Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மே18ல் கவனத்தைப்பெற்ற ஐ.நா பிரதிநிதியின் முள்ளிவாய்க்கால் பேருரை : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தமிழினப்படுகொலையினை நினைவேந்தும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளில், இனப்படுகொலைகளைத் தடுப்பதற்கான ஐ.நாவின் முன்னாள் சிறப்பு பிரதிநிதியின் அடமா டியங்கின் முள்ளிவாய்க்கால் பேருரை பலரது கவனத்தைப் பெற்றுள்ளது. செனகல் நாட்டைச் சேர்ந்தவரான சட்டநிபுணர் அடமா டியங்க், 2012ம் ஆண்டுஐ. நாவின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீன் மூனினால் இனப்படுகொலை களைத் தடுப்பதற்கான விசேட ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்தவர். செனகலில் நீதி மற்றும் சட்டத் துறைகளில் நீண்ட காலம் பொறுப்புக்களை வகித்து வந்த இவர், 2001 ஆம் ஆண்டு முதல் றுவாண்டாவுக்கான…

    • 0 replies
    • 281 views
  2. கொரோனா வைரஸ் தொற்றினை விரைவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது தொடர்பாக சி.யமுனாநந்தா வழங்கிய ஆலோசனை! 0 கொரோனா நோயாளி ஒருவரிடமிருந்து சுமார் 500 பேருக்குத் தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளமையால், மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மிகவும் அவதானமாக செயற்படுவது அவசியமென வைத்தியர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் சி.யமுனாநந்தா மேலும் கூறியுள்ளதாவது, “வடக்கில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம…

    • 0 replies
    • 348 views
  3. கருப்பு பூஞ்சைக்குப் பின் வெள்ளை பூஞ்சை வருகிறது கொரோனா, கருப்பு பூஞ்சை நோய் பரவலை தொடர்ந்து தற்போது வெள்ளை பூஞ்சை நோய் பரவி வருவதாக மருத்துவத்துறையினர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2ஆவது அலை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தற்போது கருப்பு பூஞ்சை என்ற நோய் பரவத் தொடங்கியது. ராஜஸ்தான், தெலங்கானா போன்ற மாநிலங்கள் இதனை பெருந்தொற்று நோயாக அறிவித்துள்ளன. கருப்பு பூஞ்சை நோயை தமிழக அரசும் தொற்று நோயாக அறிவித்துள்ளது. கருப்பு பூஞ்சை ஒடிசா அரசு, கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோய்கள் சட்டம் 1897 இன் கீழ் அறிவிக்கப்பட்ட ஒரு தொற்று நோயாக பட்டியலில…

    • 0 replies
    • 397 views
  4. நாட்டின்... அனைத்துப் பாகங்களையும், சீனா கைப்பற்றும் – சாணக்கியன் எச்சரிக்கை! நாட்டின் அனைத்துப் பாகங்களையும் சீனா கைப்பற்றும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “உலகின் பல்வேறு நாடுகளுக்கு நுழைந்த சீனா, அந்தந்த நாடுகளிலுள்ள தொழிற்றுறைகளைக் கைப்பற்றிவிட்டது. இந்நிலையில், இலங்கைக்கு உள்ள அமைவிடத்தையே கைப்பற்றப் பார்க்கிறது. மாகாண சபைகளுக்கூடாக அதிகாரங்களைப் பிரித்துக் கேட்கும் தமிழர்களை புலிகள் என்கிறார். இஸ்லாமியர்களை அடிப்படைவாதிகள் என்கிறார்கள். …

  5. இளைஞர் வணிகக் கிராமம் திட்டத்துக்கு கிளிநொச்சி தெரிவு: ஜனாதிபதிக்கு அமைச்சர் டக்ளஸ் நன்றி தெரிவிப்பு! இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் எண்ணத்தில், பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இளைஞர் வணிகக் கிராமம் நிகழ்ச்சித் திட்டத்துக்கு கிளிநொச்சி மாவட்டம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பை வழங்கக் கூடிய குறித்த திட்டத்தின் முதலாவது கட்டத்திலேயே கிளிநொச்சியை தெரிவு செய்தமைக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நன்றி தெரிவித்துள்ளார். இலங்கையின் 25…

  6. அரசாங்கத்தின் உள்ளகப்பொறிமுறை தோல்வி - சர்வதேச மன்னிப்புச்சபை (நா.தனுஜா) போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை உறுதிசெய்வதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட உள்ளகப்பொறிமுறை தோல்வியடைந்திருப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது. http://cdn.virakesari.lk/uploads/medium/file/94523/amnesty_international_l_new.jpg இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச்சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் நடைபெற்ற போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மை, நீதி, இழப்பீடு என்பவற்றை வழங்குவதுடன் மீள்நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் நாம் கடந்த 12 வருடகாலமாக வலியுறுத்தி வருகின்றோம். எனினும் இதற்காக முன்னெடுக்…

  7. வெளிநாட்டவர்கள் இந்நாட்டில் ஈழ அரசு உருவாக தேவையான சட்டங்களை அரசு இயற்றுகிறது – சம்பிக்க 10 Views எமது நாடு துரதிஷ்டவசமான நிலையில் இருக்கின்ற இக்காலக்கட்டத்தில், வெளிநாட்ட வர்களுக்கு இந்நாட்டில் ஈழ அரசு உருவாவதற்குத் தேவையான சட்டங்களை இயற்றிக்கொள்வதற் காக அரசாங்கம் நாடாளுமன்றத்தை கூட்டி யுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அரசாங்கம் மீது குற்றஞ்சாடினார். யுத்த வெற்றிக்காக உயிர்த்தியாகம் செய்த இராணுவ வீரர்களை நினைவு கூரும் நிகழ் வொன்று கடந்த செவ்வாய்க்கிழமை பொரளையில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில் – “கொவிட் 19 அச்சுறுத்தலால் நாடு முடக…

  8. துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான விவாதம் ஆரம்பம். கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான இரண்டாவது நாள் விவாதம் சற்றுமுன்னர் ஆரம்பமானது. துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது. நாடாளுமன்றில் குறித்த சட்டமூலம் தொடர்பான விவாதம் நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்றைய இரண்டாம் நாள் விவாதத்தின் பின்னர் அதன் மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, சட்டமூலத்த…

  9. கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை, இலங்கையில் உற்பத்தி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை இலங்கையில் உற்பத்தி செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. விசேட அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அமைச்சரவை பத்திரத்தை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி முன்வைத்த நிலையில், இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரச மருந்தாக்க கூட்டுத்தாபனமும் சிநோவெக் பயோடெக் மற்றும் கெலுன் லைஃப் சயன்ஸ் தனியார் கம்பெனியும் இணைந்து கொரோனா தடுப்பு மருந்தை இலங்கையில் உற்பத்தி செய்வது தொடர்பில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1217199

  10. இலங்கைக்குள் ஒரு சீன அரசு தமிழர்கள் கேட்பது அனைத்தும் மறுக்கப்படுகி றது சீனா கேட்கும் சகலதும் வழங்கப்படுகின்றது – விக்னேஸ்வரன் பா.கிருபாகரன் – ந. ஜெயகாந்தன் இந்த அரசிடம் தமிழர்கள் கேட்பது அனைத்தும் மறுக்கப்படுகின் றது. சீனா கேட்கும் சகலதும் வழங்கப்படுகின்றது. இந்த நாடு எமக்கும் உரியது.அதனை தாரை வார்க்க அனுமதிக்க முடியாது என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் யாழ்மாவட்ட எம்.பி.யுமான உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுச் சட்ட மூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவ…

  11. துறைமுக நகர் சட்டமூலம் மீதான விவாதத்தில் ஒலித்த தமிழர் தரப்பு குரல் - தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர்- திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ்மக்களிற்கு சிறிதளவேனும் தன்னாட்சி வழங்குவதற்கான இடைக்கால ஏற்பாட்டைக்கூட குறுகியஇனவாத நோக்கில் எதிர்த்தவர்கள்தான் இன்று நாட்டின் இறைமையை சமரசத்திற்கு உள்ளாக்குகிறார்கள். தமிழ் மக்கள் ஏதோ ஒருவகையில் ஒரு சிறிதளவேனும் தன்னாட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்வதனை தடுப்பதற்கு எம்மை அழிக்கக்கூடத் துணிந்தீர்கள் . அதற்கு எம்மினத்தின் மீது இனவழிப்புச் செய்வதனையே உங்கள் தெரிவாக எடுத்தீர்கள் . இவ்வாறு நாடாளுமன்றத்தில் துறைமுகநகர சட்டமூலம் தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டுஉரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜ…

  12. யாழில் கொரோனா தொற்று வீதம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது ஆனால் பொதுமக்கள் அலட்சியமாக செயற்படுவதை காண முடிவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.ம கேசன் தெரிவித்தார். தற்போதுள்ள யாழ் மாவட்ட கொரோனா நிலைமை தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் முகமாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் தற்போது கொரோனா நிலவரம் சற்று அதிகரித்து செல்லும் நிலையை காணப்படுகிறது. பொதுவாக வடமாகாணத்தில் அதிகரித்து செல்லும் போக்கு காணப்படுகிறது. ஆகவே நாம் அனைவரும் இச் சந்தர்ப்பத்தில் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய காலகட்டமாகும். பொதுமக்களை இக்கொடிய தொற்றிலிருந்து பாதுகாக்கவே இவ் பயண கட்டுப்பாடுகள், தடைகள் விதிக்கப்பட்டன.…

  13. மேலும் 500,000 டோஸ் "சினோபோர்ம்" தடுப்பூசி நன்கொடை – சீனத் தூதரகம் உறுதி! மேலும் 500,000 டோஸ் சினோபோர்ம் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கவுள்ளதாக சீனா உறுதியளித்துள்ளது. இந்த மாதத்திற்குள் குறித்த பங்குகள் கிடைக்கும் என கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் உறுதியளித்துள்ளது. கொரோனா வைரஸின் தற்போதைய அலைக்கு எதிராக போராடும் இலங்கை மக்களுக்கு ஆதரவளிப்பதே சீனாவின் நோக்கம் என்றும் தூதரகம் அறிவித்துள்ளது. https://athavannews.com/2021/1217005

  14. மருத்துவமனை முழுவதும் கொரோனா நோயாளர்கள்- அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் 27 Views இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் , 90% மருத்துவமனை படுக்கைகள் கொரோனா நோயாளர்களினால் நிரம்பியுள்ளன மேலும் 10% படுக்கைகள் மட்டுமே ஏனைய நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கவுள்ளன என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஒரு பாரிய முயற்சிக்குப் பின்னர் மருத்துவமனை நிர்வாகம் அவசர சிகிச்சை படுக்கைகளின் தேவையை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. இருப்பினும் அவசர சிகிச்சை படுக்கைகளில் 50% க்கும் அதிகமானவை ஏற்கனவே கொரோனா நோயாளர்களினால் நிரம்பியுள்ளன என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுக்குழு உறு…

  15. பாய், படுக்கை கூட வழங்கப்படவில்லை’ -பா.நிரோஸ் யுத்தம் நிறைவடையாதிருந்தால், சாணக்கியன் எம்.பி சபைக்கு வந்திருக்க முடியாதெனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் என்கிற சிவநேசதுறை சந்திரகாந்தன், தன்னைக் கீழ்தரமாகப் பழிவாங்குகிற செயற்பாடுகளை சாணக்கியன் நிறுத்திக்கொள்ள வேண்டுமெனச் சாடினார். நேற்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு தொடர்ந்துரைத்த அவர், “ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்படும் கைதுகளை, அரசியல் பழிவாங்கல்கள் என தற்போது கூறுகிறார்கள். நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும், எனக்கு எதிராகவே பயங்கரவாதத் தடைச் சட்டம் முதலில் பாய்ந்தது. 68 நாள்கள் சிஐடியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த எனக்க…

    • 0 replies
    • 280 views
  16. உண்மையான தகவல்களை அரசாங்கம் மறைக்கிறதா? நாளாந்தம் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களை விட மும்மடங்கு தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்க கூடும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார். அவ்வாறானவர்களால் தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக அவர் கூறியுள்ளார். ´நேற்று மூவாயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதற்கும் அதிகமான தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்க கூடும். 3,500 ஐ போல் மும்மடங்கு தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்கலாம். அவர்கள் மேலும் நோய் பரவ வழிவகுக்க கூடும். மக்களை வீட்டில் இருக்குமாறு கோரினால் மக்கள் அவ்வாறு நடந்துக்கொள்வதில்லை. வீதிகள் வெறுமையடைய வேண்டும். ஆகவே, தொற்றை தவிர்க்க வேண்டுமானால் தேவைய…

    • 0 replies
    • 366 views
  17. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தினேஸ் குணவர்த்தனவுடன் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் பேச்சு! தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவை சந்திந்து தமிழ் அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடினர். இந்த சந்திப்பு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, அரசியல் கைதிகள் பற்றிய விபரங்களை தமிழ் தரப்பினர் அமைச்சரிடம் ஒப்படைத்தனர். அதன்படி, விசாரணை முடியாத கைதிகள், தண்டனை வழங்கப்பட்ட கைதிகள் என அரசியல் கைதிகள் குறித்த முழுமையான விபரத்தை கையளித்ததுடன், அவர்களை விடுவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், இது குறித்து ஜனாதிபதி…

    • 0 replies
    • 169 views
  18. இலங்கை முள்ளிவாய்க்காலில் அரசு கட்டுப்பாடு: உள்நாட்டுப்போர் முடிந்து இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு 18 மே 2021, 06:38 GMT படக்குறிப்பு, முள்ளிவாய்க்காலில் போர் நினைவேந்தல் தூபி உடைக்கப்பட்டது சமீபத்தில் சர்ச்சையை உண்டாக்கியது இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான இறுதிக் கட்ட யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் பல்வேறு தடங்கல்களுக்கு மத்தியில் முந்தைய ஆண்டுகளில் யுத்தத்தினால் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து வந்த தமிழர்களுக்கு இம்முறை அந்த பகுதியில் உயிர் நீத்த மக்களை நினைவுகூர்வதற்கு முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. முல்லைத்தீவு, முள்ளியாவளை, புதுகுடியிருப்பு ஆகிய பகுதிகள் நேற்று நள்ளிரவு முதல் தனிமைப்படு…

  19. சம்பந்தன், மற்றும் திகாம்பரத்திற்கு... மூன்று மாதம், விடுமுறை! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் ஆகியோருக்கு 3 மாத கால விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) எதிர்கட்சிகளின் அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல முன்வைத்த கோரிக்கைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் சுகயீனமுற்றிருப்பதால் விடுமுறை வழங்குமாறு லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்த நிலையிலேயே அதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி மே 18ஆம் திகதி முதல் எதிர்வரும் 3 மாதங்களுக்கு இருவரும் நாடாளுமன்ற அமர்வுகள…

  20. நாடளாவிய ரீதியில் நாளை இரவு 11 மணிமுதல் முழுநேர பயணத்தடை விதிக்கப்படவுள்ளது நாடளாவிய ரீதியில் நாளை வெள்ளிக்கிழமை இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை முழுநேர பயணத்தடை விதிக்கப்படவுள்ளது.பயணத்தடை அமுலாகும் காலப்பகுதியில் அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் வீட்டிலிருந்து வெளியேற முடியாது என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார் இதேவேளை பயணத்தடை காரணமாக நாளைமுதல் எதிர்வரும் 24 ஆம் திகதி வரையில் சகல பொருளாதார மத்திய நிலையங்களையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதன்பின்னர் 25ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு சகல பொருளாதார மத்திய நிலையங்களையும் பேலியகொடை மெனிங் சந்தை ஆகியவற்றையும் மீளத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது…

  21. நாட்டு மக்களிடம்... இராணுவத் தளபதி, விடுத்துள்ள அவசர கோரிக்கை! நாட்டில், 55 வயதுக்கு மேற்பட்டோருக்கு சுவாசிப்பதில் சிரமம் போன்ற கொரோனா அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்தார். அவ்வாறில்லையெனின் உடனடியாக வைத்திய ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1217055

  22. சீனாவிற்கு அதிகாரங்களை வழங்கும் அரசு... ஏன் 70 வருடங்களாக போராடிய தமிழர்களுக்கு வழங்கவில்லை?? – சித்தார்த்தன் இலங்கை அரசாங்கத்திற்கு நிதி முக்கியமாக இருந்தால் கோடிக்கணக்கில் முதலீடுகளை மேற்கொள்ள நாடு கடந்த தமிழர்கள் தாயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இவ்வாறு கூறினார். ஆகவே இவ்வாறு நாட்டுக்கு முதலீடுகளை கொண்டுவர, மக்களால் தெரிவு செய்ய்யப்படும் வடகிழக்கு இணைந்த சுயாட்சி சபை ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் வடக்கு கிழக்கிற்கு…

  23. வெளிநாட்டு பயணிகள்.. இலங்கைக்கு, வருவதற்கு தற்காலிக தடை வெளிநாட்டு பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு தற்காலிக தடை விதிக்க தீர்மானித்துள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 12 மணி முதல் எதிர்வரும் 31ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை இந்த நடைமுறை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருகின்றமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எனினும், இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்ல முடியும் என அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2021/1216996

  24. மே-18, இன எழுச்சி நாள்! அரசியற்துறை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியீட்டுள்ள அறிக்கை! May 18, 2021 எமது அன்பின் பெரு மதிப்பிற்குமுரிய தமிழ் மக்களே ! இன்றைய இந்த நாள் எமது தமிழ்த் தேசிய இனம் சிங்கள தேசத்தின் பயங்கர வாத இன அழிப்பு வன்மையாளர்களால் வயது வேறுபாடின்றி முதியோர்கள், கற்பிணித் தாய்மார்கள், எதுவுமே அறியா பச்சிளம் பாலகர்கள், இளையோர்கள் என எமது இனத்தின் மீது வன்மம் கொண்டு நன்கு கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையினைக் கட்டவிழ்த்து, அதனை அரங்கேற்றி, பல இலட்சம் எம்மின மக்களை கொலை வெறி கொண்டு கொலைத்தாண்டவமாடி கொன்றொழித்து, சிங்கள ஆட்சியாளர்களும், சிங்கள தேசமும் வெற்றிக்களிப்பாடிய – எங்கள் தேசத்தின், எங்கள் இனத்தின், வரலாறு மறந்து, மறை…

    • 2 replies
    • 686 views
  25. சீனாவின் கடனாளியாக மாறியுள்ளது அரசாங்கம்- க.வி.விக்னேஸ்வரன் 135 Views அவர்கள் 2021ம் ஆண்டின் பொருளாதார ஆணைக்குழு வரைபு சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றி விடலாம் என்று எண்ணக் கொண்டிருந்த அரசாங்கத்தின் கடிவாளத்தை உச்ச நீதிமன்றம் கெட்டியாகப் பிடித்து வைத்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும் பல சரத்துக்கள் அரசியல் யாப்பின் ஏற்பாடுகளுக்கு முரணாக உள்ளன என்று கூறியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2021ம் ஆண்டின் பொருளாதார ஆணைக்குழு வரைபைப் பற்றிப் நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போது, “இலங்கைக்குள் ஒரு சீன நகரத்தை உருவாக்க முனைகின்றது அரசாங்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.