Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. (இராஜதுரை ஹஷான்) பெரும்பான்மையின மக்களினால் தோற்றுவிக்கப்பட்ட அரசாங்கத்தின் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் நீதியமைச்சர் அலி சப்ரி செயற்பட வேண்டும். முஸ்லிம் அடிப்படைவாதத்துக்கு வலு சேர்க்கும் வகையில் கருத்து தெரிவிப்பதை அவர் தவிரத்துக் கொள்ள வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார். முஸ்லிம் விவாக சட்டத்தை மேல் நாட்டு சட்டம், தேசவழமை சட்டம் ஆகிய பாரம்பரிய சட்டங்களுடன் ஒப்பிட முடியாது. பௌத்த சாசனத்தை பாதுகாக்கவும், பௌத்த உரிமை பாதுகாக்கவும் இயற்றப்பட்ட சட்டங்களை நீக்க பௌத்த மக்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள். முஸ்லிம் சட்டத்தினால் மனித உரிமை மீறப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்த முடியும். இவ்விடயம் குறித…

  2. தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது . ஒன்றிணைந்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது

  3. போரதீவு பற்று வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்டகிராமங்களுக்கான விஜயம் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கிராமங்களுக்கான மிக நீண்ட காலத்தின் பின்னரான விஜயத்தின்போதுமட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவு பற்று வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்டகிராமங்களுக்கு மிக நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்றைய தினம் விஜயம் செய்து அங்கு இருக்கின்றநிலைமைகளை அவதானித்துடன் அங்குள்ள மக்களின் குறைகளையும் கேட்டறிந்து கொண்டோம்.அங்கு நான்அவதானித்த விதத்தில் பல்வேறுபட்ட தேவைகளும் எண்ணிலடங்காத பிரச்சினைகளும் குவிந்துகாணப்படுகின்றது. தற்பொழுது அந்த மக்களுடைய வாழ்வாதார நிலைமைகளையும் ஆராய்ந்து பார்க்கின்றபொழுது மிகவும் கவலையளிக்க…

  4. க.பொ.த (சா/த) மாணவர்களுக்கு பெப்.17 முதல் கற்றல் விடுமுறை (சி.எல்.சிசில்) எதிர்வரும் மார்ச் 01 முதல் 2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையை எதிர்கொள்ளவுள்ள மாணவர்களுக்கு பெப்ரவரி 17 முதல் 25ஆம் திகதி வரை கற்றல் விடுமுறை(Study Leave) வழங்கப்படும் என் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். மேற்படி பரீட்சையை மார்ச் 01ஆம் திகதி முதல் மார்ச் 11 வரை நடத்த ஏற்பாடாகியுள்ளது. Thinakkural.lk

  5. குருந்தூர் மலையில் மீண்டன தாரா லிங்கமும் கருவறையும்! விகாரை என்கிறது தொல்லியல் தரப்பு.! முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட குருந்தூர் மலையில் தொல்லியல் திணைக்களத்தினர் மேற்கொண்டுவரும் அகழாய்வு நடவடிக்கையில் இந்தியாவின் பல்லவர் காலத்து (கி.பி. 275–கி.பி. 897) பயன்பாட்டு வடிவமைப்புக்களில் ஒன்றான தாரா லிங்கம் எனப்படுகின்ற அமைப்பினை உடைய உருவச் சிலை ஒன்றும் அது பிரதிஸ்டை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்ற கட்டட இடிபாடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த சிலையுடன் செங்கற்கள் அல்லது அதனை ஒத்த கற்களாலான கருவறை என்று கருதப்படும் கட்டட இடிபாடுகளும் மீட்கப்பட்டுள்ளன. கொழும்பு தொல்லியல் திணைக்களத்தினரும் யாழ்ப்பாண…

    • 16 replies
    • 3.4k views
  6. முடங்கியது ஏ - 09 போக்குவரத்து.! கரந்தாயில் மக்கள் போராட்டம்.! கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கரந்தாய் பகுதியில் ஏ - 09 நெடுஞ்சாலையை மறித்து கிராம மக்கள் பொலிஸாருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றமையால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கரந்தாயில் தமது காணிகளுக்குள் நுழைந்த பொலிஸார் தமது உடைமகளை வெளியே வீசி தம்மை வெளியேற்றியதாகத் தெரிவித்தே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே கராந்தாய் கிராமத்தில் மக்கள் வாழ்ந்த காணிகள் அரச திணைக்களம் ஒன்றுக்குச் சொந்தமானவை என்று தெரிவிக்கப்பட்டு மக்கள் வெளியேற்றப்பட்டிருந்தனர். இருந்த போதிலும் மக்கள் மீண்டும் வலிந்து சென்று காணிகளில் குடியமர்ந்திருந்தனர். …

  7. (இராஜதுரை ஹஷான்) கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை பெற்றுக் கொள்வதற்கு இந்திய நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அறிய முடிகிறது. மேற்கு முனையத்தின் 85 சதவீத உரிமத்தை பிற நாட்டு நிறுவனத்துக்கு வழங்க இடமளிக்க முடியாது. கிழக்கு முனையத்தை பாதுகாக்க மேற்கொண்ட முயற்சியை மேற்குமுனைய விவகாரத்திலும் முன்னெடுப்போம் என அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கத்தின் செயலாளர் நிரோஷன் கொரகாஹேன்ன தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரத்தில் துறைமுக தொழிற்சங்கத்தினர் கடுமையான தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுப்படாமலிருந்திருந்தா…

  8. இலங்கைக்கு ஆதரவாக 47க்கும் மேற்பட்ட நாடுகள் குரல் கொடுக்கும்- சரத் வீரசேகர நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடரில், இலங்கைக்கு ஆதரவாக 47க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றிணைந்து செயற்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடர் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது சரத் வீரசேகர மேலும் கூறியுள்ளதாவது, “ஒருமித்த நாட்டின் கொள்கையினை மாணவர்களுக்கு ஆரம்ப காலத்தில் இருந்து கற்றுக் கொடுக்க வேண்டும். மேலும் நாட்டின் இறையாண்மை, சுயாதீனத்தன்மை ஆகியவை குறித்து இளம் தலைமுறையினர் அதிக அக்கறை கொள்ள வேண்டும். பாரிய போராட…

  9. மேர்வின் சில்வா வட, கிழக்கிற்கு வரும்போது பாதுகாப்பின்றி வருவதைத் தவிர்கவேண்டும் எச்சரிக்கின்றார் – ரவிகரன் 10 Views மேர்வின் சில்வா வட, கிழக்கிற்கு வரும்போது பாதுகாப்பின்றி வருவதைத் தவிர்கவேண்டும் என ரவிகரன் தெரிவித்துள்ளார். ”மேர்வின் சிலவா வட கிழக்குத் தமிழ் மக்களைப் பற்றியோ, இளைஞர்களைப்பற்றியோ பூரணமாக புரிந்துகொள்ளவில்லை என நினைக்கின்றேன். அதேவேளை அவர் வட, கிழக்கிற்கு பாதுகாப்பின்றி வருவதனைத் தவிர்த்துக்கொள்ளவேண்டும் என்பதையும் தெரிவித்துக்கொள்ளவிரும்புகின்றேன்.” என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். ”காவல்துறை சீருடையில் தான் இருந்திருந்தால் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை என்னும் எழுச்சி…

  10. நாம் வாழ்ந்த மண்ணை மீட்டுத்தாருங்கள்! 906வது நாளில் பொத்துவில் கனகர்கிராமமக்கள் மன்றாட்டம்! February 15, 2021 (வி.ரி.சகாதேவராஜா)தாம் காலாகாலமாக வாழ்ந்துவந்த காணியை மீட்டுத்தாருங்கள் என பொத்துவில் 60ஆம் கட்டை கனகர்கிராம தமிழ்மக்கள் மன்றாட்டமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். நேற்று(14)ஞாயிற்றுக்கிழமை அவர்கள் 906வது நாளாக போராட்டக்கூடத்தில் குழுமியிருந்தவேளையில் அங்கு வழக்கமாகச்சென்று உதவிவரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளரும் சமுக உணர்வாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலிடம் மேற்கண்டவாறு கூறினர். போராட்டக்குழுவின் தலைவி றங்கத்தனா உறுப்பினர் ராசா ஆகியோர் மிகவும் ஆக்ரோசமாக ஆனால் உருக்கமாக தமது போராட்டம் இவ்வாறு 900நாட்களையும் தாண்டி இழுத்தடிக்கப்பட்டுவருவது தொடர்பாகவ…

  11. யாழில் கூடிய தமிழ்த் தேசியக் கட்சிகளின் சந்திப்பு தொடர்பில் சுரேஷ் பிறேமச்சந்திரன் suresh piremachandran 1.mp4 சீன நிறுவனங்கள் தீவு பகுதியில் அனுமதிப்பதை தீவிரமாக எதிர்ப்போம்.

  12. வடக்கு – கிழக்கில் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் புதிய அமைப்புக்கள் - குற்றம் சுமத்தும் கெஹலிய வடக்கு மற்றும் கிழக்கில் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பல்வேறு அமைப்புக்கள் உருவாகியுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கண்டி மெனிக்ஹின்ன பகுதியில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கும் நாடு என்ற ரீதியில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கு ஒரு போதும் இடமளிக்கமாட்டோம். வடக்கு மற்றும் கிழக்கில் பயங்கரவாதத்திற்கு ஆதரவு வழங்கும் அமைப்புக்கள் மீண்டும் உருவாகியுள்ளன. நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் நாட்டின் புலானாய்வு பிரிவு செயலிழந்து காணப்பட்டத…

  13. தமிழ் அரசுக் கட்சியை சரிவில் இருந்து மீட்க வேண்டும் – பொன்.செல்வராசா எமது கட்சிக்கு எற்பட்டுள்ள சரிவைச் சரிப்படுத்த வேண்டிய பொறுப்பு எம்மிடத்திலே தான் இருக்கின்றது என தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட உபதலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பொன்.செல்வராசா தெரிவித்தார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் கட்சியின் எதிர்காலச் செயற்பாடுகள் மற்றும் நிகழ்கால அரசியல் நிலைமைகள் தொடர்பிலான எழுச்சிப் பட்டறை நேற்று (ஞாயிழ்ற்றுக்கிழமை) தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட உபதலைவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தலைமையில் மட்டக்களப்பு வாசிகசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்ன…

  14. ஊடகவியலாளரின் வீட்டிற்கு சென்ற இனந்தெரியாதவர்களினால் அவரது குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் ஊடகவியலாளரான இராமலிங்கம் தில்லைநாயகத்தின் வீட்டிற்குச்சென்ற இனந்தெரியாதவர்கள், அவரது குடும்பத்தை அச்சுறுத்தியமையினால் அவரது குடும்ப உறுப்பினர்கள் அச்ச நிலையில் வாழ்ந்து வருகின்றனர். குறித்த சம்பவமானது கடந்த வியாழக்கிழமை மாலை கல்முனையில் அமைந்துள்ள அவரது வீட்டில் இடம்பெற்றுள்ளது. அதன் காரணமாக அச்சமடைந்த அவரது குடும்பம், கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முறைப்பாடு ஒன்றினையும் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஊடகவியலாளர் தில்லைநாயகத்தின் வீட்டிற்குச்சென்ற இனந்தெரியாதவர்கள், தங்களை வங்கி ஊழியர்கள் என அடையாளப்படுத்தியதுடன் தில்லைநாய…

  15. காணாமல்போன அனைவரும் புலிகளே: அவர்களுக்காக நிதி ஒதுக்க முடியாதென அரசு திட்டவட்டம்.! காணாமல் போனோர் அலுவலகத்தை தொடர்ந்து நடத்திச் செல்ல நாம் விரும்பவில்லை. அத்துடன் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு அரச நிதி ஒதுக்குவதை நாம் ஒரு போதும் ஏற்று கொள்ள முடியாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- இராணுவத்தைக் கொன்ற, தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்திய நபர்களுக்கு நட்ட ஈடு கொடுக்க நாம் அனுமதிக்க முடியாது. பயங்கரவாதிகளுக்கு நியாயத்தைப் பெற்று கொடுத்து தேசத்தைக் காப்பாற்றியவர்களைத் தண்டிக்கக் கூறுவதில் என்ன நீதி உள்ளது? என நாம் கேள்வி கேட்கின்றோம். எமக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்…

  16. ஜெனிவாவில் இந்தியாவின் ஆதரவை பெறுவதற்காகவே வடக்கின் மூன்று தீவுகள் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது – சி வி விக்னேஸ்வரன் 50 Views ஜெனிவாவில் இந்தியாவின் ஆதரவை பெறுவதற்காகவே வடக்கின் மூன்று தீவுகள் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாணத்தில் உள்ள மூன்று தீவுகள் சீனா கம்பெனி ஒன்றுக்கு மின்சக்தி உற்பத்திக்கு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் அண்மையில் ஒரேநாளில் இரு வேறு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஒரே நாளில் அரசானது இரண்டு வேறுபட்ட தீர்மானங்களை எடுத்து ள்ளது கிழக்கு ம…

    • 2 replies
    • 422 views
  17. – பாறுக் ஷிஹான் – விடுதலை புலிகள் மற்றும் இயக்கங்களால் கடத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என உல‌மா க‌ட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், முஸ்லிம் கட்சிகளில் உள்ள பெரும்பாலானவர்கள் சுயநலமாகவே செயற்படுகின்றனர் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள உலமாகட்சி அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணி தமிழ் முஸ்லிம் மக்களினால் திட்டமிடப்பட்ட ஒன்றாக இருக்கவில்லை. இந்த பேரணியில் சிலரால் முஸ்லிம்களுக…

  18. கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இரு குழுக்களிடையே இடம்பெற்ற பரஸ்பர மோதலில் ஒருவர் பலியானதுடன் மேலும் மூவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த சம்பவம் இன்று காலை 11.30 மணியளவில் ஏ9 பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உமையாள்புரம் கிராமத்தினைச் சேர்ந்த இரண்டு தரப்புக்கு இடையிலான முறுகல் நிலை வாள்வெட்டில் முடிந்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததுடன், மேலும் மூவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வருகின்றனர். சம்பவத்துடன் தொடர்புடைய சிலர் கிளிநொச்சி …

  19. வேண்டுமென்றே இந்த அரசாங்கம் இந்தியாவைச் சீண்டுகின்றது! - கோவிந்தன் கருணாகரம் வேண்டுமென்றே இந்த அரசாங்கம் இந்தியாவைச் சீண்டுகின்றது. தூரத்துத் தண்ணீர் ஆபத்திற்கு உதவாது என்று சொல்லுவார்கள். இன்னொரு நாட்டுக்கு நட்பாய் இருக்க வேண்டும் என்பதற்காக தெற்காசியாவின் வல்லரசு நாட்டினை ஏன் எதிர்க்க வேண்டும். இந்த நாட்டின் நண்பன் யார், எதிரி யார் என்பதை இந்த அரசு புரிந்து கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். இந்தியா தொடர்பில் இலங்கையின் சமகால நிலைப்பாடுகள் சம்மந்தமாகக் இன்று கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டிலே தற்போது என…

  20. தென்னாபிரிக்க கொரோனா வைரசும் இலங்கைக்குள் நுழைந்திருக்கலாம் என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தென்னாபிரிக்க வைரசும் இலங்கையில் பரவிக்கொண்டிருக்கலாம் அது கண்டுபிடிக்கலாம் என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. பிரித்தானியா கொரோனா வைரஸ் பரவுவது இலங்கையில் கவலையளிக்கின்ளது என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோகண தெரிவித்துள்ளார். சோதனைகள் மூலம் நான்கு இடங்களில் கொரோனா வைரசினை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ள போதிலும் நான்பு இடங்களில் மாத்திரம் வைரஸ் காணப்படுகின்றது என தெரிவிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். புதியவைரஸ்வீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து நாங்கள் புதிய பல நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய நிர்ப்பந்த…

  21. யாழில் தமிழ்த் தேசியக் கட்சிகள் கூடின - த.தே.ம.முன்னணி பங்கேற்கவில்லை.! அனைத்துக் கட்சிக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதி ஒன்றில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. ஒன்றிணைந்த அனைத்துக் கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமாகியுள்ள கூட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி மற்றும் தமிழ் மக்கள் கட்சி, ஈழ தமிழர் சுயாட்சிக் கழகம் கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். தற்போதைய அரசினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ,நில ஆக்கிரமிப்புக்கள், தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் மற்றும் அத்துமீறல்களை தடுப்பதற்கு எதிர்காலத்தில் தமிழ் மக்களின் நல…

  22. இந்தியாவின் உதவியுடனேயே யாழ். தீவு காற்றாலை திட்டம்: 12 மில்லியன் டொலரை நன்கொடையாக வழங்க இந்தியா இணக்கம் சீனாவின் பங்களிப்புடன் யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய தீவுகளில் மேற்கொள்ளப்படவிருந்த காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சார உற்பத்தி திட்டம் தற்போது இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ளது. இது தொடர்பில் மின்சக்தி அமைச்சருடன் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்திய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இதற்கான முழு செலவான 12 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்திருக்கிறார். அந்த வகையில் மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும இந்தியாவின் நன்கொடையுடன் யாழ்ப்பாணத்தில் இந்த காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சார உற்ப…

  23. சிங்களவர்கள் போராட்டத்தில் ஈடுபடும்போது காலிமுகத்திடலில் வைத்து திருப்பியனுப்பும் அரசாங்கம் தமிழர்களை இவ்வளவு நீண்ட பேரணி செல்வதற்கு அனுமதித்திருக்கிறது. நான் அந்த இடத்தில் பொலீஸ் சீருடையில் இருந்திருந்தால் அத்தனை பேரினதும் கால்களையும் உடைத்து விரட்டியிருப்பேன்" என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். பொன்னம்பலம் ராமநாதன் போன்ற தமிழ் கல்விமான்கள் கூட இதே நாட்டில்தான் வாழ்ந்தார்கள். அப்படிப்பட்ட இடத்தில் எங்கிருந்தோ வந்து பாராளுமன்றில் நுழைந்தவர்கள் செய்கின்ற எல்லாவற்றுக்கும் தலையாட்ட முடியாது. அனைவருக்கும் ஒரே நீதி இருக்க வேண்டும். சிங்கள மக்களே …

  24. ஊடகவியலாளர்கள் படுகொலை விவகாரம் – சிறீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு CJA,CPJ ஆகிய அமைப்புக்கள் வலியுறுத்தல் 5 Views சிறீலங்காவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் படுகொலைகள், கடத்தல், காணாமலாக்கப்பட்டமை உள்ளிட்ட குற்றங்களுக்கு பொறுப்புக் கூற சிறீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு மனித உரிமைகள் பேரவையை வலியுறுத்தி நீதி மற்றும் பொறுப்புக் கூறலுக்காக சர்வதேச ஊடக அமைப்பு (CJA) மற்றும் ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்காக சர்வதேச அமைப்பு (CPJ) ஆகிய அமைப்புக்கள் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. சிறீலங்காவில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான துன்புறுத்தல், மிரட்டல், கண்காணிப்பு மற்றும் தாக்குதல்கள் என்பன குறித்து 194 பக்கங்களைக் க…

  25. தேவநம்பியதீசனின் காலத்தின் பின்னரே இலங்கைக்கு பௌத்த மதம் வந்தது – ஸ்ரீதரன் தேவநம்பியதீசனின் காலத்தின் பின்னரே இலங்கைக்கு பௌத்த மதம் வந்தது என்றும் தமிழர்களே இந்த மண்ணின் பூர்வீகக் குடிகள் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். வாதரவத்தை பொதுநோக்கு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “நாம் இந்த மண்ணிலே நாளுக்கு நாள் வெவ்வேறான பிரச்சினைகளை சந்தித்துக்கொண்டிருக்கின்றோம். பொழுது விடிவதே எங்கள் மக்களின் நிலங்களையும் வாழ்வையும் அரச இயந்திரங்கள் கபளீகரம் செய்கின்ற செய்திகளுடனேதான். தொல்லியல் என்ற பெயரில் எங்கள் தொன்மங்கள் அழிக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.