ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
புதிய அரசியல் யாப்பில்... சைவத்திற்கு, முன்னுரிமை கோரி பல பகுதிகளில் உணவுத் தவிர்ப்புப் போராட்டம்! இலங்கையில் புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியல் யாப்பில் சைவ சமயத்திற்கு முன்னுரிமை வழங்குமாறு கோரி உணவுத் தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் 11 மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை இவ்வாறு போராட்டம் நடைபெற்றுள்ளது. சாவகச்சேரி மறவன்புலவு க.சச்சிதானந்தத்தின் ஏற்பாட்டிர் இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சைவ சமயத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டால் மதம் மாற்றிகள் மூலம் சைவ சமயத்திலிருந்து மக்கள் வேறு மதங்களுக்குச் செல்லமாட்டார்கள் என மறவன்புலவில் உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டிருந்த சச்சிதானந்தம் தெரிவித்துள…
-
- 0 replies
- 341 views
-
-
யாழில் அனைத்து திரையரங்குகளும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது யாழில் கொரோனா வைரஸ் தொற்றின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், அங்குள்ள திரையரங்குகள் அனைத்தும், மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அம்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அதேபோன்று திருமண மண்டபங்கள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் ஆகியவற்றின் செயற்பாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு அறிவிப்பு விடுக்கப்பட்டபோதும், சில திரையரங்குகள் இன்னும் மூடப்படவில்லை என பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன. அவை தொடர்பாக ஆராயப்படுவதாக மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று மாத்திரம் புதிதாக 17 பேருக்கு கொரோ…
-
- 0 replies
- 392 views
-
-
வெடுக்குநாறி, உருத்திரபுரீச்சகம் ஆலயங்களுக்கு இராஜாங்க அமைச்சர் விதுர நேரில் விஜயம் (ஆர்.ராம்) வவுனியா வெடுக்குநாறி மற்றும் கிளிநொச்சி உருத்திரபுரீச்சகம் ஆலயங்களுக்கு தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க விஜயம் செய்யவுள்ளார். புத்தாண்டின் பின்னர் இந்த விஜயத்தினை அவர் மேற்கொள்ளவுள்ளதாகவும் அதன்போது இந்த ஆலயங்களில் காணப்படும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, முல்லைத்தீவு குருந்தூர் மலையை அண்மித்து 400 ஏக்கர் பகுதியை தொல்பொருள் செயற்பாடுகளுக்காக பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைளையும் நிறுத்தியுள்ளதாக…
-
- 0 replies
- 295 views
-
-
மணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா? நீதிமன்றமா? விக்னேஸ்வரன் கேள்வி 32 Views மணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா? நீதிமன்றமா? என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: யாழ் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், நேற்று வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் பிணையில் விடுதலை செய்யப்படுவதற்கு முன்னதாகவே அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா, மணிவண்ணனுக்கு ஜனாதிபதி மன்னிப்பு அளிப்பதாகத் தன்னிடம் கூறியதாக ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். அத்துடன், மணிவண்ணன் நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்படுவ…
-
- 2 replies
- 700 views
-
-
மாவட்டம் தோறும் மாற்றுத்திறனாளிகள் காப்பகம் உருவாக்கப்படல் வேண்டும் – தமிழ் மாற்றுத்திறாளிகள் அமைப்பு 148 Views மாவட்டம் தோறும் மாற்றுத் திறனாளிகள் காப்பகம் வேண்டும் என்பது உட்பட மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தியும், பாதிக்கப்பட்டோர் குறித்த கொள்கை உருவாக்கம் என்பவற்றை வலியுறுத்தியும் தமிழ் மாற்றுத்திறாளிகள் அமைப்பினால் பாதிக்கப்பட் டோர் சார்பாக ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு இன்று (10.04.2021) மட்டக் களப்பில் நடைபெற்றது மாவட்டம் தோறும் மாற்றுத்திறனாளிகள் காப்பகம் உருவாக்கப்பட வேண்டும் என்பது உட்பட மூன்று கோரிக்கைகள் வலியுறுத்தியும், போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்டோர் குறித்த கொள்…
-
- 0 replies
- 205 views
-
-
முன்னாள் போராளி பெயரில் வீதியின் பெயர்ப் பலகை – காவல்துறையினர் விசாரணை 74 Views கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியின் பெயரில் திறக்கப்பட்ட வீதியின் பெயர்ப்பலகை விவகாரம் தொடர்பில் கிளிநொச்சி காவல்துறையினர் இன்றைய தினம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கரைச்சி பிரதேச சபைக்கு சொந்தமான குறித்த வீதியின் பெயரை வெற்றி வீதி என பெயர்கூட்டப்பட்டு 28.03.2021 அன்று திறந்து வைக்கப்பட்டது. குறித்த விடயம் தொடர்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலிற்கு அமைவாக கிளிநொச்சி காவல்துறையினர் இன்று கரைச்சி பிரதேச சபையின் தவிசாளரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். இன்று காலை 8 மணியளவில் …
-
- 1 reply
- 829 views
-
-
ஆட்டம் காண்கிறதா ராஜபக்ஸக்களின் அரசாங்கம்? April 10, 2021 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்சவுக்கும் இடையில் இரகசியமான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்துக்கும் அரசாங்க பங்காளி கட்சிகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ள நிலையிலேயே இவ்வாறு சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது. இதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில், கடந்த 8 ஆம் திகதியன்று முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்…
-
- 1 reply
- 526 views
-
-
#யாழில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5000, வெற்றிலை துப்பினால் 2000! #யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் அறிவிப்பு. இன்று முதல் மாநகர காவல் படை மூலமாக பணிகள் ஆரம்பம்.
-
- 43 replies
- 2.7k views
-
-
உருத்திரபுரீஸ்வரன் ஆலய அகழ்வு பணிகள் தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடல் கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரன் ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்கவுள்ளமை தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.குறித்த ஆலய வளாகத்தில் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட எடுத்த முயற்சியினை அடுத்து அப்பகுதியில் பௌத்த விகாரை அமைக்க நடவடிக்கை எடுக்க முயற்சிக்கலாம் என தெரிவித்து குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடல் ஆலய மண்டபத்தில் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், எஸ்.சிறிதரன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் கரைச்சி பிரதேச சபை தவிசாளர்,…
-
- 0 replies
- 260 views
-
-
யாழ் துப்பரவுத் தொழிலாளர்கள் : செய்யும் தொழிலைச் சொன்னால் ' அம்மா..அப்ப வெளிய நில்லுங்க' என்பார்கள்
-
- 0 replies
- 546 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) பொலிஸ் அதிகாரங்களை எக்காரணம் கொண்டும் மாநகர சபைகள் கையில் எடுக்க இடமளிக்க முடியாது. நகர மேயருக்கும் இது பொருந்தும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சபையில் தெரிவித்தார். நாட்டின் சட்டத்தை முறைதவறி செயற்படுத்த அரசாங்கம் தயாரில்லை எனவும் அவர் கூறினார். யாழ். மாநகரசபை மேயர் மணிவண்ணன் கைது செய்யப்பட்டுள்ளமை குறித்து இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் தமிழ் எம்.பிக்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்பதை தெரிவிக்கும் போதே அமைச்சர்களான தினேஷ் குணவர்தன மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் இவ்வாறு கூறினார். இது குறித்து அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறுகையில், யாழ் மேயர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம்…
-
- 7 replies
- 1k views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) மக்கள் பிரதிநிதி என்ற வகையில் பாராளுமன்றத்தில் எனது பேச்சு, கருத்து சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ள இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க மீது சபாநாயகர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் சபையில் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து கூறும்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். அவர் மேலும் கூறுகையில், கடந்த 7 ஆம் திகதி நான் இந்த சபையில் ஆற்றிய உரை தொடர்பில் 8 ஆம் திகதி தனது கருத்தை முன்வைத்த இராஜாங்க அமைச்சரான செஹான்சேமசிங்க, என்னை உடனடியாக குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை செய்ய…
-
- 1 reply
- 646 views
-
-
இலங்கையின் நான்கு பிரதான மீன்பிடித் துறைமுகங்களையும் அபிவிருத்திசெய்ய பிரான்ஸ் ஆர்வம்! இலங்கையில் உள்ள நான்கு பிரதான மீன்பிடித் துறைமுகங்களையும் அபிவிருத்தி செய்வதற்கு பிரான்ஸ் ஆர்வமாக உள்ளதாக அந்நாட்டு தூதுவர் எரிக் லெவரூட் தெரிவித்துள்ளார். கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் பிரான்ஸ் தூதுவர் எரிக் லெவரூட் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று (புதன்கிழமை) கடற்றொழில் அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது. கடற்றொழில், நீர்வேளாண்மை ஆகிய துறைகளில் மேற்கொள்ளக்கூடிய அபிவிருத்தி தொடர்பாக இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. இதன்போது கருத்துத் தெரிவித்த பிரான்ஸ் தூதுவர், தென்பகுதியிலுள்ள காலி, பேருவளை, குடாவெல்ல மற்றும் குரானவெல்ல ஆகிய நான்கு மீன்பிடித் த…
-
- 3 replies
- 517 views
-
-
மணல் மாபியா குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றார் சாணக்கியன் மணல் மாபியாக்களின் செயற்பாடுகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். பாதுகாப்பு ஆலோசனைக்குழுக் கூட்டம் நேற்று வியாழக்கிழமை பாராளுமன்ற கட்டத்தொகுதியில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றிருந்தது. இதன்போதே குறித்த விடயம் தொடர்பாக இரா.சாணக்கியன், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தார். வவுனியா மற்றும் அம்பாறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் சட்டவிரோத மண் அகழ்வு குறித்தும் இரா.சாணக்கியன், ஜனாதிபதியின் கனவத்திற்கு கொண்டு சென்றிருந்தா…
-
- 0 replies
- 387 views
-
-
பொன்சேகாவை... கழுதை, என்று அழைத்தமைக்கு.. மன்னிப்பு கோரினார் சமல்! அமைச்சர் சமல் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றத்தில் நடந்த வார்த்தைப் போரின்போது முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை கழுதை என்று அழைத்தமைக்கு மன்னிப்பு கோரினார். நாடாளுமன்றத்தில் இன்று காலை (வியாழக்கிழமை) அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் பெயரைக் குறிப்பிட்டு சரத் பொன்சேகா ஒரு சில கருத்துக்களை பகிர்ந்திருந்தார். இதன்காரணமாக இருவருக்கும் இடையில் வார்த்தைப் போர் இடம்பெற்றிருந்தது. 2010 மற்றும் 2015 ஆண்டுகளுக்கிடையில் தான் அன்றைய அரசாங்கத்தால் அநியாயமாக நடத்தப்பட்டேன் என சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார். மேலும் தனக்கு விதிக்கப்பட்ட தேவையற்ற தண்ட…
-
- 1 reply
- 512 views
-
-
அடிப்படைவாதத்தைக் கற்பித்ததாக மௌலவி மற்றும் பாடசாலை ஆசிரியர் கைது! அடிப்படைவாதத்தைப் போதித்ததாக இருவர் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம், ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த அரபுக் கல்லூரி மௌலவியும், பாடசாலை ஆசிரியர் ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று (புதன்கிழமை) கைதுசெய்யப்பட்டதுடன் விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பயங்கரவாதப் புலனாய்வுத் தடுப்புப் பிரிவினர், முஸ்லிம் அடிப்படைவாத போதனை மற்றும் தீவிரவாதச் செயற்பாடு தொடர்பாக மேற்கொண்டு வந்த விசாரணையின் ஒரு கட்டமாகவே இவர்கள் கைதாகியுள்ளனர். இதன்படி, கடந்த 2018ஆம் ஆண்டு க.பொ.த. …
-
- 0 replies
- 526 views
-
-
தமிழ் அரசியல் கைதியின் தாயொருவருக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல்! தமிழ் அரசியல் கைதி ஒருவரின் தாயாருக்குத் தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதி ஒருவரின் தாயாரான கோண்டாவில் கிழக்கில் வசிக்கும் தேவராசா தேவராணி, அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தொடர்ந்து போராடி வருகிறார். இவர் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஒழுங்குபடுத்தப்படும் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு தனது கோரிக்கையை முன்வைத்து வருகிறார். இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கைதிகளுக்க…
-
- 0 replies
- 273 views
-
-
யாழ். மாநகர சபை காவல் படையின் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவு யாழ்ப்பாணம் மாநகர சபையால் காவலாளி சேவையை நடத்துவதற்கே பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில், காவல் படை என்ற பெயரில் அரச துறையில் ஐவரை கடைமைக்கு அமர்த்தியமை தொடர்பிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டது.அத்துடன் தமிழீழ காவல்துறையின் சீருடையை ஒத்த சீருடைய அணிந்தமை தொடர்பில் கடமைக்கு அமர்த்தப்பட்ட ஐவரையும் வாக்குமூலம் வழங்க அழைக்குமாறு பொலிஸாரால் கோரப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ். மாநகர சபை காவல் படையின் கடமைகளை உடனடியாக நிறுத்துமாறு மாநகர சபைக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.அத்தோடு, காவல் படையின் சீருடையைப் பெற்று அதனை கொழும்புக…
-
- 8 replies
- 771 views
-
-
சமஷ்டி அரசமைப்பின் மூலமாகவே நாட்டைப் பாதுகாக்க முடியும் – நிபுணர் குழுவிடம் விக்கி 58 Views சமஷ்டி அல்லது கூட்டாட்சி முறைமையிலான அரசமைப்பு உருவாக்கப்பட்டதால்தான் இந்த நாடு பேரழிவிலிருந்து மீண்டெழுந்து அமைதி, சமாதானம், அபிவிருத்தி, நல்லிணக்கம் ஆகிய உயர் வழிகளில் மேலுயர முடியும் என புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான நிபுணர் குழு முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி தெரிவித்திருக்கின்றது. கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத் தொகுதியில் உள்ள அரசியலமைப்பு நிபுணர் குழுவின் கலந்துரையாடல் மண்டபத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற மேற்படி சந்திப்பில் தமிழ் மக்கள் தே…
-
- 0 replies
- 314 views
-
-
ஒற்றையாட்சி பெருந்தோல்வி ; கூட்டாட்சி அல்லது சமஷ்டியே உகந்த தீர்வு புதிய அரசியலமைப்பு தொடர்பாக தமிழ்மக்கள் தேசிய கூட்டணி யின் யோசனை தற்போது நடைமுறையிலுள்ள ஒற்றை ஆட்சி முறையைக் கைவிட்டு கூட்டு சம்மேளன முறைமையிலான ஏற்பாட்டை உள்ளீர்த்துக்கொள்ளுமாறு தமிழ் மக்கள் தேசிய கூட்டணி யோசனை தெரிவித்திருப்பதுடன் இந்த சமஷ்டி முறைமையில் இலங்கை நான்கு மாநிலங்களாக இருக்க முடியுமென்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையின் புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் நிபுணர் குழுவை நேற்றுப் புதன்கிழமை சந்தித்தபோது இந்த யோசனையை முன்வைத்திருக்கும் வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் யாழ் மாவட்டஎம்.பி.யான சி. வி. விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இந்த யோசனையி…
-
- 0 replies
- 250 views
-
-
வெளியே வா’ பொன்சேகாவுக்கு சமல் சவால் ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் எம்.பி பதவி பலவந்தமாக பறிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி எதிரணியினர் சபைக்குள் எதிர்ப்பு இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளால் சபை நடவடிக்கைகள் சில நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த எதிர்ப்பு நடவடிக்கையின் போது, ஆளும்கட்சியின் உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றன. பதற்றமான நிலைமையில், அமைச்சர் சமல் ராஜபக்ஷவுக்கும் எதிர்க்கட்சியின் எம்.பியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் கடுமையான வாக்கு…
-
- 0 replies
- 514 views
-
-
சிங்கள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் சாணக்கியன்! சீன ஆக்கிரமிப்பினால் எதிர்காலத்தில் சிங்கள சமூகத்திற்கு இடையிலேயே கிளர்ச்சியொன்று உருவாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ´இலங்கையர்கள் குறித்து வெளிநாட்டவர் மத்தியில் நல்லதொரு எண்ணப்பாடு உள்ளது. இலங்கையர்கள் இரக்கம் கொண்டவர்கள், நல்லவர்கள் என்ற நல்லதொரு விம்பம் உள்ளது. இலங்கையர்கள் வெளிநாட்டவர்களிடம் அன்பாக இருந்தாலும் கூட சக இலங்கையர்களிடம் அவ்வாறு இருப்பதில்லை. 1949 ஆம் ஆண்டில் …
-
- 0 replies
- 559 views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்கம் தகவல் 48 Views உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளாக இருவர் இனங்காணப்பட்டுள்ளனர் என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். உயித்த ஞாயிறு தாக்குதலாளிகளின் பிரதான சூத்திரதாரிகளை கண்டறியுமாறு அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடும் அழுத்தம் கொடுத்துவரும் நிலையில் இன்று மாலை கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இவ்வாறு தெரிவித்துள்ளார். தற்போது சிறையிலுள்ள மௌலவி. மொஹமட் இப்ராஹிம் முகமது நௌபர் மற்றும் ஹஜ்ஜுல் அக்பர் ஆகிய இருவருமே பிரதான சூத்திரதாரிகளா…
-
- 2 replies
- 502 views
-
-
சர்வதேச நீதிமன்றத்தின் முன்னால் இலங்கையைகொண்டு செல்ல முடியாது என்பதற்காக இலங்கை அலட்சியமாகயிருக்க முடியாது -ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானம் தொடர்பில் நாடு ஐக்கியப்பட்டுஒருமித்த நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் அல்லது விளைவுகளை எதிர்கொள்ளவேண்டும் என ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி சகி கலகே தெரிவித்துள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் விசாரணை பொறிமுறை தொடர்பில் மாற்றுக்கருத்துக்கள் எவையும் காணப்படக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் ஜெனீவாவின்நிகழ்ச்சி நிரலில் இருக்கின்றோம்,நாங்கள் அச்சுறுத்தல்கள் …
-
- 4 replies
- 473 views
-
-
புலிகளால் கூட ஒரே நேரத்தில்... 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ் விடுதலைப் புலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை என அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய அவர், ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னணியில் உள்ள சக்திகள் குறித்து தேசியமற்றும் சர்வதேச ரீதியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கூறினார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இதுவரை 97 பேர் அளவில் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் 36 விசாரணைகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன என்றும் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார். அரசாங்கம் யாரையும் பாதுகாக்கவோ குற்றங்களை மூடி மறை…
-
- 1 reply
- 497 views
-