி இலங்கைக்கு வந்த அமெரிக்க சுற்றுலாப் பயணி ஒருவர் சிரமத்திற்குள்ளாகி திரும்பிச் சென்ற சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுற்றுலா மேம்பாட்டு ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளார். சுமார் 7 முதல் 8 நாட்கள் சுற்றுலாவாக இலங்கைக்கு வந்த அவர், பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக நாட்டில் பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படாததால் 5 மணி நேரத்திற்குள் திரும்பிச் சென்றதாக கூறியிருந்தார். போக்குவரத்து அல்லது ஹோட்டல் வசதிகள் இல்லாததால் அவர் கடுமையான சிரமத்திற்கு ஆளானதாகவும் தன்னால் அவரது பயண நிறுவனத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும…

  11. கொத்து, ஃப்ரைட் ரைஸ், தேநீரை அடுத்து பாணின் விலையும் அதிகரிப்பு ஒரு இறாத்தல் பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் குறித்த விலை அதிகரிப்பு அமுலாகும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஏற்கனவே கொத்து, ஃப்ரைட் ரைஸ், பால் தேநீர் மற்றும் உணவுப்பொதி என்பவற்றின் விலைகளை 10 ரூபாயினால் அதிகரிக்க உணவக உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1244274

  12. நிரூபமா ராஜபக்ஷவையும், விசாரணைக்கு அழைக்க நடவடிக்கை! பண்டோரா பேப்பர்ஸ் சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவை விசாரணைக்கு அழைக்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டன் சென்றுள்ள அவர் விசாரணைக்கு வருகை தராவிட்டால் சர்வதேச பொலிஸார் ஊடாக அவரை இலங்கைக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பண்டோரா பேப்பரஸ் வெளியிட்ட தகவலுக்கு அமைய, சட்டவிரோதமாக வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் சொத்துக்களை குவித்துள்ள பிரபலங்களின் பட்டியலில், முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷ மற்றும் இவரது கணவரின் பெயரும் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நிரூபமா ராஜபக்சவின் கணவர் திருக்குமார் நட…

  13. கென்யாவுக்கு... சிறப்பு விமானத்தில் பயணமா? – நாமல் விளக்கம் கென்யாவுக்கு சிறப்பு விமானத்தில் பயணித்ததாக கூறப்படும் சர்ச்சைக்குரிய தகவலை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மறுத்துள்ளார். அந்தவகையில், கென்யா தலைநகருக்கு திட்டமிட்ட விமானத்தில் பயணம் செய்ததாகவும், சிறப்பு விமானத்தில் பயணம் மேற்கொள்ளவில்லை என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கென்யாவுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்திற்கு ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் விமானமொன்றை முழுமையாக முன்பதிவு செய்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் குறித்த விவகாரத்தை அவர் மறுத்து, தனது பயணம் தொடர்பாக விளக்கமளித்துள்ளார். அத்துடன் கென்யாவுக்கான விஜயத்தின் போது அவர் விளையாட்டு, சுற்று…

  14. வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக... ஜீவன் தியாகராஜா பதவியேற்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா பதவியேற்றுள்ளார். தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரராக இருந்த அவர் கடந்த வாரம் அந்த பதவியில் இருந்து இராஜினாமா செய்திருந்தார். மனிதாபிமான அமைப்புக்களின் கூட்டமைப்பின் நிறைவேற்று பணிப்பாளராகவும் ஜீவன் தியாகராஜா கடமையாற்றியுள்ளார். இதுவரை காலமும் வட மாகாண ஆளுநராக பீ.எஸ்.எம். சார்ள்ஸ் கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1244295

  15. எந்த வொரு அரசியல்வாதிகளும்... எமது எல்லைக்குள், உட்பிரவேசிக்க வேண்டாம் – பருத்தித்துறை கடற்தொழிலாளர்கள் அறிவிப்பு! இந்தியன் இழுவைபடகையும், தடைசெய்யப்பட்ட அனைத்து தொழில்களையும் உடனடியாக நிறுத்தும் வரை எந்த வொரு அரசியல் கட்சிகளும் தமது எல்லைக்குள் உட்பிரவேசிக்க வேண்டாம் என பருத்தித்துறை, முனை கடற்தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர். முனை கடற்தொழிலாளர்கள் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுத்த எதிர்ப்பு போராட்டத்தின் போதே இவ்வாறான அறிவித்தல்களை விடுத்திருந்தனர். அத்தோடு அரசியல் கட்சிகள் மீறி தமது இடத்திற்கு வரும் பட்ச்சத்தில் மக்களால் அடித்து விரட்டப்படுவார்கள் என்பதனையும் தாம் உறுதியாக, மனவருத்தத்துடன் அறியத்தருவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். அது மாத்திரமின்றி த…

  16. இந்திய துணைத்தூதர்... ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை சந்தித்தார் எம்.ஏ.சுமந்திரன்! யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இடம்பெற்றுள்து. சந்திப்பின் போது வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் 13வது திருத்தச்சட்டம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஊடங்களுக்கு தெரிவித்துள்ளார். சந்திப்பில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.சுகிர்தனும் கலந்துகொண்டிருந்…

  17. மீன்பிடி அமைச்சர் அதிகாரத்தை வைத்துக் கொண்டு செயல்படுத்தாமல் இருக்கிறார் – எம் .ஏ. சுமந்திரன் ஆயுதத்தை மீன்பிடி அமைச்சிடம் கொடுத்திருக்கின்றோம். அதை வைத்துக் கொண்டு செயல்படுத்தாமல் விடுவது எங்களுடைய மீனவர்களுக்கே பாதிப்புகளை ஏற்படுத்துமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம் .ஏ. சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை அவர் சந்தித்த பின்னரே ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் வந்து எங்களுடைய மீனவர்களுடைய மீன்பிடி உபகரணங்களை பாதிக்கச் செய்த பல விடயங்கள் அண்மைக்காலமாக நடந்திருக்கின்றன.அவர்களுடைய லட்சக்கணக்…

  18. புலம்பெயர் தமிழர்களை... மீளவும் நாட்டுக்கு, அழைப்பதே இலக்கு – ஜனாதிபதி! இணக்கப்பாடுகளுடன் எட்டப்படும் இருதரப்புத் தீர்மானங்களை, இரு நாடுகளினது மக்களுக்கு சரியான முறையில் தெளிவுபடுத்தப்பட வேண்டுமென்று, இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவிடம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தினார். நன்மை, தீமைகளை எடுத்துரைத்து, பெரும்பான்மையான மக்களின் விருப்பத்துடன் செயலாற்றுவது அத்தியாவசியம் என்றும், ஜனாதிபதி எடுத்துரைத்தார். இந்திய வெளிவிவகாரச் செயலாளருடன் நேற்று(செவ்வாய்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 1971இல், இந்து சமுத்திரத்தை சமாதான வலயமாக மாற்ற வேண்டுமென்று, அப்போதைய பி…

  19. ’கடற்றொழில் அமைச்சராக சிங்களவர் வேண்டும்’ -எஸ்.றொசேரியன் லெம்பேட் இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பில், கடற்றொழில் அமைச்சரும் அரசாங்கமும் மௌனம் காத்து வருவதாகத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், இதற்கு பிரதான காரணம், இந்தியாவுக்கு பயந்துகொண்டு, அவர்கள் முடிவுகளை எடுக்க தயங்குகிறார்கள் எனவும் கூறினார். மேலும், இவ்விடயத்தில் மௌனமாக இருப்பதை விட, டக்ளஸ் தேவானந்தா தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்பதுடன், சிங்கள இனத்தைச் சேர்ந்த ஒருவர் கடற்றொழில் அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் எனவும், அவர் கூறினார்.. மன்னாரில் உள்ள அலுவலகத்தில், இன்று (11) நடைபெ…

    • 2 replies
    • 498 views
  20. தமிழர்களின் மரபுரிமைகளை பாதுகாப்பதில் அமைச்சர் டக்ளஸின் பங்கு நிகரற்றது – பேராசிரியர் புஸ்பரட்ணம் எடுத்துரைப்பு தமிழ் மக்களின் தொல்லியல் மரபுரிமைகளை பாதுகாக்கும் செயற்பாடு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கையினால் வலுப்படுத்தப்பட்டுள்ளது என்று வரலாற்றுத் துறை பேராசிரியர் புஸ்பரத்தினம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இடைநிறுத்தப்பட்ட கலாசார சுற்றுலா சிறப்புக் கற்கை நெறியை தொடருவதற்கு நடவடிக்கை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட மெய்நிகர் வழியூடான கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே வரலாற்றுத் துறை பேராசிரியரினால் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக் கழகத்தின் கலாச…

    • 7 replies
    • 661 views
  21. எரி­பொ­ருளை கட­னா­கத் தரு­வீர்­களா? பேச்சை ஆரம்­பித்­தது அரசு! எரி­பொ­ருள் கொள்­வ­ன­வுக்கு கடன் பெற்­றுக்­கொள்­வது தொடர்­பி­லும், எரி­பொ­ ரு­ளைக் கட­னா­கப் பெற்­றுக்­கொள்­வது தொடர்­பி­லும் இந்­தியா மற்­றும் ஐக்­கிய அரபு இராச்­சி­யத்­து­டன் இலங்கை அரசு பேச்­சு­களை ஆரம்­பித்­துள்­ளது. இதன்­படி இந்­திய அர­சி­ட­மி­ருந்து 500 மில்­லி­யன் அமெ­ரிக்க டொலர் கடன் பெற்­றுக்­கொள்­வது தொடர்­பில் இலங்கை அரசு பேச்­சு­களை ஆரம்­பித்­துள்­ளது என ஜனா­தி­பதியின் செய­லா­ளர் பி.பி.ஜய­சுந்­தர தெரி­வித்­துள்­ளார் என்று ‘எக­னமி நெக்ஸ்ட்’ செய்தி வெளி­யிட்­டுள்­ளது. நிலு­வை­யில் உள்ள எரி­பொ­ருள் கொள்­வ­ன­வுக்­கான தொகை­யைச் செலுத்­து­வ­தற்­கும் புதி­தாக எரி­பொ­ருள் கொள்­வ­னவு செய்­வ­தற…

  22. அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளத்தினை வழங்ககூட அரசாங்கம் திண்டாடுகின்றது- கு.திலீபன் கொரோனா அச்சுறுத்தலினால் ஏற்பட்ட வீழ்ச்சியினால், அரசாங்க ஊழியர்களுக்கு கூட சம்பளத்தினை வழங்கமுடியாது அரசாங்கம் திண்டாடுகின்றது என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் தெரிவித்துள்ளார். வவுனியா- ஆச்சிபுரம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் கு.திலீபன் மேலும் கூறியுள்ளதாவது, “புதிய திட்டங்களை வர இருக்கின்ற வரவு செலவுத்திட்டத்தில் பார்த்து அறிந்துகொள்ளலாம். அதில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட கிராமங்களுக்கே முன…

    • 0 replies
    • 238 views
  23. நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு அச்சங்கொள்ளும் நிலையேற்பட்டுள்ளது – இரா.சாணக்கியன் நாடாளுமன்ற உரை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கும் நிலையுள்ளதனால் எதிர்காலத்தில் நாடாளுமன்றத்திலும் மக்கள் பிரதிநிதிகள் உரையாற்றுவதற்கு அச்சங்கொள்ளும் நிலையேற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊ…

    • 0 replies
    • 246 views
  24. மக்கள் திண்டாட்டம் ! அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றின் விலை அதிரடியாக உயர்வு - முழு விபரம் இதோ ! (இராஜதுரை ஹஷான்) இறக்குமதி செய்யப்படும் பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகிய அத்தியாவசிய பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதனால் பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த முடியாது என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சும்,அமைச்சரவை அமைச்சர்களும் குறிப்பிட்டுள்ளார்கள். பால்மா, சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் தற்போதும் சந்தையில் இப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றமை அவதானிக்க முடிகிறது…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.