ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
மட்டு அரச அதிபர் ஒரு அரசியற் கைதியாக பிள்ளையான், வியாழேந்திரனிடத்தில் சிக்கியுள்ளார் - இரா.சாணக்கியன் சாடல். on Tuesday, June 01, 2021 (துதி மோகன்) மாவட்ட அரசாங்க அதிபர் தான் இந்த மாவட்டத்தில் முதல் அரசியற் கைதி. அவரை நாங்கள் முதலில் விடுவிக்க வேண்டும். அதாவது மாவட்ட அரசாங்க அதிபர் ஒரு அரசியற் கைதியாக பிள்ளையான் வியாழேந்திரனிடத்தில் சிக்கிக் கொண்டிருக்கின்றார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். கொவிட் 19 தொற்று நிலைமையை அரசாங்கம் தனது அரசியலுக்காகப் பயன்படுத்துகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இன்று மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் …
-
- 0 replies
- 261 views
-
-
இலங்கையின் புதிய நியமனங்கள் இடைக்கால நீதிக்கான பொறிமுறைகளை சீர்குலைக்கின்றன - ஜஸ்மின் சூக்கா (எம்.மனோசித்ரா) இலங்கையில் காணாமல்போனோர் அலுவலகத்திற்கு போர்க்காலத்தில் பொலிஸ் அதிபராக இருந்தவர் நியமிக்கப்பட்டு முன்னைய அரசாங்கத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இடைக்கால நீதிப் பொறிமுறை முழுமையாக இராணுவமயப்படுகின்றது. http://cdn.virakesari.lk/uploads/post/featured_image/70809/thumb_large_yasmin_sooka_se18.jpg முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஹப்பு ஆராச்சிகே ஜெயந்த சாந்த குமார விக்ரமரட்ணவின் நியமனம் கடந்த மே மாதம் 20 திகதியன்று பாராளுமன்ற உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இடைக்கால நீதி தொடர்பான முன்னணி நிபுணர் ஜஸ்மின் சூக்கா, இந்த ந…
-
- 0 replies
- 180 views
-
-
(ஆர்.யசி) நாட்டில் கைவிடப்பட்ட காணிகளை சீனாவுக்கு விற்கவோ அல்லது வேறு விதங்களில் கொடுக்கவோ நகர அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுக்கவில்லை, எனினும் கைவிடப்பட்ட சில பகுதிகளை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதென நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் பிரசாத் ரணவீர தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், நாட்டு மக்களுக்கான வீட்டுத்திட்டமொன்றை உருவாக்கிக்கொடுக்கும் விதமாக நடுத்தர வருமான மற்றும் அடிமட்ட வருமானத்தை பெரும் மக்களுக்கான வீடுகளை சலுகை அடிப்படையில் பெற்றுக்கொடுத்தல், மற்றும் நகர அலங்காரம், நடைபாதை அபிவிருத்தி என்பவற்றையும், தெரிவு செய்யப்பட்ட பின்தங்கிய நூறு கிராமங்களை தெரிவு செய்து அவற்றை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்ட…
-
- 0 replies
- 243 views
-
-
(எம்.மனோசித்ரா) இலங்கையில் முக்கியத்துவமுடைய பல கட்டடங்களை அரசாங்கம் விற்பனை செய்வதாக தெரிவிக்கப்படுகின்றமை உண்மைக்கு புறம்பானதாகும். பிரயோசனம் மிக்க வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் போது திட்டமிட்ட வகையில் அவை தொடர்பில் போலியான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், இலங்கையில் முக்கியத்துவமுடைய பல கட்டடங்களை அரசாங்கம் விற்பனை செய்வதாக தெரிவிக்கப்படுகின்றமை முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும். இலங்கையில் தற்போது உபயோகிக்கப்படாத பாழடைந்துள்ள பல கட்டடங்களை இனங்கண்டு அவற்றை மீள்புனரமைத்து அவற்றை வருமானம் ஈட்டக்…
-
- 0 replies
- 208 views
-
-
யாழில்... தடுப்பூசி போடப் பின்வாங்கும் மக்கள்- இன்று 6000 பேரே தடுப்பூசி போட்டனர்! யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று இரண்டாவது நாளாகத் தடுப்பூசி போடப்பட்ட நிலையில், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் பின்னடிப்பதாக்த தெரிவிக்கப்படுகிறது. யாழில் இன்று (திங்கட்கிழமை) இரண்டாவது நாளில் ஆறாயிரத்து 72 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கையானது, இன்று தெரிவுசெய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவுகளில் தெரிவுசெய்யப்பட்ட மக்களின் எண்ணிக்கையில் 60 வீதம் என அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவின் வழிகாட்டல்களுக்கு அமைவாக யாழ்ப்பாண…
-
- 1 reply
- 464 views
-
-
ஸ்பூட்னிக் வி தடுப்பூசியின் ஒரு டோஸ் போதுமானது – அமைச்சர் கெஹெலிய விளக்கம் அனைத்து இலங்கையர்களுக்கு ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்துமாறு நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்தார். சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் ஜெனரல் வைத்தியர் எஸ்.எம். அர்னால்ட் தலைமையிலான நிபுணர் குழுவால் இந்த பரிந்துரை வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதற்கிடையில், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் ம…
-
- 0 replies
- 392 views
-
-
எம்.வி.எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பல் தொடர்பான முதற்கட்ட விசாரணைகள் நிறைவு எம்.வி.எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பலின் கெப்டன் உட்பட குழு உறுப்பினர்கள் 7 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகள் மற்றும் வாக்குமூலம் பதிவு செய்யும் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, குறித்த விசாரணை அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எம்.வி.எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பல் தொடர்பான முதற்கட்ட விசாரணைகள் நிறைவு (adaderana.lk)
-
- 0 replies
- 180 views
-
-
இலங்கை சீனக் குப்பைகளை கொட்டும் இடம் அல்ல – அரசாங்கம் இலங்கை சீனக் குப்பைகளை கொட்டும் இடம் அல்ல என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து இன்று (செவ்வாய்க்கிமை) அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறுகையில், இலங்கை சீனாவிலிருந்து குப்பைகளை இறக்குமதி செய்கிறது என்று கூறுவது ‘நகைச்சுவையானது’ என தெரிவித்தார். இதுபோன்ற கூற்றுக்கள் வெறும் வதந்திகள் என்றும் அவர் தெரிவித்தார். இதேநேரம், எந்தவொரு நாட்டிற்கும் விற்கப்படும் சினோபார்ம் தடுப்பூசியின் விலையை சீனா தீர்மானிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். சினோபார்ம் தடுப்பூசி இலங்கைக்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறதா என இன்றைய ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கைய…
-
- 0 replies
- 230 views
-
-
யாழ் பொது நூலக வளாகத்தில் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கை யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவடைகின்றது. இந்நிலையில், நூலகம் எரிக்கப்பட்ட நினைவு நாள் நிகழ்வுகள் இன்று (01.06.2021) யாழ் மாநகர சபையினரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண பொது நூலகத்தில் இடம்பெற இருந்த நிலையில் தற்போது உள்ள பயணத்தடை காலத்தில் நினைவேந்தல் நிகழ்வினை தடுக்கும் முகமாக யாழ்ப்பாண பொலிஸாரால் யாழ் நூலக பகுதி கண்காணிக்கப்படுகிறது. யாழ்ப்பாண மாநகர முதல்வர் இன்று காலை ஒன்பது முப்பது மணி அளவில் சுடரேற்றி குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற இருந்த நிலையில் யாழ்ப்பாண பொலிஸார் யாழ் நூலகத்திற்குள் உள் நுழைய விடாது கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். …
-
- 0 replies
- 238 views
-
-
பயணக்கட்டுப்பாடுகளை தொடர்ந்து அமுல்படுத்துமாறு ஆலோசனை June 1, 2021 கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கு வரும்வரையில் இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகளை தொடர்ந்து அமுல்படுத்துமாறு விசேட வைத்தியர்களின் சங்கம் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. கொரோனாத் தொற்று நாட்டில் அதிகரிக்குமாக இருந்தால், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரிக்குமெனச் சுட்டிக்காட்டியுள்ள குறித்த சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் லக்குமார் பெர்ணான்டோ, இதனால் சுகாதாரப் பிரிவு வீழ்ச்சியடையும் எனவும் எச்சரித்துள்ளார். மேலும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தி நாட்டை மீண்டும் வழமைக்குக் கொண்டுவருவதற்கு அனைவரும் பொது இலக்கின் கீழ் செயற்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்த…
-
- 0 replies
- 233 views
-
-
விமான நிலையங்கள் திறக்கப்பட்டன – கட்டாரில் இருந்து முதல் விமானம் இலங்கையை வந்தடைந்தது இலங்கையில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் மீளத் திறக்கப்பட்டுள்ளன. பயணிகளின் வருகைக்காக விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து கட்டார் நாட்டைச் சேர்ந்த இரண்டு விமானங்கள் இன்று கட்டுநாயக்கவைவந்தடைந்தன. அதன்படி, அதிகாலை 2.15 மணிக்கு 53 பேருடன் முதல் பயணிகள் விமானம் டோஹாவில் இருந்து நாட்டை வந்தடைந்துள்ளது. மே 21 ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டுக்கு வந்த முதல் பயணிகள் விமானத்தில் இருந்தவர்களில் பலர் வெளிநாட்டு பயணிகள் என்றும் விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், 116 பேருடன் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் யுஎல் 218 வி…
-
- 1 reply
- 303 views
-
-
இலங்கையின் பணவீக்கம்... 4.5 சதவீதமாகவும், உணவு விலைகள் 9.9 சதவீதமாகவும் உயர்வு!! இலங்கையின் பணவீக்கம் 2021 ஆம் ஆண்டு மே மாதத்தில் 4.5 சதவீதமாக உயர்ந்துள்ளது என உத்தியோகப்பூர்வ தரவுகள் காட்டுகின்றன. இது கடந்த ஆண்டில் இருந்து மார்ச் மாதம் வரைக்கும் 3.9 சதவீதமாக இருந்தது என்றும் அதே நேரத்தில் உணவு விலைகள் 9.9 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) கடந்த மாதம் பதிவாகிய 138.8 புள்ளிகளிலிருந்து 1.1 சதவீதம் அதிகரித்து மே மாதத்தில் 140.3 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. இதேநேரம் ஏப்ரல் மாதத்தில் 9.0 சதவீதமாக இருந்த உணவுக் குறியீடு மே மாதத்தில் 9.9 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் விதிக்கப்ப…
-
- 0 replies
- 258 views
-
-
வடக்கில் பல்வேறு பகுதிகளிலும் மின்தடை – முக்கிய அறிவிப்பு வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஒரு மாத காலத்திற்கு கட்டம் கட்டமாக மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. அந்தவகையில் யாழில் ஜம்புகோளப்பட்டினம், காட்டுப்புலம், குசுமாந்துறை மற்றும் மாதகல், மாதகல் இறங்குதுறை ஆகிய பகுதிகளில் இன்று முற்பகல் 8 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. அத்துடன், குறித்த காலப்பகுதியில் வவுனியா மாவட்டத்தின் பம்பைமடு, செக்கட்டிப்புலம் வீடமைப்புத்திட்டம், கற்பகபுரம், மூன்று முறிப்பு, பெரியகாடு, பூவரங்குளம், சாளம்பைக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இவ்வாறு மின்தடை அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 220 views
-
-
கப்பல் ஒன்றிற்குள் ஆயுதங்களை ஏற்றிக்கொண்டிருந்த வேளை சம்பவம் – பெருமளவு ஆயுதங்கள் கடலில் காலிக்கடலில பெருமளவு ஆயுதங்கள் கடலில் வீழ்ந்துள்ளன என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. காலிகடலில் தரித்து நின்ற கப்பல் ஒன்றில் ஆயுதங்களை ஏற்றிக்கொண்டிருந்தவேளை இந்த சம்பவம் இடம்பெற்றது என கடற்படை பேச்சாளர் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார். செங்கடல் பகுதிக்கு செல்லவிருந்த கப்பலில் ஆயுதங்களை இலங்கை கடற்படையினர் ஏற்றிக்கொண்டிருந்தவேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. …
-
- 4 replies
- 802 views
-
-
30 மே 2021 பட மூலாதாரம்,FACEBOOK/BAKEERMARKAR படக்குறிப்பு, தேரருடன் நாடாளுமுன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் இலங்கை நாடாளுமன்றத்துக்கு முதன் முதலாகத் தெரிவு செய்யப்பட்ட பௌத்த பிக்கு, தென் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பத்தேகம சமித தேரர், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று தனது 69ஆவது வயதில் காலமானார். மாத்தறையிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடதுசாரிக் கட்சியான லங்கா சம சமாஜக் கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்தி, காலி மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்குத் தெரிவான…
-
- 4 replies
- 877 views
-
-
தேசியப் பட்டியலில் ரணில் நாடாளுமன்றம் செல்கின்றார் – கட்சி மத்திய குழு இன்று முடிவு 15 Views ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினராக, கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நியமிப்பதற்கு அக்கட்சியின் மத்திய செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது. ஐ.தே.கவின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று சிறிகொத்தவில் நடைபெற்றது. இதன்போது ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை கட்சி தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன முன்மொழிய, முன்னாள் எம்.பியான ஆனந்த குலரத்ன வழிமொழிந்தார். இப்பெயர் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி ரணில் விக்கிரமசிங்கவின் பெயர், கட்சியின் பொதுச்செயலாளரால் தேர்தல் ஆணைக்குழுவுக…
-
- 0 replies
- 205 views
-
-
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 50,000 தடுப்பூசிகள் – மக்களுக்கு ஏற்றும் பணி இன்று ஆரம்பம் 2 Views மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்காக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு முதல் கட்டமாக 50 ஆயிரம் சினோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். தடுப்பூசி ஏற்றும் திட்டம் இன்று தொடக்கம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். மேலும், சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் வழிகாட்டல்களுக்கு அமைவாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கிராம சேவையாளர் பிரிவு ரீதியாக இனங்காணப்பட்ட கோவிட் 19 நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் சனத்தொகையின் …
-
- 13 replies
- 1.4k views
-
-
என் கருத்து, சிங்கள நண்பர்களுக்கு புரிந்துள்ளன, தமிழ் பேசும் “அறிவாளிகளுக்கு” புரியல’ – மனோ 25 Views தமிழ் முற்போக்கு கூட்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கடந்த வாரம், “நாட்டை 10 வருடம் தாருங்கள் முன்னேற்றி தருகிறோம்” என்ற தலைப்பில் தனது கருத்துக்களை வெளியிட்டுருந்தார். அந்த விடயம் தமிழ் ஊடகங்களில் முக்கிய பேசு பொருளாக காணப்பட்டது.இந்த நிலையில் மனோ கணேசன், கடந்த வாரம் தான் வெளியிட்ட இரண்டு அறிக்கைகள் தொடர்பில் இன்று மீண்டும் ஒரு அறிக்கை பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “நாட்டை 10 வருடம் தாங்கோ..! முன்னேற்றி 11ம் வருடத்தில் தாறோம்..!” என்றும் கூறினேன். இவை பல சிங்கள நண்பர்களுக்கு புரி…
-
- 0 replies
- 493 views
-
-
நாட்டின் மொழி கொள்கையை... பின்பற்ற வேண்டும் – சீன நிறுவனங்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தல் நாட்டின் மொழி கொள்கையை பின்பற்றுமாறு கொழும்பு துறைமுக நகர நிறுவனத்திற்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த பிரச்சினை குறித்து உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளதாகவும் இது கவலைக்குரிய விடயம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ஆங்கிலம், சீன மற்றும் சிங்களத்துடன் அடையாளப்படுத்தப்பட்ட பெயர் பலகைகள் காரணமாக கொழும்பு துறைமுக நகர நிறுவனம் சமூக வலைத்தளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகியது. கொழும்பு துறைமுக நகரம் கட்டுமானத்தில் உள்ளது என்றும் தள ஊழியர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பார்வையாளர்களின் நலனுக்காக அடையாள பெயர் பலகைகளும் ஒப்பந்தக்…
-
- 4 replies
- 478 views
-
-
மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வவுனியாவில் சோதனை சாவடிகளை அமைத்துள்ள இராணுவம் வவுனியா நகர் பகுதிகளில் மக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளமையினால், அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு, வவுனியா நகரின் பிரதான வீதிகளில், புதிய சோதனை சாவடிகளை இராணுவத்தினர் அமைத்துள்ளனர். மேலும் வவுனியா நகரிற்கு செல்லும் பிரதான நான்கு வீதிகளிலும் கண்காணிப்பு நடவடிக்கையில், இன்று (திங்கட்கிழமை) காலை முதல் இராணுவம் ஈடுபட்டு வருகின்றது. அத்துடன் வவுனியா ஹொரவப்பொத்தனை வீதி, மன்னார் வீதி, குருமன்காடு, ஏ9 வீதி தாண்டிக்குளம், ஈரட்டை, பூந்தோட்டம் ஆகிய பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதேவேளை ரோன் கமரா ஊடாகவும் வவுனியாவிலுள்ள பெரும்பாலான பகுதிகளில்…
-
- 0 replies
- 366 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு ஆடைத்தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூடுமாறு பிரஜைகள் குழு கோரிக்கை கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கிவரும் ஆடைத்தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூடுவது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றம் பிராந்திய சுகாதார சேவையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது. கிளிநொச்சி ஊடக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது பிரஜைகள் குழு சார்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சின்னராசா ஜீவநாயகம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கி வருகின்ற இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளிலும் ஆயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் தொழில் …
-
- 0 replies
- 265 views
-
-
சினோபோர்ம் தடுப்பூசி கொள்வனவில் மோசடியா?? – மரிக்கார் வெளிப்படுத்திய உண்மை…! சினோபோர்ம் தடுப்பூசிகளை பங்களாதேஷை விட அதிக விலைக்கு வாங்குவதன் மூலம் அரசாங்கத்திற்கு அதிக செலவு ஏற்படுவதாகவும் இது மத்திய வங்கி மோசடியைவிட அதிகம் என்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் குற்றம் சாட்டினார். ஒரு தடுப்பூசி 15 டொலர் என்ற அடிப்படையில் 210 மில்லியன் டொலர் செலவில் 14 மில்லியன் டோஸ் சீனாவின் சினோபோர்ம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. எவ்வாறாயினும், பங்களாதேஷினால் ஒரு தடுப்பூசி 10 டொலர் அல்லது 5 டொலர் குறைவாக இதேபோன்ற அளவை அதாவது 14 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை வழங்க முடிந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறு ஏன் வ…
-
- 1 reply
- 367 views
-
-
(எம்.மனோசித்ரா) கொழும்பு துறைமுகத்திற்கு 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிடப்பட்டிருந்த எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் தீப்பரவல் அதிகரிக்குமாயின் அதிலுள்ள எரிபொருள் கடலில் கலப்பதை தடுக்க முடியாது. தற்போது நிலவும் காலநிலை காரணமாக உபகரணங்களைப் பயன்படுத்தி எரிபொருள் கடற்பரப்பில் பரவுவதை தடுப்பதும் சிரமமாகும். எனவே எரிபொருள் கசிவு ஏற்பட்டால் அதனை உடனுக்குடன் தூய்மைப்டுத்துவதே தற்போதுள்ள ஒரே மாற்று வழி என்று தேசிய கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹன்டாபுர தெரிவித்தார். இதேவேளை தீப்பரவலால் நைதரசன் வாயு வெளியேறியுள்ளமையால் அமில மழை பெய்யக் கூடிய வாய்ப்புள்ளதால் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும். அத்தோடு கப்பலிலிருந்து விழுந்து கரையொ…
-
- 3 replies
- 399 views
-
-
தோட்ட தொழிலார்களுக்கு உடன் தடுப்பூசியை வழங்குங்கள் அந்நிய செலவாணியை பெற்றுத் தருகின்ற பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கும் உடனடியாக தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுங்கள் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், தற்பொழுது நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா தொற்று மிகவும் வேகமாக பரவிவருகின்றது. குறிப்பாக பெருந்தோட்ட பகுதிகளிலும் ஆடைத் தொழிற்சாலைகளிலுமே தொற்றாளர்கள் அதிகமாக இனம் காணப்படுகின்றார்கள். தொற்றாளர்கள் பலர் தங்களுடைய வீடுகளிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதற்கு காரணம் தொற்றாளர்களை அனுமதிப்பதற்க…
-
- 0 replies
- 211 views
-
-
கொரோனா காலத்தில் ஆதிவாசிகள் வாழ்வாதாரத்தில் பாதிப்பு 34 Views மஹியங்கனை பகுதியில் வசிக்கும் ஆதிவாசிகள் அடிப்படை உணவு வசதிகளின்றி சிரமத்தினை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். ஆதிவாசிகளின் தற்போதைய நிலவரம் தொடர்பாக ஆதிவாசிகளிடம் வினவிய போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்கள். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், மஹியங்கனை பகுதியில் 400 குடும்பங்களை சேர்ந்த 2500 ஆதிவாசி அங்கத்தவர்ள் வாழ்ந்து வருகின்றோம். நாட்டில் தற்போது ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நோயின் தாக்கம் எமக்கு இல்லை. ஆனால் ஆதிவாசிகள் வாழும் குறித்த பகுதிக்கு, கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக சுற்றுலா பயணிகள் அவ் இடங்களுக்கு வருவதில்லை. …
-
- 0 replies
- 269 views
-