கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
நட்சத்திரங்களை ருசிப்பவர்கள் - பா.திருச்செந்தாழை விநோதங்களின் முதல் விதியின்படி, நீங்கள் வாசித்துக் கடந்த செய்தித்தாளின் கீழ் விளிம்பில், அந்தச் சிறு சதுரத்தில் நோயுற்ற காகம் போல மௌனத்திலிருந்த எழுத்துகள், என்னை மட்டுமே தெரிவு செய்தன. ‘பறக்கும் கம்பளத்தில் வாழ விருப்பமா?’ அதனருகே பச்சை மாமிசத்தின் உறைசிவப்பிலிருக்கும் மேப்பிள் இலையும், அதன் நடுவே ஆழ்துயிலிலிருக்கும் ஒரு வெண்கம்பளிப்பூச்சியின் படமும் இலச்சினைப் போல மிளிர்ந்தன. விநோதங்களின் இரண்டாவது விதியின்படி, அந்த வீட்டை வடிவமைத்தவர் குறித்த தெளிவான தகவல்கள் இல்லை. இருந்தும் இல்லாததாய் கவனப்பிசகில் பதுங்குகின்ற சில இடங்களைப்போல, தனித்துவிட்ட அந்த மிக உயரக் கட்டடத்தின் மொட்டைமாடியின் நடுவே, ஒரு …
-
- 0 replies
- 1k views
-
-
மான்டேஜ் மனசு 19: லன்ச் பாக்ஸ் - மதிப்புமிகு மாற்றுக் காதல்! அலுவலகப் பணிகள் முடிந்து வீட்டுக்கு கிளம்பத் தயாராக இருந்த தருணம் அது. குணசேகரன்தான் செல்போனில் அழைத்தார். ''குடும்பஸ்தன் ஆன பிறகு மேன்ஷனையே மறந்திட்டியே டா...'' ''அப்படில்லாம் இல்லை பெருசு... ஒருநாள் கண்டிப்பா வர்றேன்.'' ''இப்படியே எத்தனை நாளைக்குதான் சமாளிப்ப... இன்னைக்கு ஃப்ரீயா..?'' ''ஹ்ம்ம். நீங்க எங்கே இருக்கீங்க?'' அடுத்த அரை மணி நேரத்தில் திருவல்லிக்கேணியில் ஒரு மேன்ஷனில் குணசேகரனை சந்தித்தேன். சம்பளம் போட்ட தினம் என்பதால் குணசேகரன் நண்பர்களுடன் உற்சாகமாகப் பேசிக்கொண்ட…
-
- 0 replies
- 1k views
-
-
உறக்கமில்லாக் குருதி - ப.தெய்வீகன் [1] திரவத்தகடுகள் போல மினுங்கியபடி புரளும் யாரா நதியின் அசைவுகளைப் பார்த்தவாறு கார்த்திகேசு புற்தரையில் அமர்ந்திருந்தார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாமல் ரயிலேறி மெல்பேர்ன் நகருக்கு வந்துவிடுகின்ற கார்த்திகேசுவுக்கு, இந்தப் புற்தரை சிநேகமாகி மூன்று மாதங்களாகின்றன. பூப்பையைத் தன் பக்கத்திலேயே பத்திரமாய் வைத்திருந்தார். வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்னரே நீர் தெளித்து கவனமாக எடுத்துவந்த பூக்கள். வீட்டில் பூக்கள் கிடைப்பது கடினம் என்று, மெல்பேர்ன் சிவா விஷ்ணு கோவிலில் சொல்லி எடுத்த பூக்கள் இவை. வெயில் ஏறிக்கொண்டுபோக, நீள் காற்சட்டையைக் கொஞ்சம் மேல்பக்கமாக உருவிப் பார்த்தார். பொருக்கு பரந்திருந்த கால்களுக்குக் கனகாலமாகக் களிம்ப…
-
- 0 replies
- 541 views
-
-
போட்டோ பேங்கிற்கு எடுத்துச் செல்ல எனது பென்ஷன் ஆர்டர் புத்தகம் தேவைப்பட்டது. அறைக்குள் வந்து பீரோவைத் திறந்தேன். பள்ளி, கல்லூரிச் சான்றிதழ்கள் போன்ற முக்கியமானவற்றின் ‘பேக்’கில் வைத்திருந்தேன். அந்தப் புத்தகத்தை எடுக்கப் போகும்போது எனது பார்வையில் பட்டது ஒரு கார்டு சைஸ் போட்டோ. எடுத்துப் பார்த்தேன். நினைவு பின்னோக்கிச் சென்றது. நான் வேலை பார்த்த அலுவலகத்தில் அறிமுகமாகி, நல்ல பழக்கமானாள், லதா. ஒரு நாள் அவளிடம் ஆசையாகக் கேட்டேன், ‘‘ஸ்டூடியோவுக்குப் போய் நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு போட்டோ எடுத்துக்குவோமா?’’அந்தக் காலத்தில் இப்போது போல சர்வசாதாரணமாக போட்டோ எடுத்துக் கொள்ள செல்போனோ... செல்ஃபியோ கிடையாது. அவசரமாய் மறுத்தாள், ‘‘ஐயையோ…
-
- 0 replies
- 1k views
-
-
செக்கு மாடு (குறுநாவல் ) பற்றிய குறிப்புகள் வ.ஐ.ச.ஜெயபாலன் 1990 களின் ஆரம்பத்தில் எழுதபட்ட குறுநாவல். திண்ணை வாசகரின் மீழ் வாசிப்புக்காக பதுசெய்வதில் மகிழ்ச்சி செக்குமாடு குறுநாவல் ஒஸ்லோ பல்கலைக் களகத்தில் மானிட இயலில் கலாநிதிப் பட்ட (Phd) ஆய்வுகள் மேற்கொண்டிருந்தபோது கலாநிதி ஒய்விண்ட் புக்ளரூட்டால் எனது வாய்மொழி ஆங்கிலம் பெயர்பின்மூலம் நோர்வீஜிய மொழியில் மொழி பெயர்க்கப் பட்டது. அது அவரது (Life on the Outside - Oivid Fuglerud) ஆய்வில் விரிவாகப் பயன்படுத்தப் பட்டது. கனடாவைச் சேர்ந்த மானிடவியலாளரான தோழி றொபின் ஓக்லே என் வாய்மொழி ஆங்கில மொழிபெயர்ப்பினூடாக செக்குமாட்டை மொழியாக்கம் செய்தார்.(Beast of Burden (Chekku Madu): The Power of the Wandering Poet Among th…
-
- 0 replies
- 756 views
-
-
ஒரு நிமிடக் கதை: யானை மன்னரின் கை நாடியைப் பிடித்துப் பார்த்த அரண்மனை வைத்தியர் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியை அமைச்சர் நல்லசிவம் உணர்ந்தார். “வைத்தியரே... மன்னர்..” உதட்டைப் பிதுக்கினார் வைத்தியர்.. தலையை இருபக்கமும் அசைத்தார். “துடிப்பு குறைகிறது.. தாங்காது.” திரைக்கு அப்பால் அறையின் வெளியே தளபதி, ராஜகுரு, பிரதானி கள், பிரபுக்கள், நிலக்கிழார்கள், ஜமீன்தார்கள். “சரி விஷயம் நம்முடன் இருக்கட்டும்.. வெளியே கசிய வேண்டாம்.” திரைக்கு வெளியே வந்த அமைச்சர்.. “மன்னர் நலமாக இருக்கிறார்.. கவலை வேண்டாம்..ஆனால் ஒரு வாரத்துக்குள் …
-
- 0 replies
- 1.1k views
-
-
மாடும் மனிதனும் விந்தன் மயிலைக் காளைகள் இரண்டுக்கும் கோமா என்று கேள்விப் பட்டதிலிருந்து மன்னார்குடி மாணிக்கம் பிள்ளையின் மனம் சரியாகவே இல்லை. பொழுது விடிந்ததும் மாட்டு வைத்தியரை அழைத்துக் கொண்டு வந்து, அவற்றுக்கு வேண்டிய சிகிச்சையை அளிக்குமாறு பணித்துவிட்டு வெளியே வந்தார். பத்துப் பன்னிரண்டு பேர் அவருடைய வரவை எதிர்பார்த்து வாசலில் காத்துக் கொண்டு இருந்தனர். "என்னடா பயல்களா, என்ன சேதி?'' "பத்து நாளாப் பட்டினிங்க; பண்ணையிலே ஏதாச்சும்...!'' "வேலைதானே? அதற்குத்தான் இங்கே ஏகப்பட்ட ஆட்கள் இருக்கேடா!'' "முனியனுக்கு மூணு நாளாக் காய்ச்சல்னு கேள்விப்பட்டோம்...!'' "ஆமாம், அதற்கென்ன இப்போது?'' "அவனுக்குப் பதிலா எங்களில் யாரையாச்சும்...!'' …
-
- 0 replies
- 1.2k views
-
-
வைரவ சுவாமியை எல்லாருக்கும் தெரிந்திருக்கும். அவருக்கு ஒரு சின்னப் பிரச்சினை, இல்லைக் கொஞ்சம் பெரிய பிரச்சினை. அதைப் பிறகு பார்ப்போம். இப்ப கோனாச்சானா, கோனாச்சானா ஒரு தீவிர கடவுள் பக்தர். முருகன் சிவபெருமான், பிள்ளையார், உலகத்தில் உள்ள எல்லா அம்மன்கள், வைரவர்கள் என்று எல்லாக் கடவுளரையும் விட்டுவைக்காமற் கும்பிடுவார். இயேசு பிரானைத் தெரியாத ஊரிற் பிறந்துவிட்டார். இல்லாவிட்டால் அவருக்கும் ஒரு கும்பிடு போடாமல் இருக்கமாட்டார். கோனாச்சானா அவரிற்கு அவரின் அப்பா/அம்மா இட்டபெயராக இருக்கமுடியாது. கோ.சங்கரப்பிள்ளை தான் சுருங்கி கோனாச்சானா என்றாய் விட்டது. என்றாலும் ஊரில் முந்தநாள் மீசை முளைத்த பெடியளுக்கோ இல்லாவிட்டால் திரு கோ.சங்கரப்பிள்ளைக்கு அப்பா வயதில் உள்ளவர்களுக்கோ அவரின் இய…
-
- 0 replies
- 641 views
-
-
அன்று பேஸ்புக்கில் சந்தித்தோம் இன்று பேஸ் ரூ பேஸ் பார்க்க முடியாமல் பிரிந்தோம்..
-
- 0 replies
- 719 views
-
-
சரவணன் மனசுல சுகந்தி சிறுகதை: வா.மு.கோமு, ஓவியங்கள்: ஸ்யாம் நண்பர்களின் காதல் சோகக் கதைகளைக் கேட்டுக் கேட்டு, 'என் வாழ்வில் எப்போதும் காதல் எனச் சிக்கி அவஸ்தைப்படக் கூடாது’ என, கல்லூரியில் படிக்கும்போதே முடிவுக்கு வந்திருந்தேன். நண்பர்கள் பலர் அந்தச் சமயத்தில் காதலில் விழுந்திருந்தாலும், எப்படியோ சின்னச் சின்னக் காரணங்களால் அது தோல்வியில் முடிந்திருந்தது. 'ஒண்ணே ஒண்ணு... கண்ணே கண்ணு’ என்பதுபோல பிரகாஷ் என்ற நண்பன் மட்டும், தன் கல்லூரிக் காதலில் வெற்றி பெற்று, திருப்பூரில் மருந்துக் கடை ஒன்றில் மனைவியோடு நிற்கிறான். நான் சரவணன். ஊத்துக்குளிவாசி. ஊத்துக்குளி என்றால், உங்களுக்கு வெண்ணெய்தான் ஞாபகம் வரும். சில திரைப்படப் பாடலாசிரியர்கள் 'ஊத்துக்…
-
- 0 replies
- 1.7k views
-
-
உணர மறுத்த உண்மைகள் காலிங் பெல் ஓசை ஒலிக்க, உஷா சென்று கதவைத் திறக்க, முகத்தைச் சுளிக்க வேண்டிய சூழ்நிலை. எதிரே மாமி. இவள் எதற்கு வந்து தொலைத்தாள் இந்த வேளையில்? "வாங்க'' என்று சொல்வதற்குள் படாத பாடு பட்டுத் தொலைத்து விட்டாள். விருப்பமே இல்லாமல் சொல்வதென்றால் எப்படி? அந்த மாமி எங்கே வரவேற்பை எல்லாம் எதிர்பார்க்கின்றது. வந்து சோபாவில் அமர்ந்து விட்டது பட்டென்று. முகத்தில் என்னவோ வருடக் கணக்கில் பழகிய பாவம். "இதோ வரேன்'' என்று சொல்லி விட்டு வெடுக்கென்று சமையற் கட்டுக்குள் சென்று வேண்டுமென்றே நின்று கொண்டிருந்தவள் மனம் நடந்ததை அசை போடத் தொடங்கியது. பத்து நாள் முன்னால் நடந்ததுதான். பழைய காலக்…
-
- 0 replies
- 1.3k views
-
-
நல்ல காலம் பிறக்குது 1:50 PM Posted by Siva Sri No Comment நல்ல காலம் பிறக்குது இந்தக் கிழமை கட்டாயம் பாரிசுக்கு போகவேண்டும் காரணம் என் சிறுவயது நண்பன் சிவாவின் அழைப்பு.கட்டாயம் நீ வரவேணும் டிக்கெட் போட்டு தரலாம் ஏனெண்டால் இண்டைக்கு நான் இந்தளவு மகிழ்ச்சியாய் இருக்கிறதுக்கு காரணம் நீ தாண்டா என்று தொடர்ந்து வற்புறுத்தியதால் மறுக்க முடியாமல் போவதாக முடிவெடுத்து விட்டேன்.எனது நகரத்தில் இருந்து பாரிசுக்கு அதி வேக ரயிலே ஆறு மணித்தியாலம் ஓடும் அதனால் விமானத்தில் போனால் நேரத்தை மிச்சம் பிடிக்கலாம் இரண்டு நிகழ்வும் அடுத்தடுத்த நாளில் வருவதால் போகலாம் என்று முடிவெடுத்து முதலாளியிடம் மென்முறயில் இரண்டு நாள் லீவு கேட்டதும் முகத்தை சுளித்து முடியாது என்றான்.எனவே அடுத்து வ…
-
- 0 replies
- 1.1k views
-
-
தாய்வாசம் - சிறுகதை யுவகிருஷ்ணா, ஓவியங்கள்: ம.செ., மூணு வயசுக் குழந்தைகிட்டே உங்களுக்கு ஏன் இவ்வளவு வன்மம் மன்னி?'' - பாரதி, ஆச்சரியத்துடன் கேட்டாள். ''ஆமாண்டியம்மா... ஷைலு எனக்குச் சக்களத்தி. அவ மேலே எனக்குப் பொறாமை. போடி... வேலையப் பார்த்துக்கிட்டு. உனக்கு ரெஸ்ட் கொடுக்காம எப்போ பார்த்தாலும் 'பாரதிம்மா... பாரதிம்மா...’னு ஓடிவந்து மடியிலே படுத்துக்கிட்டுத் தொல்லை கொடுக்குறாளேனு உன் மேல கரிசனப்பட்டா... வன்மமாம், வன்மம்!'' - அலுத்துக்கொண்டே சொன்னாள் புஷ்பவல்லி. டி.வி. சீரியல்களில் வரும் பெண்கள் மாதிரி புஷ்பவல்லி அப்படியொன்றும் கொடுமைக்காரி கிடையாது. அவளுடைய நாத்தனார் பாரதி, 10 ஆண்டுகள் கழித்து கர்ப்பமாக இருக்கிறாள். அதனால் 'எப்போதும் பெட் ரெஸ…
-
- 0 replies
- 2.7k views
-
-
மான்டேஜ் மனசு 17: மௌன ராகம் - காதலின் பேசாமொழி! அலுவலகத்தில் வழக்கமான பணி நிமித்தங்களுக்கிடையே நண்பர் சராவுடன் பேசிக்கொண்டிருந்ததில் சினிமா பற்றிய பேச்சு வளர்ந்தது. டாபிக்கல் சுவாரஸ்யங்கள் இருந்தாலும் மிஷ்கின், செல்வராகவன், மணிரத்னம் பற்றிப் பேசாமல் சினிமா பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைப்பதில்லை. 'மௌன ராகம்' வெளியாகி 30 வருடங்கள் ஆனதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். தனக்குப் பிடித்த டாபிக் பற்றிப் பேசும்போது நீங்கள் சராவை உற்று கவனிக்கும் தேவை இருக்காது. ரொம்ப சாதாரணமாக ஒரு வித அலாதி ஆர்வத்துடன், எக்ஸைட்மென்ட்டுடன் சரா பேசுவது பிடித்தமானதாக இருக்கும். சமயங்களில் அவர் சுட்டிக்காட்டும்…
-
- 0 replies
- 2.3k views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் அறிவுரை “ரொம்ப கிட்ட உட்கார்ந்து டி.வி பார்க்காதேன்னு எத்தனை தடவை சொல்றது!” என மகனை அதட்டினார் செல்ஃபோனில் படம் பார்த்துக்கொண்டிருந்த அப்பா. - கோ.பகவான் அப்பாவி ``ஃபுல் பாட்டில் குடிக்கவேண்டிய கட்டாயம் என்ன வந்துச்சு?” என மனைவி கேட்க, ``பாட்டில் மூடி தொலைஞ்சுபோச்சு” என அப்பாவியாய் சொன்னான் அரவிந்த். - ஹேமலதா சம்பளம் பள்ளிக் கட்டணம் கட்டாததால் மாணவியை வகுப்பறை வாசலில் நிற்கவைத்தார், மூன்று மாதங்களாகச் சம்பளம் கிடைக்காத அந்த ஆசிரியை. - தொண்டி முத்தூஸ். விமர்சனம் படம் பார்க்காமலேயே அடித்து உரித்து விமர்சனம் எழுதிக்கொண்டிருந்தார் பிரபல ஃபேஸ்புக் போராளி! -கே.மணிகண்…
-
- 0 replies
- 1.1k views
-
-
படிச்ச பொண்ணு! ஜன்னல் ஓரம் உட்கார்ந்து, தெருவை வெறித்து பார்த்தபடி இருந்தாள், நிர்மலா. பிரச்னையை பற்றி யோசித்ததில், மனம் வெறுமையானது தான் மிச்சம். ''ஏய் நிர்மலா... ஆஸ்பத்திரிக்கு சாப்பாடு கொண்டு போகலயா... நேரமாச்சு; அப்புறம், உன் மாமியார் கத்தப் போறாங்க...'' என்று அம்மா கூறியதும், அவளுக்கு சிரிப்பு வந்தது. 'மாமியார் கத்தப் போறாங்களாம்... அவ கத்தாம இருந்தாத்தான் அதிசயம்...' என்று நினைத்துக் கொண்டாள். பெண்ணை பெத்தவங்க சம்பந்தியின் சத்தத்துக்கு பயப்பட்டுதான் ஆகணும் என்பது விதி. படித்தவர்களாக இருந்தாலும், படிக்காத குடும்பமாக இருந்தாலும் எல்லாருக்கும் இது பொருந்தும். ஒரு கணம், அவளது மனதில், மாமியாரின் …
-
- 0 replies
- 828 views
-
-
"என் அன்பு மகளே" "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்; ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்! இயங்குதி! என்னும்;’யாமே," தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை. வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்…
-
- 0 replies
- 489 views
-
-
பல வருடங்களுக்கு முன்னர் நடந்தது. என் மகனுக்கு அப்ப சின்ன வயது. பள்ளிக்கூடங்கள் சிறுவர்களை தண்டிப்பதற்காக கட்டப்பட்ட கட்டிடங்கள் என்பதை அவன் அந்த வயதிலேயே கண்டுபிடித்துவிட்டான். பள்ளிக்கூட நாட்களில் காலையில் அவனை உருட்டி உருட்டித்தான் எழுப்பவேண்டும். பள்ளிக்கு போகமுன்னர் ஒவ்வொருநாளும் உணவு மேசையை சுற்றி பத்து தடவை ஓடிவிட்டுத்தான் புறப்படுவான். ஆனால் சனி, ஞாயிறு நாட்களில் அதிகாலையிலேயே எழும்புவான். அந்த நாட்களில் ஒரு நிமிடத்தைக்கூட வீணாக்கக்கூடாது என்பதில் அவனுடைய உறுதி தெரியும். வெளியே விளையாடப்போனால் இருட்டிய பின்னர்தான் வீடு திரும்புவான். நான் சொல்வேன் ’இன்று முழுக்க விளையாடியது போதும். இனி படிக்கலாம்.’ ’இப்பவேயா?’ என்பான். ‘இல்லை அடுத்த கிறிஸ்மஸ் வரும்போது’ என்பேன் நான…
-
- 0 replies
- 1.2k views
-
-
"தைரியமானவள்" வவுனியாவில் உள்ள ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும். இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும். அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை! "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்…
-
- 0 replies
- 713 views
-
-
மீதமிருக்கும் கனவுகளின் ஈரம் ஜிஃப்ரி ஹாசன் களுத்துறைக்குச் செல்வதற்காக புறக்கோட்டை புகையிரத நிலையத்தின் முன்னால் பஸ்சுக்காக காத்துக் கொண்டு நின்றேன். எனக்கு கொழும்பு வரக் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் களுத்துறையிலுள்ள எனது நண்பன் ஒருவனை அநேகமாக சந்திக்கச் செல்வது வழக்கம். அவனும் அதை விரும்பி இருந்தான். எனது பல்கலைக் கழகத் தோழியான மிதிலா பாணந்துறையைச் சேர்ந்தவள். அவளது ஊரைக் கடந்துதான் அங்கு செல்ல வேண்டும். ஆனால் அங்கு செல்லும் ஒவ்வொரு பொழுதும் பாணந்துறை வரும் போது எனக்குள் பதட்டமும் ஒருவித சோகமும் கவிழ்ந்து கொள்கின்றன. இத்தனை ஆண்டுகள் கழித்தும் என்னால் அந்த ஞாபங்களிலிருந்து இன்னும் விடுபட முடியாதிருப்பது ஓர் ஆழமான அர்த்தத்தில் நான் தோற்றுப் போய்விட்டதாக உணர்கிறேன்.…
-
- 0 replies
- 850 views
-
-
அவரவருக்குச் சொந்தமான நிலம் குலசேகரன் ஓவியங்கள்: ரவி அன்றும் வழக்கம்போல் நாராயணமூர்த்தி காலை வேளையில் நிலத்துக்குப் புறப்பட்டார். ஊரில் வசிப்பவர்களில் பலர் நகரத்துக்குக் குடி பெயர்ந்து போய்விட்டதால் வெறிச்சோடியிருந்த தெருக்களின் வழியாக நடந்தார். குட்டையான கோபுரத்தில் சுண்ணாம்புச் சிற்பங்கள் சிதைந்து மூளியாக நிற்கும் பழைய மாரியம்மன் கோயிலையும் கடந்து ஆற்றை நெருங்கினார். நிறைய மரங்கள் வெட்டப்பட்ட கரை வெறுமையாக நீண்டிருந்தது. பழைய ஞாபகங்ளோடு ஆற்றில் முகத்தைக் குனிந்து பார்ப்பதுபோல் எஞ்சியிருந்த சில மரங்கள் கவிந்து நின்றிருந்தன. ஆழ்ந்த பெருமூச்சுடன் அவர் ஆற்றில் இறங்கினார். எங்கும் மணல் பரவியிருந்த ஆறு பெரிய பாலைவனமாகத் தோற்றமளித்தது. எண்ணற்ற கா…
-
- 0 replies
- 748 views
-
-
------------------------------------------------------------------------------ ----------------------------------------------------------------------------- ------------------------------------------------------------------------------ ----------------------------------------------------------------------------- ------------------------------------------------------------------------------ ---------------------------------------------------- தொடரும்...........................
-
- 0 replies
- 849 views
-
-
டார்வினின் வால் கிறிஸ்டி அவன் அருகே வந்து “ஒரு பெயர் வைக்கலாமா?” என்றபோது அவன் ஏதும் பேசாமல் அவள் கண்களையே பார்த்தான். அக்கண்களிலிருக்கும் குழந்தைமை அவனுக்கு எப்போதும் ஆசுவாசமளிக்கும். “சொல்லுங்க அங்கிள் என்ன பெயர்” என்றாள் மறுபடியும் அழுத்தமாக. பிறகு அவளே ஒருகணம் யோசிப்பது போல பாவனைக் காட்டி “டார்வின்” என்றாள். அவன் ஆச்சர்யமாக நிமிர்ந்தான். எதற்காக அப்பெயரை தேர்ந்தெடுத்தாளெனக் கேட்கத் தோன்றவில்லை. ஏதோவொரு வகையில் ஒரு அடையாளத்திற்கு அப்போதைக்கு அப்பெயர் தேவையாகத்தான் பட்டது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அக்கணத்திலிருந்து இருவருடைய பிரக்ஞையிலும் டார்வின் என்ற சொல் உச்சரிக்கத் துவங்கியது. இந்த பெயர் அவளின் வளர்ப்பு பூனைக்கோ நாய்க்கோ அல்ல அவா்கள் பிடிக்கப் போக…
-
- 0 replies
- 997 views
-
-
அண்டை வீட்டு நல்லவன்! - சிறுகதை எழில்வரதன் - ஓவியம்: ரமணன் அசையாம பல மணி நேரமா காம்பவுண்டு சுவத்துக்கு முட்டுக்கொடுத்து உக்காந்திருக்காரே... அவர் பேரு பார்த்தசாரதி. இப்ப யார்கிட்டயும் பேச மாட்டார். அவருக்கு பொண்டாட்டியோட சண்டை. ரெண்டு நாளா வயிறும் சரியில்லை; வாழ்க்கையும் சரியில்லை. அதனால, ஒருத்தர்கிட்டயும் பேசக் கூடாதுங்கற வைராக்கியம் அவருக்கு. அவரைப் பார்க்க ரொம்ப நாள் கழிச்சு ஒரு ஃப்ரெண்டு வந்தாங்க. பேரு அமுதவள்ளி. பார்த்தசாரதியோட அந்தக் காலத்து டாவு. அவங்களுக்கு இப்ப ரெண்டு குழந்தைங்க. பார்த்தசாரதிகிட்ட, `கல்யாண வாழ்க்கை எப்படிடா போயிட்டிருக்கு?’னு கேட்டாங்க. பார்த்தசாரதிக்குக் கல்யாணம் முடிஞ்சி, ஆறு மாசம்தான் ஆச்சு. தாம்பத்ய வாழ்க்கையில பயங்கரத…
-
- 0 replies
- 4k views
-
-
எங்கட கதைகள் வெளியீடாக வந்த, "பங்கர்" தொகுப்பில் இருந்து எழுத்தாளர் வெற்றிச்செல்வி அவர்களின் கதையான "செல்வம் இழந்த கதை” இந்தவார கதை சொல்லவா? நிகழ்வில் இடம்பெறுகிறது.
-
- 0 replies
- 582 views
-