Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பைடனின் நிர்வாகமும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும் – அமெரிக்கத் தூதுவர் by : Dhackshala http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2019/05/Alaina-B.-Teplitz-1.jpg ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகம் தொடர்ந்தும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும் என இலங்கைக்கான தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அமெரிக்கா மீண்டும் மனித உரிமை பேரவையில் இணைந்துகொள்ளுமா என்பது குறித்து தற்போதைக்கு தெரிவிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனின…

  2. ஐ .நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அறிக்கை | ஸ்ரீலங்காவை சர்வேதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துக |

    • 0 replies
    • 391 views
  3. அமெரிக்கா அண்மையில் வெளியிட்டிருக்கும் தடைசெய்யப்பட்ட வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்புக்களின் பட்டியலில் புலிகளின் பெயரும் தொடர்ந்து இடம்பெறுகிறது. தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு தீவிரவாத அமைப்புக்களின் பட்டியலில் புலிகளின் பெயர் 10/08/1997 இல் இருந்து இடம்பெற்று வருகிறது. கடந்த வியாழன் மீளமைக்கப்பட்ட இப்பட்டியலில் லக்ஷர் ஐ ஜான்வி மற்றும் சீனாய் - ஐஸிஸ் ஆகிய இரு புதிய அமைப்புக்களும் அடக்கப்பட்டிருக்கின்றன. இதைவிடவும் பல இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களும் தொடர்ந்தும் இப்பட்டியலில் இடம்பெற்று வருகின்றன. https://www.state.gov/foreign-terrorist-organizations/

  4. (எம்.ஆர்.எம்.வசீம்) கொவிட் வைரஸ் தொற்றில் மரணிப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வதே இலங்கை அரசாங்கத்தின் தீர்மானமாக இருப்பது மனித உரிமையை மீறும் செயலாகும். இதனை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து செயற்படுத்தக்கூடாது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் விசேட நிபுணர் குழு விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொவிட்19 தொற்றில் மரணிக்கும் நபர்களின் சடலங்களை கட்டாய தகனம் செய்வதன் மூலம் இலங்கையில் இருக்கும் சிறுபான்மை மக்களுக்கு அநீதி ஏற்படுவதுடன் வன்முறைகள் ஏற்படுவதற்கு இடமிருக்கின்றது. தகனம் செய்வது ஒரே தீர்மான…

  5. (நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரின் போது இலங்கையின் மனித உரிமை நிலைவரங்களைத் தொடர்ந்து கண்காணித்தல், மனித உரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்களைத் திரட்டுதல், ஆராய்தல் ஆகியவற்றுக்கு ஏதுவான புதியதொரு தீர்மானத்தை கொண்டுவரவேண்டும் என்று ஜேர்மனி உள்ளிட்ட உறுப்புநாடுகளிடம் சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மிகமுக்கிய அமர்வு விரைவில் ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. இதன்போது ஒருமித்த தீர்வொன்றை அடையமுடியும் என்று நம்புகின்றோம்' என்று ஜேர்மனியத்தூதுவர் ஹோல்கர் சீபர்ட் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருந்தார். அந்தப் பதிவை மேற்கோள்காட்டி மீள்பதிவொன்றைச் செய்திருக்கும் சர்வதேச …

  6. எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து வடக்கு மாகாணத்தில் கொரோனா தடுப்பூசியை பொது மக்களுக்கு வழங்கலாம் என எதிர்பார்ப்பதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கல் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று மாவட்ட அரசாங்க அதிபர் க. கேசன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று (26) இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே ஆ.கேதீஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், “நாளை ஆறு இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளன. முதற் கட்டமாக சுகாதார உத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. இரண்டாம் கட்டமாக பாதுகாப்புப் பிரிவினருக்கு வ…

  7. யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள நெடுந்தூர பேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சபையின் பிரதி முதல்வர் து.ஈசன் குற்றம் சாட்டியுள்ளார். அத்தோடு, தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்படாது விட்டால், தான் பேரூந்து நிலைய திறப்பு விழாவில் கலந்துகொள்ளப்போவதில்லை. ஏன் எனில் எங்ளுடைய மொழி புறக்கணிக்கப்படும் இடத்தில் நான் கலந்துகொள்வது பொருத்தம் இல்லை எனவும் தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய பேருந்து நிலையமானது கடந்த ஆட்சியின் போது முன்னாள் முதல்வர் ஆனல்ட் காலத்தில் அடிக்கல் நாட்டபட்டிருந்தது. தற்போது இதன் வேலைகள் நிறைவடைந்து, 27 ஆம் திகதி காலை திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. http://cdn.virak…

  8. எதிர்க்கட்சியில் இருந்தபோது ஒவ்வொரு நாளும், தாம் தூண்டி, வளர்த்து விட்ட இனவாதிகள், பெளத்த தேரர்கள், தொழிற்சங்கங்களின் பிடியில் இருந்து, விடுபட முடியாமல், நந்தசேன கோட்டாபய ராஜபக்ச அரசு, இன்று விழி பிதுங்கி போய் தத்தளிக்கின்றது. வினை விதைத்தவன், வினையையே அறுப்பான் என்ற சான்றோர் மொழிக்கு உதாரணமாகத் திகழ்கிறது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கொழும்புத் துறைமுக கிழக்கு முனைய விவகாரத்தில் இந்தியாவைப் பங்காளியாக்க கடந்த அரசு திட்டமிட்டபோது அதை எதிர்த்து, தமது தொழிற்சங்கங்களையும், தேரர்களையும் தூண்டி விட…

  9. பாதுகாப்பு செயலாளரும் இராணுவத் தளபதியும் மட்டக்களப்பில் கூடினர் http://static2.tamilmirror.lk/assets/uploads/image_0f5e13b069.jpg வா.கிருஸ்ணா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரெட்ன மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா பங்குகொள்ளும் உயர்மட்டக் கூட்டமொன்று, மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் இன்று (26) நடைபெற்றது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் இராணுவத் தளபதியும், விமானப்படைக்குரிய ஹெலிகொப்டர் மூலம் மட்டக்களப்புக்கு வருகைதந்து, கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னதாக மாவட்டச் செயலகம் மற்றும் மட்டக்களப்பு நகரில் இராணுவத்தினரும் பொலிஸாரும் குவி…

  10. நாளை மறுதினம் இலங்கைக்கு வரும் 5 இலட்சம் இந்திய கொவிட்-19 தடுப்பூசிகள் இலங்கை 5 இலட்சம் அஸ்ட்ராஜெனெகா கொவிட்-19 தடுப்பூசிகளை இந்தியாவிடம் இருந்து பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சரவை அறிவித்துள்ளது. குறித்த அஸ்ட்ராஜெனெகா கொவிட்-19 தடுப்பூசிகள், எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கைக்கு கிடைக்குமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவையில் குறிப்பிட்டுள்ளார். மேலும், கொவிட் தடுப்பூசியை ஏனைய நாடுகளுக்கும் வழங்குகின்றமைக்கு இலங்கை அரசு இந்தியாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது. உலகில் பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி மருந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட நாடுகள் தடுப்பூசி மருந்துகளை உருவாக்கியுள்ளன. அதேபோல இந்தியாவு…

  11. மூன்று வாரங்களிற்குள் மூன்று இலட்சம் பேருக்கு கொரோனா மருந்து- சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே இலங்கையில் அடுத்த மூன்று வாரங்களிற்குள் மூன்று இலட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்புமருந்து வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். இந்தியாவிடமிருந்து 600.000 டோஸ் மருந்துகள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளன என அவர் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக மூன்று இலட்சம் பேருக்கு தலா இரண்டுடோஸ்கள் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். முன்னிலை பணியாளர்கள் பொலிஸார் முப்படையினருக்கு முதற்கட்டமாக மருந்துவழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். உலகசுகாதார ஸ்தாபனத்தின் கொவக்ஸ்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கொரோனா …

  12. நவீன் இராஜினாமா: ஆனால் விலகவில்லை ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க, கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து விலகிக்கொள்வதாக, கட்சிக்கு அறிவித்துள்ளார். எனினும், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து தான் விலகவில்லை என்றும் அறிவித்துள்ளார். தான், கட்சியின் நுவரெலியா மாவட்ட தலைவராகவும் செயற்குழு உறுப்பினராகவும் தொடர்ந்து செயற்படுவேன் என்றும் அறிவித்துள்ளார். கட்சியின் புதிய தேசிய அமைப்பாளராக பொருத்தமான உறுப்பினரை நியமிக்குமாறும் அவர், அனுப்பியுள்ள கடிதத்தின் ஊடாக கோரியுள்ளார். இதுதொடர்பில், கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதமொன்றை அனு…

    • 0 replies
    • 374 views
  13. ராஜபக்ஷ அரசு இப்போது விழி பிதுங்கி தவிக்கிறது எதிர்கட்சியில் இருந்த போது ஒவ்வொரு நாளும், தாம் தூண்டி, வளர்ந்து விட்ட இனவாதிகள், பெளத்த தேரர்கள், தொழிற்சங்கங்களின் பிடியில் இருந்து, விடுபட முடியாமல், நந்தசேன கோதாபய ராஜபக்ச அரசாங்கம், இன்று விழி பிதுங்கி போய் தத்தளிக்கிறது. வினை விதைத்தவன், வினையையே அறுப்பான் என்ற சான்றோர் மொழிக்கு உதாரணமாக திகழ்கிறது. கொழும்பு துறைமுக கிழக்கு முனைய விவகாரத்தில் இந்தியாவை பங்காளியாக்க கடந்த அரசு திட்டமிட்டபோது அதை எதிர்த்து, தமது தொழிற்சங்கங்களையும், தேரர்களையும் தூண்டி விட்டு, தெருவில் இறக்கி, அரசியல் செய்த ராஜபக்ச அரசு, இப்போது அதே இந்தியாவுக்கு, அதே கிழக்கு முனையத்தை, அதே அடிப்படையில், கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்…

    • 0 replies
    • 289 views
  14. பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக ஐரோப்பிய ஓன்றியத்திடம் இலங்கை தெரிவிப்பு பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திடம் தெரிவித்துள்ளது. இலங்கையும் ஐரோப்பிய ஒன்றியமும் தங்கள் கூட்டு ஆணைக்குழுவின் இருபத்தி மூன்றாவது சந்திப்பை நேற்று காணொளி காட்சி வாயிலாக நடத்தின. இந்த சந்திப்பின்போதே இலங்கை பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் என்றும் அதனை சர்வதேச தராதரங்களிற்கு ஏற்ற வகையில் மாற்றவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள இலங்கை பயங்கரவாத தடைச்சட்டத்தில் உரிய மாற்றங்களை மேற்கொள்வதற்காக பயங்கரவாத தடைச்சட்டம் குறித்த ஏற்பாடுகளை மீளா…

  15. வடக்கில் தனியார் கல்வி நிலையங்களை மீளத்திறக்க அனுமதி கொவிட் – 19 தொற்றுநோய் காரணமாக இடைநிறுத்தப்பட்ட தனியார் கல்வி நிலையங்களை நேற்று 25ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் மீள ஆரம்பிக்க அனுமதியளிக் கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சால் வழங்கப்பட்ட சுற்றறிக்கைக்கு அமைவாக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வடக்கு மாகாணத்தில் தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் பிரத்தியேக வகுப்புகளை நடத்த வேண்டும் என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அத்துடன், ஒவ்வொரு பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரியும் தனியார் கல்வி நிலையங்களில் கொவிட் – 19 சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுவதைக் கண்காணிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு வகுப்ப…

    • 1 reply
    • 321 views
  16. இலங்கை குறித்த ஐ.நா. ஆணையாளரின் அறிக்கை – பதில் இன்று.! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்செலே பச்செலெட்டினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கைக்கான பதிலை இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து தேசிய தமிழ் ஊடகமொன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே, அந்த அமைச்சின் செயலாளர், அட்மிரல் பேராசிரியர் ஜயனாத் கொலம்பகே இதனைத் தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கை கிடைத்துள்ளதாகவும் அட்மிரல் பேராசிரியர் ஜயனாத் கொலம்பகே இதன்போது குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் காணப்படும் தரவுகள்…

    • 1 reply
    • 494 views
  17. அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம்- அங்கஜனிடம் கோரிக்கை மனு கையளிப்பு January 26, 2021 அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு அரசிடம் பரிந்துரை செய்யுமாறு கோரி, வடக்கு கிழக்கில் உள்ள சிவில் அமைப்புக்கள் மற்றும் அரசியல் கைதிகளின் உறவுகள் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனிடம்மனு ஒன்றினை கையளித்துள்ளனர். குறித்த கோரிக்கை மனுவில், “தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பத்தினர், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் இலங்கையின் வடக்கு கிழக்கு வாழ் பொதுமக்களான நாம், எமது கோரிக்கையை இத்தாழ் தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டுவருகிறோம். இம் மனுவின் மூலம் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு அரசுக்கு பரிந்துரைக்குமாறு தங்களைக் கோருகிறோம். யாழ்ப்பாணத்திலிருந்து…

  18. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகாிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தொிவித்துள்ளது. தொழில் உறவுகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தினூடாக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த அடிப்படை சம்பளம் 1,000 ரூபாய் பெற்றுக் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை செயற்படுத்தும் வகையில் தோட்டத் தொழிலாளர் சம்பள கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள தரப்பினருடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதும் அது வெற்றியளிக…

  19. யாழில் இந்திய குடியரசு தின நிகழ்வுகள் 72ஆவது இந்திய குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழிலுள்ள இந்திய துணை தூதரக அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு நிகழ்வுகள் நடைபெற்றன குறித்த நிகழ்வின் ஆரம்பத்தில் துணை தூதுவர் ச. பாலசந்திரன், இந்திய தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து குடியரசு தின நிகழ்வுகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் தூதரக அதிகாரிகள், அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/யாழில்-இந்திய-குடியரசு-த-2/

  20. மீனவர் பிரச்சினைப் பேசித் தீர்க்க வேண்டியது – சுரேஷ் பிரேமச்சந்திரன் 16 Views தொடரும் மீனவர் பிரச்சினை, பேசித் தீர்க்க வேண்டுமே தவிர மாற்று நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டுமென ஈ.பி.ஆர்.எல்.எஃப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார். கடந்த 18ம் திகதி இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட நான்கு மீனவர்கள் தொடர்பில் தமிழ் மக்கள் சார்பான ஆழ்ந்த அனுதாபங்களையும் அவர் தெரிவித்துள்ளார். குறித்த மீனவர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்தியா எமது அருகில் இருக்கக் கூடிய நாடு. பாக்கு நீரிணையில் மன்னார் வளைகுடாவில், வட பகுதியில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் தமிழ் மக்கள்தான் மீன் பிடிக்கி…

  21. -எஸ்.நிதர்ஷன் ஈபீஆர்எல்எப் அமைப்பின் தலைவரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் இணைப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் அரசியல் விபச்சாரி என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் - கொக்குவிலில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போது, ஐ.நாவுக்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வரைபில் இனப்படுகொலை என்ற வசனத்தை உள்ளடக்கவில்லை என்றும், சர்வஜன வாக்கெடுப்பை கNஐந்திரகுமார் விரும்பவில்லை என்பது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை சுரேஷ் பிரேமச…

  22. (ஆர்.ராம்) யாழ்.நயினாதீவு, நெடுந்தீவு, மற்றும் அனலைதீவு ஆகிய பகுதிகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (Hybrid Renewable Energy Grid) அமைப்பை உருவாக்குவதற்கு சீனாவுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதித்துள்ளதன் ஊடாக தென்னிந்தியாவை சீனா மிகவும் நெருங்கி வந்துள்ளது என்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/143847/suresh_01.jpg இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலான இலங்கை அரசாங்கத்தின் இந்த நகர்வினை கட்டுப்படுத்துவதற்கு தமிழர்கள் அதிகாரம் அற்றவர்களாக இருக்கின்றார்கள் என்றும் இந்தியாவின் கவனத்திற்கு கொண்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த விடயத்தில் மத்த…

    • 2 replies
    • 934 views
  23. தமிழக மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து வடக்கு தழுவிய கதவடைப்பு போராட்டத்திற்கு வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சங்கங்களின் சாமச கூட்டம் இன்று (22) நடைபெற்றது. இக்கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் சமாசத்தினர் மேலும் தெரிவித்ததாவது, எல்லை தாண்டி மீன்பிடியில் இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக ஈடுபடுவதாலேயே வட கடலில் மீனவர்களுக்கிடையே பிரச்சினைகள் ஏற்படுகின்றது. வடக்கு மீனவர்கள் மீது பல தாக்குதல்களை இந்திய மீனவர்களே மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, எல்லையைத் தாண்டும் தமிழக மீனவர்களைக் கடற்படையினர் கைதுசெய்யும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்பதுடன் இது தொடர வேண்டும் என்…

    • 48 replies
    • 4.6k views
  24. (எம்.மனோசித்ரா) கொழும்பில் திடீரென தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் உரிய அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும். ஆரம்பத்தில் காணப்பட்டதைப் போன்று மேல் மாகாணத்தில் அபாய நிலைமை மீண்டும் அதிகரித்துள்ளது. ஞாயிறன்று நாடளாவிய ரீதியில் இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 75 சதவீதமானோர் மேல் மாகாணத்தில் இனங்காணப்பட்டிருக்கிறார்கள் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அலுக்கே இதனை சுட்டிக்காட்டினார். அவர் மேலும் கூறுகையில் , இது வரையில் இனங்காணப்பட்டதை விட மிகக் கூடுதலானளவு தொற்றாளர்கள் நேற்று ஞாயிற்றுக்கி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.