Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ்.மாநகர சபை பாதீடு தோல்வி; மேயர் பதவியிழப்பு யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் (பாதீடு) 2ஆவது முறையாகவும் 3 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. பாதீட்டுத் திட்டத்துக்கு ஆதரவாக 21 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மாநகர முதல்வர் ஆர்னோல்ட் தனது பதவியை இழந்துள்ளார். யாழ்.மாநகர சபை பாதீடு தோல்வி; மேயர் பதவியிழப்பு – Thinakkural யாழ். மாநகர சபையின் வரவு செலவு திட்டம் தோல்வி! யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டிக்கான வரவு - செலவுத் திட்டம் 03 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. வரவு - செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 21 வாக்க…

    • 8 replies
    • 1.1k views
  2. ஜனவரியில் இலங்கை வருகிறார் ஐ.நா. அரசியல் பிரிவின் தலைவர்.! ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட பிரதிநிதி ஒருவரை செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரெஸ், இலங்கைக்கு அனுப்பவுள்ளார் என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஐ.நாவின் அரசியல் பிரிவு தலைவர் ரோஸ்மேரி டிகார்லோவே (Rosemary A. DiCarlo) 2021 ஜனவரி ஆரம்பத்தில் கொழும்பு வரவுள்ளார் எனத் தெரியவருகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மற்றும் மட்டுபடுத்தப்பட்ட சில சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடனும் அவர் முக்கிய சந்திப்புகளை நடத்துவதற்கு எதிர்ப்பார்த்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள…

  3. முல்லைத்தீவில் பழங்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு.! முல்லைத்தீவு – நாகசோலை வனப்பகுதியில் அனுராதபுரம் யுகத்திற்கு சொந்தமான பழங்கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் உரிமைகள் தொடர்பான ஆய்வாளர் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு பிரதேசத்திற்கு பொறுப்பான அதிகாரிகள் சிலரால் இந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அனுராதபுரம் யுகம் நிறைவடைந்த காலமான கிருஸ்து வருடம் 946 முதல் 954 ஆகிய யுகத்தில் அதனை ஆட்சி செய்த 4 ஆவது உதய மன்னருக்கு சொந்தமான பழமைவாய்ந்த கல்வெட்டே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் உரிமைகள் தொடர்பான ஆய்வாளர் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அந்த காலத்த…

  4. இந்தியா வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்திற்காக 1.2 பில்லியன் ரூபாவினை இலங்கைக்கு வழங்கியது (அஷ்ரப் ஏ. சமத்) இந்திய அரசாங்கம் இலங்கையில் வீடுகள் அற்ற மற்றும் குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்கு 2,400 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்திற்காக 1.2 பில்லியன் ரூபாவினை இலங்கைக்கு வழங்கியுள்ளது. மேற்படி திட்டத்தின் 4 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடும் வைபவம் நேற்று வெள்ளிக்கிழமை வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இவ் வைபவத்தில் இந்திய உயா் ஸ்தாணிகர் கோபால் பாக்லே, வீடமைப்பு நிர்மாணத்துறை இராஜாங்க அமைச்சின் செயலாளா் கே.ரீ.அபேகுணவா்த்தன ஆகியோா்களுக்கிடையில ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. இந் நிகழ்வில் வீடமைப்பு நிர்மாணத்துறை கட்ட…

  5. 2020 ஆம் ஆண்டின் சிறந்த விவசாய விஞ்ஞானி விருதை பெற்றார் கலாநிதி எஸ்ஜே அரசகேசரி 2020 ஆம் ஆண்டின் சிறந்த விவசாய விஞ்ஞானியாக கிளிநொச்சி பிராந்திய விவசாய ஆராச்சி அபிவிருத்தி நிலையத்தின் மேலதிக பணிப்பாளர் (ஆராச்சி) கலாநிதி எஸ்ஜே அரசகேசரிக்கு வழங்கப்பட்டுள்ளது. நேற்று (19.12.2020) பேராதனையில் இடம்பெற்ற நிகழ்வில் இவ்விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது. வருடந்தோறும் விவசாயத்துறையில் புதிய கண்டுப்பிடிப்புக்களை மேற்கொள்ளும் ஆராச்சியாளர்களில் சிறந்த ஒருவர் தெரிவு செய்யப்பட்டு இவ் விருது வழங்கக்கப்பட்டு வருகிறது. கடந்த 22 வருடங்களாக இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. 22 வருடங்களாக இடம்பெற்று வருகின்ற இவ் விருது வழங்கும் நிகழ்வில் முதன் முதலாக தமிழர் ஒருவருக்கு வழ…

  6. முல்லைத்தீவில், இந்திய இழுவைப் படகினால், பாதிக்கப்பட்ட மீனவர்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்கு, வடமாகாண மீனவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை கட்டுப்படுத்த வேண்டும் என இலங்கை மற்றும் இந்திய அரசிடம் வடமாகாண கடற்றொழிலாளர்கள் இணையத்தினரால், இன்று கோரிக்கைககள் அடங்கிய மகஜர்கள் கையளிக்கப்பட்டுள்ளன. குறித்த மகஜர்களை, யாழிலுள்ள இந்திய துணைத்தூதுவர் அலுவலகத்திலும், யாழ் மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபரிடமும் வடமாகாண கடற்றொழிலாளர்கள் இணையத்தினர் இன்று வழங்கி வைத்தனர். முல்லைத்தீவு மீனவர்களின் போராட்டத்திற்கு வடக்கு மீனவர்கள் ஆதரவு | Virakesari.lk

  7. நாடாளுமன்ற கொறடா பதவியை துறந்தார் சிறீதரன் எம்பி.! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் கொறடா பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் திடீரென விலகியுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் நாடாளுன்ற உறுப்பினர் சி.சிறீதரனைத் தொடர்புகொண்டு வினவியபோது தான் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் கொறடா பதவியில் இருந்து வெளியேறியமை உண்மை எனத் தெரிவித்தார். அதற்கான காரணத்தை அவரிடம் வினவியபோது, "நான் கடந்த 5 வருடங்களாகக் குறித்த பதவியில் இருந்துள்ளேன். அது மட்டுமல்லாது கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் கருத்தாடல்கள் ஆரோக்கியமாக இல்லாமையாலும் அவர்கள் ஊடகங்களில் கொறடா என்கின்ற பதவியை வைத்து சிறீதரன் பெரும் பணம் சம்பாதிப்பது போல் ஒரு ம…

  8. தமிழ் அரசியல் கைதிகள் பகடைக்காயாக்கப்படுகிறார்கள். – அருட்தந்தை ம.சக்திவேல் 22 Views அரச தரப்பின் மரணதண்டனைக் கைதி ஒருவரின் விடுதலைக்காக தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் பகடைக்காயாக்கப்படுவதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை ம.சக்திவேல் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பாக அவரிடம் ‘இலக்கு’ மின்னிதழ் மேற்கொண்ட நேர்காணலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அந்த நேர்காணலின் கருத்து வடிவம். அரசியல் சுயலாபம் கருதி கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன அரசியல் கைதிகள் விடயம் தொடர்பாக பல தடவைகள் ஆட்சியாளர்களுடன் ப…

  9. மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தை நாடுவதாக எம்.ஏ. சுமந்திரன் கருத்து

  10. சிகிச்சை தாமதத்தால் சிறுமி மரணம்- குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய உத்தரவு 32 Views மட்டக்களப்பு தேற்றாத்தீவில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த சிறுமிக்கு முறையான சிகிச்சைகள் வழங்கப்படாமல் உயிரிழந்தது தொடர்பிலான வழக்கில் குற்றஞ்சாட்டப் பட்டவர்களை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி திருமதி மங்களா சங்கர் தெரிவித்தார். கடந்த 20-11-2020 அன்று தேற்றாதீவு என்னும் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 07வயது சிறுமி ஒருவர் படுகாயமடைந்திருந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். குறித்த விபத்தின்போது குறித்த சிறுமி தலையில் பலத்த காயம…

  11. அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா, பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட மணிவண்ணன் தொடர்பான வழக்கு வரும் பெப்ரவரி 17ம் திகதிவரை யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றினால் ஒத்திவைக்கட்டது. பிரதிவாதிகள் இருவர் தொடர்பிலும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு நீதிமன்ற அறிவித்தலை சேர்ப்பிப்பதற்கு சென்ற போதும் அவர்கள் அங்கு இல்லை என நீதிமன்ற கட்டளைச் சேவகரால் அறிக்கையிட்டதை ஆராய்ந்த மன்று, அந்த முகவரியில் பிரதிவாதிகள் காணும் வகையில் அறிவித்தலை ஒட்டுமாறு உத்தரவிட்டது. இந்த வழக்கு இன்று (18) அழைக்கப்பட்ட போதே யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம், இந்த உத்தரவை வழங்கியது. “அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் உறுப்புரிம…

  12. கொரோனா நோய்த் தொற்று நிலமையைக் கருத்திற் கொண்டு வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பொதுச் சந்தைகளையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரனின் ஆலோசனைக்கு அமைய, வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக் டிறஞ்சனால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், சந்தை வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு பயன்தரும் வகையில் வீதியோரம் அல்லது நடமாடும் விற்பனையை மேற்கொள்ள அனுமதிக்குமாறும் உள்ளூராட்சி ஆணையாளரால் அறிவுறுத்தபட்டுள்ளது. வட மாகாணத்தின் அனைத்து பொதுச் சந்தைகளுக்கும் பூட்டு | Virakesari.lk

  13. அரசியல் கைதிகள் விடுவிக்கப்படப்போவதாக அறிகிறோம் என்று வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். கடந்த 1400 நாட்களாக வவுனியாவில் சுழற்சிமுறை உணவுதவிர்ப்பு போராட்டம் மேற்கொண்டுவரும் குறித்த உறவுகள் இன்றையதினம் அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தவிருந்தனர். அதற்கு வவுனியா நீதிமன்றம் தடைவிதித்திருந்தது. இந்நிலையில் இன்றையதினம் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், இன்றுடன் தாய்மாரின் போராட்டம் 1400 நாட்களை எட்டுகிறது. எங்கள் ஜனநாயக போராட்டத்துக்கு உலகத்தின் பார்வை உள்ளது. இந்த நாளில், நாங்கள் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்திய…

  14. (எம்.நியூட்டன்) பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாகவே அல்லது பிராந்திய விமான நிலையமாகவே தொடர்ந்து செயற்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறோமச்சந்திரன் பலாலி விமான நிலையத்தை மூடுவதற்கு மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளை அரசாங்கம் கைவிடவேண்டும். மேலும் இந்த நடவடிக்கைக்கு எதிராக வடக்கு கிழக்கில் இருந்து அமைச்சர்களாக இருப்பவர்கள் அரசாங்கத்துடன் இருப்பவர்கள் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற ஏனை பாராளுமன்ற உறு்பபினர்கள் இதற்காக குரல் கொடுக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடாத்திய ஊடகவியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத்…

  15. கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை தகனம் செய்வது இடைநிறுத்தம்? கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை தகனம் செய்யும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. பொது சுகாதார பரிசோதகர்கள் இதனை தெரிவித்துள்ளனர் என ஆங்கில இணையம் செய்தி வெளியி;ட்டுள்ளது. கொரோனாவினால் உயிரிழந்த நிலையில் உரிமை கோரப்படாமல் உள்ள உடல்களை தகனம் செய்வதை இடைநிறுத்துமாறு கொழும்பு மாநகர சபைக்கு அறிவறுத்தல் வந்துள்ளதாக இணையத்தளம் தெரிவித்துள்ளது. பொதுசுகாதார சங்கத்தின் செயலாளர் பாலசூரிய இதனை உறுதி செய்துள்ளார். உரிமை கோரப்படாத உடல்கள் பிரேதஅறையிலேயே தொடர்ந்திருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களி…

  16. அடுத்த ஜெனீவா அமர்வில் விக்கி, கஜேந்திரகுமாருடன் கூட்டிணைந்து செயற்படுவதற்கு கூட்டமைப்பு முஸ்தீபு (ஆர்.ராம்) இறுதிப்போரில் நடைபெற்ற மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறலிலிருந்து இலங்கை அரசாங்கம் விடுபட்டுச் செல்லாதிருக்கும் வகையிலும், இந்த விடயத்தில் சர்வதேசத்தின் பிரசன்னம் தொடர்ந்தும் நீடித்திருப்பதற்காகவும் அடுத்த மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் மக்கள் பிரதிநிதித்துவத்தினைக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியவற்றுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடுமையான பிரயத்தனத்துடன் முஸ்தீபுச் செய்துள்ளது. இதற்…

  17. ஜெனீவாவில் தமிழ்க் கட்சிகள் ஒருமித்த முடிவுக்கு வர வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை – சுரேஸ்! ஜெனீவாவில் தமிழ்க் கட்சிகள் ஒருமித்த முடிவுக்கு வர வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை என ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “நானும் கூறுகின்றேன் தமிழ்க் கட்சிகள் ஒருமித்த முடிவுக்கு வர வேண்டும். இதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. ஆனால் ஒன்று பட்டு என்ன செய்வது. கால அவகாசத்தினை வழங்குவதா? இல்லை என்று சொன்னால் வேறு வழிமுறைகளை ந…

  18. இலங்கைக்கு தடுப்பூசி விரைவில் கிடையாது – கொரோனா வைரஸ் விவகாரங்களுக்கான ராஜாங்க அமைச்சர் சுதர்சினி கூறுகிறார் இலங்கைக்கு கொரோனா வைரஸ் மருந்து கூடிய விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என கொரோனா வைரஸ் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் மருந்தை இறக்குமதி செய்வதற்கான பேச்சுக்கள் எதனையும் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் கூறினார். அனைத்து மருந்துகளும் இன்னும் சோதனை நிலையிலேயே உள்ளன என்றும் , உலக சுகாதார நிறுவனம் எந்த மருந்துக்கும் இன்னமும் அனுமதி வழங்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ள இராஜாங்க அமைச்சர், உலகசுகாதார நிறுவனம்அங்கீகாரமளித்ததும் மிகச்சிறந்த மருந்தை இலங்கை அரசு தெரிவு செய்யும் எனவும் குறிப்பிட்டார். …

  19. யாழ். வட்டுக்கோட்டைக்கு விஜயம் மேற்கொண்ட இராணுவத் தளபதி சவேந்திர சில்வா! வட்டுக்கோட்டை தென்மேற்கு உப்புவயல் குளம் இராணுவதளபதி சவேந்திர சில்வாவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியின் வழிகாட்டலில் தியாகி அறக்கொடை நிறுவனத்தினரின் நிதிப் பங்களிப்பில் வட்டுக்கோட்டை தென்மேற்கு உப்புவயல் குளம் புனரமைப்பு செய்யப்பட்டு இன்றைய தினம் பொது மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இராணுவத்தினரால் கடந்த மூன்று மாதமாக புனரமைப்பு செய்யப்பட்ட குளத்தினை கொரோனா ஒழிப்பு செயலணியின் தலைவரும் ராணுவ தளபதியுமான லெப் ஜெனரல் சவேந்திர சில்வா திறந்து வைத்தார். யாழ் நண்பர்கள் அமைப்பு, வட்டுக்கோட்டை தென்மேற்கு விவசாய சம்மேளனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் …

  20. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் 33 பேருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு – சரத் வீரசேகர 14 Views உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள 267 பேரில் 33 பேருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். கண்டி தலதா மாளிகையில் நேற்று இடம்பெற்ற வழிபாட்டில் கலந்துகொண்ட பின்னர் அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு: “உயிர்த்த ஞாயிறு தினத்தில் 8 இடங்களில் குண்டை வெடிக்கச் செய்தமை தொடர்பான பொலிஸ் விசாரணை நடத்தப்பட்டு, அது தொடர்பான 8 விசாரணை அறிக்கை…

  21. இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு – மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் 600 ஊழியர்களுக்கு இடமாற்றம்! மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் 600 ஊழியர்களுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சட்டத்தரணி சுமித் அழககோன் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதத்தின் பின்னர் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள் மாத்திரமே தொடர்ந்தும் திணைக்கள பணியில் ஈடுபடுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலஞ்ச ஊழல் தொடர்பில் பொது மக்களிடம் இருந்து கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://athavannews.com/இலஞ்ச-ஊழல்-குற்றச்சாட்டு/

  22. கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதிக்காவிட்டால் பாரிய பிரச்சினைகள் உருவெடுக்கும். அது முஸ்லிம் இளைஞர்களை ஆயுதமேந்தவும் வைத்து விடலாம் என நீதி அமைச்சர் அலி சப்ரி எச்சரிக்கை விடுத்துள்ளார். சமூக வலைத்தளமொன்றில் இயங்கி வரும் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இந்தக் கருத்துக்களைக் கூறியுள்ளார். கொரோனா வைரஸால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை மாலைதீவில் புதைக்க முடியும் என்றால், அவற்றை ஏன் இலங்கையில் புதைக்க முடியாது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா ஜனாஸாக்களை அடக்கம் செய்வதன் ஊடாகத் தொற்று பரவாது என்பதை தொற்று நோய் மற்றும் வைரஸ் குறித்த பிரபல்யம் வாய்ந்த பேராசிரியர் மலித் பீரிஸ் குறிப்பிட்டுள்ள…

  23. கிளிநொச்சி கல்வி வலயத்தை 2 ஆக பிரிக்க அங்கீகாரம் கிளிநொச்சி கல்வி வலயத்தினை இரண்டாக பிரிக்க மாவட்ட அபிவிருத்தி குழு அங்கீகாரம் வழங்கியது. நேற்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் குறித்த தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் தனி கல்வி வலயமாக இருந்த கிளிநொச்சி கல்வி வலயமானது கரைச்சி, பூநகரி கல்வி கோட்டங்களை இணைத்து தனி கல்வி வலயமாகவும், கண்டாவளை பச்சிலைப்பள்ளி கல்வி கோட்டங்களை இணைத்து தனி கல்வி வலயமாகவும் இரண்டாக பிரிக்க நேற்றைய அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஆராயப்பட்டது. அதற்கு அமைவாக ஏகமனதாக தீர்மானம் எட்டப்பட்டு்ளதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார். எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் நேற்றைய…

  24. 46 ஆவது ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கை மீது புதிய பிரேரணை - அமெரிக்க தூதுவர் சுமந்திரனிடம் தெரிவிப்பு (ஆர்.ராம்) • 30/1 தீர்மானத்திற்கு மேலதிகமான விடயங்களை தயார்ப்படுத்துமாறும் யோசனை • சிரியா, மியன்மார் விடயப் பொறிமுறைகள் குறித்தும் கவனம் • புதிய அரசியலமைப்பு செயற்பாடுகள் தொடர்பாக ஆழ்ந்த கரிசனை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள நிலையில் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் வகையில் புதிய பிரேரணையொன்றையே கொண்டுவருவதற்கு இயலுமானதாக இருக்கும் என்று இலங்கை மற்றும் மாலை தீவுக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிஸ் தெரிவித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பே…

  25. மருதனார்மடம் கொரோனா கொத்தணி 73 ஆகியது – நேற்று ஐந்து பேருக்கு தொற்று உறுதி 14 Views மருதனார் மடம் பொதுச் சந்தை கொரோனா வைரஸ் கொத்தணியில் மேலும் ஐந்து பேருக்குத் தொற்று நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். சுன்னாகம் பொதுச்சந்தையில் வியாபாரத்தில் ஈடுபடும் 110 வியாபாரிகளிடம் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையிலேயே ஐந்து பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இதன்மூலம் மருதனார்மடம் கோரோனா வைரஸ் கொத்தணியின் மூலம்பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 73ஆக அதிகரித்துள்ளது. நேற்று அடையாளம் காணப்பட்ட இருவரும் உடுவில் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.