Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில்... பொறுப்புக்கூறல் பொறிமுறை அவசியம் – அமெரிக்கா, கனடா வலியுறுத்து இலங்கையில் நீதிவழங்கலுக்கு பொறுப்புக்கூறல் பொறிமுறை அவசியம் என அமெரிக்கா மற்றும் கனடா ஆகியன தனித்தனியாக வலியுறுத்தியுள்ளன. யுத்தம் நிறைவடைந்து 12 ஆண்டுகள் கடந்துள்ளமையை குறிக்கும் வகையில் ஐக்கிய அமெரிக்காவின் வெளிவிவகார குழு தமது டுவிட்டர் பதிவு ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளது. அப்பதிவில், யுத்தம் நிறைவடைந்து 12 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், உயிரிழந்தோரை நினைவு கூருவதுடன், அர்த்தமுள்ள நீதியும், பொறுப்புக்கூறலும் அவசியமாகும் என குறிப்பிட்டுள்ளன. மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சட்டங்களில் இருந்து தப்பிக் கொள்கின்ற நிலைமை தொடர்கின்றமையானது, நல்லிணக்க முயற்சிகளை பெரிதும் பாதித்துள்ளது…

  2. “புதிய அரசியலமைப்பு மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களில் உள்நாட்டிற்கும், சர்வதேசத்திற்கும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தல்” (ஆர்.ராம்) இலங்கைத்தீவில் சரித்திர ரீதியாக வடகிழக்கு பிரதேசத்தில் வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் சுயநிர்ணய உரித்தைக் கொண்டவர்களாக உள்ள நிலையில் ஒருமித்த நாட்டினுள் அவர்களுக்கான உள்ளக சுயநிர்ணத்தை மறுத்தால் விளைவுகள் பாரதூரமாக இருக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு தேசிய இனப்பிரச்சின…

  3. மே18ல் கவனத்தைப்பெற்ற ஐ.நா பிரதிநிதியின் முள்ளிவாய்க்கால் பேருரை : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தமிழினப்படுகொலையினை நினைவேந்தும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளில், இனப்படுகொலைகளைத் தடுப்பதற்கான ஐ.நாவின் முன்னாள் சிறப்பு பிரதிநிதியின் அடமா டியங்கின் முள்ளிவாய்க்கால் பேருரை பலரது கவனத்தைப் பெற்றுள்ளது. செனகல் நாட்டைச் சேர்ந்தவரான சட்டநிபுணர் அடமா டியங்க், 2012ம் ஆண்டுஐ. நாவின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீன் மூனினால் இனப்படுகொலை களைத் தடுப்பதற்கான விசேட ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்தவர். செனகலில் நீதி மற்றும் சட்டத் துறைகளில் நீண்ட காலம் பொறுப்புக்களை வகித்து வந்த இவர், 2001 ஆம் ஆண்டு முதல் றுவாண்டாவுக்கான…

    • 0 replies
    • 286 views
  4. கொரோனா வைரஸ் தொற்றினை விரைவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது தொடர்பாக சி.யமுனாநந்தா வழங்கிய ஆலோசனை! 0 கொரோனா நோயாளி ஒருவரிடமிருந்து சுமார் 500 பேருக்குத் தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளமையால், மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மிகவும் அவதானமாக செயற்படுவது அவசியமென வைத்தியர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் சி.யமுனாநந்தா மேலும் கூறியுள்ளதாவது, “வடக்கில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம…

    • 0 replies
    • 354 views
  5. இலங்கையை பொறுப்புக்கூறவைக்க சர்வதேச பொறிமுறையை ஏற்படுத்துமாறு வலியுறுத்தல் அமெரிக்க காங்கிரசில் கட்சிசார்பற்றமுறையில் தீர்மான மொன் று ச மர்ப்பிப்பு * ஐ. நா . வின் 3 பிரதான அமைப்புகளுடன் செயற்படுமாறு வாஷிங்டனிடம் கோரிக்கை —————- இலங்கையில் யுத்தம் முடிவுக்குகொண்டுவரப்பட்ட 12 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் முகமாக இலங்கையில் ‘பொறு ப்பு கூறலுக்கான செயற்பாட்டுத்திறன்வாய்ந்த சர்வதேசப்பொறிமுறை” மற்றும் ”நிரந்தரமான அரசியல் தீர்வு ”ஆகியவற்றுக்கு அழைப்பு விடுக்கும் கட்சிசார்பற்ற தீர் மானமொன்றை அமெரிக்க காங்கிரசில் பெண் உறுப்பினரான டெபோரா ரோஸ்அறிமுகப்படுத்தியுள்ளார். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் உயிரிழந்த முள்ளிவாய்க்…

  6. கருப்பு பூஞ்சைக்குப் பின் வெள்ளை பூஞ்சை வருகிறது கொரோனா, கருப்பு பூஞ்சை நோய் பரவலை தொடர்ந்து தற்போது வெள்ளை பூஞ்சை நோய் பரவி வருவதாக மருத்துவத்துறையினர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2ஆவது அலை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தற்போது கருப்பு பூஞ்சை என்ற நோய் பரவத் தொடங்கியது. ராஜஸ்தான், தெலங்கானா போன்ற மாநிலங்கள் இதனை பெருந்தொற்று நோயாக அறிவித்துள்ளன. கருப்பு பூஞ்சை நோயை தமிழக அரசும் தொற்று நோயாக அறிவித்துள்ளது. கருப்பு பூஞ்சை ஒடிசா அரசு, கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோய்கள் சட்டம் 1897 இன் கீழ் அறிவிக்கப்பட்ட ஒரு தொற்று நோயாக பட்டியலில…

    • 0 replies
    • 401 views
  7. பொதுமக்கள் அலட்சியமாக செயல்படுவதை காண முடிகின்றது பொதுமக்கள் அலட்சியமாக செயல்படுவதை காண முடிவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார். யாழ் மாவட்ட கொரோனா நிலைமை தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் முகமாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் தற்போது கொரோனா நிலவரம் சற்று அதிகரித்து செல்லும் நிலையை காணப்படுகிறது. பொதுவாக வடமாகாணத்தில் அதிகரித்து செல்லும் போக்கு காணப்படுகிறது. ஆகவே நாம் அனைவரும் இச் சந்தர்ப்பத்தில் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய காலகட்டமாகும். பொதுமக்களை இக்கொடிய தொற்றிலிருந்து பாதுகாக்கவே இவ் பயண கட்டுப்பாடுகள், தடைகள் விதிக்கப்பட்டன. ஆனால் பொதுமக்கள் அலட்சியம…

  8. இளைஞர் வணிகக் கிராமம் திட்டத்துக்கு கிளிநொச்சி தெரிவு: ஜனாதிபதிக்கு அமைச்சர் டக்ளஸ் நன்றி தெரிவிப்பு! இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் எண்ணத்தில், பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இளைஞர் வணிகக் கிராமம் நிகழ்ச்சித் திட்டத்துக்கு கிளிநொச்சி மாவட்டம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பை வழங்கக் கூடிய குறித்த திட்டத்தின் முதலாவது கட்டத்திலேயே கிளிநொச்சியை தெரிவு செய்தமைக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நன்றி தெரிவித்துள்ளார். இலங்கையின் 25…

  9. அரசாங்கத்தின் உள்ளகப்பொறிமுறை தோல்வி - சர்வதேச மன்னிப்புச்சபை (நா.தனுஜா) போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை உறுதிசெய்வதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட உள்ளகப்பொறிமுறை தோல்வியடைந்திருப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது. http://cdn.virakesari.lk/uploads/medium/file/94523/amnesty_international_l_new.jpg இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச்சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் நடைபெற்ற போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மை, நீதி, இழப்பீடு என்பவற்றை வழங்குவதுடன் மீள்நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் நாம் கடந்த 12 வருடகாலமாக வலியுறுத்தி வருகின்றோம். எனினும் இதற்காக முன்னெடுக்…

  10. நாட்டின்... அனைத்துப் பாகங்களையும், சீனா கைப்பற்றும் – சாணக்கியன் எச்சரிக்கை! நாட்டின் அனைத்துப் பாகங்களையும் சீனா கைப்பற்றும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “உலகின் பல்வேறு நாடுகளுக்கு நுழைந்த சீனா, அந்தந்த நாடுகளிலுள்ள தொழிற்றுறைகளைக் கைப்பற்றிவிட்டது. இந்நிலையில், இலங்கைக்கு உள்ள அமைவிடத்தையே கைப்பற்றப் பார்க்கிறது. மாகாண சபைகளுக்கூடாக அதிகாரங்களைப் பிரித்துக் கேட்கும் தமிழர்களை புலிகள் என்கிறார். இஸ்லாமியர்களை அடிப்படைவாதிகள் என்கிறார்கள். …

  11. கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை, இலங்கையில் உற்பத்தி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை இலங்கையில் உற்பத்தி செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. விசேட அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அமைச்சரவை பத்திரத்தை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி முன்வைத்த நிலையில், இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரச மருந்தாக்க கூட்டுத்தாபனமும் சிநோவெக் பயோடெக் மற்றும் கெலுன் லைஃப் சயன்ஸ் தனியார் கம்பெனியும் இணைந்து கொரோனா தடுப்பு மருந்தை இலங்கையில் உற்பத்தி செய்வது தொடர்பில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1217199

  12. துறைமுக நகர் சட்டமூலம் மீதான விவாதத்தில் ஒலித்த தமிழர் தரப்பு குரல் - தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர்- திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ்மக்களிற்கு சிறிதளவேனும் தன்னாட்சி வழங்குவதற்கான இடைக்கால ஏற்பாட்டைக்கூட குறுகியஇனவாத நோக்கில் எதிர்த்தவர்கள்தான் இன்று நாட்டின் இறைமையை சமரசத்திற்கு உள்ளாக்குகிறார்கள். தமிழ் மக்கள் ஏதோ ஒருவகையில் ஒரு சிறிதளவேனும் தன்னாட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்வதனை தடுப்பதற்கு எம்மை அழிக்கக்கூடத் துணிந்தீர்கள் . அதற்கு எம்மினத்தின் மீது இனவழிப்புச் செய்வதனையே உங்கள் தெரிவாக எடுத்தீர்கள் . இவ்வாறு நாடாளுமன்றத்தில் துறைமுகநகர சட்டமூலம் தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டுஉரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜ…

  13. இலங்கையின்... புதிய சட்டமா அதிபராக தமிழர்! இலங்கையின் புதிய சட்டமா அதிபராக சஞ்சய் ராஜரத்தினத்தை நியமிக்க நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் முன்மொழிவை ஏற்று நாடாளுமன்றத் தெரிவுக்குழு இந்த ஒப்புதலை அளித்துள்ளதாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019, மே 10இல் சட்டமா அதிபராகப் பொறுப்பேற்ற ஜெனரல் தப்புல டி லிவேராவின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், பதில் மன்றாடியார் நாயகம், ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்தினம் சட்டமா அதிபராகப் பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சோசலிசக் குடியரசாக அறிவிக்கப்பட்டதற்குப் பின்னர் இலங்கையின் சட்டமா அதிபரா…

  14. யாழில் கொரோனா தொற்று வீதம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது ஆனால் பொதுமக்கள் அலட்சியமாக செயற்படுவதை காண முடிவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.ம கேசன் தெரிவித்தார். தற்போதுள்ள யாழ் மாவட்ட கொரோனா நிலைமை தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் முகமாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் தற்போது கொரோனா நிலவரம் சற்று அதிகரித்து செல்லும் நிலையை காணப்படுகிறது. பொதுவாக வடமாகாணத்தில் அதிகரித்து செல்லும் போக்கு காணப்படுகிறது. ஆகவே நாம் அனைவரும் இச் சந்தர்ப்பத்தில் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய காலகட்டமாகும். பொதுமக்களை இக்கொடிய தொற்றிலிருந்து பாதுகாக்கவே இவ் பயண கட்டுப்பாடுகள், தடைகள் விதிக்கப்பட்டன.…

  15. வெளிநாட்டவர்கள் இந்நாட்டில் ஈழ அரசு உருவாக தேவையான சட்டங்களை அரசு இயற்றுகிறது – சம்பிக்க 10 Views எமது நாடு துரதிஷ்டவசமான நிலையில் இருக்கின்ற இக்காலக்கட்டத்தில், வெளிநாட்ட வர்களுக்கு இந்நாட்டில் ஈழ அரசு உருவாவதற்குத் தேவையான சட்டங்களை இயற்றிக்கொள்வதற் காக அரசாங்கம் நாடாளுமன்றத்தை கூட்டி யுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அரசாங்கம் மீது குற்றஞ்சாடினார். யுத்த வெற்றிக்காக உயிர்த்தியாகம் செய்த இராணுவ வீரர்களை நினைவு கூரும் நிகழ் வொன்று கடந்த செவ்வாய்க்கிழமை பொரளையில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில் – “கொவிட் 19 அச்சுறுத்தலால் நாடு முடக…

  16. மருத்துவமனை முழுவதும் கொரோனா நோயாளர்கள்- அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் 27 Views இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் , 90% மருத்துவமனை படுக்கைகள் கொரோனா நோயாளர்களினால் நிரம்பியுள்ளன மேலும் 10% படுக்கைகள் மட்டுமே ஏனைய நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கவுள்ளன என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஒரு பாரிய முயற்சிக்குப் பின்னர் மருத்துவமனை நிர்வாகம் அவசர சிகிச்சை படுக்கைகளின் தேவையை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. இருப்பினும் அவசர சிகிச்சை படுக்கைகளில் 50% க்கும் அதிகமானவை ஏற்கனவே கொரோனா நோயாளர்களினால் நிரம்பியுள்ளன என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுக்குழு உறு…

  17. இலங்கைக்குள் ஒரு சீன அரசு தமிழர்கள் கேட்பது அனைத்தும் மறுக்கப்படுகி றது சீனா கேட்கும் சகலதும் வழங்கப்படுகின்றது – விக்னேஸ்வரன் பா.கிருபாகரன் – ந. ஜெயகாந்தன் இந்த அரசிடம் தமிழர்கள் கேட்பது அனைத்தும் மறுக்கப்படுகின் றது. சீனா கேட்கும் சகலதும் வழங்கப்படுகின்றது. இந்த நாடு எமக்கும் உரியது.அதனை தாரை வார்க்க அனுமதிக்க முடியாது என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் யாழ்மாவட்ட எம்.பி.யுமான உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுச் சட்ட மூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவ…

  18. பாய், படுக்கை கூட வழங்கப்படவில்லை’ -பா.நிரோஸ் யுத்தம் நிறைவடையாதிருந்தால், சாணக்கியன் எம்.பி சபைக்கு வந்திருக்க முடியாதெனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் என்கிற சிவநேசதுறை சந்திரகாந்தன், தன்னைக் கீழ்தரமாகப் பழிவாங்குகிற செயற்பாடுகளை சாணக்கியன் நிறுத்திக்கொள்ள வேண்டுமெனச் சாடினார். நேற்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு தொடர்ந்துரைத்த அவர், “ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்படும் கைதுகளை, அரசியல் பழிவாங்கல்கள் என தற்போது கூறுகிறார்கள். நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும், எனக்கு எதிராகவே பயங்கரவாதத் தடைச் சட்டம் முதலில் பாய்ந்தது. 68 நாள்கள் சிஐடியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த எனக்க…

    • 0 replies
    • 288 views
  19. உண்மையான தகவல்களை அரசாங்கம் மறைக்கிறதா? நாளாந்தம் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களை விட மும்மடங்கு தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்க கூடும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார். அவ்வாறானவர்களால் தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக அவர் கூறியுள்ளார். ´நேற்று மூவாயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதற்கும் அதிகமான தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்க கூடும். 3,500 ஐ போல் மும்மடங்கு தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்கலாம். அவர்கள் மேலும் நோய் பரவ வழிவகுக்க கூடும். மக்களை வீட்டில் இருக்குமாறு கோரினால் மக்கள் அவ்வாறு நடந்துக்கொள்வதில்லை. வீதிகள் வெறுமையடைய வேண்டும். ஆகவே, தொற்றை தவிர்க்க வேண்டுமானால் தேவைய…

    • 0 replies
    • 370 views
  20. அபிவிருத்தி எனும் போர்வையில் நாட்டையும் நாட்டு மக்களையும் காட்டிக்கொடுக்க தயாரில்லை – சஜித்! நாட்டையும் நாட்டு மக்களையும் காட்டிக்கொடுக்கும் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை நாம் இந்த நாட்டுக்கான அழிவின் பாதையாகவே நாம் பார்க்கிறோம். துறைமுக நகரத்திட்டமானது, எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு சக்தி என்பதை நாமும் ஏற்றுக் கொள்கிறோம். எவ்வாறாயினும், …

  21. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தினேஸ் குணவர்த்தனவுடன் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் பேச்சு! தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவை சந்திந்து தமிழ் அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடினர். இந்த சந்திப்பு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, அரசியல் கைதிகள் பற்றிய விபரங்களை தமிழ் தரப்பினர் அமைச்சரிடம் ஒப்படைத்தனர். அதன்படி, விசாரணை முடியாத கைதிகள், தண்டனை வழங்கப்பட்ட கைதிகள் என அரசியல் கைதிகள் குறித்த முழுமையான விபரத்தை கையளித்ததுடன், அவர்களை விடுவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், இது குறித்து ஜனாதிபதி…

    • 0 replies
    • 175 views
  22. நாடளாவிய ரீதியில் நாளை இரவு 11 மணிமுதல் முழுநேர பயணத்தடை விதிக்கப்படவுள்ளது நாடளாவிய ரீதியில் நாளை வெள்ளிக்கிழமை இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை முழுநேர பயணத்தடை விதிக்கப்படவுள்ளது.பயணத்தடை அமுலாகும் காலப்பகுதியில் அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் வீட்டிலிருந்து வெளியேற முடியாது என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார் இதேவேளை பயணத்தடை காரணமாக நாளைமுதல் எதிர்வரும் 24 ஆம் திகதி வரையில் சகல பொருளாதார மத்திய நிலையங்களையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதன்பின்னர் 25ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு சகல பொருளாதார மத்திய நிலையங்களையும் பேலியகொடை மெனிங் சந்தை ஆகியவற்றையும் மீளத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது…

  23. துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான விவாதம் ஆரம்பம். கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான இரண்டாவது நாள் விவாதம் சற்றுமுன்னர் ஆரம்பமானது. துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது. நாடாளுமன்றில் குறித்த சட்டமூலம் தொடர்பான விவாதம் நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்றைய இரண்டாம் நாள் விவாதத்தின் பின்னர் அதன் மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, சட்டமூலத்த…

  24. நாட்டு மக்களிடம்... இராணுவத் தளபதி, விடுத்துள்ள அவசர கோரிக்கை! நாட்டில், 55 வயதுக்கு மேற்பட்டோருக்கு சுவாசிப்பதில் சிரமம் போன்ற கொரோனா அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்தார். அவ்வாறில்லையெனின் உடனடியாக வைத்திய ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1217055

  25. சீனாவிற்கு அதிகாரங்களை வழங்கும் அரசு... ஏன் 70 வருடங்களாக போராடிய தமிழர்களுக்கு வழங்கவில்லை?? – சித்தார்த்தன் இலங்கை அரசாங்கத்திற்கு நிதி முக்கியமாக இருந்தால் கோடிக்கணக்கில் முதலீடுகளை மேற்கொள்ள நாடு கடந்த தமிழர்கள் தாயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இவ்வாறு கூறினார். ஆகவே இவ்வாறு நாட்டுக்கு முதலீடுகளை கொண்டுவர, மக்களால் தெரிவு செய்ய்யப்படும் வடகிழக்கு இணைந்த சுயாட்சி சபை ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் வடக்கு கிழக்கிற்கு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.