Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கூட்டு ஒப்பந்தம் அமுலில் இருப்பதால் தான் மலையகம் பாதுகாக்கப்படுகின்றது கூட்டு ஒப்பந்தம் அமுலில் இருப்பதால்தான் மலையகம் பாதுகாக்கப்படுகின்றது. எனவே, அவ்வொப்பந்தம் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, இந்தியா அரசாங்கத்தால் வடக்கு, கிழக்குக்கு வழங்கப்பட்ட 50 ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் 4 ஆயிரம் வீடுகளை மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான், இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, மலையகத்துக்கு பெற்றுக்கொடுத்தார். திட்டம் சிறப்பாக செய்யப்பட்டுவந்தது. ஆனால் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னர் சிலர் அத…

  2. மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துவது குறித்து ஆராயுமாறு பிரதமர் அறிவுறுத்தல் by : Yuganthini http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/mahindha-1.jpg மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி, அதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் பிரதமருக்கும் இடையே இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல், விஜேராமவிலுள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். பழைய அல்லது புதிய முறைக்கு அமைவாக தேர்தலை நடத்துவ…

  3. கொரோனாவினால் உயிரிழந்த குழந்தையின் உடலை பொறுப்பேற்க பெற்றோர் மறுப்பு கொரோனா வைரசினால் உயிரிழந்த 20 நாள் குழந்தையின் பெற்றோர் குழந்தையின் உடலை பொறுப்பேற்க மறுத்துள்ளனர். பிசிஆர் சோதனை குறித்து தங்களிற்கு கரிசனைகள் உள்ளதாக அவர்கள் கொழும்பு கசட்டிற்கு தெரிவித்துள்ளனர். தங்களது மத நம்பிக்கையின் அடிப்படையில் குழந்தையின் உடலை அடக்கம் செய்யுமாறு தாங்கள் வேண்டுகோள் விடுத்ததாகவும் எனினும் அதனை அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக குழந்தையின் உடலை பொறுப்பேற்க மறுத்துவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவினால் உயிரிழந்த குழந்தையின் உடலை பொறுப்பேற்க பெற்றோர் மறுப்பு – Thin…

    • 26 replies
    • 2.1k views
  4. மகாகவி பாரதியாரின் 138வது பிறந்த தின நினைவு நிகழ்வு December 11, 2020 மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 138வது பிறந்த தின நினைவு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவர் அலுவலகத்தில் ஏற்பாட்டில் நல்லூர் ஆலயத்திற்கு பின்பக்க வீதியிலுள்ள பாரதியார் நினைவுச் சிலை அடியில் இந்நிகழ்வு நடைபெற்றது. இதன்போது பாரதியார் நினைவுச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. பாரதியார் நினைவுத் தூபிக்கு இந்திய துணைத் தூதுவர் மலர்மாலை அணிக்க, தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்கள் பாரதியாருக்கு மலர்மாலை அணிவித்தனர். இதன் பின்னர் பாரதியாரின் திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. …

  5. தேர்தலை எதிர்பார்த்து எந்தவொரு விடயமும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை – பிரதமர் மஹிந்த தேர்தலை எதிர்பார்த்து எந்தவொரு விடயமும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை. நாம் அந்த மோசடி செயலை மக்களுக்கு செய்ய மாட்டோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத்தில் வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான விவாதத்தின்போது, பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில் சுபீட்சத்தின் நோக்கில் விவசாயத்துறை குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளோம். நமக்கான உணவை நாமே உற்பத்தி செய்வது நமது நாட்டை கட்டியெழுப்புவதற்கான சிறந்த வழியாகும். இவ்வளவு காலமும் ஒரு கிலோகிராம் நெல்லிற்கு 32 ரூபாயே செலு…

  6. தமிழ் மக்கள் மிதிக்கப்படாமல் – மதிக்கப்படும் சூழலை உருவாக்குவோம் வாருங்கள் : டக்ளஸ் தேவானந்தா அழைப்பு பேரினவாத தீக்கு எண்ணெய் வார்க்கின்ற செயற்பாடுகளை போலித் தமிழ் தேசிய வாதிகள் குத்தகைக்கு எடுத்துள்ளனர் என்று குற்றஞ்சாட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சில தரப்புக்களிடம் சலூன் கதவுகள் போன்று இருக்கும் பேரினவாதத்தினை திறக்கச் செய்வதால் எமது மக்களே பாதிக்கப்படுகின்றனர் எனவும் ஆதங்கம் வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(வியாழக்கிழமை) நடைபெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தின் இறுதி நாள் அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மக்கள் வாழ்வாதாரம் – சுகாதாரம் – பொருளாதார …

  7. இந்தியா தொடர்ந்தும் 13 வது திருத்தத்தை வலியுறுத்துமா? இந்திய உயர்ஸ்தானிகரின் பதில் என்ன? ஒரு பிரிக்க முடியாத,வலுவான பாதுகாப்பான ஜனநாயக பன்மைத்துவ இலங்கை என்பது இலங்கையின் நலனிற்கு அப்பால் இந்தியாவின் நலனுடன் தொடர்புபட்டது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார் பேட்டியொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்தியா தொடர்ந்தும் 13 வது திருத்தத்தை வலியுறுத்துமா?இலங்கையில் அரசியல்ரீதியில் மிகவும் உணர்பூர்வமான விடயம் குறித்து ஏன் இந்தியா தொடர்ந்து கருத்துதெரிவித்து வருகின்றது என்ற கேள்விக்கு அவர் வழங்கியுள்ள பதிலில் தெரிவித்துள்ளதாவது நீங்கள் நன்கு அறிந்துள்ளதை போல இந்த விடயம் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு தெளிவானது…

  8. கைதிகளின் போராட்டம் வன்முறையாக மாறியதற்கான காரணம் வெளியானது மஹர சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதிலிருந்து தப்பிக்க கைதிகள் ஆரம்பித்த போராட்டத்தை, பாதாள உலகக் குழுக்களின் உறுப்பினர்கள் சிலரே வன்முறையாக மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மஹர சிறைச்சாலை விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய ஐந்து பேர் கொண்ட குழுவே இதனைத் தெரிவித்துள்ளது. குறித்த குழுவின் அறிக்கையை நீதியமைச்சர் நாடாளுமன்றில் தாக்கல் செய்திருந்தார். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “சில கும்பல் தலைவர்கள் ஒருவருக்கொருவர் பழிவாங்க முயன்றதால், கைதிகள் நடத்திய ஆர்ப்பாட்டம் வன்முறைக்கு திரும்பியுள்ளது. மேலும், கைதிகள் யாரும் துப்பாக்கிகள் ஏதும் வைத்திருக்கவில்லை. அதிகாரி…

  9. மீண்டும் வறண்ட நிலத்தை அடையாளம் காண பிரதமர் ஆலோசனை கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு ஆழமான நிலத்தடி நீர் மட்டத்தை கொண்ட வறண்ட நிலத்தை அடையாளம் காணுமாறு சுகாதார அதிகாரிகளுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார். இன்று (10) இடம்பெற்ற கூட்டத்தில் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார். மத அல்லது இன அடிப்படையில் சுகாதார பிரச்சினைகளின் முடிவை எடுக்க முடியாது. எனவே சுகாதார வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட வேண்டுமெனவும் பிரதமர் தெரிவித்தார். இதேவேளை கடந்த மாதம் 9ம் திகதி, ஜனாதிபதியும் கொரோனாவால் இறக்கும் முஸ்லிம்களின் உடல்களை புதைப்பதற்கான வறண்ட நிலத்தை ஒதுக்கும் சாத்தியம் பற்றியும், ஏனைய நாடுகளை போன்று உடல்களை அடக்கம் செய்வதற்கான சாத்தியக்க…

    • 2 replies
    • 617 views
  10. தமிழ் அரசியல் கைதிகள் உருக்கமான வேண்டுகோள்.! அவர்களின் ஊடக அறிக்கை பின்வருமாறு நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடி நிலைமையினையடுத்து, ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய அரசாங்கம் சில நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அறிய முடிகிறது. அந்தவகையில் தகுந்த பொறிமுறையை இனங்கண்டு, சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சுமார் 8000 கைதிகளை விடுவிப்பதற்கும் மரண தண்டனை மற்றும் ஆயுள்தண்டனைக் கைதிகளின் தண்டனைக் காலத்தை வரையறுப்பதற்குமாடன முன்னாயத்தங்களை மேற்கொண்டிருப்பதாக சிறைத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில சிறுபான்மைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் கரிசனை காட்டத் தொடங்கி இருக்கி…

  11. பேரினவாத தீக்கு எண்ணெய் வார்க்கின்ற செயற்பாடுகளை போலித் தமிழ் தேசியவாதிகள் குத்தகைக்கு எடுத்துள்ளனர் என்று குற்றஞ்சாட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சில தரப்புக்களிடம் சலூன் கதவுகள் போன்று இருக்கும் பேரினவாதத்தினை திறக்கச் செய்வதால் எமது மக்களே பாதிக்கப்படுகின்றனர் எனவும் ஆதங்கம் வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(10.12.2020) நடைபெற்ற வரவு - செலவுத் திட்ட விவாதத்தின் இறுதி நாள் அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர், மக்கள் வாழ்வாதாரம், சுகாதாரம், பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்புகளுக்கு முகங்கொடுத்து வருகின்ற நிலையில், மக்களது பிரச்சினைகளை வ…

    • 2 replies
    • 382 views
  12. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) யுத்தத்தின் இறுதியிலே கிட்டத்தட்ட ஒரு இலட்சத்து 47 ஆயிரம் தமிழர்கள் இராணுவத்தினரிடம் அகப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் .இவர்களுக்கு என்ன நடந்தது என சபையில் கேள்வி எழுப்பிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எம்.பி. செல்வராஜா கஜேந்திரன் ,நிதி அமைச்சின் நடவடிக்கைகள் ,நிதி ஒதுக்கீடுகள் அனைத்தும் முழுமையான இனவாத கோணத்திலானது எனவும் குற்றம் சுமத்தினார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/133663/selvarasa.jpg பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை, 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இறுதி நாள் விவாதமான நிதி அமைச்சு மற்றம் நிதி இராஜாங்க அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார், …

  13. கல்கிஸை ரயில் நிலையத்தில் மாண்டரின் (சீன) மொழியில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை குறித்து இலங்கை ரயில்வே திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. http://cdn.virakesari.lk/uploads/medium/file/140359/Eop_5avXcAAL7nZ.jpg நீண்ட தூர ரயில் சேவைகளின் விபரங்களை அறிவிப்பானது மாண்டரின் மற்றும் ஆங்கில மொழிகளில் குறிக்கும் வகையில் அமைந்துள்ள நிலையில் அதில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த அறிவிப்பு பலகையின் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தான் ரயில்வே பொது முகாமையாளராக கடமைகளை பொறுப்பேற்க முன்னர் இது நிறுவப்பட்டுள்ளதாக திலந்தா பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும் குறித்த …

    • 29 replies
    • 2.7k views
  14. (வ.சக்திவேல்) கேள்விகளுக்கான பதிலோடு செயற்பாடுகளும் இருக்க வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்றைய தினம் வாய்மொழி மூலமான கேள்வி நேரத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘நீங்கள் அனைத்து விடயங்களையும் செய்ய முடியும் எனக் கூறுகின்றீர்கள். ஆனால் உங்களுடைய வரவு செலவுத் திட்டத்தில் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை முழுமையாக பயன்படுத்தினாலும் கூட இந்த அனைத்து விடயங்களுக்கும் செய்யும் அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்காது. அதேபோன்று பால்சேனை என்ற பிரதேசத்தில் வாகரையில் அந்த இடத…

  15. மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் விசாலமான காற்றாலை மின் நிலையம் நாளை 8 ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின்பால் இலங்கை கவனம் செலுத்தியிருப்பது வெற்றியென இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியதுடன், காற்றாலை மின் உற்பத்தியானது சுற்றாடல் நேயமிக்கதெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். மன்னாரில் காற்றாலை மின்நிலையம்: நாளை திறப்பு விழா!!! | NewUthayan

  16. முல்லைத்தீவு கடற்கரையினை அண்மித்து, இந்திய இழுவைப் படகுகள் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக கடற்கரையில் இருந்து சுமர் 2 கிலோமீற்றர் தூரத்திற்குள், அத்துமீறி நுழைந்து கடற்றொழில் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தமையினை அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. இதுதொடர்பில், முல்லைத்தீவு மீனவர்கள் கடற்படையினருக்குத் தெரியப்படுத்தியபோதும், கொரோனா அச்சம் காரணமாக இந்திய இழுவைப் படகுகளுக்கு அருகே செல்லமுடியாதென கடற்படையினர் மறுப்புத்தெரிவித்துள்ளதுடன், மீனவர்களையும் இந்திய இழுவைப்படகுகளுக்கு அருகே செல்லக்கூடாது என உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில் முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சமாசத்தலைவர் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், இந்திய இழுவைப்படகுகள் …

  17. கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உழவனூர் தம்பிராசாபுரம் காட்டுப்பகுதிகளில் பறவைகள் மற்றும் விலங்குகள் வேட்டையாடப்படுகின்றன என பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக நாரைகள் மற்றும் பெரிய வகை கொக்குகள் என்பன இங்கு வருகின்றன. இவ்வாறு வருகின்ற வலசைப் பறவைகளையே இனந்தெரியாத நபர்கள் இரவில் வேட்டையாடுகின்றனர் என பொது மக்கள் தெரிவித்துள்ளனர். கொக்கு, மயில், மற்றும் விலங்குகளும் சுடப்படுகின்ற துப்பாக்கிச் சத்தங்கள் கேட்பதாக பொது மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களில் அதிகளவில் தங்கள் பிரதேசங்களுக்கும் அங்குள்ள சிறிய நீர் நிலைகளை நோக்கியும் அதிகளவில் பறவைகள் வந்து சென்றன. ஆனால் தற்போது அவை மிகவும் குறைந்து விட்டது எனவும் வருகின்ற ஒரு …

  18. புரெவி புயல் காரணமாக ஏற்பட்ட காலநிலை மாற்றம் மற்றும் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 2467 ஏக்கர் பெரும்போக நெற்செய்கை நீரில் மூழ்கி நாசமாகியுள்ளதாக மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள் உதவி பணிப்பார் எம்.ஜெகந்நாதன் தெரிவித்தார். வெள்ளம் காரணமாக விவசாய திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட 846 விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் வவுணதீவு, வாகரை, கொக்கட்டிச்சோலை, வெல்லாவெளி கிரான், செங்கலடி, ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் அதிகமான நெல் வயல்கள் நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளன. மாவட்டத்திலுள்ள 18 பெரும்பாக உத்தியோகத்தர் பிரிவுகளிலும் வயல் நிலங்களில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. தொடர்ந்து வேளாண்மை செய…

  19. பழிவாங்கல் கைதில் இருந்துவிடுதலை பெற்றேன்’-தவிசாளர் நிரோஷ் 48 Views அரசியல் பழிவாங்கல்களில் இருந்து தனக்கு பாதுகாப்புக் கிடைத்துள்ளதாகவும் இவ் இடர் நிலைமைகளில் தன்னுடன் சகல வழிகளிலும் ஒத்துழைத்த சகலருக்கும் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். தன்னை பொலிஸார் கைது செய்தில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக மல்லாகம் நீதிமன்றில் விண்ணப்பம் செய்து முன்பிணை கிடைக்கப்பெற்ற நிலையில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ”நாங்கள் அபிவிருத்திக்கு ஒருபோதும் தடையில்லை. எமது மக்கள் நீண்டகாலமாக அபிவிருத்தியில் ப…

  20. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை அச்சுறுத்தி விரட்டியடித்த பொலிஸார்!: மட்டக்களப்பில் பதற்றம்!! மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கும் பொலிஸார் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர் ஆகியோருக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை கைது செய்து கொண்டு செல்ல பொலிஸார் முயற்சி செய்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது. சர்வதேச மனிதவுரிமைகள் தினமான இன்று மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் நடாத்தப்பட இருந்த ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்தும் வகையில் பொலிஸாரும் புலனாய்வுத்துறையும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்த தாய்மாரை 14 நாள் தனிமைப்படுத்துவோம் என அச்சுறுத்தி அவர்களை பொலிஸார் கைது செய…

  21. நிபுணத்துவமற்றவர்களை தொழில்நுட்பக் குழுவிலிருந்து நீக்கிவிடுங்கள் – நாடாளுமன்றத்தில் ஹக்கீம் சீற்றம் நிலைமை பாரதூரமானதாக இருப்பதால் எரிப்பது மட்டுமே ஒரே தீர்வு என்ற அரசாங்கத்தின் கொள்கையை மீளாய்வு செய்யுமாறும், அது சம்பந்தமான குழுவிலுள்ள நிபுணத்துவமற்றவர்களை நீக்கிவிடுமாறும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார். வரவு – செலவுத் திட்டத்தின் நீதியமைச்சுக்கான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு புதன்கிழமை உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அங்கு மேலும் தெரிவித்ததாவது, கொவிட் – 19 வைரஸ் தொற்றினால் இறப்பதாக காரணம் காட்டி, மரணிப்பவர்களை எரிப்பது மட்டுமே ஒரே தீர்வு என்ற …

  22. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கள அலுவலகம் ஒன்றை வடக்கு – கிழக்கில் நிறுவ வேண்டும் என கோரிக்கை! by : Benitlas போரில் இறந்தவர்களுக்கு விளக்கேற்றக்கூட அனுமதி இல்லை என்றால் இங்கு எவ்வாறான மனித உரிமை மீறல் நடந்திருக்கும் என்பதை இலகுவாக கண்டறியலாம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற போராட்டத்தின் போது குறித்த விடயத்தினை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் மேலும் குறிப்பிடுகையில், “உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் அவனால் விட்டுக்கொடுக்க முடியாத உரிமைகளை மனித உரிமை என்று சொல்கிறோம். மனிதன் ஒவ்வொருவனும் தானும் வாழ்ந…

  23. எமது உரிமை பற்றி பேச பாராளுமன்றம் சென்றவர்கள் பேசாமலே இருக்கின்றனர் எமது உரிமை பற்றி பேசுவதற்கு பாராளுமன்றம் சென்றவர்கள் அது பற்றி பேசாமலே இருக்கின்றனர் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவில் யோகராசா கலாரஞ்சினி தெரிவித்துள்ளார். சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினால் கிளிநொச்சியில் இடம்பெற்ற நடைபெற்ற கவனஈர்ப்பு போராட்டத்திலே் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கெண்டவாறு தெரிவித்துள்ளார். குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவிவ் கிளிநொச்சியில் அமைந்துள்ள மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டே உறவுகளின் சங்கத்திற்கு முன்பாக இடம்பெற்றது. இதனை அடுத்த …

  24. அனலைதீவில் பசுவதை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு! அனலைதீவில் சட்டத்துக்குப் புறம்பாக பசு மாடு ஒன்றை இறைச்சிக்கு கொலை செய்த நிலையில் கும்பல் ஒன்று தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மைக்காலமாக பசு வதை அதிகரித்து வரும் நிலையில் இந்தச் சம்பவம் நேற்று(புதன்கிழமை) அனலைதீவு 5ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. பசு மாட்டை இறைச்சிக்காக கொலை செய்த நிலையில் அந்த வழியால் சென்றவர்கள் கண்ணுற்றதால் கும்பல் அங்கிருந்து தப்பித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவகத்தில் கட்டாக்காலிகளாக திரியும் கால்நடைகளை சில கும்பல்கள் இறைச்சிக்காக அவற்றை கொலை செய்து இறைச்சிகளை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். குறித்த கும்பல்களுக்கு எதிராக…

  25. சிங்களவர்களிற்கு எதிராக உரையாற்றும் தமிழ்நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றம் செல்வதற்கு தடை விதிக்கவேண்டும்- பேட்டியில் சரத் வீரசேகர கருத்து சிங்களவர்களிற்கு எதிரான வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் உரைகளை நிகழ்த்தும் தமிழ் அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்திற்கு வருவதை தடை செய்யவேண்டும் எனவும் அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார். சண்டே ஒப்சேவரிற்கு வழங்கியுள்ள பேட்டியில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர இதனை தெரிவித்துள்ளார். தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் வெளிநாடுகளின் தலைவர்களின் பின்னால் சென்று ஜெனீவாவில் உள்நாட்டு விவகாரங்களை விவாதிப்பதற்கு பதில் ஏன் அவர்கள் அரசாங்கத்துடன் தங்கள் சமூகத்தின் பிரச்சினைகளை விவாதிக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.