நிகழ்தல் அறிதல்
நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்
நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.
634 topics in this forum
-
பாடசாலை மாணவர்களுக்கு சித்திரம் வரைய வாய்ப்பு 15 Views தொற்றுநோய் கருப்பொருளில் ஓவியங்களை சமர்ப்பிக்குமாறு இலங்கை வைத்திய சங்கம் பாடசாலை மாணவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பாலர் பாடசாலை முதல் 10ஆம் தரம் வரையான மாணவர்கள் இதில் பங்கேற்க முடியுமென்பதோடு, ஒரு தரத்தில் உள்ள மாணவர்கள், ஒரு வயது பிரிவினராக கருதப்படுவார்கள்எனவும், வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது. எந்தவொரு சித்திர முறையின் மூலமும் படைப்புகளை சமர்ப்பிக்கலாம் எனவும், ஒரு மாணவருக்கு அதிகபட்சம் இரண்டு சித்திரங்களை சமர்ப்பிக்க முடியுடிமெனவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. தமது படைப்பின் புகைப்படத்தை 070-3091419என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கோ அல்லது …
-
- 0 replies
- 3.5k views
-
-
-எம்.றொசாந்த் நயினாதீவு நாகபூசணி அம்மனின் வருடாந்த மகோற்சவம், செப்டெம்பர் 6ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளததாக, கோவில் அறங்காவலர் சபையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. நாகபூசணி அம்மன் கோவிலின் வருடாந்த மகோற்சவம், நாளை மறுதினம் (10) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவிருந்தது. இதன்போது, நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மகோற்சவத்தை மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன் நடத்த முன்னர் தீர்மானிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இன்று (08) காலை அவசரமாக கூடிய கோவில் அறங்காவலர் சபையினர், மகோற்சவத்தை பிற்போட தீர்மனித்துள்ளதாக அறிவித்துள்ளனர். Tamilmirror Online || நயினாதீவு திருவிழா பிற்போடப்பட்டது
-
- 0 replies
- 511 views
-
-
யேர்மனிலிருந்து வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்படவுள்ள தமிழ் இளைஞர்களைக் காப்பாற்ற போராடுவோம் – போராட்ட ஒழுங்கமைப்பாளர்கள் 101 Views யேர்மனியிலிருந்து தமிழ் இளைஞர்கள் வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட இருப்பதைத் தடுக்கும் வகையில் IMRV – பிறேமன் மனித உரிமைகள் அமைப்பு, Voice – உலகத்தமிழர் உரிமைக்குரல் அமைப்பு ஆகியோர் மனித உரிமை ஆர்வலர்களின் அனுசரணையுடன் Pforzheim நகரில் போராட்டமொன்றை ஒழுங்கு செய்துள்ளனர். போராட்டம் நாளை திங்கட்கிழமையிலிருந்து புதன்கிழமை வரை, பகல் இரவு தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடைபெறும். பகுதிநேர ஒத்துழைப்பாக அனைத்துத்தமிழ் மக்களும் பங்குகொள்ள வேண்டுகிறோம். இது ஓர் முக்கியமான முன்னெடுப்பு. சட்ட அளவிலும் பாராளு…
-
- 0 replies
- 376 views
-
-
-
- 15 replies
- 2k views
-
-
கோவிட்-19 வந்தால் உடனடியாக நீங்கள் செய்ய வேண்டியவை என்ன? - வழிகாட்டல் நிகழ்ச்சி ச.அ.ராஜ்குமார்ஜெனி ஃப்ரீடா வழிகாட்டல் நிகழ்ச்சி பொது மருத்துவர் ஃபரூக் அப்துல்லா நிகழ்ச்சியில் பங்கேற்று வாசகர்களின் கேள்விகளுக்கு நேரடியாகப் பதிலளிக்கிறார். கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் கோர தாண்டவம் ஆடிவருகிறது. முதல் அலையைவிட இரண்டாம் அலையில்தான் தொற்று ஏற்படுபவர்களுக்கு அறிகுறிகள் தீவிரமாக இருக்கின்றன. திடீர் ஆக்ஸிஜன் குறைபாடு கொரோனா அறிகுறிகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதுமட்டுமல்லாமல், நாட்டில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு பிரச்னையும் தற்போது தலைவிரித்தாடுகிறது. கொரோனா பரவல் அதிகரித்துச் ச…
-
- 0 replies
- 641 views
-
-
தமிழின் பார்வையில் மூலமொழி ஆய்வு 78 Views இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் மூலமொழி ஆய்வு தொடர்பான பத்தாவது சொற்பொழிவு எதிர்வரும் 24.04.2021 (நாளை) சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்தப் பத்தாவது சொற்பொழிவில், முனைவர் கு.அரசேந்திரன் அவர்கள், “பந்தம்” – கட்டுதல், பிணைத்தல் என்னும் பொருளில் உருவான தமிழ்ச் சொல். இதுவே bandha என்னும் சமற்கிருதத்திற்கும் bind, bond முதலான மேலை இந்தோ ஐரோப்பியத்திற்கும் மூலம். தமிழர், தமிழுடன் கொண்டிருந்த தமிழ் உறவினையும் தமிழ்ப் பந்தத்தினை யும் விளக்குகிறார். தமிழ்நாடு நேரம் : மாலை 17:30 மணி (IST) சொல்லாய்வில் பங்கேற்க மற்றும் கூடுதல் தகவலுக்கு க…
-
- 0 replies
- 431 views
-
-
நடிகர் விவேக் நினைவாக யாழ்.இணுவில் இளைஞர்களால் மரநடுகை திட்டம்..! மறைந்த நகைச்சுவை நடிகரும், சமூக செயற்பாட்டாளருமான விவேக்குக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக யாழ்.இணுவில் இளைஞர்களால் மரநடுகை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு கோடி மரம் நடுகை செயற்திட்டத்தை நடிகர் விவேக் முன்னெடுத்து வந்திருந்தார். அந்நிலையில் , கடந்த சனிக்கிழமை அவர் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பலர் மரநடுகை செயற்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் வரதராஜா தனகோபியின் ஏற்பாட்டில் இணுவில் இளைஞர்கள் மரநடுகையில் ஈடுபட்டனர். அதேவேளை Jaffna Jaguars எனும் அமைப்பொன்றினை உருவாக்கி அதில் தன்னார்வமுடைய இளையோரை இணைத்து மரநடுகை செயற்தி…
-
- 0 replies
- 336 views
-
-
2021 ஆம் ஆண்டின், துணிச்சல் மிக்க ரனித்தாவை, மன்னார் கௌரவித்தது! April 17, 2021 துணிச்சல் மிக்க பெண்ணிற்கான சர்வதேச விருதினைப் பெற்ற மன்னாரை சேர்ந்த சட்டத்தரணி திருமதி ரனித்தா ஞானராஜா வரவேற்கப்பட்டு கௌரவிப்பு. 2021 ஆம் ஆண்டிற்கான துணிச்சலுள்ள பெண்ணிற்கான சர்வ தேச விருதினைப் பெற்ற மன்னார் மாவட்டத்தை சேர்ந்த சட்டத்தரணி திருமதி ரனித்தா ஞானராஜாவை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை(17.04.21) மாலை 3 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்றது. மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்த கௌரவிப்பு நிகழ்வில், மாலை 3 மணியளவில் மன்னார் பஸார் பகுதியில் இருந்து ஊர்வலமாக அழைத்துச் செய்யல்லப்பட்டார். …
-
- 2 replies
- 514 views
-
-
திருக்குறள் விழா April 17, 2021 முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலகமும் கல்வி பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த திருக்குறள் விழா நேற்று (16-04-2021) மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றுள்ளது . மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் செல்வி றஞ்சனா நவரத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்த திருக்குறள் விழாவில் முதன்மை விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் க. விமலநாதன் கலந்துகொண்டு விழாவின் ஆரம்ப சுடரினை ஏற்றி வைத்ததுடன் திருவள்ளுவர் சிலைக்கு மலர் மாலை அணிவித்தாா். இதனைத் தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் நடைபெற்றன இதில் திணைக்கள தலைவர்கள் அரச உத்தியோகத்தர்கள் உயர் அதிகாரிகள் பாடசாலை மாணவர்கள் சமய தொண்டர்கள் பொதும…
-
- 0 replies
- 702 views
-
-
மும்மொழிகளில் களைகட்டிய தைவான் தமிழ்ச்சங்கத்தின் தமிழர் பண்பாட்டு தின விழா.! தைபே: தைவான் தமிழ்ச் சங்கம், தைவான் நாட்டில் தமிழர்கள் பண்பாட்டு நிகழ்வுகளை தைவான் மற்றும் பிற நாட்டு மக்களுக்கு சொல்லும் வகையில் இந்த ஆண்டு தமிழர் பண்பாட்டு தினவிழாவினை கொண்டாடி சிறப்பித்தது. தமிழர் பண்பாட்டு தினவிழா தைவான் நாட்டின் தலைநகரான தைபேயில் உள்ள செங் யுங் ஃபா பவுண்டேஷன் வளாகத்தின் உள்ளரங்கத்தில் சுமார் முன்னூறுக்கும் மேற்பட்ட பார்வையாளர் புடைசூழ விழா சிறப்புற நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கிய தமிழர் பண்பாட்டு தின விழாவில், தைவான் தமிழ்ச் சங்கத்தின் துணைத்தலைவர் ரமேஷ் பரமசிவம் வரவேற்பு உரையாற்ற, சிறப்பு விருந்தினர்களாக இந்திய தைபே அசோசியேசனின் துணை பொது இ…
-
- 0 replies
- 567 views
-
-
முன்னாள் மன்னார் ஆயர் மறைவு – தமிழ் தேசிய துக்க தின பிரகடனம் 32 Views மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் 01/04/2021 இல் இயற்கை எய்திய செய்தியானது தமிழர் தேசத்தினை ஆழாத்துயரில் ஆழ்த்தியுள்ளது என வடக்கு கிழக்கு பொது அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. மேலும், “ஆயர் அவர்களின் இழப்பானது தமிழர் தேசத்திற்கு அளவிட முடியாத ஒரு பேரிழப்பாகும். அவரின் இழப்பால் தமிழ்தேசியம் ஒரு சிறந்த தலைவனை இழந்து நிற்கின்றது. தமிழரின் உரிமைக்காக மதங்களை கடந்து தேசியத்தின் பால் ஓங்கி ஒலித்த குரலை தமிழர்தேசம் இன்று இழந்துநிற்கின்றது . 2009 ம் ஆண்டு யுத்தம் மெளனிக்கபட்ட பின் தமிழர் தேசம் திக்கற்றவர்களாக நின்ற நே…
-
- 0 replies
- 412 views
-
-
யேர்மனி வாழ் ஈழத் தமிழ் அகதிகளுக்கான நாடுகடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுப்போம் – ஈழத்தமிழர் அமைப்புகள் 43 Views கடந்த சில நாட்களாக அதிக எண்ணிக்கையிலான எமது ஈழத் தமிழ் உறவுகள் சிறீலங்காவுக்கு நாடுகடத்தப்படுவதற்காக அதிரடியாக கைதுசெய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் Duldung விசாவை மட்டுமே வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரு நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை சேகரித்து வருகின்றோம். இவ்விடயம் சார்ந்து யேர்மனியில் உள்ள மனிதவுரிமை அமைப்புகளுக்கும் தெரியப்படுத்தி உள்ளோம். நாளைய தினம் (28) யேர்மனியில் உள்ள அகதிகளுக்கான முக்கிய அமைப்புடன் கைதுசெய்யப்பட்டு உள்ள உறவுகளுக்கான அர…
-
- 0 replies
- 431 views
-
-
வரலாற்றுச் சிறப்புமிக்க கிளிநொச்சி – கரைச்சி, புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தரப் பொங்கல் திருவிழா நாளை (28) நடைபெறவுள்ளது. இந்நிலையில் இன்று பாரம்பாரிய முறைப்படி தென்மராட்சி – மீசாலை, புத்தூர் சந்தி, பண்டமரவடியில் இருந்து மடைப்பண்டம் எடுத்துச் செல்லப்பட்டது. நாகதம்பிரான் மடைப்பண்டம் மீசாலையில் இருந்து சென்றது! – உதயன் | UTHAYAN (newuthayan.com)
-
- 3 replies
- 656 views
-
-
தமிழின் பார்வையில் மூலமொழி ஆய்வு 34 Views இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் மூலமொழி ஆய்வு தொடர்பான ஒன்பதாவது சொற்பொழிவு எதிர்வரும் 27.03.2021 (நாளை) சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த ஒன்பதாவது சொற்பொழிவில், முனைவர் கு.அரசேந்திரன் அவர்கள், ‘அரசன்’ என்னும் தமிழ்ச் சொல், கீழை இந்தோ ஐரோப்பியச் சமற்கிருதத்தில் raja-raj என்றும் மேலை இந்தோ ஐரோப்பியத்தில் rej-roy-royal என்றும் திரிந்து பரவியிருப்பதை விளக்குகிறார். சொல்லாய்வில் பங்கேற்க மற்றும் கூடுதல் தகவலுக்கு கீழ் உள்ள சமூக ஊடக தளங்களில் இணையலாம். FaceBook: facebook.com/NostraticTamil Twitter: twitter.com/NostraticTamil …
-
- 0 replies
- 767 views
-
-
தமிழர்களின் நில ஆக்கிரமிப்பை ஆராயும் சர்வதேச மாநாடு இன்று. தமிழர்களின் நில ஆக்கிரமிப்பை ஆராயும் சர்வதேச மாநாடு (20.03.2021): அனைவரையும் பங்குபற்ற அழைப்பு தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களான வடக்கு- கிழக்கில் தீவிரம் அடைந்துள்ள நில அபகரிப்பு தொடர்பிலும் இதற்கெதிராக மேற்கொள்ளவேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “தமிழர் தாயகத்தை இழத்தல்: தமிழர் நிலத்தை பாதுகாப்பதற்கான உபாயங்களை வகுத்தலும் பிரச்சினைகளை இனம்காணுதலும்” என்ற தலைப்பிலான சர்வதேச மாநாட்டுக்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 20 ஆம் திகதி சனிக்கிழமை பிரித்தானிய நேரப்படி பிற்பகல் 12.30 மணிமுதல் மாலை 5.30 மணிவரை (இலங்கை நேரம் மாலை 6.00 மணி முதல் இரவு 11…
-
- 0 replies
- 566 views
-
-
கோண்டாவில் குமரகோட்டம் பேச்சி அம்மன் கோவில் மகா கும்பாபிசேகம் 15.03.2021
-
- 0 replies
- 429 views
-
-
6 ஆவது நாளாகிய இன்றைய மெய்நிகர் நிகழ்வு வழமை போல் பிரித்தானிய நேரம் மாலை 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. தவத்திரு வேலன் சுவாமிகள் (சிவகுரு ஆதீனம் யாழ்ப்பாணம்) மற்றும் கிறிஸ்தவர் இஸ்லாமிய மதத்தலைவர்களின் ஆசியுரைகளுடன் ஆரம்பமாகவுள்ள இந்நிகழ்வில் முன்னாள் நீதியரசரான பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான க.வி. விக்னேஸ்வரன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அரி பரந்தாமன் மற்றும் ஆர்த்தி, குருபரன் ஆகியோரின் சிறப்புரைகள் இடம் பெறவுள்ளன. உடல் சோர்வுற்ற நிலையிலும் திருமதி அம்பிகை செல்வகுமார் மக்களிற்கான தனது கோரிக்கை தொடர்பில் விசேட உரை நிழ்த்தவுள்ளார். மேற்படி மெய்நிகர் (zoom) நிகழ்வில் நீங்களும் இணை…
-
- 0 replies
- 415 views
-
-
ஐக்கிய இராச்சிய தமிழ்த்துறையை நிறுவ பேரழைப்பு.! இலண்டன் பல்கலைக்கழகம், SOAS இல் தமிழ்த்துறை அமைவதற்கு வலுசேர்க்கும் முயற்சியாக கிளி மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் தொண்டு நிறுவனங்களும் ஐக்கிய இராச்சிய தமிழ்த்துறையும் சந்திக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலண்டன் பல்கலைக்கழகம், SOAS இல் தமிழ்த்துறை அமைவதற்கு பல்வேறு தரப்பினரும் பல முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதுடன் இந் நடவடிக்கைக்கு ஆதரவும் பெருகி வருகிறது. இந்த நிலையில் இதன் இன்னொரு முயற்சியாக கிளி மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் தொண்டு நிறுவனங்களும் ஐக்கிய இராச்சிய தமிழ்த்துறையும் சந்திக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. https://vanakkamlondon.com/world/london/2021/02/103335/
-
- 0 replies
- 461 views
-
-
செந்தமிழ் ஆகம திருமுறை திருமணம் | தமிழர் மரபு திருமணம்.
-
- 0 replies
- 783 views
-
-
நெப்போலியன் படையெடுப்பு: இறந்த வீரர்களின் எச்சங்கள் 209 ஆண்டுகளுக்குப் பின் அடக்கம் நெப்போலியனின் ரஷ்ய படையெடுப்புக்குப் பிறகு, அதிலிருந்து பின்வாங்கும் போது நடந்த போரில் இறந்த பிரெஞ்சு மற்றும் ரஷ்ய படை வீரர்களின் உடல்கள், சுமார் 209 ஆண்டுகளுக்குப் பின், ரஷ்யாவில் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டன. 120 படை வீரர்களோடு, மூன்று பெண்கள் மற்றும் மூன்று பதின் வயது இளைஞர்களும் அடக்கம் செய்யப்பட்டனர். இவர்களது உடலின் எச்சங்களை, பிரான்ஸ் மற்றும் ரஷ்ய நாட்டு அகழாய்வாளர்களை கொண்ட ஒரு குழுவினர், இரண்டு ஆண்டுகளுக்கு முன் கண்டறிந்தா…
-
- 0 replies
- 637 views
-
-
கார்லஸ் சொரியா: எவரெஸ்ட் உட்பட உலகின் நெடிய சிகரங்களை தொடும் 81 வயது `இளைஞர்` பட மூலாதாரம்,COURTESY OF CARLOS SORIA உலகின் 14 சிகரங்களில் பெரும்பாலான சிகரங்களை ஏறிவிட்டார், கார்லஸ் சொரியா. இதில் எவரெஸ்ட் சிகரமும் அடக்கம். மீதமுள்ள சிகரங்களையும் ஏற இவர் திட்டமிட்டிருக்கிறார். 81 வயதான கார்லோஸ் சொரியா, இந்த ஆண்டின் வசந்த காலத்தில், மீண்டும் இமய மலையில் அடர்த்தி குறைந்த காற்றை சுவாசிக்கும் அனுபவத்தை எதிர்பார்க்கிறார். இவர் நேபாளத்தில் இருக்கும் தெளலகிரி சிகரத்தை ஏறவிருக்கிறார். அதன் பிறகு இலையுதிர் காலத்தில், திபெத்தில் இருக்கும் சிஷபங்மா சிகரத்தை ஏறத் திட்டமிட்டு இருக்கிறார். அப்படி ஒருவேளை இந்…
-
- 0 replies
- 405 views
-
-
சென்னை அருகே வாழ்ந்த ஆதி மனிதர்கள்: 3,85,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு சென்னையை அடுத்துள்ள அதிரம்பாக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்த கற்கருவிகள், 3,85,000 வருடத்திலிருந்து 3,25,000 வருடங்களுக்குள் இடைக்கற்காலம் அங்கு நிலவியிருக்கலாம் என்று காட்டுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. தெற்காசியாவில் இடைக் கற்காலம் முன்பு கருதப்பட்டதைவிட முன்கூட்டியே நிகழ்ந்திருக்கலாம் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 7 பிப்ரவரி 2018 புதுப்பிக்கப்பட்டது 7 பிப்ரவரி 2021 …
-
- 0 replies
- 575 views
-
-
வியட்நாம் போரில் அமெரிக்கா பயன்படுத்திய ஏஜென்ட் ஆரெஞ்ச் வேதி தாக்குதல்: பிரான்ஸ் நீதிமன்றம் விசாரணை பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஜனவரி 2021 படக்குறிப்பு, 1968ல் ஏஜென்ட் ஆரஞ்ச் தாவரக் கொல்லி வேதிப் பொருளை சாய்கோன் என்ற பகுதியில் காடுகளின் மீது தூவியபடியே பறந்து செல்லும் அமெரிக்க விமானப்படை ஜெட் விமானம். வியட்நாம் போரின்போது அமெரிக்கா பயன்படுத்திய 'ஏஜென்ட் ஆரஞ்ச்' என்ற மிகக் கொடிய வேதிப் பொருளை உற்பத்தி செய்த, விற்பனை செய்த 14 நிறுவனங்களின் மீது தொடரப்பட்ட வழக்கை பிரான்ஸ் நீதிமன்றம் விசாரணை செய்யவுள்ளது. வியட்நாம் போர் முழுவதையும் ஒரு பத்திரிகையாளராகப் பார்வையிட்…
-
- 0 replies
- 394 views
-
-
எப்போதும் இங்கே 18 விதமான சிவ கணத்தாரும் இங்குவந்து ஈசனிடம் வேண்டிய வண்ணமே இருப்பதால், அவர்களின் வேண்டுதல்களை செவிமடுக்கும் விதமாக, இங்குள்ள நந்திதேவர் தலையை வலப்புறமாகச் சாய்த்தே அமர்ந்துள்ளார். பாரத நாடு ஆன்மிக பூமி. அதற்கு எடுத்துக்காட்டு ஊர்தோறும் எழுந்தருளும் ஆலயங்கள். நம் முன்னோர்கள் ஊர்தோறும் கோயில்கள் அமைத்து ஆன்மிகம், கலை, கல்வி ஆகியவற்றைப் போற்றி வளர்த்தனர். ஆனால் அவை எல்லாம் பிற்காலத்தில் பராமரிப்பு இன்றிச் சிதிலமடைந்தன. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்து புதுப்பிக்க வேண்டும் என்பது ஆகம விதி. ஆனால் ஓர் ஆலயம் 1,100 ஆண்டுகளாகக் கும்பாபிஷேகம் காணாமலும் புனரமைக்கப்படாமலும் இருந்தது. கார்கோடபுரீஸ்வரர் ஆலயம் …
-
- 3 replies
- 590 views
-
-
யேர்மன் தலைநகர் பேர்லினில்மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்-தமிழர்களே ஒன்று திரள்வீர்! 15 Views “73 வருட அடக்குமுறைக்கு உள்ளான மக்களின் ‘நீதியின் எழுச்சி’“ என்ற தலைப்பின் கீழ் யேர்மன் தலைநகர் பேர்லினில் முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடலில் கலந்துகொள்ளுமாறு ஈழத்தமிழர் மக்கள் அவை – யேர்மனி மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி ஆகியன இணைந்து அழைப்பு விடுத்துள்ளன. குறித்த போராட்டம் 04.02.2021 (வியாழக்கிழமை) மதியம் 12 மணிக்கு (யேர்மன்) Auswärtiges Amt Werderscher Markt 1,10117 Berlin என்ற முகவரியில் நடைபெறவுள்ளது. “மனிதவுரிமை ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடரினை முன்னிட்டு தமிழின அழிப்பிற்கு அனை…
-
- 0 replies
- 551 views
-