கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3080 topics in this forum
-
மொஹிதீன் ஹோட்டல்: உமாஜி ”சும்மா சாப்பிடுங்க” பக்கத்து மேசையில் யாரோ யாருக்கோ சொன்னார்கள். நண்பன் சற்றே துணுக்குற்றதுபோல திரும்பிப் பார்த்தான். இரவு நேர பேரூந்துப் பயணிகளால் நிறைந்து, அவசர கதியில் இயங்கிக்கொண்டிருந்த சாப்பாட்டுக் கடை. பின் மெதுவாக, ”மொஹிதீன் ஹோட்டல் நானா ஞாபகம் வந்திட்டுது. போற எல்லா முஸ்லீம் ஹோட்டலிலும் நான் தேடுவேன். மொஹிதீன் ஹோட்டல் என்ற பெயர் இன்னும் கண்ணில் படவில்லை. மௌனமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். மீண்டும் பேரூந்தில் ஏறிக்கொண்டதும் நண்பன் சொல்லத் தொடங்கினான். வீட்டில் நானும் அப்பாவும்தான். தினமும் காலையில் அப்பா ஐம்பது ரூபாய் கொடுப்பார். காலையும் மதியமும் சாப்பாட்டுக்காக என்று பேச்சு. ஆனால் காலைச்சாப்பாட்டை…
-
- 0 replies
- 505 views
-
-
ஒரு நிமிடக் கதைகள் ஒரு நிமிடக் கதைகள் அம்மா! அம்மாவின் பதினாறாம் நாள் காரியத…
-
- 0 replies
- 868 views
-
-
சின்னாச்சிக் கிழவிதான் விசயத்தைப் போட்டுடைத்தது... "எடியே பொன்னம்மா தெரியுமே விசயம்?". சின்னான் எப்பவும் இப்படித்தான் தொடங்கும். அநேகமாக உப்புச் சப்பில்லாத விசயங்கள்தான் வந்து விழும். சிலவேளை முக்கிய புலனாய்வுத் தகவல்களும் இருக்கும். பொன்னம்மாக் கிழவி கொஞ்சம் அழுத்தக்காரி; விசயத்தைத் துழாவினால் கௌவரவக் குறைவு என்று ஒரு அழுத்தமான கொள்கை ஒன்றை வைத்திருக்கிறா. விசயம் தன்பாட்டில் வந்து விழும் என்று நன்றாகத் தெரியும். எனவே 'நீ சொல்லப்போறது முக்கியம் இல்லை' என்றது மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு குட்டப் பெட்டியைத் திறந்து வெத்திலை, பாக்கைத் தயார் பண்ணினா. காதுகள் மட்டும் அடுத்த தகவலுக்காகக் காத்திருந்தன. "எனக்குக் கொஞ்சம் கிறுதி'யாக இருக்கு" என்று சொல்லிக்கொண்டு வெத்தில…
-
- 0 replies
- 732 views
-
-
தருமத்தை செய்ய எப்போதும் விரும்ப வேண்டும் என்பது இதன் பொருள் தருமம் செய்வதற்கு பொருள் வேண்டுவது அவசியம்.பொரு ள் இல்லாவிட்டால் தருமம் செய்ய முடியாது என்றாலும், ஒருவனுக்கு அறஞ்செய்ய வேண்டும் என்னும் விருப்பம் மாத்திரம் இருக்குமானால், ஒரு காலத்தில் அவர் செய்த நல்வினைப்பயனால் பொருள் கிடைக்கின்ற சமயத்தில் அவர் தர்மம் செய்வார் என்பது நிச்சயம். ஆதலால் முதலில் அறத்தைச்செய்ய எல்லோருக்கும் விருப்பம் இருக்க வேண்டும். விருப்பம் உண்டானால் அதற்கான வழியும் ஏற்படும்!. ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டாகிலும் தர்மத்தை செய்ய முயற்சி செய்ய வேண்டும்.ஏனென்றால் தர்மம் நன்மையை உண்டாக்கும் சக்தியுடையது. 'தர்மமே ஜயம்' 'தர்மம் தலை காக்கும்' என்னும் பழமொழிகளே தர்மத்தின் சிறப்பை எல்லோருக்கும் எடுத்த…
-
- 0 replies
- 723 views
-
-
அது..! சுதாராஜ் எழுத்தாளர் சுதாராஜ்இருள் கசியத் தொடங்கும் மாலை ஆறுமணிப் பொழுதில் அந்த வீதியில் வந்துகொண்டிருந்தேன். முக்கிய நகரங்களைத் தொடுக்கும் பிரதான வீதிதான் அது. எனினும் சன நடமாட்டம் குறைவாயிருந்தது. நகரத்திலிருந்து எட்டுக் கட்டை தொலைவிலிருந்த அந்தப் பகுதியில் குடிமனைகளும் குறைவு. அடுத்த நகரம் சுமார் நாற்பது கிலோமீட்டருக்கு அப்பாலிருந்தது. நாட்டில் சுமுக நிலையற்ற காலம் அது. இருள்வதற்கு முன்னரே மக்கள் வீடுகளுள் அடங்கிப்போய்விடுவதற்கு அதுவும் ஒரு காரணமாயிருக்கலாம். இன்னும் வெட்டப்படாத காட்டு மரங்களும் பற்றை புதர்களும் இரு மருங்கும் கொண்ட வீதியில், இந்தத் தனிமை வேளையில் எனது ஐம்பது சீசீ ஸ்கூட்டரில் பயணித்து வருவது சற்றுத் திரில்லாகக்கூட இருந்தது. முகத்திலடிக்கும்…
-
- 0 replies
- 969 views
-
-
முள் - சிறுகதை சபீதா, ஓவியங்கள்: ஸ்யாம் அருந்ததிக்கு, அத்தனை நேரம் இருந்த குதூகலம் கொஞ்சம் கொஞ்சமாக வடிய ஆரம்பித்தது. அம்மா சொன்னதைக் கேட்காமல் இந்த இரவில் தனியாகப் பயணிக்க நினைத்தது தவறோ? வீட்டில் தங்கிவிட்டு நாளை பகலில் கிளம்பியிருக்க வேண்டுமோ? ''சொன்னாக் கேளுடி, நாளைக்குப் போகலாம். காலம் ரொம்பக் கெட்டுக்கெடக்கு. உன் வீட்டுக்காரர்கிட்ட வேணும்னா நான் பேசறேன்.'' ''ம்மா... நான் என்ன சின்னக் குழந்தையா? சின்ன வயசுலதான் 'அங்க போகாத, இங்க போகாத, இருட்டுறதுக்குள்ள வீடு வந்து சேரு’னு அதிகாரம் பண்ணிட்டே இருப்ப... இப்பவுமா? எனக்கும் கல்யாணம் ஆயிடுச்சு.'' ''ம்ம்ம்... உனக்குக் கல்யாணமே ஆனாலும், நீ பேரன் பேத்தியே எடுத்தாலும் எங்களுக்கு நீ குழந்தைத…
-
- 0 replies
- 2k views
-
-
செயல்! அந்தக் காட்சி கீதாவின் மனசை உருக்கியது. சின்னஞ்சிறு பிஞ்சு, ஒரு வேளை உணவுக்காக எப்படியெல்லாம் தன் உடலை வில்லைப் போல் வளைக் கிறது. கணவன் விஷாலைப் பார்த்தாள். அவள் பார்வையைப் புரிந்துகொண்டு பக்கத்தில் இருந்த கடையில் பத்து ரூபாய் கொடுத்து பிஸ்கட் பாக்கெட் வாங்கினான். மனம் முழுதும் சந்தோஷமாக இருந்தது கீதாவுக்கு. திருமணமான ஆறு நாட்களுக்குள்ளே நம்மைப் புரிந்துகொண்டானே. ஆனால், அடுத்து அவன் செய்த செயல் அருவருப் பாக இருந்தது. பிஸ்கட் பாக்கெட்டைப் பிரித்து, இரண்டு பிஸ்கட்டுகளைத் தான் எடுத்துக்கொண்டு, பிரித்த பாக்கெட்டை அந்தச் சிறுமியிடம் கொடுக்கும்படி கீதாவிடம் நீட்டினான். …
-
- 0 replies
- 1.2k views
-
-
அமைதியாக ஒரு நாள்! ம னசு அபூர்வமாக ஒரு தினம் அமைதியாக இருந்தது. மகிழ்ச்சியாக இருந்தது. இத்தனைக்கும் அன்றைய தினம் மனைவி வீட்டில்தான் இருந்தாள். வீடும் பழைய வீடுதான். சமையலும் மாமூல் சமையல்தான். டெலிபோனிலோ தபாலிலோ வாய்வழிச் செய்தியாகவோ செய்தித்தாளிலோ என் சம்பந்தப்பட்ட எந்த மகிழ்ச்சித் தகவலும் கிடையாது. பின், எதனால் அந்த மகிழ்ச்சி என்று தெரியவில்லை. ஊமைக்காயம் என்பது போல் ஊமை மகிழ்ச்சி. இத்தனைக்கும் ஞாயிற்றுக்கிழமையோ வேறு லீவு நாளோ இல்…
-
- 0 replies
- 716 views
-
-
"அன்பின் வெகுமதி" இலங்கை திருகோணமலை மூன்று மலைகள் சூழ்ந்த வளம் மிக்க திரிகோணம் எனப் பெயர் பெற்ற இயற்கையான துறைமுகம் கொண்ட, பண்டைய நூல்கள் சிலவற்றில் 'கோகண்ண' எனவும் [தீபவம்சம், மகாவம்சம்], திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் சில தேவாரப் பாடல்களில் 'கோணமாமலை' ["குரைகட லோதம் நித்திலம் கொழிக்கும் கோணமாமலை அமர்ந்தாரே"] எனவும் அழைக்கப்பட்ட இடம் ஆகும். இந்த அழகிய கடற்கரை நகரத்தில், அடர்ந்த நீல நிறமுடைய அலைகள் தங்கக் கடற் கரை மேல் நடனமாடியபோது, அதன் ஆழத்தைத் தழுவத் துணிந்தவன் போல், ஆனால் பணிவான மீனவனாக ரவி, தன் சிறிய படகில் இருந்தபடி கடல் அன்னையைத் இரசித்துக்கொண்டு, புத்தி கூர்மையும் உடல் வலிமையும் ஒருங்கே பெற்ற, சூரியன் தினம் முத்தமிட்ட முறுக்கேறிய தோல் மற்றும் நீலக்கல் …
-
- 0 replies
- 340 views
-
-
நதியின் மூன்றாவது கரை - ஜோவோ கிமேரஸ் ரோஸா ஆங்கிலம்: வில்லியம் எல்.கிராஸ்மன். தமிழில்: ஆர்.சிவகுமார் கடமை உணர்வுமிக்க, ஒழுங்கு நிறைந்த, நேர்மையான ஒரு மனிதர் என் அப்பா. நம்பிக்கையான சிலரை விசாரித்ததில், இளம்பிராயத்திலேயே இன்னும் சொல்லப்போனால் குழந்தைப் பருவத்திலேயே அவருக்கு இந்தக் குணங்கள் இருந்தது தெரியவந்தது. நமக்குத் தெரிந்த மற்ற ஆண்களை விடவும் அதிகம் மகிழ்ச்சி உள்ளவராகவோ அல்லது அதிகம் சோகம் நிரம்பியவராகவோ அவர் இருந்தது இல்லை என்பது என்னுடைய நினைவுக்கே புலனாகிறது. ஒருவேளை அவர் மற்றவர்களைவிடவும் சற்று அதிகம் அமைதியானவராக இருந்திருக்கலாம். எங்கள் வீட்டை ஆண்டது அம்மாதான், அப்பா இல்லை. என்னையும், என் சகோதரியையும் என் சகோதரனையும் அம்மா தினமும் திட்டினாள். ஒரு ந…
-
- 0 replies
- 1.1k views
-
-
திசை மாறிய பறவை! அம்மா ஹாலுக்குள் நுழைந்ததும், 'அம்மா... நாங்க கேள்விப்பட்டது நிஜமா?' 'வீட்டை வித்துட்டீங்களா?' 'எங்களுக்கு சொல்ல வேணாமா... நாங்கள்லாம் செத்தா போயிட்டோம்...' பிள்ளைகள் ஆளாளுக்கு எகிறினர். தேனம்மைக்கு ஆயாசமாக இருந்தது. நான்கு பேரில் ஒருவர் கூட, 'ஏம்மா முதியோர் இல்லத்திற்கு வந்திருக்கிறே... என் வீட்டுக்கு வாம்மா... உயிருக்கு போராடிக்கிட்டிருந்த அப்பா, இப்போ எப்படி இருக்கிறார்'ன்னு ஒரு வார்த்தை கேட்கலை. பாசத்தைக் கொட்டி, சுயநல பேய்களை வளர்த்து இருக்கிறோமே என்று எண்ணி, அவர்களையே வெறித்து பார்த்தாள், தேனம்மை. குங்குமமும், திருநீறும் துலங்கும் முகம்; மூக்குத்தி பளிச்சி…
-
- 0 replies
- 1.3k views
-
-
பிரிவு எப்போதும் பிளவு அல்ல .................. கண் நிறைந்த கண் அவனுக்கு (கணவனுக்கு ).......நீ சில நாட்களாக தொடர்பு கொள்ளாத் போதும், எனது தொலைவில் நின்று பேசாத போதும் உன்னை நான் மறக்கவில்லை. மறக்க கூடிய உறவா அது ...பள்ளி பருவத்திலே விழியில் விழுந்து ... இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவல்லவா? ...காலம் உருண்டு ஓடினாலும் கரையாத உறவல்லவா? எத்தனையோ எதிர்ப்பு வந்த போதும் , எதிர் நீச்சல் போட்டு ..உயிரோடு கலந்த உறவல்லவா? வேலை பளுவா? கடன் சுமையா? உடல் நலமின்மையா?...... கண்ணா ஓர் வார்த்தை பேசு ... கண்மணிகள் போல இரு செல்வங்கள் ..கண் அயரும் பொது அப்பா எங்கே என்று ... மனைவீ மக்களுடன் வாழ்ந்து விடுவாள் ... ஆனால் கணவனால் அது முடியாது. இதை உணர்ந்து இருப்…
-
- 0 replies
- 1.1k views
-
-
காலரா காலத்துக் காதல்: ஒரு கரோனா கால வாசிப்பு! கரோனா காலகட்டத்தில் இலக்கிய வாசகர்கள் பலருக்கும் புத்தகம் படிக்க கூடுதல் நேரம் கிடைத்திருக்கிறது. அவர்களில் பலரும் கொள்ளைநோய்கள் தொடர்பான நூல்கள், குறிப்பாக நாவல்கள் படிப்பதாகத் தெரிகிறது. இவற்றில் முன்னணி இடம் வகிப்பது ஆல்பெர் காம்யுவின் ‘கொள்ளைநோய்’ (தி ப்ளேக்). இந்தக் கொள்ளைநோய் நாவல்கள் பெரும்பாலும் துயரகரமானவை. ஏற்கெனவே, கரோனாவின் கொடும் பிடிக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் நமக்கு இத்தகைய நாவல்கள் மேலும் மன உளைச்சல் தரக்கூடும். கொள்ளைநோய் பின்னணியில் அமைந்த, ஆனால் வாசிப்பதற்கு சுகமான நாவல் என்றால் அது காப்ரியேல் கார்ஸியா மார்க்கேஸின் ‘காலரா காலத்துக் காதல்’ (லவ் இன் தி டைம் ஆஃப் காலரா) நாவலாகத்தான் இர…
-
- 0 replies
- 543 views
-
-
மான்டேஜ் மனசு 13 - தொட்டு தொட்டு போகும் 'காதல்' கணேசகுமாரனின் 'மிஷன் காம்பவுண்ட்' நூல் வெளியீட்டு விழா டிஸ்கவரி புக் பேலஸில் நடந்தது. வலி, அழுகை, வன்முறை, மரணம், தற்கொலை, கொலை என்ற சொல்லாட்சிகளுடனும், உள்ளடக்கத்துடனும் சிறுகதைகள் எழுதும் கணேசகுமாரன், காதலர் தினத்தில் தொகுப்பை வெளியிட்டது நகை முரண்தான். ஆனால், கணேசகுமாரன் அன்பைதான் வெவ்வேறு வடிவங்களில் கதாபாத்திரங்களின் வழியாக சொல்கிறார் என்பதை மறுக்க முடியாது. கணேசகுமாரனுக்கு வாழ்த்துகளை சொல்லிவிட்டு அரங்கத்தில் இருந்து நகர்ந்தேன். விழாவில் சாரு சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லாமல் பேசியதோடு, சில காதல் கதைகளையும் சொன்னார். அப்போதுதா…
-
- 0 replies
- 1.7k views
-
-
"மாட்டு வண்டிக்காரன்" வேலன் ஒரு விவசாயி. அவன் எங்க பெரியம்மா வீட்டிற்கு அருகில் இடைக்காடு என்ற ஊரில் வாழ்ந்து வந்தான். அது ஒரு தோட்டங்கள் நிறைந்த அச்சுவேலிக்கும் செல்வச் சன்னதிக்கும் இடைப்பட்ட கிராமம். அவன் தன்னுடைய தோட்டத்திலும் மற்றும் அந்த கிராமவாசிகளின் தோட்டத்திலும் விளையும் மரக்கறிகளை காலையில் அச்சவேலி சந்தைக்கு, தனது மாட்டு வண்டியில் எடுத்துச் சென்று விற்பது வழக்கம். வேலன் என்று சொல்வதை விட, 'மாட்டு வண்டிக்காரன்' என்றால் அந்த ஊரில் உள்ள எல்லோருக்கும் தெரியும். ஒருமுறை வழமையாக செய்வது போல, மரக்கறிகளை சுமந்து கொண்டு, அவனின் மாட்டு வண்டி சந்தையை நோக்கி போய்க் கொண்டு இருந்தது. முதல் நாள் பெய்த மழையால், அந்த மண் வீதி சேறும் ச…
-
- 0 replies
- 721 views
-
-
ஒரு நிமிடக் கதை: எள்ளாமை! வங்கியில் என் உதவியாளர் நாகுவின் யோசனைப்படி, அப்பிரமுகரை நேரில் சந் தித்து காசோலையைப் பெற்றுவரலாம் என்று காரில் புறப்பட்டோம். நாகு சமீபத்தில்தான் மாற்றலாகி வந்தார். சற்று நேரத்தில் நாகு என்னிடம், “நீங்கள் காரிலேயே இருங்கள். நான் அவர் எங்கிருக் கிறார் என்று விசாரித்து வரு கிறேன்” என்று சொல்லிச் சென்றார். கார் வணிக வளாகத்தின் எதிர் புறம் நின்றது. வளாகத்தின் முன்புறம் பூக்கடை. அது மகாலிங்கத்தினுடையது.. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு நான் மேலாளராக பணி யேற்ற போது, மகாலிங்கம் அவரது பூக்கடைக்காக ஒரு சிறிய தொகையை கடனாகக் கேட்டார். வாராக் கடன் அதிகமுள்ள அக் கிளையில் மேலும் அதை அதி கரிக்க வேண்டாமென்று மறுத…
-
- 0 replies
- 474 views
-
-
செவத்தகன்னி - சிறுகதை சிறுகதை:சிவக்குமார் முத்தய்யா, ஓவியங்கள்: ஸ்யாம் காற்றில் சாசுவதமாக கைகளை அசைத்தபடி நடக்கத் தொடங்கினாள் செவத்தகன்னி. பொழுது மெள்ள ஏறிக்கொண்டிருந்தது. பொழுதுக்கும் அனலாகக் கொட்டித்தீர்த்த வெயில் குறைந்து, தெற்கே இருந்து மெல்லிய காற்று வேப்பம்பூக்களின் வாசனையோடு வீசியது. சைக்கிள் பஞ்சர் ஆகிவிட்டிருந்தது. அதை எடுத்துக்கொண்டும், ‘முக்கூட்டில்’ இருக்கும் சலீம்பாய் கடையில் மளிகை சாமான்கள் வாங்கிக்கொண்டும் வரவேண்டும் எனக் கிளம்பியிருந்தாள். முக்கூட்டுக்கும் ஓர்ச்சேரிக்கும் மூன்று மைல் தூரம். இதைக் கடந்துதான் டவுனுக்குப் போக வேண்டும் என்பதால், முக்கூட்டில் இருந்துதான் நாலு ரோட்டுக்கு பஸ் பிடித்து, 20 மைல் தொலைவில் உள்ள தஞ்சாவூருக்கு…
-
- 0 replies
- 3.4k views
-
-
இன்னும் எத்தனை நிர்பயாக்களையும், வினோதினிகளையும் பலி கொடுக்க இருக்கிறோம்? #MustWatchShortFilm "ம்மா... வயிறெல்லாம் ரொம்ப வலிக்குதும்மா... தாங்கவே முடியல. சீக்கிரம் வீட்டுக்கு கூட்டிட்டுப் போயிடும்மா. நான் காலேஜ் போகணும். படிச்சு டாக்டராகிட்டா, நம்ம கஷ்டமெல்லாம் தீர்ந்திரும்மா..." என்று சொன்னபடி தன் அம்மாவின் கையை இறுகப் பற்றிக் கொள்கிறார். ஆனால், அவர் வீடு திரும்பவில்லை. கல்லூரிக்குச் செல்லவில்லை. படிக்கவில்லை. டாக்டராகவில்லை. அந்தக் கிழிந்த வயிற்றின் வலியோடும், தான் சார்ந்த சமூகத்தை நோக்கிய ஒரு பெரும் கேள்வியோடும், உயிர் கொடுத்த பெற்றோரைப் பார்த்தபடியே உயிரிழந்தாள் அந்த "பயமற்றவள்". நான்காண்டுகளுக்கு முன்னர் இன்றைய தினத்தில் தான், நிர்பயா பாலியல் வன்ப…
-
- 0 replies
- 766 views
-
-
புக்கெட் - சிறுகதை அராத்து - ஓவியங்கள்: ரமணன் சின்னச் சின்னச் சண்டை பெரிதாகி, குளிரூட்டப்பட்ட உணவுவிடுதியில் மன்னிப்பு கேட்டு, அவள் தங்கி இருக்கும் விடுதியின் வாசலில் செய்வதறியாது காலில் விழுந்தான். நான்கைந்து பெண்கள் வேடிக்கை பார்த்தனர். காலை மெள்ள இழுத்துக்கொண்டு நடந்து உள்ளே சென்றுவிட்டாள். தொழப் பாதமில்லாது, சற்றுநேரம் நெடுஞ்சாண்கிடையாகக் கிடந்தான். தெருமண்ணை நக்கிப்பார்த்தான். சிறுவயதில் விபூதி சாப்பிட்டது, இப்போது இந்த நகரத்தின் நூற்றாண்டுகால மண் ஒரு விநோதமான சுவையை உணரச்செய்தது. அழுகை வந்தது. அழுகையினூடே சிரிப்பும் வந்தது. மெதுவாக எழுந்தான். வெட்கம், மானம் எல்லாம் எங்கோ போயிருந்தன. தன்னை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்களை வெறுமையாகப் …
-
- 0 replies
- 3.7k views
-
-
புதிர் புலம்பெயர் தேசத்திலிருந்து வந்து நாட்டில் கால் பதித்த வேளைமுதல் ஒரு கால் நூற்றாண்டுக் காலத்தின் மாற்றங்கள், அவன் பார்வையெங்கும் நிறைந்திருந்தன. தொலைக்காட்சிச் செய்திகள் வழி மனதில் விரிந்திருந்த கட்டமைப்புகள் காட்சி நிஜங்களுடன் மிக ஒத்துப்போனதில் அவன் பெரிய ஆச்சரியமெதனையும் அடைந்துவிடவில்லை. ஆனால் பிறந்து வளர்ந்து ஓடியாடி விளையாடிய தன்னூர் வந்தபோது…? பௌதீகத்தில் எந்த மாற்றமும் அற்றதாய் இன்னும் அது பழைமையின் பிடியில் இருந்துகொண்டிருந்தது. அவனுக்கு அதிசயம் வந்தது. இறுதி யுத்தத்தில் விழுந்த ஆழமான வடுக்கள் முற்றாகத் தீர்ந்ததாகவன்றி, யுத்தமே அந்த இடத்தைத் தாண்டிச் செல்லவில்லைப்போல, காலமே தன் தடம் பதிக்க அஞ்சி விலகிச் சென்றதான தோற்றங்கொண்டு இருந்தது. …
-
- 0 replies
- 1k views
-
-
கதை சொல்லவா? (05)/ எழுத்தாளர் சாத்திரி அவர்களின் "அவலங்கள்" சிறுகதை தொகுப்பில் இருந்து / ராணியக்கா என்ற சிறுகதை / திரு தியா காண்டீபன் - எழுத்தாளர்
-
- 0 replies
- 850 views
-
-
"தனிமை" தனிமை என்பது எதோ தனிய காலம் கழிப்பது அல்ல, சிலவேளை எம்மை சுற்றி பலர் இருப்பார்கள், என்றாலும் சில காரணங்கள் எம்மை அவர்களில் இருந்து மனதளவில் தனிமை படுத்துவதும் உண்டு. வெளியில் பேசி கதைத்தாலும் உள்ளுக்குள் தனிமை வாட்டிக்கொண்டுதான் இருக்கும். ஒவ்வொருவருக்கும் சில கருத்துக்கள், நடவடிக்கைகள், நம்பிக்கைகள் இருக்கும். அதற்கு புறம்பானவர்கள் உன்னை முழுதாக சூழ்ந்து இருக்கும் பொழுது நீ தனிமையாகி விடுவாய்!. அப்படித்தான் என் பாடசாலை வாழ்வும் அமைந்தது. நான் யாழ் மத்திய கல்லூரியில் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது, அதற்கு முன்னால் அமைந்து இருந்த யாழ் நூலகத்திற்கு போவது வழமை. இது தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாக அன்று திகழ்ந்தத…
-
- 0 replies
- 923 views
-
-
ஆரம்பக் காலகட்டத்திலிருந்தே அவனுடன் பழகுவதை அந்தப் பெண்ணின் குடும்பம் அவனுடைய குடும்பச் சூழலையும் பின்னனியையும் காரணம் காட்டி, அவனுடன் இருந்தால் தன் மிகுதியுள்ள வாழ்நாள் முழுமையும் அவள் துன்பப்பட வேண்டி இருக்கும் என்ற அடிப்படையில் தீர்க்கமாக எதிர்த்தது!... இந்த மாதிரியான குடும்பத்தின் மனநிலையால் இந்தக் காதலர்கள் அடிக்கடி தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டனர்!... இந்தப்பெண் அவனை அதிகப் படியாக நேசித்தாலும், அடிக்கடி அவனைப் பார்த்து கேட்பது, “நீ என்னை எவ்வளவு நேசிக்கிறாய்” என்பதுதான்!.... அத்தருணங்களில் அவனிடமிருந்து அவ்வளவாக நல்ல பதில் கிடைக்காததனால் இவளுக்கு வருத்தமே மிஞ்சியது!...அதனுடன் குடும்பத்தின் எதிர்ப்பும் சேர்ந்து கொள்ள அவனிடம் எப்போதுமே தன் கோப முகத்தைய…
-
- 0 replies
- 747 views
-
-
-------------------------------------------------------------------------- --------------------------------------------------------------------------
-
- 0 replies
- 1.3k views
-
-
மான்டேஜ் மனசு 8 - விண்ணைத் தாண்டி வருபவர்கள்! ரொம்ப நாட்களுக்குப் பிறகு கௌதமை சந்தித்தேன். நலம் விசாரிப்புகளுக்குப் பிறகு வழக்கம் போல சினிமா பற்றி பேச்சு திரும்பியது. கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய 'இன்டர்ஸ்டெல்லர்' பற்றி சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தான். டைம் மெஷின், டைம் டிராவல் பற்றி நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். தமிழில் சயின்ஸ் ஃபிக்ஷன் என்று பெருமைப்படும் 'இன்று நேற்று நாளை' படத்தையும் பேச்சுவாக்கில் தொட்டுச் சென்றான். ''ஃபேன்டஸி படமா இருந்தாலும் அளவா, கச்சிதமா, எந்த எல்லையும் மீறாம இருந்தது ரொம்ப நல்ல அனுபவம்'' என்றான். என் மனசு 'இன் டைம்' படத்தையே சுற்றிச் சுற்றி வந்தது. 2011-ல்…
-
- 0 replies
- 1.9k views
-