நிகழ்தல் அறிதல்
நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்
நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.
633 topics in this forum
-
நல்லூர்... சித்தரத்தேர், வெள்ளோட்டம் இன்று! யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவிலின் புனருத்தாரணம் செய்யப்பட்ட சித்திரத்தேர் வெள்ளோட்டம் இன்று பெருமளவான பக்தர்கள் புடைசூழ இடம்பெற்றது. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பரிபாலகர்களான மாப்பாண முதலியார் பரம்பரையில் வந்துதித்த மூன்றாம் இரகுநாத மாப்பாண முதலியார் காலத்தில் ஆலயத்துக்கான முதலாவது தேர் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் இரண்டாம் ஆறுமுக மாப்பாண முதலியார் அழகன் முருகனுக்கான தங்க ஆபரணங்கள் மற்றும் வெள்ளி சிங்காசனம் ஆகியவற்றைச் செய்து அழகன் முருகனை அழகு பார்த்தார். இவரது காலத்தில் சண்முகப் பெருமான் ஸ்தாபிக்கப்பட்டதுடன், சண்முகரே தேரில் ஏறி, பக்தர்களுக்கு அருள் பாலிக்கவும் தொடங்கினார்…
-
- 0 replies
- 345 views
-
-
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின்... “ குமார வாசல்” கோபுர, கலாசாபிசேகம்! வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வட திசையில் குபேர வாயில் கோபுரத்திற்கு உட்புறமாக புதிதாக நிர்மானிக்கப்பட்ட “குபேர திக்கு, குமார வாசல்” கோபுர கலாசாபிசேகம் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. ஆலயத்தின் வருடாந்திர மகோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று வரும் நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கார்த்திகை உற்சவமாகும். காலை, இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து ஆறுமுக பெருமான் பக்தர்கள் மத்தியில் எழுந்தருளி அருட்காட்சி அளித்தார். தொடர்ந்து கோபுர கலாசாபிசேகம் இடம்பெற்றது. அதன்போது பல நூற்றுக் கணக்காணோர் கலந்து கொண்டு ஆறுமுக பெருமானை தரிசி…
-
- 0 replies
- 284 views
-
-
மட்டக்களப்பு... ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலய, வருடாந்த மஹோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்! கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புடையதும் தொண்மை வாய்ந்ததுமான மகா துறவி சுவாமி ஓங்காரானந்த சரஸ்வதியால் ஸ்தாபிக்கப்பட்ட மட்டக்களப்பு கல்லடி ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா நேற்று புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. நேற்று காலை மட்டக்களப்பு அரசடியில் உள்ள சித்திவிக்னேஸ்வரர் ஆலயத்தில் இருந்து கொடிச்சீலை திருச்செந்தூர் முருகன் ஆலயத்தினை வந்தடைந்ததும் விசேட யாக பூசைகள் இடம்பெற்றுன. ஆலயத்தில் மூலமூர்த்திக்கு அபிசேக ஆராதனைகள் இடம்பெற்றதனைத் தொடர்ந்து கொடியேற்றம் இடம்பெற்று, விசேட ஆராதனைகள் மற்றும் கொட…
-
- 2 replies
- 337 views
-
-
கதிர்காமம் கந்தன் கோவிலின்... வருடாந்த கொடியேற்றம் இன்று! வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் கோவிலின் வருடாந்த கொடியேற்ற நிகழ்வு, இன்று (வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெறவுள்ளது. உகந்தை மலை ஸ்ரீ முருகன் கோவில் கொடியேற்றமும், கோவில் பிரதமகுரு சிவசிறி க.கு.சீதாராம் குருக்கள் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. கொடியேற்றம் ஆரம்பமாகி தொடர்ச்சியாக 15 நாட்கள் திருவிழாக்கள், பெரஹரா இடம்பெற்று, எதிர்வரும் 12ஆம் திகதி கதிர்காமத்தில் தீர்த்த உற்சவமும் அதேபோன்று, உகந்தை முருகன் கோவிலின் தீர்த்த உற்சவம் எதிர்வரும் 11ஆம் திகதியும் இடம்பெறவுள்ளன. இது இவ்வாறு இருக்க கதிர்காமத்துக்கான காட்டுப்பாதையில் பயணிக்கும் பக்தர்கள் தொடர்ச்சியான மழையால் பாதிக்கப்ப…
-
- 7 replies
- 640 views
-
-
விபுலானந்தாவில் பிறந்த நாள் பொன் விழா. ShanaJuly 15, 2022 காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் 1988, 1991 காலப் பகுதியில் கபொத. சா.த மற்றும் உ.தரம் பயின்ற மாணவர்களின் பிறந்தநாள் பொன் விழா நிகழ்வு நேற்று முன்தினம் காரைதீவில் நடைபெற்றது . காரைதீவு விபுலானந்த கலாச்சார மண்டபத்தில் பொன் விழாக் குழுத் தலைவர் எல்.ஏ.ராஜேந்திரகுமார் தலைமையில் பொன்விழா நடைபெற்றது . விழாவில் சிறப்பம்சமாக இந்த அணியினருக்கு கற்பித்த ஆசிரியர்கள் 24 பேரும் அதிதிகளாக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள். ஆசிரியர்களை முன்னிலைப்படுத்தி அவர்களுக்கு மாலைசூட்டி, நினைவு பரிசு வழங்கி கௌரவித்திருந்தமை பலரையும் ஈர்த்திருந்தது. மேலும், முன்ன…
-
- 2 replies
- 478 views
-
-
வண்ணை, வீரமாகாளி அம்மன் தேர். யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் தேர்த் திருவிழா இன்று(செவ்வாய்க்கிழமை) காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது. இதில் அதிகளவான பக்த அடியார்கள் பங்கேற்றிருந்தனர். https://athavannews.com/2022/1290882
-
- 2 replies
- 398 views
-
-
திருக்கேதீஸ்வர மகா கும்பாபிஷேகத் திருவிழா ஆரம்பம். June 30, 2022 மன்னார் அருள்மிகு திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷே நிகழ்வை முன்னிட்டு பூர்வாங்க கிரிகைகள் இன்று வியாழக்கிழமை (30) காலை 10.45 மணி அளவில் திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு சிவ சிறி தியாகராஜா கருணானந்த குருக்கள் தலைமையில் இடம்பெற்றது. கும்பா விசேசத்திற்கு வருகை தந்த சிவச்சாரியார்கள் மற்றும் தேவாரம் ஓதுபவர்கள் ,தர்மபுர ஆதி யினத்தினை சேர்ந்தவர்கள் திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குருவால் மாலை அனுவிக்க பட்டு மங்கள வாத்தியத்துடன் வரவேற்கப்பட்டனர். -அதனைத் தொடர்ந்து விநாயகர் வழிபாட்டுடன் கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டது. கிரிகைகளின் போது சாந்தி பூஜைகள் தர்மபுர ஆதீன மு…
-
- 1 reply
- 338 views
-
-
சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடு அன்னையின் ஆடித் திருவிழா மன்னார் மடு அன்னையின் ஆடித் திருவிழா இன்று (2) சனிக்கிழமை காலை இடம்பெற்றது. மடுத் திருத்தலத்தின் திருவிழா கடந்த 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. நவ நாள் ஆராதனைகளை தொடர்ந்து இன்று சனிக்கிழமை காலை திருவிழா திருப்பலி கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் யாழ் மறைமாவட்ட ஆயர் மேதகு ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் மற்றும் குருக்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர். திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவனி இடம் பெற்றதோடு, பக்தர்களுக்கு திருச்சொரூப ஆசியும் வழங்கப்ப…
-
- 0 replies
- 182 views
-
-
கதைமாமணி மாஸ்டர் சிவலிங்கத்தின்... சிலை, மட்டக்களப்பில் திறந்து வைப்பு! உலகப்புகழ்பெற்ற சிறுவர் கதைகூறும் கலைஞர் இலங்கையின் கதைமாமணி எனப்போற்றப்படும் மாஸ்டர் சிவலிங்கத்திற்கு இன்று மட்டக்களப்பில் சிலை அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது. தமிழரின் அடையாளமாக, தமிழ் இலக்கியத்தின் முதுசமாக மிளிர்தவர் சிவலிங்கம் மாமா.அவர் மட்டக்களப்பு மாநகரத்திற்குட்பட்ட மஞ்சந்தொடுவாயை பிறப்பிடமாகவும் கல்லடியை வசிப்பிடமாகவும் கொண்டவர். உலகங்கெங்கும் உள்ள தமிழ் சிறார்களை தனது கதைமூலம் ஈர்த்தவர். வில்லிசை வேந்தர், சொல்லிசைச் செல்வர், கதைமாமணி மாஸ்டர் என பல்வேறு கௌரவ பட்டங்களைப்பெற்றவர்.எங்கும் யாரிடமும் இல்லாத சிறுவர்களுக்கு வித்தியாசமான முறையில் கதைகூறும் ஆற்றல்கொண்டு க…
-
- 0 replies
- 308 views
-
-
நயினாதீவு, ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தின்... திருவிழா ஆரம்பம்! வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் – நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நேற்று (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்தும் 15 தினங்கள் சிறப்புற இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு சப்பறத் திருவிழாவும், 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை இரதோற்சவமும் மறுதினம் புதன்கிழமை காலை தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளன. https://athavannews.com/2022/1289022
-
- 0 replies
- 318 views
-
-
இன்று யாழ் கதிர்காமம் பாதையாத்திரைகுழுவின் திருகோணமலை கோணேஸ்வரர் ஆலய தரிசனம் By Shana வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பஞ்ச எச்சங்களும் ஒன்றான புகழ் பெற்ற திருகோணமலை கோணேஸ்வரர் ஆலயத்தை இன்று(24) வியாழக்கிழமை யாழ் - கதிர்காமம் பாதயாத்திரை குழு தரிசிக்கின்றது. கடந்த 15 நாட்களாக யாழ் மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தை கடந்து திருகோணமலை மாவட்டத்தை அடைந்தள்ளது. . நேற்று நிலாவெளி லக்ஷ்மி நாராயணன் ஆலயம் மற்றும் சல்லி அம்மன் ஆலயத்தில் தங்கியிருந்தது. இன்று பாதயாத்திரை குழுவின் தலைவரான சி.ஜெயராசா தலைமையில் தொண்ணூறு அடியார்களை கொண்ட குழுவினர் திருகோணமலை கோணேஸ்வரர் ஆலயத்தை சென்றடைந்து அங்கு பூஜையில் கலந்து கொள்வார்கள்…
-
- 1 reply
- 339 views
-
-
சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 130வது பிறந்த நாள் நிகழ்வு மட்டக்களப்பில் நினைவுகூரப்பட்டது உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 130வது பிறந்த நாள் இன்று (03) மட்டக்களப்பில் நினைவுகூரப்பட்டது. மட்டக்களப்பு மாநகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வானது சுவாமி விபுலானந்த அடிகளாரின் உருவச் சிலை அமைந்துள்ள நீரூற்றுப் பூங்கா வளாகத்தில் மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி ஆணையாளர் உ.சிவராஜா தலைமையில் நடைபெற்றது. இதன்போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி முதல்வர் க. சத்தியசீலன் அவர்களால் சுவாமியின் திரு உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், நிகழ்வில் கலந்து கொண…
-
- 0 replies
- 485 views
-
-
ஈஸ்டர் தினம் இன்று – நாடளாவிய ரீதியில் பிரார்த்தனைகளும் கொண்டாட்டங்களும்..! உலகவாழ் கிறிஸ்தவ மக்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் தினத்தை கொண்டாடுகின்றனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுவதைக் குறிக்கும் தினமாக இந்த ஈஸ்டர் ஞாயிறு கிறிஸ்தவர்களால் கொண்டாடுப்படுகிறது. இலங்கையிலும் ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் நாட்டின் பல தேவாலயங்களில் விசேட ஆராதனை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில் கொடூரமான பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. கிறித்தவ தேவாலயங்களிலும் நட்சத்திர விடுதிகளிலும் இத்தொடர் குண்டுவெடிப்புகள் காலை 08:30 இற்கும் 09:15 மணிக்குமிடையி…
-
- 0 replies
- 265 views
-
-
பெரிய வெள்ளி இன்று – கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு! உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) பெரிய வெள்ளி தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இயேசு கிறிஸ்த்து அனுபவித்த துன்பங்களை நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. கிறிஸ்தவ வழிபாட்டு ஆண்டில் முக்கியமான இந்த நாள், இயேசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்படும் இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூருகின்ற இந்தவிழாவின்போது கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதற்கமைய, இலங்கையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavanne…
-
- 0 replies
- 209 views
-
-
மாற்றுத்திறனாளியியலில் ஏற்பட்டு வரும் உற்சாகம் நேற்றைய இணையவழி கருத்தரங்கில் ஆங்கிலத்திலும் தமிழிலுமாக மாறி மாறி பேசி உண்மையில் தாவு தீர்ந்து போனது - கலவையான பார்வையாளர்கள் என்பதால் இரண்டிலும் பேசுங்கள் என ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டிருந்ததால் அப்படி ஆகிற்று. முதலில் நான் ஆங்கிலத்திலே பேசியாக வேண்டும் என நினைத்திருந்ததால் குறிப்புகளையும் அம்மொழியிலே எடுத்திருந்தேன். அதை இங்கு விரைவில் பகிர்ந்து கொள்கிறேன். பங்கேற்றிருந்த மாற்றுத்திறனாளிகளின் ஆர்வம், கேள்விகள், கருத்துகள் எனக்கு மகிழ்ச்சியளித்தன. அண்மையில்“தமிழா தமிழா” நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் குறித்து விவாதம் நடந்த போதும் இதை கவனித்தேன். மாற்றுத்தி…
-
- 0 replies
- 694 views
- 1 follower
-
-
தமிழ் முஸ்லிம்களின் பொங்கல் கொண்டாட்டம் கொண்டிருக்கும் சேதி கோம்பை அன்வர் நீங்களும் - அதாவது முஸ்லிம்களும் - பொங்கல் கொண்டாடுவீர்களா? சந்தேகமும் ஆச்சர்யமும் கலந்த பல நண்பர்களின் கேள்விகள், எனக்கோ அல்லது என் குடும்பத்தினருக்கோ புதிதல்ல. ஒன்றல்ல, இரண்டல்ல; 16 வகை காய்கறிகளுடன் காலகாலமாகப் பொங்கலைக் கொண்டாடிவரும் எங்களுக்கு இது போன்ற கேள்வி வேடிக்கையாக இருக்கும் என்றால் மிகையாகாது. கோம்பை அன்வர் தன் குடும்பத்துடன், பொங்கல் விருந்தில் இருப்பினும் இந்தக் கேள்விக்குப் பல காரணங்கள் உள்ளதை மறுக்க முடியாது. அவற்றில் மிக முக்கியமானது இஸ்லாம் மற்றும் தமிழக இஸ்லாமியர் குறித்த தட்டையான புரிதல் ஆகும். இஸ்லாம் குறித்த தட்டையான புரிதலுக்கு பல இஸ்லாமியர்…
-
- 9 replies
- 1.7k views
-
-
எம்.ஜி.இராமசந்திரனின் பிறந்த தின நிகழ்வு யாழில்! தமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்திய பிரபல நடிகருமான எம்.ஜி.இராமசந்திரனின் (MGR) 105வது பிறந்த தினம் நேற்று (திங்கட்கிழமை) மாலை யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு, யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கத்தின் மனைவி மாலை அணிவித்து தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளர் நிரோஷ் மற்றும் வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் செல்வம் உள்ளிட்டோர் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கத்தின் குடும்பத்தினர்,எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் பொதுமக்கள் உட்…
-
- 0 replies
- 381 views
-
-
யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சி 21 ஆம் திகதி ஆரம்பம்! யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சி இம்முறையும் 12 ஆவது முறையாக நடைபெறவுள்ளது. கண்காட்சி எதிர்வரும் 21 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரை யாழ் முற்றவெளி மைதானத்தில் நடைபெறுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கா கண்காட்சி மற்றும் மாநாட்டு சேவைகள் நிறுவனம் யாழ்ப்பாணம் வர்த்த கைத்தொழில் சம்மேளனத்துடன் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளது. சர்வதேச வர்த்த பேரவை மற்றும் இந்தியாவின் கைத்தொழில் மற்றும் வர்த்த ஆலோசனை நாயகத்தினாலும் இதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினர் தமது உற்ப…
-
- 1 reply
- 402 views
-
-
தந்தை செல்வா கலையரங்கில் அடையாளங்களையும் வரலாறுகளையும் ஆராயும் கண்காட்சி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியை அண்டி அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கில் அடையாளங்களையும் வரலாறுகளையும் ஆராயும் கண்காட்சி நேற்று இடம்பெற்றது. அதிகார நிலை, சலுகை, எங்கள் வீதிகளின் வரலாறுகள், கடந்த காலக் கதைகள், ஆவணப்படம் கிளிநொச்சியிலிருந்து கலை, வெவ்வேறு கோணங்களில் கடந்த காலம் உள்ளிட்ட தலைப்புக்களில் கண்காட்சி அம்சங்கள் உட்பட இறுதியாக கலந்துரையாடலும் இடம்பெற்றிருந்தது. இந்த கண்காட்சியில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து எழுத்தாளர்கள், செயற்பாட்டாளர்கள், சமாதான ஆர்வலர்கள் மூத்த பிரஜைகள், உட்பட துறைசார்ந்தோரும் கலந்து கொண்டன…
-
- 0 replies
- 470 views
-
-
பாரதியாரின் 139ஆவது பிறந்தநாள் இன்று – யாழில் சிலை திறந்து வைப்பு December 11, 2021 இந்தியாவின் தேசிய கவிஞர் மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 139ஆவது பிறந்தநாள் நிகழ்வுகள் யாழில் கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி சந்தியில் அமைத்து பாரதியாரின் திருவுருவ சிலைக்கு இந்திய துணைத்தூதரக , துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் மாலை அணிவித்து மலர் தூபி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் , ஆணையாளர் ஜெயசீலன் , யாழ்.தமிழ் சங்க தலைவர் லலீசன் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர் தூபி மரியாதை செலுத்தினர். அதேவேளை , மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 139வது பிறந்தநாளா…
-
- 1 reply
- 485 views
-
-
நாவலர் பெருமானின் திருவுருவச் சிலை திறந்து வைப்பு! நாவலர் பெருமானின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்படவுள்ளது. எதிர்வரும் 18 ஆம் திகதி கார்த்திகை தீபத் திருநாளில் நாவலர் கலாசார மண்டபத்தின் நுழைவாயிலில் திறந்து வைக்கப்படவுள்ளது. யாழ் மாநகர சபையின் உறுதுணையுடன் சைவ மகா சபையால் நிறுவப்பட்ட திருவுருவச் சிலை காலை 10 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது. நாவலர் பெருமானின் திருவுருவச் சிலை திறப்பு விழாவினை முன்னிட்டு நாவலர் கலாசார மண்டபத்தை புனரமைக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றது. நாவலர் கலாசார மண்டபத்தின் பராமரிப்பு தொடர்பில் சர்ச்சைகள் வெளிவந்த நிலையில், தற்போது நாவலரின் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://new…
-
- 1 reply
- 574 views
-
-
மன்னார் - கொக்குப்படையானில் புனித யாகப்பர் ஆலயம் திறப்பு மன்னார் மறைமாவட்டத்தின் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் புதிதாக அமைக்கப்பட்ட கொக்குப்படையான் புனித யாகப்பர் ஆலயம் நேற்றைய தினம் சனிக்கிழமை (7) மாலை மன்னார் மறை மாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையினால் அபிஷேகம் செய்து திறந்து வைக்கப்பட்டது. கொக்குப்படையான் புனித யாகப்பர் ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை டெஸ்மன் அஞ்சலோ தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை குறித்த ஆலயத்தை ஆசிர்வதித்து திறந்து வைத்து அபிஷேகம் செய்துவைத்தார். குறித்த நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர், அருட்தந்தையர்கள், கிராம மக்கள் என பலர் கலந்துக் கொண்டனர…
-
- 0 replies
- 1.1k views
-
-
நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா குறித்த அறிவிப்பு வெளியானது! சுகாதார விதிமுறைகள் இறுக்கமாக அமுலாக்கப்பட்டு யாழ்ப்பாண நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழா இடம்பெறும் என யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார். நல்லூர்க் கந்தன் பெருந்திருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையயில் மேலும் தெரிவித்துள்ள அவர், “நல்லைக் கந்தப் பெருமானின் வருடாந்தப் பெருந் திருவிழாவானது இம்மாதம் 13ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இவ்வேளையில் நாடெங்கும் ஏற்பட்டுள்ள கொடிய கொரோனா தொற்றின் தீவிர பரவல் நிலையைக் கருத்திற்கொண்டு தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள சு…
-
- 0 replies
- 346 views
-
-
காரைதீவில் எளிமையாக நடந்தேறிய முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 74வது சிரார்த்ததின நிகழ்வு! (வி.ரி.சகாதேவராஜா)உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் ஸ்ரீமத் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 74 வது சிரார்த்ததின நிகழ்வு அவர் பிறந்த காரைதீவு மண்ணில் எளிமையாக நேற்று (19) நடந்தேறியது. காரைதீவு சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்தபணிமன்ற முன்னாள் தலைவர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் சுகாதாரமுறைப்படி மட்டுப்படுத்தப்பட்ட பிரமுகர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வு பணிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. முன்னதாக இந்துக்களின் கொடியான நந்திக்கொடியை தலைவர் வி.ரி.சகாதேவராஜா ஏற்றியதும் புஸ்பாஞ்சலி செலுத்தி கீதம் இசைக்கப்பட்டது. மணிமண்டப வளாகத்திலுள்ள சுவாமியின் திருவுர…
-
- 1 reply
- 431 views
-
-
பாடசாலை மாணவர்களுக்கு சித்திரம் வரைய வாய்ப்பு 15 Views தொற்றுநோய் கருப்பொருளில் ஓவியங்களை சமர்ப்பிக்குமாறு இலங்கை வைத்திய சங்கம் பாடசாலை மாணவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பாலர் பாடசாலை முதல் 10ஆம் தரம் வரையான மாணவர்கள் இதில் பங்கேற்க முடியுமென்பதோடு, ஒரு தரத்தில் உள்ள மாணவர்கள், ஒரு வயது பிரிவினராக கருதப்படுவார்கள்எனவும், வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது. எந்தவொரு சித்திர முறையின் மூலமும் படைப்புகளை சமர்ப்பிக்கலாம் எனவும், ஒரு மாணவருக்கு அதிகபட்சம் இரண்டு சித்திரங்களை சமர்ப்பிக்க முடியுடிமெனவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. தமது படைப்பின் புகைப்படத்தை 070-3091419என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கோ அல்லது …
-
- 0 replies
- 3.5k views
-