Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தில் சபாநாயகர் கையெழுத்து! கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன் கையொப்பமிட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் கடந்த 20 ஆம் திகதி 91 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. சட்டமூலம் மீதான மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பு நடத்தப்பட்டு சட்டமூலத்திற்கு ஆதரவாக 149 வாக்குகளும் சட்டமூலத்திற்கு எதிராக 58 வாக்குகளும் பதிவாகின. கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தில் சபாநாயகர் கையெழுத்து! – Athavan News

    • 0 replies
    • 218 views
  2. அனைத்து குழப்பங்களுக்கும் பவித்திராவே காரணம் -இலங்கை மருத்துவ அதிகாரிகள் போரம் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நெருக்கடியின் போது சுகாதாரதுறையை உரியவிதத்தில் நிர்வாகம் செய்யாதமைக்கான பொறுப்பை அமைச்சர் பவித்திர வன்னியாராச்சியே ஏற்கவேண்டும் என இலங்கை மருத்துவ அதிகாரிகள் போரம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் முழு நடவடிக்கையும் குழப்பநிலையில் உள்ளதாக தெரிவித்துள்ள இலங்கை மருத்துவ அதிகாரிகள் போரத்தின் தலைவர் வைத்தியர் ருக்சான் பெலானா அரசாங்கம் இதனை சரிசெய்வதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் விளைவுகளை சந்திக்கவேண்டியிருக்கும் என குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பலர் முன்னெடுக்கின்ற நிலையில் …

    • 0 replies
    • 437 views
  3. பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் பாதுகாப்பு செயலாளரின் விஷேட அறிவிப்பு இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற தகவலில் எந்தவி உண்மையுமில்லை என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் விடுத்துள்ள ஊடக அறிக்கையை மேலே படத்தில் காணலாம். பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் பாதுகாப்பு செயலாளரின் விஷேட அறிவிப்பு (adaderana.lk)

    • 0 replies
    • 264 views
  4. தீ விபத்துக்குள்ளான கப்பலின் உரிமையாளருக்கு எதிராக முறைப்பாடு கொழும்பு துறைமுகத்திற்கு அருகே தீப்படித்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்தில் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் முறைப்பாடளித்துள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பாகவே கப்பலின் உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. தீ விபத்துக்குள்ளான கப்பலின் உரிமையாளருக்கு எதிராக முறைப்பாடு – Athavan News

    • 0 replies
    • 283 views
  5. புதிய சட்டமா அதிபராகப் பதவியேற்றார் சஞ்சய் ராஜரத்தினம்! பிரதி மன்றாடியார் நாயகமாகச் செயற்பட்டுவந்த ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்தினம் புதிய சட்டமா அதிபராக பதவியேற்றுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (புதன்கிழமை) பதவியேற்றுள்ள அவர், இலங்கையின் 48ஆவது சட்டமா அதிபர் ஆவார். சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா கடந்த 24ஆம் திகதி தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளதுடன், இதற்குமுன்னர் சஞ்சய் ராஜரத்தினத்தை புதிய சட்டமா அதிபராக நியமிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடாளுமன்றப் பேரவைக்குப் பரிந்துரைத்தார். இதற்கமைய, இவரை சட்டமா அதிபராக நியமிப்பதற்கு அண்மையில் நாடாளுமன்றப் பேரவை இணக்கம் வெளியிட்டிருந்தது. சட்டமா அதிபர் திணைக்களத்தில் 34 வ…

    • 3 replies
    • 422 views
  6. கடலோரமாக... ஒதுங்குகின்ற, பொருட்கள் எதனையும் பொதுமக்களை தொட வேண்டாமென எச்சரிக்கை! கொழும்பு மற்றும் நீர்கொழும்பு உள்ளிட்ட நாட்டின் கடற்பரப்பில் ஒதுங்குகின்ற பொருட்கள் எதனையும் பொதுமக்கள் தொட வேண்டாம் என கோரப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்திற்கு அருகே நீர்கொழும்பில் கரையொதுங்கியுள்ள பொருட்கள் தீ விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து கசியும் இரசாயன திரவியங்களின் படிமங்களாக இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. எனவே கடலோரமாக ஒதுங்குகின்ற பொருட்கள் எதனையும் பொதுமக்கள் தொட வேண்டாம் என்றும் அதுகுறித்து அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளது. எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ல் என்ற கப்பலில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தீப்பரவல் ஏற்பட்டிருந்த நிலையில், கடற்படையினர் கட…

  7. கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்தும், கொரோனா நோயாளி தப்பியோட்டம்! கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனாத் தொற்றுக்குள்ளான சிறைக் கைதி ஒருவர் இன்று (புதன்கிழமை) காலை வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓடியுள்ளார். இயக்கச்சி கொரோனா சிகிச்சை நிலையத்தில் தங்கியிருந்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த சிறைச்சாலை ஒன்றின் கைதியே இவ்வாறு தப்பி ஓடியுள்ளார். தனக்கு கடும் நெஞ்சுவலி என்று அவர் தெரிவித்ததன் அடிப்படையில் நேற்றைய தினம் அவர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் இன்று காலை வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓடியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கையை கிளிநொச்சிப் பொலிஸாரும் பாதுகாப…

  8. "ட்ரோன்" கண்காணிப்பின் அடிப்படையில்... யாழில் 10 பேர் கைது! யாழ். நகரப் பகுதிகளில் பொதுமக்களின் நடமாட்டத்தை கண்காணித்தலில் விதிமுறைகளை மீறிய பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தெரிவித்தார் இன்று காலை யாழ் நகரம் நல்லூர், அரியாலை, குருநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ட்ரோன் கமரா கண்காணிப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் சிலர் எச்சரிக்கை செய்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், சிலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பிரசாத் பெர்னான்டோ தெரிவித்தார் முகக்கவசம் அணியாது வீதியில் நின்றமை, பயணத்தடை கட்டுப்பாடுகளை மீறி வீதியில் பயணித்தமை போன்ற குற்றச்சாட்டுக்காக இவர…

  9. கப்பலின்... தீயை, அணைக்கும் முயற்சிகள் தொடர்கின்றன – கடலுணவை உட்கொள்வது குறித்து ஆராய்வு! கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்த நிலையில், தீப்பரவலுக்கு உள்ளான எம்.வி.எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலின் தீயை கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது குறித்த கப்பல் முழுவதிலும் தீப்பரவல் ஏற்பட்டுள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் பணிகளில் கடற்படை, துறைமுக அதிகார சபை உள்ளிட்ட தரப்பினர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன், இந்தியாவின் சமுத்திர பாதுகாப்பு கப்பலும் விமானமும் இந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், குறித்த கப்பலில் இருந்து வெளியேறிய எரிபொருள் கடலில் கலந்தமையினால்…

  10. மட்டக்களப்பு, போதனா வைத்தியசாலையில்... இரத்தப் பற்றாக்குறை! மட்டக்களப்பு கறுவப்பங்கேணி புனித வனத்து அந்தோனியார் ஆலயத்தில் நேற்று(புதன்கிழமை) இரத்ததான முகாம் ஒன்று நடாத்தப்பட்டது. மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை ஆயராக பிரகடனப்படுத்தப்பட்டு 13வது ஆண்டு நிறைவினை முன்னிட்டும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் இரத்தப்பற்றாக்குறையினை பூர்த்திசெய்யும் வகையிலும் இந்த இரத்ததான முகாம் நடாத்தப்பட்டது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையுடன் இணைந்து புனித வனத்து அந்தோனியார் ஆலய கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த இரத்ததானமுகாம் நடாத்தப்பட்டது. அண்மைக்காலமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இரத்தப்பற்றாக்குறை நிலவிவருவதாக பல்வ…

  11. இலங்கைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்- அமெரிக்கா எச்சரிக்கை!: பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட தகவல்! இலங்கைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் எவையும் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. விசேட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு பாதுகாப்பு அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கை தொடர்பான பயண அறிக்கையில் அமெரிக்காவினால் எச்சரிக்கப்பட்டதன்படி, இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இல்லை என அந்த அறிக்கையில் அமைச்சு அறிவித்துள்ளது. அமெரிக்க வெளிவிவகாரத் துறையினால் வழக்கமாக வழங்கப்படும் பொதுவான பயண எச்சரிக்கையின் பிரகாரம் இலங்கைக்கு 4ஆம் நிலை பிரிவு பயண எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளதஷது என தெரிவித்துள்ளது. கொரோனா அவசர நிலைமை காரணமாக இலங்கை தொடர்பாக இவ்வாறான…

  12. வௌிநாட்டில் இருந்து பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி வௌிநாட்டில் இருந்து பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, வெளிநாட்டில் இருந்து இலங்கைக்குள் பிரவேசிக்க விதிக்கப்பட்டிருந்த தடை எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், கடந்த 14 நாட்களுக்குள் இந்தியாவுக்குச் சென்ற பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் மேலதிக அறிவிப்பு வரும் வரை தொடரும் என்று இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் உபாலி தர்மதாச தெரிவித்தார். கொரோனா பரவல் தீவிரமடைந்தததைத் தொடர்ந்து, மே 21 முதல் 31 வரை வௌிநாட்டில் இருந்து பயணிகள் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்ட…

  13. யாழில்... அதிகளவான வீதித்தடைகள் அமைக்கப்பட்டு, இராணுவம் மற்றும் பொலிஸார் குவிப்பு மக்களின் நடமாட்டத்தை குறைப்பதற்காக யாழ்.நகரில் அதிகளவான வீதித்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட பயணத்தடை, இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணியுடன் சில கட்டுப்பாடுகளுடன் தளர்ந்தப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்.நகரின் பிரதான வீதிகள் மற்றும் முக்கிய பகுதிகளில் வீதித் தடைகள் அமைக்கப்பட்டு, இராணுவம் மற்றும் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக குவிக்கப்பட்டள்ளனர். மேலும் அவசர தேவை தவிர்ந்த ஏனைய வாகனங்கள் உள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் வெளியே வருகின்றவர்கள் அனுமதிக்கப்படுகின்றார்கள். அத்துடன் அத்தியா…

    • 15 replies
    • 1.1k views
  14. காரைநகரின் ஒரு பகுதியை முடக்க தீர்மானம் காரைநகரி;ன் ஒரு பகுதியினை முடக்குவதற்கு அனுமதியை கோரியுள்ளதாக யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு மத்திய நிலையத்திற்கு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். காரைநகர் பிரதேச செயலர்பிரிவிற்கு உட்பட்ட காரைநகர் ஜே 47 பிரிவில் சயம்பு வீதி உள்ளடங்கலான பகுதியில் அதிகளவு கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து அந்த பகுதியை முடக்க தீர்மானித்துள்ளதாக மகேசன் தெரிவித்துள்ளார். அப்பகுதியை சேர்ந்த 60 குடும்பங்களை சுயதனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். Thinakkural.lk <p>காரைநகரி;ன் ஒரு பகுத…

    • 1 reply
    • 285 views
  15. வடக்கிற்கு 4 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் தேவை : மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் 60 Views வடக்கு மாகாணத்தில் 4 இலட்சம் பேருக்குக் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தால் கோரிக்கை முன்வைக்கப் பட்டுள்ளது. தடுப்பூசிகள் வழங்கப்பட்டால் அவை இரண்டு வாரங்களுக்குள் வடக்கு மக்களுக்குச் செலுத்தி முடிக்கக் கூடியதாக இருக்கும் என்றும் சுகாதார சேவைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, சுகாதார முன்களப் பணியாளர்களுக்கு அஸ்ரா ஜெனெகா தடுப்பூசியின் முதலாவது செலுத்துகை கடந்த ஜனவரி மாத இறுதியில் ஏற்றப்பட்டது. அவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி செலுத்துகை தற்போது ஏற்றப்பட்ட…

  16. வாகன இறக்குமதிக்கு தடை: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக இலங்கைக்கு வரும் ஆடம்பர வாகனங்கள்…! வாகன இறக்குமதிக்கு நாட்டில் இடைக்கால தடை விதித்த போதிலும் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இவை டொயோட்டா லங்கா நிறுவனம் வழியாக ஜப்பானில் உள்ள அதன் தலைமையகத்தில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உள்ளூர் மட்டத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகளை கண்காணிக்கும் பணிகளை ஒப்படைத்துள்ள புதிய உறுப்பினர்களுக்கு வாகனத்தை கொள்வனவு செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் கருவூலத்திற்கு அறிவுறுத்தியுள்ளார். இதேவேளை இவற்றைத்தவிர 50 அம்பியூலன்ஸ்கள், 50 தண்ணீர் லொரிகள் மற்றும் 50 டபு…

  17. இலங்கையில் வடக்கு பகுதியில் பலத்த காற்று, சூறாவளி 11 Views 25.05.21 வடக்கில் கடும் காற்று வீசும் என வளிமண்டலவியல் நிலையம் அறிவித்துள்ளது. வடக்குப் பகுதியில் பலத்த காற்று வீசுவதுடன், பயன்தரு மரங்களும் முறிந்து விழுந்துள்ளன. அடுத்த சில மணி நேரங்களில் வங்காள விரிகுடாவின் கிழக்கு மத்திய பகுதியில் உருவாகியுள்ள ´யாஸ்´ என்ற சூறாவளி கடும் புயலாக தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாட்டில் பலத்த காற்று வீச ஆரம்பித்திருப்பதாகவும் நாட்டின் தென் மேற்கு பகுதியில் மழை பெய்யும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது. …

  18. இரா.சாணக்கியனின் கோரிக்கையினையடுத்து ஊழியர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய தனியார் ஆடைத்தொழிற்சாலை நிர்வாகம் நடவடிக்கை! மக்களினதும், ஊழியர்களினதும் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் தனது கோரிக்கையினையடுத்து மட்டக்களப்பிலுள்ள தனியார் ஆடைத்தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவிதுள்ளார். இன்று(புதன்கிழமை) விசேட காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ள இரா.சாணக்கியன் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “இன்றைய தினம் மட்டக்களப்பிலுள்ள தனியார் ஆடைத்தொழிற்சாலையின் கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பானவரிடம் நான் தொலைபேசி ஊடாக முன்வைத்த …

    • 0 replies
    • 171 views
  19. இன்று முதல், இரு நாட்களுக்கு... மதுபானம் மற்றும் இறைச்சி விற்பனைகளுக்கு முற்றாகத் தடை! வெசாக் தினத்தை முன்னிட்டு இன்று (புதன்கிழமை) மற்றும் நாளை நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகள் மற்றும் இறைச்சி கடைகள் என்பன மூடப்பட்டுள்ளன. குறித்த இரு தினங்களுக்கு மதுபானசாலைகள் மற்றும் இறைச்சி கடைகளை மூடுமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்தார். அத்தோடு, பல்பொருள் அங்காடிகளிலும் மதுபானம் மற்றும் இறைச்சி விற்பனை செய்யப்படக்கூடாது என்றும் மதுபானம் மற்றும் இறைச்சி விற்பனையை முற்றாக நிறுத்துமாறும் பிரதமர் குறிப்பிட்டிருந்தார். அதன்படி, நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகள் மற்றும் இறைச்சி கடைகள் என்பன …

  20. (எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு துறைமுகத்துக்கு வட மேல் திசையில், 9.5 கடல் மைல் தூரத்தில், கொழும்பு துறைமுகத்துக்குள் நுழையும் நோக்குடன் நங்கூரமிடப்பட்டிருந்த சரக்குக் கப்பலில் பரவிய திடீர் தீ மிக மோசமான நிலையில் அக்கப்பலை ஆட்கொண்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை குறித்த கப்பலில் தீ பரவலுக்கு இடையே இரு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் கப்பல் ஊழியர்கள் இருவர் இதன்போது காயமடைந்துள்ளனர். இந்நிலையில் காயமடைந்த கப்பல் ஊழியர்களான இந்தியர்கள் இருவரும் சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடர்படையினரால் அனுமதிக்கப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா கூறினார். அத்துடன் அக்கப்பலின் பணிக் குழுவில் இருந்த ஏனைய 23 பேரையும் பாதுகாப்…

  21. மட்டக்களப்பு கோட்டைப்பூங்காபகுதியில் மாநகர சபையினால் மரங்கள் அழிப்பு 5 Views மட்டக்களப்பு மாநகரசபையின் கோட்டை பூங்கா பகுதியில் இன்று இளைஞர்களினால் மரநடுகை வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை கோட்டை பூங்கா பகுதிக்கு வருகைதந்த இளைஞர்கள் இந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுத்தனர். அண்மையில் குறித்த பகுதியில் காட்சியளித்த மரங்கள் வெட்டப்பட்டதாக முகநூல்கள் ஊடாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு இளைஞர்களினால் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோர் வருகைதந்…

    • 5 replies
    • 498 views
  22. தமிழகத்தின் செயற்பாட்டால் ஈழத்தமிழர்கள் பாதிக்கப்பட்ட அதேவேளை, ஈழத்தமிழர்களின் செயற்பாட்டினால் தமிழகமும் பாதிக்கப்பட்டிருந்ததாக அரசியல் ஆய்வாளர் ஜெயபாலன் தெரிவித்துள்ளார். ஐ.பி.சி செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில் பழைய சிந்தனைகளுடன் மாத்திரம் நாங்கள் இருந்தால் புதிய போக்கில் காலடி எடுத்து வைக்க முடியாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், கொழும்பில் நிர்மாணிக்கப்படும் துறைமுக நகர திட்டம் உருவாக்கம் என்பது, ஈழத்தின் மறு உருவாக்கத்திற்கான விதையாகவே தாம் பார்ப்பதாக மேலும் கூறியுள்ளார். https://tamilwin.com/article/portcity-project-is-the-reconstruction…

    • 3 replies
    • 734 views
  23. இந்தியாவை மிரட்டி வரும் கருப்பு பூஞ்சை தொற்றுடன் அம்பாறையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டார் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பரவிவரும் கருப்பு பூஞ்சை எனப்படும் கிருமி தொற்றானது மிக வேகமாக பரவி வருகிறது.இந்நிலையில், குறித்த கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.அதன்படி, குறித்த நபர் அம்பாறை பகுதியில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று அதிகாரி வைத்தியர் பிரசாத் கொலம்பகே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த கிருமி அதிகரிக்குமாக இருந்தால், நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மாத்திரமன்றி, மரணங்…

  24. அதிகரித்து வரும் கொரோனா: இலங்கைக்கு செல்லவேண்டாம் என அமெரிக்கா எச்சரிக்கை ஜப்பான் மற்றும் இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை அடுத்து, அந்தந்த நாடுகளுக்கு பயணம் செய்வதற்கு எதிராக பயண ஆலோசனை எச்சரிக்கையை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதற்கமைய, இந்த வாரம் மேற்கொண்ட மதிப்பாய்வு நடவடிக்கையை அடுத்து 4 ஆம் எச்சரிக்கை மட்டத்துக்குள் அமெரிக்கா இலங்கையினை உள்ளடக்கியுள்ளது. இதேவேளை ஜப்பானுக்கான அனைத்து பயணங்களையும் அமெரிக்கர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையம் எச்சரித்துள்ளது. அத்தோடு குறித்த நாட்டிற்குச் செல்ல வேண்டியவர்கள் அங்கு பயணம் செய்வதற்கு முன்னர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறும் அறிவுறுத்த…

  25. மொத்த விற்பனை சந்தையில் இராணுவத்தை ஈடுபடுத்தவும்-சுகாதாரப்பிரிவு பரிந்துரை 9 Views வவுனியா மொத்த வியாபார சந்தையில் இராணுவம் அல்லது விசேட அதிரடிப்படையினரை கடமையில் ஈடுபடுத்துமாறு சுகாதார பிரிவினரால் வவுனியா மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதாரபிரிவினர் தெரிவித்தபோது, நாட்டில் சந்தைகளின் மூலமாகவே தொற்று அதிகமாக பரவி வருகின்றது. வவுனியா மொத்தவியாபார சந்தை சிறிய இடமாக இருப்பதுடன், அதிகமான சனநடமாட்டம் உள்ள பகுதியாக காணப்படுகின்றது. குறித்த பகுதியில் காவல்துறை உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டாலும் காவல்துரையினரின் அறிவுரைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்காத நிலை ஏற்பட்டு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.