ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142919 topics in this forum
-
தெருச்சண்டை போல கடல்சண்டையை நீடிக்க விரும்பவில்லை இலங்கை இந்திய மீனவர்கள் இடையே ஏற்படும் பிரச்சினை நிரந்தரமாக தீர்ப்பதற்கு ஏதுவாக தமிழக முதல்வரை சந்தித்து தீர்வுகளைக் காண்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் – இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடு தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில்தெருச் சண்டைகள் போல் இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையில் கடலில் சண்டை ஏற்படுவதை தடுக்க வேண்டும். இலங்கை இந்திய மீனவர்களின் சந்திப்புத் தொடர்…
-
- 3 replies
- 647 views
-
-
இலங்கைத் தீவு பொருளாதார ரீதியாக மேலும் பலவீனமான நிலையை அடைந்திருக்கின்ற சூழலில் தான், கொரோனாவின் இரண்டாவது அலை தனது ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறது. இப்போது நிலவுவது, இரண்டாவது அலையே இல்லை என்றும், இன்னமும் சமூகத் தொற்றாக மாறவில்லை என்றும் விஞ்ஞானபூர்வமான விளக்கங்களை அரச அதிகாரிகள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், முதல் அலையை விட மூர்க்கத்தனமானதாக இப்போதைய அலை காணப்படுகிறது. நாட்டில் நிலைமை படுமோசமான கட்டத்தை அடைந்து கொண்டிருக்கிறது என்பதை சாதாரண மக்களால் ஊகிக்க முடிகிறது, உணர முடிகிறது. முதல் அலை தாக்கிய போது, நாடு பொருளாதார ரீதியாக பலவீனமான நிலையில் இருந்தது. அந்நியச் செலவாணிக் கையிருப்பு தேய்ந்து போயிருந்தாலும், சமாளிக்கக் கூடிய நிலையில் அரச…
-
- 6 replies
- 955 views
-
-
இந்தியாவின் பாதுகாப்பிற்கு எதிரான செயல்பாடுகளை இலங்கை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.! -சுரேஸ் பிரேமச்சந்திரன்.! 7 கோடிக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் வாழும் இந்தியாவின் பாதுகாப்பிற்கு, குந்தகம் விளைவிக்கக்கூடிய எந்த செயல்பாடுகளையும் இலங்கைத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையினை கருத்தில் கொண்டு, தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கும் சகல கட்சிகளும் ஒருமித்து செயல்பட வேண்டியது காலத்தின் தேவையென சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார். சமகால அரசியல் விடையங்கள் தொடர்பில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ச…
-
- 1 reply
- 428 views
-
-
(ஆர்.ராம்) கிழக்கு மாகாணத்தின் நிலைமைகள் தொடர்பில் இந்தியா விசேட கரிசனை செலுத்தியுள்ளதோடு, அதுபற்றிய உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வதிலும் அதீத ஈடுபாட்டுடன் அடுத்துவரும் நாட்களில் சில நகர்வுகளை செய்யவுள்ளது. இதேவேளை, தற்போதுள்ள கொரோனா நெருக்கடிகள் சொற்பகாலத்தில் கட்டுக்குள் வரும் பட்சத்தில் குறுகிய கால விஜயமொன்றை இந்திய வெளிவிவாகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் விரைந்து மேற்கொள்வதற்குரிய சாத்தியப்பாடுகள் அதிகமுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேவிற்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்தவார நடுப்பகுதியில் நடைபெற்றிருந்தது. அதாவது, அமெரிக்க இராஜாங்க …
-
- 6 replies
- 621 views
-
-
அனைத்து பிரதான வீதிகளும் காபட் பாதைகளாக மாற்றியமைக்கப்படும் " மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள அனைத்து பிரதான வீதிகளும் காபட் பாதைகளாக மாற்றியமைக்கப்படும்." - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார். புரட்டொப் பாதையை புனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " அமரர். ஆறுமுகன் தொண்டமான் அமைச்சராக இருந்தபோது குறித்த வீதியை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி 3 கிலோமீற்றர் காபட் இடப்பட்டது. எனினும், நல்லாட்சி எனக் கூறிக்கொள்ளும் அரசாங்கம் ஆட்சிக்க…
-
- 0 replies
- 352 views
-
-
சுகாதார அமைச்சரும் அரசாங்கமும் தோல்வியுற்றமை தெளிவாகியுள்ளது – ஹரின் http://athavannews.com/wp-content/uploads/2019/08/harin-720x450.jpg சுகாதார அமைச்சரும் அரசாங்கமும் தோல்வியுற்றமை தற்போது தெளிவாகியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கூறினார். ஒக்டோபர் 4 ஆம் திகதி மினுவாங்கொடையில் உள்ள ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர் ஒரு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டபோது, அரசாங்கம் உடனடியாகச் செயல்பட்டிருந்தால், நாட்டின் தற்போதைய நிலைமை தவிர்க்கப்பட்…
-
- 0 replies
- 413 views
-
-
வடக்கில் அனைவரும் சமூகப் பொறுப்புடன் செயற்படவேண்டும் – ஆளுநர் கோரிக்கை http://athavannews.com/wp-content/uploads/2020/02/PSMCharles.jpg வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவத தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் அண்மைய நாள்களில் வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தந்தவர்கள் தங்களைத் தாங்களே வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்குவது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி அவர்களின் உடல்நிலையில் மாறுபட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ பரிசோதனைகளுக்கு தங்களை ஈடுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் சமூகப் …
-
- 0 replies
- 253 views
-
-
காணிகளை சுவீகரிக்கும் அரசியல் பின்புலமுள்ள குழு – சட்டமா அதிபரின் உத்தரவு வெளிநாடுகளில் வசிப்போரின் காணிகளை சுவீகரிக்கும் அரசியல் பின்புலமுள்ள குழு தொடர்பாக விசாரணை நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என சட்டமா அதிபரின் இணைப்பாளர் தெரிவித்துள்ளார். சி.சி.ரி.வி காட்சிகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஹம்பாந்தோட்டை நகர மேயர் உட்பட நான்கு பேர் குறித்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்பது தெரிய வந்துள்ள நிலையில், குறித்த விவகாரத்தை குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு சட்டமா அதிபர் தெரிவித்துள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த க…
-
- 0 replies
- 230 views
-
-
கொரோனா அச்சம்: மட்டக்களப்பிற்கும் கொழும்பிற்குமிடையிலான அனைத்து புகையிரத சேவைகளும் ரத்து! By SAVITH (ரீ.எல்.ஜவ்பர்கான்) கொரோனா வைரஸ் இரண்டாம் அலையைத் தொடர்ந்து மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதால் மட்டக்களப்பிற்கும் கொழும்பிற்குமிடையிலான அனைத்து புகையிரத சேவைகளும் மறு அறிவித்தல் வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு புகையிரத நிலைய பிரதம அதிபர் தெரிவித்தார்.தினமும் கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு மூன்று புகையிரத சேவைகளும் கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு மூன்று சேவைகளும் மட்டக்களப்பிலிருந்து மாகோவிற்கு இருசேவைகளும் இடம் பெற்று வந்தன. தற்போதைய சூழ்நிலைகளினால் அனைத்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.மட்ட…
-
- 0 replies
- 133 views
-
-
ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு; யாழ் ஊடக மையம் சுட்டிக்காட்டு “யார் ஆட்சியில் இருந்தாலும் ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குவது ஒவ்வொரு அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்பது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதியாகும்” என யாழ். ஊடக மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இன்று நவம்பர் 2 ஆம் திகதி ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை விலக்கை ஒழிப்பதற்கான சர்வதேச தினமாகும். அதனை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஊடக மையம் மேலும் தெரிவித்திருப்பதாவது; “நடந்து முடிந்த ஊடகப்படுகொலைகள்,காணாமல் ஆக்கப்படுதல் உள்ளிட்ட ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நீதி வழங்க தயாரில்லாத ஒரு நாடாக…
-
- 2 replies
- 539 views
-
-
இலங்கையில் தற்போது கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவும் வகையைச் சேர்ந்தது என சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் டொக்டர் சஞ்சீவ முனசிங்க தெரிவித்தார். இந்த நுண்ணுயிர் முன்னர் பரவியதைவிட வித்தியாசமான வைரசாக உள்ளது. இது ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக செயலாளர் கூறினார். இந்த வைரஸ் கந்தக்காட்டில் பரவிய வைரஸ் வகை அல்ல என்பதை பல்கலைக்கழக ஆய்வு அறிக்கையின் மூலம் அறிந்துகொள்ள முடிந்ததாக செயலாளர் நேற்று தெரிவித்தார். இந்த வைரஸ் வீரியத்தைக் கொண்டது. இது தீவிரமாக மற்றவர்களுக்கு பரவக்கூடிய ஆற்றலைக் கொண்டது. இதனால்தான் குறுகிய கால்திற்குள் பெரும் எண்ணிக்கையிலானோர் வைரஸ் தொற்றுக்குள்ளாகினர் என்றும் அவர் தெரிவித்தார். …
-
- 0 replies
- 239 views
-
-
கொரோனா வைரஸ் என்ற கொடிய நோய் இன்று சமூகத்துக்குள் ஊடுருவி பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்ற போதும், அரசோ நாட்டை முழுமையாக முடக்காமல் மௌனம் காப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், மக்களை அமைதியாகச் சாகடிக்க அரசு முயல்கின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், அரசு கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது. கொரோனா வைரஸ் அதிவேகத்தில் பரவுகின்ற நிலையில் அரசு பொறுப்புணர்வில்லாமல் நடந்து கொள்கின்றது. தேர்தலுக்கு முன்னர் கோட்டாபய ராஜபக்சவிடம் காணப்பட்ட இரக்க உணர்…
-
- 0 replies
- 270 views
-
-
யாழ். பல்கலையில் இரண்டு பீடங்களை உள்வாங்க முன்மொழிவு! யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மேலும் இரண்டு பீடங்களை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான முன்மொழிவுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பல்கலைக் கழகப் பேரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன. மருதனார்மடத்தில் அமைந்துள்ள இராமநாதன் நுண்கலைக் கல்லூரியை நுண்கலைப் பீடமாகவும், கைதடியில் அமைந்துள்ள சித்தவைத்தியத்துறையை சித்த வைத்திய பீடமாகவும் தரமுயர்த்துவதற்கான முன்மொழிவுகளே இன்றைய பேரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன. யாழ். பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைக் கல்லூரியை நுண்கலைப் பீடமாகத் தரமுயர்த்துவதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கென முன்னாள் துணைவேந்தர் பேராசிரி…
-
- 0 replies
- 318 views
-
-
நாட்டின் கொரோனா நோய் தொற்றின் தீவிரம் காரணமாக, கொழும்பு-புறக்கோட்டை மெனிங் சந்தையை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மெனிங் சந்தை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தில் அமுலிலுள்ள ஊரடங்குச் சட்டத்தை எதிர்வரும் 9 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணி வரை நீடிக்க அரசு தீர்மானித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.
-
- 0 replies
- 234 views
-
-
மக்களின் உயிருக்கு தீங்கு விளைவிக்காமல், பொருளாதாரத்தை மோசமாக பாதிக்காமல் கொவிட்-19 பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கொவிட்-19 ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி உறுப்பினர்களுடன் இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல்களின்போது பல முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி மக்களை தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக, அவர்களை தங்கள் சொந்த வீடுகளில் தனிமைப்படுத்த அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் வெற்றிகரமான முடிவுகளைக் கொண்டுள்ளன. இந்த செயல்முறையை சுகாதார மருத்துவ அதிகாரி, பொது சுகாதார ஆய்வாளர், காவல்துறை மற்றும் இராணுவம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். வீட்டிலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு பி.சி.ஆர் சோதனை 10 ஆவது …
-
- 0 replies
- 175 views
-
-
மக்களின் நலன்களை பாதுகாக்ககூடிய தனித்துவமான நாடாக இலங்கை இருக்கும் – டக்ளஸ் மக்களின் நலன்களை பாதுகாக்ககூடிய வகையில், தனித்துவமான நாடாக இலங்கை இருக்கும் என்று கடற்தொழில் மற்றும் நீரியல் வளங்கல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வவுனியாவிற்கு இன்று விஜயம் செய்த அவர் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவரின் காரியாலத்தை திறந்துவைத்துவிட்டு ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையில் மக்களின் நலன்களை பாதுகாப்பதற்கும், முன்னேற்றுவதற்கும் முழு முயற்சிகளை நாம் எடுப்போம். உலகளாவிய ரீதியில் இன்று பிரச்சனையாகவுள்ள கொரோனா தொற்றுநோயானது இலங்கையையும் பாதித்திருந்தது. அத…
-
- 0 replies
- 243 views
-
-
யாழில்.. கடல் நீர், உட்புகுந்தமை தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது – அரசாங்க அதிபர் யாழில் கடல் நீர் உட்புகுந்தமை தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது எனினும் உண்மையான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என யாழ் அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார் யாழ் மாவட்டத்தில் கடல் நீர் உட்புகுந்த நிலைமை தொடர்பில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் கடல் நீர் உட்புகுந்த சம்பவம் யாழ் கல்லுண்டாய்,ஊர்காவற்துறை,குருநகர், நாவாந்துறை பிரதேசத்தில் உணரப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகத்திற்கு தகவல் கிடைத்திருந்தது அதனைஉடனடியாக அனர்த்த முகாமைத்துவ பிரிவினருக்கு அறிவித்திருக்கிறோம் அதேபோல் நான் நேரடியாக அப்பகுத…
-
- 0 replies
- 188 views
-
-
கொரோனோ பரிசோதனை இயந்திரங்கள் பல பழுது..! சீன பொறியியலாளர் இலங்கை வருகிறார், தனிமைப்படுத்தலின் கீழ் புனரமைப்பு பணிகள்.. கொரோனா தொற்றை இனங்காணும் PCR பரிசோதனை இயந்திரங்கள் பல பழுதடைந்துள்ளதாக கூறியிருக்கும் இராணுவ தளபதியும், கொரோனா தடுப்பு செயலணியின் தலைவருமான சவேந்திர சில்வா, பழுதடைந்த இயந்திரங்களை திருத்துவதற்கு சீனா பொறியியலாளர் ஒருவர் நாட்டிற்கு வருகைதரவுள்ளதாகவும் இராணுவ தளபதி கூறியிருக்கின்றார். இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, 20 நாள்களுக்கு 24 மணி நேரமும் இந்த இயந்திரம் பயன்படுத்தப்படுவதால் அவை செயலற்றதாக இருந்திருக்கலாம் இயந்திரங்களைச் சீர்செய்ய தொழில்நுட்பவியலாளர்கள் பெரும் முயற்சி செய்தார்கள், ஆனால் அது வெற்றிபெறவில்லை என்று அவர் …
-
- 5 replies
- 1k views
-
-
த.தே.கூட்டமைப்பின் செயலாளராக மாவை சேனாதிராசா: பங்காளிக் கட்சிகள் தீர்மானம்.! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளராக மாவை சோ. சேனாதிராஜா செயற்படுவார் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் இணக்கம் கண்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஆகியவற்றின் தலைவர்கள் நேற்று யாழ். மாட்டீன் வீதியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சியின் தலமையகத்தில் கூடி ஆராய்ந்தனர். இதன்போதே மேற்படி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு இந்த முடிவை உடனடியாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. …
-
- 2 replies
- 414 views
-
-
ஐ.நா. நிகழ்வுக்கு மஹிந்த அழைக்கப்பட்டமைக்கு கடும் சாடல் .! ஐக்கிய நாடுகள் சபையின் 75 ஆவது வருடப் பூர்த்தியை முன்னிட்டு இலங்கையிலுள்ள ஐ.நா அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வுக்குப் பிரதமர் மகிந்த ராஜபக்ச பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டமையானது, போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் முகத்திலறையும் செயலாகும்.” இவ்வாறு சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடுமையாகச் சாடியுள்ளது. போர்க்குற்றங்களுடன் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர்களின் பொதுவான பிம்பம் துடைத்தெறியப்படுவதற்குத் துணைபுரியக்கூடிய செயல்களில் ஐக்கிய நாடுகள் சபை ஈடுபடக்கூடாது. ஆனால், கடந்த வாரம் அத்தகையதொரு செயலையே இலங்கையின் ஐ.ந…
-
- 1 reply
- 235 views
-
-
வெள்ளவத்தை உணவக உரிமையாளருடன் பேருந்தில் பயணித்தவர்களுக்கு சுகாதார அதிகாரிகள் அழைப்பு- யாழ்நகரில் பல வர்ததக நிலையங்களுக்கு பூட்டு October 31, 2020 கொரோனாவால் பாதிக்கப்பட்ட கொழும்பு வெள்ளவத்தையை சேர்ந்த உணவு உரிமையாளரும் அவரது கடையில் பணியாற்றியவர்களும் யாழ்ப்பாணம் சென்றதை தொடர்ந்து அவர் பயணித்த பேருந்தில் பயணித்தவர்களை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ள அதிகாரிகள் பாதிக்கப்பட்டவரின் உறவினர்களின் வர்த்தக நிலையங்கள் பலவற்றை மூடியுள்ளனர் இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கொழும்பில் உணவகம் நடத்தும் உரிமையாளருக்கு கோரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவருடன் பேருந்தில் பயணித்தவர்களை தமது பிரதேச…
-
- 0 replies
- 548 views
-
-
பா.உ கோ.கருணாகரம் அவர்களின் முயற்சியில் கரடியனாறு கரடியன்குளம் மக்களின் காணி விடயத்திற்குத் தீர்வு! Dicksith மட்டக்களப்பு கரடியனாறு கரடியன்குளம் பிரதேச மக்கள் காலாகாலமாக விவசாயம் மற்றும் குடியிருப்புகளை மேற்கொண்டு வந்த காணிகளை கரடியனாறு விவசாயப் பண்ணைக்குச் சொந்தமானது என அளவீடுகளை மேற்கொள்ளும் பணிகள் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. பிரதேச மக்களின் வேண்டுகோளை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் அவர்களின் நேரடி களவிஜயத்தின் மூலம் அளவீட்டுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டு மக்களுடனான கலந்துரையாலொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அவ்வாறு ஒழுங்கு செய்யப்பட்ட கலந்துரையாடல் இன்றைய…
-
- 1 reply
- 605 views
-
-
வெளிநாட்டு கொள்கையில் நடுநிலை தவறினால் மிகப் பெரிய பின் விளைவுகள் ஏற்படும்.! சம்பந்தன் சுட்டிக்காட்டு.! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான இலங்கை அரசு, அனைத்து நாடுகளுடனும் இணைந்து பயணிக்கக்கூடியவாறு புதிதாக - பக்கச்சார்பில்லாமல் சமாந்தரமான கொள்கைகளை வகுத்துக் கருமங்களை முன்னெடுக்க வேண்டும். இந்தக் கடமையிலிருந்து தவறினால் பாரிய பின்விளைவுகளை இலங்கை சந்திக்க வேண்டி வரும்." - இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கை வந்திருந்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியா, 'நிலையான வளர்ச்சியுடன் இலங்கை மக்களுக்கு இறையாண்மையும் சுதந்திரமும் இருக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும…
-
- 5 replies
- 1.4k views
-
-
மட்டக்களப்பு BRANDIX ஆடைத் தொழிற்சாலை தற்காலிகமாக பூட்டு! By Sayanolipavan மட்டக்களப்பு- ஆரையம்பதியில் அமைந்துள்ள BRANDIX ஆடைத்தொழிற்சாலையை தற்காலிகமாக மூன்று நாட்களுக்கு மூடுமாறு கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அறிவித்துள்ளார். மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி மற்றும் மாவடிமுன்மாரியில் கண்டறியப்பட்ட இரு கொரோனோ தொற்றாளர்களின் நெருங்கிய உறவினர்கள் ஆரையம்பதியில் அமைந்துள்ள BRANDIX ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்துவருவதையடுத்து குறித்த ஆடைத்தொழிற்சாலையை தற்காலிகமாக இன்று முதல் 3 நாட்களுக்கு மூடி கிருமிநாசினி விசிறி சுத்தப்படுத்துமாறு அறிவுரை வழங்கியுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்தார். …
-
- 0 replies
- 616 views
-
-
மனோகணேசன் தனது தவறை மூடி மறைப்பதற்கு முயற்சித்தார் – எம்.ஏ.சுமந்திரன் மனோகணேசன் தனது தவறை மூடி மறைப்பதற்கு, அரசியல் கைதிகளின் விடுதலையை, துமிந்த சில்வாவின் விடுதலையுடன் ஒப்பிட்டது தவறான ஒரு செயல் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று ( வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”ஓரிரு தினங்களுக்கு, துமிந்த சில்வாவின் விடுதலை தொடர்பில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்ட மனுவில் தானும் கைச்சாத்திட்டதாகவும், அது மூன்று வாரங்களின் முன்னர் இந்த சம்பவம் நடைபெற்றது. ஆனால், அத…
-
- 3 replies
- 1.1k views
-