நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
காளான் பஜ்ஜி தேவையான பொருட்கள்: பட்டன் காளான் - 15 கடலை மாவு - 100 கிராம் சோளமாவு - 1 டேபிள் ஸ்பூன் அரிசிமாவு - 1 டேபிள் ஸ்பூன் மைதா - 1 டேபிள் ஸ்பூன் சீரகத்தூள் - 1 ஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் தேவைக்கேற்ப உப்பு, எண்ணெய் எடுத்துக் கொள்ளவும். செய்முறை: காளானை சுத்தம் செய்து கொள்ளவும். எண்ணெய் தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் ஒன்றாகக் கலந்து தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ளவும். காளானை ஒவ்வொன்றாக அதில் நனைத்து எடுத்து எண்ணையில் பொரித்து எடுக்க சுவையான பஜ்ஜி ரெடி. காலிஃப்ளவரையும் துண்டுகளாக்கி உப்பு நீரில் சுத்தம் செய்து, அரை வேக்காடாக வேக வைத்து, நீரை வடித்து விட்டு, இதேபோல் …
-
- 0 replies
- 972 views
-
-
முட்டைகோசுப் பொரியல் தேவையான பொருட்கள்: முட்டைகோசு - 1 தேங்காய் - 1 தக்காளி - 50 கிராம் வெங்காயம் - 25 கிராம் பூண்டு - 10 கிராம் மிளகு - அரைத்தேக்கரண்டி சீரகம் - அரைத்தேக்கரண்டி இஞ்சி - ஒரு துண்டு கொத்தமல்லி - ஒரு கட்டு மிளகாய்ப்பொடி - ஒரு மேசைக்கரண்டி புளி - 5 கிராம் சர்க்கரை - ஒரு தேக்கரண்டி மஞ்சள் பொடி - அரைத்தேக்கரண்டி எண்ணெய் - 50 கிராம் உப்பு - தேவையான அளவு செய்முறை: தேங்காயை உடைத்துத் துருவி பாதியை எடுத்து வைத்து விட்டு மீதியைப் பால் பிழிந்து கொள்ள வேண்டும். கொத்தமல்லியை வேரை நீக்கி, அத்துடன் எடுத்து வைத்த தேங்காய் துருவல், மிளகு, சீரகம், உரித்த பூண்டு இதனுடன் இஞ்சியையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள…
-
- 1 reply
- 1.7k views
-
-
பரோட்டா தேவையான பொருள்கள் மைதா மாவு உப்பு எண்ணெய் செய்முறை: முதலில் மைதா மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணிர் விட்டு சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் பிசைந்து கொள்ளவும். கொஞ்சம் தளதளவென்று இருக்க வேண்டும். பின்னர் அரை மணி நேரம் ஊறவிடவும். ஊறிய மாவை உருண்டைகளாகப் பிடித்து சப்பாத்திக்கு திரட்டுவது போல் பெரிய அளவில் அனைத்து ஊருண்டைகளையும் எண்ணெய் விட்டு திரட்டிக் கொள்ளவும். பிறகு கொஞ்சமாக மைதா மாவை எடுத்து சிறிது எண்ணெய் ஊற்றி பசைப்போல் செய்து கொள்ளவும். திரட்டி வைத்துள்ள மாவை ஒன்றன் மீது ஒன்று பசைத்தடவி அடுக்க வேண்டும். பிறகு அனைத்தையும் …
-
- 4 replies
- 24.6k views
-
-
சுவையான புளிச்ச கீரை துவையல்.. தேவையான பொருட்கள் * புளிச்ச கீரை - ஒரு கட்டு * காய்ந்த மிளகாய் - 10 * முழு தனியா - 1 1/2 மேசைக்கரண்டி * பச்சை மிளகாய் - 3 அல்லது 4 * பூண்டு - 7 அல்லது 8 பல் * வெங்காயம் - ஒன்று * வெந்தயம் - அரை தேக்கரண்டி * உப்பு - தேவைக்கேற்ப * எண்ணெய் - தேவைக்கேற்ப * வதக்கி சேர்க்க: * காய்ந்த மிளகாய் - 6 * பூண்டு - 6 பல் செய்முறை: புளிச்ச கீரையை இலைகளை மட்டும் ஆய்ந்து சுத்தம் செய்து கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை தோல் உரித்து நறுக்கி வைத்துக் கொள்ளவும். மேற் சொன்ன மற்ற தேவையானவற்றையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி…
-
- 0 replies
- 4.8k views
-
-
சிம்பிள் வெஜ் புலாவ் தேவையான பொருட்கள் ; சீரக சம்பா பச்சை அல்லது பாசுமதி அரிசி - அரைகிலோ எண்ணெய் - 50- மில்லி நெய் - 50 மில்லி இஞ்சிபூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் ஏலம் - 2 கிராம்பு - 2 பட்டை - 2 சிறியதுண்டு பிரியாணி இலை அல்லது ரம்பை இலை - சிறிது புளிக்காத மோர் - ஒரு கப் வெங்காயம் - 1 தக்காளி - சிறியது-1 மிளகாய் -2 கேரட்,உருளை,பீன்ஸ்,பச்சை பட்டாணி - சேர்ந்து கால் கிலோ மல்லி புதினா - சிறிது உப்பு - தேவைக்கு செய்முறை காய்கறிகளை நறுக்கி வைக்கவும்,அரிசியை அலசி குறைந்தது அரைமணி நேரம் ஊறவைக்கவும். புலாவ் செய்யும் பாத்திரத்தில் எண்ணெய் நெய் காயவிட்டு ஏலம்,பட்டை,கிராம்பு,பிரியாணி இலை சேர்க்கவும்.வெங்காயம் சிவறாமல் நன்கு வதக்கி…
-
- 0 replies
- 8.8k views
-
-
இங்கு யாழில் அநேகமானோர் மரக்கறி சாப்பிடும் சைவக்காராக உள்ளீர்கள்...ஏன் அசைவத்தை தவித்தீர்கள் எனத் தெரியவில்லை சில நேரம் கோழிக் கடையில வேலை செய்து அசைவத்தின் மீது வெறுப்பு வந்து விட்டதோ தெரியவில்லை...இந்த சாதம் நான் மரக்கறி சாப்பிடும் நாட்களில் செய்கிறனான்...தனிய இருப்பவர்கள் அல்லது அவசரமாக சமையல் செய்ய இருப்பவர்கள் விரும்பினால் செய்து பார்க்கலாம் சத்தானதும்,சுவையானதும் ஆகும் செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள். செய்யத் தேவையான பொருட்கள்; பாசுமதி அரிசி கொஞ்சம்[அதிக அரிசி போட்டால் அதிக சாதம் வந்து விடும் ஆகவே அளவாகப் போடுங்கள் மைசூர் பருப்பு அரிசிக்கு ஏற்றளவு புரோசின் மரக்கறி கோளி புளவர்,புரோக்களி,ஸ்பினாச் விரும்பினால் கரட் மஞ்சள் சிறிதளவு உப்பு தேவையான அளவு …
-
- 26 replies
- 6.4k views
-
-
பருப்பு ரசம்.. தேவையானவை.. முழு பூண்டு - 1 வெங்காயம் - 2 தக்காளி - 1 மிளகுதூள்- 3 ஸ்பூன் (காரம் தேவைபடுபவர்கள் கூடுதலாக சேர்த்து கொள்ளலாம்) காய்ந்த மிளகாய் - 5 பருப்பு - 1 டம்பளர்.. தாளிக்க; கடுகு - 1 ஸ்பூன்.. உளுந்து - 1 ஸ்பூன் கறி வேப்பிலை சிறிதளவு. செய்யும் முறை: பருப்பை ஒருபாத்திரத்தில் நீர் விட்டு.. நன்றாக குக்கரில் வேகவைத்து .. சூடு ஆறியதும் மிக்ஸியில் அடித்து கூழானதும்.. தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.. ஒரு வாணலில் எண்ணை விட்டு கடுகு போட்டு தாளித்து அதனுடன் வெட்டிய வெங்காயம்.. தக்காளி.. நசுக்கிய பூண்டு..கிள்ளிய காய்ந்த மிளகாய்.. மற்றும் மிளகுதூளை இட்டு நனறாக வெங்காயம் சிவக்கும் வரை வதக்கவும்.. பிறகு பருப்பு கடையலை…
-
- 1 reply
- 2.5k views
-
-
யாழ் கள உறவுகளே உங்களிள் யாருக்காவது சுவீஸ்லாந்து நாட்டவர்களின் உணவு வகைகளும் அதன் செய்முறைகளும் தெரிந்தால் இந்த திரியின் கீழ் இணைத்து விடவும் மிகவும் உதவியாக இருக்கும்.
-
- 6 replies
- 1.2k views
-
-
சுவையான பீர்கங்காய் கடையல்.. தேவையானவை: பீர்க்கங்காய் -1 வெங்காயம்- 2 பூண்டு -1 பல் தக்காளி - 2 துவரம் பரும்பு - 1 1/2 டம்ளர் பச்ச மிளகாய் - 6 காரம் அதிகமாக தேவைபடும் ஈழத்தோழர்கள் இன்னும் தேவை படும் அளவுக்கு சேர்த்து கொள்ளலாம் (குறிப்பாக தோழர் தமிழ்சிறி ) தாளிக்க கடுகு - ஸ்பூன். எண்ணைய் - ஸ்பூன் உளுந்து - ஸ்பூன். கறிவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு. செய்முறை: பீர்கங்காயையும் வெங்காயத்தினையும் நன்றாக கழுவி துண்டு துண்டாக நறுக்கி.. வைத்து கொள்ளவும் பிறகு ஒரு முழு பூண்டை உரித்து வைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி..அதில் நுனி கிள்ளிய பச்சை மிளகாய் மற்றும் துவரம் பருப்பினை இட்…
-
- 0 replies
- 3k views
-
-
வெண்டைக்காய் காரகுழம்பு தேவையானப் பொருட்கள்: வெண்டைக்காய் -250 கிராம் பூண்டு -5 பற்கள் கார குழம்பு சாம்பார் பொடி -- 2 ஸ்பூன் புளி -- 1 உருண்டை வெங்காயம் -- 10 தக்காளி -- 1 நல்லெண்ணைய் -- 3 ஸ்பூன் கடுகு,உளுத்தம்பருப்பு -- 1 டீஸ்பூன் வெந்தயம் -- 1/2 டீஸ்பூன் பெருங்காயம் -- 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை -- அரைத்த தேங்காய் -- 3 ஸ்பூன் சீரகம்,மிளகு -- 1 1/2 டீஸ்பூன் செய்முறை: * தக்காளியை அடுப்பில் சுட்டு அரைத்துக்கொள்ளவும் தேங்காய்,சீரகம்,மிளகை நைசாக அரைக்கவும் * வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம்பருப்பு தாளித்து வெந்தயம்,பெருங்காயம் போட்டு கறிவேப்பிலை ,போட்டுதாளிக்கவும் * வெங்காயம் போட்டு வத…
-
- 3 replies
- 4k views
-
-
சேமியா கிச்சடி தேவையானப் பொருட்கள்: 4 பேருக்கு சேமியா : 350 கிராம் ம.தூள் : ஒரு சிட்டிகை வெங்காயம் : ஒன்று ப.மிளகாய் : 2 தக்காளி : 2 எண்ணெய் : தே.அளவு கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை, க.பருப்பு : தலா ஒரு டீஸ்பூன் செய்முறை: கறிவேப்பிலை, தக்காளி வெங்காயம், ப.மிளகாயை சன்னமாக நறுக்கிக் கொள்ளவும். ஐந்து டம்ளர் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து அடுப்பில் கொதிக்க வைக்கவும். மற்றொரு அடுப்பில் கடாயில் எண்ணெய் காய வைத்து கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, தாளித்து கறிவேப்பிலை போட்டு வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போனவுடன் தக்காளி சேர்த்துக் கிண்டவும். சிறிது வெந்தவுடன் சேமியாவைப் போட்டு கிண்டவும். தீயை சிம்மில்…
-
- 0 replies
- 1.4k views
-
-
புதினா சாதம் தேவையானவை வடித்த சாதம் - 1 கப் மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன் உப்பு - தேவைகேற்ப்ப அரைக்க புதினா - 1 கட்டு கொத்தமல்லி இலை - கொஞ்சம் பச்சை மிளகாய் – 2 இஞ்ஞி - 1 சின்ன துண்டு லெமன் ஜூஸ் - ½ தே.க தாளிக்க எண்ணெய் - 1 தே.க கடுகு - ½ தே.க மிளகாய் வற்றல் - 1 பெருங்காய தூள் - ¼ தே.க கறிவேப்பிலை - கொஞ்சம் செய்முறை சாதத்தை நல்ல உதிரியாக வடித்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கயுள்ளதை தாளித்து அரைத்துள்ள மசாலவை போட்டு உப்பு சேர்த்து நல்ல பச்சை வாசனை போக வதக்கவும். வடித்துள்ள சாதத்தை அதில் கலந்து நல்ல கிளறவும். லெமன் ஜுஸ் விட்டு, கொஞ்சம் நெய்யும் சேர்த்து கிளறி விட்டு இறக்கவும். நல…
-
- 3 replies
- 1.6k views
-
-
புதினாத் துவையல் தேவையானவை புதினா இலை - 2 கப் தேங்காய் - 1 துண்டு பச்சை மிளகாய் - 3 உளுத்தம் பருப்பு - 1 கைப்பிடி புளி - பட்டாணி அளவு உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - சிறிது கடுகு - தாளிக்க செய்யும் முறை புதினா இலையை ஆய்ந்தெடுத்து, ஒரு வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி வதக்கி எடுத்துக் கொள்ளவும். அதே வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பையும் வறுத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காயை வில்லைகளாகப் போட்டு வதக்கி எடுத்து வைக்கவும். மிக்ஸி ஜாரில் தேங்காய் வில்லை, பருப்பு, புதினா இலை, பச்சை மிளகாய், சிறிது புளி, உப்பு போட்டு கொரகொரவென…
-
- 5 replies
- 2.7k views
-
-
வாழைத்தண்டு கறி தேவையான பொருட்கள் : வாழைத்தண்டு - ஒரு அடி தண்டு கடுகு - கால் ஸ்பூன் உளுத்தம் பருப்பு - அரை ஸ்பூன் வற்றல் மிளகாய் - இரண்டு உப்பு - தேவையான அளவு கறிவேப்பிலை - ஒரு கொத்து தேங்காய்த் துருவல் - ஒரு மூடி பயத்தம் பருப்பு - இரண்டு கைப்பிடி அளவு செய்முறை : வாழைத் தண்டை மேல் புறமாக லேசாக சீவிவிட்டு, வட்ட வடிவில் துண்டுகளாக்கவும். பின்னர் நார் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய தண்டு கருத்துப் போகாமல் இருக்க, மோர் கலந்த நீரில் வாழைத் தண்டைப் போடலாம். இல்லையென்றால் சாதாரண தண்ணீரில் போடலாம். கடாயில் எண்ணெய் ஊற்றி மிளகாய் வற்றல், கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்ததும் நறுக்கிய வாழைத் தண்டைப் ப…
-
- 0 replies
- 1.4k views
-
-
வடை கறி தேவையானவை: கடலைபருப்பு 1 கப் துவரம்பருப்பு 2 டேபிள்ஸ்பூன் தக்காளி 3 வெங்காயம் 2 பூண்டு 4 பல் இஞ்சி 1 துண்டு மசலாபொடி 1 டேபிள்ஸ்பூன் உப்பு,எண்ணைய் தேவையானது கொத்தமல்லித்தழை அரை கப் (பொடியாக நறுக்கியது) செய்முறை: கடலைபருப்பையும்,துவரம்பருப்பையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து இஞ்சி பூண்டுடன் தண்ணீர் விடாமல் அரைக்கவேண்டும். அரைத்த மாவை சிறிது எண்ணைய் விட்டு வேகவைக்கவேண்டும். ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு சிறிது எண்ணைய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய் மூன்றையும் போட்டு நன்றாக வதக்கவேண்டும்.அதனுடன் மசாலாபொடி,உப்பு,இரண்டு கப் தண்ணீர் கலந்து வேகவைக்கவேண்டும். பின்னர் அரைத்து வேகவைத்த மாவை கலந்து …
-
- 4 replies
- 2.2k views
-
-
கேழ்வரகு கூழ் கூழுக்கும் தமிழர் வாழ்வுக்கும் உள்ள தொடர்பு பற்றி சொல்லி தெரியவேண்டியது இல்லை.. இன்றும் எங்கள் வயலில் வேலைக்கு வருபவர்கள் மதிய உணவாக விரும்பி கேட்பது மோரில் கரைத்த கூழ்யே ஆகும்.. எளிமையான சத்து நிறைந்த உணவு இது ஆகும்.. தேவையானவை கேழ்வரகு மாவு - 3 கப் பச்சரிசி ரவை - 2 கப் உப்பு - தேவையான அளவு தயிர் - 1 கப் செய்யும் முறை முதல் நாள் இரவு கேழ்வரகு மாவில் உப்புப் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கைகளால் நன்கு கரைத்து மூடி வைத்து விட வேண்டும். மறுநாள் மாலையில், ஒரு பெரிய பாத்திரத்தில் பச்சரிசி ரவையை கழுவி தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். பச்சரிசி வெந்து வர…
-
- 3 replies
- 4.9k views
-
-
விடுமுறை நாளில் வித்தியாசமான சாப்பாட்டை சமைத்து உண்டு மகிழுங்கள்...இதோ உங்களுக்காக யெலோ ரைஸ்[மஞ்சல் சோறு] அதோடு தொட்டுக் கொள்ள கத்தரிக்காய் பாகி,கோழிக்கறி,அவித்த முட்டை செய்யத் தேவையான பொருட்கள்; அரிசி[பாசுமதி] வெங்காயம் கறுவா,ஏலக்காய்.கிராம்பு உள்ளி மஞ்சல் கருவேப்பிலை,றம்பை எண்ணெய் உப்பு வெஜிடபிள் stock அல்லது கோழி stock இனி செய்முறையைப் பார்ப்போம்; பாத்திரத்தை சூடாக்கி எண்ணெய் விடவும்... சூடானதும் வெட்டிய வெங்காயம்,உள்ளி போட்டு வதக்கவும்...வதங்கி பொன்னிறமாக வந்ததும் வாசனைத் திரவியங்களைப் போடவும் அத்தோடு கருவேப்பிலை,றம்பையை சேர்க்கவும் பின்னர் அரிசியையும்,மஞ்சலையும் போட்டு வெஜிடபிள் அல்லது கோழி அளவாக விட்டு பதமாக எடுக்கவும். இதற்கு தொ…
-
- 2 replies
- 1.6k views
-
-
புடலங்காய் கூட்டு தேவையான பொருட்கள் * பொடியாக நறுக்கிய புடலங்காய் - 1 கப் * பாசிபருப்பு – 1 / 4 கப் * ரசபொடி – 1 தேக்கரண்டி * மஞ்சள்தூள் - 1 / 4 தேக்கரண்டி * பெருங்காயத்தூள் - 1 / 4 தேக்கரண்டி தாளிக்க * நெய் - 1 தேக்கரண்டி * கடுகு - 1 / 4 தேக்கரண்டி * உளுத்தம்பருப்பு - 1 / 4 தேக்கரண்டி * சீரகம் - 1 /4 தேக்கரண்டி * வரமிளகாய் - 2 * கருவேப்பிலை - ஒரு கொத்து செய்முறை 1. பாசிபருப்பை வேக வைத்துக் கொள்ளவும். 2. முக்கால் பாகம் வெந்தவுடன் அதில் புடலங்காயைப் போடவும். 3. இரண்டும் சேர்ந்து நன்றாக வெந்ததும் மஞ்சள்தூள், ரசபொடி, உப்பு, பெரு…
-
- 5 replies
- 3k views
-
-
திருநெல்வேலி அல்வா தேவையான பொருட்கள்: கோதுமை - 250 கிராம் சர்க்கரை - 500 கிராம் பால் - ஒன்றரை கப் நெய் - 100கிராம் செய்முறை: கோதுமையை மூன்று நாட்களுக்கு தினமும் தண்ணீரை மாற்றி, மாற்றி ஊற வைக்கவும். நான்காவது நாள் கிரைண்டரில் நன்கு அரைத்து, நிறைய தண்ணீர் விட்டு, மெல்லிய துணியில் வடிகட்டி அப்படியே மூன்று மணி நேரம் வைக்கவும். மேலே தெளிந்து நிற்கும் தண்ணீரை வடித்து விட்டு, ஒரு கப் பாலைச் சேர்க்கவும். பாதி நெய்யை அதனுடன் சேர்த்து, துடுப்பால் நன்கு கிளறி அடுப்பில் வைத்து கிளறவும். சுருள வரும் போது மீதியுள்ள பாலில் சர்க்கரையை கரைத்து அத்துடன் சேர்க்கவும். கலவை கொதித்து, இறுகி, கெட்டியான பதத்திற்கு வரும்போது, சுத்தமான நெ…
-
- 3 replies
- 2k views
-
-
ரசகுல்லா தேவையான பொருள்கள்: பால் – 1 லிட்டர் எலுமிச்சைச் சாறு அல்லது வினிகர் சர்க்கரை – 400 கிராம் மைதா – 25 கிராம் ரோஸ் எசன்ஸ் – 2, 3 துளிகள் தண்ணீர் – 2 லிட்டர் ரசமலாய்: பால் – 1 லிட்டர் சர்க்கரை – 3 டேபிள்ஸ்பூன் ஏலப் பொடி முந்திரி, பிஸ்தா, பாதாம் – தலா 4 குங்குமப் பூ செய்முறை: ரசகுல்லா: * ஒரு பெரிய பாத்திரத்தில் பாலைக் காய்ச்சி, நன்றாகக் கொதிவரும்போது ஒரு மூடி எலுமிச்சைச் சாறு அல்லது வினிகர் கலக்கவும். * உடனே பால் திரிந்துவிடும். இந்தப் பாலை, ஒரு மெல்லிய துணி அல்லது பனீர் வடிகட்டியில் கொட்டி, வாயைக் கட்டித் தொங்கவிடவும். எதற்கும் பனீர் மூட்டையையும் ஒரு முறை குழாயடியில் நீட்டிக் கழுவினால் வினி…
-
- 3 replies
- 2.4k views
-
-
காளான் போண்டா தேவையான பொருட்கள்:- உருளைக் கிழங்கு – 250 கிராம் காளான் – 250 கிராம் கடலை மாவு – 300 கிராம் பச்சை மிளகாய் – 8 மிளகுப் பொடி – 1 தேக்கரண்டி இஞ்சி – சிறுதுண்டு கொத்தமல்லித் தழை – 1 கட்டு டால்டா அல்லது எண்ணெய் – 250 கிராம் உப்பு – தேவையான அளவு செய்முறை:- உருளைக் கிழங்கை வேக வைத்துத் தோலை நீக்கி, உப்பு சேர்த்துப் பொடியாக பிசைந்து கொள்ள வேண்டும். பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லித் தழை இவற்றை அம்மியில் வைத்துச் சிதைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். காளான்களைப் பொடியாக நறுக்கி எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ள வேண்டும். மாவாக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு, அரைத்து வைத்துள்ள மசாலா வதக்கி வைத்துள்ள காளான், மிளகுப்பொடி, உப்ப…
-
- 2 replies
- 1.6k views
-
-
யாழ்ப்பாணத்து மக்கள் புட்டுக்கு பொரித்து இடித்த தேங்காய்ச் சம்பல், வெந்தயக்குழம்பு, மீன் குழம்பு, கோழி இறைச்சிக்கறி, ஆட்டு இறைச்சிக்கறி, பயற்றங்காய்க்கறி, மரவள்ளிக் கிழங்குக்கறி போன்ற பல கறிகளைச் சேர்த்து உண்பார்கள். பொதுவாக பயற்றங்காய்க் கறி என்றால் குரங்குவால் பயற்றங்காய்க் கறியைக் குறிக்கும். இக்குரங்குவால் பயற்றங்காய்க் கறியை விசேட வைபவங்களிலும் கோவில்களிலும் பரிமாறுவார்கள். கிராமப்புற மக்களின் உணவுப் பழக்க வழக்கங்களில் பயற்றங்கொட்டைக்கறிக்கு தனி செல்வாக்கு இருக்கிறது. இந்த பயற்றங்கொட்டைகளை கீரைப் புட்டுக்கும் பயன்படுத்துவார்கள். மேலதிக கட்டுரைக்கு http://www.yarlmann.lk/head_view.asp?key_c=356
-
- 7 replies
- 1.3k views
-
-
தேவையான பொருட்கள் சுத்தப்படுத்திய நண்டு - 500 கிராம் வெட்டிய வெங்காயம் - 100 கிராம் வெட்டிய பச்சைமிளகாய் - 25 கிராம் கருவேப்பிலை - தேவையான அளவு சிறிதாக வெட்டிய உள்ளி - தேவையான அளவு வெந்தயம் - தேவையான அளவு தேங்காய்ப் பால் - தேவையான அளவு பழப்புளி - சிறிதளவு உப்பு - தேவையான அளவு யாழ்ப்பாணத்து மிளகாய்த்தூள் - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை 1. தாச்சியை சூடாக்கி அதில் தேவையான அளவு எண்ணெய்விட்டு அதில் சிறிதாக வெட்டிய உள்ளி, வெட்டிய வெங்காயம், வெட்டிய பச்சைமிளகாய், கருவேப்பிலை, வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும். 2. தாளிதம் பொன்னிறமாக வரும்போது அதில் சுத்தப்படுத்திய நண்டை சேர்த்து வதங்க விடுங்கள். 3. பின்னர்தேங்காய…
-
- 11 replies
- 3k views
-
-
செட்டிநாட்டு வத்த குழம்பு.. சுண்டைக்காய் வற்றல் 5 ஸ்பூன் வெங்காயம் - 3 பூண்டு- 10 பல் தக்காளி - 1 சாம்பார் பொடி(கொத்துமல்லி+ மஞ்சள் தூள் + மிளாகாய்தூள் கலவை) - 3 ஸ்பூன் புளி எலுமிச்சை உருண்டை அளவு உப்பு- தேவையான அளவு தாளிப்பதற்கு எண்ணைய் - 5 ஸ்பூன் கடுகு - 1 ஸ்பூன் வெந்தயம் - 1 ஸ்பூன் சோம்பு - 1 ஸ்பூன் கறிவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு.. செய்முறை.. வெங்காயம் தக்காளி பூண்டு மூன்றையும் நறுக்கி கொண்டு .. புளியை உப்பு நீரில் ஊறவைக்கவும்..அடுப்பில் வாணலைவைத்து 5 ஸ்பூன் எண்ணைய்விட்டு மேற்சொன்ன தாளிக்கும் பொருட்களை கடுகு பொறிந்ததற்கு பின் இட்டு...சுண்டைக்காய் வற்றல் வெங்காயம் தக்காளி பூண்டு போட்டு சிவக்க வதக்கி ..வதங்கியவு…
-
- 5 replies
- 15.3k views
-
-
குலோப் ஜாமூன் ... தேவையான பொருட்கள்:- மில்க் பவுடர்- 2 கப் மைதா -1/2கப் பால்-1/4கப் பட்டர்- 3 டேபிள் ஸ்பூன் பேக்கிங் பவுடர்-1/2 டீஸ்பூன் எண்ணெய்- பொரிப்பதற்க்கு தேவையான அளவு ஜீரா தயாரிக்க;- சீனி-3கப் தண்ணீர்-3கப் ரோஸ் எஸ்ஸன்ஸ்-2 ட்ராப்ஸ் 1.முதலில் ஒரு அகலமான சட்டியில் சீனியை போட்டு தண்ணீரை ஊற்றி ஜீரா தாயரிக்கவும்.அதில் ரோஸ் எஸ்ஸன்ஸ் விட்டு கலந்து வைக்கவும். பிறகு ஒரு பவுலில் மில்க் பவுடர்,மைதா,பேக்கிங் பவுடர்,ஆகியவற்றை நன்கு கலந்து அதில் பட்டரை உருக்கி ஊற்றி பால் சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பிசையவும்.மாவு உதிரியாக தெரிந்தால் சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்கு பிசையவும் அதன…
-
- 2 replies
- 1.6k views
-