ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
பிரதமர் தலைமையில்... தலைக்கு, எண்ணெய் வைக்கும்.. தேசிய நிகழ்வு புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் தலைக்கு எண்ணெய் வைக்கும் தேசிய நிகழ்வு இன்று (சனிக்கிழமை) காலை, இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு இன்று காலை 7.16 மணியளவில் பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நடைபெற்றுள்ளது. இதன்போது ஆரம்ப நிகழ்வாக புத்த மந்திரயவில் பூஜை வழிபாட்டில் ஈடுபட்ட பிரதமர், பின்னர் தலைக்கு எண்ணெய் வைக்கும் நிகழ்வில் ஈடுபட்டார். இதன்போது மாதன்வல ரஜமஹா விகாராதிபதி வணக்கத்திற்குரிய வெல்லகிரிய சுமங்கள தேரர், பிரதமர் மஹிந்தவுக்கு தலையில் எண்ணெய் தேய்த்து ஆசீர்வதித்தார். குறித்த நிகழ்வில் பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, குடும்ப உறுப்பினர்கள்…
-
- 0 replies
- 398 views
-
-
இறையாண்மைக்கு எதிராக யாராவது அதிகாரத்தைப் பயன்படுத்த முயற்சித்தால் அதற்கு எதிராக செயற்படுவதற்கு மகாநாயக்க தேரர்கள் ஒருபோதும் பின்வாங்கப்போவதில்ல." என முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார். அதேபோல், அடக்குமுறை, அச்சுறுத்தலுக்குப் பயந்து ஒளிந்தோடும் இனம் நாங்களல்ல எனவும் அவர் குறிப்பிட்டார். நாரஹேன்பிட்டி அபயாராம விகாரையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், "நாட்டினதும், மக்களினதும் இறையாண்மைக்கு எதிராக யாராவது தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி, நினைத்த பிரகாரம் சட்டமூலங்களை ஏற்படுத்தத் திட்டமிடுவதாக இருந்தால் அதற்கு எதிராகப் போராடுவதற்கு மகாநாயக்க தேரர…
-
- 2 replies
- 774 views
-
-
ஜனாதிபதி என்னை அச்சுறுத்தினார் – விஜயதாச ராஜபக்ச ஜனாதிபதி தன்னை அச்சுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில் நான் தெரிவித்த கருத்துகளுக்காக ஜனாதிபதி எனக்கு அச்சுறுத்தல் விடுத்தார். ஜனாதிபதி தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தினார். நாடு ஒன்றின் தலைவரிடமிருந்து நான் இதனை எதிர்பார்க்கவில்லை. இதன்போது ஜனாதிபதியின் பாணியிலேயே நான் பதிலளித்தேன். தற்போது எனது மற்றும் எனது குடும்பத்தவர்களின் உயிர்களின் பாதுகாப்பு குறித்து நான் அச்சமடைந்துள்ளேன்.“ எனக் குறிப்பிட்டு…
-
- 4 replies
- 995 views
-
-
மீறல்களுக்கு வழிவகுக்கும் ஜனாதிபதியின் பயங்கரவாதத்தடை விதிமுறைகள் - சர்வதேச யூரர்கள் ஆணைக்குழு (நா.தனுஜா) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டிருக்கும் பயங்கரவாதத்தடை தொடர்பான விதிமுறைகள் ஏற்கனவே மிகவும் ஆழமான குறைபாடுகளைக் கொண்டிருந்த பயங்கரவாத்தடைச்சட்டத்தின் மூலம் மேலும் வன்முறைகளும் மீறல்களும் இடம்பெறுவதற்கு வழிவகுக்கும் என்று சர்வதேச யூரர்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சர்வதேச யூரர்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: பயங்கரவாதத்தடை தொடர்பான விதிமுறைகள் குறித்த வர்த்தமானி அறிவித்தல் கடந்த செவ்வாய்கிழமை வெளியிடப்பட்டது. அதில் 11 அமைப்புக்கள் 'தீவிரவாத அமைப்புக்களாக' இனங்காணப்பட்ட…
-
- 0 replies
- 263 views
-
-
துறைமுக நகரத்தை சீனாவின் மாநிலமாக மாற்றும் அதிகாரத்தை வழங்கி, ஆணைக்குழு சட்டமூலம் ஒன்றை ஜனாதிபதி உருவாக்கியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு என்ற பெயரில் சட்டமூலத்தை உருவாக்கியுள்ளது. இந்த துறைமுக நகரம் எந்த உள்ளூராட்சி நிறுவனத்தின் ஆளுகைக்கும் உட்படாது. உள்ளூராட்சி நிறுவனங்கள் அந்த பிரதேசத்திற்கு உட்பட்ட மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளால் ஆளப்படுகிறது. எனினும் ஜனாதிபதியால், நியமி…
-
- 14 replies
- 1.2k views
-
-
இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்களைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு முக்கிய அறிவிப்பு! அரசாங்கத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ள இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் பள்ளிவாசல்களின் பொறுப்புக்களிலிருந்து விலக வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வக்பு சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த அமைப்புக்களிலுள்ள உறுப்பினர்கள் உடனடியாக, அந்தந்த பொறுப்புக்களிலிருந்து விலக வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் சர்வதேச ரீதியில் இயங்கும் 11 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு அண்மையில் இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ளது. இந்த தடையுத்தரவு அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் கடந்த 13ஆம் திகதி அ…
-
- 1 reply
- 426 views
-
-
முல்லைத்தீவில் மின்னல் தாக்கி மூவர் உயிரிழப்பு! முல்லைத்தீவு – தண்ணி முறிப்பு பகுதியில் மின்னல் தாக்கி மூவர் உயிரிழந்துள்ளனர். வயல் வேலைகளுக்காக சென்ற மூவரே நேற்று(வியாழக்கிழமை) மாலை இவ்வாறு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் இருவர் குமுழமுனையைச் சேர்ந்த இரட்டை சகோதரிகளின் கணவன்மார் எனவும் மற்றையவர் வற்றாப்பளை யினைச் சேர்ந்தவர் எனவும் இவருடைய மனைவி தண்ணீரூற்று இந்து தமிழ் கலவன் பாடசாலை ஆசிரியை எனவும் தெரியவருகின்றது. இரட்டைச் சகோதரிகள் இருவரும் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றி வருகின்றனர். https://athavannews.com/2021/1210009
-
- 1 reply
- 683 views
-
-
சவுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த... 41 பணிப்பெண்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப் பட்டுள்ளனர்! சவுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த 41 பணிப்பெண்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு இதுகுறித்த தகவலினை வெளியிட்டுள்ளது. சுமார் 18 மாதங்களாக குறித்த அனைவரும் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெண்கள் மீது எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் இதுவரையில் பதிவு செய்யப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது. குறித்த பெண்களுள் மூன்று சிறு குழந்தைகளும் உள்ளதாகவும் அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. https://athavannews.com/2021/1210041
-
- 0 replies
- 527 views
-
-
சீனத் தடுப்பூசியால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுமாயின் ஆராய்வுக் குழுவே பொறுப்பு- மருத்துவ அதிகாரிகள் சங்கம் சீனா தயாரிப்பான சினோபார்ம் கொரோனா தடுப்பூசியால் நாட்டு மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படுமாயின் இதற்கு, கொவிட் தடுப்பூசி குறித்து ஆராயும் குழுவே பொறுப்புக்கூற வேண்டுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சினோபார்ம் தடுப்பூசியின் வினைத்திறன் இன்னும் ஆய்வு மட்டத்திலேயே உள்ள நிலையில் இலங்கை பிரசைகளுக்கு அதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்தே அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரத்னசிங்கம் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்த சீனோபார்ம் தடுப்பூசி நாட்டிலுள்ள சீனப் பிரசைகளுக்கு மாத்திரமே வழங்கப்படும…
-
- 0 replies
- 305 views
-
-
குருந்தூர் மலையில் இந்துக்கள் வழிபட முழு உரித்தையும் பெற்றுக்கொடுப்போம் - சுமந்திரன் முல்லைத்தீவு - தண்ணிமுறிப்புப் பகுதியில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீக வழிபாட்டுத்தலமான குருந்தூர்மலையில், இந்து மக்கள் வழிபடுவதற்கான முழு உரித்தையும் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். குருந்தூர் மலையில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் வழக்கொன்றினைத் தொடர்வது தொடர்பில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோர் கடந்த 30.01.2021 அன்று பாராளுமன்ற உ…
-
- 0 replies
- 349 views
-
-
மாகாண சபை முறைமை ஒரு தீர்வல்ல, ஆனால் அதனை ஒழிக்க இடமளிக்க மாட்டோம்: கூட்டமைப்பு பேச்சாளர் சுமந்திரன் மாகாண சபை முறைமையை ஒழிப்பதற்கு இடம் கொடுக்க போவதில்லை என்றும் அதேவேளை, வெறுமனே இருக்கின்ற மாகாண சபை முறையை தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு என்று ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். மாகாண சபை முறைமை இருக்க வேண்டும் என்றும் ஆனால் அது முழு அதிகாரங்களைப் பெற்றதாக ஒரு சமஷ்டி கட்டமைப்பில் – வடக்கு, கிழக்கு இணைந்த ஒரு ஆட்சியாக மலர வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி தமிழரசுக் கட்சியி காரி…
-
- 1 reply
- 628 views
-
-
சிறப்பு அதிரடிப் படையினர் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்! சிறப்பு அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி படுகாயமடைந்த இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வடமராட்சி கிழக்கு முள்ளி பகுதியில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, துன்னாலையைச் சேர்ந்த இருவரே படுகாயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. ஒருவரின் காலில் துப்பாக்கி ரவை உள்ளதாகவும், இதன்காரணமாக அவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2021/1210004
-
- 0 replies
- 402 views
-
-
நம்பிக்கையை இழக்காதீர்கள்! உரிமையை வென்றெடுப்போம்!! - சித்திரைப் புத்தாண்டில் சம்பந்தன்.! தமிழ் மக்கள் பல துன்பங்களுக்கு மத்தியில் சித்திரைப் புத்தாண்டை வரவேற்கின்றார்கள். என்னதான் துன்பங்கள், இடையூறுகள் வந்தாலும் எமது மக்கள் தங்கள் நம்பிக்கையை இழக்கக்கூடாது. ஜனநாயக வழியில் இறுதி வரை போராடி எமக்கான உரிமைமையை நாம் வென்றெடுப்போம். இந்த நம்பிக்கையில் நாம் தொடர்ந்தும் ஓரணியில் பயணிக்க வேண்டும்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "இந்த நாடு தற்போதைய பாதையில் தொடர்ந்து பயணிக்க முடியாது. தற்போதைய பாதை பேராபத்து மிக்கது. நாட்டில் உண்மையான நல்…
-
- 23 replies
- 1.6k views
-
-
4 நாள்களில் 140 மில்லியன் வருமானம் இலங்கையிலுள்ள அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளின்; மொத்த வருமானமானது, கடந்த 4 நாள்களில் 140 மில்லியன் ரூபாய் என வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய கடந்த 8ஆம் திகதியிலிருந்து 11ஆம் திகதி வரை, இந்த வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளதுடன், 9,10ஆம் திகதிகளில் மாத்திரம் 70 மில்லியன் ரூபாயும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழ்- சிங்கள புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக மக்கள் தமது சொந்த இடங்களுக்குச் செல்லவும் சுற்றுலா செல்வோர் அதிவேக நெடுங்சாலைகiளைப் பயன்படுத்தியமையாலேயே இந்த வருமானம் கிடைக்கப்பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார். Tamilmirror Online || 4 நாள்களில் 140 மில்ல…
-
- 3 replies
- 537 views
-
-
5000 ரூபா கொடுப்பனவு இன்று முதல் மீண்டும் ஆரம்பம் புத்தாண்டை முன்னிட்டு கொரோனா தொற்றால் நிதி நெருக்கடியில் சிக் கியுள்ள சமுர்த்தி பயனாளர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறு வோறுக்கான 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. நேற்றைய முன்தினம் புத்தாண்டை முன்னிட்டு இந்த நடவடிக்கை தற் காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் குறித்த நிவாரணத்தை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு இன்று முதல் மீண்டும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Thinakkural.lk <p>புத்தாண்டை முன்னிட்டு கொரோனா த…
-
- 2 replies
- 536 views
-
-
மன்னார் பள்ளிமுனை பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடந்த 13ஆம் திகதி இரவு நேரத்தில் நாச்சிகுடா வளைப்பாடு எல்லை பகுதியில் இரண்டு படகுகளில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் கடற்படையினரால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளதுடன் மீனவர்களுடைய மீன்பிடி உபகரணம் மற்றும் ஒரு தொலை பேசியையும் கடற்படையினர் எடுத்து சென்றுள்ளனர். குறித்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மீனவர்களை இன்றைய தினம் வியாழக்கிழமை(15) நேரில் சந்தித்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கலந்துரையாடி உள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், கடற்படையினரின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்கு அச்சப்…
-
- 0 replies
- 239 views
-
-
மீண்டும் பாராளுமன்றம் செல்லும் ரணில்... ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த மாதத்திற்குள் கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் ஆசனத்தை ஏற்றுக்கொள்வார் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் ஒருமித்த முடிவின் பேரில் ரணில் விக்ரமசிங்க எதிர்காலத்தில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த தயாராகி வருவதாகவும் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். காலி பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார். மீண்டும் பாராளுமன்றம் செல்லும் ரணில்... (adaderana.lk)
-
- 0 replies
- 507 views
-
-
இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க டக்ளஸ் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் – செல்வம் இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க கடற்தொழில் அமைச்சர் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டு செல்கின்றது. இதனால் எமது மீனவர்கள் பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்…
-
- 0 replies
- 336 views
-
-
கொழும்பு துறைமுக நகர, பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை எதிர்த்து மனுதாக்கல் இலங்கை அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலத்தை எதிர்த்து இன்று (வியாழக்கிழமை) உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் இலங்கையின் பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை அல்லது பொது வாக்கெடுப்பு மூலம் குறித்த சட்டத்தை நிறைவேற்றப்பட வேண்டிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என மனுதாரர்கள் நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டுள்ளனர். https://athavannews.com/2021/1209917
-
- 0 replies
- 275 views
-
-
தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு செல்ல தயாராகும் ரணில்! ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அடுத்த மாதத்திற்குள் தனது கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் ஆசனத்தை ஏற்றுக்கொள்வார் என்று அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். காலி பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கட்சியின் ஒருமித்த முடிவின் பேரில் ரணில் விக்ரமசிங்க எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1209840
-
- 0 replies
- 666 views
-
-
எதிர்வரும் வடமாகாணசபை தேர்தலில் பொது முதலமைச்சர் வேட்பாளராக வேலன் சுவாமிகளை நிறுத்தலாமென க.வி.விக்னேஸ்வரன் கூறியிருப்பது அவரது சொந்தக்கருத்து. எனினும், வடக்கு கிழக்கில் நிர்வாக ஆளுமையும், நடைமுறை அரசியலை கையாள தெரிந்த ஒருவருமே முதலமைச்சர் வேட்பாளராக வேண்டுமென தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றாக தமிழ் தேசிய கட்சியின் தலைவர், மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார். எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் பொது முதலமைச்சர் வேட்பாளராக வேலன் சுவாமிகளை களமிறக்கலாமென, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் அண்மையில் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் என்.சிறிகாந்தாவை தொடர்பு கொண்டு தமிழ்பக்கம் வினவிய போதே, இவ…
-
- 0 replies
- 538 views
-
-
புத்தாண்டில் யாழில் கோர விபத்து : இரு சகோதரர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி, மற்றையவர் படுகாயம் Published on 2021-04-14 21:05:09 சகோதரர்கள் இருவர் துவிச்சக்கர வண்டியில் பயணித்த போது எதிரே வந்த வாகனம் மோதியதில் சிறுவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றைய சிறுவன் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சித்திரைப் புத்தாண்டு தினமான இன்று காலை 8.45 மணியளவில் நாவலர் வீதி கனகரத்தினம் மகா வித்தியாலயத்துக்கு அருகில் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜெயரூபன் மதுசிகன் (வயது-8) என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மூத்த…
-
- 0 replies
- 402 views
-
-
அமெரிக்கத்தலையீட்டை கேட்கிறோம் -காணாமல் போனோரின் உறவுகள் 10 Views தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அமெரிக்காவின் தலையீட்டை பகிரங்கமாக கோருவதாக, வவுனியாவில் கடந்த 1515ஆவது நாளாக தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். புதுவருடப் பிறப்பான இன்று அவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், “2009 முதல் காணாமல் ஆக்கப்பட்ட ஒரு குழந்தையை கூட நாங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை.ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதன் மூலம் எந்தவொரு தீர்வையும் காணமுடியாது என்பதை …
-
- 0 replies
- 363 views
-
-
அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு தடைவிதிக்குமாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த அமைப்புகளை தடைபெற்றுமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அனுமதியளித்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு தடைசெய்யப்பட்டுள்ள 11 இஸ்லாமிய அமைப்புகள் வருமாறு, 1. யுனைடெட் தௌஹீத் ஜமாஅத் - United Thowheed Jamaath (UTJ) 2. சிலோன் தௌஹீத் ஜமாஅத் - Ceylon Thowheed Jamaath (CTJ) 3. இலங்கை தௌஹீத் ஜமாஅத் - Sri Lanka Thowheed Jamaath (SLTJ) 4. அனைத்து இலங்கை தௌஹீத் ஜமாஅத் - All Ceylon Thowheed Jamaath (ACTJ) 5. ஜமியத்துல் அன்சாரி சுன்னத்துல் மொஹமதியா - Jamiyyathul Ansaari Sunnaththul Mo…
-
- 12 replies
- 1.5k views
-
-
ரமழான் பண்டிகையை முன்னிட்டு வெளியான நிரூபம் ! “கஞ்சி ” வழங்க தடை ! மேலும் 30 விதிமுறைகள் (எம்.மனோசித்ரா) ரமழான் பண்டிகையினைக் கொண்டாடும் போது முஸ்லிம் பள்ளிவாசல்களில் கடைபிடிக்க வேண்டிய 30 சுகாதார பாதுகாப்பு விதிமுறைகள் அடங்கிய சுற்று நிரூபம் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவினால் இந்த சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமை பள்ளிவாசல்களில் 18 வயதுக்கு மேற்பட்டோர் மாத்திரமே வழிபாடுகளுக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு பள்ளிவாசல் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் அளவுக்கதிகமானோர் கூடுவதற்கு இடமளிக்கப்படக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் …
-
- 1 reply
- 431 views
-