கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3080 topics in this forum
-
காதலுக்கு ஒரு கும்பிடு சகுந்தலாவிடமிருந்து கடிதம் வந்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகி விட்டது. படித்த படிப்பு வீணாகக் கூடாது; இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்து, அப்பா, தன் படிப்புக்கு செலவு செய்த தொகையையேனும் கொடுத்து உதவ வேண்டும் என நினைத்து, சென்னையில் வேலை தேடிக் கொண்டாள், சகுந்தலா. அவளைப் பொறுத்த வரை, வரதட்சணைப் பிரச்னை இருக்கப் போவதில்லை. ஏனெனில், சிறு வயது முதலே, அவளை, அவள் அத்தை மகனுக்கு மணமுடித்து வைப்பது பற்றிய பேச்சு, இரு தரப்புக் குடும்பங்களிலும் உள்ளது. சொந்தத் தம்பியின் மகள் என்பதால், தம்பி தன் வசதிப்படி, எது செய்தாலும், அதை அன்புடன் ஏற்க, தயாராக …
-
- 0 replies
- 1.1k views
-
-
பிரேமலதா 1980 மார்கழி 22 – செவ்வாய்க்கிழமை காலை எட்டுமணி நடேசன் குணதாசாவின் அலறல் குளியலறையில் இருந்து கேட்டதுகாலையில் இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பை மெதுவான சத்தத்துடன் கேட்டபடி வேலைக்கு புறப்படத் தயாராக இருந்தேன். அந்த வீட்டில் என்னுடன் வசிக்கும் மற்ற இருவரும் சிங்களவர்கள் என்பதால் நாகரீகம் கருதி தமிழ் வானொலி ஒலிபரப்பின் ஓசையை குறைத்துக் கேட்பது எனது வழக்கம். நெடுஞ்சாலைப் பொறியியலாளரான எனக்கு, இந்த வீடு அரசாங்கத்தால் கெக்கிராவை பிரதேசத்தில் கொடுக்கப்பட்டது. என்னுடன் அங்கிருந்த ஒருவர் எனது உதவியாளர். மற்றவர் விருந்தினர் யோசப் மாத்தையா யோசப் மத்தையா. உள்ளே வாருங்கள் – சிங்களத்தில் அழைக்கும் குரல் குளியலறையிலிருந்து தொடர்கிறது. உடனே குளியலறைக்குள் நான் நு…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிலை ஆட்டம் விஸ்வநாத் வஸந்த பவன் மசால் தோசையும் டிகிரி காஃபியையும் ருசித்துச் சாப்பிட்டுவிட்டு ஏப்பம் விடுவதற்குள் நான் இங்கே மண்டையைப் போட்டுவிடுவேன் என்று நினைக்கிறேன். இந்தச் சதிகார கும்பலிடம் சிக்கி நான் சின்னாபின்னமாவதற்கு பேசாமல் மேலே போய் சேர்ந்துவிடலாம் என்று தான் இந்த முடிவு. எங்கள் குலசாமி அடியக்கமங்கலம் ஐயனாரை வேண்டிக்கொண்டு போய் சேர்கிறேன். இந்த விவஸ்தை கெட்ட அநீதி பெருக்கெடுத்து ஓடும் மாய உலகத்திற்கு ஒரு பெரிய கும்பிடு. டாட்டா. பை. பை. வாழ்க வையகம். -விஷ்ணு வாடகைக் குடிலுக்கு வெளியே நெடிதுயர்ந்த அரசமரத்தின் கீழிருந்து ஆறாவது முறையாக வேர்க்கடலை மடித்த கசங்கிய வாராந்திரியின் 24-ம் பக்க எண்ணைச் சுற்றியிருக்கும் வெற்றிடத்தில் க…
-
- 0 replies
- 1.1k views
-
-
[size=3] ஒரு நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.[/size] [size=3] அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.[/size][size=3] [/size][size=3] இந்தக் கடுமையான சட்டத்துக்கு ப…
-
- 0 replies
- 994 views
-
-
ஜன்னல் திட்டில் சில காக்கைகள் சமையலறையில் அம்மா யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள். காலை நேரத்தில் யார் வந்திருப்பார்கள்? அனு யோசித்தாள். அவள் கணவன் அரவிந்த் வேலை விஷயமாக தில்லி போயிருந்தான். அஞ்சு, ஆதித்யா இருவரையும் பள்ளிப் பேருந்தில் ஏற்றி அனுப்பிவிட்டு, தெருக்கோடியிலிருந்த தன் சிநேகிதி சுபஸ்ஸ்ரீயின் வீட்டில் நடந்த யோகா வகுப்புக்குப் போய்விட்டுத் திரும்பிய அனு, தன் தாயைத் தொந்தரவு செய்ய விரும்பாமல் உடன் கொண்டு வந்திருந்த வீட்டுச்சாவியால் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்ததும் தான் அம்மாவின் குரல் சமையலறையிலிருந்து கேட்டது. அனு சப்தம் செய்யாமல் எட்டிப் பார்த்தாள். அம்மாவின் கையில் கரண்டித…
-
- 0 replies
- 854 views
-
-
நீயெல்லாம் எதுக்கு படிக்க வர்ற? பரிமளா டீச்சரின் மனது "திக்திக்' கென அடித்துக் கொண்டது. இன்று பள்ளிக்கூடத்தில் ரிசல்ட். தன்னிடம் ஒன்பதாவது படிக்கும் முத்துப்பிரியா பாஸ் பண்ணியிருக்கக் கூடாது என்று வேண்டிக் கொண்டே இருந்தாள். கடந்த ஒரு மாதமாக நடந்த சம்பவங்கள் பரிமளாவிற்கு ஞாபகம் வந்து திகிலூட்டின. கடந்த மாதம் நடந்த ரிசல்ட் கமிட்டி கூட்டத்திலேயே முத்துப்பிரியாவை பத்தாம் வகுப்பிற்கு பாஸ் போடக் கூடாது என்று தலைமையாசிரியரிடம் சொல்லி இருந்தாள் பரிமளா. ""சார் முத்துப்பிரியாவுக்கு எழுதப் படிக்கக் கூட வரல சார், உருப்படியா ஒரு பாரா படிக்கத் தெரியாது சார். இவளை பத்தாம் வகுப்புக்கு பாஸ் போடறது நமக்குத் தா…
-
- 0 replies
- 1.1k views
-
-
நகர்வலம் ….. எனது முகத்தில் அப்படி என்னதான் வித்தியாசமாக இருக்கின்றதோ நானறியேன். இதனை பற்றி கதை வரும் நேரங்களில் மேடம் வெகு தெளிவாக சொல்வார் " ஏமாளி என்று முகத்தில அப்பிடியே எழுதி ஒட்டி வைச்சிருக்கு , கண்ணை நல்லா துடைச்சிட்டு , ஆடியில வடிவா பாருங்க , தெரியும் " எண்டு .. வேறொன்றுமில்லை, நீலம் தான் என் நிறம் என்று வானம் பல நாட்களுக்கு பிறகு சற்றே ஞாபகப்படுத்த , காலையில் எழுந்து அண்டை அயல் இடங்களில் சனி காலை என்னதான் நடக்கின்றது என பார்த்து விடலாம் என கிளம்பினேன் . நடந்து கொண்டிருக்கையில் - நடை பாதை நடப்பதற்கே - எனும் மாநகராட்சியின் அறிவித்தலுக்கு விருந்தாளி நாமாவது மதிப்பு கொடுப்பேமே என்று - நண்பர் ஒருவர் வாட்(செ)ப்பினார். என்ன செய்து கொண்டிருக்கிறேன்…
-
- 0 replies
- 869 views
-
-
அதிபர் வந்த தினம் – மரி தியாய் by nagarathinamkrishna - பிரெஞ்சிலிருந்து தமிழில் ————————————————————————————————————– மரி தியாய்( Marie NDiaye) பிரெஞ்சு படைப்பிலக்கிய ஆளுமைகளுள் முக்கியமானவர். நாவல்களுள் Trois Femmes puissantes (Three Strong Women) குறிப்பிட்டு சொல்லவேண்டிய ஒன்று. 2009ல் வெளிவந்தபோது படைப்பிலக்கியங்களில்‘பெஸ்ட்- செல்லர்‘ எனப்பெயரெடுத்தது. திருகலான நடைக்குச் சொந்தக்காரர். வாசிப்பவர்கள் திக்குதெரியாதக்காட்டில் அலைவதும், புதைமணலில் சிக்குவதுமான அனுபவத்தை பெற நேரிடுமெனச் சொல்லப்படுவதுண்டு. அவரது நாவலொன்றில் ஒருவரி 100 பக்கங்களில்சொல்லப்பட்டிருக்கிறதென அண்மையில் வெளிவந்திருக்கும் ‘La divine’ நாவலுக்கு எழுதப்பட்ட விமரிசினத்தைப் படித்துப் தெரிந்துகொண்டே…
-
- 0 replies
- 1.1k views
-
-
மெய்யெழுத்து February 14, 2023 ஷோபாசக்தி 2009 -வது வருடம், வைகாசி மாதத்தின் இறுதி நாளில்; ஓர் இளநிலை இராணுவ அதிகாரி “நாங்கள் திலீபனின் உடல் எச்சங்களைக் கைப்பற்றிவிட்டோம்” என்றொரு செய்தியை வவுனியா இராணுவ மையத்திற்கு அறிவித்தான். அப்போது மருத்துவர் ராகுலன் மனநிலை சரிந்தவர் போன்று, மணலை அள்ளித் தனது தலையில் போட்டுக்கொண்டு, குழறி அழுதவாறிருந்தார். 1977 -வது வருட இன வன்செயல்களின் பின்பாக, ராகுலனின் குடும்பம் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு இடம் பெயர்ந்திருந்தது. யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் பத்தாவது வகுப்பில் சேரும்போது ராகுலனுக்கு வயது பதினாறு. அங்கேதான், பார்த்திபன் என்ற பெயரோடு எட்டாவது வகுப்பில் படித்துக்கொண்டிருந்த திலீபனை அவர் முதன்முதலாகச் சந்தித…
-
- 0 replies
- 1.4k views
-
-
இப்படி ஓர் எதிரொலியா - சிறுகதை - தேவகி கருணாகரன் அந்த ஞாயிற்றுக் கிழமை தான் முகுந்தனுடைய வாழ்க்கையை தலைகீழாக்கின நாள் மதிய சாப்பாட்டுக்குப் பின் முகுந்தனின் அப்பா, சின்னத்தம்பி நித்திரை கொள்வது வழக்கம். அந்நேரம் வீட்டில் எல்லோரும் மெள்ளமாகத் தான் பேச வேண்டும். வீட்டுக்குள் ஓடிப் பிடிக்கக் கூடாது என்பதும் சட்டம். சரியான கோவக்காரர், அவர் நித்திரையைக் குழப்பினால் வீட்டில் எல்லோருக்கும் ஏச்சும் அடியும் தான். அன்று முகுந்தனின் அம்மா ராசு, நல்லூர்க் கந்தசாமி கோவிலுக்குப் போயிருந்தார். அண்ணன்மார் தங்கள் கூட்டாளிகளோடு சினிமாவிற்குப் போயிருந்தனர். முகுந்தனுக்கு அப்போது பத்து வயது தான். இன்றைக்கு எப்படியாவது அப்பாவிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என எண்ணி போட்டிக…
-
- 0 replies
- 619 views
-
-
கொட்டில் இலக்கம் 13, வலயம் 3.0 இனை சேர்ந்த......எழுதாத கவிதைகள்.... Submitted by natham_admin on ஞாயிறு, 30/08/2009 - 04:21 "கண்மணி...கண்மணி...எடி பிள்ள கண்மணி..." வீர மரத்தின் கீழ் இருந்த முருகேசர் பேத்தியை அழைத்தார். "எடி மோனை...சாப்பாட்டுக்கு மணி அடிச்சிட்டு..." மீண்டும் அவரது குரல். கண்மணிக்கு கோபம், அழுகையும் கூட. "எத்தனை தடவை சொல்லுறனான், என்னை கண்மணி எண்டு கூப்பிட வேண்டாம் எண்டு டச்சுக்காலப்பெயர். அக்கம்பக்கத்துப் பிள்ளைகள் கேலி செய்யிறதுகள்..." சொல்லியவாறு கிண்ணம் எடுத்தாள். அவள் வாய் மூடவில்லை. "கண்மணியே...கண்மணியே...சொல்லுவதைக்கேளு..." முன் தறப்பாளுக்குள் இருந்து சிறிரங்கன் பாடினான். "செருப்பு பிய்யும்..." பல்லை நெருமிக்கொண்டு கண்மணி சொன்னாள். "என் கண்மணி…
-
- 0 replies
- 835 views
-
-
மாரியும் லாலியும் பின்னே சுகுவும்! ராஜுமுருகன் செ ன்னை கே.கே. நகரில் மொட்டை மாடி குடிலில் பேச்சுலர் வாசம் பூண்டிருந்தார் சுகுமாரன். 42 வயதாகியும் கல்யாணம் நிகழாத வருக்கு அடுத்த பிறவி குறித்து நான்கு ஆசைகள் இருந்தன. கண்ணதாசன் வீட்டில் சாராய கிளாஸாகப் பிறக்க வேண்டும்; இந்தி சினிமா டைரக்டரும் நடிகருமான குருதத்தின் தொப்பியாக ஜனிக்க வேண்டும்; இளையராஜாவின் ஆர்மோனியத்தில் ஒரு கட்டையாக இருக்க வேண்டும்; அல்லது, தன்னைத் துயரக் குடிலில் அடைத் துச் …
-
- 0 replies
- 1.3k views
-
-
சங்கு மீன் 'கோமதி காணாமல்போய் இன்றோடு 10 வருடங்கள் முடிந்துவிட்டன’ என சரஸ்வதி நினைத்துக்கொண்டிருந்த போதுதான், அவளிடம் இருந்து கடிதம் வந்தது. சரஸ்வதிக்கு உண்டான கோபத்தில் கடிதத்தைக் கிழித்துப்போட்டுவிட வேண்டும் என நினைத்தாள். ஆனால், அவளால் கிழிக்க முடியவில்லை. கோமதியின் கடிதம் அவளுக்குப் பதற்றத்தை உண்டாக்கியது. தன் கணவன் சண்முகத்திடம் அந்தக் கடிதத்தைக் கொடுத்துவிட்டாள். கடிதத்தில் இருந்த விலாசத்தைப் பார்த்தார் சண்முகம். அவரது தங்கை கோமதியின் கையெழுத்துதான். அவளின் கையெழுத்து அவருக்கு நன்றாகவே தெரியும். கோமதி, 10 வருடங்களுக்கு முன்னர், தேர்த் திருவிழாவின்போது சரஸ்வதியிடம் இருந்து தங்கச் சங்கிலியை வாங்கிக்கொண்டு போனாள். மீனாட்சி திருக்கல்யாணம் அன்று…
-
- 0 replies
- 2.8k views
-
-
வாசனை - சிவப்பிரசாத் வாசனை * 1 ஆழ்ந்த உறக்கத்திலிருந்த வாசுவுக்கு யாரோ தன் மேல் படுத்திருந்ததுபோல் பாரம் அழுத்தியது. மல்லாந்து படுத்திருந்தவன் புரண்டு படுக்க முற்பட்டான். அவனால் திரும்பக்கூட முடியவில்லை. மலைப்பாம்புபோல் ஏதோ ஒன்று அவனைச் சுற்றியிருந்தது. வாய்விட்டுக் கத்தலாம் எனப் பார்த்தால், அவன் உதட்டை யாரோ கவ்விக்கொண்டிருந்ததாகத் தோன்றியது. பதட்டத்தோடு மேல்மூச்சு வாங்கினான். அவன் நாசி ஏதோ வாசனையை உணர்ந்தது. அது அவன் அதுவரை முகர்ந்திராத ஒன்று. ஆற்றிலும் குளத்திலும் வளரும் பெயர் தெரியாத ஏதோ செடியின் இலைகளிலிருந்து வரும் வாசனையைப் போல் இருந்தது. அந்தப் பச்சை இலையின் வாசம் வாசுவுக்குக் காமத்தைத் தூண்டியது. அந்தச் சுகந்தத்தை உணர்ந்த தருணத்தில் தன்னுடலின் ரோமங்கள் சிலி…
-
- 0 replies
- 1.2k views
-
-
மான்டேஜ் மனசு 14: ரெட்டை வால் காதல்! ஒரு சனிக்கிழமை மாலைப் பொழுதில் பழைய அலுவலக நண்பர்களை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். நாயக பிம்பங்களைத் தாண்டி சமூக வலைதளங்களில் கௌதம் மேனன், செல்வராகவன் பிறந்த நாளுக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்தது பற்றி பேச்சு திரும்பியது. 'விண்ணைத் தாண்டி வருவாயா' படம் வெளியாகி ஆறு வருடங்கள் ஆனதை குறிப்பிட்டு சுரேஷ் சிலாகித்துக் கொண்டிருந்தான். சுரேஷ் சாதாரணமான, சின்ன விஷயத்தைக் கூட வெகு அழகாக சொல்லி கவனிக்க வைப்பான். எதிரில் இருப்பவர்கள் நிதானமாக இல்லையென்றால் தன் பக்கம் வாக்கு சேகரித்து விடுவான். அவன் மார்கெட்டிங் உத்தி உடன் இருப்பவர்களை சுண்ட…
-
- 0 replies
- 1.3k views
-
-
மாகாளி ”முனி மொட்டைப் பனையில உக்கிரமா இருக்கு” என்றார் பேயோட்டி. ராமசாமி திடுக்கிட்டு, ஆட்டோவில் இருந்தபடியே மொட்டை மரத்தைப் பார்த்தார். பொட்டல்வெளியில் பனைமரம் ஒன்று, வெயிலில் காய்ந்துகொண்டிருந்தது. மற்ற நேரமாக இருந்தால், ராமசாமி பேயோட்டியை கிண்டல் செய்தே ஓட வைத்திருப்பார். இப்போது ஒன்றும் சொல்ல முடியாமல் மென்மையாக “ஒன்னும் எனக்குத் தெரியலியே” என்றார். பேயோட்டி சிரித்தபடியே “ஒருவகையில பேயும் சாமியும் ஒன்னுதான்..ஒரு சின்ன திரை தான் நமக்கும் அவங்களுக்கும் இடையில!....இருக்குன்னு முழுசா நம்புனீருன்னா, திரை விலகிடும்” என்றார். ஆட்டோ ஊரை நெருங்கிக்கொண்டிருந்தது. எல்லையில் இருக்கும் காலனிப் பகுதி கண்ணிற்குத் தெரிந்தது. ராமசாமிக்கு பேயோட்டி…
-
- 0 replies
- 1.3k views
-
-
புலியின்.... தொழிற்சாலையில், வேலை செய்த... எறும்பு. ஒரு காட்டில் வாழ்நாள் முழுக்க வேட்டையாடி அலுத்துப்போன புலி ஒன்னு ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சுது. அங்கே ஒரு எறும்பு வேலை செஞ்சுது. அதுபாட்டுக்கு வரும் சுறுசுறுப்பா எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சிட்டு சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போயிடும். புலியாருக்கு ஏக சந்தோசம் கணிசமான லாபமும் கிடைச்சுது. நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, நம்ம ஆட்சியாளர்களுக்கு தோனுற மாதிரி நடு ராத்திரியில் திடீர்ன்னு புலியாருக்கு ஒரு ஐடியா தோனுச்சு. எறும்பு தனியாவே வேலை செய்யுதே அதை கண்காணிக்கற அளவுக்கு நமக்கும் போதுமான அறிவு இல்லை, நாம எறும்பை கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லவும் ஒரு உற்பத்தி மேலாளரை (production manager) நி…
-
- 0 replies
- 3k views
-
-
ஒரு வீடும், சில மனிதர்களும்! ''பால்காரரே... இன்னியிலிருந்து ஒரு மாசத்துக்கு, ரெண்டு லிட்டர் பால் சேர்த்து ஊத்துங்க...'' என்ற கோகிலாவின் முகத்தில், அப்படியொரு சந்தோஷம்! ''என்ன கோகிலாம்மா... பையனும், பொண்ணும் குடும்பத்தோட வெளிநாட்டிலிருந்து வந்துருக்காங்க போல...'' என்றார், பாலை ஊற்றியபடி, பால்காரர். ''மூணு வருஷம் கழிச்சு, அண்ணனும், தங்கச்சியும் ஒண்ணா லீவு போட்டு வந்திருக்காங்க... உங்களுக்குத் தான் தெரியுமே... கல்யாணமானதும், என் மக, மாப்பிள்ளையோட ஆஸ்திரேலியாவுக்கு போயிட்டாங்கிறது... என் மகன் சிவசு இருக்கிறதோ அமெரிக்காவுல... இந்த வருஷம் தான், ரெண்டு பேரும் சொல்லி வெ…
-
- 0 replies
- 1.3k views
-
-
மீனுக்குள் ஒளிந்திருக்கும் பாடல்கள் உமா வரதராஜன் அவள் ஆற்றங்கரையோரம் வந்து அவனுக்காகக் காத்திருந்தாள். மாலை ஆறு மணிக்கு வருவதாக அவன் சொல்லி இருந்தான். ஆற்றின் கரும்பச்சை நிறம் மெல்ல மெல்லக் கறுப்பாகிக் கொண்டிருந்தது. கரையோரம் வரிசையாக நின்ற தென்னை, சவுக்கு, கற்றா, போகன்விலா மரங்களின் மறைவில் ஒளித்துக் கொண்டிருப்பது போலவும் மஞ்சள் வெயிலின் வெளிச்சத்துக்குக் கண்கூசும் ஒரு பாதாளச் சிறைக்கைதி போலவும் அவள் தங்கியிருந்த அந்த விடுதி தோன்றியது. அவளுக்கு அந்த நகரம் புதியது. முதல் தடவையாக அங்கே வந்திறங்கியபோது நீரின் நடுவே நிற்பது போல் உணர்ந்தாள். கடலாலும் ஆறாலும் வளைக்கப்பட்ட நீராலான நகரம்போல் அது இருந்தது. கடல் நீரேரிக்குக் குறுக்காக ஆங்காங்கே சில, சிறு நிலத் திட்டு…
-
- 0 replies
- 1.1k views
-
-
கடற்கரையில் ஒரு நாடகம் – பால்ஸாக் – தமிழில்: ராஜேந்திரன் ஏறத்தாழ அனைத்து இளைஞர்களும் ஒரு திசைமானியை அவர்களது கற்பனையில் வைத்துள்ளனர். அதைக் கொண்டு எதிர்காலப் பாதையை நிர்மாணிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றனர். திசைமானியை விரித்துப் பரந்த கண்ணோட்டத்தில் பார்வையைச் செலுத்தும் வேளையில், அதற்கேற்ற மன உறுதியும் வாய்த்து விட்டால் உலகமே அவர்களுடையதாகும். இருப்பினும் ஒருவரது உள்ளார்ந்த வாழ்வில் நிகழும் அந்த அதிசயம் இளமைப் பருவத்திற்கே உரியதாகும். அது இருபத்தியிரண்டு முதல் இருபத்தியெட்டு வயதிற்குள்ளாக அனைவருக்கும் வாய்க்கும். அக்காலக் கட்டத்தில் மாபெரும் எண்ணங்களும், புதிய சிந்தனைகளும் தோன்றும். ஏனெனில் அது பெருமளவிலான ஆசைகளைத் தோற்றுவிக்கும் பருவம். அப்பர…
-
- 0 replies
- 1.4k views
-
-
பின் நவீனத்துவச் சிறுகதைகள் – எம்.ஜி.சுரேஷ் பின் நவீனத்துவம் என்பது தொகுக்கப்பட்ட சிந்தனை முறை. அதை ஒரு பகுப்பாய்வு அணுகுமுறை என்றும் சொல்லலாம். அது ஒரு மனோபாவம்.ஓர் அறிதல்முறையும் கூட. 1966ஆம் ஆண்டு ழாக் தெரிதா என்ற ஃபிரெஞ்சுக்காரர் அமெரிக்காவிலுள்ள ஹாப்கின்ஸ் என்ற பல்கலைக்கழகத்தில் உரையாற்றினார். அப்போது அவர் உச்சரித்த வார்த்தை : Deconstruction. அந்த வார்த்தையையும் அதற்கான பொருளையும் அவர் விவரித்து, அது வரை அறியப்பட்டிருந்த மேற்கத்திய தத்துவ, கலை இலக்கிய வரலாற்றைக் கொட்டிக் கவிழ்த்த போது பார்வையாளர்கள் அனைவரும் தங்கள் கால்களுக்குக் கீழே இருந்த தரை நழுவியதைப் போல் உணர்ந்தார்கள். அவரைத் தொடர்ந்து சமூகவியலில் ஃபூக்கோ, இலக்கியத்தில் ரொலாண் பார்த், உளவியலில் ழாக்…
-
- 0 replies
- 5.4k views
-
-
ஓடாதே ரிஷபன் ‘வாச்சா மடத்துக்கு தென்கோடில வீடு. அங்கே வந்து சுந்தர்னு கேட்டா யாரும் சொல்வாங்க. மறக்காம வந்துரு’ என் இலையில் இன்னொரு மால்பூவாவை வைத்து விட்டு இந்த வார்த்தைகளைக் கிசுகிசுத்து விட்டு மோர் வாளியுடன் ஓடினான். ஹோசூரில் ஒரு திருமணம். முதல் தடவை நான் ஹோசூர் மண்ணை மிதிக்கிறேன். முகநூலில் நட்பாகி இன்று தன்னுடைய பெண்ணுக்குத் திருமணம் என்று அழைக்கும் அளவுக்கு நெருக்கம்.. ஆறு மணிக்கு நிச்சயதார்த்தம்.. இப்போதே மணி ஐந்தரை. பஸ் நிலையம் அருகில் ரூம் போட்டிருந்தார். நாலாவது தளத்தில் ரூம். தகவல் சொன்னதும் நண்பர் நேராகவே வந்து விட்டார். “காபி குடிச்சீங்களா” “ஆச்சு. ரூம் சர்வீஸ். இப்போதான் காலி ப்ளாஸ்க்கும் பணமும் வாங்கிட்டு போறார்” “ப்ச்.. பண…
-
- 0 replies
- 720 views
-
-
நிர்மலாவின் இதயத்தில் ராகுல் - சிறுகதை சிறுகதை: வா.மு.கோமு, ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு அப்பா, சாப்பாட்டு மேஜையில் அமர்ந்தபடி என்னைக் கூப்பிட்டுக்கொண்டிருந்ததை எல்லாம் காதில் சரியாக வாங்கினேனா என்பது, எனக்கே புரியவில்லை. இருந்தும் அவர் நான்கைந்து முறை அழைத்ததாகச் சொன்னார். போக, ``இப்படி உன்னை அடிக்கடி நான் பார்த்துட்டே இருக்கேனேம்மா'' என்றார். ``ஒண்ணும் இல்லைப்பா, சும்மா ஒரு யோசனையில் இருந்துட்டேன்'' என்றபடி சாப்பிட அமர்ந்தேன். வழக்கம்போல அப்பா உப்புமாதான் செய்திருந்தார். `இன்னிக்கும் உப்புமாவாப்பா?' எனக் கொஞ்சம் சிணுங்கட்டாம் போடலாம்போல் இருந்தது. இருந்தும் `பி.எஸ்ஸி கடைசி வருடம் சென்றுகொண்டிருக்கும் பெண், சாப்…
-
- 0 replies
- 3.2k views
-
-
கட்டிலில் மல்லாந்து படுத்துக்கிடந்தார் கலியமூர்த்தி. ஒரு வாரம் ஓயாமல் அடித்த டைபாய்டு காய்ச்சல் அவர் உடம்பை உருக்குலைந்துப் போட்டிருந்தது. தலை விண்ணென்று தெறித்தது. காலைக் குளிருக்கு மதிக்கடைக்கு போய் ஒரு டீ குடித்தால் தேவலாம் போல இருந்தது. எல்லாவற்றையும்விட அடுத்தவாரம் ஆத்தங்கரை நாச்சிக்கு எப்படி நீர் மோர் வார்த்து ஊற்றப்போகிறோம் என்று நினைத்த போது, கவலைகள் ஓட்டமாய் ஓடிவந்து ஒட்டிக்கொண்டன. கலியமூர்த்தியின் சொந்த கிராமத்தில் இருக்கும் ஆத்தங்கரை நாச்சியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். வருடந்தோறும் ஆடித்திருவிழா ஏக விசேஷமாக இருக்கும். ஏழு ஊர் கூடுகிற விழா அது. விழாவிற்கு முந்தின நாள் இரவே பக்கத்து ஊர்களில் இருந்து மக்கள் வர ஆரம்பித்து விடுவார்கள். நாற்பது வருடமாக அந…
-
- 0 replies
- 1.5k views
-
-
புதிய குரல்கள் புதிய தடுமாற்றங்கள் :தமிழ்ச் சிறுகதை , இன்று… ஒன்று பத்துவருடம் முன்பு சொல்லப்பட்ட நகைச்சுவைத் துணுக்கு இது. நவீனச் சிறுகதையை எழுதுவது எப்படி? ”முதலில் சிறுகதையை ஒழுங்காக எழுதிவிடவேண்டும். அதன்பிறகு ஒன்று விட்டு ஒன்று வீதம் சொற்றொடர்களைப் பொறுக்கிச் சேர்த்து வரிசைப்படுத்தினால் நவீனச்சிறுகதை ஆகிவிடும்.” ஆம்,சொற்றொடர்ச்சிக்கல்களை உருவாக்குவதே நவீனச்சிறுகதை என்ற எண்ணம் எழுத்தாளர்களில் ஒருசாராரிடம் வலுவாகவே இருந்தது. உண்மையில் சிக்கலான சொற்றொடர்கள் கொண்ட படைப்புகள் உருவாவதற்கான காரணங்கள் பல இருந்தன. ஏராளமான எழுத்தாளர்களுக்கு தமிழில் போதிய பயிற்சி இல்லை. எளிய நேரடிச் சித்தரிப்பை அளிக்கவே திண்டாடக்கூடியவர்கள். திடீரென்று மனம் செயல்படும் சிடுக்குகள…
-
- 0 replies
- 1.3k views
-