Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கப்பல் தீ விபத்து – இதுவரையில் 200 கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழப்பு! தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலால் கடல்சார் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளின் காரணமாக 200 கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்துள்ளன. இந்த விடயம் தொடர்பாக சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம் கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார். இதற்கமைய, 176 ஆமைகள், 4 திமிங்கிலங்கள் மற்றும் 20 டொல்பின்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பை அண்மித்தப் பகுதியில் கடந்த மாதம் எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்துக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1225990

  2. சீன நிறுவனத்தின், கடலட்டை வளர்ப்பு நிலையத்தினை பார்வையிட்டார் கஜேந்திரன்! கிளிநொச்சி பூநகரியில் அமைந்துள்ள சீன நிறுவனத்தின் கடலட்டை வளர்ப்பு இடம்பெறும் பகுதியை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் உள்ளிட்ட குழுவினர் நேற்று(செவ்வாய்கிழமை) பார்வையிட்டிருந்தனர். இதன்போது குறித்த கடலட்டை பண்ணையில் சீனர்கள் எவரும் இருந்திருக்கவில்லை என ஆதவனின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார். ஆனாலும் அங்கு அவர்கள் தங்கியிருந்தமைக்கான ஆதாரங்கள் தொடர்ந்தும் காணப்படுவதுடன், குறித்த நிறுவனத்தில் பணி புரியும் தமிழ் பேசும் நபர்கள் அங்கு தங்கி இருந்தமையை அவதானிக்க முடிந்தது. அத்துடன், அங்கு சீன மொழியில் எழுதப்பட்டிருந்த உணவு பொதிகளையும் அவதானிக்க முடிந்ததுடன், மின்சார கட்டமை…

  3. காணாமல் போனவர்களின், உறவினர்களினால்... வவுனியாவில் ஆர்ப்பாட்டம்! காணாமல் போனவர்களின் உறவினர்களினால் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று(புதன்கிழமை) சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களினால் ‘எங்கே எங்கே உறவுகள் எங்கே“, “கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே“ என்று கோசங்களை எழுப்பியவாறும் பதாதைகளை தாங்கியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1225950

  4. மிருகக் காட்சிசாலைகளில் உள்ள, அனைத்து விலங்குகளுக்கும்... கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தீர்மானம் நாட்டிலுள்ள அனைத்து மிருகக்காட்சிசாலைகளில் உள்ள விலங்குகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ரிதிகம சபாரி மற்றும் பின்னவல சரணாலயத்தில் உள்ள விலங்குகளுக்கு உடனடியாக கொரோனா பரிசோதனையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் வனஜீவராசிகள் அமைச்சர் குறிப்பிட்டார். தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் உள்ள சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். https://athavann…

  5. அரசியற் கைதிகளுக்கு இன்னும் சிறை, கொலைக் குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு இது தான் ஒரே நாடு ஒரே சட்டம்-சாணக்கியன் வாழைச்சேனை தன்னுடைய இனத்தின் விடுதலைக்காகப் போராடியவர்கள் இன்னும் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும். ஆனால் ஒரு பாராளுமன்ற உறுப்பினரைக் கொலை செய்து குற்றவாளியாகத் தீர்ப்பு வழங்கப்பட்டவர் ஐந்து வருட சிறைத்தண்டனை அனுபவித்தது போதுமானது என்றால் இதில் என்ன நியாயம் இருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். அண்மையில் இடம்பெற்ற அரசியற் கைதிகளின் விடுதலை தொடர்பில் இன்றைய தினம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவ…

    • 0 replies
    • 448 views
  6. விசாரணைக் குழுவின் அறிக்கை அடுத்த வாரம் சபாநாயகரிடம் 2021 ஏப்ரல் 21 ஆம் திகதி பாராளுமன்றத்தின் சபா மண்டபம் மற்றும் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து அதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை அடுத்த வாரம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவிடம் கையளிப்பதற்கு அக்குழு தீர்மானித்தது. பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் தலைமையில் இக்குழு கூடியதாக பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் டிக்கிரி ஜயதிலக தெரிவித்தார். அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, கெஹலிய ரம்புக்வல்ல, இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான அநுர பிரியதர்ஷன யாப…

    • 0 replies
    • 281 views
  7. மீதமுள்ள அரசியல் கைதிகளை ஏன் விடுவிக்க முடியாது? - அனந்தி சசிதரன் By கிருசாயிதன் June 26, 2021 அமைச்சரால் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியும் என்றால், ஜனாதிபதியாலும் பிரதமராலும் ஏன் விடுவிக்க முடியாதென, ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமும் வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பினார்.யாழ்ப்பாணத்தில்,நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், நீண்ட காலமாக சிறைகளில் இருந்த அரசியல் கைதிகளில் ஒரு தொகுதியினர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டமையானது, மகிழ்ச்சிக்குரிய விடயமாகுமென்றார்.இந்நிலையில், மிகுதியாக உள்ள அரசியல் கைதிகளும் …

    • 5 replies
    • 545 views
  8. ‘மரணத்தின் வாசலில் இருந்து தப்பி வந்துள்ளேன்’ – அசேல சம்பத் 54 Views மரணத்தின் வாசலில் இருந்து தப்பி வந்துள்ளேன் என இலங்கை குற்றப் புலனாய்வாளர்களினால் கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சிவில் உரிமை செயற்பாட்டாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “வாழ்க்கையில் முதல் முறையாக நான் மரண பயணத்தை அனுபவித்தேன்.நான் மரணத்தின் வாசலில் இருந்து தப்பி வந்துள்ளேன்.வீட்டிலிருந்தவேளை எனது வாயை பொத்தி இழுத்துச்சென்றார்கள் – எனது மூத்த மகன் அதனை பார்த்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் எனது அயல்வீட்டில் உள்ளன. நான் வீட்டியே இருந்தேன்,நான் இந்த நாட்டின…

    • 42 replies
    • 4.3k views
  9. கிளிநொச்சி – கௌதாரிமுனை, சீன கடல் அட்டைப் பண்ணைக்கு உரிய அனுமதிப் பெறப்படவில்லை! June 30, 2021 கிளிநொச்சி – கௌதாரிமுனை, கல்முனையில் அமைக்கப்பட்டுள்ள கடல் அட்டைப் பண்ணைக்கு உரிய அனுமதிப் பெறப்படவில்லை என தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை அறிவித்தாலும் இன்று அந்த பண்ணை தடையின்றி இயங்குகின்றது. கிளிநொச்சி – கௌதாரிமுனை கல்முனை பகுதியில் இலங்கை – சீன கூட்டு நிறுவனால் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத அட்டைப் பண்ணை தொடர்பில் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறித்த சீன – இலங்கை கூட்டு நிறுவனம் யாழ். அரியாலை பகுதியில் கடலட்டை இனப்பெருக்க நிலையத்தை நடத்திற்குச் செல்வதற்கு தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையிட…

  10. தீ விபத்துக்கு உள்ளான கப்பலில் இருந்து 40 வீதமான பிளாஸ்டிக் கழிவுகளே கரையொதுங்கியுள்ளன – சுற்றாடல் அமைச்சு தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலில் இருந்து 40 வீதமான பிளாஸ்டிக் கழிவுகள் மாத்திரமே கரையொதுங்கியுள்ளதாக சுற்றாடல் அமைச்சு அறிவித்துள்ளது. ஏனைய 60 வீதமான பிளாஸ்டிக் கழிவுகள் தொடர்பாக உரிய தரவுகள் கிடைக்கவில்லை என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார். கரையொதுங்கிய ஆயிரத்து 34 தொன் பிளாஸ்டிக் கழிவுகள் 44 கொள்கலன்களில் வத்தளை பகுதியிலுள்ள களஞ்சியசாலை ஒன்றில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். https://athavannews.com/2021/1225732

    • 3 replies
    • 478 views
  11. பசிலின் வருகைக்காக... 113 உறுப்பினர்கள், கையொப்பத்துடன் ஜனாதிபதிக்கு கடிதம் பசில் ராஜபக்ஷவை நாடாளுமன்ற உறுப்பினராக்க கோரி, ஆளும் கட்சியின் 113 உறுப்பினர்கள் கடிதம் ஒன்றில் கையொப்பமிட்டுள்ளனர். குறித்த கடிதம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார். நேற்று (செவ்வாய்க்கிழமை) பத்தமுல்லையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் பசில் ராஜபக்ஷவை நாடாளுமன்றம் வருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பல தடவைகள் அழைப்பு விடுத்திருந்தார் என்றும் ஜகத் குமார தெரிவித்தார். எதிர்வரும் தினங்களில் பசில் ராஜபக்ஷ இணக்கம் தெரிவிப்பார் என தாம் நம்புவதாகவும் ஜ…

  12. பசிலுக்கான அழைப்பு : ராஜபக்ஷ அரசாங்கம் தோல்வியுற்றதை நிரூபித்துள்ளது – ஜே.வி.பி. பசில் ராஜபக்ஷவை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வருவதற்கான உரிமைகோரல்கள் ஜனாதிபதி ராஜபக்ஷ அரசாங்கம் தோல்வியுற்றதை நிரூபித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. ஏற்கனவே மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வியைக் காரணம் காட்டி கோட்டாபய ராஜபக்ஷ அழைத்து வரப்பட்டதாக அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க, தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷவினால் செழிப்பான நாட்டை கொண்டுசெல்ல முடியாது கோட்டாபய ராஜபக்ஷவால் மட்டுமே அதைச் செய்ய முடிம் என்ற கருத்தியலை உருவாக்கியே இந்த நடவடிக்கையை முன்னெடுத்தனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார். மேலும் தற்போது, பசில் ராஜபக்ஷவினால் நாட்டை…

  13. பொது நிகழ்வில் முகக்கவசம் இன்றி கலந்துகொண்ட வடக்கு ஆளுநர் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், முகக்கவசம் அணியாமல் பொது நிகழ்வுகளில் கலந்துகொண்டமைக்கு பலரும் விசனம் தெரிவித்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கலந்துகொண்டிருந்தார். இதன்போது குறித்த நிகழ்வுகள் சிலவற்றில் பங்கேற்றிருந்த வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதமை பலராலும் அவதானிக்க கூடியதாக இருந்துள்ளது. நாட்டில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன் முகக்கவசங்களை சரியான முறையில் அணியாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நிலையில் வடக்கு மாகாண ஆளுநர் பொது…

    • 3 replies
    • 726 views
  14. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்ய இலங்கை நடவடிக்கை எடுக்கவில்லை - சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (பி.டி.ஏ) கீழ் தண்டனை பெற்ற 16 கைதிகளுக்கு இலங்கை அரசாங்கம் மன்னிப்பு வழங்குவது வரவேற்கத்தக்கது என்றாலும், கடுமையான சட்டத்தை இரத்து செய்வதற்கான அவசரத் தேவையை இலங்கை அரசாங்கம் நிவர்த்தி செய்யவில்லை என்று சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் இன்று தெரிவித்துள்ளது. இந்த சட்டம் நீண்டகாலமாக சித்திரவதை மூலம் பெறப்பட்ட தன்னிச்சையான தடுப்புக்காவல் மற்றும் ஒப்புதல் வாக்குமூலங்களை செயல்படுத்தியுள்ளது. மேலும் இது முதன்மையாக தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினரின் உறுப்பினர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது. 2011 ஆம் ஆண்டு ஒரு ப…

  15. சீனக் கட்சியின் நினைவு விழா – நாணயம் வெளியிடும் இலங்கை 19 Views சீன பொதுவுடமைக் கட்சியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலங்கை அரசு சிறப்பு நாணயம் ஒன்றை வெளியிடத் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான விடயங்களை மத்திய வங்கியின் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியதுள்ளார் ஆனால் மேலதிக தகவல்களை அவர் வெளியிட மறுத்துவிட்டார். வெளிநாடுகளின் நினைவுதினம் தொடர்பில் இலங்கை அரசு நாணயங்களை வெளியிடும் போதும், வெளிநாட்டு அரசியல் கட்சியின் விழாவுக்காக நாயணத்தை இலங்கை அரசு வெளியிடுவது இதுவே முதல் தடவையாகும். சீனாவின் மத்திய வங்கியும் பொதுவுடமைக் கட்சியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடந்த …

    • 7 replies
    • 689 views
  16. அமைச்சர் நாமல் ராஜபக்ஷ யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்திற்கு விஜயம் ! யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இந்தியாவினால் அமைக்கட்டுள்ள யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்திற்கு நேற்று (27.06.2021) மாலை சென்று பார்வையிட்டிருந்தார். இதன்போது யாழ் இந்திய துணைத்தூதர் பாலச்சந்திரன், இராஜாங்க அமைச்சர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் , வடக்கு மாகாண ஆளுநர், யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன், யாழ் மாநகர ஆணையாளர் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/108331

  17. குருந்தூர்மலையில் இராணுவத்தினரின் பங்கேற்புடன் விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு June 17, 2021 சர்ச்சைக்குரிய அகழ்வாராய்ச்சி பணிகள் இடம்பெற்று வந்த முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புனரமைக்கப்படும் குருந்தாவசோக விகாரைக்கான பொது மண்டபத்துக்கும் தொல்லியல் திணைக்கள அலுவலகத்துக்குமான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இராணுவத்தினரின் பங்கேற்புடன் இடம்பெற்றுள்ளது. இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜென்ரல் உபாலி ராஜபக்ஸவின் பங்கேற்புடன் இடம்பெற்றுள்ளது தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியுடன், திணைக்களத்தின் திட்டங்களின்படி, குறித்த கட்டிடத்துக்கு அடிக்கல் நா…

    • 64 replies
    • 4.5k views
  18. சவுதி அரேபியா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு! சவுதி அரேபியா, கட்டார், பஹ்ரைன், குவைட், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்குச் சென்றவர்கள் இலங்கைக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நாடுகளுக்கு கடந்த 14 நாட்களுக்குள் சென்றவர்களுக்கே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் 13ஆம் திகதி வரை இந்தத் தடை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1225567

  19. ஜேர்மனி... போன்ற, மேற்கத்திய நாடுகள் ஆதரவு – ஜனாதிபதி சேதனப் பசளை பயன்பாட்டுக்கு ஜேர்மனி போன்ற மேற்கத்திய நாடுகள் தங்கள் ஆதரவை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (திங்கட்கிழமை) மாலை அமைச்சரவைக்கு அறிவித்திருந்தார். அந்த நாடுகளில் நடத்தப்படும் சேதனப் பசளை பயன்படுத்தியதான விவசாயத்தின் மீது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்பதனால் இந்த நாடுகள் குறித்த நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கியுள்ளதாக கூறினார். நாட்டில் தற்போது விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவதன் பின்னணியில் சில அரசியல் நோக்கம் இருப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார். மேலும் இந்த பருவத்திற்கான உரங்களின் பற்றாக்குறை குறித்து பிரச்சினையில் தலையிட்டு தீர்வை காணவேண்டும் என ஜனாதிபதி அம…

  20. அசாத் சாலிக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் ! குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக சட்டமா அதிபரால் உயர் நீதிமன்றத்திற்கு இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் அறிவித்துள்ளார். மார்ச் 09 ஆம் திகதி ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்த கருத்து தொடர்பாக, மார்ச் மாதம் 16 ஆம் திகதி அசாத் சாலி கைது செய்யப்பட்டமை குற…

  21. “தாயகம் நோக்கிய பயணம்“ புத்தகத்தை மொழிபெயர்த்த முன்னாள் போராளி அருளாளன் இயற்கை எய்தினார் தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த போராளியும் போர்க்கால மிகப் பிரபல்யமான மொழிபெயர்ப்புப் படைப்பாளருமான வின்சன்ற் புளோரன்ஸ் யோசெப் (அருளாளன், குழல்) இன்று காலமாகியுள்ளார். யாழ்ப்பாணம் குருநகரில் உள்ள அவருடைய வீட்டில் இன்று அவர் உயிரிழந்த நிலையில் அவருடைய சடலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக குடும்பத்தார் தெரிவித்தனர். போர்க்காலத்தில் 82 நூல்களை மொழிபெயர்ப்புச் செய்த பெருமைக்குரியவராக யோசெப் விளங்கியுள்ளார். போர்க்காலத்தில் வன்னியில் வெளிவந்திருந்த ஈழநாடு, ஈழநாதம் பத்திரிகைகளிலும் ஆதாரம், வெளிச்சம் சஞ்சிசைகளிலும் புலம்பெயர் இணையத்தளங்களிலும் அவருடைய…

    • 8 replies
    • 1.1k views
  22. விடுதலையான 16 பேரில் ஒருவர் கூட கிழக்கில் இல்லை !பயங்கரவாத தடைச் சட்டம் முழுமையாக விலக்கப்பட வேண்டும்! SayanolipavanJune 28, 2021 (வி.ரி.சகாதேவராஜா)1978ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனவினால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத்தடைச்சட்டம் ஒரு ஜனநாயக விரோத செயற்பாடாகும்.அச்சட்டத்தை முழுமையாக நீக்கவேண்டும் என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மட்டு.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோ செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா) வேண்டுகோள்விடுத்துள்ளார்.கடந்த ஒரு தசாப்தகாலத்திற்கு மேலாக இலங்கை தமிழர்தரப்பில் பேசுபொருளாகவிருந்துவந்த தமிழ்அரசியல்கைதிகளின் விடுதலை விவகாரம் கடந்தவாரம் ஒரு முக்கிய கட்டத்தையடைந்துள்ள நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ஜனா சமகால நிலைவர…

  23. கடற்றொழிலாளர்களுக்கு வாழ்வாதார ஒத்துழைப்பு வேண்டும்: இந்தியத் தூதுவரிடம் டக்ளஸ் தேவானந்தா.! பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள கடற்றொழிலாளர்களுக்கு வாழ்வாதார ஒத்துழைப்புக்களை இந்தியா வழங்க வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேயிற்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. பேர்ள் கப்பல் விபத்து, மற்றும் கொரோனா முடக்கம் போன்றவற்றினால் நாடளாவிய ரீதியில் கடற்றொழில் செய்பாடுகளும் கடற்றொழிலாளர்களும் எதிர்கொண்டுள்ள சவால்கள் தொடர்பாக கடற்றொழில் அமைச்சரினால் இந்தியத் தூதுவரிற்கு எடுத்துக் கூற…

    • 2 replies
    • 338 views
  24. மனித உரிமை விவகாரம் – சீனாவுக்கு ஆதரவாக இலங்கை June 27, 2021 சீனாவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் அங்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை சீனா நிராகரித்துள்ளது. சீனாவின் நிராகரிப்புக்கு இலங்கை ஆதரவு அளித்துள்ளது. தற்போது இடம்பெறும் 47 ஆவது கூட்டத்தொடரிலேயே இந்த கோரிக்கை பிரித்தானியா, ஜேர்மனி, இத்தாலி, யப்பான், ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 40 இற்கு மேற்பட்ட நாடுகளால் முன்வைக்கப்பட்டிருந்தது. ஆனால் சீனா அதனை நிராகரித்துள்ளது. சீனாவின் மேற்கு மாநிலத்தில் முஸ்லீம் மக்களுக்கான கல்வி மற்றும் தொழில் பயிற்சி முகாம்களே உள்ளதாக அது தெரிவித்துள்ளது. சீனாவிற்கு ஆதரவாக இலங்க…

    • 3 replies
    • 650 views
  25. யாழில் 23 கோடி ரூபா செலவில் சேதனக் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை திறப்பு யாழ். வடமராட்சி, முள்ளியில் சுமார் 23 கோடி ரூபா பெறுமதியான சேதனக் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை இன்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - வடமராட்சி, முள்ளியில் சுமார் 23 கோடி ரூபா பெறுமதியான சேதனக் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை நேற்று ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் ஜெய்க்கா நிறுவனத்தின் உதவி மூலம் உருவாக்கப்பட்ட இந்த தொழிற்சாலையால் ஒரு நாளைக்கு ஐம்பதாயிரம் கிலோ உரத்தை உருவாக்க முடியுமென தெரிவிக்கப்படுகிறது. கரவெட்டி பிரதேச சபையின் ஆளுகைக்குள் உட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.