நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
உழுந்துமா பிடிக்கொழுக்கட்டை தேவையான பொருட்கள் வறுத்த அரிசிமா – 1 கப் வறுத்த உழுந்துமா – ½ கப் வறுத்த பாசிப்பருப்பு – 4 டேபிள் ஸ்பூன் வெல்லம் – ¼ கப் வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் தேங்காய்த் துருவல் – ¼ கப் உப்பு சிறிதளவு செய்முறை பாசிப் பருப்பை 20 நிமிடங்கள் நீரில் ஊறவிடுங்கள். மா வகைகளுடன், வெல்லம், தேங்காய்த் துருவல், ஊறிய பருப்பு, வெண்ணெய் கலந்து கிளறுங்கள். சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து, கையால் கிளறி, சேர்த்து பிடிக்கும் பதத்தில் மாவைத் தயார்படுத்துங்கள். மாவைக் கையால் அமத்தி நீள்வடிவத்தில் பிடித்து ஓரத்தில் சங்கு போல விரல்களால் அமத்தி விடுங்கள். இவ்வாறே எல்லாவற்றையும் பிடித்து வைத்துக் கௌ்ளுங்கள். ஸ்டீமர் அல்லது இட்…
-
- 1 reply
- 744 views
-
-
ஈரப்பலாக்காய்க் கறி தேவையான பொருட்கள் நன்கு முற்றிய ஈரப்பலாக்காய் -1 வெங்காயம் -1 பச்சை மிளகாய் -1 தேங்காய்ப் பால் – ¼ கப் பூண்டு- 4 பல்லு இஞ்சி – 1 துண்டு மிளகுப்பொடி- ¼ ரீ ஸ்பூன் மிளகாய்ப்பொடி -1 ரீ ஸ்பூன் மல்லிப்பொடி – 1 ரீ ஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப புளிப்பேஸ்ட் அல்லது எலுமிச்சம்சாறு – தேவைக்கேற்ப கடுகு- சிறிதளவு கறிவேற்பிலை- சிறிதளவு ஒயில் – 1 ரீ ஸ்பூன் செய்முறை பலாக்காயை பெரிய நீள் துண்டுகளாக வெட்டியெடுங்கள். உள்ளிருக்கும் சக்கையுடன் கூடிய நடுத் தண்டின் பாகங்களையும், வெளித்தோலையும் சீவி நீக்கி விடுங்கள். தண்ணீர்விட்டு அவித்து எடுத்துக்கொள்ளுங்கள். ஆறியதும் 2அங்குல அகலத் துண்டுகளாக வெட்டி வையுங்கள். வெங்காயம்…
-
- 7 replies
- 9k views
-
-
தேவையானவை அவித்த மைதாமா – 2 கப் உப்பு சிறிதளவு கீரை சிறிய கட்டு – 1 சின்ன வெங்காயம் – 10-15 பச்சை மிளகாய் – 2-4 (காரத்திற்கு ஏற்ப) தேங்காய்த் துருவல் – ¼ கப் செய்முறை மைதா மாவில் உப்புக் கலந்து வையுங்கள். நீரை நன்கு கொதிக்க வைத்து எடுத்து சிறிது சிறிதாக ஊற்றி கரண்டிக் காம்பால் கிளறி பிட்டு மா தயாரியுங்கள். கீரை, வெங்காயம், மிளகாய், கழுவி சிறிதாய் வெட்டி எடுங்கள். பச்சை மிளகாய்க்கு பதிலாக செந்நிறமாகப் பழுத்த மிளகாயை உபயொகித்தால் காரத்தை தள்ளி வைப்போருக்கு எடுத்து வீச இலகுவாக இருக்கும். சிறிது உப்புப் பிரட்டிக் கலந்துவிடுங்கள். இட்லிப் பாத்திரத்தில் அல்லது ரைஸ் குக்கரில் நீர் விட்டு ஸ்ரீம் தட்டுப் போட்டு பிட்டு மாவை ஒரு பக்கமும், …
-
- 4 replies
- 887 views
-
-
இறால் தேங்காய்ப் பால் காரக் குழம்பு சேகரிக்க வேண்டியவை இறால் - 20 வெங்காயம் – 1 பச்சை மிளகாய் – 1 பெரும்சீரகம் – ¼ தேக்கரண்டி வெந்தயம் – ¼ தேக்கரண்டி தட்டிய பூண்டு – 4 மிளகாய்த் தூள் – 1 ரீ ஸ்பூன் மல்லித் தூள் – ½ ரிஸ்பூன் மஞ்சள் – ¼ ரிஸ்பூன் தேங்காய்ப்பால் – ¼ கப் உப்பு – தேவைக்கு புளிக்கரைசல் – தேவைக்கு ரம்பை – 4 துண்டு கறிவேற்பிலை – சிறிதளவு. ஓயில் – 1 டேபிள் ஸ்பூன் தயாரிப்பு இறாலை தலை வால் நீக்கி கோதுகளைக் கழற்றி, பிடுங்கிச் சுத்தம் செய்யுங்கள். உடம்பின் மேற்புறத்தைக் கீறி, சாப்பாட்டுக் குடலை எடுத்துவிடுங்கள். நன்கு கழுவி, நீர் வடியவிட்டு கோப்பையில் எடுங்கள். ஓயிலில் சோம்பு, வெந்தயம், பூண்டு வதக்கி, பச்சை மிளகாய் வெங்காயம…
-
- 2 replies
- 869 views
-
-
சிலருக்கு சாதம் சாப்பிட பிடிக்காது. அத்தகையவர்கள் மதிய வேளையில் சாதத்திற்கு பதிலாக சப்பாத்தி, தோசை, இட்லி என்று செய்து சாப்பிடுவார்கள். ஆனால் அப்படி தினமும் அவற்றை செய்து சாப்பிட்டு போர் அடித்திருந்தால், கோதுமை ரவை கொண்டு வித்தியாசமான சுவையில் பிரியாணி செய்து சாப்பிடுங்கள். இதில் பிரியாணிக்கு சேர்க்கப்படும் அனைத்து பொருட்களையும் சேர்ப்பதால், இது உண்மையிலேயே பிரியாணி சாப்பிட்ட திருப்தியைக் கொடுக்கும். மேலும் இந்த ரெசிபியானது மிகவும் ஈஸியானது. சரி, இப்போது அந்த கோதுமை ரவை பிரியாணியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: கோதுமை ரவை - 1 கப் சூடுநீர் - 3 கப் கேரட், பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு - 1 கப் (நறுக்கியது) பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது…
-
- 0 replies
- 703 views
-
-
தேவையான பொருட்கள். கிழங்கு – ½ கிலோ சீனி – 4 – 5 டேபல் ஸ்பூன் கட்டித் தேங்காய்ப்பால் – 4 டேபல் ஸ்பூன் முந்திரி பிளம்ஸ் சிறிதளவு. உப்பு – சிறிதளவு. ஆமன்ட் அல்லது வனிலா எசென்ஸ் சில துளிகள். செய்முறை – சொறியும் தன்மையுள்ளது இக்கிழங்கு கைக்கு கிளவுஸ் உபயோகியுங்கள். கிழங்கை தோல் சீவி நன்கு கழுவி எடுங்கள். சிறு சிறு மெல்லிய துண்டுகளாகச் சீவுங்கள். பாத்திரத்தில் போட்டு கிழங்கின் ¾ பாகம் தண்ணீர்விட்டு அவித்தெடுங்கள். நன்கு அவிந்ததும் மசித்து விடுங்கள். சீனி , உப்பு, முந்திரி, பிளம்ஸ் சேருங்கள். தேங்காய்ப் பால் ஊற்றிக் கலக்கி இறக்கிவையுங்கள். சற்று ஆறியபின் எசன்ஸ் கலந்து டெசேட் கப்களில் ஊற்றுங்கள். மேலே வறுத்த முந்திரி தூவ…
-
- 4 replies
- 1k views
-
-
தேவையான பொருட்கள் : சிக்கன் -அரை கிலோ பெரிய வெங்காயம் -1 (பொடியாக நறுக்கி கொள்ளவும்) இஞ்சி துண்டு -1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கி கொள்ளவும்) பூண்டு துண்டு -1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கி கொள்ளவும்) பச்சை மிளகாய் துண்டு -1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கி கொள்ளவும்) உருளைக் கிழங்கு -1 (பெரியது) – (வேகவைத்து, தோல் நீக்கி பிசைந்து கொள்ளவும்) கருவேப்பில்லை ,புதினா தழை -தேவையான அளவு கரம் மசாலா அல்லது மீட் மசாலா -1 டீஸ்பூன் முட்டை -1 (நன்கு அடித்து வைத்துகொள்ளவும்) பிரட் தூள் -தேவையான அளவு உப்பு -தேவையான அளவு செய்முறை : முதலில் சிக்கனுடன் கரம் மசாலா தூள் ,உப்பு மற்றும் கருவேப்பில்லை ,சேர்த்து வேக வைக்கவும்.வேகவைத்த சிக்கன் ஆற்றிய பின்பு அதை மிக்ஸ்யில் அல்லது பூட் பிராசசர…
-
- 1 reply
- 904 views
-
-
இறால் சில்லி வறுவல் தேவையான பொருட்கள்: இறால் - 200 கிராம் வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது) உருளைக்கிழங்கு - 1 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் தேங்காய் - 1/2 மூடி (துருவியது) பூண்டு - 4 பற்கள் (நறுக்கியது) உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் செய்முறை: முதலில் இறாலை நன்கு சுத்தமாக கழுவி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, நன்கு ஒரு 5 நிமிடம் வதக்க வேண்டும். பின்பு கழுவி வைத்துள்ள இறாலைப் போட்டு, தீயை குறைவில் வைத்து, 5-6 நிமிடம் இறாலை வேக வைக்க வேண்டும். அடுத்து மஞ்சள் தூள் சேர்த்…
-
- 2 replies
- 663 views
-
-
செய்வோமா பணியாரம் நன்கு பழுத்த ஒன்று அல்லது இரண்டு பனம் பழத்தை நன்கு கழுவி எடுங்கள். மேலுள்ள மூளைக் கழட்டி விடுங்கள். துணியும் துவைக்கலாம், மாடும் நாமும் சாப்பிடுவோம். பனம் பழத்தின் மேலுள்ள நாரை சிறிய மேசைக் கத்தியினால் பழத்தின் மேல் பகுதியிலிருந்து நீள் பக்கமாக சீவி எடுங்கள். நார் வெட்டும் கைகள் பத்திரம். வெட்டி அகற்றிய பின்மீண்டும் பழத்தை தண்ணீரில் நன்கு கழுவுங்கள். பழத்தைப் பிரித்து இரண்டு மூன்றாக விதையுடன் பிரியும். அவற்றைப் பிழிந்து அதிலுள்ள களியை இரு கைகளாலும் அழுத்தி எடுங்கள். களி தும்புகளுடன் கூடி இருக்கும். மெல்லிய வெள்ளைத்துணி அல்லது கண்ணறைத் துணியை வைத்து களியை வடித்தெடுங்கள். வடித்தெடுத்த களியை அடுப்பில் வைத்து ச…
-
- 5 replies
- 2.5k views
-
-
"கருவாட்டு குழம்பு செய்யும் முறை'' தேவையான பொருட்கள் : நெத்திலி கருவாடு - 25 மொச்சை - 1 கப் கத்திரிக்காய் - 2 சின்ன வெங்காயம் - 15 தக்காளி - 1 புளி - ஒரு நெல்லிக்காய் அளவு கறிவேப்பிலை - சிறிது சாம்பார் பொடி - 3 தேக்கரண்டி மஞ்சள் தூள் - சிறிது உப்பு எண்ணெய் - 2 மேசைக்கரண்டி கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு - தாளிக்க செய்முறை : நெத்திலி கருவாடை சூடான நீரில் 2 - 3 மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்ததை நன்றாக 4 - 5 முறை நீர் மாற்றி சுத்தம் செய்து எடுக்கவும். மொச்சையை ஊற வைத்து வேக வைத்து எடுக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் பாதி வதங்கியதும் கத்திரிக்காயை சேர்த்து …
-
- 10 replies
- 4.8k views
-
-
முட்டையைக் கொண்டு பலவாறு சமைக்கலாம். அதில் சாதத்திற்கு ஏற்றவாறு முட்டை குழம்பு, முட்டை மசாலா என்று செய்வோம். இப்படி செய்யும் முட்டை மசாலாவில் பல ஸ்டைல்கள் உள்ளன. அந்த வகையில் ஒன்று தான் பஞ்சாபி முட்டை மசாலா. இந்த ரெசிபி செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, மிகுந்த சுவையோடும் இருக்கும். சரி, இப்போது அந்த பஞ்சாபி முட்டை மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: முட்டை - 4 (வேக வைத்து தோலுரித்தது) வெங்காயம் - 1 (நறுக்கியது) பிரியாணி இலை - 1 சீரகம் - 1 டீஸ்பூன் தக்காளி சாறு - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லி தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் மாங்காய் தூள் - 1 டீஸ்பூன் காய்ந்த வெந்தய இலை - 1 டேபிள் ஸ்பூன் (கையால் ப…
-
- 0 replies
- 679 views
-
-
பொரித்து இடித்த சம்பல் தேவையான பொருட்கள் துருவிய தேங்காய்ப்பூ - 2 கப் செத்தல் மிளகாய் - 10/12 (உறைப்பை பொறுத்து) சின்ன வெங்காயம் - சிறிதளவு தாளிப்பதற்கு - வெங்காயம், செத்தல் மிளகாய், கடுகு, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை ஆகியன சிறிதளவு உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு மாசிக் கருவாட்டுத் தூள் - ஒரு மேசைக் கறண்டி செய்முறை 1. காம்பு உடைத்த செத்தல் மிளகாய்களை எண்ணெயில் பொரித்து எடுக்கவும். 2. பொரித்த மிளகாய் மற்றும் உப்பு, மாசிக் கருவாட்டுத் தூள் ஆகியவற்றை மட்டும் சேர்த்து உரலில் இடிக்கவும்(சைவாமாக இருப்போர் மாசிக் கருவாட்டைத் தவிர்க்கவும்). அம்மியில், அல்லது கிறைண்டரில் அரைக்கலாம். ஆனால…
-
- 4 replies
- 1.7k views
-
-
மசாலா டீ தேவையான பொருட்கள் : இஞ்சி - ஒரு துண்டு மல்லி விதை - ஒரு தேக்கரண்டி பட்டை - 2 கிராம்பு -1 ஏலக்காய் -1 சுக்கு - கொஞ்சம் பால் - ஒரு தம்ளர் சீனி - தேவையான அளவு டீ தூள் - தேவையான அளவு செய்முறை : பால்,சீனி ,டீத்தூள் தவிர மற்ற எல்லாவற்றையும் வறுத்து பொடி செய்யவும். பாலை காய்ச்சி அதனுடன் டீத்தூள் சேர்த்து ஒருகொதி வர விடவும்.கொதித்த பாலோடு மசாலா பொடியை சேர்க்கவும் டீ நிறம் மாறியதும் இறக்கி வடித்து வைக்கவும்.இதனுடன் சீனி சேர்த்து சூடாக சாப்பிட மசாலா டீ ரெடி. டீ தூள் சேர்க்காமல் அப்படியே மசாலா பாலாகவும் அருந்தலாம். தயாரிப்பு : குமாரி FB
-
- 1 reply
- 1.9k views
-
-
. பீற்றூட் கறி. பீற்றூட் என்னும் சிவப்புக் கிழங்கை நாம் எல்லோரும் கண்டிருப்போம். ஆனால்... பலர் அதைச் சமைத்திருப்பார்களா என்பது சந்தேகமே... உண்மையில் இது மக்னீசியம், கல்சியம், விற்ரமின் சி என்று நமது உடலுப்புகளுக்குத் தேவையான அளவு தாதுப் பொருட்கள் நிறைந்த கிழங்கு. இது... ஐரோப்பிய நாடுகளில் கோடை காலத்தில் சந்தையில் வாங்கலாம். குளிர் காலத்தில் இதனை காற்றுப் புகாத முறையில் பைகளில் அடைத்து விற்பார்கள். ஃ இதனை வருடம் முழுக்க கிடைக்கும் மரக்கறி என்று சொல்லலாம். பீற்றூட் கறி செய்ய தேவையான பொருட்கள். இரண்டு பீற்றூட் (400 - 500கிராம்) வெங்காயம் - 2 கடுகு இரண்டு தேக்கரண்டி பெருஞ்சீரகம் ஒரு தேக்கரண்டி செத்தல் மிளகாய் - 4 கருவேப…
-
- 56 replies
- 18.3k views
- 1 follower
-
-
-
- 0 replies
- 737 views
-
-
-
- 0 replies
- 659 views
-
-
-
குளிர்காலத்தில் கீரைகள் அதிகம் கிடைக்கக்கூடிய உணவுப் பொருள். ஆகவே அந்த கீரையில் ஒன்றான வெந்தயக்கீரையை உருளைக்கிழங்குடன் சேர்த்து ஒரு ரெசிபி செய்து சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட்டால், மிகவும் அருமையாக இருக்கும். இங்கு அந்த வெந்தயக்கீரை உருளைக்கிழங்கு ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை வீட்டில் முயற்சி செய்து பாருங்கள். இது நிச்சயம் வித்தியாசமான சுவையைக் கொடுப்பதோடு, ஆரோக்கியமானதாகவும் இருக்கும். தேவையான பொருட்கள்: பேபி உருளைக்கிழங்கு - 1/2 கிலோ வெந்தயக் கீரை - 250 கிராம் (நன்கு கழுவி நறுக்கியது) மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லி தூள் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் பூண்டு - 10 பற்கள் (நறுக்கியது) பச்சை …
-
- 4 replies
- 871 views
-
-
தேவையான பொருட்கள் 1 சுண்டு பச்சையரிசி 5 தேங்காய் (அல்லது ரின் தேங்காய்ப்பால் 8 சிறியவை) ஏலக்காய்ப்பொடி சிறிதளவு 200 கிராம் கஜு 1 கிலோ சீனி (4 சுண்டு) 3 மேசைக் கரண்டி சவ்வரிசி (பதிலாக வறுத்த பாசிப்பயறையும் பாவிக்கலாம்) 250 கிராம் சக்கரை செய்முறை அரிசியை ஊறவைத்து இடித்து அரித்து மாவாக எடுத்து கொள்ளவும். முழு தேங்காளாயின் துருவி முதல் பால் தனியாகவும் மற்றைய பாலை தனியாகவும் 8 கிளாஸ் தண்ணீர் சேர்த்து பிளிந்து எடுக்கவும். அல்லது ரின் பாலாயின் 8 கிளாஸ் தண்ணீரை 2 ரின் தேங்காய்பாலுடன் கலந்து வைக்கவும். பின்னர் வாய் அகன்ற கனமான பாத்திரத்தில் மா, தேங்காய்ப்பால், சீனி, சர்க்கரை, சவ்வரிசி சேர்த்து கரைத்து அடுப்பில் வைத்து 2 மணி…
-
- 5 replies
- 1.4k views
-
-
அரிசிமாத் தோசை – யாழ்ப்பாணம் முறை: தேவையான பொருள்கள்: புழுங்கல் அரிசி – 2 சுண்டு பச்சரிசி – 2 சுண்டு முழு உளுத்தம் பருப்பு – 1 சுண்டு (தோல் நீக்கியது) வெந்தயம் – 2 – 3 மேசைக் கறண்டி மிளகு, சீரகம் - 1 தேக் கறண்டி (தூள்) மஞ்சள் தூள் - கொஞ்சம் உப்பு – தேவையான அளவு தாளிதப் பொருட்கள்: (கடுகு, பெருஞ்சீரகம், கருவேப்பிலை, நறுக்கிய வெண்காயம், 2-3 செத்தல் மிளகாய் சிறிதாக நறுக்கியவை) எண்ணை – தேவையான அளவு (அரிசிகளின் அளவை தேவைக் கேற்ப கூட்டியும் குறைத்தும் செய்யும் போது மற்றைய பொருட்களின் அளவையும் கூட்டியும் குறைதும் தயாரிக்கவும்-இவை பொதுவான அளவுகள்) செய்முறை: தோசை வகைகளில் மாக்கலவை எல்லாவற்றிக்கும் பொதுவானவை. ஆனால்…
-
- 17 replies
- 4k views
-
-
மாங்காய் சிக்கன் குழம்பு. சிக்கன் ரெசிபிக்களில் பிரபலமான ஒன்று தான் மாங்காய் சிக்கன் குழம்பு. மேலும் இது ஒரு கோவா ரெசிபி. இதில் மாங்காய் சேர்க்கப்பட்டிருப்பதால், இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும். அதிலும் விடுமுறை நாட்களில் வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய நினைப்போர், இந்த மாங்காய் சிக்கன் குழம்பை செய்யலாம். இங்கு அந்த மாங்காய் சிக்கன் குழம்பின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை முயற்சி செய்து பாருங்கள். தேவையான பொருட்கள்: எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ வெங்காயம் - 2 (அரைத்தது) மாங்காய் - 1 (சிறியது மற்றும் தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது) தேங்காய் - 1 கப் (துருவியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய…
-
- 0 replies
- 719 views
-
-
சட்னியில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. இங்கு அதில் மிகவும் எளிமையான ஒரு சட்னி ரெசிபியைக் கொடுத்துள்ளோம். இதற்கு தக்காளி மற்றும் வெங்காயம் இருந்தால் போதும். மேலும் இதனை பேச்சுலர்களுக்கு ஏற்ற ஒரு சட்னி ரெசிபி என்று கூட சொல்லலாம். சரி, இப்போது அந்த தக்காளி மற்றும் வெங்காய சட்னியை எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: வெங்காயம் - 2 தக்காளி - 4-5 பச்சை மிளகாய் - 2 உப்பு - தேவையான அளவு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது எண்ணெய் - 2 டீஸ்பூன் செய்முறை: முதலில் வெங்காயத்தை உரித்து, அதனை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் தக்காளியை கழுவி, அதனையும் நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்பு மிக…
-
- 1 reply
- 612 views
-
-
நாஸி லிமா(க்) (nasi limak) தேவையான பொருட்கள் பாஸ்மதி அரிசி - 3கப் தேங்காய் பால் - 4 ½ கப் பூண்டு - 4 பல் டவுண்பாண்டா இலை(அ) பிரிஞ்சி இலை - 1 பட்டை - 1 இன்ச் அளவு வேர்கடலை - அரை கப் நெத்திலி கருவாடு - அரை கப் கெட்டியான புளி தண்ணீர் - 2 (அ) 3 ஸ்பூன் முட்டை - 5 நெய் - 3 ஸ்பூன் வெள்ளரிக்காய் - இரண்டு சீனீ - ஒரு ஸ்பூன் அரைத்துக்கொள்ள:-) சின்ன வெங்காயம் - அரை கப் பூண்டு - 3 பல் இஞ்சி - ஒரு இன்ச் அளவு காய்ந்த மிளகாய் - அரை கப் நெத்திலி கருவாடு - 8 செய்முறை :- அரைக்க கொடுத்த பொருட்களை ஒரு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி இரண்டு நிமிடம் வதக்க…
-
- 6 replies
- 1.4k views
-
-
பொதுவாக பொரியல் என்பது ஒவ்வொருவரின் விருப்பத்தைப் பொறுத்து செய்யப்படுவதாகும். அப்படி செய்யும் பொரியலில் பெரும்பாலானானோர் விரும்பி சாப்பிடுவது உருளைக்கிழங்கு பொரியல் தான். ஆனால் அந்த உருளைக்கிழங்குடன், பீன்ஸை சேர்த்து பொரியல் செய்தால், அதன் சுவையே தனி தான். இங்கு அந்த உருளைக்கிழங்கு பீன்ஸ் பொரியலின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு - 5-6 (தோலுரித்து, நறுக்கியது) பீன்ஸ் - 10-12 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் மல்லி தூள் - 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப…
-
- 6 replies
- 1.1k views
-
-
தேவையான பொருட்கள்: கத்திரிக்காய் - 1 தக்காளி - 2 வெங்காயம் - 3 பச்சை மிளகாய் - 1 கேரட், வெள்ளரிக்காய் - விரும்பினால் உப்பு - தேவைக்கு நெருப்பில் கத்திரிக்காயும் தக்காளியும் சுட்டு எடுக்கவும் (மிதமான தீயில்) ஆறியதும் தோல் நீக்கி பிசைந்து கொள்ளவும். வெங்காயம் பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி வைக்கவும். கேரட் துருவி வைக்கவும். பிசைந்து வைத்திருக்கும் கலவையுடன் மீதம் இருக்கும் அனைத்து பொருட்களையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும். சுட்ட கத்திரிக்காய் சம்பல் தயார். இதில் நிறைய வகைகள் உள்ளன. கருவாட்டை சுட்டு, முள் நீக்கி சேர்த்தால் சுட்டகருவாட்டு சம்பல். கத்திரிக்காய் விருப்பமில்லை எனில் தக்காளி மட்டும் சேர்த்தால் தக்காளி சம்பல். கத்திரிக்காயும், தக்காளியும் நீக்கிவிட்டு…
-
- 0 replies
- 783 views
-