நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
பட்டாணி காளான் மசாலா காளான் பிரியர்களுக்கு அற்புதமான ரெசிபியை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. அது என்னவெனில் பட்டாணி மற்றும் காளான் சேர்த்து செய்யப்படும் மசாலா. இந்த மசாலா செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். பேச்சுலர்கள் செய்து சுவைக்கும் வகையில் எளிமையான செய்முறையைக் கொண்டிருக்கும். மேலும் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இந்த மசாலாவை சப்பாத்தி அல்லது சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம். சரி, இப்போது பட்டாணி காளான் மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: காளான் - 1 கப் பச்சை பட்டாணி - 1/4 கப் (வேக வைத்தது) பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) தக்காளி - 2 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ…
-
- 2 replies
- 759 views
-
-
நண்டு குழம்பு தேவையான பொருட்கள் : நண்டு - அரை கிலோ வெங்காயம் - 1 (பெரியது) தக்காளி - 3 (நடுத்தரஅளவு) இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி பச்சை மிளகாய் - 2 மஞ்சள் தூள் - 1/2தேக்கரண்டி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி தனியா தூள் - 1 தேக்கரண்டி கொத்தமல்லித் தழை - 1 மேஜைக்கரண்டி கரம்மசாலாதூள் - 2 தேக்கரண்டி உப்பு - தேவையானஅளவு எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி சோம்பு - தாளிக்க அரைக்க : தேங்காய் துருவல் - 1/2 கப் கசகசா - 1 மேஜைக்கரண்டி மிளகு - 1 தேக்கரண்டி சோம்பு - 1 தேக்கரண்டி செய்முறை : * ந…
-
- 1 reply
- 759 views
-
-
சென்னை ஸ்பெஷல்: சைவ பிரியாணி என்னென்ன தேவை? கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, உருளைக் கிழங்கு - தலா 100 கிராம் பச்சை மிளகாய் - 4 தயிர் - 3 டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன் பட்டை - 2 லவங்கம் - 4 ஏலக்காய் - 2 ஜாதிக்காய்த் தூள் - சிறிதளவு வெங்காயம், தக்காளி - தலா 2 இஞ்சி பூண்டு விழுது - ஒன்றரை டீஸ்பூன் பாசுமதி அரிசி - 2 கப் புதினா, கொத்தமல்லி - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு எப்படிச் செய்வது? பாசுமதி அரிசியை பத்து நிமிடம் ஊறவை…
-
- 1 reply
- 758 views
-
-
டொராண்டோ வாசிகளுக்கு .இந்த நீண்ட வாரஇறுதியில்(June 28-30) இந்த றிப்ஸ் விழா kennedy/mcnicole சந்திக்கு அருகில் நடைபெறுகின்றது .பல தரப்பட்ட வடஅமெரிக்க றிப்ஸ் தயாரிப்பாளர்களும் வந்து கடை போடுவார்கள்.chicken,french fries,beer,ice cream ,corn எல்லாம் இருக்கும் .திறந்த வெளியில் இருந்து வெட்டலாம் .
-
- 2 replies
- 758 views
-
-
சப்பாத்திக் கொத்து தேவையான பொருட்கள் சப்பாத்தி – 4 வெங்காயம் – 2 மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள், உப்பு – சிறிதளவு. தாளிக்க கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் – சிறிதளவு. செய்முறை வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். சப்பாத்தியை சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, வெங்காயத்தை சேர்த்து வதக்கி… மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, தேங்காய்த் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும். கடைசியாக நறுக்கி வைத்திருக்கும் சப்…
-
- 4 replies
- 757 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 756 views
-
-
மைதா மா ஆரோக்கியமற்றது என்று அறிந்திருக்கிறேன் ஆனால் மைதாவுக்கும் கோதுமைக்கும் வித்தியாசம் அறிந்ததில்லை. ரவை எப்படி உருவாகிறது என்றும் அறிந்ததில்லை . இந்த காணொலியில் இந்த பெண் விளக்கமா சொல்லுது.
-
- 3 replies
- 756 views
-
-
ஆனியன் சிக்கன் வறுவல் தேவையான பொருட்கள்: சிக்கன் - 1/4 கிலோ சின்ன வெங்காயம் - 150 கிராம் இஞ்சி, பூண்டு விழுது - 1 டீ ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 கரம் மசாலாத்தூள் - 1 டீ ஸ்பூன் மிளகுத்தூள் - 2 டீ ஸ்பூன் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லித்தழை - சிறிதளவு செய்முறை : * சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். * காய்ந்த மிளகாயை 2 ஆக கிள்ளி வைக்கவும். * சிக்கனை நன்கு சுத்தம் செய்து விட்டு சிறு சிறுத் துண்டுகளாக்கி கொள்ளவும். * ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் முக்கால்வாசி வெங்காயத்தை போட்டு சிறிது வதக்கிய பின்னர் இஞ்சி பூண்டு விழுதினை சேர்த்து வதக்கவ…
-
- 0 replies
- 756 views
-
-
மீன் புட்டு : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் : மீன் - 500 கிராம் இஞ்சி - சிறிய துண்டு வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 7 வெ. பூண்டு - 6 பல் கடுகு, உளுந்தம்பருப்பு, உப்பு - தேவையான அளவு செய்முறை மீனை இட்லி கொப்பரையில் வேகவைத்து உதிர்த்துக்கொள்ள வேண்டும். இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், வெ. பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு வதக்கவும். பின்னர் மீனை உப்பு கலந்து நன்கு கிளறி இறக்கினால் சுவையான மீன் புட்டு ரெடி! இதில் விரும்பினால் முட்டை சேர்த்துக் கொள்ளலாம்.
-
- 1 reply
- 756 views
-
-
Pure cream+ ரின் பால், வேணுமெண்டால் கொஞ்சம் வனிலா ஒரே நிமிடத்தில் ஐஸ்கிறீம் கொத்துரொட்டி கொத்து ரொட்டி தயாரிப்புக்கு ரொட்டி தயாரிக்கவே பாதிநாள் போய்விடும், ஆனால் இங்கு அதிவேக மென்மையான ரொட்டி தயாரிப்பு . அப்புறம் என்ன மொத்த வேண்டியதுதான். இது எல்லாருக்கும் தெரிஞ்ச ரோஸ்ட் பாண்தான் , இருந்தாலும் சும்மா ஒரு இணைப்பு இது கொஞ்சம் நேரம் எடுக்கும், இருந்தாலும் நம்ம அச்சு பாண். உழுந்து தேவையில்லை, ஊற வைக்க தேவையில்ல அரைக்க தேவையில்லை அதிவேக அரிசி மா தோசை.
-
- 0 replies
- 756 views
-
-
மீன் கூட்டு : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் : சீலா மீன் அல்லது விரும்பிய மீன் துண்டுகள் – கால் கிலோ எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன் கடுகு,உளுத்தம் பருப்பு,வெந்தயம் – தலா அரைடீஸ்பூன் வெங்காயம் – 1 தக்காளி – 1 பூண்டு – 4 பல் பச்சை மிளகாய் – 2 மல்லி இலை - சிறிது கருவேப்பிலை – 2 இணுக்கு மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன் சீரகத்தூள் – கால் டீஸ்பூன் மிளகுத்தூள் – கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன் மல்லித்தூள் – 2 டீஸ்பூன் எலுமிச்சம் பழம் - பாதி உப்பு – தேவைக்கு. செய்முறை : மீன் துண்டுகளை சுத்தம் செய்த…
-
- 0 replies
- 753 views
-
-
அசைவ பிரியர்கள் அனைவருக்கும் விருப்பமான கொத்துக்கறியை வைத்து விதவிதமான உணவு வகைகளை செய்யலாம். இதில் மிக சுலபமாக செய்யக்கூடியது இந்த கொத்துக்கறி இட்லி தேவையானவை கொத்துக்கறி - தேவையான அளவு வெங்காயம் (நறுக்கியது ) - 1 கப் தக்காளி (நறுக்கியது ) - 1/2 கப் இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ் ஸ்பூன் சீரக தூள் - 1 டீஸ் ஸ்பூன் கரம் மசாலா தூள் - 1/2 டீஸ் ஸ்பூன் மிளகாய் தூள் - 1டீஸ் ஸ்பூன் கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு மஞ்சள் தூள் - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப செய்முறை கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். இதனுடன் நறுக்கிய தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், சீரக தூள், கரம் மசா…
-
- 3 replies
- 752 views
-
-
மதுரை உருளைக்கிழங்கு மசியல் உருளைக்கிழங்கு அனைவருக்குமே பிடித்த ஓர் காய்கறி. அத்தகைய உருளைக்கிழங்கை எப்படி சமைத்து சாப்பிட்டாலும் அற்புதமான சுவையில் இருக்கும். அந்த வகையில் இங்கு மதுரை ஸ்டைல் உருளைக்கிழங்கு மசியல் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. இது செய்வது மிகவும் ஈஸி. மேலும் இது வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு - 3 (வேக வைத்து தோலுரித்தது) எண்ணெய் - 1/4 கப் கடுகு - 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் சோம்பு - 1 டீஸ்பூன் மிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிது பூண்டு - 6 பற்கள் வெங்காயம் - 1 (நறுக்கியது) மிளகாய் …
-
- 0 replies
- 752 views
-
-
வாரணாசி தெருவோர உணவகங்களில் சாப்பாட்டு அசுரன்
-
- 2 replies
- 751 views
-
-
கார்லிக் பனீர் என்னென்ன தேவை? பனீர் - 200 கிராம், பச்சைமிளகாய் - 2, பூண்டு - 8 பல், மிளகு தூள் - 1/2 டீஸ்பூன், ரெட் சில்லி ஃப்ளேக்ஸ் - 1/2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2, குடைமிளகாய் - சிவப்பு, பச்சை(பொடியாக நறுக்கியது), தக்காளி விழுது - 1/2 கப், உப்பு - தேவைக்கு, எண்ணெய் + வெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன். எப்படிச் செய்வது? பனீரை வெந்நீரில் கழுவி தண்ணீரை வடித்து, பூண்டு, மிளகு, ரெட் சில்லி ஃப்ளேக்ஸ், உப்பு, அரைத்த பச்சைமிளகாயை பனீருடன் சேர்த்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும். கடாயை காய வைத்து எண்ணெய் + வெண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வதக்கி, குடைமிளகாய், தக்காளி விழுது சேர்த்து நன்கு வதக்கி, ஊறவைத்த பன…
-
- 0 replies
- 751 views
-
-
என்னென்ன தேவை? கோழி ஈரல் - 200 கிராம் எண்ணெய் - 2 தேக்கரண்டி பிரிஞ்சி இலை - 1 பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி பட்டை - 1 சிறிய துண்டு வெங்காயம் - 1 பெரிய மெல்லிய வெட்டப்படுகின்றன பூண்டு - 6 பல் பச்சை மிளகாய் - 2 கொத்தமல்லி இலை - 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு மசாலா... மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி மல்லி தூள் - 1 தேக்கரண்டி மிளகு தூள் - 2 தேக்கரண்டி சீரகத் தூள் - 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி எப்படிச் செய்வது? ஒரு கிண்ணத்தில் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகு தூள், சீரகத் தூள், கரம் மசாலா தூள், எடுத்து தண்ணீர் சேர்த்து கலக்கி வைக்கவும். ஒரு கடாயில் எண்ண…
-
- 2 replies
- 751 views
-
-
முருங்கை மீன் குழம்பு என்னென்ன தேவை? மீன் - 500 கிராம் முருங்கை காய் - 2 புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு பச்சை மிளகாய் - 3 கறிவேப்பிலை - சிறிது உப்பு - தேவையான அளவு தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன் துருவிய தேங்காய் - 1 கப் சின்ன வெங்காயம் - 6 மீன் குழம்பு மசாலா - 3 முதல் 4 டீஸ்பூன் மீன் குழம்பு மசாலாவிற்கு... மல்லி - 1 கப் சீரகம் - 1.5 டீஸ்பூன் கருப்பு மிளகு - 2 தேக்கரண்டி உலர் சிவப்பு மிளகாய் - 15 முதல் 20 மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி கறிவேப்பிலை - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு எப்படிச் செய்வது? ஒரு கடாயில் கொத்தமல்லியை குறைந்த வெப்பத்தில் வறுக்கவும் பின் ஒரு தட்டில் அ…
-
- 0 replies
- 751 views
-
-
-
- 0 replies
- 750 views
-
-
அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்று தான் வேர்க்கடலை. பொதுவாக வேர்க்கடலையை வறுத்து அப்படியே தான் சாப்பிடுவார்கள். ஆனால் அதில் சில மசாலாக்களை சேர்த்து பக்கோடா போன்று செய்து சாப்பிட்டால், அதன் சுவையே தனி. முக்கியமாக வேர்க்கடலை பக்கோடாவானது குழந்தைகளால் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இங்கு வேர்க்கடலை பக்கோடாவை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: வேர்க்கடலை – 1 1/2 கப் கடலை மாவு – 1/2 கப் …
-
- 1 reply
- 750 views
-
-
மதுரை ஜிகர்தண்டா மதுரை ஜிகர்தண்டா ஜிகர்தண்டா என்னும் வார்த்தை தமிழ் மொழி கிடையாது.இது ஒரு ஹிந்தி வார்த்தை. அதாவது ஜிகர் என்றால் இதயம், நெஞ்சு என பொருள் படும். தண்டா என்றால் குளிர்ச்சி என்று பொருள். இதயத்தை குளுமை படுத்தும் பொருள் என்பதால் அதற்கு ஜிகர்தண்டா (jigarthanda) என்று பெயர் வந்தது.இப்பானம் இளநீர்க்கு சமமாக மக்கள் பார்ப்பதற்கு முக்கிய காரணம் இதில் சேர்க்கப் படும் பொருட்கள் தான். தேவையான பொருட்கள் பால் - 1 கப் நன்னாரி சிரப் - 3-4 டேபிள் ஸ்பூன் பாதாம் பிசின் - 1-2 டேபிள் ஸ்பூன் சக்கரை - 1/2 கப் ஐஸ் கிரீம் - 1 கப் பால்கோவா - 2 டேப்ளேஸ்பூன் ஜிகர்தண்டா செய்முறை …
-
- 3 replies
- 750 views
-
-
-
- 0 replies
- 750 views
-
-
தேவையான பொருட்கள்: மைதா மாவு - 2 கப் உருளைக் கிழங்கு – 2 கேரட், பீன்ஸ், - 2 கப் பெரிய வெங்காயம் - 2 தக்காளி - 2 இஞ்சி, பூண்டு - 2 டீ ஸ்பூன் மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன் மல்லித் தூள் - 2 டீ ஸ்பூன் மஞ்சள்தூள் - சிறிதளவு கறிமசாலா தூள் - 1 டீஸ்பூன் ப்ரெட் தூள் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு நெய் - 2 டீ ஸ்பூன் எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு செய்முறை: உருளைக் கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். காய்கறிகள், வெங்காயம், தக்காளி இவற்றைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சிறிது பட்டை, சோம்பு போட்டு தாளித்து இஞ்சி, …
-
- 0 replies
- 749 views
-
-
சிக்கன் ரெசிபியில் எலுமிச்சை சீரக ரோஸ்ட்டட் சிக்கன் மிகவும் ருசியாக இருக்கும். அதிலும் இதில் எலுமிச்சை சேர்த்திருப்பதால், புளிப்பு சுவையும், மணம் தரும் வகையில் சீரகமும், இதர மசாலாப் பொருட்களையும் சேர்த்து செய்வதால், இதன் சுவைக்கு அளவே இருக்காது. இப்போது இந்த எலுமிச்சை சீரக ரோஸ்ட்டட் சிக்கனை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: சிக்கன் - 1/2 கிலோ (சற்று பெரிய துண்டுகளாக வெட்டியது) சீரகப் பொடி - 2 டீஸ்பூன் பூண்டு பொடி - 1 டீஸ்பூன் வெங்காயப் பொடி - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு வர மிளகாய் - 3 (அரைத்தது) சிவப்பு குடைமிளகாய் - 1 டீஸ்பூன் (அரைத்தது) மிளகு தூள் - 1/2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் - 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: …
-
- 0 replies
- 749 views
-
-
தேவையான பொருட்கள்: கருணைக்கிழங்கு - அரைக்கிலோ எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன் இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன் உப்பு - தேவைக்கு வறுத்து அரைக்க: சோம்பு - 2 டீஸ்பூன் சீரகம் - 1டீஸ்பூன் மிளகாய் வற்றல் - 4 கிராம்பு - 3 பட்டை - 2 துண்டு இதனை லேசாக வெறும் வாணலியில் வறுத்து பொடித்துக் கொள்ளவும். இத்துடன் ஒரு வெங்காயம், ஒரு தக்காளி, 2 டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவல் சேர்த்து அரைக்கவும். செய்முறை: சேனைக்கிழங்கை தோல் சிறிய துண்…
-
- 0 replies
- 749 views
-
-
பருப்பு வடை மோர்க்குழம்பு செய்வது எப்படி? பருப்பு வடை மோர்க்குழம்பு சூப்பராக இருக்கும். செய்வதும் மிகவும் எளிமையானது. இன்று இந்த பருப்பு வடை மோர்க்குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மோர் - 2 கோப்பை பருப்பு வடை - 7 துருவிய தேங்காய் - 1/4 கோப்பை துவரம்பருப்பு - 2 மேசைக்கரண்டி பச்சரிசி - 1 மேசைக்கரண்டி கொத்துமல்லி விதை (தனியா)- 2 மேசைக்கரண்டி இஞ்சி - 1 சிறிய துண்டு பச்சை மிளகாய் - 10 வற்றல் மிளகாய்…
-
- 0 replies
- 747 views
-