ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் துணைத் தலைவரானார் பொப் ரே: இலங்கைக்கு மற்றுமொரு நெருக்கடி (ஆர்.ராம்) சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் துணைத்தலைவராக கனடிய இராஜதந்திரியான பொப் ரே தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் கனடிய பாராளுமன்ற உறுப்பினராகவும் ஒன்ராரியோவின் முதல்வராகவும் செயற்பட்டிருந்த நிலையில் கடந்த ஆண்டு ஜுலை ஆறாம் திகதி பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவினால் ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்திர வதிவிடப்பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ரொரொண்டோவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த பொப் ரே 2009ஆம் ஆண்டு ஜுன் மாதம் இலங்கைக்கு வருகை தந்திருந்தபோது, கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பட்டிருந்தார். அப்போதைய அரசாங்கம் இவரை நாட்டுக்…
-
- 2 replies
- 693 views
-
-
மத வன்முறைகள் ஏற்படுவதற்கு காரணமாக இருந்தார் - ஞானசார தேரருக்கு எதிராக ஆணைக்குழு பரிந்துரையாம்.. பொதுபலசேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் நாட்டில் மத வன்முறைகளை தூண்டும் வகையில் செயற்பட்டதற்காக நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஞானசார தேரருக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டுகளை சுமத்துமாறு ஆணைக்குழு பரிந்துரைந்துள்ளது என மோர்னிங் தெரிவித்துள்ளது. 2014இல் அளுத்கம பேருவளையில் இடம்பெற்ற வன்முறைகளிற்கு காரணமாகயிருந்தார் என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே ஞானசார தேரருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆணைக…
-
- 1 reply
- 351 views
-
-
இலங்கை குறித்த புதிய பிரேரணை தொடர்பில் 32 நாடுகளின் பிரதிநிதிகளுடன் சுமந்திரன் கலந்துரையாடல் (ஆர்.ராம்) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள 46ஆவது அமர்வில் இலங்கை தொடர்பில் கொண்டு வரப்படவுள்ள புதிய பிரேரணையின் உள்ளடக்கம் தொடர்பாக உறுப்பு நாடுகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கலந்துரையாடல்களை மேற்கொண்டார். மெய்நிகர் ஊடாக நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலின் போது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 47 உறுப்பு நாடுகளில் 32நாடுகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றிருந்ததோடு மாற்றுக்கொள்கை நிறுவனத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் சட்டத்தரணி பவானி பொன்சேகாவும் கலந்து கொண…
-
- 0 replies
- 401 views
-
-
இலங்கை ஊடகவியலாளர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு பொறுப்புக் கூற வலியுறுத்தல்.! இலங்கையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் படுகொலைகள், கடத்தல், காணாமலாக்கப்பட்டமை உள்ளிட்ட குற்றங்களுக்கு பொறுப்புக் கூற இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு மனித உரிமைகள் பேரவையை வலியுறுத்தி நீதி மற்றும் பொறுப்புக் கூறலுக்காக சர்வதேச ஊடக அமைப்பு (CJA) மற்றும் ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்காக சர்வதேச அமைப்பு (CPJ) ஆகிய அமைப்புக்கள் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான துன்புறுத்தல், மிரட்டல், கண்காணிப்பு மற்றும் தாக்குதல்கள் என்பன குறித்து 194 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ராஜபக்சக்களின் முன்னைய ஆட்சிக் காலத்தி…
-
- 0 replies
- 366 views
-
-
தற்போது அரசாங்கம் ஐநா மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை தவிர்ப்பதற்காக கடந்தகாலங்களில் பொறுப்புக்கூறலிற்கு என்ன நடந்தது என ஆராய்வதற்காக ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளதாக நாங்கள் அறிகின்றோம். இது கதவை மூடுவதற்கான இன்னொரு முயற்சி.நீதியை தடுப்பதற்கான இன்னொரு முயற்சி என அமெரிக்காவின் யுத்த குற்ற விவகாரங்களிற்கான முன்னாள் தூதுவர் ஸ்டீபன் ரப் தெரிவித்துள்ளார் உலகதமிழர் பேரவை மனிதஉரிமைகள் மற்றும் சர்வதேச நீதிக்கான நிலையம் இலங்கையி;ல் நீதி மற்றும் சமாதானத்துக்கான பரப்புரை கனேடிய தமிழ் காங்கிரஸ் ஆகிய இணைந்து முன்னெடுத்த இணையவழி கருத்தரங்கில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார் அவர் குறிப்பிட்டுள்ளதாவது. இலங்கைக்கு நான் முதன்முதலில் 2012 இல் மேற்கொண்ட …
-
- 2 replies
- 664 views
-
-
ராஜபக்ஷக்களின் கொடூர ஆட்சியே தமிழர்கள் வீதியில் இறங்க காரணம் – சந்திரிகா சொல்கிறார் 4 Views வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள், சர்வதேசத்திடம் நீதி கோரி வீதியில் இறங்கிப் போராட ராஜபக்ஷக்களின் கொடூர ஆட்சியே காரணமாகும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். அரசின் தமிழ் பேசும் மக்கள் மீதான அடக்கு முறைகளைக் கண்டித்தும், சர்வதேசத்திடம் நீதி கோரியும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் வடக்கு, கிழக்கு தமிழ்ச் சமூகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பேரணி தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி…
-
- 0 replies
- 793 views
-
-
மேற்கத்திய நாடுகள் முன்வைக்கும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் - கூட்டமைப்பு இலங்கைக்கு எதிரான யு.என்.எச்.ஆர்.சியின் 46 வது அமர்வில் மேற்கத்திய நாடுகள் முன்வைக்கும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் கருத்து தெரிவிக்கும்போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விடயம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவுடன் பல விவாதங்களை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமை மீறல்களை நன்கு அறிந்திருக்கும் என்ற அடிப்படையில் இலங்கை மீது அழுத்தம் கொடுக்கும் …
-
- 0 replies
- 412 views
-
-
ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினராக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்! மனித உரிமைகள் மீறல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினராக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாநகரின் முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜாவே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதியால் அதி சிறப்பு வர்த்தமானி மூலம் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ், ஓய்வுபெற்ற பொலிஸ்மா அதிபர் சந்திர பெர்ணாண்டோ மற்றும் ஓய்வுபெற்ற மாவட்டச் செயலாளர் நிமல் அபேசிறி ஆகிய மூவர் கொண்டமைந்த மனித உரிமைகள் மீறல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அண்மையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்…
-
- 3 replies
- 664 views
-
-
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கோரி சர்வதேச நீதிமன்றத்தை நாடவுள்ளதாகக் கூறுகிறார் பேராயர் மல்க்கம் ரஞ்சித் ஈழத்தமிழர்கள் மீதான இன அழிப்புத் தொடர்பாகப் பேசவிரும்பாத நிலையில் பேராயரின் மனச் சாட்சி ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை கத்தோலிக்கத் திருச்சபையின் வடக்குக் கிழக்கு ஆயர்கள், அருட்தந்தையா்கள் ஆதரித்தும் பங்குபற்றியும் வந்திருக்கின்றனர். இதனால் அருட்தந்தையர்கள் பலர் கொல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் கைது செய்யப்பட்டுமிருந்தனர். ஆனால் அப்போதெல்லாம் பேராயர்கள் இலங்கை அரசாங்கத்தை கண்டித்திருந்தாலும் உரிய முறையில் அழுத்தம் கொட…
-
- 1 reply
- 899 views
-
-
இலங்கை மீது இந்தியாவுக்கு அதிருப்தி இருக்காது-அமைச்சர் டக்ளஸ் கருத்து 29 Views இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன் பிடி செயற்பாடுகள் தொடர்பாக இலங்கை மீது இந்தியாவுக்கு அதிருப்தி இருக்காது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரம் மற்றும் கொழும்புத் துறைமுக விவகாரம் போன்றவற்றில் இந்தியாவின் அதிருப்தி குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், “மீனவர் விவகாரத்தினைத் தீர்த்துவைப்பதற்காக தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, அமைச்சு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுக்கள் ஆரம்பித்துள்ள நிலையில், க…
-
- 4 replies
- 1.1k views
-
-
நான் யுத்தக் குற்றவாளியில்லை- கமால் குணரட்ண நாங்கள் யுத்த குற்றவாளிகள் இல்லை,நான் எனது தேசத்திற்கும் மக்களி;ற்கும் எனது சேவையை செய்துள்ளேன் என பாதுகாப்பு செயலாளர் கமால்குணரட்ண தெரிவித்துள்ளார். நான் எனது இளமை முழுவதையும் பயங்கரவாதிகளிற்கு எதிரான போராட்டத்தில் காடுகளில் செலவிட்டதன் காரணமாகவே உங்களால் இன்று சுதந்திரமாக நடமாட முடிகின்றது எனத் தெரிவித்துள்ள கமால் குணரட்ண என்னை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கவேண்டியது அரசாங்கத்தினதும் வெளிவிவகார அமைச்சினதும் பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார். . நான் எதனை பார்த்தும் அஞ்சவில்லை நான் யுத்த குற்றவாளியல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை குற…
-
- 6 replies
- 1.2k views
-
-
யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள திறமையான அதிகாரிகளை இடமாற்றுவதற்கு ஆளும் கட்சியைச் சேர்ந்த அரசியல் தரப்பு ஒன்று பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றது எனக் கூறப்படுகின்றது. உயர் அதிகாரிகள் ஊடாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் – அதிகாரிகளை சுயமாக இடமாற்றம் பெற்றுச் செல்வதற்குரிய அழுத்தங்களை மேற்படி அரசியல் தரப்பு ஏற்படுத்துகின்றது என்று தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாண மாவட்டத்தின் வேலணை பிரதேச செயலராகக் கடமையாற்றிய அ.சோதிநாதன் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். அவரது இடமாற்றத்தின் பின்னணியில் ஆளும் கட்சியைச் சேர்ந்த அரசியல் தரப்பு தொடர்புபட்டிருந்ததாகக் கூறப்பட்டிருந்தது. இந்த இடமாற்றத்தை நிறுத்துவதற்கு ஆளும் கட்சியின் மற்றொரு அரசியல் தரப்பு முயற்சிகளை மேற்கொண்டி…
-
- 0 replies
- 354 views
-
-
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் புதிய கொரோனா கொத்தணி உருவாகும் நிலை காணப்படுவதனால் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகப் பின்பற்றுவது அவசியமென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் அச்சுவேலி சந்தைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் நான்கு வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், “யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்பொழுது கொரோனா நிலைமை சற்றுக் குறைவடைந்துள்ளது. எனினும், நேற்று முன்தினமும் நேற்றும் திடீரென தொற்றுறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில், அச்…
-
- 0 replies
- 513 views
-
-
(நா.தனுஜா) கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 2020 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. அதன் விளைவாகக் கடந்த ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 3.9 சதவீதமாகவே பதிவாகியுள்ளது. எனினும் இவ்வருட முடிவில் 5.5 - 6 சதவீதம் வரையிலான பொருளாதார வளர்ச்சியை அடைந்துகொள்வதற்கு எதிர்பார்க்கிறோம் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி டபிள்யூ.டி.லக்ஷமன் தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில்வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதுபற்றிக் குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: நாட்டின் பொருளாதாரம் எவ்வாறான நிலையி…
-
- 0 replies
- 401 views
-
-
பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோ.கருணாகரம், த.கலையரசன் உள்ளிட்ட எழுவரை, எதிர்வரும் ஏப்ரல் 30 திகதி முன்னிலையாகுமாறு கல்முனை நீதவான் நீதிமன்றினால் அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியில் கலந்து கொள்வார்கள் என கூறி, கல்முனை பொலிஸ் நிலையத்தினால், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 29 பேருக்கு கல்முனை நீதிமன்ற உத்தரவின் பேரில் தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது. ஆனாலும் பேரணி இடம்பெற்றதுடன், நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டவர்கள் என பெயரிடப்பட்டவர்கள் சிலர், அதனை மீறி கலந்து கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு, மேற்படி பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட எழுவருக்கு எதிராக கல்முனை நீதவான் நீதிமன்றில் வழக்கொன்று…
-
- 0 replies
- 317 views
-
-
விடுதலைப் புலிகள், பிரபாகரன் குறித்து பேச தடை: சரத் வீரசேகரவின் கருத்துக்கு, தமிழ் தரப்பினர் எதிர்ப்பு 35 Views சிறீலங்கா நாடாளுமன்றத்திலுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்க முடியாது எனக் அமைச்சர் சரத் வீரசேகரவின் கருத்துக்கு, தமிழ் தரப்பினர் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். இது குறித்து சர்வதேச செய்தி நிறுவனமான பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்த அவர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், “தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொதுமக்களை கொலை …
-
- 0 replies
- 370 views
-
-
தமிழர்கள் ஜனநாயக வழியில் போராடினால் அந்தப் போராட்டத்தை கொச்சைப்படுத்தக்கூடாது – மைத்திரி by : Rahul http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/02/download-1.jpg தமிழர்கள் தீர்வுக்காகவும் நீதிக்காகவும் ஜனநாயக வழியில் போராடினால் அந்தப் போராட்டத்தை எவரும் கொச்சைப்படுத்தக்கூடாது என்று முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “கடந்த எமது ஆட்சியில் தமிழர்களின் மனதை நாம் வென்றிருந்ததோடு சர்வதேச சமூகத்தின் மனதையும் வென்று காட்டியிருந்தோம். ஆனால், இந்த ஆட்சியில் அவற்றை ஏன் சாதிக்க முடியாமல் உள்ளது என்பது தொட…
-
- 10 replies
- 1.2k views
- 1 follower
-
-
அரச அடக்குமுறையின் வெளிப்பாடே பொத்துவில் – பொலிகண்டி பேரணி – பிமல் ரத்நாயக்க 3 Views அரசாங்கத்தின் அடக்கு முறைகளால் அதிருப்தியடைந்த தமிழ்மக்களின் உணர்வு ரீதியான வெளிப்பாடே பொத்துவில் – பொலிகண்டி வரையான பேரணியாகும். எனினும், இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் செய்யும் சரத் வீரசேகர போன்றவர்கள், பேரணியில் கலந்து கொண்டவர்களின் உணர்வுகளைப் புரிந்துக்கொள்ளாமல் அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று பேசுவதில் ஆச்சரியம் எதுவுமில்லை, என்று மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத…
-
- 1 reply
- 495 views
-
-
சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்ட 50 பேருக்கு கொரோனா உறுதி கொழும்பில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்ட 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிவில் பாதுகாப்பு திணைக்கள குழுவில் 50 பேருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்ட கதிர்காமம் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரிக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்வதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்படவில்லை என்பதுடன், நிகழ்வின் பின்னர் கதிர்காமத்தில் வைத்து மேற…
-
- 6 replies
- 757 views
-
-
இரட்டை நிலைப்பாட்டில் அரசு; ஐ.நாவில் முறையிடவேண்டும் – சிவாஜிலிங்கம் வலியுறுத்தல் 2 Views அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டுடன் செயல்படுகின்றது என்பதன் வெளிப்பட்டுள்ளது. முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்கள் அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய வாக்குறுதியை நிராகரித்து தொற்று நோய்த் தடுப்பு இராஜாங்க அமைச்சரும், கொரோனா கட்டுப்பாட்டு விடயங்களுக்குப் பொறுப்பான அமைச்சருமான சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே எதிர்க்கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் முறையிடவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். யாழ். …
-
- 0 replies
- 336 views
-
-
சர்வதேச சமூகம் ஒருபோதும் தீர்வைப் பெற்றுத்தரமாட்டாது - தமிழர்கள் கனவு காணக்கூடாது.! "இலங்கையின் தேசிய பிரச்சினைகளுக்கு அரசுதான் தீர்வுகளை வழங்கும். அதைவிடுத்து சர்வதேச சமூகம் தீர்வைப் பெற்றுத்தரும் என்று வடக்கு, கிழக்கு தமிழ் மக்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் கனவு காணக்கூடாது." - இவ்வாறு காணி விவகார அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார். "சர்வதேச அரங்கில் அரசைப் பலவீனப்படுத்தவே பொத்துவில் தொடக்கம் - பொலிகண்டி வரையிலான பேரணியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் வடக்கு, கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் முன்னெடுத்துள்ளனர்" எனவும் அவர் குறிப்பிட்டார். எனினும், இவ்வாறான பேரணியால் அரசை ஒருபோதும் பலவீனப்படுத்த முடியாது எனவும் அவர் சுட்டிக…
-
- 10 replies
- 1.4k views
- 1 follower
-
-
அரசியலுக்கு அப்பால், கொழும்பு கிழக்கு முனையம் இலங்கையின் இனவாத அரசியல் வாதிகள் மீது தான் நமது பகையே அன்றி, அந்த நாட்டின் மீது அல்ல என்பதை நான் பல தடவை சொல்லி உள்ளேன். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம், இலங்கை அரசு அதானி குழுமத்துக்கு வழங்குமாறு இந்தியா கேட்க்கிறது. அதனை மறுப்பதில் நியாயம் உள்ளது என்றே நினைக்கிறேன். அதானி குழுமத்துக்கு, சூழலியல் கவலைகள் கிடையாது. மேலும், இந்தியாவின் துறைமுகத்துக்கு, பாரிய சர்வதேச கப்பல்கள் செல்வதில்லை. பம்பாய் முதல், சென்னை, தூத்துக்குடி வரை, இந்திய இறக்குமதி, ஏற்றுமதி பொருட்கள் கொழும்பு வந்தே மாறுகின்றன. கேரளத்தில் ஒரு துறைமுகத்தினையும், ஆந்திராவின் விசாகப்பட்டின துறைமுகத்தினையும் வாங்கியுள்ள, அதானி குழுமம்,…
-
- 1 reply
- 446 views
-
-
எனது நல்லெண்ணச் சிந்தனையை புரிந்து கொள்ளாமல் செயற்படுபவர்களுக்கு புரியும் மொழியிலேயே சொல்வேன் – டக்ளஸ் சக அரசியல் தலைமைகளைப் பலவீனப்படுத்தி, சக கட்சிகளின் வேலைத் திட்டங்களை மலினப்படுத்தி, கால்தடங்களைப் போட்டு எனது கட்சியின் செல்வாக்கை உயர்த்திக் கொள்ள முடியும் என்பதை நான் என்றும் நம்புவதில்லை என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமா டக்ளஸ் தேவானந்தா, அவ்வாறு நம்பியவர்கள் பலர் அரசியல் அரங்கில் இருந்து மக்களினால் ஓரங்கட்டப்பட்டு விட்டார் என்றும் சிலர் சுயத்தை இழந்து ஏனையவர்களின் வரலாறுகளுக்குள் புகுந்து கொண்டு மாறுவேடத்தில் மக்கள் மத்தியில் நடமாட முயற்சிக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின…
-
- 3 replies
- 791 views
-
-
மலையக மக்களுக்கு 1000 அல்ல ரூபா 2000 வழங்கப்பட வேண்டும் – சுமந்திரன் கருத்து F 22 Views மலையக தோட்ட தொழிலாளரின் 1,000 ரூபா சம்பள உயர்வு தொடர்பாக நீண்ட காலமாக கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், அதிகரிக்கும் வாழ்க்கை செலவுடன் நோக்குகையில் தற்போது இது 2,000 ரூபாயாக இருத்தல் வேண்டும் என நாடாளுமன்றத்தில் சுமந்திரன் உரையாற்றுகையில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மலையக தோட்ட தொழிலாளரின் 1,000 ரூபா சம்பள உயர்வு தொடர்பாக மேலும் உரையாற்றுகையில், “அநேக காலமாக ரூபா1,000 அடிப்படை சம்பள உயர்வுக்காய் கோரிக்கை முன்வைத்தபோதும் அதிகரிக்கும…
-
- 3 replies
- 564 views
-
-
கிழக்கில் களம் இறங்கும் சிறிரங்கா? சக்தி டிவி ஊடகவியலாளர் பின்னணியில்! எதிர்வரும் மாகாண சபை தேர்தலை குறிவைத்து கிழக்கு மாகாணத்தில் ஊடகவிலாளர்களை இணைத்து களம் இறங்கவுள்ளார் மாகாராஜா நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் ஊடகவியலாளர் சிறிரங்கா. கடந்த ஜனவரி மாதம் 19ஆம் திகதி அம்பாறை ஊடக அமையத்தில் தமிழ் தந்தி பத்திரிகையின் கிழக்கு மாகாண பணிப்பாளரும், சக்தி தொலைக்காட்சியின் பிராந்திய செய்தியாளராக பணிபுரியும் உதயகாந் தலைமையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர் சிறிரங்கா இதனை தெரிவித்துள்ளார். சிறிரங்காவின் தேர்தல் அணிக்கு கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் அனைவரினதும் ஒத்துழைப்பு கோரப்பட்ட போது அதற்கு சில அச்சு, இலத்திரனியல், தொலைக்காட்சி மற்றும் இணையத்தள ஊடகங்களில்…
-
- 0 replies
- 440 views
-