ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
தொல்லியல் திணைக்களத்தால் கிளிநொச்சியில் குறிவைக்கப்படும் மற்றுமொரு சிவனாலயம்..! கிளிநொச்சியில் அமைந்துள்ள உருத்திர புரீச்சகம் சிவனாலய வளாகத்தில் தொல்பொருள் ஆய்வுக்குரிய ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. அதன்படி எதிர்வரும் 23 ஆம் திகதி குறித்த பகுதியில் அகழ்வாராச்சி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த கோவில் வளாகம் இன்று (செவ்வாய்க்கிழமை) துப்பரவு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த கோவில் அமைந்தள்ள வளாகத்தில் பௌத்த சின்னங்கள் காணப்புடுவதாக ஏற்கனவே தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலயைில் குருத்தூர் மலை விவகாரத்தின் பின்னர் குறித்த பகுதிக்கு பௌத்த துறவி ஒருவரும், பொலிஸாரும் சென்று பார்வையி…
-
- 0 replies
- 1k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வளங்களை சில அரசியல் வாதிகள் சூறையாடுவதற்கு சதி செய்து வருகின்றனர். இதை தடுத்து நிறுத்த மக்களை அணி திரளுமாறு முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம், வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா .துரைரெத்தினம் இன்று (16) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சுகாதாரம், கல்வி இரண்டையும் ஒரு சிலர் பணத்திற்காக விற்பதையும், கனியவளங்கள், உல்லாச துறைக்கான இடங்கள், ஆழ்கடல்மீன்பிடி, மணல் அகழ்வு, கால்நடைகள் கொள்வனவு, புதிய மதுபான சாலைகள் திறத்தல். அத்தோடு, அரசவளமான காணிகளை கையகப்படுத்துதல், மகாவலிக் காணி, வனவிலங்கு திணைக்…
-
- 0 replies
- 276 views
-
-
தலைமன்னாரில் கோரம்: 10 பேர் காயம் தலைமன்னாருக்கு அருகில் ரயிலுடன் பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://static2.tamilmirror.lk/assets/uploads/image_42d2996885.jpg Tamilmirror Online || தலைமன்னாரில் கோரம்: 10 பேர் காயம் மன்னாரில் ரயிலுடன் மோதி பேருந்து விபத்து – 20இற்கும் மேற்பட்டோர் காயம் http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/IMG-20210316-WA0009.jpg மன்னார் – தலைமன்னார் ரயில் கடவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 2 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் 20இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என அங்…
-
- 4 replies
- 602 views
-
-
கவனயீர்ப்புப் போராட்டங்கள்: பொத்துவில் முதல் பொலிகண்டி வரை மக்கள் இயக்கம் அழைப்பு 15 Views தமிழ் இனத்தின் மீதான இனவழிப்புக்கு சர்வதேச நீதி கோரி தமிழர் தாயகமான வடக்கு,கிழக்கில் தொடர்ச்சி யாக நடைபெற்று வரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டங்களுக்கு வலுச் சேர்க்கும் வகையில் யாழ்.நல்லூரிலும், மட்டக்களப்பிலும் முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்புப் போராட்டங் களுக்கு ஆதரவளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை (P2P) மக்கள் பேரெழுச்சி இயக்கம் இந்த அழைப்பை விடுத்துள்ளது. இது தொடர்பில் அந்த இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், …
-
- 2 replies
- 456 views
-
-
கடந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் ரணிலுக்கு ஐ லவ்யூ சொன்னவர்கள் தற்போது வீரவசனம் பேசுகின்றார்கள். இவ்வாறு ரணிலுக்கு ஐ லவ்யூ சொல்லியதால் பயன் ஒன்றுமேயில்லை என மாவட்ட இராஜாங்க அமைச்சர் ச.வியாமேந்திரன் தெரிவித்தார். நீர்ப்பாசன செழுமை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு போரதீவுப் பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புதுமுன்மாரிசோலையில் பதினெட்டு மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள அணைக்கட்டுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி, தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அபிவிருத்தி குழுவின் உப தலைவர் ப.சந்திரகுமார் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ச.சசிகரன் மற்றும் பொறியிலாளர்கள் கலந்து கொண்ட…
-
- 0 replies
- 239 views
-
-
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். http://cdn.virakesari.lk/uploads/post/featured_image/81858/thumb_asath.jpg சட்ட மா அதிபரின் ஆலோசனையின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அசாத் சாலி கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அசாத் சாலி கைது | Virakesari.lk
-
- 0 replies
- 501 views
-
-
பசில் ராஜபக்ஷவுக்கு அதிகாரப்பகிர்வு தொடர்பான சரியான மேம்பட்ட விளக்கமிருப்பதாக நான் கருதவில்லை- சுமந்திரன் பசில் ராஜபக்ஷவிற்கு அதிகாரப்பகிர்வு தொடர்பான சரியான மேம்பட்ட விளக்கமிருப்பதாக நான் கருதவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். SLVLOGக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார் பேட்டியில் அவர் தெரிவித்துள்ளதாவது; …
-
- 0 replies
- 235 views
-
-
புர்கா தடை உள்ளிட்ட ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்த விடயங்கள் ஏப்ரல் மாதத்திற்குள் செயற்படுத்தப்படும்: அரசாங்கம் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து யோசனைகளும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதிக்குள் செயற்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, மத்ரஸா பாடசாலை மற்றும் புர்கா தடை, அடிப்படைவாதத்துக்கு எதிரான புதிய சட்டங்கள் உருவாக்கல், விசாரணை அறிக்கைகளை நாளாந்தம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்ற கட்டமைப்பில் விசேட பொறிமுறையை ஏற்படுத்தல், அடிப்படைவாத செயற்பாடுகளை கண்காணிக்க அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் விசேட பிரிவை நிறுவல் ஆகிய விடயங்கள் குறித்து துரித நடவடிக்கைகளை முன்னெடுக்குமா…
-
- 1 reply
- 279 views
-
-
விமானத்தின் பிஸ்னஸ் கிளாஸ் இருக்கைக்காக காத்திருந்தார் மைத்திரி – பொன்சேகா சாடல் http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2019/06/sarath-fonseka-maithripala.jpg ஈஸ்டர் தாக்குதல்களைத் தொடர்ந்து சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்புவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வணிக வகுப்பு இருக்கைக்காக (business class) காத்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார். சிங்கப்பூரிலிருந்து மதியம் 3 மணிக்கும் இரவு 9 மணிக்கும் இரண்டு விமானங்கள் இலங்கைக்கு வந்திருந்த போதும் முன்னாள் ஜனாதிபதி அந்த இரண்டிலும் நாடு திரும்பாமல் சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானத்தில் காலை 12 மணிக்கு புறப்பட்டதாக கூறினார். …
-
- 0 replies
- 296 views
-
-
மியன்மார் இராணுவ ஆட்சியோடு இலங்கை அரசு உறவாட வேண்டாம் – மட்டக்களப்பில் போராட்டம் மியன்மார் இராணுவ ஆட்சியோடு இலங்கை அரசு உறவாட வேண்டாம் எனவும் மியன்மாரில் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாக்குமாறும் கோரி மட்டக்களப்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு – காந்தி பூங்காவில் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண பொது அமைப்புகள், ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுத்தன. இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த சிவில் அமைப்புகள், போரினால் பாதிக்கப்பட்ட சமூகப்பிரிவினர், பெண்கள் அமைப்புகள் மற்றும் இலங்கையின் வடக்கு…
-
- 0 replies
- 266 views
-
-
ஆட்சி மாற்றமே நோக்கம் தமிழர்களுடைய நீதியல்ல – பிரேரணை குறித்து உருத்திரகுமாரன் 30 Views சிறிலங்காவில் ஆட்சி மாற்றத்தினை நோக்காக கொண்டே பிரித்தானியா தலைமையிலான கூட்டு நாடுகளால், ஐ.நா மனித உரிமைச்சபையில் சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு அமைந்துள்ளதென தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், இது தமிழர்களது நீதிக்கானதல்ல எனவவும் தெரிவித்துள்ளார். தீர்மான வரைவின் 9வது சரத்தினை சுட்டிக்காட்டி, இது நீதிவிசாரணையும் பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறையினை சிறிலங்காவிடமே கையளிப்பதாக அமைகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2014ம் ஆண்டு தீர்மானம் வழங்கிய ஆணைக்கமைய, ஐ.நா ஆணையாளர் அலுவலகம் மேற்கொண்ட விசாரணை…
-
- 0 replies
- 241 views
-
-
பிள்ளையான் மற்றும் , தம்பிகளின் விசமத்தனமான பொய்ப் பிரசாரத்திற்கான உண்மைப் பதில் ! ஆவணங்கள் இணைப்பு விசமத்தனமானதும் , வெறும் பொய்யானதுமான பிரச்சாரங்கள் மூலமாக மக்களை ஏமாற்றும் செயற்பாட்டினை MPகளும் சில தம்பிகளும் , அரசியல் தேவைக்காக செய்து வருவதை அறிய முடிகிறது . அண்மையில் வவுணதீவுப் பிரதேசத்திலுள்ள காலபோட்ட மடுவில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட சந்திரகாந்தன் பா. உ மூலமாக பிரசார நோக்கில் தவறான விடயமொன்று கூறப்பட்டுள்ளது . அது பற்றி அக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என்னிடம் கூறியிருந்தார்கள் . மேலும் அப்பேச்சு நேரலை மூலமாகவும் அம்பலமாகியது. அதாவது முன்னாள் பா.உ சிறிநேசன் சொந்தவூருக்கான வீதியையே அமைக்கவில்லை இவர்கள் எப்படி மாவட்டத்தை அபிவிருத்தி செ…
-
- 0 replies
- 281 views
-
-
தமிழர்களுக்கு தீர்வு வழங்க முடியுமென்றால் பசில் ராஜபக்ஷவை ஆதரிக்கத் தயார் – சுமந்திரன் இலங்கையில் 2024ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பசில் ராஜபக்ஷவால் தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் தேர்தல் விஞ்ஞாபனம் முன்வைக்கப்படுமாக இருந்தால் அவரை ஆதரிக்கத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார் . கொழும்பு சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், “கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தை விடவும் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில்…
-
- 1 reply
- 300 views
-
-
நிந்தவூரில் 7 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான கள்ள நோட்டுக்களுடன் மூவர் கைது! நிந்தவூரில் 7 இலட்சத்தி 50 ஆயிரத்திற்கும் அதிகமான கள்ளநோட்டுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாழைச்சேனை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய அக்கரைப்பற்று பொலிஸார் மூவரையும் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைதானவர்கள் நிந்தவூர் பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கி இருந்து இவ்வாறான சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளனர். கைதாகிய குறித்த சந்தேக நபர்கள் தங்கிய வீட்டில் இருந்து பிறின்டர் மற்றும் கணனி உள்ளிட்ட 5000 ரூபா நோட்டு பணம் அச்சிடும் தாள்கள் அச்சிடப்பட்ட பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன. மேலும் இவ்வாறு கைதான நபர்கள் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை…
-
- 0 replies
- 309 views
-
-
15 பில்லியனுக்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்திய சீனி மோசடி – விசேட விசாரணைகள் ஆரம்பம் சீனி மோசடி தொடர்பாக விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி தொடர்பான ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, விசாரணைகளுக்காக குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, இந்த விடயம் தொடர்பில் விசேட கணக்காய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவிக்கின்றது. இதற்காக திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்றை ஈடுபடுத்தியுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். சீனி இறக்குமதியின்போது 15.9 பில்லியன் ரூபாய் வரி மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உற…
-
- 0 replies
- 445 views
-
-
நாட்டுக்குள் வரும் இஸ்லாமிய புத்தகங்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெற வேண்டும் -உலமா கட்சி Monday, March 15, 2021 | 1:57:00 PM | 0 comments . நாட்டின் தேசிய பாதுகாப்பு கருதி நாட்டுக்குள் வரும் இஸ்லாமிய புத்தகங்கள் பாது காப்பு அமைச்சின் அனுமதியை பெற வேண்டும் என்ற சட்டத்தை உலமா கட்சி வரவேற்றிருப்பதுடன் இஸ்லாம், இஸ்லாம் அல்லாத அனைத்து புத்தகங்களுக்கும் பாதுகாப்பு தரப்பின் அனுமதி பெறப்படுவதே நிலையான தேசிய பாதுகாப்புக்கு உகந்தது என தெரிவித்துள்ளது. இது பற்றி உலமா கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்ததாவது நாட்டுக்குள் இஸ்லாமிய புத்தகங்கள் கொண்டு வர முடியாது என பாதுகாப்பு அமைச…
-
- 1 reply
- 565 views
-
-
ஒரு இலட்சம் காணித்துண்டு விவகாரமே, ஆவணங்கள் மாற்றப்பட்டமைக்கு காரணம்- மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் 29 Views இளம்தொழில் முயற்சியாளர்களிற்கு வழங்கப்படுவதாக சொல்லப்படும் காணித் துண்டுகள் தமிழர்களிற்கு செல்லக்கூடாது என்பதற்காகவே காணி ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். அவர்களால் வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் இன்று முன்னெடுக்கப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர், தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், ‘நிலைமாறு கால நீதியின் பிரகாரம் காணிகள் விடுவிக்கப்படுவதாக அரசாங்கத்தால் அறிவிக…
-
- 0 replies
- 441 views
-
-
பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தில் புதிய ஒழுங்கு விதிகள் உள்ளடக்கம் அடிப்படைவாதச் செயற்பாடுகள் தொடர்பாகச் சரணடையும் அல்லது கைது செய்யப்படும் நபர்களுக்குப் புனர்வாழ்வளிக்கும் சட்டவிதிகள் உள்ளடக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) ஒழுங்குவிதிகள் அடங்கிய வர்த்தமானி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் மார்ச் 12 ஆம் திகதி வெளியிடப்பட்டது. இதன்படி, பொலிஸ் அதிகாரியல்லாத எவரேனும் ஒருவரிடம் சரணடையும் ஒருவர் அண்மையிலுள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் 24 மணித்தியாலங்களுக்குள் ஒப்படைக்கப்பட வேண்டும். விசாரணை நடத்துவதற்காகச் சம்பந்தப்பட…
-
- 0 replies
- 286 views
-
-
கடந்த 24 மணித்தியாலங்களில் 11 விமானங்கள் மூலம் 728 பயணிகள் வருகை (சி.எல்.சிசில்) கடந்த 24 மணி நேரத்தில் இன்று காலை 8.30 வரையான காலப்பகுதியில் 11 பயணிகள் விமானங்கள் மூலம் 728 பயணிகள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இவர்களில் 316 பேர் கட்டாரிலிருந்து இரு விமானங்களில் நாட்டை வந்தடைந்தனர். இதேவேளை குறித்த காலப்பகுதியில் 924 பயணிகள் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளிலிருந்து 100 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Thinakkural.lk
-
- 0 replies
- 303 views
-
-
மலையகத்தில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவேன் நான் அரசியல் செய்யவில்லை. நிர்வாகத்தையே முன்னெடுக்கின்றேன். எனவே, மலையகத்தில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவேன் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் கீழ் இயங்கும் தொண்டமான் தொழில் பயிற்சி நிலையத்தினுடைய எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான சந்திப்பொன்று அட்டன் தொண்டமான் தொழில் பயிற்சி நிலையத்தில் நேற்று (14) இடம்பெற்றது. இதன் போது திறன்கள் அபிவிருத்தி, தொழில் கல்வி ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர் …
-
- 0 replies
- 331 views
-
-
போராட்டத்துக்கு அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் செயற்படுவதாக உறவுகள் குற்றச்சாட்டு சிவிலுடையில் வருகைதந்த பொலிஸார், தமது விபரங்களை பதிவு செய்ததுடன் தமது போராட்டத்திற்கு அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதாக மட்டக்களப்பில் நீதிகோரிய போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். சர்வதேசத்திடம் நீதிகோரி சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம், 13வது நாளாகவும் இன்றும் (திங்கட்கிழமை) மட்டக்களப்பு மாமாங்கேஸ்ரர் ஆலயத்திற்கு முன்பாக நடைபெற்றது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அன்னை பூபதி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீர்த்த…
-
- 0 replies
- 198 views
-
-
‘இலங்கையை சர்வதேச நீதிமன்றில் பாரப்படுத்து’ – உணவு தவிர்ப்பு போராட்டம் 16வது நாளாகவும் தொடர்கிறது இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 16வது நாளாக இன்றும் (திங்கட்கிழமை) தொடர்கின்றது. நீதி வேண்டிய இந்த போராட்டம் நல்லூர் – நல்லை ஆதீனம் முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. குறித்த போராட்டத்திற்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் பிரதிநிதிகள், சிவில் அமைப்பினர், மத தலைவர்கள் என பலரும் தமது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர். ‘இலங்கையை சர்வதேச கு…
-
- 0 replies
- 194 views
-
-
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பேரணிக்கு தமிழரசுக் கட்சி ஆதரவு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வடக்கு, கிழக்குக் பல்கலைக்கழக மாணவர்களால் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பேரணிக்கு ஆதரவளிப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.தமிழ் தேச மக்கள் இலங்கையிலும் சர்வதேச அரங்கிலும் ஒரே குரலில் உயர்ந்த நிபுணத்துவப் பங்களிப்புடன் ஒன்றுபட்ட கட்டமைப்பில் செயற்படத் திடசங்கற்பத்துடன் உறுதிகொள்ள வேண்டும்.அந்தவழியில் இடம்பெறும் அனைத்து ஜனநாயகச் செயற்பாடுகளையும் ஆதரிப்பதுடன் ஈடுபடுவதும் இன்று வேண்டியதாகும். எனவே, வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பேரணிக்கு, பல்கலைக்கழக மாணவர்களின் அழைப்பினை ஏற்று அப்பேரணி வெற்றிபெற நாமனைவரு…
-
- 1 reply
- 545 views
-
-
சிறீலங்காவுக்கு எதிராக செயற்பட மாட்டோம் – இந்தியா 2 Views ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிறீலங்கா அரசுக்கு எதிராக தாம் எதனையும் செய்யப்போவதில்லை என இந்தியா தெரிவித்துள்ளதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்தியா வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்குமா என்பதை தெரிவிக்கவில்லை. ஆனால் சிறீலங்காவுக்கு எதிராக செயற்படப்போவதில்லை என மட்டும் தெரிவித்துள்ளது. தீர்மானம் தொடர்பான இணைக்குழு நாடுகளின் கலந்துரையாடல்களிலும் இந்தியா கலந்துகொள்ளவில்லை. ஆனால் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நிறைவேற்றுமாறு தொடர்ந்து கூறி வருகின்றது. கொழும்பு துறைமு…
-
- 0 replies
- 319 views
-
-
ராஜபக்ஷ குடும்பத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்த பல்வேறு தரப்புகள் முயற்சி – ஜனாதிபதி ராஜபக்ஷ குடும்பத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்த பல்வேறு தரப்புகளும் முயற்சிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “மஹிந்த ராஜபக்ஷ என்பவர், எமது நாட்டில் மாத்திரமல்ல முழு ஆசியாவையும் எடுத்துக்கொண்டால், அவரே சிரேஷ்ட தலைவர் என்பது எமக்கு தெரியும். அவர் அரசியல் அனுபவமிக்கவர். அவரது தலைமைத்துவத்திடம் எந்த தலைவரும் நெருங்க முடியாது. அத்தோடு எமது வெற்றியில் பிரதான சாதகம் மஹிந்த ராஜபக்ஷ என்ற கதாபாத்திரம்தான். அத்துடன் பசில் ராஜபக்ஷ கட்சியை உருவாக்கி, அரசாங்கத்…
-
- 0 replies
- 501 views
-